அனிச்சம் பூ 21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஜெயம் இல்லத்தின் சனிக்கிழமை காலைப் பொழுது சற்று பரபரப்பாகவே இருந்தது , ஜெயராம் , செந்தூரன் இருவரும் கம்பனிக்கு கிளம்ப , ஜெயந்தியும் தேவியும் கிச்சனில் சமைத்துக்கொண்டிருந்தனர் , ஆகாஷ் விதுவிற்கு சாதம் உட்டிக்கொண்டும் , செந்தூரி லேப்டாப்பிலும் , தாத்தாக்கள் டீவி நியூஸ் பார்த்துக்கொண்டும் இருந்தனர்,

ஜீவிகா கணேஷின் மனைவி ப்ரியசகியோடு அலைபேச பேசிக்கொண்டிருந்தாள் .

" ஜீவிமா எப்போ வீட்டுக்கு திரும்புவீங்க ? " என்றாள் ப்ரியசகி ,

" நாளைக்கு அத்த "

அங்கே கணைஷ் காலை பணிக்கு கிளம்பும் நிமித்தம் காவல் சீருடையின் காக்கிச்சட்டை பட்டனை மாட்டிக்கொண்டிருந்தவன் ,
" ப்ரீ யாரோ சொன்னாங்க " இந்த நிமிடமே இங்கஇருந்து கிளம்பிடுவேன்னு , " இப்ப என்னடான்னா ஒரு வாரம் ஆச்சு ... என்றான்.

அதை கேட்டஜுவி " அத்த என்னோட சார்பா மாமா முதுகுல ஸ்ட்ராங்க இரண்டு அடி போடுங்க , " மாமா அப்புறம் நீங்க இப்படீ சொன்னீங்கன்னா நான் இங்க திரும்ப வரமாட்டேன் பார்துக்கங்க ,"
என்றாள் ,

" ஓகே ஓகே கூல் கூல் , எனக்கு இப்போ டைம் இல்ல ஜீவிமா , நீ ப்ரீ ட்ட பேசு , நெக்ஸ்ட் வீக் ஊட்டில மீட் பன்னலாம் " ,

ப்ரியசகியிடம் பேசிமுடித்து திரும்பிய ஜீவி தன் பின்னே நின்ற செந்தூரனைப் பார்த்தாள் , அவளின் கண்கள் இமைக்க மாட்டேன் என்றது ,

தேன் நிறமா ? சாக்லேட் பரெளனா ? என்று சொல்லமுடியாத கலரில் ஷர்டும் , க்ரீம் கலரான அடர் கோதுமை நிறப் பேன்டுமாக நின்றவன் தேங்ஸ் ஜீவி , ட்ரஸ் நல்லா செலக்ட் பண்ணிருக்க என்றான் ...

நீஜமாவே இந்த ட்ரெஸ் நல்லாருக்கா என்றாள் ,

நிஜமா ஜீவி , சூப்பரா இருக்கு , என்றவனை பார்த்துக் கொண்டிருந்த ஜெயராமின் செந்து .... என்ற அழைப்பைக் கேட்டு " சரி ஜீவி நான் கிளம்புறேன் ஈவ்னிங் பார்க்கலாம் என்று விடைபெற்றான் ,

சிறிது நேரத்தில் ஜெயராமின் தம்பி கார்த்திகின்  குடும்பம் வந்தது , கார்த்திக் ஃபிசிக்ஸ் டீச்சராக கோவையின் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறான் , மனைவி ரேவதியும் அதே பள்ளியில் மேக்ஸ் டீச்சராக இருக்கிறாள் , பள்ளி நாட்கள் போக மற்ற விடுமுறை நாட்களில் ஜெயம் இல்லத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டும் என்பது , ராஜங்கத்தின் கட்டளை மற்றும் , ஜெயராம் ஜெயந்தியின் விருப்பமும் கூட .

கார்த்திக்கின் மகள்கள் அஸ்வதியும் அனன்யாவும் வீட்டுக்குள்  வந்தவுடனே ஜீவிகாவைத் தேடினர்

ஜெயந்தியிடம் , " பெரியம்மா .... எங்க ஜீவிகாவ காணோம்..." எனக்கேட்க ..

" அவ ரூம்ல இருப்பாளே ! " என்ற ஜெயந்தியிடம் ,

" இல்ல பெரீம்மா " எனக்கூற ,

"அப்போ தோட்டத்தில தான் இருப்பா போய் பாருங்க " ஜெயந்திக்கு ஜீவிகா வந்த இந்த ஒரு வாரத்தில் அவளின் பழக்க வழக்கங்கள் விருப்பு வெறுப்புக்கள் என அனைத்தும் அத்துப்படியானது ஜெயந்திக்கு ,மேலும் பல விஷயங்களில் அவள் ஜெயந்தியை யே பிரதிபலித்தாள்.

அனனி , அஸ்வதி இருவரும் தோட்டத்திற்குச் செல்ல ,
ஜீவிகா தோட்டத்தில் தான் இருந்தாள் , வழக்கம் போல் அணிலையும் பறவையும் , பூக்களையும் , என பிடித்த அனைத்தையும செந்து வாங்கிதந்த ஹேன்டி கேமிராவில் படம் பிடித்துக்கொண்டிருந்தாள் , அவன் திங்களன்று சென்னை கிளம்பும் போது ஃபோனில் அணிலை அவள் வீடியோ எடுத்ததை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் , அதன் விளைவே இந்தக் கேமிரா .

அஸ்வதியும் அனன்யாவும் ஜீவிகா என்று ஆளுக் கொரு புறமாக அவளின் கைபற்றினர் ,

" ஹேய் ! நீங்க எப்ப வந்தீங்க ? " என ஜீவி விழிவிரிக்க ,

" இப்போதான் " வந்தோம் இருவரும் கூற ..

" அத்தை , மாமா , ? ...

"எல்லாரும்தான் வந்திருக்கோம் , நேற்று எங்களை விட்டுட்டு நீங்க எல்லாரும் அந்தாக்ஷரி விளையாண்டிங்க போல , "

" ஹம்..யார் சொன்னா ? "

" செந்து அண்ணாதான் , நேத்து நைட் நாங்க கால் பண்ணும் போது , அந்தாக்ஷரி விளையாடுரோம்னு சொன்னாங்க , சரி வீடியோ கால் பண்றோம் நாங்களும் ஜாயின் பண்றோம்னு சொன்னோம் ,
செந்து அண்ணாதான் நான் லைவ் டெலகாஸ்ட் பண்றேன் , இன்றைக்கு பாருங்க , நாளைக்கு விளையாடலாம்னு சொன்னாங்க..." என்றாள் அஸ்வதி .

"அடப்பாவி நேத்து இதெல்லாம் கூட நடந்துச்சா ? "

" ஆமா , நாங்க , அம்மா அப்பா எல்லோரும் பார்த்தோம் , பெரியப்பா அண்ணா எல்லாரும் எப்பவுமே பிசியா இருப்பாங்க நீங்க வந்ததும் தான் பெரியப்பா , அண்ணா எல்லாம் வீட்ல டைம் ஸ்பென் பண்றாங்க , அதுவும் பெரியப்பா தாத்தால்லாம் பாடுனத பார்த்துட்டு , அப்பாவும் அம்மா நாங்க எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருந்தோம் .. " என்றாள் அனன்யா "

" அதை கேட்ட ஜீவிக்கே சிரப்பு வரத்தான் செய்தது , இருந்தாலும் கேட்டாள் , ஏன் மாமா தாத்தால்லாம் நல்லாத்தான பாடுனாங்க ..."

" ஹம்ம்.. நல்லாத்தான் பாடுனாங்க , உங்களுக்கு ஃபேவரான லெட்டர் வர்ற வரைக்கும் பாடுன லைனையே திரும்பத் திரும்பப் பாடி அண்ணாவோட டீம ஏமாத்திட்டே இருந்தீங்களே..... " என்றாள் அஸ்வதி .

" ஓ.... என்றாள் ஜீவி சிரிப்புடன் ,"

" ஆகாஷ் மாமா எங்க ஆளயே காணம் , அவரப் பாட்டுப்பாடச்சொன்னா அவரு என்னடான்னா அவருபாட்டுக்குப்பாடி அவரு பொண்டாட்டிய கரக்ட் பன்னிக்கிட்டு இருக்காரு.. சரியான போங்கு , வரட்டும் அந்த ராணா என்றாள் அனன்யா ..."

அருகே ஸ்டோன் பென்ஞ்சில் வைத்திருந்த ஜீவியின் ஃபோன் அழைப்பால் இசைத்தது , பாலாதான் கால் பண்ணியிருந்தான் ,

" ஜீவிமா என்னடா பண்ற ? உன் மம்மி எங்க ?

" ஹம் டாடி , கார்டன்ல அஸ்வதி அனன்யாகூட இருக்கேன் , அம்மா ஜெயந்தி அத்த கூட கிச்சன்ல இருந்தாங்க .."

" ஓ அஸ்வதி அனன்யால்லாம் வந்திருக்காங்களா ? குட் , சரி டா டாடி ஈவ்னிங் வரேன் , நாளைக்கு ஈவ்னிங் கிளம்பிரலாம்.. "

" ம்.. சரி டாடி என்றவளின் குரலில் சுரத்தே இல்லை .

தியத்தின் விளிம்பில் மாலையின் வெளிச்சத்தில் முதலில் ஜெயராம் பின்பு செந்தூரன் , பாலா என்று ஒவ்வொருவராய் வீடு வந்தனர் , வீட்டின் தேநீர் நேரத்தில் ஹால் முழுவதும் சொந்தங்களால் நிறைந்திருந்தது , பாலா தன் தந்தை அருணாச்சலம் அருகில் அமர்ந்திருந்தான் ,

நீணட வருடங்களுக்குப் பிறகு தன் அருகில் அமர்ந்த மகனின் தோளில் கை வைத்து , நீ அஸ்ஸாம் போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சதாப்பா என்று அக்கறையும் அன்புமாய் விசாரித்தார் , பின் தன் பேத்தி ஜீவிகாவின் புகழ் பாட ஆரம்பித்தார் , என் பேத்தி நல்ல டேலன்ட்பா , எல்லாவிஷயமும் விரல் நுனில வச்சிருக்கா , ஆவரம் பூ வில் கருப்பட்டி போட்டு டீ போட்டு குடுத்தாப்பா அவ்வளவு நல்லா இருந்தது , என்றார் ,

அவர் பேசியதை மென்மெளனப்பூன்னகையோடு , கேட்டுக் கொண்டிருந்த பாலா , " ஃப்ளோரல் டீ ன்னு நியு ப்ராஜக்ட் ஆரம்பிச்சிருக்கோம் பா அது ஜீவியோட ஐடியாதான் , அதுக்கு நல்ல வரவேற்பு இருக்குப்பா , 5 வெரய்ட்டி ட்ரையல் முடிஞ்சு இப்போ ஆர்டர்ஸ் நிறையா வந்திருக்குப்பா , இன்னும் நிறைய வெரைட்டி ப்ராசஸ்ல இருக்கு " என்றான் .

ஓ .. என்று பெருமிதமாய் தலையசைத்தார் ,

இவர்களோடு கார்த்திக்கும் வந்திணைய உரையாடல் நீண்டுகொண்டிருந்தது .

ண்டுகளின் ரீங்கார பாடலின் இசை இரவில் ஜெயம் இல்லத்தின் அனைவரும் கடைக்குட்டி அஸ்வதி மற்றும் தேவியின் ஆசைக்காகா கார்டனை ஒட்டியுள்ள கெஸ்ட் அவுஸ் மொட்டைமாடியில் ஒருங்கினைந்தனர் , இரவு உணவு மொட்டைமாடியிலேயே நடந்தது ,

ஜீவிகா தன் தாத்தா அருணாச்சலத்ததிற்கும் பாலாவிற்கும் நடுவில் அமர்நதிருந்தாள் , அருணாச்சலத்திற்கு மகனும் பேத்தியும் தன்னுடன் அருகில் இருக்கும் இந்தத் தருணம் , தான் தொலைத்த நிம்மதி மீண்டதாக உணர்ந்தார் .

செந்தூரி , தன் சித்தப்பா கார்த்திக்கிற்கும் அப்பா ஜெயராமிற்கும் நடுவில் அமரந்திருந்தாள் ,

" ஏய் செந்தூரி எந்திரி டி , நான்தான் எங்க அண்ணா பக்கத்தில் உட்காருவேன் , நீ போய் உங்க மாமாட்ட உக்காரு , என்று தேவி அவளை எழுப்பினாள் ,

செந்தூரி " ஏய் இம்ச ! இம்ச ! உட்காந்து தொல" என்று எழுந்தவள் , பாலாவைப்பார்த்து தேவியைக் காட்டி மாமா இந்த லூச எப்படி சமாளிக்கறீங்க .. என்பது போல் சைகை செய்தாள் , பாலாவோ தன் கட்டை விரலால் நெற்றியில் கோடிட்ட வாறு காட்டி எல்லாம் விதி என்பது போல் சொல்லி சிரித்தான் ,

இதைப்பார்த்த அனைவரும் தேவியை பார்த்து சிரிக்க தேவியோ அதை பற்றியேல்லாம் கண்டுகொள்ளாமல் தன் சின்ன அண்ணன் கார்த்திக்கின் தோளில் சாய்நதவாறு சிப்ஸை கொரிக்க ஆரம்பித்திருந்தாள் .

அங்கே ரம்மி , அந்தாக்ஷரி , மேலும் அரட்டை கச்சேரியுமாக சிரிப்பே இசையாக பேச்சே பாடலாக இருந்தது , சந்தோஷத் தேவதை அங்கே அனைவரையும் ஆசிர்வதித்துக்கொண்டிருந்தாள் . சொந்தகளைச் சேர்த்து செய்த குட்டி சொர்கமாய் மாறியது அந்த மொட்டைமாடி ...

மெல்லிரவு நல்லிரவாய் மாறுகின்ற தருணத்தில் , நிலவின் ஒளியில் உறவுகள் உறங்க ஆரம்பித்திருந்தது , செந்தூரன் தன் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்த தங்கை அஸ்வதியின் தலைக்கு தலையனையை கொடுத்துவிட்டு நகர்ந்தவன் ஆகாஷிடம் ,

" மாம்ஸ் உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் " என்றான் ,

" ஹம் சொல்லு செந்து " என்றவாறு ஆகாஷிம் செந்தூவும் மாடியின் முற்றத்திற்கு வந்தனர் ,

"என்ன விஷயம் சொல்லு செந்து "

" மாமா ஒரு 6 மந்தக்கு முன்பு மும்பைக்கு அவார்ட் வாங்கப் போனபொழுது ... ஒரு பொண்னைப் மீட்  .... என்று ஆரம்பித்தான்

"ஆகாஷ் அவன் சொல்ல வரும் விஷயத்தை யூகித்தான் , அவன் மனம் ஏனோ அந்த விஷயத்தை கேட்கும் நிலையில் இல்லை , இங்கே தூக்கத்தில்கூட பொம்மையை சுமக்கும் குழந்தையாய் , ஜீவிகா செந்தூவின் நினைவுகளைச் சுமக்கிறாள் , இவன் என்னவோ பொண்ணு என்று உளறுகிறானே , அவன் அந்தப் பெண்ணுடன் ப்ரேக் அப் என்று சொல்லிவிட மாட்டானா என்று அவன் மனம் எதிர்பார்த்தது ...

ஆனால் அவனோ மாறாக " ரஷ்மி இல்லாமல் என் வானம் விடியாது " என்று முடித்தான் .

மேலும் , அம்மா அப்பா பார்த்த இரண்டு பொண்னையும் நான் வேணாம்னு சொன்னதால இப்போ மேரேஜ் விசயத்தைப் பற்றி பேசமுடியல , நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் என்றான் ,

' அடப்பாவி இது வேறா ? நான் ஹெல்ப் பண்ணனுமா ? என நினைத்தவன் , நீ இதுக்கு முன்னாடி வேண்டாம்னு சொன்ன இரண்டு பொண்ணும் நமக்குச் சம்மந்தம் இல்லாதவங்க , ஆனா இப்போ , வேணாம்னு சொல்லப் போவது , இந்த வீட்டோட பொக்கிஷத்தை இந்த வீட்டோட மகிழ்ச்சியை ' , என்று அவன் மனம் பொருமிக்கொண்டிருந்தது .

செந்து " மாம்ஸ் ".. , என்று உலுக்கினான் .

" சொல்லு செந்து " ,

" நான் சொல்லீட்டேன் இனி நீங்கதான் சொல்லனும் என்றான் "

" சரி செந்தூ பார்கலாம் , மாமாவிடம் பேசுகிறேன் "

" தேங்யூ சோ மச் மாம்ஸ் , இப்பத்தான் எனக்கு ஏதோ பெரிய பாரத்த இரக்கி வச்ச மாதிரி மனசு லேசா இருக்கு மாம்ஸ் என்றான் ,

அதுசரி பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருக்கா ? ஒரு பாறாங்கல்ல தூக்கி இந்த குடும்பத்து மேல போட்டுட்டு , உனக்கு மனசு லேசா இருக்கா ? என்று மனதுக்குள் செந்தூவைத் திட்டித் தீர்த்தான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro