அனிச்சம் பூ 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நடந்த அனைத்தையும் இரண்டடி இடைவெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த செந்தூரனுக்கு ஏனோ சற்றுமுன் இருந்த உற்சாகம் எல்லாம் காணமல் போயிருந்தது , இருந்தாலும் மனதை சமன்படுத்தி அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினான் , பரத் டே செலிப்ரேஷன் , காலை உணவு , மதிய விருந்து , என்று பணிகள் வரிசை கட்டி நின்றது .

செந்தூரன் தன் அம்மாவை கேக் (கோவா) கட் செய்யச் சொல்வதற்காக , பால்கோவாவை எடுத்துவரச் சொல்லி விட்டு அனைவரையும் அழைத்தான் , ஆனால் ஜீவி மட்டும் அங்கே இல்லை , அவளைத்தேடி வீட்டின் வெளியே சென்றான் , அங்கே அவள் தனியாக நின்று கொண்டிருந்தாள் ,

ஜீவிகா... செந்தூரனின் குரல் கேட்டு திரும்பினாள் , இங்கே அவனை அவள் எதிர்பார்கவில்லை , இருவருக்கும் பேசாமலே சில நொடிகள் மெளனமாய் கழிந்து . அவன் அவளி்ன் அழுகைக்குப்பின் இருந்த அமைதியான முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் . அவளும் அவனுமான தனிமை , இப்படியே நீளக்கூடாதா என்று விரும்பினாள் , அவன் கண்களின் ஒளி அவளை ஏதோ செய்தது ..

ஜீவிகா உனக்காக அங்க எல்லாரும் வெயிட் பண்ணீட்டு இருக்காங்க , வா அம்மா கேக் கட் பண்ணப் போறங்க என்றான் ,

அவன் அழைத்ததும் சரி என்று நகர்ந்தாள் , ஜீவி ஒரு நிமிஷம் ... என்றான் என்ன என்றவாறு பார்வையில் கேட்டாள் ....

அங்க ரெஸ்ட்ரூம் இருக்கு நீ போய் முகம் கழுவி விட்டு வர்றியா? என்றான் , முகம் கழுவிவிட்டு வந்தாள் ...

ஜெயந்தி கோவாவை கட் பண்ணி முதலில் பாலாவுக்கு ஊட்டினார் , பிறகு ஜீவிகா , செந்தூரன் , என்று தொடர்ந்தது , செந்தூரன் அனைவரோடும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான் ஜீவி உட்பட ..

காலை உணவு முடிந்து வீட்டில் சற்று அமைதி நிலவியது , பெரியவர்கள் சற்றே ஓய்வெடுக்க அவர்அவர் அறைக்குச் செல்ல ,
தேவிகா , செந்தில் மனைவி சுரபி , கணேஷ் மனைவி பரியசகி ,செந்தூரி என்று மகளிர் அணி தனியாகப் பிரிந்தது , பாலா செந்தில் , கணேஷ் , மூவருமாகவும் , கார்த்திக் , செந்திலின் அண்ணன் சிவா , ஜெயராம் என்று மூவராகவும் ஆங்காங்கே பேச்சும் சிரிப்பொலியும் இருந்தது ,

ஜீவிகா செந்தூரியின் ஐந்து வயது மகன் விதுரனோடு ஒடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் அவளோடு கார்த்திக்கின் மகள்கள் அனன்யா அஸ்வதியும் சேர்நதுகொண்டனர் , வீடே குட்டி சொர்க்கமாக இருந்தது , அனைத்தையும் செந்ந்தூரன் தன் காமிராவில் காட்சிப்படுத்தினான் ,

செந்தூரன் , பாலாவிடம் மாமா நீங்க மூனு பேரும் என்கூட கொஞ்சம் வர்றீங்களா ? என்றான் , ம்.. என்ன விஷயம் என்றவாறு , மூவரும் சென்றனர் , வெளியே கார் ஷெட்டுக்கு வந்தவன் அங்கே மூடியிருந்த கவரை எடுத்துவிட்டு மூவரையும் அதை பார்க்குமாறு கை காட்டினான் ...

அதைப்பார்த்த மூவருக்கும் இரு நொடி இதயம் நின்று துடித்தது , விழியில் அழகான நினைவுகள் பிரதிபலித்தது , முதலில் கணேஷ் அதிலிருந்து மீண்டான் , பாலா பார்த்தியா ? என்றான், பாலா கண்கள் மின்ன ஹம்ம் என்று பதிலளித்தான் ,

அப்படி அவர்களை ஆச்சர்யப்பட வைத்தது 1997 மாடல் ராயல் என்ஃபில்ட் பைக் , பாலாவின் கல்லூரிக் காலத்தில் ஜெயந்தி பாலாவின் பிறந்தநாளுக்குத் தந்த பரிசு இந்த பைக் , நண்பர்கள் மூவரோடும , நான்காவது நண்பனாகவே இருந்தது , இதை அதிகமாக கணேஷ்தான் ஓட்டுவான் , பாலாவும் கணேசும் அதன் அருகில் சென்று அதை தொட்டுபார்த்த சில நொடிகளில் கல்லூரி வாழ்கைக்குள் சென்று திரும்பினர் .

செந்தூரன் , " மாமா நீங்க வீட்ட விட்டு போனதுக்கு பிறகு அம்மா , தாத்தா வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஷெட்ல இந்த வண்டிய பார்த்துட்டு உங்க ஞாபகத்தில அழ ஆரம்பச்சிடுவாங்க , அப்புறம் உங்க ரூம க்ளீன் பண்ணி உங்க ட்ரெஸ் புக்ஸ் ன்னு எடுத்து கைல வச்சுட்டு உங்கள நினைச்சு கவலை ப்படுவாங்க , உங்களோட பிறந்தநாள் அப்போ உங்க ஞாபகத்துல இந்த பைக்க தொட்டுப் பார்த்துட்டு அழுதவங்க மயக்கம் ஆகிட்டாங்க , அப்புறம் அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாம போயிடுச்சு , அதனால தாத்தா கோபப்பட்டு இந்த வண்டிய யாரிடமாவது கொடுக்க சொல்லிவிட்டார் ,

செந்தூரி எங்க மாமா வருவாங்க , இந்த வண்டிய நீங்க யார்கும் தரக்கூடாதுன்னு அழுதா , அதனால தாத்தா போகட்டும்னு , விட்டுட்டாரு ஆனா இந்த பைக் அம்மா கண்ணுல படக்கூடாதுன்னு சொல்லீட்டார் ,
அப்பா சர்வீஸ் பண்ணி கொஞச நாள் மெய்டன் பண்ணினார் , அப்புறம் நீங்க எப்போ வந்தாலும் அம்மா வோட கிஃப்டா உங்களுக்கு இத கொடுக்கனும்னு நான் மெய்டன் பண்ண ஆரம்பிச்சேன் என்றான் ,

பாலா , செந்தூரனிடம் " நான் நிஜமா இத எதிர்பார்க்கல செந்தூ.. தேங்ஸ் என்று அவனைக் கட்டிக்கொண்டான் .

ஜீவி முற்றத்தில் நின்று வண்ணமலர்களின் வாசத்தை மனத்திலும் , அழகு படுத்தி இருந்த நேர்தியையும் , கண்களிலும் நிறைத்துக்கொண்டிருந்தாள் ,

ஜீவிகா.... என்று செந்தூரன் ஜீவியின் அருகில் வந்து நின்றான் , இங்க தனியா என்ன பண்ற ? என்றான்

இந்த ஃப்ளோரல் டெக்ரேஷன் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு , அதான் பார்த்துட்டு இருந்தேன் ..இது யாரோட ஜடியா என்றாள் . அவன் காலரைத் தூக்கி காட்டி நான் என்பது போல் சைகை செய்தான் ,

ஹம்ம் .. எனக்கும் பூக்கள் ரொம்ப புடிக்கும் , ஆமா நான் உங்கள எப்படிக் கூப்பிடறது ? என்றாள்

அத்தை மகனை , அத்தான் இல்ல மச்சான் னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் என்றான் விளையாட்டாக...

அத்தானா.... அய்ய அதெல்லாம் ஓல்ட் நான் அப்படிக் கூப்பிட மாட்டேன் ,

பெரியப்பா பசங்களா இருந்தா அண்ணா , தம்பிங்கறோம் , தமிழ் வழக்குமொழி எவ்வளவு பழசோ அதே போல் தான் , அண்ணன், அத்தான், மச்சான் , எல்லாம் பழைய வார்ததை , அண்ணன் மட்டும் என்ன புது வார்த்தையா ? அணணன் கூப்பிட யாரும் யோசிக்க மாட்டேன்றீங்க என்றான் .

உண்மைதான் ஆனாலும் ..... என்று இழுத்தாள்..

சரி செந்து .. ன்னு கூப்பிடு..

ம்ஹூம் பேர் சொல்லி கூப்பிடக்கூடாது , அப்பா திட்டுவாங்க ,

அப்போ என்ன செய்யலாம் ...

மாமான்னு ....கூப்பிடவா ? என்றாள் ,

அதெப்படி எங்க அப்பாவும் உனக்கு மாமா , நானும் மாமாவா ? அதெல்லாம் முடியாது ,

அப்புறம் நான் எப்படித்தான் கூப்பிடறது ?

எனக்கு தெரியாது , நீதான் சொல்லனும் , சரி எப்படி கூப்பிடுவதென்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், உனக்கு கணேஷ் அங்கிள் , செந்தில் அங்கிள்னா ரொம்ப பிடிக்குமோ ?

பிடிக்குமான்னு கேட்டா என்னசொல்றது... கணேஷ் மாமாவும் ,செந்தில் மாமாவும் , புடிக்கும்னு சொல்லி அவங்க உறவையும் பாசத்தையும் ஒருவார்த்தைல அடைக்க முடியாது , ஏன்னா அவங்க எங்க வாழ்கையின் ஆதாரம் ,

சரி நான் உங்கள எப்படித்தான் கூப்பிடறது , ஹம்... நான் மாமா ன்னுதான் கூப்பிடுவேன் ஓகேயா ? என்றாள்.

முடியாது .. நீ அப்படிக் கூப்பிட்டால் நான் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேன்...
சரி நான் இப்போ போறேன் , நீ அடுத்த முறை என்னை நீ பார்க்கும் போது ஏதாவது உறவைச் சொல்லித்தான் கூப்பிடனும் , வெறுமன வாங்க போங்கன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன் .... என்று கூறிவிட்டு நகர்ந்தான்...

அவன் செல்வதைப் பார்த்தவாறு நின்றவள் , " இங்கபாருங்க ஒரு நிமிஷம் , ப்ளீஸ் திரும்புங்க... "என்றாள் , அவன் திரும்பவில்லை ... ' ச்ச...செந்தூட்ட இதுக்கு முன்னாடி என்னைப் பார்திருக்காங்களா ? இல்லையான்னு ? கேடகலாம்னு பார்த்தா திரும்பாம போய்டிருங்காங்களே !... நான் என்ன பண்ணட்டும் ... '

சிறிது நேரம் கழித்து ஜீவிகா சுரபியோடும் , ப்ரியசகி யோடும் செல்ஃபி எடுத்துக்கொண்டு இருந்தாள் , மதிய விருந்து முடித்து , மீனாட்சியம்மா குடும்பமும் , கணைஷ் ப்ரியசகியும் , கிளம்பிக் கொண்டிருந்தனர் , செந்தூரன் அனைவரையும் வாசல் வரைச் சென்று வழி அனுப்பி வைத்தான் ,

அப்பா நம்ம எப்ப வீட்டுக்குப் போலாம் ? - ஜீவிகா

இப்போ கிளம்பினா நம்மை யாரும் விடமாட்டாங்க , செந்திலையும், கணேசையுமே , நாளைக்குப் போகலாம்னு , போகவிடமாட்டேன்டாங்க , ஆனா அவங்கதான் பிள்ளைகளை விட்டுட்டு வந்ததால கிளம்பீட்டாங்க ...நாம நாளைக்கு ஈவ்னிங் கிளம்பிடலாம் , ஒகே யா ? - பாலா

சரி டாடி நாளைக்கு கிளம்பிடனும் சரியா ?

ம்.. சரிடா நாளைக்கு கண்டிப்பா கிளம்பிடலாம் , - பாலா

அந்த அழகிய மாலைப் பொழுதில் வீட்டின் ஹாலில் அனைவரும் கூடினர். செந்தூரி , பாலாவிடம் " மாமா நான் உங்கள எவ்ளோ மிஸ் பன்னேன் தெரியுமா ? என்னோட மேரேஜ்க்கு கூட நீங்க எப்படியாவது வந்திரமாட்டீங்களான்னு எதிர்பார்த்திட்டு இருந்தேன் , நான் பெரிய பொண்ணான பொழுது நீங்கதான் எனக்கு தாய்மாமா சீர் செய்யனும்னு எவ்வளவு ஆசையா இருந்தது தெரியுமா ? ஆனா நீங்க இல்ல , அதனாலதான் எனக்கு எந்த ஃபங்சனும் வேணாம்னு சொல்லிட்டேன் , என்றாள் .

தாத்தாக்கள் அருணாச்சலத்திற்கும் , ராஜாங்கத்திற்கும் பேத்தி கூறியது வியப்பைத்தந்தது , இவர்கள் இருவரும் ஏதோ தன் பேத்தி தங்களைப்போல மூடநம்பிக்கைகளையும் , சடங்குகளிலும் நம்பிக்கை யில்லாமல் , இருப்பதால்தான் ,
ஏஜ் அட்டன் ஃபங்சனை தவிர்கிறாள் என்று பெருமையாக எண்ணிக் கொண்டிருந்தனர் , ஆனால் தன் மாமான் இல்லாததனால் தான் பிடிவாதமாக மறுத்திருக்கிறாள்... இரு தாத்தாக்களும் ஒரவரையொருவர் பார்த்துக் கொண்டனர் .

செந்தூரி பேசியதைக்கேட்ட பாலா செந்தூரியை பக்கத்தில் அமரவைத்து , " சாரிடா மாமாவ மன்னிச்சுரு , என்றான் , அவன் மனதின் குற்றஉணர்ச்சி கண்களைக் கலங்கச் செய்தது .

தேவிகா , " செந்தூரி உன்னோட மாமா எப்படி உன்னை மறப்பார் , நம்ம கம்பனில லேடீ வொர்கர்ஸ்கு செந்தூரின்னு ஒரு ஸ்கீம் இருக்கு , அதன் மூலமா அவங்க மேரேஜ்கு ஒரு பவுன் காயினும் , அப்படி அவங்க மேரேஜ் ஆனவங்களா இருந்தா , அவங்களுக்கு பெண்குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ஒரு பவுன் காயினும் , பிறந்த அந்தக் குழந்தைக்கு பதிமூன்று , வயதில் ஒரு பவுன் காயினும் என மூன்று காயின் இந்த செந்தூரி ஸ்கீம்ல கிடைக்கும், இது முழுவதும் உங்க மாமா வோட பர்சனல் அக்கவுன்ட்ல இருந்து உன்னோட ஞாபகமா உனக்காக செய்வது ...என்றாள் .

அதைக்கேட்ட செந்தூரியின் கண்களில் சந்தோஷம் கண்ணீராக வந்தது , தேங்யூ மாமா தேங்யூ சோ மச் , என்று சிறு குழந்தையாய் பாலாவை கட்டிக்கொண்டாள்.

பாலா , செந்தூரியிடம் "சரி மா , மாப்ள எப்போ வர்றார் ? " என்றான் ,

" நாளைக்கு ஈவ்னிங் வந்திருவாரு மாமா ".

ஓகேடா , என்றவன் அக்கா ஜெயந்தியின் மடியில் தலை சாய்த்தான் ,
பாரம் சுமந்த மனமோ
பஞ்சென காற்றில் பறந்தது
கவலைகள் எல்லாம் மறந்தது
சொர்க்கம் அங்கே பிறந்தது .

ஜீவிகா, " டாடி கொஞ்சம் ஷாப்பிங் போனும் , என்றாள் ,

ஒகே டா போலாம் , என்றான் பாலா .

செந்தூரன் , " மாமாவ டிஸ்ட்ரப் பண்ணாத , வா நம்ம போலாம் " என்றான்.

ஜீவிகா பதிலேதும் கூறாமல் இருக்க ,

ஜெயராம் , " செந்தூரனோடு போய்டு என்ன வேணுமோ பர்சேஸ் பண்ணீட்டு வாடா " என்றார் ஜீவியிடம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro