அனிச்சம் பூ 29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

" ன்ன ! ப்ரியா அத்தை , மலரும் நினைவா ? " என்றாள் ஜீவி ,

" நீ வேற , அதெல்லாம் ஒன்னும் இல்லடா , நான் ஏற்கனவே சொன்னேன் , " அனிவர்சரி செலிப்ரேட் பண்ணலாம் , பட் இந்த 1st மீட் வீடியோலாம் போட வேணாம்னு " ஆனா பாலாண்ணா தான் ஜஸ்ட் மெமரீஸ் தானடா இதுல என்ன இருக்குன்னு , வீடியோலாம் ப்ளே பண்ணீட்டார் " , என்றாள் .

"நல்லாதான அத்தை இருந்தது" ,

" ஆமாடா இர்ஃபா அழகா எடிட்பன்னிருந்தான் " ,

" ஆமாம் , என்றவள் , நீங்களும் மாமாவும் , ரொம்ப லக்கி தான் , விரும்புனவங்களோடு வாழ்கை அமைவது ஒரு வரம் இல்லையா , அத்தை என்றாள் ", ஜீவி ..

அதற்குப் ப்ரியா , " ஹம் இருக்கலாம் ... நீயும் ஃப்யூச்சர்ல யாரைப் பிடிச்சிருக்குன்னு கை நீட்றியோ , அவங்க இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்க கணேஷ் மாமா உனக்கு மேரேஜ் பண்ணிவைச்சுடுவார் , என்ன ஓகேயா என்றாள் " , கண்சிமிட்டி சிரித்தவாறு ...

" இல்ல அத்தை , நீங்க வேற , அப்டியெல்லாம் யாரையும் கை காட்ட மாட்டேன் " , என்றாள் வெறுமை கலந்த உறுதியாக ....

இங்கே கணேஷிற்கோ செலிப்ரேஷன் எதிலும் மனம் ஒட்டாமல் , ஜீவியின் விசயத்திலேயே மனம் அமிழ்ந்திருந்தது , வழக்கமாக ஒரு இளைஞனிடம் சிறு பெண்ணிற்கு ஏற்பட்ட ஈர்ப்பு , நாளடைவில் மனம் மாறிவிடும் , ஆனால் ஜீவிக்கு அப்படி இல்லையே , அவளைப் பொருத்தமட்டில் எந்த நிகழ்வும் அவளை அதிகமாகவே பாதிக்கும் , சிறு வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவள் மூளை , மகிழ்ச்சி , கோபம் போன்ற உணர்வுகளை உடனுக்குடனே அதிகமாக பிரதிபலிக்கும் என்று மருத்துவர் கூறியது கணேஷ் மட்டுமே அறிந்த ஒன்று .

விபத்தின் போது பாலா வெளிநாட்டில் இருக்க , தேவிக்கு உதவியோக கணேஷ் மருத்துவமனையில் இருந்த சூழலில் மருத்துவர் கணேஷிடம் கூறிய இதை பாலாவிடமோ , தேவியிடமோ கூற அவன் விரும்பவில்லை , ஏற்கனவை நடந்த விபத்தில் இருவரும் பயந்து போய் இருக்க , இதைக் கூறினால் மேலும் ஜீவியின் நியாயமான உணர்வுகளையோ , அல்லது இயல்பான பிடிவாத்தைக் கூட ஏதோ குறைபாடகப் நினைத்து கவலை கொள்ளும் சூழலை உருவாக்கிவிடுமோ என்ற பயத்தில் மனதோடு வைத்துவிட்டான் .

போலிப்புன்னகையும் , பொய்மொழிகளும் , சூழ்ந்த உலகில் அகத்தில் நினைத்ததை முகத்தில் உடனே காட்டிவிடும் இயல்பு நேர்மையின் இயல்பென்றே நினைத்தான் ,
இது பெரிய குறைபாடு இல்லை யென்றாலும் , அவள் இதயம் ஒரு நிகழ்வை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று அழும்போது அதை கணேசால் அவ்வளவு எளிதாகக் கடக்க முடியவில்லை , அவளது கண்ணீர் அவனைச் சோர்வடையச் செய்கிறது ,

ஜீவிக்கு ஒருவனின் மீதான விருப்பம் , காதல் என்பது அந்த வயதின் இயல்பான நியாயமான உணர்வு அதில் ஏமாற்றமடைந்து அழுவதை ஒரு குறைபாடகப் பார்க்க அவன் விரும்பவில்லை , அதோடு பருவ வயதின் ஹார்மோன் மாற்றமும் , ப்ரைன் சென்சிட்டிவும் இணையும் போது ஏற்படும் உளவுச் சிக்கல் , கணேசின் மனம் சிந்தனையின் விளம்பில் இருந்தது ..

இதனால்தான் கணேஷ் , எதிர்காலத்தில் இதையெல்லாம் புரிந்துகொண்டு மிகையுமில்லாமல் , குறையுமில்லாமல் அவளை முழுமையாக நேசித்து அக்கறை செலுத்தும் ஒருவன்தான் ஜீவியின் கணவனாக இருக்கமுடியும் என்று நினைத்தான் , அந்த ஒருவன் செந்துவாக இருக்க வேண்டும் என்பதையும் அவன் இந்த இரண்டு குடும்பங்களும் இணையும் முன்பே தீர்மானித்து விட்டான் ,

ஆம் , ஜீவி செந்துவின் மீது ஆசை வைக்காவிட்டாலும் , கணேசைப் பொருத்துவரை செந்துவே ஜீவியின் கணவனாக வேண்டும் என ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாகவே நினைத்தான் ,
இதோ இதுவரை அவன் நினைத்ததுபோல் இல்லை இல்லை நிகழ்தியது போல் மிகச் சரியாகவே நடந்துகொண்டிருந்தது ...

ஆனால் " ரஷ்மி " இப்படி ஒரு பெயர் இடையே வந்து உறுத்தும் என அவன் எதிர்பார்க்கவில்லை , கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்தான் ,

அன்று பாலாவுக்கும் தேவிக்கும் திருமணம் முடித்து கோவையிலிருந்து ஊட்டி வருகையில் யாரும் நினைத்துக் கூடப்பார்க்கவில்லை , கோவைக்கும் ஊட்டிக்குமான பிரிவின் தூரம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் என்று , அன்று நண்பனின் உணர்வுக்கு மதிப்பளித்து அவன் தனித்து நிலைக்க உறுதுணையாக இருந்தாலும் , ஆறேழு வருடங்கள் செல்ல செல்ல செந்திலுக்கும் கணேஷேற்கும் தன் நண்பன் அவன் குடும்ப உறவுகளைப் பிரிந்து மனதுக்குள் மருகுவது புரிந்தது .

கணேஷ் " நான் போய் ஜெயாக்காவிடம் உண்மையைச் சொல்கிறேன் " என்று சொல்லும் போதெல்லாம் ,

பாலாவோ " அந்த உண்மையைச் சொல்லவதாக இருந்தால் நான் அன்றே சொல்லி இருக்க மாட்டேனா , அதற்கு ஏன் இவ்வளவு தூரம் பிரிந்து வாழ்கையின் திசையை மாற்றனும் ... இங்கே உடைந்தது அவர்கள் என் மீதும் தேவிமீதும் வைத்த நம்பிக்கையும் , நான் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையும் .. நீயோ , செந்திலோ போய் உண்மையைச் சொன்னாலும் அது நானே என் சுயமரியாதையை இழந்து , அவர்களின் வாசலில் பணத்திற்காக நிற்பதற்குச் சமம் , நான் வாழ்வில் ஒரு நிலமைக்கு வரும் வரை இதைப் பற்றி பேசவேண்டாம் " என உறுதியாய் கூறிவிட , காலங்கள் அதன்போக்கில் வேகமாய் கரைந்து கொண்டிருந்தது ...

உறவுகளின் இடத்தை நட்புகள் நிரப்பலாம் , நட்பின் இடத்தை உறவுகள் நிரப்பலாம் , ஆனால் அப்படி மாற்றி நிரப்படும் போது நட்பிலும் உறவிலும் உள்ள , உயிரும் உணர்வும் பின்னப்பட்ட இழைகளில் இடைவெளியில் இருக்கும் தனித்துவமான புரிதலும் , சுதந்திரமும் சேர்ந்தே அடைபட்டு விடுகிறது , அனைத்துமாக மாற நட்பால் முடியும் , இருந்தாலும் உறவு கொடுக்கும் உணர்வுகளின் பந்தத்தை நட்பால் முழுமையாகத் தர இயலாது .

இதுநாள் வரை எப்படியோ , இனியும் இந்தப் பிரிவை விரிய விடக்கூடாது . இரண்டு குடுபங்களும் இணையவேண்டும் , அதுவும் இயல்பாக நடந்ததாக இருக்க வேண்டும் கணேஷ் அதற்கான முதல் கட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான் ...

ஜெயராம் குடும்பத்தை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் , மீண்டும் தற்போதைய நிலவரம் குறித்த தகவல்களைத் திரட்டினான் , அது அவனுக்கு மனநிறைவையும் மகிழ்வையும் தந்தது , ஜெயராமின் தொழிற் வளர்ச்சி , செந்தூரியின் கல்வி , வேலை , அவளின் கணவன் , மேலும் செந்தூரனின் திறமை மற்றும் அவனது நடவடிக்கைகள் என அனைத்தும் திருப்தி அளித்தது , அதோடு செந்தூரனின் திருமணத்திற்காக பெண்தேடும் படலமும் நடந்து கொண்டிருந்தது ... ஆனால் எதுவும் செந்தூரனுக்கு பொருந்திவரவில்லை , இந்த நிலையில் செந்தூரனுக்கு விருது கிடைத்தது , அதைப் பெற அவன் மும்பை சென்றது , என செந்துவைப் பற்றி அதுவரை கணேஷிற்கு கிடைத்த தகவல்களை அறிந்தவனுக்கு ஜீவிக்கு செந்துதான் சிறந்தவனாக இருக்க முடியும் என்ற எண்ணம் எட்டிப்பார்க்க , அதை சிந்தையில் அவன் ஏற்றிக் கொண்டான் , அதை அடுத்து வந்த நாட்களில் கணேஷின் முக்கியப் பணிகளின் நிமித்தம் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகவே ,
ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் செயலில் இறங்கினான் ,

இப்பொழுது பிரச்சனை ஆரம்பித்த ஆரம்பப்புள்ளியில் இருந்தே அதன் தீர்வையும் ஆரம்பித்தான் , தன்ராஜ் பற்றி தகவல்களை அறிந்தான் , பாலாவிற்குத் தெரியாமல் , பாலா வின் கம்பனி சம்மந்தமான ஹெர்பல் டீ , ஃபுளோரல் டீ பற்றிய கட்டுரைகளை , மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்நத பதிவாக பாலாவின் புகைப்படத்தோடு தன்ராஜின் பார்வைக்குச் சேருமாறு , அவன் நணபர்கள் மூலமாக சோசியல் மீடியாவில் பகிரச்செய்தான் , அதைப்பார்த்த அடுத்த நொடி தன்ராஜ் பாலாவைத் தொடர்பு கொண்டான். பாலாவின் தொழில் நிலைமை மகிழ்வைத் தந்தாலும் அவன் இன்றளவும் குடும்பத்தோடு சேராமல் இருப்பது , தன்னால் நேர்ந்த தீங்கு என நினைத்து குற்றஉணர்ச்சியில் மருகியவன் , கணேஷ் மற்றும் செந்திலின் அலைபேசி எண்களை வாங்கினான் ,
கணேஷ் , செந்தில் இருவரிடமும் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தவன் ,
கணேசிடம் அருணாச்சலத்தையும் , ஜெயராமையும் தொடர்பு கொள்ள அவர்களின் அவர்களின் அலைபேசி எண்ணைக் கேட்க ,

கணேசோ விளையாட்டாய் " டேய் மாப்ள .. உனக்கு அவ்ளோ தைரியம் வந்திருச்சா ? .... நீ தான் நடந்த அத்தனை பிரச்சனைக்கும் காரணம்னு ஜெயராம் சாருக்குத் தெரிஞ்சா உன்னோட நிலைமை என்னனு யோசிச்சுப் பார்த்தியா ? .. " எனக் கூறிச் சிரிக்க ..

தன்ராஜ் " டேய் இந்த தனா யாருன்னு நினைச்ச ... என வீரதீர வசனம் பேச ..

செந்திலோ சிரத்துக்கொண்டு , " டேய் கணேஷ் DSP யா இருந்தப்ப ஒருதடவ போலிஸ்னு கூட பாக்காம நடுரோட்டுல வச்சு கணேசோட காலரைப் புடுச்சு உலுக்கி பாலா எங்க இருக்கான் , ஏன்டா உண்மையை சொல்ல மாட்டேங்குறன்னு அடிக்க வந்துட்டாரு ... அப்போ உன்னோட நிலமைய யோசிச்சுக்கோ .. " எனக்கூறி தனாவைச் சீண்ட ,

தனாவோ " என்னை என்னவேணா பண்ணட்டும் டா ... நான் உண்மையச் சொல்றேன் " என சீரியசாகப் பேச..

கணேசோ " சரி விடு தனா பார்த்துக்கலாம் " , என்றவன் , அவங்க கமபனி பேரு ஜீனியஸ் எக்ஸ்போட்ஸ் னு நினைக்கிறேன் , நீ வேனா கம்பனி வெப்சைட்ல இருக்க கான்டக்ட் நம்பர்கு ட்ரை ப்ண்ணு என்று தெளிவாக , செந்துவிடம் பேசும் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு , ஏதும் தெரியாதது போல் ஒதுங்கிக் கொள்ள ,

தனா அதன் படியே அந்த நம்பருக்கு அழைக்க , அந்த நம்பர் அட்மினைத் தாண்டி , செந்துவின் அசிஸ்டென்ட்டை தாண்டி , பிறகு செந்துவைச் சென்றடைய , செந்துவிடம் பேசியபிறகு அதன் , செந்து பாலாவை பார்த்தது , செந்துவின் வீட்டிற்கு அனைவரும் சென்றது , பிரிந்த சொந்தங்கள் இணைந்தது , என கணேஷ் நிகழ்த்தியது சரியாக நடந்தேறியது .

ஆனால் , ரஷ்மி இந்த பெயர் ..எப்படி உள்ளே வந்தது ... கணேஷ் யோசிக்க ,
ரஷ்மியும் , செந்துவும் வாங்கிய லேபர் வெல் ஃபேர் அவார்டை , ரஷ்மியோடு சேர்நது எடுத்த ஃபோட்டுவோடு இன்ஸாடாவில் பதிவிட்டிருந்தது ஞாபகம் வந்தது , கொல்கட்டாவை சேர்ந்த பிஸ்னஸ்வுமன் , புது அறிமுகம் என்றுதானே இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்தான் , இந்த நான்கைந்து மாதத்திற்குள்ளாக , நட்பு , காதல் , என திருமணம் வரை வந்துவிட்டதா .. என யோசித்து அதற்கான பதிலையும் அவனே கண்டறிந்தான் , ஆம் இருவருமே பக்குவப்பட்டவர்கள் இருவருக்குமான புரிதலையும் , நட்பையும் , காதலோடு தொடர நினைத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கலாம் , இதற்குப் பெரிதாக வருடக்கணக்கில் காதலிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லையே .. என நினைத்தவன் , ஆனால் ஜீவி .. சரி அவளைச் சமாதானப்படுத்தலாம் , என நினைத்தவன் அதோடு செந்துமட்டுமே , உலகத்தின் கடைசி நல்லவன் கிடையாதே , என தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொணடான் .

ரவின் நிலவொளியில் மாடியில் ஏதோ சிந்தனையின் வசம் நின்றுகொண்டிருந்த பாலாவின் தோள்களில் செந்திலின் கரம் பதிவதை உணர்ந்து திரும்பினான் ,

" பாலா என்னடா இந்த நேர்த்தில் தூங்காம இங்க என்ன பண்ற? " என்றான் செந்தில் ,

" தூக்கம் வரல அதுதான் , சரி உன்னை ஜீவிகாவிடம் பேசச்சொன்னனே , பேசினாயா ? ஜீவிகா என்ன சொன்னாள் ? " என்றான் பாலா ,

செந்தில் , ஒரு நொடி யோசனைக்குப்பின் , சற்று இயல்பாக , "ஹம் .. பேசினேன் ஒன்னும் பெரிசா எந்த ரீசனும் இல்லடா , இது ஃபைனல் இயர்ல , காலேஜ் முடியப்போது அதான் , ஃப்ரன்ஸ இனி அடிக்கடிப் பார்க்க முடியாது , அதுதான் ஒன் மந்த்தா ஏதோ டிஸ்டர்ப்டா இருந்திருக்கா " , என்றான் .

பாலா செந்திலைப் பார்த்து , " நீ சொல்லியது அபத்தம் என்பதை , சிறு புன்னகையில் உணர்த்தி , செந்திலிடம் , " ஜீவிக்கு செந்துவ ஏற்கனவே எப்படித் தெரியும் , செந்தூவுக்கு எப்போ மேரேஜ்னு , ஜீவி சொன்னா ? " என்றான் பாலா .

" உனக்கு எப்படி இது தெரியும் ? " என்பதாய் ,செந்தில் பாலாவைப் பார்த்ததான் ,

பாலா , " என்ன பார்கிற , இவனக்கு எப்படித் தெரியும்னா ? மத்தியானம் ஜீவியை சாப்பிட கூப்டறதுக்காக , அவள் ரூமிற்க்குப் போனேன் ஆனா , அங்க இர்ஃபா கோபமா பேசினமாதிரி இருந்ததால , அங்க நின்னு இா்ஃபா பேச்சைக் கவனிச்சேன் , அப்போதான் ஜீவி விஷயமும் செந்துவோட கல்யாண விஷயமும் , தெரிஞ்சது , என்றவன் ஜீவி என்னடா சொன்னா ? " என்றான் .

" ஜீவி அவ ஃப்ரன்டோட இன்டர்வ்யூக்கு போகும் போதுதான் , செந்துவைப் பார்த்தேன்னு சொன்னா " என்றான் .

"ஹம் .. செந்துவுக்கு எப்போ மேரேஜ் னு சொன்னா ? "

" நெக்ஸ்ட் மந்த் னு சொன்னாள் , சரி , .. செந்துவோட மேரேஜ் விஷயத்தை உங்க அக்கா , மாமா , அப்பான்னு யாருமே உன்கிட்ட ஏன்டா சொல்லாம இருக்காங்க .." என்றான் ,

" ஹம் எல்லாம் , உன் அருமைத்தங்கச்சி , தேவியால் தான் , அவங்க சொல்லத் தயங்குறாங்க .. " என்றான் ,

" ஏன்டா , தேவி என்ன பண்ணிச்சு ? .. "

" ஜீவிக்கு செந்துவ மேரேஜ் பண்ணலாம்னு , என்னிடம், சொன்னாள் ... நான் அப்பொழுதே சொன்னேன் , கொஞ்சம் பொறுமையா இரு வீட்டில் அக்கா , மாமா , செந்து ன்னு எல்லார் மனசிலேயும் , என்ன இருக்குன்னு தெரிந்தபிறகு , அப்புறம் இந்த விஷயமா பேசலாம்னு , ஆனா தேவி அவசரப்பட்டு கார்த்தியிடம் சொல்லி இருக்கிறாள் , அவரும் இது சம்மந்தமா வீட்ல பேசி இருப்பார் போல , செந்து ஏற்கனவை ஒரு பொண்ணை விரும்புறதால , கல்யாண ஏற்ப்பாடு பண்ணத , அவங்க நமகிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமத் தயங்குறாங்க .." என்றான் .

"ஹம்.. என்று செந்தில் ஆமோதித்தான்"

பாலா மீண்டும் தொடரந்தான் ,
" எது எப்படியோ , குடும்பம் ஒன்று சேர்ந்ததற்குப் பின் நடக்கும் முதல் விசேஷம் , நான் செந்துவுக்கு ஒரு தாய் மாமாவா , இதுவரை எதுவும் செய்யவில்லை , அவனோட கல்யாணத்தை நல்லபடியா நடத்தனும் , எங்க அக்காவீட்டுக்கு வறப்போற புது உறவு , அந்தப் பொண்ணும் செந்துவும் சந்தோஷமா வாழனும்டா , என்ற பாலவைக் கவலையாகப் பார்த்த செந்தில் , சரி பாலா நீ போய் ரெஸ்ட் எடு , மார்னிங்ல இருந்தே பிசியா இருந்த , இப்பவும் அன் டைம் ஆகிடுச்சு , போடா மார்னிங் பேசலாம் " என்றான் ,

தன் அறைக்குக் கிளம்ப ஆயத்தமான பாலா திரும்பி செந்திலிடம் , " ஜீவிய ... " எனக் கூறி சற்று தயங்க , செந்தில் இடைமறித்து , ஜீவிய நான் சமாதானப்படுத்திக்கிறேன் , கொஞ்ச நாள் ஆனா மறக்க ஆரம்பிச்சிடுவா பாலா , நீ கவலைப்படாதே , நான் பார்த்துக்கொள்கிறேன் ,என்றான் "

ஜீவி அவள் அறையில்
தூக்கம் தீண்டா விழிகளுடன் ,
துரத்திக் கொண்டிருக்கும் செந்துவின் நினைவுகளுடன் போரடிக்கொண்டிருந்தாள் ,

குளிர்நிலா விழுந்த குளமென இருந்த அவள் மனம் ,
சூரியன் விழுந்த ஆழியாய் அலையடித்துக் கொண்டிருந்தது ,

தன் மூளை அவன் பாசத்தில் பழுதாகி நின்றது ,

இதயமோ அவன் கண்களில் விழுந்து காணமல் போயிருந்தது ,

அவனை விட்டு விலக நினைத்தால் மூளை வேலை நிறுத்தம் செய்கிறது,

இதயமோ அவனிடம் இருந்துகொண்டு அசைவேணா என்கிறது ,

அவளென்செய்வாள் ? ....
அவளுடைய நிதனாம் , புத்திக் கூர்மை எல்லாம் அவனிடம் தோற்று விட்டது ,

காதல் போர்க்கலத்தில் நிராயுதபாணியாய் நிற்பது போல் உணர்ந்தாள் ,

ஒரே நாளில் உலகம் அந்நியமானதாய் தோன்றியது ,

ஒவ்வொரு நொடியும் வெறுமையைச் சுமந்தே நகர்ந்தது ,

ஜீவியின் கண்களுக்கு உலகத்திலியே ஆகச்சிறந்த அதிர்ஷ்டசாலியாய் ரஷ்மி தெரிந்தாள் ,

யாமமும் , வைகறையும் கலக்கும் நேரம் , ஒருவழியாக , உறக்கம் வந்தது விழிகளின் ஓரம் ....

கண்கள் ஒய்வு பெற்றும் , கவலைகள் ஓயவில்லை ,
காலைப் பொழுது ஏன் விடியவேண்டும் என்று இருந்தது அவளுக்கு ,

கதவு அதிரும் ஓசையில் கண்கள் மெல்லத்திறந்தாள் , அவள் செவிகளில் சேர்ந்தது கணேஷின் குரல் , " ஜீவி .... ஜீவி.... ஜீவிமா..."

" ஹம்... வாங்க மாமா " என்றவள் , தூக்கம் கலைத்து தலையணைய மடியில் வைத்து முழங்கையை தலையணையில் ஊன்றி , கண்ணத்தில் கைவைத்தவாறு அமர்ந்திருந்தாள் ,

உள்ளே வந்த கணேஷ் " குட்மார்னிங் ஜீவிமா , மாமா கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன் , நீ எதையும் நினைச்சு ஃபீல் பண்ணாம இயல்பா இருக்க முயற்ச்சி பண்ணுடா ... " என்றான் ,

" என்ன மாமா , இப்பவே கிளம்புறீங்களா ?

" ஆமாடா , ப்ரியா , யது , ப்ரத்யு , மூணு பேரும் இங்கதான் இருப்பாங்க , நான் மட்டும் தான் போறேன் " என்றான் கணேஷ் ,

சரி மாமா நான் ஃப்ரஷ் ஆகீட்டு வந்துவிடுகிறேன் , அதற்குப் பிறகு , நீங்கள் போகலாம் என்றவள் , குளித்துப் பூக்கள் சிதறியதாய் காட்டும் சாம்பல் நீற சார்ஜட் ஃப்ராக்கிற்கு மாறி ஹாலுக்கு வந்தாள் , அங்கே சோபாவில் அமரந்திருந்த கார்த்திக்கும் ஜெயராமும் குட்மார்னிங் ஜீவி மா , வா என்பதாய் கைகாட்டி அருகில் அமரச்சொல்ல , ஜீவியும் இருவரின் நடுவில் அமர்நதாள் ,


கார்த்திக், " ஜீவிமா நானும் பெரியமாமாவும் ஈ்வ்னிங் கிளம்பிடுவோம் , அத்தை தாத்தா பாட்டி இங்கதான் இருப்பாங்க , நீயும் அம்மாவும் , அவங்க கூட வியாழக்கிழமை வந்திருங்க , என்று கூறிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்த செந்து , " ஆமா ஜீவி இனி நீ திருப்பூர்லதான் இருக்கனும் , இனி அதுதான் உன் வீடு என்றான் ,

வெளியே இருந்து , உள்ளே வந்த செந்தில் , செந்தூரன் பேசியதைக் கேட்டுச் " சரியாப் போச்சு , அடப்பாவி இப்படி லூசுத்தனமாப் பேசிப் பேசித்தான் , ஜீவி மனசுல ஆசைய வளர்திருப்பான் போல , பேசுறதெல்லாம் நல்லாத்தான் பேசுகிறான், ஆனா செயல்தான் எதிர்மறையா இருக்கு என்பதாய் மனதுக்குள் செந்துவைத் திட்டிக் கொண்டிருந்தான் ,

செந்தூரன் பேசியதைக் கேட்ட ஜீவி , செந்து இருக்கும் இடத்தில் தான் இருப்பதே மகிழ்ச்சி என்று எண்ணியது போக , இப்பொழுதோ அவன் அருகில் வந்தால் கூட அவஸ்தையாய் உணர்ந்தாள் , இந்த நிலமையில் எப்படி காலேஜ் முடிந்ததும் செந்து வீட்டுக்குச் செல்லமுடியும் , என்று நினைத்தவள் அங்கிருந்து விடுபடுவதற்காய் ,
செந்திலைப் பார்த்தவுடன் , " கணேஷ் மாமா எங்க காணோம் என்று செந்திலிடம் கேட்டுவிட்டு , கணேஷின் அறைக்குச் சென்றாள் ,

அங்கே கணேஷ அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க , பெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ப்ரித்யுவின் அருகில் அமர்ந்து அவன் தலையை வருடியவாறு ஏதோ சிந்தனையின் வசம் இருந்தவளை , கணேஷின் ஜீவி... என்ற அழைப்பு கலைத்தது , என்ன ஜீவிமா எதாவது சொல்லனுமா , " சொல்லு ஜீவி என்ன விஷயம் " என்றான் ,

"ஒன்னும் இல்ல மாமா சும்மாதான்"
என்றாள் .

" சரிடா ஆனா நான் உன்னிடம் பேசனும் ,போய்ட்டு ஃபோன் பண்ணலாம்னு நினைச்சேன் , ஆனா நீ வெயிட் பண்ணச் சொன்னதால , இங்கேயே சொல்லிரேன் ,
" ஜீவி மா நீ போனதையே நினைச்சு ஃபீல் பண்றதுல எந்த லாபமும் இல்ல , உனக்குன்னு ஒரு "ஃப்யூச்சர் இருக்கு , இதே இரண்டு மாதத்துக்கு முன்னாடீ நீ காலேஜ் முடிஞ்சதும் என்ன பண்ணலாம்னு ப்ளேன் வச்சிருந்த ? சொல்லுடா , என்றான் .

அவள் நிமிரவில்லை , இப்பொழுதும் அவள் விரல் ப்ரத்யுவின் தலைவருடிய படியே , அவள் பார்வை தாழ்ந்த வண்ணம் இருந்தது , அவள் பதிலேதும் தராமல் மெளனம் காத்தாள் ,

ஜீவிமா உன்னிடம் தான் பேசிக்கொண்டிருக்கேன் , இங்கபாரு , என்னப் பார்த்துப் பேசு ஜீவிமா , என்று அவள் முகம் நிமிர்த்தான் , அவள் கண்கள் கலங்கி இதோ அழுது விடுவேன் என்றது ,

சரி விடுடா , நீ போய் சாப்பிடு , நான் கிளம்புகிறேன் , நான் போய்டு , உனக்கு ஃபோன் பண்றேன் , நீ ப்ரியா வரும்போது , ப்ரியாவுடன் நம்ம வீட்டுக்கு வந்திரு ,ஓகே யா ? வா போகலாம் என்றான் ,

அவள் எழ மறுத்து மாமா நானும் உங்ககூட வாறேன் , ஒரு ரவுன்ட் கூட்டீடுப்போய் கொண்டுவந்து விடுரறீங்களா ? என சிறு குழந்தையென கேட்கும் அவளிடம் மறுக்க மனமில்லாது , சரி வாடா போலாம் , என்று கிளம்பினான் , அனைவரிடமும் விடைபெற்று , கிளம்ப ஆயத்தமானான் , ஜீவி , அவனின் கைகளைக்கோர்த்து அவனோடு கிளம்புவதைப் பார்த்த , தேவி , "என்ன ஜீவிமா மாமாகூட போற .. " எனக்கேட்க ,

கணேஷ் , " சும்மா ஒரு ரவுன்டு போய்டு கொண்டு வந்து விட்டுட்டு போறேன் மா " என்றான் தேவியிடம் ,

தேவி , " என்ன ஜீவிமா இது , இந்த பழக்கத்தை எப்பத்தான் விடப்போறியோ , எப்பப் பார்த்தாலும் கிளம்பும் போது தொந்தரவு கொடுக்குற , பாவம் மாமா ஏற்கனவே லேட் ஆகிடுச்சுன்னு சொன்னாங்க ..என்றாள் ,

" பரவால மா நான் பார்த்துக்கொள்கிறேன் " , என்றான் கணேஷ் ,

ப்ரியசகி , " ஜீவிமா .. உனக்கு ப்ரித்யு தேவல டா , இப்பல்லாம் அவன் கூட , உங்க மாமா வெளில கிளம்பும் போது , பாய், சீ யு , சொல்லிட்டு சமத்தா இருக்கான் , என்று ஜீவியை கேலிகசெய்து கொண்டிருந்தாள் ,

கணேஷ் ஒரு சிறுபுன்முறுவலுடன் , அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான் ,

சிறுகுழந்தைஎன தன் மாமனின் தோளைப்பற்றிக்கொண்டு செல்லும் தன் மகளை , கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் பாலா , அவளது ஏமாற்றம் அவளைத் துரத்தி ஆறுதலையும் அரவணைப்பையும் தேடவைக்கிறது , இப்போது , அவளுக்கான ஆறுதல் , கணேஷிம் , செந்திலுமே , என எண்ணிக் கொண்டிருந்தான் பாலா .

காரில் செல்லும் போதும் ஏதும் பேசாமல் ஜீவி மெளனம் காத்துக்கொண்டிருந்தாள் , வழக்கமாக அவர்கள் செல்லும் ரெஸ்டாரன்டில் காரை நிறுத்தினான் கணேஷ் , ஏதோ சிந்தனையின் வசம் இருந்த ஜீவி , ரெஸ்டாரன்டை பார்த்ததும்

" இங்கேயா ? " , என்றாள் தயக்கமாய் .

" ஏன்டா நீ எப்பொழுதும் இங்குதானே என்னை அழைத்து வருவ " என்றான் கணேஷ் ,

ஏதும் சொல்லாமல் " ஆமாம் " , என்பதாய் தலையசைத்தாள் , உள்ளே சென்று அமர்ந்ததும் அவளது பார்வை தனிச்சையாக , செந்துவைப் பார்த்த முதல் நாள் அவன் அமர்ந்திருந்த இருக்கையில் பதிந்தது .

கணேஷ் , அவளின் கண்களின் முன்னே விரல்களச் சுண்டி அவளின் பார்வையைத் திருப்பினான் , " என்னடா அந்த டேபிளையே பார்த்திட்டு இருக்க , " ஹோ ... சாரை இங்க வரும் போது பார்திருக்கீங்களோ ? அதான் இங்க வந்ததும் , தயங்கக் காரணமோ ? என்றான் சிறு புன்னகையுடன் , ஜீவி ஏதும் சொல்லாமல் மெளனம் காக்கவே , மீண்டும் கணேஷே ஆரம்பித்தான் ,

" வீட்ல கூடப் பார்த்தேன் , செந்து வந்ததும் நீ என்னோட ரூமுக்கு வந்துட்ட , இங்க வந்தா உள்ள வரவே பயப்படுற... இங்க பாருடா , பிரச்சனையப் பார்த்து ஓடி ஒளிய ஆரம்பிச்சா , அது நம்மளத் துரத்திக் கண்டுபிடிச்சு வச்சு செஞ்சுரும் ..."

எப்பவும் பிரச்சனைய எதுத்து நின்னு ஃபேஸ் பண்ண பழகிக்கனும் , என்றான்.
முதல்ல செந்துவ அவாய்ட் பண்றத விட்டுட்டு , செந்துவோட இயல்பா பேச முயற்ச்சி பன்னு ,
நீ எப்ப செந்துவோட கண்ணைப்பார்த்து இயல்பா பேச ஆரம்பிச்சுட்டியோ , அப்பவே இந்த பிரச்சன சால்வ் ஆகிடுச்சுன்னு அர்த்தம் , ஓகேயா ? என்றான் .

அட்வைஸ் பண்றது ஈசி , பட் அட்வைச கேட்டு நடக்குறதுதான் கஷ்டம் , என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள் ஜீவி ,

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் , புரியுது ஜீவிமா , காசா பணமா ? சும்மா அள்ளிவிடவேண்டியதுதான , அதுதான் அள்ளிவிட்டேன் , அட்வைசை என்றான் ,

" அய்யோ மாமா நான் ஒன்னும் சொல்லலையே ? என்று சிரித்தாள் ,

" ஹம் நீ சொல்லலதான் ஆனா உன்னோட முகமே சொல்லிடுச்சு, அட்வைஸ் பண்றது ஈசி , ஆனா அதன்படி நடக்குறதுதான் கஷ்டம்னு , சொல்லு ... உண்மையச்சொல்லு , நீ இதைத்தானே நினைச்ச என்றான் ,

" அவளும் சிரித்துக்கொண்டு ஆமாம் , என்று தலையசைத்தவள் , தொடர்ந்தாள் , செந்துமாமா என் மேல வச்ச பாசம் கல்லங்கபடமில்லாதது மாமா , நான் அவங்க மேல போய் ஆசப்பட்டுட்டேனு கில்டியா இருக்கு மாமா என்றாள் .

அதைக்கேட்ட கணேஷ் " ஜீவிமா செந்தூவோட பாசம் எவ்வளவு ப்யூரோ அதே போலத்தான் நீ செந்து மேல வச்ச விருப்பமும் ப்யூர் , உன்னோட விருப்பம் செந்து வோட பாசத்தவிட கொஞ்சமும் குறைஞ்சது இல்ல ஜீவிமா , முதல்ல இந்தக் குற்றவுணர்ச்சில இருந்து வெளில வா ,செநதுவோட இயல்பா பேச முயற்சி பண்னு ,

" நம்ம விரும்புனவங்க , நம்மள விரும்பலன்னா அதற்காக நம்ம காதல் அபத்தம்னு அர்த்தமாகிடாது , இருவருக்குமான சூழ்நிலையும் , சிந்தனையும் வேறு வேறு என்று அர்த்தம் " , நீ எந்த தப்பும் பண்ணல ,

" சிலரோட காதல் நிறைவேறும் , பலரோட காதல் நினைவுகளா மாறும் .. அவ்ளோதான் " ,

"காதலைக் கடக்காமல் , காலத்தைக் கடக்க முடியாது " ஜீவிமா ,
விடு , இன்னும் சில வருஷம் கழிச்சு இதல்லெல்லாம் நீ திரும்பிப் பார்க்கும் போது , உன்னை நினைச்சு நீயே சிரிச்சுக்குவ , நம்ம இவ்வளவு லூசா இருந்துருக்கமேன்னு , அதோட இந்த கணேஷ் மாமாவும் இத சருக்கா வச்சு வெட்டி லெக்சர் அடுச்சானேன்னு ... என்றான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro