அலை 🌊 16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


ஹாய் பிரெண்ட்ஸ் சாரி சாரி சொந்த பிரச்சனையில் கொஞ்சம் சிக்கிக் கொண்டேன் அதான் இந்த பக்கம் வர முடியல பட் அதுக்கெல்லாம் ஈடு செய்யும் வகையில் பெரிய எபி கொடுத்து இருக்கேன் 2300 வார்த்தைகள் இரண்டு யூடிக்கு சமம்.... ப்ளீச் பெரிய மனசு பண்ணி  மன்னிச்சு... 💕💕💕💕💕

மேக கூட்டங்களுக்கு மத்தியில் ஒளிவீசும் பௌர்ணமி நிலவை ரசித்துக் கொண்டே,  தன் அடர்ந்த ஈர கூந்தலில்  நடுவே விரல்களை விட்டு   பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தாள் ரேவதி… நேரம் இரவு 9 கடந்திருந்தது. இன்று வெய்யிலின் தாக்கம் சற்று அதிகமாக  இருக்கவே, தலைக்கு குளித்திருந்தாள். ஈரமுடியை உலர்த்திக் கொண்டிருந்தவளின், பார்வையை எங்கோ பதிந்திருக்க,  ஓசை எழுப்பி அவளின் கவனத்தை ஈர்த்தது அலைபேசி.

அதில் மிளிர்ந்த எண்களை  பார்த்தவளது‌ மனது எடுக்கலாமா வேண்டாமா என இரு வேறு எண்ணங்களில் சிக்கி சுழன்றது,. அவளின் இந்த தவிப்பிற்கு காரணம் ராகவ் தான்,  ராகவின் இரண்டு  முழு அழைப்பை தவறவிட்டவளுக்கு, அடுத்த‌ 5 நிமிடத்தில் திவ்யாவிடமிருந்து  அழைப்பு வந்தது.  அதை பார்த்ததும் அலைபேசியை இயக்கி காதில் பொருத்தினாள்.

"சொல்லு திவி …. என்ன இந்த நேரத்துல…. கால் பண்ற…?"  யோசனையுடனே கேள்வியை எழுப்பினாள் ரேவதி.

"ஹேய் நீ முழுச்சிட்டு தான் இருக்கியா…?" திவியின் அதிர்ந்த கேள்வியில் சன்னமாக சிரிப்பை சிந்தியது ரேவதியின் இதழ்கள், அதை அடக்கியபடியே, 

"ஹேய் லூசு மணி என்ன ஒன்பது தானே ஆகுது…  அதுக்குள்ள எப்படி தூங்கறது… இன்னும் சிவா வரலையே…" திவியிடம் கூறியபடியே  வாசலை தான் பார்த்தாள்.

"நான் லூசு இல்லடி…  உன்னை  சுத்தி சுத்தி வர்றானே அந்த ராகவ் தான்டி லூசு… அவன், நீ போனை எடுக்கலன்னதும்‌ எனக்கு போன் பண்றான்…" என்றாள் கடுகடுவென 

ராகவின்‌ பெயரை உச்சரிக்கவும் சட்டென‌ ரேவதியின் முகம் மாற்றத்தை தத்தெடுக்க, "ஹேய் வீட்டுல ஏற்கனவே பிரச்சனை போயிட்டு இருக்கு எருமை… இதுல இந்த போனை எடுத்து நான் பேசினேன்னு வைய், இதுதான் சாக்குன்னு அந்த ஆளு சொல்ற மாப்பிள்ளைக்கு என்னை கழுத்த நீட்ட வைச்சிடுவாங்க எங்க அம்மா… இதுதான் வேணுமா அவனுக்கு, இப்போ என்ன காரணத்துக்காக அவன் ஃபோன் பண்றானாம்…" என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்.

ரேவதியின்‌ பேச்சியில் உள்ள  நியாயத்தை உணர்ந்த திவ்யா "சரி சரி பாயாத… உங்க லவ்வு நடுவுல மாட்டிக்கிட்டு நான்தான்டி முழிக்குறேன் இரு என்ன விஷயம்னு கேட்டு தொலைக்குறேன்…" ரேவதியிடம் பொறிந்தாள் திவ்யா.

"சரி என்னன்னு கேளு‌… நான் வைக்கிறேன்… எங்க அம்மா என்னையே பாக்குறா மாதிரி இருக்கு…"

 காஞ்சனாவின் விழிகள் கூர் பார்வையுடன் மகளை துளைத்திட, அவரிடமிருந்து தப்பிப்பது போல் அறைக்குள் சென்று மறைந்தாள் ரேவதி.

….

தன்னை இப்படி ஒரு இக்கட்டில் நிற்க வைத்த நிஷாவின் மேல் கடும் சினத்துடன் அமர்ந்திருந்தான் கார்த்திக். 

கல்யாணியின் முகத்திலும் தேவராஜின் முகத்திலும் இந்த விஷயத்தில் தங்களுக்கு முழு சம்மதம் என்ற ரீதியில் மகனின் முகத்தை ஆவலாய் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

சுஜாவிற்கு  இதில் துளியும் விருப்பமில்லை அதிலும் நிஷாவை தன் அண்ணனுடன் பொருத்தி பார்க்கவும் பிடிக்காமல், முகத்தை சாதாரணமாகவும் வைத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ரேவதி வீடு சென்று இன்றோடு மூன்று தினங்கள் கழிந்து இருந்தது.  சஞ்சயின் தாய் தந்தையர் இன்று காலை தான் பெங்களூரில் இருந்து வந்திருந்தனர். வந்தவர்கள் மகளது விருப்பத்தையும் சேர்த்து சொல்ல அதற்கு தான் இத்தனை முறைப்பும் திருப்புமாய் அமர்ந்திருந்தான் கார்த்திக்.

"என் பொண்ணுக்கு, இரண்டு வருசமா மாப்பிள்ளை பாக்குறோம்… ஒரு வரனுக்கும் பிடி கொடுக்காம இருந்தவ, கார்த்திக்கை பார்த்ததும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா… அந்த அளவுக்கு என் பெண்ணோட மனசில் மாப்ள தம்பி  நிறைஞ்சி இருக்காரு…" தேவராஜின் நண்பர் அன்பரசுவின் ஆர்பாட்டமான பேச்சில் முகம் மாறால் இருக்க அரும் பாடுபட்டான் கார்த்திக்.

சஞ்சையின் மொத்த கவனமும் சுஜாவின்‌பக்கம் திரும்பி விட  நிஷாவின் பார்வையும் கவனமும் கார்த்திக்கின் பதிலை தெரிந்துக் கொள்ளும்‌ ஆவலில் இருந்தது.

'நிஷாவிற்கு மட்டும் இல்லை தனக்கும்‌ இதில் ஆசை தான் ஆனால் இது நாம மட்டும் எடுக்கும் முடிவு இல்லையே' கல்யாணி தவிப்பாக மகனின் புறம் பார்வையை திருப்பினார்,

இதற்கும்‌ எனக்கும் சம்மந்தமே இல்லை என்ற ரீதியில் அமர்ந்திருந்தவன் ரகுவிடமிருந்து வந்த அலைபேசியை காரணமாக வைத்து,

 "சாரி அங்கிள் சைட் இஞ்சினியர் கிட்ட இருந்து எனக்கு  முக்கியமான கால்…  நான் இப்போவே சைட்டுக்கு போகனும்"

 அங்கிருந்தவர்களுக்கு தகவலாய் கூறியவன் தாய் தந்தையரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களின் கேள்விக்கு பிடி கொடுக்காமல் வெளியே கிளம்பி விட்டான்.

…..

"என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்…

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்

மனதை திறந்தால் நீ இருப்பாய்…

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்

உயிரை திறந்தால் நீ இருப்பாய்…

வானம் திறந்தால் மழை இருக்கும் என்

மனதைத் திறந்தால் நீ இருப்பாய்…

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்

இமையைத் திறந்தால் நீ இருப்பாய்…

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

இலையும் மலரும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

அலையும் கரையும் உரசுகையில்

பேசும் பாஷை பேசிடுமோ…?

மண்ணும் விண்ணும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்

பாஷை ஊமையாய் விடுமோ…?

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்…

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…?

தார் சாலையில் பார்வை பதிந்திருந்தாலும் கவனம் முழுவதும் சீடி பிளேயரில் ஓலித்துக் கொண்டிருந்த பாடலில் தான் நிலைத்திருந்தது…

மனம் ஏனோ சஞ்சலத்துடன் இருந்தது. எதிர்ப்பார்க்காத நேரத்தில் சஞ்சயுடைய  தந்தை தன்னை நிஷாவுடன் இணைத்து திருமணம் பேசியதில், அங்கு நிற்க கூட பிடிக்கவில்லை… பெண்ணை பார்க்க வந்துவிட்டு தன்னை மாப்பிளையாக்க நினைப்பதை எண்ணி எரிச்சலாக இருந்தது. 

அம்மாவுக்கும் தந்தைக்கும் இதில் விருப்பம் எனபதை அவர்களுடைய முகத்தை வைத்தே தெரிந்துக் கொண்டவனுக்கு ஒப்புக்கு கூட அந்த திருமணத்திற்கு சரியெனக் கூற  மனம் வரவில்லை….

அந்த பாடல் முடிந்து வேறு பாடல் வர, கைகள் மெல்ல உயரந்து அந்த சீடி பிளேயரில் ஒலித்த  பாடலையே மறுபடி ஒலிக்க விட்டது… 

"இலையும் மலரும் உரசுகையில்

என்ன பாஷை பேசிடுமோ

அலையும் கரையும் உரசுகையில்

பேசும் பாஷை பேசிடுமோ…?"

தன்னையும் அறியாமல் தன் மனதை ஆக்கிரமித்த உருவத்தை என்ன செய்து வெளியேற்றுவது என தெரியவில்லை… பிடித்தமில்லை பிடித்தமில்லை என‌ தன்னை தானே ஏமாற்றிக் கொண்ட மடத் தனத்தை எண்ணி கோபமாக வந்தது. 

வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இரண்டு கைகளிலும் தலையை பிடித்துக் கெண்டான். என்ன செய்து அவளை தன்னவளாக்கி கொள்வது என்ற வழியும் தெரியவில்லை கண்ணை கட்டி திக்கு தெரியாத காட்டில் விட்டது போல மனம் தவித்தது.

அப்போது ஈர்ப்பு என நினைத்து அதை ஒதுக்கி தள்ளியவன் இப்போது திருமண பேச்சு எடுக்கவும் அவள்‌ முகம் மட்டுமே  மனக்கண்ணில் வந்து சென்றது. ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டவன், அலைபேசியை உயிர்ப்பித்து கணோலியை ஓட விட்டான். 

அவன் இதயம் கவர்ந்தவளின் கண்களும் கைகளும் ஆயிரம் கவிதைகள், பேசி அவனை கட்டிப்போட, அவளை முதன் முதலில் கண்ட நாள் நினைவில் வந்தது. 

தங்கையுடன் சென்றவன் வேண்டா வெறுப்பாகத் தான் அந்த திருமண விழாவில் கலந்துக் கொண்டான். 

ஏதோ போன் வரவும் அங்கிருந்து நகர்ந்து சென்றவனுக்கு பாட்டு சத்தம் காதில் விழுந்தது. பேசிக்கொண்டிருந்தவன்  அங்கு என்ன நடக்கிறது என  தலை உயர்த்தி பார்த்தான். பார்த்தவன் கண்கள்  ரசனையுடன் முகத்தில் ஆயிரம் பாவங்களை காட்டி ஆடிய ரேவதியின் மீதே நிலைத்திருந்தது. 

ஈர்த்தாள் என்பதை விட உள்ளுக்குள் அவனை ஏதோ செய்தாள். பால் போன்ற வெள்ளை நிறமில்லை, மண்ணில் புதைந்த இளம் இஞ்சியை கழுவி‌ எடுத்து போன்ற அப்பழுக்கில்லாத நேர்த்தியான முகம், செப்பு இதழ்கள், ரோஜாவை போன்ற மலர்ந்த முகம், கூர் நாசியில் அலங்காரமாய் ஒற்றை கல் முக்குத்தி ஒடிசலான தேகம் பார்க்க பார்க்க நெஞ்சில் பசை போட்டது போல ஒட்டிக் கொண்டாள். போனில் பேசிக்கொண்டிருந்தவன் அதை விடுத்து அவள் அசைவுகளையும் நளிமான ஆடலையும் ரசித்திருந்தான். 

இதுவரையிலும் பல பெண்களை கடந்து வந்த கண்களுக்கு அவள் புதிதாக தெரிந்தாள். அவள் காந்த விழிகளும் அபிநயம் பிடிக்குமோ இதோ அபிநயம் பிடித்து, அவனை ஆட்டுவித்து கொண்டிருக்கிறதே… அவள் காட்டிய பாவனையில் சிக்கிக்கொண்டவன்,  தன் அலைபேசியிலும் அவளின் ஆடலை பதிவு செய்துக்கொண்டான். தனியாக ஆடிக் கொண்டிருந்தவள், ராகவ்வுடன் இணைந்து ஆடும்போது சுஜாவை போல அவனுக்கும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை… 

கண்கள் வெறுப்பை அப்பட்டமாக காட்டியது தன்னை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம் தான்… அரைமணி நேரத்தில் கிளம்பனும் என தங்கையிடம் கூறியவன் அவர்களுடைய நடனம் முடியும் வரை அங்கேயே இருந்தான். 

தங்கை பேச சென்ற நேரம் கூட அவன் விழிகள் அவளிடமே நிலைத்திருந்தது. அதன் பிறகு இது வெறும் இனக் கவர்ச்சி என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டவன், தங்கையிடம் வம்பிழுத்தபடி தான் வீட்டிற்கு வந்தான். 

ஆனால்  தங்கை அவள் பெயர் சொல்லவும் அவனுள்ளும் அதிர்வு வந்தது என்னவோ நிஜம். முதன் முதலில் தங்கை தனக்காக தேடிய பெண்… பெயரும் அவளுக்கு பொருத்தமாக இருக்கவே, மனதில் ஈர்ப்பையும் தாண்டி ஏதோ ஒன்று அவனை அசைத்தது.

இது நடைமுறையில்  சாத்தியப்படுமா… முதலில் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்றே அவன் மனம் அப்போது ஆராய்ச்சியில் ஈடுப்பட்டது. 

அதனை ஒட்டியே, அவளுக்கும் தனக்கும் எந்த வகையிலும் பொருத்தம் இருக்காது என, தன் தங்கைக்கு சொல்வது போல தன் மனதிற்கும் சேர்த்தே சமாதானம் சொல்லி நம்ப வைத்துக் கொண்டான் கார்த்திக் .

அதன் காரணமாகவே கோவிலில் கூட சுஜாவை அவளிடம் நெருங்க விடாது தன் பக்கத்திலேயே இருத்தி வைத்திருந்தான். இதில் அவனே எதிர் பாராத விதமாக ராகவ் ரேவதியிடம் வந்து தன் காதலை உரைத்திருந்தது. பார்த்தவனது தாடைகள் கோவத்தில் இறுகி,. கண்கள் வெறுப்பை உமிழ்ந்தது. அந்த கோவத்தில் தான் தங்கையிடம் கூட கனலாக வார்த்தைகள் வெளிப்பட்டது. 

இரண்டு மூன்று முறை அவளுடன் ராகவை பார்த்தவனுக்கு சொல்ல முடியாத வலி மனதில் அப்போது  இந்த வலி எதனால் இந்த எரிச்சல் எதனால் என அவன்‌ யோசிக்கவில்லை அதன் போக்கிலேயே அனைத்தையும் விட்டான். 

காரணமேயின்றி வந்த கோபத்தையும் வெறுப்பையும் தனது கேடயமாக பயன்படுத்தி நிஷாவை தன்னிடமிருந்து தள்ளி வைத்தவனுக்கு என்ன முயன்றும் ரேவதியின் மீதிருந்த எண்ணத்தை மனதிலிருந்து  விலக்க முடியவில்லை…  எப்போது மருத்துவமனையில் ராகவை விரும்புவதாக கூறினாளோ அன்றே அவளை வெறுக்க முயன்றான். முயற்சி மட்டுமே செய்ய  முடிந்தது..

அடுத்தவனை நேசிக்கும் ஒருத்தியை  நினைப்பது கூட தனக்கு கேவலம் என எண்ணியவன் அவளை பார்க்கும் போதெல்லாம் கடுப்பை காட்டினான். அவளை விட்டு வெகு தூரம் விலகிட துணிந்தான். ஆனால் அன்றிரவு சுஜிக்கு நடந்த பிரச்சனையில் துணிச்சலாக அவளை காப்பற்றி  அந்த பொறுக்கியிடம் அடி வாங்கி கீழே விழ இருந்த நொடி தன் நெஞ்சை யாரோ கூர் ஈட்டியால் குத்தியது போல வேதனையில் துடித்து விட்டான். 

வெளியே விரைப்பாக இருந்தாலும் உள்ளம்,  தன் கையில் சேர்ந்தவளை எப்போதும் விட்டு விட கூடாது என கட்டளையிட்டது. சிவாவின் சைக்கிளை ஓட்டி வந்த மறுநாளே அவளை சிவாவின்  சகோதரி என கண்டு கொண்டவனுக்கு அவளது வீடு தெரியாதா என்ன, மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லாமல், தன் வீட்டிற்கு அவளை தூக்கி வந்தான். இரவு முழுவதும் தன் கண் பார்வையிலையே வைத்துக் கொண்டான். 

அவள் முழித்து எங்கே, இங்கிருந்து உடனே கிளம்பி விடுவாளோ!! என தவித்தவனுக்கு, தூக்கத்தில் அவள் செய்த அத்தனையும் மனதை பனிச்சாரலாய் நனைத்தது. அவன் கொண்ட ரணத்தை எல்லாம் இதமாக்கியது. அவளுடனே இருந்தான்... அவள் கேட்டதை செய்தான்… கேட்காததையும் செய்தான்…  வெளியே தனக்கு பிடித்தமில்லை என காட்டிக்கெண்டாலும் ஒவ்வொர் நிமிடமும் அவளை கைக்குள் வைத்துக்கொள்ள மனம் பரபரத்தது.

அவள் விழித்த அடுத்த நாள் காலையில் கூட, அவளிடம் ஏதோ அதிகாரத்துடன் பேசுவதை போலத்தானே பேசினான்.  அவளும் சலைக்காமல் திமிருடன் பேசி தானே அவனை விட்டு விலகி சென்றிருந்தாள்.  தன் காதலை கண்ணில் காட்டியும் என் திமிர் தனத்தினால் அதை அறியாமல் இப்போது இன்னொருவனுக்கு சொந்தமானவளை நினைத்து ஏங்கும் தன்னை நினைத்தே கோபம் வந்தது.

ஓ என கத்த வேண்டும் போல இருந்தது.உள்ளுக்குள் அந்தளவு வலி… இது காதல் தான்‌‌ என உணராது அவளை தவற விட்ட  தன் முட்டாள் தனத்தை எண்ணி  அவ்வளவு வேதனை…  இப்போது அனுபவித்து  கொண்டிருந்தது அவன் தானே…  லேசாக  கார்த்திக்கின்  கண்கள்  சிவந்து இருந்தது. அதே நேரம் ரேவதி,  திவ்யாவுடன், ஸ்கூட்டியில் அவனை கடந்து சென்றாள்.

கார் ஸ்டியரிங்கை பற்றிய கைகள் தன்னால் இயங்கி, அவள்  ஸ்கூட்டியை பின் தொடர்ந்தது.

  

தன்னை ஒருவன் பின் தொடர்கிறான்‌ என அறியாதவள் திவியுடன் ராகவ் அனுமதித்திருந்த மருத்துவமனை வாயிலினுள் வண்டியை செலுத்தினாள்.

…..

அச்சோ அத்த…. ஏன் இப்படி சோகமா இருக்கிங்க…? கார்த்திக் எதுவும் சொல்லலைன்னு இப்படி தான் பீல் பண்ணுவிங்களா… ம்…" வருத்தமாக இருந்த கல்யாணியை சமாதானம் செய்யும் முயற்சியில் இருந்தாள் நிஷா.

"இல்லடா அவன் கல்யாணத்துக்கே பிடி கொடுக்கமாட்டுறானே ன்னு தான் கவலையா இருக்கு…?" என்றார் கல்யாணி வருத்தத்துடன், 

"இப்போ என்ன வயசாகிடுச்சி அவருக்கு,  அதுவும் அவரு வேண்டான்னு சொல்லிட்டு போகலையே… முக்கியமா ஏதோ ஒரு வேலைன்னு தானே போய் இருக்காரு… வரட்டும் வந்ததும் பேசுங்க அப்பாவே பேசுறன்னு சொல்லிட்டாங்க அத்த கவலையை விடுங்க". கல்யாணியை தேற்றினாள்.

மகனின்  குணத்திற்கு நிஷா எல்லா வகையிலும் ஏற்றவளாக இருப்பாள்‌ என எண்ணிய கல்யாணிக்கும்  கார்த்திக்கின் மனம் நிஷாவின் மூலம் மாற வாய்பு இருப்பதாக எண்ணிக் கொண்டார்.

நிஷாவின் அன்னைக்கோ கார்த்திக் இப்படி சட்டென எழுந்து சென்றதில் மனம் சுணங்கியது. தேவராஜூம் சஞ்சயின் தந்தையும் தொழில் விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தனர். நிஷா தன் வருங்கால மாமியாரையும்  தாயையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். இதில் தனித்து இருந்தது சுஜாவும் சஞ்சயும் தான்.

சுஜாவின் கண்கள்  இதுவரையிலும் தரையில் தான் பதிந்திருந்தது. வந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. ஒருமுறை கூட அவனை பார்க்க முயலவில்லை சஞ்சை தான் பேச்சிக் கொடுத்து கொண்டிருந்தான்.

"சுஜி… என்ன ஆச்சி ஏன் எதுவும் பேச மாட்டுறிங்க…? 

"அது.. அது.. வந்து…"  அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது.

அவள் திணறவும் அதில் சன்னமாக புன்னகைத்தவன் "நர்வசா இருக்கா சுஜி..? என்றான் கனிவான குரலில். 

அவன் கனிந்த குரல் அவளை ஈர்த்ததோ…  மெல்ல தலை உயர்த்தி அவனை பார்த்தாள். 

கோதுமை நிறம், கருத்த அடர்ந்த கேசத்தை ஜெல் தடவி படிய வைத்திருந்தான். அகன்ற நெற்றி, அடர்ந்த புருவம்,  தீர்க்கமான அதே சமயம் வசீகரிக்கும் கண்கள், சிரித்தாள் குழி விழும் கன்னங்கள்,  அளவான நாசி அதன் கீழே ஆண்களுக்கே உரிய அழகினை கொடுக்கும் கருத்த மீசை கட்டுக்கோப்பான உடல்,  ஆறடி உயரமும் புன்னகை முகமாக இருந்தவனின் அதரங்கள், சுஜி என மறுமுறை அவள் பெயரை உச்சரித்து அவளுடைய பார்வையை தடை செய்தது.

ஆஹ்.. என விழித்தவளின் இமைகள் அவன் அழைத்ததில் படப்படவென அடித்துக்கொள்ள,

"ஹே சுஜிமா… டோன்ட் பி பேனிக்… என்ன ஆச்சி ஏன் ஸ்டன்னா ஆகிட்ட… என்கிட்ட ஏதாவது சொல்லனுமா ஐ மீன் உனக்கு‌ என்னை…" அவனும் கேட்க தடுமாறினான். 

"இ… இல்ல" இடவலமாக தலையை ஆட்டினாள் சுஜி…

"ஆனா எனக்கு பேசனும் சுஜி… நான் எத்தனையோ முறை  உனக்கு போன் பண்ணி பேச டிரை பண்ணேன் பட் நோ யூஸ்… இப்போ பேசலாம்னு நினைக்கிறேன் வாட் அபௌட் யூ…?" என்றான் பூக்களின் நறுமணத்தை நாசியில் உணர்ந்துக்கொண்டே… "ப்ளசன்ட் ஸ்மெல்…" உணர்ந்து உச்சரித்தது அவனது இதழ்கள்.

மெல்ல படபடப்புடன் கூடிய அதிர்வு அவளுள் அவனை நேரில் பார்க்கும் வரையிலும் எதுவும் தோன்றாமல் இருந்த ஒன்று இப்போது அவன் பேச அவளுள் தோன்றி குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

"வெல்.. சுஜிமா…" சட்டென அவளது விழிகளை பார்த்த சஞ்சய் "இப்படி கூப்பிடலாமா…?"  என அனுமதி கேட்டான். 

சரியென அவள் தலை சம்மதம் சொல்ல, அவன் பார்வையில் கொஞ்சல் இருந்ததோ அவள் கிரகிக்கும் முன்னே அதை மாற்றியவன், 

"உனக்கு, என்னை பிடிச்சிருக்கா இல்லை அம்மா அப்பா சொன்ன காரணத்துக்காக சரின்னு தலை அசைத்து இருக்கியா… சுஜி…? நேரடியாக‌ அவளை கேட்டதில் விழிமலர்த்தி அவனைப்  பார்த்தாள்.

"சொல்லு சுஜிமா… ஜஸ்ட் எனக்குள்ள இந்த கேள்வி தான் போட்டு படுத்துச்சி…. இதை கேட்கத்தான் அத்தனை முறை கால் பண்ணேன்… இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயம் அதுக்கு முன்னாடி கேட்டுடனும்னு நினைச்சி தான் இங்க வந்தேன்… சொல்லு உனக்கு நான் ஓகே வா இல்லையா…?" அவள் கூறப் போகும் பதிலுக்காக ஆவலாய் அவன் முகம் பார்த்தான்.

என்னவென்று கூறுவாள் நேற்று வரைக்கும் அவனை சுத்தமாக பிடிக்கவில்லை என மனத்திற்குள் மறுகியவள் தானே அவள்… கண்களை மூடி ஒரு நிமிடம் ஆழ மூச்செடுத்தவள் மனதில் அவன் உருவத்தை நிறுத்தி பார்க்க, சிரித்தபடி அவள் மனதை கொள்ளை கொண்டான் அவன். 

சஞ்சய் அவள்  பதிலுக்காக காத்திருக்க,

"எ… எனக்கு உங்கள பிடிச்சிருக்கு"  ஒருவாறு பதிலை கூறி அவனை கண்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாள்.. 

"பட் ஒரு விஷயம் தான் உறுத்தது.." என்றவளின்  முகம் சட்டென கூம்பி விட, 

"என்ன விஷயம் சுஜிமா…?" இப்போது உரிமையாய் அழைத்தான் அவன்.

"எங்க அண்ணா  நிஷா கல்யாண விஷயம்…" கசந்த முகத்துடன் அவனை பார்த்தாள்.

"அது ஒரு சாதாரண விஷயம் சுஜிமா அதுக்கு ஏன் நீ இவ்வளவு சீரியசா பேசை வைச்சிக்குற…. கார்த்திக் கிட்ட  ஒரு ப்ரப்போசலா தானேடா வைச்சி இருக்காங்க அவருக்கு ஓகேனா ஓகே… இல்லனா ப்ரப்ளம் இல்லடா… அவன் தெளிவாக உரைத்தான்.

"சட்டென மலர்ந்த முகத்துடன் அவனை பார்த்து புன்னகைத்தவள், ம் இது தான் வேணும் நம்ம கல்யாணம் விஷயம் வைச்சி எங்க அண்ணாவை நிர்பந்திக்க கூடாது அவன் பிடிச்சி இருந்தா ஓகே சொல்லட்டும் இல்லைன்னா ஃபோர்ஸ் பண்ணக் கூடாது" அண்ணனுக்காக பேசினாள் சுஜாதா.

"டோன்ட் வொரி சுஜிமா… இந்த கல்யாணத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…  ஓகே… இது ரெண்டு குடும்பத்துக்கும் நல்லாவே தெரியும்… அப்புறம் மை ஸ்வீட் பெட்டர் ஹாப் உங்களை விட்டுட்டு போற ஐடியாவும் எனக்கு இல்லை… சோ ரெண்டையும் போட்டு குழப்பிக்காதிங்க மேடம்".

கன்னம் குழி விழ சிரித்தவனின் அழகில் விழிகளை இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள்.

"சுஜிமா…" முகத்துக்கு முன் கை ஆட்டி நிகழ்வுக்கு கொண்டு  வந்தவனைக் கண்டு நாணம் மேலிட அவன் கண்களை‌ சந்திக்க முடியாமல் அந்த இடம் விட்டு அகல  இருந்தவளின்  தளிர் கரங்களை பிடித்த சஞ்சய் அதில் சிறு பரிசு பெட்டியை வைத்தான்.

"உன்னை முதல் முறை பார்க்க வர்றேன்… சோ என்னோட சின்ன கிஃப்ட்.. அப்புறம் பார்த்துவிட்டு போன் பண்ணுடா" கன்னங்களில் செல்லமாக தட்டியவன்,

தன் பின்னங் கழுத்தை நீவிக் கொண்டான். அவன் சிறு தொடுகையும் அவனுள்ளும் அவளுள்ளும் பெரும் மாற்றத்தை உருவாக்கி இருக்க, இதற்கு மேலும்  அங்கிருப்பது  இருவருக்குமே  பெரும் அவஸ்தையாக இருந்தது.

"ரொம்ப நேரம் இங்க இருக்கோம் வா போகலாம்…" என்றான் சஞ்சய்.

சஞ்சயின் திடீர் செய்கையில் சுஜாதாவின் கன்னங்கள் அந்திவான சிவப்பை பூசிக்கொள்ள, சிரித்தபடி நிறைந்த மனதுடன் அவன் பின்னே நடந்து வந்தாள்.

……

மருத்தவமனை வாயிலினுள் ரேவதியும் திவ்யாவும் நுழைவதை கண்டவனுக்கு ரத்தமெல்லாம் கொதித்தது. இப்போதே அவளை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டுமென மனம் தவறான பாதையில் அவனை நடத்தி செல்ல மூளை விழித்துக் கொண்டது… 

'சே…. என்ன மடத்தனமான வேலை  இது… எத்தனையோ பெண்களை நாம் பார்க்கவில்லையா…? அவங்கள போல இவளையும் நினைத்து அவளை கடந்தும் போகறதை விட்டு ஏன் இப்படி இன்னொருத்தனை  லவ் பண்ணிட்டு இருக்க பொண்ணு  மேல  பைத்தியக்காரத்தனமான வல்வை வைக்கிறடா அறிவுக்கெட்டவனே…?  அவ வேற ஒருத்தனுக்கு சொந்தம் அவ உன்னை ஏர்றெடுத்து கூட பார்த்தது இல்ல இதோடு அவ பின்னாடி போறதை விடு டா முட்டாள்…!!' தன்னை தானே திட்டிக்கொண்டவனது மூளை வேகமாக வேறு கணக்கை போட்டு அலைபேசியில் தந்தையை  அழைத்தது.

ஹாங் அப்பா நான் தான். சட்டென குரலை மாற்ற இயலவில்லை கரகரப்பாகவே வந்தது அவன் குரல்.

…..

ஒரு முக்கியமான வேலை ப்பா அதான் வந்துட்டேன்..

….

சாரிப்பா… அம்மா கிட்ட நான் பேசுறேன் ப்பா … அவங்கள நான் கன்வினிஸ் பண்றேன்… சஞ்சய் வீட்டுல போயிட்டாங்கலாப்பா…. கலவையான உணர்வுகளுடன் உரைத்தான் தந்தையிடம், 

….

ம் சரிப்பா… இவினிங் வந்துடுறேன் அப்புறம் நா… நான் நிஷாவை  கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன். பட்  இப்போ சொல்லாதிங்க நான் நிஷாகிட்ட பேசனும் அப்புறம் சொல்லறேன் அவங்ககிட்ட சொல்லுங்க…. ஒருவெறுமையாக வந்தது அவனது‌ வார்த்தைகள்,

….

சரிப்பா  இவினிங் வந்துடுவேன் நீங்களே பார்த்துக்கோங்க சரிங்கப்பா அம்மா கிட்டயும் சொல்லிடுங்க வைச்சிடுறேன்…  போனை அணைத்தவனது மனம் சத்தமில்லாது சில்லு சில்லாக சிதைந்து போன நன் காதலை எண்ணி ஊமையாய் கண்ணீர் விட்டது.  அவன் கைகளில் சீறி பாய்ந்த வாகனம் தனிமையை நாடி வெகு தூரம் சென்று புள்ளியாய் மறைந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro