அலை 🌊 45

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹாய் மக்களே...‌ரொம்ப கோவமா இருப்பிங்க... தெரியும் சாரி சொல்ல மாட்டேன்... இதுவரை இப்படி எழுதியது இல்லை அதான் கொஞ்சம் நேரம் எடுத்துடுச்சி...  இந்த எபிக்கு இது தேவையான ஒன்னு அதான் எழுதி இருக்கேன்... அவ்வளவு விரசமா இருக்காது அப்படி இருந்ததுன்னு நினைச்சா சாரி ஸ்கிப் பண்ணிடுங்க...  தெய்வங்களா பாத்து பண்ணுங்க... உங்க கருத்துக்களையும் சொல்லுங்க... நன்றி அன்புடன் பாகி...

.........

இரும்பு கம்பிகளுக்கு பின் நின்றிருந்த கஜேந்திரனின் (கஜா) கண்கள் கோபத்துடன் குமாரை ஏறிட்டது. 

“சாரை கூப்பிட்டு அனுப்பினா தான் வருவிங்களோ… ஊர்ல ஆள் இல்லன்னதும் ஆளாளுக்கு ஜபரு காட்டிக்கினு திரியுறிங்களா…” இத்தனை நாட்களாக தன்னை வந்து பார்க்காத குமாரை காய்ச்சி எடுத்தான் கஜா.

கஜாவின் கண்களில் தெரிந்த வெறியில், மனதில் கிலி உண்டானாலும், அதை முகத்தில் காட்டாது நின்றிருந்த குமார்,

“அண்ணாத்தே நீ வுட்டுட்டுப் போன வேலையை எல்லாம் ராத்திரி பகல் பாக்காம பாத்துக்குனு இருந்தேன்…. என்னை போய் இப்படி சொல்லிட்டியே… நம்ம நினைச்சது எதுவும் நடக்கல அண்ணாத்தே… அதான் உன்னை வந்து பாக்க முடியல…” 

முகத்தில் டன் கணக்கில் வருத்தம் இழையோட, கஜாவிடம் கூறினான் அவன்.

“என்னடா சொல்ற…? சொல்ற பரதேசி ஒழுங்கா சொல்லி தொலையேன்டா…?” சொல்ல வந்த  தகவல்களை சரியாக கூறாததில் வல்லென குமாரின் மீது எறிந்து விழுந்தான் கஜா, அவனுக்கு வெளியிடத்தில் இருந்து வரவேண்டிய வரவுகள் வேறு நிறைய இருந்ததில் கொஞ்சம் கடுப்பாகி விட்டான்.

கஜாவின் முகத்தில் தெரிந்த குரூரத்தில் பயந்தவன் சற்று திணறலுடனே, 

“அண்ணாத்தே..., அது வந்து…  அது… அந்த கார்த்திக் பைய ரேவதி குட்டிய வுட்டுட்டு போய்டுவான்னு அவனை லேசா நினைச்சி அசால்டா இருந்துட்டேன்…‌ 

ஆனா… அவன் வூட்டு ஆளுங்கள கூட்டியாந்து அந்த குட்டிய  ஊர் அறிய கூட்டிக்கின்னு போவான்னு  எதிர்பார்க்கவே இல்ல அண்ணாத்தே….” என்றான் தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு,

இதை கூறினால், கஜா எதையாவது எடுத்து அடிப்பான் என தெரிந்தும், ஜெயில் கம்பிகளுக்கு பின் இருப்பவனால் அது முடியாது என்ற தைரியத்தில் அவன் எதிரே  நின்றிருந்தான் குமார்.

“என்னடா சொல்ற…?” ஆத்திரத்துடன் ஜெயில்  கம்பிகளின் தடுப்புகள்  மீது ஓங்கி குத்திய  கஜாவின் முகம் கோபத்திலும் பழிவெறியிலும் பயங்கரமாக மாறிது,

“ஆளுங்க வந்து கூப்பிட்டா  உடனே அனுப்பி வச்சிடுவியா டா நாயே… நீ உள்ளாற புகுந்து ஆட்டயை கலைச்சி விட வேண்டியது தானே டா… அங்க என்ன மையித்தை புடுங்கவா உன்னை வுட்டுட்டு வந்தேன்…” இவன் வாயிற்கு வந்ததை வண்ண வண்ணமாகக் கேட்க  முகத்தை சுளித்துக் கொண்டு தலை சொறிந்தான் குமார்.

“இன்னும் ஓரே வாரத்துல அந்த குட்டிய தூக்குடா எவன் வர்றான்னு நானும் பாக்குறேன்… என்னை உள்ளே வச்சிட்டா எதுவும் கிழிக்க முடியாதுன்னு நினைச்சிட்டு இருக்கானுங்களா… ? நான் யாருன்னு இன்னும் தெரியலடா…”  குமாரிடம் எகிறிக் கொண்டிருந்தான் கஜா.

‘இந்த ஆள் உள்ள உட்காந்துட்டு நிலமை புரியாம கத்திக்கினு இருக்கானே…’

குமாரின் மைன்ட் வாய்ஸ் தலைக்குள் ஓடினாலும் வெளியே ஒன்றும் தெரியாதது போல நின்றிருந்தவன்,

“நீ வேற அண்ணாத்தே அவன் கூட போலீஸ்காரன்னு ஒருத்தன் சுத்தறான் எவனை பார்த்தாலும் சந்தேக கேசில உள்ளாற தூக்கி வச்சி லாடங்கட்றானுங்க இந்த ரெண்டு வாரத்துல மட்டும் நம்ம ஆளுங்க 5 பேர உள்ள தூக்கி வச்சி இருக்காங்க” என்றான் ஆற்றாமையுடன்,

“யார் டா அவன்…?  நம்ம இடத்துல வந்து நம்ம மேல கைய வைக்கிறது… அவ ஆத்தாகாரிக்கு மறந்துப்போச்சா எங்க இருக்கோம்னு…என் வூட்டுலயே இருந்துக்கிட்டு எனக்கே ராங்கு காட்டாறாங்களா…?”  பற்களை நரநரத்தான் கஜேந்திரன்…

“அண்ணாத்தே  உனக்கு ஒன்னுமே தெரியல போ… என்னைக்கு அவங்க வந்து ரேவதி குட்டி வூட்டுல பேசினாங்களோ, அடுத்த ரெண்டு நாள்ல உங்க அக்கா குடும்பத்தை வூட்டை காலி பண்ணி கூட்டின்னு போயிட்டான் அந்த கார்த்திக் பைய…  இப்போ எங்கேயோ பெரிய இடத்துல வச்சி பந்தோபஸ்த் பண்ணி பாத்துக்குறான் போல…” அவன் தகவல்களை துளி துளியாக சிதற விட, ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான் கஜா….

“இனி உள்ள இருந்தா வேலைக்கு ஆகாது இந்த வக்கீல் கிட்ட சொல்லி  வெளியே வரேன்டா…  வெளியே வந்து வைக்கிறேன்டா ஒவ்வொருத்தனுக்கும்” 

பழி உணர்ச்சியில் பற்கள் நெறிபட கஜேந்திரன் உறுமிட,  வந்த வேலை முடிந்த திருப்தியில் வெளியே நடையைக் கட்டினான் குமார். 

குமாருக்கு கஜாவின் நடத்தையில் அவ்வளவு பிடித்தமில்லை.. அதுவும் மீனா போன்ற ஒருத்திக்கு துரோகம் செய்து விட்டு ரேவதியை கட்டிக் கொள்ள துடிப்பது அவனுக்கு தவறாக பட்டது… 

தான் அவ்வளவு நல்லவன் இல்லை என்றாலும் இதில் கஜாவிற்கு உதவ அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை… 

இதை அவன் எதிரே சொன்னால் தூக்கி போட்டு வாயிலையே மிதிப்பான் என்று தான் இத்தனை நாட்களாக சொல்லாமல் இருந்தான். 

ஆனால் இப்போது தான் உள்ளே இருக்கிறானே அந்த தைரியத்தில் தான் ரேவதி மாமியார் வீட்டிற்கு சென்று இரண்டு வாரங்கள் கழித்து வந்து கஜாவிற்கு தகவல் தெரித்து இருக்கிறான்… ஏதோ அவனால் முடிந்த அளவிற்கு தாமதப்படுத்தி விட்டான்… இனி எல்லாம் அவள் கணவன் பார்த்துக் கொள்வான் என நினைத்தான்.

மனைவி தன்னைப் பின் தொடர்கிறாள் என தெரிந்தும், அவள் பக்கம் முகம் திருப்பாமல் மேலே இருக்கும் தங்களது அறைக்குள் நுழைந்திருந்தான் கார்த்திக்.

ஓட்டப் பயிற்சியின் விளைவாய்  முழவதுமாக வியர்வையில் நனைந்த  டீ ஷர்ட்டை கழற்றி அழுக்கு  கூடையில் வீசியவன்,

முகத்தில் பூத்திருந்த வியர்வை துளிகளை துவாலையில் ஒத்தி எடுத்தான்.

பின்பு கபோர்டில் தலையை விட்டு  எதையோ மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தான்… 

தேடிக் கொண்டிருந்தானோ, இல்லை, தேடுவது போல பெயர் செய்து அவளுக்கு பேச வாய்ப்பை வழங்கினானோ  தெரியவில்லை, வெகு நேரம் அதில் தலையை விட்டு, குடைந்து கொண்டிருந்தான்.

ரேவதியின் மேல் இருந்த அவன் கோபம் கூட இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டதில் ஓரளவுக்கு மட்டுப்பட்டிருந்தது. 

அவன் இயல்பாகத் தான் இருக்கிறான். அவளிடம் எப்போதும் போல் பேசிகிறான்… அதாவது அதட்டும் பாவனையிலோ அல்லது அதிகாரத் தோரணையிலோ, அவன் பேச்சுக்கள் எல்லாம்.. அவள் கண்களுக்கு அப்படி தானே பட்டு தொலைத்தது. 

ஆனால் கணவன் என்ற உரிமையில் அவளை நெருங்கவோ,  இல்லை அவளிடம் எல்லை மீறவோ, இது வரையிலும் அவளுக்கு தெரிந்து எந்த வகையிலும் முயற்சியை எடுக்கவில்லை… 

தெரிந்து தான்‌ முயற்சி எடுக்கவில்லை, அவளுக்கு தெரியாமல் அவன் செய்தது எல்லாம், அவள் தன் கனவு என்று தானே, நினைத்துக் கொண்டிருக்கிறாள்…

ரேவதிக்கு, அவன் தன்னை விட்டு, விலகி நிற்பது போல் தோன்றியது… 

இதற்கு முன் அவன் தன்னிடம் நடந்து கொண்டது எல்லாம் தன் கற்பனையோ எண்ணும் அளவிற்கு அவன் செயல்கள் இருந்தது.

நீரில் மூழ்கி வெளியே வரும் ரப்பர் பந்து போல, அவர்களது பிரச்சனையும் இப்போது மேலே எழும்பி நின்றதில், ரேவதியின் கண்கள் அவன் செய்கைகளையே கிரகித்துக் கொண்டிருந்தது.

அவன் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளாமல்,  தன்னையும் தன் காதலையும் வெளிப்படுத்த வெகுவாக தயங்கினாள் ரேவதி.

தயக்கம் மட்டுமே கொண்டாள். அவனை விட்டு தள்ளி நிற்க வேண்டும்‌, என்று‌ ஒரு போதும்  நினைக்கவில்லை…  

இந்த செல்வ செழிப்பும், ஆடம்பரமும், தான் அவளை சற்று அச்சுறுத்தியது… அதுவும் இன்று காலை பேசிய,  கல்யாணியின் வார்த்தைகளில் கதாதூரம் ஓடியிருந்தது….

“ம்கூம்…” தொண்டையை செறுமி தன் இருப்பை அவனுக்கு உணர்த்தினாள்.

அவள் வாசத்தை வைத்தே அவளை அறிந்து கொள்பவன் இவ்வளவு பக்கத்தில் அதுவும் தனக்கு பின்னால் நிற்பவளை அறிய மாட்டானா என்ன…? 

அவளே பேசட்டும் என அமைதியாகக் காத்திருக்க, அவள் செறுமவும்  திரும்பி என்னவென்று பார்த்தான்.

“கு… குடிக்க காபி எடுத்துட்டு வரவா…?” தன் தயக்கத்தை விடுத்து, ஓரடி முன்னால் எடுத்து வைத்து பேசினாள் ரேவதி.

“நோ, தேங்க்ஸ்…” ஒற்றை வரியில் பதிலை முடித்துக் கொண்டவன், தனக்கு தேவையான உடையை இன்னும் தேர்வு செய்து கொண்டு தான் இருந்தான்.

அவளுக்கு தான் புஸ்ஸென்று ஆனது… பேசுவதற்கே படாத பாடுபட வேண்டுமோ என மலைப்பாய் இருந்தது…

சேலை தலைப்பை கைகளில் சுருட்டிக் கொண்டிருந்தவள், என்ன கேட்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தாள்… 

திருமணம் முடிந்து வந்ததிலிருந்து இதுவரையிலும் அவனுக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்காதவள்,  இன்று காஃபி வரையிலும் கேட்பதே அவனை பொருத்த வரையிலும் பெருத்த மாற்றம் தான்…

வீட்டிற்கு வந்த நாள் முதல், அவனை விட்டும், இந்த வீட்டை விட்டும், அவளுக்கு ஒதுங்கி நின்று தானே பழக்கம்… இன்று தான் ஏதோ வழி தெரிந்திருக்கிறது  போல,  கண்களில் மெச்சிய பாவனையுடன் மனைவியை பார்த்தவன், தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

கல்யாணம் வரையிலும் அவளை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தாயிற்று… 

இனி மத்தது எல்லாம் அவள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று தான் நினைத்தான்… 

முதலில் அவள் மனதில் இருக்கும் முதல் காதலையும் அவன் வலியையும் மறக்க  வேண்டும்…  என எண்ணியவன், 

 தன் ஆசைகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு அவளுக்கான கால அவகாசத்தை கொடுத்து காத்திருக்க, இப்போது தானே தன் கூட்டிலிருந்தே வெளிவர நினைத்திருக்கிறாள்…  

சரி, எதுவாகினும் முதலில் அவளிடமிருந்தே வரட்டும் என அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டே அவளையும் ஒரு கண் பார்த்து கொண்டான்.

“நா… ன்…  நான்… உங்களுக்கு டிரெஸ் எடுத்து வைக்கிறேன்… நீங்க போய் குளிச்சிட்டு வாங்க…”

 முதலில் தடுமாற்றத்துடன் ஆரம்பித்தவள் பிற்பாதியை சரளமாக பேசி அவன் முன்னால் வந்து நின்றாள் ரேவதி. 

தன் காதால் கேட்டது நம்ப முடியாமல் அதிசயமாய் அவளைப் பார்த்தான்… 

கேட்டது அவள் தானா…?  ஒருவேளை தன் பிரம்மையோ என நினைத்தவன், சற்று நேரத்திற்கெல்லாம் தெளிந்து கபோர்டில் தன் தேடலை மறுபடி துவங்கி இருந்தான்.

தன்னை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் அலட்சியத்துடன் நடக்கும் கணவனின் செய்கையில் சற்று சினம் துளிர்க்க, ‘எப்பவுமே இப்படி நிக்க வைச்சி தான் பழக்கம்…’ மனதிற்குள் முனுமுனுத்தவள்,

“உங்களத் தான் கேக்குறேன் நான் எடுத்து வைக்குறேன்… நீங்க போய் குளிச்சிட்டு வாங்க“ என்றாள் மனைவி என்ற உரிமையுடன்.

இம்முறை சற்று பலமாகவே வந்தது அவளது குரல், 

மனைவியின் உரத்த குரலில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு, இது பிரம்மை இல்லை உண்மை என்று புரிந்தது, 

“என்ன  இதெல்லாம் புதுசா… எப்பவும் இதெல்லாம் நீ செய்ய மாட்டியே…” திரும்பி நின்று இடுப்பில் கை வைத்து அவளை குறுகுறுப்பாய்  பார்த்தான்.

அவன் நீல நிற  லேசர் விழிகளில், என்ன கண்டாளோ  எப்போதும் போல தன்னை மெய் மறக்க செய்யும்  அவன் கூர் பார்வையை சந்திக்க முடியாமல் அவள் தலையை தாழ்த்திட, இவனுக்கு தான் மனைவியின் செய்கை கசந்தது…

தங்கை இருக்கும் போதே தன்னை கண்கொட்டாமல் பார்த்தவள், என்பதை தற்போது வசதியாக மறந்தவன், 

தனியறையில் தன்னை நேருக்கு நேராக கூட பார்க்க முடியாதா… என மனைவியின் மேல் உள்ளுக்குள் கடுப்பானான், 

“நோ… தேங்கஸ் ரேவதி… நான் பாத்துக்குறேன்… நீ உன் வேலையை பாரு…” அவளுக்கு அதே கடுப்புடன் பதிலைக் கொடுத்து விட்டு, இவன் தனக்கான உடையை கையில் எடுக்கவும்,

“ஏன் நான்‌ எடுக்க கூடாதா…  நான் எடுத்து கொடுத்தா தான் நீங்க போட்டுக்க மாட்டிங்களா…?”  அவள் குதர்க்கமாக கேட்டு அவன் கையில் இருப்பதை ஏறத்தாழ பிடிங்கிக் கொண்டாள்.…

தலையை இருபுறமும்  அசைத்து அவளையே தீர்க்கமாகப் பார்த்தவன்‌ “இப்போ என்ன வேணும் உனக்கு‌…? ஏன் இப்படி கிறுக்கு தனமா பண்ற…?”  என்றான் சற்று குரலை உயர்த்தி, 

கொஞ்சினாள் மிஞ்சுகிறாள், மிஞ்சினாள் கெஞ்சுகிறாள்  அவளின் போக்கு புரியாது எரிச்சலாக நின்றான்.

அவள் செய்கைகள்  உரிமையில் கேட்டது போல தெரியவில்லை… யாரோ அவளை வலுக்கட்டாயமாக இதில்  திணிப்பது போல தோன்றியது. 

இயல்பாய் நடக்க வேண்டியதெல்லாம் தடியால் அடித்து கனிய வைப்பது போல தெரிய கடுப்பின் உச்சத்தில் இருந்தான் அவன்‌.

அவன் சிரிப்பை தொலைத்த முகத்தை பார்த்தவள், “சரி… ஓகே… ஓகே… நான் டிரெஸ் எடுத்து வைக்கல… போதுமா…” கோபத்துடன் அவனிடம் வெட்டுவது போல கூறி, 

கணவனின் கைகளில் இருந்து பறித்ததை, அவன் கைகளிலையே திணித்தவள், திரும்பி செல்லாது அங்கேயே நின்றாள். 

அவள் நிற்பதை உணர்ந்தவன் இப்போ என்ன என்றான் கோபத்தை விடுத்து சாதாரணமாக,

“இன்னைக்கு நானும் ஆபீஸ் வரட்டுமா… ?” தயக்கம் கொண்டாலும்,  ஒருவழியாக கேட்க நினைத்ததை கேட்டு விட்டாள் ரேவதி.

அவன் செவிகளில் சரியாக விழுந்தாலும், அவள் தான் இதை சொல்கிறாளா.!!! என திகைத்தவன்,  

“புரியல… கம்‌ அகைன்…!”  மறுமுறை அவளை சொல்ல சொன்னான் கார்த்திக். 

“நான் மறுபடியும் வேலைக்கு வரட்டுமா…? உங்களுக்கு பிரச்சனை இல்லையே…?” என்றாள் தெளிந்த சீரான குரலில். 

‘பரவாயில்லையே ஒரு விஷயம் அவளுக்காக என் கிட்ட கேட்டுட்டா..!’ அவளை மனதிற்குள் மெச்சிக் கொண்டவன்,

“எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது…  ஆனா இப்போ வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்… கை குணமாகுற வரை எந்த ஸ்டெரெய்னும் பண்ண வேண்டாம்” என்றான் அக்கரையுடன், 

ஆனால் ரேவதியை வேலைக்கு  வைத்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு சுத்தமாக இல்லை…   தன் மனதில் இருப்பதை அவளிடம் சொன்னால் என்ன சொல்வாளோ என நினைத்து யோசனையானவன் அவளது முகத்தைப் பார்த்தான்.

அன்றலர்ந்த மஞ்சள் நிற ரோஜாவை  போல பொலிவுடன் இருந்த அவளது மஞ்சள் முகம்  வேலைக்கு வேண்டாம் என்றவுடன், வெயிலில் இட்டு வாட்டியது போல் கூம்பி தன் பொலிவை இழந்திருந்து.…

“நீ வேலைக்கு போகுறதை விட டேன்ஸ் ஸ்கூல் போயேன் ரேவதி…” மனதில் எண்ணி இருந்ததை நேரடியாகவே சொல்லியே விட்டான்.

“இல்ல… எனக்கு டேன்ஸ் எல்லாம் வேண்டாம்… உங்க கூட ஆஃபிஸிக்கே வரேனே…” சட்டென மறுத்து விட்டாள் ரேவதி.

ஆரம்பத்தில் அதிர்ந்தவன், பின் தெளிந்து , “எதுக்கு இப்போ டேன்ஸ் ஸ்கூல் வேண்டாம்னு சொல்ற…? சென்னை சிட்டியிலையே பெரிய ஸ்டேன்ஸ் கிளாஸ் அக்கடமில தான் உனக்கு கேட்டு வைச்சி இருக்கேன்…”  அவளை‌ சம்மதிக்க வைக்க பேசினான்.

அவன் சமாதானத்தை எல்லாம் சல்லி சல்லியாய் உடைத்தவள், 

“ நான் எங்கேயும் போக விருப்பப்படல...  உங்க கூட ஆஃபிஸிக்கு தான்  வருவேன்… ”  ரேவதி தன் பிடியிலையே உறுதியாக நின்றாள்.

அவனுக்கு புரியவே இல்லை ஏன் வேண்டாம்‌ என்றகிறாள் என, இருந்தும் அவளுக்கு புரிய வைக்க‌ முயன்றவன், 

“எனக்கு தெரிஞ்சி டேன்ஸ் தான் உன் பேஷன்…   நீ ஹாபிக்காக மட்டும்  இதை பண்ணலன்னு எனக்கு நல்லாவே தெரியும்… அப்படி இருக்கும் போது நீ ஏன் டேன்ஸ் வேண்டாம்னு சொல்ற… இப்போ நீ அங்க வேலைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம் என்ன வந்தது…?  என்றான் கேள்வியாக, குரல் உயர்த்தியோ,  அதிகாரமாகவோ இல்லாமல் தன்மையாகவே கேட்டான்….

அவளுக்கு அவனை விட்டு எங்கேயும் செல்லாம் விருப்பம் இல்லை… அது தான் உயிராய் நினைக்கும் நடனமே என்றாலும் அவனுக்கு அடுத்து தான்‌ என நினைத்தவள், இப்போது தங்களது இடையில் நிலவும்‌ இந்த இடைவெளியை குறைக்க அவனுடன் இருப்பது தான் முக்கியமாக பட அலுவலகம் போவது என முடிவு செய்திருந்தாள்.   

கார்த்திக் கேட்கவும் ‘உங்களுக்காத் தான்’ என வாய்விட்டு கூற முடியாமல் தவித்தவள், அவனையே பார்த்தாள்.

பார்வையால் அந்த தவிப்பை வெளிப்படுத்த  அவள் கண்களில் உண்டான தவிப்பை பார்த்தவன், அவளின் முதல் காதலை மறக்க முடியாமல் தான் உயிராய் மதிக்கும்  நடனத்தை கூட வேண்டாம்‌ என்கிறாளோ என தப்பும் தவறுமாக  புரிந்துக் கொண்டவன், 

“சொல்லு ரேவதி உன்னை தான் கேக்குறேன்… இப்போ நீ வேலைக்கு வந்தே ஆகனும்னு ஏன் அடம் பிடிக்குற…? அப்படி என்ன இருக்கு அங்க…?” ‌என்றான் சற்று ஆற்றாமையுடன்

‘நீங்க இருக்கிங்களே…’  அவள் மனசாட்சி பதிலளிக்க அமைதியாக நின்றாள்.

 வாயே திறக்காமல் அமைதியாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு கோபமானவன்,

“உனக்கும் உன் குடும்பத்துக்கும் நான் செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா…? இல்லை உன்‌… உன்… முதல்… கா…. சே…‌இன்னும் என்னை நீ  நம்பல ல ரேவதி….”  அவளுடைய முதல் காதலை கூட சொல்ல பிடிக்காமல் அவன் கேட்ட தினுசில் இவளுக்கு  முனுக்கென்று கண்ணீர் கொட்டியது…   

அவள் அவனுக்காக கேட்க அவனோ அவளுக்காக பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் அழமாக நேசிக்க மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ளாமல் இருவருமே தங்களை தாங்களே வருத்தி தாங்கள் நேசிப்பவரையும் வருத்திக் கொண்டிருந்தனர்.

அவள் விழிகளில் பளப்பளத்த  நீரை கண்டவனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது…

எவ்வளவு அழகாக தொடங்கிய நாள் அதை இப்படி சிதைத்து விட்டோமே….  சிரித்துக் கொண்டிருந்தவளை, ஏதேதோ பேசி அழ வைத்து விட்டோமே என தன் மீதே வருத்தம் கொண்டான்…

அவளை அனைத்து ஆறுதல் படுத்த துடித்த கைகளை அடக்கிக் கொண்டு விறுவிறுவென குளியலறைக்குள் புகுந்து விட்டான். 

அவன் நினைப்பை எங்கனும் மாற்றுவாள்… தான் அவன் மேல் வைத்திருக்கும் காதலை சொல்லக் கூட தகுதி இருக்கிறாதா என தெரியவில்லையே…  ஆறாய் பெறுகியது கண்ணீர்… 

தன்னிடம் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதை பார்த்தவளுக்கு தங்கள் திருமணத்தன்று நடந்தவைகள் எல்லாம் கண் முன்னால் நிழலாய்   தோன்றி  அவளை வதைத்தது‌…

காலம் நேரம் பார்க்காமல் காவல் நிலையத்தில் வைத்து நடந்த திருமணத்தில்,  இரு பக்க வீட்டினருக்குமே சற்று வருத்தம் இருந்தது…

அதனால் முறையாக  நாள் பார்த்து, நேரம் பார்த்து, வேதமந்திரம் ஒலிக்க அக்னியை சாட்சியாக வைத்து வடபழனி முருகர் கோவிலில் சொந்தங்கள் புடை சூழ மிக மிக எளிமையாக கார்த்திக் ரேவதியின் திருமணத்தை முடித்திருந்தனர் கல்யாணி தேவராஜ் தம்பதியினர். 

சின்ன சின்ன சடங்குகள் கூட மிக அழகாய் நேர்த்தியாய் முடிய, அந்திவான சிவப்பை கன்னங்களில் தாங்கி அப்சரசாய் நின்றிருந்தாள் ரேவதி. 

அவளுக்கு இணையாக தான் விரும்பியவளையே கரம் பிடித்த மகிழ்ச்சியில் மனம் நிறைந்து இருக்க, அது முகத்திலும் பிரதிபலித்ததில், ஆளை அசரவைக்கும் அழகுடன் நின்றிருந்தான் கார்த்திக். 

ஏற்றிய வாறிய தலைமுடியும்,  நெற்றியில் அழகாய் இடம் பிடித்து இருந்த மெல்லிய சந்தன கீற்றும், இதழில் உரைந்த நகையுடன் இருந்தவனை கண்டு சொக்காமல் இருந்தால் தான் அதிசயம். 

அந்த நீல நிற‌விழிகளில் விரும்பியே தன்னை  கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டு இருந்தாள் ரேவதி.

நிறைந்த மனதுடன் பூஜை முடித்த புதுமண தம்பதியினரை கோவிலை சுற்றி  வர  சொல்லி பெரியவர்கள் அனுப்பி வைத்தனர்.

தேவராஜ் மற்றும் கல்யாணி வந்தவர்களை உபசரித்து அனுப்பி வைக்க,  காஞ்சனாவும் சிவாவும் அவர்களுடன் சேர்ந்து உதவிக் கொண்டு இருந்தனர்.

ரகுவிற்கும் திவ்யாவிற்கும் வழக்கம் போல் கோவிலிலும் முட்டிக்கொள்ள ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு எதிரெதிர் திசையில் நின்றிருந்தனர்.

சொந்தங்களை தவிர்ந்து மற்றவர்கள் எல்லாம்  அங்காங்கே அமர்ந்து விட, புதுமண ஜோடி  மட்டுமே கோவிலை வலம் வர சென்றனர். 

புது மஞ்சள் தாலி   அவள் கழுத்தில் உராய்ந்து கதகதப்பை கூட்டிட … நெற்றி வகுட்டில் இட்ட குங்குமம் அவள் அழகை மேலும் உயர்த்தி காட்டியது…

மெட்டி சப்தமிக்க நடந்து சென்றவளுக்கு, அவனை காணவே வெட்கம், ஏதோ கோவிலில் தொலைந்த புதையலை தேடுபவள் போல குனிந்த தலை நிமிராமல்  அவனிடமிருந்து சற்று தள்ளி நடந்து வந்தாள் ரேவதி,

அன்னம் போல நடை பயின்றவளையே  பார்த்துக் கொண்டே வந்தவன், அவள் காயம் பட்ட கரத்தை மெல்ல பற்றிக் கொண்டு அதில் அழுத்தம் தராமல்  அவளுடன் இணைந்து நடந்தான்.

திருமணத்திற்கு சம்மதம் என்று கூறினாலும் தன்னிடம் பேசாமல் மூன்று தினங்களாக  அலைகழித்தவன், இன்று  திடீரென கை பிடிக்கவும்  அதிசயமாய் அவனை விழி விரித்து பார்த்தாள் ரேவதி, 

அவள் அதிர்ச்சியில் உறையாமல்  விழிகளை விரித்து, சுற்றும் முற்றும் திரும்பி பார்க்க அவன் புருவத்தை உயரத்தி,  ‘என்ன…?  என்றான் கேள்வியாக,

அவன் பாவனையில் தலையை இடம் வலமாக அசைத்தவள், அமைதியாக இருக்க, “கை வலிக்குதா ரேவதி”  என்றான் கனிவான குரலில், 

அவன் குரலில் தெரிந்த அன்பில், காலையில் இருந்து மனதில் தோன்றிய இனம் புரியாத பயம் நொடியில் விலகி விட மலர்ந்த முகத்துடன் அவனை பார்த்தாள்.

அய்யர் மந்திரம் செல்லும் நேரம், இவள் பூஜை செய்ய கையில பொருளை தொடும் போதெல்லாம், கை வலி எடுத்தது, அதை முகத்தில் காட்டது இருக்க ரேவதி வெகுவாக சிரப்பட,

இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்தவன், அய்யரின் காதில் ஏதோ சொல்ல, பாதியில் அந்த பூஜை எல்லாம் கார்த்திக் செய்ய,  அவன் கையை மட்டும் தொட்டுக் கொண்டு இருந்தாள் ரேவதி.  

அதை எண்ணியவளுக்கு இப்போதுதான் அது கார்த்திக்கின் வேலை என புரிந்ததது…  மனம் அத்தனை மகிழ்ந்தது … தனக்காக பார்த்து பார்த்து செய்யும் கணவனின் அன்பில் நெகிழ்ந்திருந்தாள் ரேவதி.

“உன்னை தான் கேக்குறேன் ரேவதி… கை வலிக்குதா…? டாக்டர் கிட்ட போகலாமா…? காலையில் இருந்து ஸ்டெயின் பண்ற கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறியா…?” என்றான் அக்கரையாக…

கை வலிக்கின்றது தான் இருந்தாலும் அவன் மனம் நோகடிக்க  விருப்பம்  இல்லாமல், அவனை பார்த்து 

இல்லை என தலையை அசைத்தவள்,  “அந்த அளவுக்கு வலி இல்லை… வாங்க  வீட்டுக்கு போகலாம்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

ஒவ்வொரு சன்னதியிலும் கார்த்திக்கே அவளுக்கு ஆரத்தியை தொட்டு கண்களில் ஒத்தி எடுத்து, நெற்றியில் பொட்டும், வைத்து அழைத்து வந்தான்.  

அவனின் ஒவ்வொரு செய்கையிலும் அவனிடம் தொலைந்துக் கொண்டு  இருந்தாள் பெண்…

ரேவதி கார்த்திக்குடன் மணக்கோலத்தில் வருவதை பார்த்த சிவாவிற்கு கண்கள் கலங்கியது, கூடவே இருந்தவள், இன்ப துன்பத்தில் தூணாய் இருந்து தங்களை அரணாய் பாதுகாத்து நின்றவள், இன்று வேறு ஒரு இடத்துக்கு செல்கிறாள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் அவளை பார்த்தான்.

காண்போர் கண்படும் அளவிற்கு,  அரக்கு நிற கூரை பட்டில் மணக்கோலத்தில்  அழகியாய் இருந்தவளது இடது கையை  கெட்டியாக பிடித்துக் கொண்ட சிவா, வெண்பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்ற தன் மாமனையும் உரிமையாய்  மறுகையில் பிடித்துக் கொண்டான்.

“அக்கா… இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு… நீ எப்பவும் இப்படி சிரிச்ச முகத்தோட இருக்கனும்… மாமா ரொம்ப தேங்கஸ் மாமா எங்க அக்காவை நல்லா பாத்துக்கோங்க…” இருவரிடமும் தழுதழுப்புடன் கூறிட,

“சிவா… என்னடா இது சின்ன பிள்ளை மாதிரி கண்ணு கலங்குற… உங்க அக்காவும் நானும் நீ நினைச்சா மாதிரி நல்லா  இருப்போன்‌…” அவனுக்கு உறுதியை அளித்து,  சிவாவின் கண்ணீரை கார்த்திக் துடைத்து விட, ரேவதி சிவாவை அணைத்து கொண்டு கண்ணீரை வடித்தாள்.  

தம்பி இன்று தனையனாய் மாறி நின்று கல்யாணத்தையே முடித்து இருக்கிறானே… தங்களது பக்கம்‌ இருந்த அனைத்து வேலைகளையும் பார்த்தது சிவா தானே, அவன் அன்பில் பாகாய் உருகி நின்றாள் ரேவதி.

பிள்ளைகளின் அன்பை பார்த்த காஞ்சனாவிற்கும் கண்கள் கலங்கியது… 

மகளின் மண வாழ்வு எந்த வித குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என மனதார அனைத்து கடவுளிடமும்  பிராதித்துக் கொண்டவர், மகளின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்து அவளை அணைத்து கண்ணீரை விட்டார்.

“காஞ்சனா, என்னம்மா நீ… அவன் தான் சின்ன பிள்ளை…  நீயும் இப்படி கண் கலங்கி நின்னா ரேவதி என்ன பண்ணுவா…? பாரு எம் மருமகள் எப்படி அழறான்னு  ” 

கல்யாணி ரேவதியின் பெயரை சொல்லி காஞ்சனாவை  சமாதானம் செய்யவும் கண்களை துடைத்துக் கொண்டவர், சிரித்த முகத்துடன் மகளை பார்த்தார். 

சுஜாதாவிற்கு  இப்போதுதான் நிம்மதியாக இருந்தது…  

ரேவதியுடனானா தன் அண்ணனின் வாழ்வு சிறக்க வேண்டும் என ஆசைக் கொண்டாள். 

மகிழ்ச்சியுடன் ரேவதியை தோளோடு அணைத்து கொண்டவள் அண்ணனையும் அனைத்து விடுவித்தாள்.

ரேவதியின் மலர்ந்த முகத்தை வழித்து நெட்டி முறித்த காஞ்சனா, “என் ராஜாத்தி… உன் நல்ல மனசுக்கு எப்பவும் நல்லது தான் மா நடக்கும்… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்… உன் அப்பா இருந்து இருந்தால் உன்னை எப்படி சீறும் சிறப்புமா கல்யாணம் செய்து கொடுத்து இருப்பாரோ அப்படி ஜாம் ஜாம்னு  நடந்து இருக்கு உன் கல்யாணம்… ”  

மகளின் தாடையை பற்றி ஆசையாய் கொஞ்சிட, அன்னையை‌ அன்பாய் அணைத்து தோளில் சாய்ந்துக் கொண்டவளின் பார்வை, இது எல்லாவற்றிற்கும் காரணமாய் இருந்த கார்த்திக்கின்  மேல் காதலாய் படிந்தது…

அதே நேரம் சிவாவிடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக்கும் ரேவதியை பார்க்க இருவரின் பார்வையும் ஒன்றொடு ஒன்று பின்னிக் கொள்ள,  வெட்கத்துடன் பார்வையை திருப்பிக் கொண்டாள் பெண்.

அவளின் வெட்கம் இவனுள் புது வித உணர்வுகளை கடத்தி சென்றது… 

சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து, கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தவர்களை   வாசலில் நிற்க வைத்து, ஆலம் சுற்றி, அழைத்துக் கொண்டவர்கள் ரேவதியை விளக்கேற்ற சொல்ல, கையில் உண்டான காயத்தால்  முழித்தாள் ரேவதி.

“ரேவதி நீ விளக்கை  ஏத்துமா” மூத்த பெண்களில் ஒருத்தி சொல்ல தவிப்பாய் கணவனை பார்த்தாள் அவள்.

“பச் மா…” கார்த்திக் உள்ளே நோக்கி குரலை கொடுக்க, 

“அண்ணா…  அம்மா அப்பா கூப்பிட்டாங்கன்னு போய் இருக்காங்க  இப்போ வந்துடுவாங்க…” என்றாள் சுஜாதா.

“அவங்க இங்க இல்லாமல்  எங்க போனாங்க… கூப்பிடு அவங்கள…” சற்று அழுத்தயாய் கார்த்திக்கின் குரல் வரவும், சுஜா உடனே சென்று தாயை அழைத்து வந்தாள்.

“இதோ வந்துட்டேன் டா… உங்க அப்பா கூப்பிட்டு இருந்தார்… அதான் போயிட்டேன்… ”. என்றபடி வந்தார் கல்யாணி

தாயை அழுத்தமாய் பார்த்தவன், “அப்படி என்னம்மா அவசரம்…? இங்க கூடவே இருங்க மாட்டிங்களா…?” என்றவன் தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்து, மனைவியை பார்த்தான்.

அவன் செய்கைகள் எல்லாம் ஒரு வித கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், தீப்பெட்டியை எடுத்து உரசவும் என்ன செய்ய போகிறானோ என ஆர்வமாக அவனை பார்த்தாள் ரேவதி. 

“என் கையை பிடி ரேவதி”  அவன் வார்த்தைகளில் மந்திரத்திற்கு கட்டுண்டவளை போல  அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு   கார்த்திக்கின் கரங்களை ரேவதி தொட்டுக் கொண்டிருக்க, கார்த்திக்  விளக்கை ஏற்றினான்.

என்ன செய்கிறான் என ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த கல்யாணிக்கு, மகனின் நடவடிக்கை மிகுந்த திருப்தியை தர, மனதார மகனை மெச்சிக் கொண்டவர், சிரித்தபடியே  அவர்களுக்கு பாலும் பழத்தையும் ஏற்பாடு செய்ய சொன்னார்.

ஒவ்வொன்றிற்கும் ரேவதியை தாங்கு தாங்கென்று தாங்கினான் கார்த்திக். 

“இங்கு கொடுங்க பால் பழத்தை…” அவளை தொட விடாமல் தானே அவளுக்கு  புகட்டியவன் பழத்தையும் ஊட்டி விட்டான்… 

இத்தனை பேரின் முன்னிலையில் இப்படி எல்லாம் செய்வது, அவளுக்கு வெட்கத்தை தர, கன்னங்களில் உண்டான சிவப்புடன், குனிந்த தலை நிமிராமல் கணவனின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டு இருந்தாள் ரேவதி.

காலை 7 மணிக்கே  முகூர்த்தம் முடிந்து விட, இப்போது மணி ஒன்பதை தொட்டு இருந்து… 

ரேவதியின் முக வாட்டத்தை கண்டவன் அவளுக்கு பசி என அறிந்து,  “அம்மா அவளுக்கு பசிக்குதுன்னு நினைக்கிறேன்  டிபன் கொடுங்க” என்றான் கல்யாணியிடம்.

கல்யாணி ஆச்சர்யமாய் மகனை பார்க்க, தேவராஜ் அர்த்தமாய் பார்த்தார். 

இதற்கு எல்லாம் முன்னரே அவனின் அக்கரையும் அன்பையும் புரிந்துக் கொண்டவருக்கு, இது அத்தனை பெரிய அதிர்வையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கவில்லை… மாறாக மகனின் மேல் உள்ள மதிப்பு இன்னுமே உயர்ந்தது..

இவ்வளவு காதலையும் மனதில் வைத்துக் கொண்டு மகன் அவளை விட்டு தள்ளி நின்று இருந்திருக்கிறானே ,  தங்களின் தவறான முடிவு அவர்களின் வாழ்வை புரட்டி போடாமல் விட்டதே பெரியது என்பதை உணர்ந்த கல்யாணி, 

“ரேவதி சாப்பிட வாம்மா… கார்த்திக் ரேவதியை கூட்டிக்கிட்டு வாப்பா…’ இருவரையும்  சாப்பிட அழைத்தார்.

தடபுடலாய் தயாரிக்கப்பட்ட கல்யாண விருந்தை  பரிமாற இரண்டு வாழை இலைகளை கல்யாணி சாப்பாட்டு மேசையின் மேல் விரிக்க வர,

அம்மா ஒரு இலை  போதும்…

கல்யாணியை அடுத்த இலையை போட விடாமல் தடுத்தான் கார்த்திக்.

“ஏன்  வேண்டாம்னு சொல்லுற கார்த்திக்… நீயும் சாப்பிட்டு பா… முதல் நாள் இரண்டு பேரும் ஒன்னாதான் தான் சாப்பிடனும்…”  மகனுக்கு கல்யாணி எடுத்து சொல்ல,

“ஒன்னா தான் மா சாப்பிட போறோம்  நீங்க பறிமாறுங்க…”  என்றான் சாதரணமாக,

அவன் வார்த்தைகளில் சிலையாய் சமைந்தாள் ரேவதி. இதுவரை அவன் செய்தது எல்லாம், கூட பரவாயில்லை ஆனால் இப்போது அவன் செய்யப் போவதை நினைத்து கூச்சமாக இருந்தது… சங்கோஜத்துடன் அவனை பார்த்தவள்,

கல்யாணியிடம் “அத்தை ஸ்பூன் இருந்தால் கொடுங்க நானே சாப்பிடுறேன்…” என்றாள் சிறு குரலில்.

“அதெல்லாம் சாப்பிட முடியாதுன்னு உங்க மருமகளுக்கு சொல்லுங்க மா…”  ஒரு இலையில் மட்டும் பாரிமாற சொல்லியவன் அவளுக்கு இட்லியை ஊட்ட வர,

“ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சலாக…

“இப்போ எதுக்கு இந்த ப்ளீஸ் சாப்பிடு “ சற்று அதட்டும் தோனியில் அவன் குரல் வரவும், எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவள் தயக்கத்துடன் அவனை பார்த்தாள்.

“அங்க என்ன பார்வை… ம் வாங்கு…”  அவன் மறுபடி கூறவும் சிறியதாக வாயை திறந்து வாங்கிக் கொண்டவள், “நீங்களும் சாப்பிடுங்க” என்றாள் அவனிடம்.

“நான் சாப்பிட தான் போறேன்.. முதல்ல நீ சாப்பிடு…” என்றவன் அவளுக்கு ஊட்டுவதில் முனைப்பாக இருந்தான்.

ரேவதியின் பட்டு இதழ்களில் ஒவ்வொரு முறையும்  அவன் விரல்கள் உராயும் போது ரேவதியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பாலே டேன்ஸ் ஆடிக் கொண்டிருந்தது… 

அதில் நெளியவும் முடியாமல் கூச்சத்தில் எழுந்து செல்லவும் முடியாமல் உடலை விரைப்பாய் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ரேவதி.

அதை பார்த்தவனுக்கு முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து சிரிப்பு உண்டானது.

அவள் காதோரம் குனிந்து, “ஜஸ்ட் ரிலாக்ஸ் ரேவதி… உன்னை ஒன்னும் நான் கடிச்சி முழுங்கிட மாட்டேன்… சோ கூலா உட்காரு” குறும்பாக கூறி ஊட்டி முடித்தவன்,  தானும் அதே இலையில் உண்டு விட்டு எழுந்து செல்ல,  அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ரேவதி.

ஒரு நாள் முழுவதும் எப்படி சென்றது என்றே அவளுக்கு தெரியவில்லை, எல்லாம் அவன் செய்த மாயங்களாகவே தெரிந்தது அவளுக்கு… மாலை மங்கி இரவு  நிலவுபெண்ணின் வரவுதனில் மெல்ல மெல்ல மனதில் பயம் எட்டி பாரத்தது… 

காஞ்சனா மகளை தயார் செய்து விட்டு சிவாவை அழைத்துக் கொண்டு வீடு சென்றிருக்க, கல்யாணி மருமகளை மகனின் அறைக்கு அனுப்பி வைத்தார். 

மிதமான ஒப்பனையில் பன்னீர் ரோஜா வண்ண மெல்லிய பட்டுப்புடவை பாந்தமாய் அவளை தழுவி நிற்க, நெஞ்சம் படபடக்க கார்த்திக்கின் அறைக்குள் நுழைந்தாள் ரேவதி.

விரும்பி ஏற்றுக் கொண்ட திருமணம் தான்‌ என்றாலும், அவனை தனி அறையில் சந்திக்க போகின்றோம் என்ற நினைப்பே அவளை படபடக்க வைத்தது… 

எப்போது நேரம் கிடைக்கும்  கடித்து குதரலாம் என்று இருப்பவனிடம் தனியே மாட்டிக் கொண்டு முழிக்க போவதை எண்ணி இப்போதே பயப்பந்து வயிற்றுக்குள் உருண்டது.

மிதமான அலங்காரத்தில் மெல்லிய நறுமணம் அறைக்குள் நிலவ, அந்த சூழலே அவளை ஒருவித அச்சத்திற்கு உள்ளாக்கி இருந்தது …

மெல்ல எடுக்களை வைத்து உள்ளே வந்தவளை, யாரும் இல்லா வெறும் கட்டிலே வரவேற்றது… 

நால பக்கமும் கண்களை சுழற்றி பார்த்தவள், பால்கனி கதவு திறந்து இருப்பது தெரிய,  இருந்த இடத்திலிருந்தே எட்டி பார்த்தாள்.

அங்கு தான் இருந்தான்  கார்த்திக்… யாருடனோ போனில் பேசிக்க கொண்டிருப்பது தெரிந்தது. இவள் எட்டி பார்த்த சமயம் அவனும் பார்த்து விட, நாக்கை கடித்துக் கொண்டவள் சட்டென தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

“சரி ரகு நாளைக்கு இடத்தோட டீட்டியல்ஸை வாங்கிட்டு எனக்கு மெயில் பண்ணி விடு…” ரகுவிடம் பேசிவிட்டு போனை அணைத்தவன், அறைக்குள் நுழைய, அவனுக்கு முதுகாட்டி நின்று கொண்டிருந்தாள் ரேவதி.

அவளது பின்னழகில் கிறங்க துடித்த மனதை இழுத்து பிடித்து நிறுத்தியவனுக்கு , அவளது விரிந்த கூந்தலில் தவழ்ந்த மல்லிகையின் மணம்  நாசியில் நுழைந்து மயக்கத்தை கொடுக்க,  தலையை உலுக்கி தன்னை நிலைபடுத்தியவன், “ரேவதி…” என்றான் ஆளுமையான குரலில்.

கார்த்திக் அருகில் நின்றதுமே அவளுக்கு மூச்சை அடைத்தது… 

உள் இழுத்த மூச்சை வெளியே விடவே இல்லை… பயம் எல்லாம் இல்லை இந்த சூழலை எப்படி கடப்பது என புரியாமல் தடுமாறியவளை அவன் அழைக்கவும்,  திரும்பி நின்று அவனை பார்த்தாள்.

பனியில் நிறைந்த ரோஜாவை போல முகம் முழுவதும் முத்து முத்தாய் வியர்வை துளிகள், பூத்து இருக்க,

“ஏய் ரேவதி என்ன ஆச்சி உனக்கு… இவ்வளவு ஏசியிலும் உனக்கு ஏன் முகம் எல்லாம் வியர்த்து போய் ஒரு மாதிரி இருக்கு…?” மேலும் அவளை நெருங்கி நின்று நெற்றியில் கை வைத்து தொட்டு பார்த்தான் கார்த்திக்.

அவன் அருகாமையில்  நெளிந்தவள் “ஒன்னுமில்லை…” என்றிட,, 

“அப்புறம் ஏன் இப்படி வேர்க்குது…?”  என்றான் புரியாமல்.

“தெரியல…₹  என்றவள், ஒரமாய் ஒதுங்கி நிற்க 

அவள் முழுங்கையை பற்றி கட்டிலை நோக்கி அழைத்து வந்தவன்,

 “இப்படி வந்து உட்காரு… உனக்கு இங்க இருக்க பிடிக்கல தானே…” என்றான் அவள் கண்களை  நேராக பார்த்து..

அவள் ஒதுங்கி நிற்கவுமே தன் அருகாமையும்  இந்த அலங்காரமும் அவளுக்கு ஒப்பவில்லை என கார்த்திக் புரிந்து கொண்டான். 

“இல்ல… அப்படி  எதுவும் இல்லை” அவள் தன் நிலையை விளக்கமாக சொல்லுவதற்கு வர, 

“இன்னஃப் ரேவதி… ஏதோ சந்தர்பவசத்தால இந்த கல்யாணம் நடந்ததா நீ நினைச்சி இருக்கலாம்…

சரி அப்படியே நீ நினைஞ்சிக்கோ… 

ஆனா இந்த பந்தம்  இதோட முடிஞ்சி போயிடாது… நாலுபேருக்கு மட்டும் தெரிஞ்ச நம்ம கல்யாணம், இன்னைக்கு ஊரறிய நடந்து இருக்கு… இனி இதுதான் நம்ம வாழ்க்கை..  நாம இந்த வாழ்க்கைக்கு பழகிதான் ஆகனும்… 

உனக்கு  கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்…  ஆனா வேற வழி இல்லை… இதை ஏத்துக்க டிரை பண்ணு… “அவன் விவரமாக அவளை அமர வைத்து கூறவும், 

கட்டாயத்தின் பேரில் நடந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு கார்த்திக்கை தள்ளி விட்டோமே என வருத்தம் கொண்டவள் வேதனையுடன் அவனை பார்த்தாள்.

அவளது வேதனையான முகம் இவனுக்கு வேறு கதைகள் செல்லியது… கண்கள் இரண்டு சிவந்து கண்ணீரில் பளபளத்து கன்னத்தை தாண்டி கழுத்தில் இறங்கிக் கொண்டிருக்க,

“உனக்கு இது ஹர்டிங்கா  தான் இருக்கும் ரேவதி… உன் ஃபீலிங் எனக்கு புரியது… உனக்கான ஸ்பேசை கண்டிப்பா உனக்கு நான் கொடுப்பேன் நீ என்னை நம்பலாம்… அன்ட்…  மோர்ஓவர்

உனக்கு எப்போ என்னை கணவனா பாக்க தோனுதோ அப்போ நமக்குள்ள இயல்பா இது எல்லாம் நடக்கட்டும் ரேவதி…”  என்றான் ஆழ்ந்த குரலில்.

முதல் இரவில் அவன் மட்டுமே பேசிக் கொண்டு இருக்க இவள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள். 

“சரி… காலையில் இருந்து நிறைய சடங்கு சம்பிரதாயம்னு  போயிட்டு இருந்தது… சோ நீ டையார்டா  இருப்ப…  படுத்து தூங்கு…”  ரேவதியிடம் கூறியவன்,  மெத்தையில் கால்களை நீட்டி படுத்து விட்டான்.

அவனை மறுத்து பேசக்கூட முடியவில்லை… ‘என் மனதில் யாரும்  இல்லை நீ மட்டுமே நிறைந்து இருக்கிறாய்’ என உரக்க சொல்லும் சொல்லும் அளவுக்கு அவளுக்கு திடம் வரவில்லை 

கால்கள் துவண்டு விடுவது போல இருந்தது… முயன்று கட்டிலை விட்டு  எழுந்து  வந்தவள், சோபாவில் படுத்துக் கொண்டாள். கண்களில் நீர் நில்லாமல் வழிந்தது… 

முகத்தை கையினால் மறைத்தபடி படுத்திருந்தவன் இன்னும் ரேவதி வந்து படுத்தது போல தெரியாததால் 

இன்னும் இவள்  என்ன செய்கிறாள் என கைகளை விலக்கி பார்த்தான். 

குளியலறை கதவை பார்த்தவனுக்கு அவள் அங்கு இல்லை என்று நன்றாகவே தெரிந்தது. 

கண்களை அறைக்குள் சுழல விட சோபாவில் கைகளை தலையணையாக்கி படுத்திருந்தாள் அவன் மனைவி..

‘இவளை…. என் பக்கத்துல படுத்தா கூட கற்பு போயிடுமா…!!! எவ்வளவு நல்ல எண்ணம் என் மேல’ அவனுக்கு சுறுசுறுவென கோபம் வந்தது.

கோவத்துடன் கட்டிலை விட்டு எழந்தவன், “ரேவதி…* என்று உரக்க குரலை கொடுத்தான். 

அவன் இறைச்சலில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் ரேவதி.

“ஏன் இங்க படுத்து இருக்க”

“அது வந்து… நா இங்கயே படுத்துக்குறேன்…”  என்றாள் அவனை பார்க்காமல் எங்கோ பார்த்து…

*கட்டில்ல வந்து படு…* 

“வேண்டாம்….  நான் இங்கேயே படுத்துகிறேன்…” அவள் பிடிவாதம் செய்தாள்.

“ரேவதி இஸ் பேக் டூ பார்ம் (Revathi is back to form )” மெல்ல முனுமுனுத்தவன், “நீயா எழுந்து வந்து கட்டில்ல படுக்குறியா…? இல்ல நான் தூக்கிட்டு போய் படுக்க வைக்கவா….? அவன் கேட்ட தோரணையில் திகைத்தவள்,  அன்று நடந்ததை நினைத்து பார்த்தாள். வேண்டாம் நானே வந்து படுக்குறேன்…

‘அது…. யாரு கிட்ட..?’  மனதில் எண்ணி வெற்றிக்குறி இட்டுக் கொண்டவன், அவள் உடையை மாற்றாமல் அப்படியே வந்து படுக்கவும்,

அவள் உடையினை சுட்டி காட்டி “என்ன இது…?”என்றான்.

“ம்… இது தெரியல புடவை” என்றாள் அவளும் கணவனை  போலவே,

மூச்சை இழுத்து வாய் வழியே விட்டவன் “போ… போய் முதல்ல ரீபரெஷ் ஆகிட்டு டிரஸை மாத்திட்டு  வந்து படு இப்படியே படுத்த உனக்கு தான் கஷ்டம் தூக்கமும் வராது…” என்றான் அவள் உணர்வு புரிந்து,

அவளுக்கு இதை மாற்றிக் கொண்டாள் என்னவென்று தோன்றியது… ஆனால் இதை எப்படி மாற்றுவது…? கணவனுடன் இணக்கமாய் இருந்தால் கூட பரவாயில்லை தாங்கள் எதிரும் புதிருமாய் அல்லவா நின்றிருக்கிறோம், 

இடது கையால் புடவை பின்னை கழற்ற முயன்றாள் ஒரளவுக்கு சுலபமாக இருப்பது போல தோன்றியது, சரி கழட்ட வரும்‌ என்று நினைத்தவள், உடை மாற்றிக் கொள்ளும் அறைக்கு சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்திருந்தவன் கட்டிலில் சென்று அமர்ந்து விட்டான். 

உடை மாற்றி வருகிறேன் என சென்றவள் 15 நிமிடங்கள் ஆகியும் வெளியே வரும் அறிகுறியே தெரியாததால், கதவின் பக்கம் சென்று “ரேவதி… ரேவதி…” என்றான் சத்தமாக.

“ம் சொல்லுங்க… “உள்ளே இருந்து கணவனுக்கு குரலை கொடுத்தாள் அவள்.

“என்ன சொல்லுங்க… உள்ள இவ்வளவு நேரம் என்ன பண்ற..?”  

“பச் கொஞ்சம் இருங்க…” எரிச்சலாக வத்தது பதில்.

“நீ என்ன பண்றான்னு கேட்ட என்னை சும்மா இருங்கன்னு செல்ற உள்ள என்ன தான் நடக்குது” என்றான் சற்று கோபமாக,

மெல்ல கதவினை திறந்தாள் ரேவதி, அவளை ஆராய்ச்சியாக பார்த்தவனுக்கு அவள்  உடை மாற்றிய அறிகுறியே தெரியவில்லை  

“டிரஸ் மாத்தாமல் இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த…?” 

“டிரஸ் கழட்ட தான் டிரை பண்ணிட்டு இருந்தேன்” அவனை பார்க்க சங்கோஜப்பட்டுக் கொண்டு தரையை பார்த்துக் கூறினாள்.

அவளையும் அவளது உடையையும் பார்த்து,  நொடியில் புரிந்துக் கொண்டவன், 

“நான் கழட்டி விடுறேன் வா* என்றவன் அருகில் வர,

அதிர்ந்தவள் என்ன நீங்களா வேண்டாம் இது அப்படியே இருக்கட்டும்…. சட்டென ஒரு அடியை பின்னால் வைத்து தள்ளி நின்றாள்.

“அறைஞ்சேன்னா…  நான் ஒன்னும் ஆசையில உன்னை கூப்பிடல… என் பொண்டாட்டிக்கு புடவை கழட்டனும் கொஞ்சம் வாங்கன்னு வெளியே போய் யாரையும் கூப்பிட முடியாது அதை முதல்ல புரிஞ்சிக…” என்றான் சற்று கோபமாய் .

“இல்ல  இதுவே இருக்கட்டும்… நான் இப்படியே இருக்கேன் ஒரு நைட்டு தானே ஒன்னும் தெரியாது…” அவள் இஷ்டத்திற்கு  அடித்து விட்டாள் ரேவதி.

“உன் அழகை பார்த்து உன்னை அப்படியே  முழுங்கிடுவேன்னு நினைச்சியா…?  இன்னும் நீ என்னை பொறுக்கி ரேஞ்சுக்கு தான் வைச்சி இருக்க  இல்ல…” சுவற்றில் கையை ஓங்கி குத்தியவன் திரும்பி செல்ல எத்தனிக்க,

“கொஞ்சம் பின்னை கழட்டி விடுங்க…”  என்றாள் இறங்கிய குரலில், அவன் சொல்வதிலும் நியாயம் இருக்க, இதற்கு மேல் அவன் கோபத்தை  கூட்டி வெறுப்பை சம்பாதிக்க விருப்பமில்லாமல் அவளே இறங்கி வந்தாள்.  

பின்னை  கழட்டி விட கார்த்திக் ரேவதியின் அருகில் வரவும், 

“கொ… கொஞ்சம் இருங்க… இப்படியே வேண்டாம் இந்த துணியால கண்ணி கட்டிக்கிட்டு கழட்டி விடுங்களேன்… பீளீஸ்…” அவள் நளினமாக கேட்க,

“உன் சாரி பின்னை கழட்ட ஹெல்ப் பண்ண வந்தா இவ்வளவு ஸ்டெப்ஸ் பாலோவ் பண்ணனுமா அவ்வளவு நம்பிக்கை என்மேல எங்க விட்டா பாஞ்சிடுவோன்னு பயமா…  அப்படி நம்பிக்கை இல்லாம எதுவும் வேண்டாம்…” அவன் முறுக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.

அவன் பேச பேச இவளுக்கு என்னவோ போல் இருந்தது அவன் மீது நம்பிக்கை இருக்கிறது தான் ஆனால் வெட்கம் வேறு வந்து தொலைக்கிறதே அதை என்ன செய்வது… விரும்பியவனே என்றாலும்  அச்சமாக இருக்க, ஒரு நிமிடம் தயங்கி  பின் தெளிந்தவள், 

“ஒரு நிமிஷம்…” அவன் நின்று திரும்பி பார்த்தான்,

“கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க…* என்றாள் உள்ளே சென்ற குரலில்…

“ம்…” அவள் அருகே வந்தவன் முகத்தில் எந்த வித உணர்வுகளையும் காட்டாது  அவள் தோள் பட்டியில் குத்தி இருந்த பின்னை எடுக்க விரல்கள் தொடவும் அந்த  தொடுகையில் கால்கள் கூசி முதுகு தண்டில் சில்லென்று உணர்வு தாக்க  கண்களை இறுக்கமாக மூடி நின்றிருந்தாள் ரேவதி.

அவளின் ஒரு கையால் புடவையை பிடித்து கொண்டாள். இரண்டு மூன்று ஊக்குகள் புடவையை சுற்றி குத்தியிருக்க அனைதையும் அகற்றி விட்டு எந்த வித உணர்வுமின்றி அவளை பார்த்தான். அவன் பார்வையை சந்திக்க முடியவில்லை தலையை வேறு பக்கம் திரும்பிக் கொண்டவள்.

“ரொம்ப தேங்க்ஸ் நீங்க போங்க நான் புடவை மாத்திக்கிட்டு வரேன்” என்றாள் அவனிடம்.

“அவ்வளவு தானா…!! இதுக்கா இவ்வளவு நேரம் ஆக்கிட்டு இருந்த… சரி புடவை பின்னை கழட்டியாச்சி நீ போட்டு இருக்க பிளவுஸை எப்படி கழுட்டுவ என்றான் சந்தேகமாக…”

அவன் கூறவும் தான் ஞாபகம் வந்தது ‘அய்யோ… இப்போழுது ரவிக்கையை வேறு அவிழ்க்க வேண்டுமே… பேசாமல் ஒரு சுடிதாரை போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்’ எப்படி இதை கழட்டுவது என யோசனையானவள், 

“எப்படியோ கழட்டுறேன் நீங்க போங்க…” அவள் அனுப்புவதிலேயே குறியாக நின்றாள்.

“இங்க பாரு ரேவதி… நான் உதவி பண்ணதான் வந்து இருக்கேன்.. i think this is not easy to open with your hands so,”

“அதுக்கு … “ இவள் அதிர்ந்து கேட்க

“ நான் கழட்டி விடுறேன்..” அலுங்காமல் குலுங்காமல் சாதாரண சொல்ல

திகைத்து அவனை பார்த்தவள் “இல்ல வேண்டாம்…” என்றாள் சட்டென

“உன்னை‌ பார்த்து எனக்கு எந்த ஃபீலிங்கும் வரலை… உன்னை தொட  ஆசையும் இல்ல போதுமா… அப்புறம்  எதுக்கு நோ சொல்ற… ஐ பிராமிஸ் யூ உனக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தேன்…” என்றான் இப்போது அழுத்தமாக,

அவனுக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாலும் அவளுக்கு அவ்வாறு சொல்ல முடியவில்லை ஆயிரம் இருந்தாலும் …  ஒரு ஆண்மகன் முன்னால் அப்படி நிற்க கூசியது. 

“ஏன் உனக்கு ஏதாவது  என்மேல பீஃலீங்கஸ் இருக்கா…? “ அவன் வேண்டுமென்றே  தன் தாடையை தடவியபடி கேட்க,

அவன் கண்களை‌ பார்த்துக் கொண்டே அவள்  இல்லை என்று தலை அசைக்கவும்,

 கல்லையும் மண்ணையும் பார்ப்பது போன்று அவளை பார்த்து வைத்தவன், ரவிக்கையின் ஊக்குகளை கழட்டினான்… கைகளில் பதட்டமில்லை, கண்களில் ரசனை இல்லை, முகத்தில் எந்த வித உணர்ச்சிகளும் இல்லை, உயிரில்லாத பொம்மையை தொடுவது போல அவளை தொட்டு ஊக்குகளை கழட்டி விட்டவன்,  

“டிரஸ் மாத்திக்கிட்டு வா ரேவதி… இனி உன்னால முடியும் போது மட்டும் புடவை கட்டு… நீ புடவை தான் கட்டனும் னு எந்த அவசியமும் இல்லை…” தன் கம்பீரம் குறையாத‌ குரலில்  கூறியவன்,  அங்கிருந்து சென்று விட்டான்.

இப்போது தான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது… அவன் முன் தான் நின்றிருந்த தன்  நிலையை எண்ணி கூச்சத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள், 

அவன் விரல் தீண்டியும் தீண்டாமல் சென்ற இடங்கள்‌ எல்லாம் குறுகுறுப்புட்டி, அவளை வெட்கத்தில் ஆழ்த்தியது…  

அவன் தொடுகையில் உடலில் ஏற்பட்ட உணர்வுகள் அவளை புது உலகிற்கு கொண்டு செல்ல, ஆழி பேரலையாய் அவளை வாரி சுருட்டிக் கொண்டான் அவன் ஒற்றை செய்கையில். 

பெண்மைக்கே உண்டான வெட்கத்துடன் கண்ணாடியில் முகம் பார்க்க  செம்பருத்தி பூவாய் சிவந்து நின்றாள் ரேவதி… 

வெளியே செல்லவோ, அவன் முகத்தை பார்க்கவோ முடியவே இல்லை…

எத்தனை மணி நேரம் இதற்குள்ளையே முடங்கி இருக்க முடியும், அடிவயிற்றில் ஏதோ பிசையும் உணர்வு, 

முகத்தை குளிர்ந்த நீரில் அடித்து கழவினால் நன்றாக இருக்கும் போல இருந்தது… தன் உடைகளை களைந்து நைட்டிக்கு மாறியவள். வெளியே செல்ல தயாரானாள்.

காதலித்து கரம் பிடித்தவள், தன் முன்னால் அப்படி ஒரு நிலையில் நின்றிருக்க கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அவளுக்கு உதவி விட்டு அறையிலிருந்து வெளியே வந்த கார்த்திக்கின், நிலை  தான் அதை விட கொடுமையாக இருந்தது.

ஆழ்ந்து இழுத்த மூச்சை,  வெளியே விட்டவன், தன் தலையை கோதிக் கொண்டான்.

மனைவியின் நினைவில் கண்கள் தன்னால் சுகமாக மூடி கொள்ள,   இதழ்கள்‌ மென்மையாக புன்னகை சிந்தியது…  வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாத பந்து ஒன்று உருண்டு அவனை இம்சித்துக் கொண்டிருந்தது…

மலரவளின் அங்கங்களை தீண்டியும் தீண்டாமல் மனைவியின் மென்மையை உணர்ந்தவனுக்கு,  ஒருவிதமான பரவச உணர்வு ஆட்கொண்டு அவனை பாடாய் படுத்தியது… அவனது ஆண்மை அவளது பெண்மையை உணர தவித்தது.

‘இப்படி ஹாட்டா ஒரு பொண்டாட்டிய பக்கத்துல வைச்சிக்கிட்டு… ம்…. என் பாடு இனி திண்டாட்டம் தான் ’ பெருமூச்சு ஒன்று எழு  தன் மூச்சுகாற்றின் உஷ்ணம்  உணர்ந்தான் கார்த்திக். 

இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஆசையும் காதலும் இருந்தாலும், ஒருவரை ஒருவர் சரியாய் தவறாக புரிந்து கொண்டு,  தங்கள் இணைகளின் காதலை உணராது இருந்தனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro