அனிச்சம் பூ 46

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலைத் தென்றலின் குளிர்ச்சி சூரியனால் சற்றுக் குறைந்து வீசிக் கொண்டிருந்தது ..

இரவு ரஷ்மியின் நினைவுகளில் போராடி , அதிகாலையில் அயர்ந்த துயிலில் இருந்த செந்து சூரியகதிர்களின் ஒளியிலே , கண்விழித்தான் , அவனுக்கான நாள் அழகாகக் காத்திருந்தாலும் அதை உணராத அவன் மனம் ஏனோ ஒரு வெறுமையை உணர்ந்து விடியலை எதிர்கொண்டது , அவன் தனிமையில் அவனைப் பதம்பார்க்கும் நினைவுகளில் இருந்துத் தப்பிக்க வழி கண்டவன் இன்று கம்பனிக்குச் செல்ல ஆயத்தமானான் ,

அவனது காலைப் பணிகளை முடித்து ஜெயந்தியிடம் " அம்மா நான் திருப்பூர் போகிறேன் " எனக் கூற ...

ஜெயந்தி " ஏன் செந்து நாங்க எல்லோரும் இங்க இருக்கோம் நீ அங்க போய் என்ன செய்யப்போற " எனக்கேட்க ,

" அம்மா நான் கம்பனிக்குப் போகிறேன் " என்றான் ,

" ஏன் செந்து மேரேஜ் முடிஞ்சு கொஞ்சநாள் கூட ஆகவில்லை அதற்குள் நீ கம்பனிக்குப் போகனுமா ? " ,

" ஆமா போகனும் வேலை
இருக்கு "

" இரண்டு நாளா அப்பா வீடியோ கான்ஃபரன்ஸ்ல யூனிட் மேனேஜர்ஸ் அனைவரோடும் மீட்டிங் போட்டு கம்பனி ப்ரொடக்க்ஷன் அபடேட்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கார் , இருந்தாலும் திருப்தி இல்லைன்னு இன்றைக்கு கம்பனிக்கு போறதா சொன்னார் , அதெல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார் செந்து , இப்ப நீ போய் என்ன செய்யப் போற ? "

"அம்மா புரிஞ்சுங்கோங்க ப்ளீஸ் எனக்கு , வீட்டில் இருப்பது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு அட்லீஸ்ட் கம்பனிக்காவது போகலாம்னா நீங்க என்னடான்னா ...."

" இல்ல செந்து கொஞ்சம் கோபப்படாம பொறுமையாக் கேளுடா , நீயும் ஜீவியும் மேரேஜ் முடிஞ்சு நேரா இங்க வந்துட்டீங்க , நம்ம ஜெயம் இல்லத்திற்குப் போகவே இல்லை , கல்யாணம் முடிஞ்சு நீ மட்டும் தனியா அங்க போகக்கூடாது " , என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே , செந்து குறுக்கிட்டு கோபத்தின் வேகத்தில் ,

" தெரியாமல்தான் கேட்கிறேன் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லுவீங்க.. " என்று சத்தமிட ,

ஹாலில் தேவி , ஜீவி , பாலா என மூவரும் செந்தில் அப்பா ரகுநாதனிடம் வீடியோகால் பேசிமுடிக்கவும் , செந்து பேசியது அவர்கள் காதில் விழவும் சரியாக இருந்தது , செந்து பேசியதில் பாலாவுக்கு , சற்றே கோபம் வர , தேவி வருத்தமாகவும் , ஜீவியோ தன் அப்பா அம்மா இருப்பதைக் கூட கவனிக்காமல் , செந்து பேசுவதைப் பார்த்துத் தவித்தும் கொண்டிருக்க ...

ஜெயந்தியோ " இல்ல செந்து நீ நேற்றே சொல்லியிருந்தால் , இன்றைக்கு நல்ல நேரம் பார்த்து உன்னையும் ஜீவியையும் அனுப்பி இருப்போம் , ஜீவி அங்கே ஜெயம் இல்லத்தில் விளக்கு
ஏற்ற வேண்டும் " எனக் கூற ,

செந்துவோ , அதே கோபம் சற்றும் குறையாமல் , " இப்ப என்ன ? நான் ஜீவிய என் கூட அழைச்சுட்டுப் போகனும் அவ்வளவுதானே ! சரி இப்பவே , ஜீவிய ரெடியாகச் சொல்லுங்க , ஜீவி ஜெயம் இல்லத்துக்கு வந்து விளக்கு ஏற்றினாலே அது நலலநேரம்தான் , நீங்க தனியா எந்த நல்ல நேரத்தையும் பார்க்க வேண்டாம் " என்று பேசிவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் அவனறைக்குச் செல்ல ...

முதலில் செந்து பேசுவதைக் கேட்டு கோபம் கொண்ட பாலவின் மனம் , அடுத்து செந்து மேற்க்கூறியதைக் கேட்டதும் சற்றே சமாதானம் அடைந்தது , தேவிக்கும் ஜீவிக்கும் கூட அப்பாடா என்றிருந்தது ...

ஜீவி செந்துவுடன் , ஜெயந்தியும் , தேவியும் திருப்பூர் செல்வதாகக்கூற , ஜெயராமோ ,
" ஏன் ஜீவியும் செந்துவும் மட்டும் போகட்டுமே நீங்கள் இருவரும் ஏன் அவர்களோடு கிளம்புறீங்க " , எனக்கேட்க ,

ஜெயந்தியோ , " அவங்க இரண்டுபேரை மட்டும் எப்படித் தனியாக அனுப்புவது , அவர்களுக்கு ஆரத்தி எடுக்கனும் , அதோடு அவங்ளுக்கு சமைக்கனும் ,  சமைக்கிற அண்ணாவையும்  நாம் இங்க கூட்டிட்டு வந்திட்டோம் , அதனால்தான் இருவரும் போகிறோம்" எனக்கூற ,

ஜெயராமோ " ராஜத்தி அண்ணியிடம்  கால் பண்ணி சொன்னா அவங்க வந்து ஆரத்தி எடுக்கப் போறாங்க , ஜீவி செந்து இரண்டு பேரும் சமைச்சு சாப்பிட்டுக்குவாங்க , இல்ல ஆன்லைன்ல ஆர்டர் செய்து சாப்பிடுவாங்க , இது இல்லாம நீங்க இரண்டுபேரும் போவதற்க்கு வேறு எதாவது காரணம் இருக்கா?" எனக் கேட்க ,

தேவி " இல்லண்ணா " எனக்கூற ,

ஜெயராம் , " அப்போ அவங்க இரண்டு பேர் மட்டும் போகட்டும் " என்று கூறிவிட்டு அவர் கம்பனிக்குக் கிளம்ப ...

காலை உணவை முடித்து விட்டு , ஜீவியும் செந்துவும் ஜெயம் இல்லத்திற்க்குக் கிளம்ப ஆயத்தமாக , பாலாவோ ஊட்டிக்குக் கிளம்பியிருக்க ,

ஜீவி , " என்ன டாடி நீங்க இப்போ ஊட்டிக்கு கிளம்பனுமா? " எனக்கேட்க ,

பாலா " ஆமாடா கிளம்பனும் போய்டு நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா வரேன்டா " எனக்கூற ..

சமாதானமாகாத ஜீவியின் முகம் ஏமாற்றத்தையும் ஏதோ கலக்கத்தையும் தாங்கிகொண்டிருந்தது ,

பாலா , " என்ன ஜீவிமா நீ நம்ம அத்தை வீட்டில்தான இருக்கப் போற , அம்மாவும் உன்னோடுதான் இருப்பாங்க , அஸ்வதி , அனன்யா வும் இனி திருப்பூருக்கு வந்திருவாங்க " என சாமாதானப் படுத்தியவனிடம் ,

" அப்பா நம்ம வீட்டுக்கு நான் எப்போ வருவது " என்று , அப்பாவியாய் கேட்கும் மகளை விட்டுப் பிரிய மனமில்லாத பாலா வேறுவழி தெரியாமல் தன் மகளைத் தோளோடு சேர்த்து " டாடி நெக்ஸ்ட் டைம் வரும் போது உன்னையும் செந்துவையும் ஊட்டிக்கு அழைச்சுட்டு போகிறேன் சரியா ? இப்போ நீயும் செந்துவும் திருப்பூர் போய்டு கால் பண்ணுங்க , நானும் வீட்டுககுப் போய்டு உங்களுக்கு கால் பண்றேன் " எனக் கூற , ஜீவி வருத்தத்தோடு தலையசைக்க ,

பாலா அனைவரிடமும் விடைபெற்று , செந்துவிடம் கைபிடித்து விடைபெற பாலாவின் கண்களில் ஏனோ அவனையும் அறியாமல் நீர் திரையிட அதை மறைக்கும் பொருட்டு பின்தலை கோதுவதாய் திரும்பி சமாளித்து , செந்துவிடம் " ஜீவியைப் பார்த்துக்க செந்து , அவ குழந்தை மாதிரி எதாவாது தப்பு செய்தா அதை பெரிசா எடுத்துக்காத " எனக்கூற ,

தன் மாமனின் கலங்கிய முகத்தோடு அவன் கூறுவதைக் கேட்ட செந்துவுக்கோ அவளை அழவைத்தது நினைவிற்க்கு வர , குற்ற உணர்ச்சி தலைதூக்க தவித்தவன் , பாலாவை சாமாதானப்படுத்தும் பொருட்டு ,

" என்ன மாமா இது யாரோ வெளியாளிடம் சொல்வது போல் என்னிடம் சொல்றீங்க , இதல்லாம் நீங்கசொல்லனுமா ?" என்று பிடித்திருந்த அவனது கரங்களை விடுத்து அவனை அணைத்தான் , பாலா மீண்டும் ஒரு முறை அனைவரிடமும் கண்ணால் விடைபெற்று கிளம்ப , அதையடுத்து ,

செந்து ஜீவி இருவரையும் தனியாக அனுப்புவதற்க்குத் தயங்கிய ஜெயந்தியோ , ஜீவியின் கன்னம் வருடி , " பார்த்து இருந்துக்க ஜீவிமா , நாங்க இரண்டு நாள்ல அங்க வந்திருவோம் , எதுனாலும் அத்தைக்கு கால் பண்ணுடா , என்று கூறிவிட்டு ,

செந்துவிடம் " டேய் புள்ளய  வீட்ல தனியா விட்டுட்டு நீ வெளில சுத்தாத , கம்பனிககுப் போனா சீக்கிரமா வீட்டுக்கு வந்திரு , அப்புறம் நீ இன்றைக்குக் கம்பனிக்குப் போக வேண்டாம் , நாங்கள் வந்ததும் நீ போய்க் கொள்ளலாம் " எனக்கூற ...

" செந்து சரிமா நான் பார்த்துக்கொள்கிறேன் " எனறு கூறிவிட்டு காரைச்செலுத்த ,

ஜீவி ஏசியை அனைத்துவிட ,வெளிக் காற்று அவளை வருட , அவள் அனுமதி யின்றியே , அவள் விழி அலைகள் செந்துவை தொடர ..

அவன் சிகை கலைந்து கற்றோடு நாணல்போல் கவிபேசிக் கொண்டிருந்தது , அவன் விழிகள் சாலைவழியில் பயணிக்க
ஜீவியின் பார்வைகளோ அவனில் பயணித்தது ...

காரின் காற்றுவெளியை யுவனின் இசை இதமாக்கிக் கொண்டிருந்தது ..

ஜிவியின் விழி வருடலை உணர்ந்த செந்து , திரும்பாமலே என்ன ஜீவிமா ? எனக் கேட்க ..

ஒன்னும் இல்ல மாமா ,என்றவளின் இதயம் படபடக்க , வழக்கம் போல் தன்னைத் தானே வசைபாடித் தீர்த்தாள் , " என்ன ஜீவி இப்படிப்பன்ற , போச்சு , என்றைக்காவது வசமா மாட்டப்போற, இனி ஜெயம் இல்லம் போகிற வரைக்கும் கண்ணுக்குக் கடிவாளம் போட வேண்டியதுதான் ... என்று நினைத்தவள் ,கண்களுக்கு இயற்கையை இரவல் பெற்றுத் தந்தாள் .. கடக்கும் காட்சிகளை கண்களில் நிறைத்து , இசையும் இயற்கையும் இணையும் புள்ளியில் செந்துவை நினைத்து , பாடல் வரிகளோடு பயணித்தாள் ,

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குழுங்கும் பூ விதுவே...
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழிலிதுவே...

செந்துரன் ஜீவியைப் பார்த்தான்
"என்ன ஜீவிமா , எதுவுமே பேசாமல் அமைதியா இருக்க ?

"இல்ல மாமா , சும்மா சாங் கேட்டுட்டு , இருக்கேன் " , அதான் என்றாள் ,

ஹிம் .. என்று அதற்க்குத் தலயசைத்தவன் , " ஏன் ஜீவிமா உனக்கு இங்க இருக்கப் பிடிக்கலையா ? " என்றான் ,

ஏன் மாமா அப்படிக் கேட்கிறீங்க ?

" இல்ல பாலா மாமாவிடம் ஊட்டிக்கு வர்றேன்னு சொன்னியா அதுதான் கேட்டேன் "

"அப்படில்லாம் இல்ல மாமா , நம்ம எல்லோரும் இங்க இருக்கோம் , அப்பா மட்டும் கிளம்புனாங்க , நான் அப்பாவ ரொம்ப மிஸ் பண்ற மாதிரித் தோனுச்சு , அதுதான் அப்படிக் கேட்டேன் " , எனக்கூற ..

... ம்... என்று தலையசைத்தான் ...

நிமிடங்கள் கரைய தொலைவுகள் குறைய , திருப்பூரை நெருங்க ஆரம்பித்தனர் ,

யுவனின் இசையில் பாடல் வரிகள் , பயணித்துக் கொண்டிருந்தது .

உன்னை உன்னைத் தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ ..

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்கை ஆனதோ ?

கனவுகள் பொங்குது எதிலே அள்ள .. வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள ..
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே..

இசையின் விசை வசம் இருந்தவளை
செந்துவின் குரல் கலைத்தது ...

" ஜீவிமா "

" என்ன மாமா ?

" எனக்கு சமைக்கத் தெரியாது உனக்கு சமைக்கத் தெரியுமா?" என்றான் ..

அவன் கூறியதை உறுதி படுத்த , ஜீவி , "என்ன மாமா சொன்னீங்க" என இன்னொறு முறைக் கேட்க

" எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னேன் ... " என்றான் ..
அதைக்கேட்ட ஜீவி புரியாமல் செந்துவைப் பார்க்க ...

அவன் " உனக்குத் தெரியுமா ? ஜீவிமா " எனக் கேட்க ...

" ஹீம் ஏதோ ஒரு நான்கு ஐந்து ரெசிபி தெரியும் மாமா ... ஆமா ஏன் கேட்கிறீங்க ? " என்றவளைப் பார்த்து மென்புன்னகை புரிந்தவன் ,

" வீட்டில் குக் யாரும் இல்லை ,
அதான் கேட்டேன் " எனக்கூற ..

" அய்யோ , மாமா நீங்க சாப்பிடுகிற அளவுக்கு எனக்கு டேஸ்டா சமைக்கத் தெரியாது , அதுவும் மில்லட் குக்கிங் தான் தெரியும் ... " எனக் கூற ...

அவள் கண்களில் தெரிந்த சிற்றதிர்ச்சியை பார்த்து மெளனமாய் சிரித்தவாறு ... காரைச் செலுத்தியவன் ,

" அப்போ வேற வழிஇல்லை , ஹோட்டல் சாப்பாடுதான் , உனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளுமா ஜிவிமா? " எனக்கேட்க ..

" இதில்லென்ன மாமா இருக்கு , இரண்டு நாள் தானே , அட்ஜஸ் பண்ணிக்கலாம் , காலை நேரத்திற்கு எனக்குத் தெரிந்த உணவை நான் செய்கிறேன் , மதிய உணவு மட்டும் வெளியில் வாங்ககிக் கொள்ளலாம் "
எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே .. இடை மறித்த செந்து ,

" என்ன இரண்டு நாளா ? இரண்டு நாள்ல உங்க அத்தை வந்திருவாங்களா ? அதுசரி அவங்க சொல்றதுதான் அப்படி சொல்வாங்க ... ஆனா ஒருவாரம் பண்ணிடுவாங்க .. " எனக்கூற ..

' என்ன ஒரு வாரமா ? அதுவரைக்கும் , மாமா ஆஃபீஸ் போன பிறகு நான் மட்டும் வீட்டில் எப்படித் தனியாக இருப்பது என்று நினைத்துக் கொண்டிருக்க ' செந்து அவள் முகத்தில் இருந்த தவிப்பை பார்த்துக் கொண்டிருக்க ,

" மாமா நிஜமாவா ? அப்போ நான் மட்டும் வீட்டில் தனியா இருக்கனுமா ? " எனக் கவலையாகக் கேட்க ...

செந்து , " இலல ஜீவிமா கேட்ல செக்யூரிட்டி இருப்பாங்க , அப்புறம் தோட்டத்தில் வேலை பார்க்கிற ஒரு அய்யா இருக்காங்க , அப்புறம் வீடு சுத்தம் செய்ய ஒரு அக்கா வருவாங்க , அப்புறம் ட்ரைவர் அண்ணா இருப்பாங்க " எனக்கூறிக் கொண்டிருக்க ..

ஜீவியோ மனதுக்குள் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் ,
' ஆமா ஒரு பூனை இருக்கும் அப்புறம் அது போட்ட குட்டி இருக்கும் கதை சொல்றதப்பாரு , அவரு இருப்பாரு , இவரு இருப்பாருன்னு , செக்யூரிட்டி அங்கிள் குனிஞ்ச தலை நிமிராம படிச்ச நீயூஸ் பேப்பரையே திருப்பித் திருப்பிப் படிப்பாரு , கார்டன்ல இருக்க தாத்தா பலா மரத்தடியில நல்லா படுத்துத் தூங்குவாறு , அந்த ட்ரைவர் அண்ணா எப்பப் பார்த்தாலும் காதுல ஹெட்செட்ட மாட்டிக்கிட்டு கண்ணமூடி பாட்டு கேட்டுக்கிட்டு இருப்பாரு , வீடு சுத்தம் பன்ற அக்கா ரஜினி ஸ்டெய்ல்ல க்ளீன் பண்ணீட்டு மின்னல் மாதிரி காணாம போய்டும் , இவங்க எல்லாரையும் நம்பி அந்த வீட்டில் தனியாக இருக்கனுமாமே !
ஆளப்பாருங்க .. என்னைப் பார்த்தா இவருக்கு எப்படிஇருக்கு ?, ஆளில்லாத வீட்ல டேன்ஸ் ஆடுற சந்திரமுகி மாதிரித் தெரியுதா ? இருக்கட்டும் செந்து மாமாவ யாரிடம் சொல்றது... இப்போ இவர் யார் பேச்சையும் கேட்கறது இல்லையே ! ' என்று யோசித்தவளிடம் ,

செந்து " நீ வேணா உங்க கணேஷ் IPS இடம் சொல்லேன் ஜீவி எனக் கூற ..

..ஹிம் ,என்று தலையசைத்தவள் துணூக்குற்று ,  தன் துரு துரு விழிகளில் செந்துவைப் பார்த்து
' அய்யய்யோ !... நம்ம மனசுக்குள்ள நினைச்சது இவனுக்கு எப்படிக் கேட்டுச்சு ?... எப்பவும் கணேஷ் மாமாதான் நம்ம மைன்ட் வாய்ஸ கேட்ச் பண்ணுவாங்க , இப்ப என்னடான்னா இவனும் இப்படிக் கிளம்பிட்டானே ! ' என்று நினைத்துத் தன் நகத்தைக் கடித்தவாறு பதட்டத்துடன் செந்துவையே பார்த்துக் கொண்டிருக்க ,

செந்துவோ , அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு , நீ கவலைப் படாத ஜீவிமா நான் உன் மைன்ட் வாய்ஸ்லா கேட்ச் பன்னல , நீ வீட்ல தனியா இருக்கும் போது போரடிக்குதுன்னு , உங்க கணேஷ் அங்கிளிடம் சொன்னா அவர் எதவாது சொல்யூசன் சொல்லுவாரு பாரு அதான் அவரிடம் சொல்லச் சொன்னேன் எனக்கூற ...

இவன் சொல்வது உண்மையா? என்ற குழப்பத்தின் தீவிரத்தில் இருந்த ஜீவியைப் பார்த்து மனதுக்குள் சிரத்தவாறு காரைச்செலுத்தினான் ,

ஜெயம் இல்லத்தை அடைந்ததும் ராஜாத்தி இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து , விளக்கு ஏற்றச் சொல்ல , இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு அவர்அவர் அறையை நோக்கிச் செல்ல , ராஜாத்தியோ , இரண்டுபேரும் ஃப்ரஷ் ஆகிட்டு சாப்பிட வாங்க லன்ஞ் கொண்டுவந்திருக்கேன் எனக் கூற ..

இருவரும் சாபபிட்டு கொண்டிருக்க , ராஜாத்தி , " செந்து நைட்டுக்கு டிஃபன் கொடுத்து விடுகிறேன் , உங்க இரண்டு பேருக்கும் என்ன பிடிக்கும்னு சொல்லுங்க " என்க்கேட்க ...

செந்து " இல்ல பெரியம்மா உங்களுக்கு எதுக்கு சிரமம் , நாங்க வெளியில் சாப்பிட்டுக்கொள்கிறோம் எனக் கூற , அதெல்லோம் வேணாம் நான் கொடுத்து விடுகிறேன் , உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க , எனக்கேட்க , செந்துவோ " அங்க வீட்ல என்ன செய்றீங்களோ அதையே கொடுத்து விடுங்க பெரியம்மா " என்று கூறி சாப்பிட்டு முடித்து நகர ,

சிறிது நேரத்தில் , ஜீவியும் சாப்பிட்டுவிட்டு நகர எத்தனிக்க , ராஜாத்தி ஜீவியின் கையைப் பிடித்து நிறுத்தியவர் , செந்து அறைக்குச் சென்றதை எட்டிப்பார்த்து உறுதி செய்துவிட்டு , ஜீவியிடம் ,

" ஜுவிகா கோயம்பத்தூரிலும் இந்த மாதிரி இரண்டுபேரும் தனி அறையில் தான் இருந்தீர்களா ? எனக்கேட்க ,

அவள் " ஆமாம் " என்று தலையாட்ட ,

" சரிடா நீ போ .. " எனக் கூறிவிட்டு ,

அவள் நகர்ந்ததும் முதல் வேலையாக , ஜெயந்தியை அலைபேசியில் அழைத்து ,
" என்ன ஜெயந்தி ஜீவியும் செந்துவும் ஆளுக்கொரு அறையில் இருக்காங்க " எனக்கேட்க ...

ஜெயந்தி , " நீங்க வேறக்கா , அவங்க ரெண்டு பேரும் திருமணத்திற்க்கு சம்மதிச்சதே பெரிய விஷயம் இதில் வேறு சடங்கு அது இதுன்னா அவ்வளவுதான் ... கொஞ்ச நாள் போகட்டும் அக்கா " எனக்கூற ..

ராஜாத்தி "நான் சடங்கிற்க்காக சொல்ல வில்லை ஜெயந்தி , அவர்கள் நிலைமை எனக்கும் புரிகிறது , ஆனாலும் குறைந்த பட்சம் இரண்டுபேரும் ஒரே அறையில் இருந்து பழகினால்தான் அவர்களுக்குள் கணவன் மனைவி என்கிற ஒரு எண்ணம் வரும் , எனக்கூற ,

ஜெயந்தி "இல்லக்கா செந்துவிடம் , இந்த நேரம் இருவரையும் ஒரே அறையில் தங்கச் சொன்னால் அப்புறம் வீட்டிற்க்கே வர மாட்டான் , ஜீவி வேறு காலையில் பாலவிடம் , நானும் ஊட்டிக்கு வரேன்னு சொல்லிக் கொண்டு இருந்தாள் , இந்த நேரத்தில் அவர்களிடம் எதுவும் பேசமுடியாது , நடப்பது நடக்கட்டும் சிறிது நாள்கழித்து இதைப்பற்றி பேசலாம் எனக்கூற ...

ராஜாத்தி ," சரி ஜெயந்தி, அப்போ அவங்க போக்கிலேயே விடு " என்று கூறிவிட்டு , ஜீவியின் அறைக்குச் சென்று ஜீவியிடம் ,
" ஜீவிகா ஃப்ரிஜில் பூ வைத்திருக்கிறேன் , நீ மறக்காமல் தலையில் வைத்துக்கொள் " என்று கூறிவிட்டு விடைபெற ..

ஜீவி சார்ஜில் போட்ட தனது ஃபோனை எடுத்து , குறுஞ்செய்திகள் , இடுகைகள் , தவறிய அழைப்புக்கள் , என அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் , இர்ஃபா , மானு , நித்தின் , ஸ்வேதா என அனைவரின் தவறிய அழைப்பும் இருந்தது ,

' அவர்களுக்கு தன்னுடைய திருமண விஷயம் தெரியவாய்ப்பில்லை , ஒரு வேளை இவர்கள் நம் அம்மாவிற்கு அழைத்திருந்தால் , அம்மா ஏதும் சொல்லி இருந்தால் , இல்லை அவ்வாறு இருந்தால் அம்மா நம்மிடம் சொல்லிஇருப்பாங்களே ' என நினைத்த ஜீவி ,

சரி மானுக்குட்டிக்கு பண்ணலாம் , என்று மானுவிற்க்கு அழைக்க , அழைப்பு ஏற்க்காமல் இருக்க , ஸ்வேதாவிற்க்கு அழைத்தாள் ,

" ஸ்வே .... "

ஜீவியின் குரலைக் கேட்டதும் , மகிழ்ச்சியாக இருந்தபோதிலும் , தனது அழைப்பை ஏற்காமல் இருந்த கோபத்தில் , ஸ்வேதா பேசினாள் ,

" ஏய் லூசு ஜீவி , ஃபோன் பண்ணா அட்டன் பண்ண மாட்டியா ? நாங்க எல்லோரும் கால் செய்தோம் நீ அட்டன் பண்ணவே இல்லை , ஆண்டிக்கு கால் பண்ணா அவங்களும் அட்டன் பண்ணல , அங்கிள் பிசி அப்புறம் உன்னை பேசச்சொல்றேன்னு வச்சுட்டார் , என்னதான்டி ஆச்சு ? ... "

" ...... "

" ஏய் எரும உன்னைத்தான் கேட்கிறேன் காதில் விழுதா ?... "

" ......ம்... "

" ஜீவி எங்கதான் இருக்க , உங்க வீட்டில் இருக்கியா ? இல்ல உங்க மாமா வீட்டில் இருக்கியா ? "

" மாமா வீட்டில் தான் ... "

" ஹோ ... அதானே ! உங்க மாமா வீட்டிற்க்குப் போனால் உனக்குக் கொம்பு முளைச்சிடுமே ! ... சரி சொல்லு ஜீவி , உங்க செந்து மாமா மேரேஜ்லாம் முடிஞ்சிருச்சா ?பொண்ணு எப்படி இருக்காங்க ?... உங்க செந்து மாமாவுக்குப் பொருத்தமா இருக்காங்களா ?..."

" அது ... " இல்ல ஸ்வே எனக் கூறி , நடந்த விஷயம் அனைத்தையும் கூறி முடித்தாள் ,

ஜீவி கூறிய அனைத்தையும் கேட்டு , வியப்படைந்த ஸ்வேதா ,

" ஜீவி நிஜமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல , ஆனா நீயும் உங்க செந்து மாமாவும் மேரேஜ் பண்ணா நல்லா இருக்கும்னு நானும் மானுவும் நினைத்தோம் , ஆனா உங்க மாமா வேற பொண்ணை லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சது , இப்ப என்னடான்னா உங்க இரண்டு பேருக்கும் மேரேஜ் ஆகிடுச்சு , இதை நினைச்சு சந்தோஷப்படுறதா ? இல்லை அந்த பொண்ண நினைச்சுட்டு உன்னை மேரேஜ் பண்ணிருக்காரேன்னு வருத்தப் பட்றதான்னு தெரியலை ஜீவி , ஆனாலும் நீயும் உங்க மாமாவும் மேரேஜ் பண்ணீட்டீங்கன்னு கேட்கும்போது ஹேப்பியாத்தான் இருக்கு , சரி உங்க மாமா உன்னோடு நல்லா பேசுறாங்களா ? இல்ல அந்த பொண்ண நினைச்சுட்டு உன்ன அவாய்ட் பண்றாங்களா ? ...

" ச்ச அப்படியெல்லாம் இல்ல ஸ்வே , எப்பவும் போல என்மேல பாசமாகத்தான் இருக்காங்க " , நேற்றுக்கூட என்று ஆரம்பித்து , நைட் வாக் பண்ணியதைக் கூற

ஸ்வேதா , " ம் ... சும்மாவே செந்துமாமா புராணம் பாடுவ , இப்ப சொல்லவா வேணும் நடத்து நடத்து ..என்றவள் , " ஜீவி உன்னைப் பார்க்கனும் போல இருக்குடி இரு நான் கால் கட்பன்னீட்டு வீடியோகால் வர்றேன் , என்றவள் , ஜீவிக்கு அழைத்து அதோடு , மானு , இர்ஃபா , நித்தின் என அனைவரையும் அழைப்பில் இணைக்க ,

மானுவோ " ஜீவி எப்படி நான் சொன்ன மாதிரியே உனக்கும் உங்க மாமாவுக்கும் மேரேஜ் நடந்துருச்சா ? " என்று மகிழ்ச்சியில் குதிக்காத குறையாக உட்சாகமாக ..

நித்தினும் இர்ஃபா வும் அவர்கள் பங்கிற்க்கு , ஜீவியை வம்பிழுக்க ஒரு வழியாக , ஒவ்வொருவராக விடை பெற்று , இர்ஃபாவும் ஜீவியும் மட்டுமே அழைப்பில் இருக்க ,

இர்ஃபா , " ஜீவி , செந்து வேற பொண்ண விரும்பினதால அவர் உன்னை ஏத்துக்க மாட்டார்னு அர்த்தம் இல்ல , அவரையும் அவரோட குடும்பத்தையும் நேசிக்கிற உன்னை கண்டிப்பா மிஸ் பண்ண விரும்பமாட்டாரு , அதனால் சிறிது நாள் சென்றதும் நீ உன்னோட லவ்வ அவரிடம் சொல்லிடு ஜீவி , மனதிலேயே வைத்திருப்பதில் யாருக்கு என்ன லாபம் சொல்லு ... " எனக் கூற ..

" இல்ல இர்ஃபா அது .. அவரிடம் ப்ரப்போஸ் பண்ணா , திருமணம் நிற்பதற்காகவே காத்திருந்து வாய்ப்பு கிடைத்ததும் அவரை திருமணம் செய்தேன்னு நினைக்க மாட்டாங்களா ? "

" ஹிம் அதற்க்காக உன்னோட லவ் சொல்லாமலே இருக்கப் போறியா ? அவங்க எல்லாரும் கட்டாயப்படுத்தித்தான் உன்னை சம்மதிக்க வச்சாங்கன்னு செந்துவுக்கு தெரியும் அதனால் அப்படியெல்லாம் நினைக்க மாட்டார் , நீயா எதாவது கற்பனை பண்ணாத ஜீவி , நான் சொல்வதை சொல்லிவிட்டேன் , இனி உன்னுடைய வாழ்கை உன் கையில் சரி ஜீவி , நீ ஊட்டி வரும்போது சொல்லு நாங்க வீட்டுக்கு வருகிறோம் " என்று இர்ஃபா வும் விடைபெற ..

ஃபோனை அனைத்து விட்டு சிந்தனையில் மூழ்கிய ஜீவியை துயில் தழுவ சூரியன் மேற்கே சென்றடையும் இளம் மாலையில் செந்துவின் குரல் கேட்டே துயில் கலைந்தாள் ,

" ஜீவிமா எழுந்திருடா மணி 6 ஆகப்போகுது .. , என்றவன் குறுஞ்சிரிப்போடு கையில் கோப்பையை வைத்துக் கொண்டு நின்றிருந்தான் ,

ஜீவி செந்துவின் கையில் இருந்த குவளையைக் கேள்வியாய் பார்த்து விட்டு , நகர்ந்தவள் முகம் கழுவி வர , செந்து குவளையில் இருந்த தேனீரை இரு கோப்பையிலும் ஊற்றிக் கொண்டிருக்க ,

" என்ன மாமா இது " ? எனக்கேட்க

செந்து " ஹம் .. எல்லாம் உன்னோட ரெசிபிதான் , உனக்குப் பிடிச்ச கொய்யா இலை டீ " எனக்கூற

"மாமா நீங்களா டீ போட்டீங்க ? "

" ஆமா ஏன் ? பயப்படாதே , தைரியமாகக் குடிக்கலாம் " எனக்கூற ..

அதைக்கேட்டுச் சிரித்தவள் அதை வாங்கிப் பருகி ருசி பார்த்து விட்டு " நல்லா இருக்கு மாமா " என்று கூறி அவனருகில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்க ,

செந்து , " ஏன் ஜீவிமா ? பகல்ல இப்படிதூங்கினா இரவு எப்படி தூக்கம் வரும் ? " என்றவன் டீ யைக்
குடித்து முடித்து கோப்பையை டேபிளில் வைக்கப் போக , அங்கே கிஃப்ட் பேக்கிங் செய்வதற்காக கிஃப்ட் பேப்பர் மீது வைக்கப் பட்டிருந்த அழகிய கிரிஸ்டல் உருண்டை போன்ற பொருளை எடுத்துப் பார்க்க ,

அந்த கிரிஸ்டல் உருண்டையினுள் இன்னொரு கிரிஸ்டல் கனசதுரத்தில் நான்கு புரமும் தெரியுமாறு செந்துவும் ரஷ்மியும் இருக்கும் புகைப்படம் வைத்து அதைச்சுற்றி கண்ணைப் பறிக்கும் மிகச்சிறிய வண்ண உலர் மலர்களை உதிர்தவாறு அந்த கிரிஸ்டல் உருண்டை செய்யப்பட்டு , அதில் இரவில் ஒளிர மெல்லிய வெளிச்சத்திற்கான சிறய மின் விளக்கு இணைக்கப்பட்டு , அந்த கிளிஸ்டல் உருண்டை ஒரு மரக்கிளை இடையே நிலவு தெரிவது போல் , மரத்தினால் ஆன சிறிய கிளை போன்ற ஸ்டேன்டில் பொருத்தப்பட்டு மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுடன் மிக அழகாக செய்யப்பட்டிருந்தது ..

அதை செந்து கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜீவி , தயக்கத்துடன் சாரி மாமா , உங்க மேரேஜ்காக ரஷ்மி அக்காவிற்கும் உங்களுக்கும் கிஃப்ட் பண்ணுவதற்க்காக , நான் செய்தது எனக் கூற ..

அந்த கிரிஸ்டலில் உள்ளப் புகைப்படத்தைப் பார்த்து செந்துவின் கண்களில் வலியும் ஏமாற்றமும் தெரிந்தாலும் , அதை அவ்வளவு அழகுடன் செய்த ஜீவியை பாராட்டாமல் அவனால் இருக்க முடியவில்லை ,
" ஜீவிமா அம்மா , அப்பா , பாட்டி தாத்தான்னு , ஜீவி அதை செஞ்சா இதை செஞ்சான்னு எதாவது உன்னோட புகழ் பாடிகிட்டே இருப்பாங்க , நான் அவங்க ஏதோ பாசத்தால மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு நினைச்சேன் , ஆனா நீ இவ்வளவு கிரியேட்டிவ் பர்சனா இருப்பன்னு நினைக்கலைடா , நிஜமா அவ்வளவு அழகா இருக்கு " எனக்கூற ..

" தேங்ஸ் மாமா " என்றவளிடம்

அந்த கிரிஸ்டல் உருண்டையில் இருந்த புகைப்படத்தை பார்த்தவாறு , இந்த கிஃப்டை நானே வைத்துக்கொள்ளவா ஜீவிமா எனக்கேட்க ...

அதைக் கேட்ட ஜீவிக்கோ , என்னதான் இந்தப் பரிசு ரஷ்மிக்கும் செந்துவுக்கும் செய்யப் பட்டதாக இருந்தாலும் , தன்னைத் திருமணம் புரிந்தபின்னும் , ரஷ்மியும் செந்துவும் இணைந்திருக்கும் அந்தப் புகைப்படத்தோடான அந்தப்பரிசை செந்து கேட்க்கும் பொழுது அவள் மனம் வலிக்கவே செய்தது , இருந்தாலும் அதை மறைத்து ,

" ஹிம் நீங்களே வைத்துக் கொள்ளுங்க மாமா " என்று கூறியவளின் இதயம் தவிக்க ஆரம்பித்தது ..

உன் இதயத்தில் எனக்கு இடம் இல்லை என்று எட்டி நின்றே வேடிக்கைப் பார்க்கிறேன் , ஆனால் நீயோ என் விழி வழியே என் இதயத்தில் நுழைந்து விட்டு , என் காதல் புரியாமல் எனை தவிக்க விடுகிறாய் ....

சிந்தனையில் இருந்தவளை செந்துவின் குரல் கலைத்தது, தேங்ஸ் ஜீவிமா என்றான் சிக்கனமான சிறுபுன்னகையில் ,

தலையசைத்தவளின் இதயம் அமைதிஇல்லா போர்களமாய் இருக்க அவன் புன்னகையில் அவளை புதைக்கிறான் ,

உன் இதய தேசத்தின் எல்லையில்
நின்றே எட்டிப் பார்க்கின்றேன்
உள்ளே நுழைய வழி தெரியாமல் ,

ஆனால் நீயோ என் விழி
இமையின் வாசல் வழி
என் இதய தேசம் நுழைந்து விட்டு
என் காதல் மொழி புரியாமல்
என்னைக் கலங்க வைக்கின்றாய்

என் இதயத்தை போர்களமாய்
மாற்றிவிட்டு உன் புன்னகையில்
எனைப் புதைத்து விடுகிறாய் ,

ஆனால் செந்துவின் கண்களுக்கு அந்த கிரிஸ்டல் பாலின் புகைப்படத்திலுள்ள ரஷ்மியைவிட அந்தப்பரிசைச் செய்த ஜீவியின் அன்பே பெரிதாகத் தெரிந்தது , அவளின் அன்பை அங்கேயே விட்டுச்செல்ல மனமில்லாமல் அதை தன்னோடு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறான் என்பதை , பாவம் ஜீவி அறியவில்லை ...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro