🌊அலை 8🌊

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரு கைகளாலும் தலையை தாங்கி பிடித்தபடி  தன் அலுவலக அறையினில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அவன் அறைக்குள் நுழைந்த ரகு  கார்த்திக் அமர்ந்திருக்கும் நிலையை பார்த்து விட்டு "சார் உங்களுக்கு என்ன சார் ஆச்சி உங்க உடம்புக்கு ஏதும் முடியலையா?... "  அவனிடம் பேசியபடியே ரகு, உதவியாளரை அழைக்க இன்டர்காமின் ரிசிவரை எடுத்தான்.

"ஆமா ரகு…  தலைவலி தெறிக்குது ஸ்டராங்கா ஒரு காபி சொல்லு… மீட்டிங் முடிஞ்சி அப்பா வந்துட்டாரா?...."  கார்த்திக் பதிலுக்காக ரகுவை பார்த்தான்

உதவியாளரை அழைக்க இருந்தவன் அவன் தலைவலி என்று கூறியதும் "காபி சொல்லிட்டேன் சார், இப்போ வந்துடும்…  எம்.டி. சார் வந்துட்டாரு மீட்டிங்ல இருக்காரு…  மீட்டிங் முடிய இன்னும் அரைமணி நேரம் ஆகும்" கூடுதலாக தகவலை உரைத்து ரகு வெளியேறிட, அடுத்த ஐந்து நிமிடத்தில் நாசியை நிறைத்தது காபியின் நறுமணம்.

காபியின் நறுமணம் அவன் தலைவலியை சற்று மட்டுபடுத்தி  இதம் அளித்திருக்க,  "சார்" அனுமதி கேட்டுக்கொண்டே சுவற்றில் அடித்த பந்தை போல மறுபடி கதவை திறந்து உள்ளே வந்தான்  ரகு.

ரகுவின் அழைப்பில் கேள்வியாக அவனை பார்த்தான் கார்த்திக். "உங்களை பார்க்க மிஸ் நிஷாந்தி வந்திருக்காங்க சார்… ரிசப்ஷன்ல வைட் பண்ண சொல்லி இருக்கேன்". அவன் பார்வைக்கு பதில் உரைத்திருந்தான் ரகு.

"வாட்" நிஷாந்தி வந்திருப்பதை அறிந்ததும் அசூயையாக உணர்ந்தவனுக்கு விட்ட தலைவலி மறுபடி ஒட்டிக்கொண்ட உணர்வு.

அவளால் தானே வீட்டிற்கு செல்லாமல் அலுவலகமே கதி என கிடந்தான். இங்கும் வந்து நின்றால், அவனும் என்ன தான் செய்வான். பாவம் அதட்டி பேசி மனதையும் உடைக்க முடியவில்லை

"சார்" ரகு சற்று சத்தமாக அழைக்க தன் சிந்தனையில் உறைந்து நின்றவனை கலைத்தது அவன் குரல்.

தன் பதிலுக்காக காத்து நிற்பவனை பார்த்த் கார்த்திக் "  ரகு… அப்பா கிளம்பிட்டாரா" குரலில் ஏதோ ஒரு அசௌகரியம். அவனுக்கு இந்த விஷயம் தந்தை வரை செல்லவதில் விருப்பமில்லை…

"எஸ் சார் … நியூ பில்டிங் கன்ஷ்ட்ரக்ஷ்ன் விசிட்டிங்க்கு சார் போய் இருக்காரு…   அப்படியே வீட்டுக்கு கிளம்பிடுவாங்க…. இன்னைக்கு ஷெட்டியூல் அவ்வளவு தான்"  ரகு தான் குறித்து வைத்திருந்ததை அவனிடம் தெரியப்படுத்தினான்.

"ஓகே ரகு, நீங்க நிஷாந்தியை உள்ளே அனுப்புங்க" அரைமனதாகவே அவளை பார்க்க அனுமதி அளித்தான்.

'ஓகே சார்" . அவன் சென்ற அடுத்த ஐந்து நிமிடங்களில் அழகு பதுமையாக கார்த்திக்கின் அறைக்குள் நுழைந்திருந்தாள் நிஷா. அவள் வெளீர்  நிறத்திற்கு எடுப்பான  கருமை  நிறத்தில்  தங்க இழைகள் மின்னிய ஜார்ஜெட் புடவையை ஒற்றை பட்டையில் அணிந்திருந்தாள். கழுத்துவரை புரண்ட அடர்ந்த கூந்தலை விரித்து விட்டபடி  அவனை நோக்கி வந்தவள், "ஹாய் கார்த்திக்...
பீவர் இப்போ எப்படி இருக்கு "  நெற்றியில் கை வைத்து அவனை பரிசோதிக்க முயன்றாள் நிஷா.

சட்டென இரண்டு எட்டுக்களை பின் வைத்து அவள் தொட முடியாத அளவு தள்ளி நின்றவன்,  "நௌ ஓகே நிஷாந்தி… அ ஆம் ஆல்ரைட்…  நீங்க எங்க இங்க" கேள்வியாக அவளை பார்த்தபடியே, அவள் அமர்வதற்கு தன் முன்னாள் இருந்த இருக்கைகளை காட்டினான்.

கார்த்திக்கின் விலகலில் சட்டென மொத்த உற்சாகமும் வடிந்தததை போல உணர்ந்தவள் "என்ன கார்த்திக்  இது… உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அத்தைக்கிட்ட கேட்டு சாப்பாடும்  டேப்லெட்டும் கொண்டு வந்தா…  ஏன் வந்தேன்னு கேக்குறிங்க…?  நான் இதை உங்ககிட்ட கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கல… " முகத்தை உம்மென்று வைத்து கொண்டு அவன் அருகே வந்து சிணுங்கினாள் நிஷா.

வந்த முதல் நாளில் இருந்தே அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அவளிடமிருந்து சற்று ஒதுங்கியே இருந்தான். இருந்தும் வலிய வந்து இப்படி அதிக உரிமையுடன் பேசுபவளிடம் என்ன சொல்வதென்று புரியவில்லை.. தன் தங்கைக்காவும் சஞ்சய்க்காகவும் அவளிடம்  முகம் காட்டாமல் இருக்க  பெரிதும் முயன்றவனுக்கு, இது  சோதனை காலம் போல விடாமல் துரத்தினாள் நிஷாந்தி.

"சலிப்புடன் அவளை பார்த்தவன் ஓ… நிஷாந்தி காமான்… நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க… நான் நல்லா தான் இருக்கேன் இதோ இப்பக் கூட ஒரு சைட் விசிட் இருக்கு ரகு கூட போகனும்…ம்… யோசிப்பதை போல பாவனை செய்தவன் "ஒன்னு செய்யுங்க நிஷாந்தி நீங்க கொண்டு வந்ததை நீங்களே எடுத்துட்டு போயிடுங்களேன்… எனக்கு நேரம் ஆகிடுச்சி இதை சாப்பிடுற அளவு நேரம் இல்லை" அவளை அங்கிருந்து அனுப்புவதில் குறியனான்.

"இல்ல இல்ல நீங்க  சாப்பிடுங்க கார்த்திக்…  உடம்பு சரியில்லாம எப்படி வெளியே சாப்பிடுவிங்க அதுவரை நான் இங்கேயே  இருக்கேன்… சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும் …" அவள் பிடிவாதமாக அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு எரிச்சலாய் இருந்தது.

"சாரி நிஷாந்தி… எனக்கு பையர்ஸ் கூட லஞ்ச் மீட் தான் இருக்கு,.. அதை அவாய்ட் பண்ண முடியாது எனக்கு டைம் ஆகிடுச்சி உங்களுக்கு கார் அரெஞ்ச் பண்றேன் நீங்க கிளம்புங்க… பையர்ஸ் எனக்காக லோகேஷன்ல வைட் பண்ணிட்டு இருப்பாங்க"  அவளை தவிர்க்க நம்பும்படியாக சில காரணத்தை கூறினான்.

"கார்த்திக்"  நிஷா இறுகிய குரலில் அழைக்க, அவள் கூறுவதை கூட காது கொடுத்து கேட்காமல் இன்டர்காமை எடுத்து  ரகுவை அழைத்தான்.

அடுத்த 5 நிமிடங்கள் உள்ளே வந்த ரகுவிடம் "ரகு… இவங்களை வீட்டுல விட சொல்லி டிரைவர் கிட்ட சொல்லிடுங்க பார்த்து சேஃபா கூட்டிட்டு போக சொல்லுங்க…" .

"ஒகே சார்.." ரகு நிஷாந்தியை பார்த்தான். அவள் முகம் இறுகி போயிருந்தது. கார்த்திக்கை விரும்புகிறாள் தான் ஆனால் அதற்காக  இது போன்ற உதாசினங்களை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை… உச்ச கட்ட அவமானமாய் உணர்ந்தவள், கார்த்திக் அவளிடம் பேசுவதற்கு முன்னமே விறுவிறுவென அந்த இடத்தை விட்டு அகன்று விட, ரகு அவள் பின்னே சென்றான்.

ஆறுதலாய் இறுக்கையில் சாய்ந்த கார்த்திக்குக்கு இப்போது தான் இயல்பாய் மூச்சு விட  முடிந்தது.

…..

செஞ்சாந்தை பூசியது போல  சிவந்திருந்த  மேக கூட்டங்களுக்கு மத்தியில் ஆரஞ்சு நிற சூரிய பந்து சிறிது சிறிதாக சமுத்திரத்திற்குள் மூழ்கும் தருணம், சிவாவை  மருத்துவ மனைக்குள் இருந்து வெளியே அழைத்து வந்திருந்தாள் ரேவதி. 

கைகளிலும் தலையிலும் கூட்டலும் பெருக்கலுமாய் பிளஸ்திரியால் ஒட்டியிருக்க சாலையில் இறங்கி இருவரும் நடந்தனர்.

"அக்கா…"

"சொல்லு சிவா"

"அம்மா ஏன்க்கா இப்படி இருக்காங்க….?" அலுப்புடன் ரேவதியை பார்த்தான் சிவா.

"எப்புடிடா…?"  சிரிப்புடனே அவனை பின் தொடர்ந்தாள் ரேவதி.

அவள் சிரிப்பை பார்த்து செல்லமாய் முறைத்தவனோ "தெரியாத மாதிரியே கேக்குறியேக்கா… அம்மா பண்றது எல்லாம் எப்படி வெறுப்பா இருக்கு தெரியுமா…?  நீ இல்லாத நேரமா பாத்து வந்து வந்து பேசிட்டு போறாரு அந்த ஆளு... செம கடுப்பாகுது அக்கா… நான் ஏதாவது பேசினா அம்மா திட்ட ஆரம்பிச்சிடுறாங்க "  ஆதங்கத்துடன் அலுப்பாக வெளிப்பட்டது அவன் வார்த்தைகள்.

விழிகளை ஆசுவாசமாய் மூடித்திறந்தவளோ "அது தெரிஞ்ச கதை தானே அவங்க பண்ற அலப்பறைய தாங்க முடியாமத்தான்  நொந்து போயிருக்கேன்… சே…  எப்படி டா அந்த ஆளை நம்புறாங்க நம்ம அம்மா" நெற்றியில் தட்டிக் கொண்டவளுக்கு கஜாவை நினைக்கையில் உஷ்ணம் மண்டைக்கு கூடி பெயர்ந்து இருந்தது.

"சின்ன பசங்க  நமக்கே தெரியுது கா அந்தாளு நடிக்கிறான்னு… அம்மாவுக்கு அது கூட தெரியலை பாரேன்…  பாசம் இப்படியா கண்ணை மறைக்கும் இரண்டு சொட்டு கண்ணீரை விட்டா போதுமாக்கா"  தெளிவில்லாத தாயை நினைத்து கோபம் எட்டி பார்த்து அவனுக்கு…

சிவாவின் கோபத்தை தணிக்க எண்ணிய ரேவதி " விடு சிவா…. அவங்க எது பண்ணாலும் அது நம்மகிட்ட நடக்காது நீ கவலைப்படாத படிப்பை மட்டும் பாரு" சிறுவனாக இருந்தாலும் ஆதரவாய் தோள் கொடுக்கும் தம்பியை நினைத்து பூரித்து போயிருந்தவள், அவனுடன் ஆட்டோவிற்காக காத்திருந்தாள்.

"அக்கா" எதையோ யோசித்தவன் தயக்கமாக அவளை‌ அழைத்தான்.

அலைபேசியில் நேரத்தை பார்த்த ரேவதி,  "இப்போ என்னடா" ஆட்டோவிற்காக பார்த்தபடியே அவனிடம் பேசினாள்.

"இப்போ நான் நல்லாதானே கா இருக்கேன்… நாளைல இருந்து நானே பேப்பர் போட போறேன் கா…" அவன் தயங்கி தயங்கி உரைத்தான்.

அவனை ஏறிட்டு பார்த்தவள் "ஏன் சிவா இப்போ என்ன அவசரம்… எனக்கு அப்படி‌ ஒன்னும் இந்த வேலை கஷ்டமா இல்ல… நான் பாத்துக்குறேன் டா" அவன் தலைமுடியை ஆதுரத்துடன் கலைத்தாள்..

அக்காவின் கையே பற்றிக்கொண்டவனோ "நீ தூங்கறதே கொஞ்ச நேரம் தான் டேன்ஸ் பிராக்டிஸ், வேலைன்னு எவ்வளவு கஷ்டப்படுற இதுவும் கூட சேர்ந்தா நீ ரொம்ப டயர்டா ஆகிடுவ….  பாரு இப்போவே களைச்சி போயி தெரியுற" மெலிந்த தேகத்துடன் இருந்த தன் தமக்கையை   அக்கறையுடன்  பார்த்தான் சிவா.

அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவளோ "அடேய்…. பெரிய மனுஷா… நீ கூடதான் படிக்கிற பையன், காலைல பேப்பர் போட்டுட்டு ஸ்கூல் போற… வந்து அண்ணாச்சி கடைக்கு போயிட்டு நைட்டு 10மணிக்கு வர்ற அப்புறம் எப்போ படிப்ப… அதுக்கு தான் சொல்றேன், இந்த வேலையை நானே பாக்குறேன்… நீ காலை ல எழுந்து படி…  அது போதும்… நம்மல செந்த பந்தம்  கை விட்டாலும்,  நாம படிச்ச படிப்பு கை கொடுக்கும்… இப்போ நீ ப்ளஸ் டூ படிக்கிற இதுல எடுக்குற மார்க்கு வைச்சி தான் உனக்கு தலை எழுத்தே நிர்ணயம் ஆகும்… அதனால நீ படிப்புல மட்டும் ஃபோக்கஸ் பண்ணு பெரிய மனுஷா…  மத்ததை நான் பாத்துக்குறேன்…"  அவனை சம்மதிக்க வைக்க முயன்றாள் ரேவதி.

"அக்கா….  நான் படிச்சிடுவேன்… " அவன் நம்பிக்கையுடன் கூறினாலும் கண்டிப்புடன் சிவாவை பார்த்தவள்

"இல்ல சிவா நான் சொல்றதை நீ கேளு… படி சொன்னா படிக்கனும் அவ்வளவு தான்… நீ பலதையும் யோசிச்சி மண்டைய போட்டு குழப்பாத " சட்டென பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து,  தங்களை கடந்து செல்லும் ஆட்டோவை நிறுத்தி, அவனை ஏற்றி வீட்டில் இறங்க சொல்லியவள் டேன்ஸ் பிராக்டீஸ் நடக்கும் இடத்திற்கு சென்றாள்.

……

"சார் நுங்கம்பாக்கம் சைட்டுக்கு போறதுக்கு முன்னாடி,   நான் எம் டி சாருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடுறனே?" மென்று விழுங்கியபடியே கார்த்திக் எதிரே நின்றிருந்தான் ரகு

"வாட் ரகு… இவ்வளவு நேரம் என்ன சொல்றேன்… காமான் குயிக் கிளம்பலாம்… நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன் இப்போ விஷயம் அவருக்கு சொல்லத" சைட்டில் விபத்து என்பதை அறிந்தவன்  அவசரமாக காருக்கு விரைந்திட,   தேவராஜிற்கு கூறவில்லையே என பதற்றத்துடன் ரகுவும் கார்த்திக்கின் காரில் ஏறினான்.

"அங்க நிலமை எப்படி இருக்கு போன் பண்ணி கேளுங்க ரகு"  நொடிக்கு நொடி இறுகியது கார்த்திக்கின் முகம்

"ஓகே சார்" சைட்டில்  இருக்கும் மேனேஜருக்கு அழைத்த ரகு நிலைமை விசாரித்து போனை வைக்க, "என்ன…? என்ன சொன்னாங்க..?"  பதட்டத்துடன் வார்த்தைகளை உதிர்த்தான் கார்த்திக்.

"கொஞ்சம் கிரிட்டிக்கல் தானா…
ஹெவி பிளட் லாஸ் சார்" கவலையுடனே வந்தது ரகுவின் குரல்.

"ஓ… ஷிட் இப்படி நடக்குற வரைக்கும்‌ என்ன பண்ணிட்டு இருந்தாங்களாம்" கார்த்திக், கோபத்தை கட்டுப்படுத்தி கேட்க முயன்றான்

"சார் ஹெவி வெய்ட் எடுக்க முடியாம " ரகு காரணம் கூறும் முன்னமே அவனை தடுத்தவன் நோ….. நோ… ரகு எதுவும் எக்ஸ்பிளைன் பண்ண வேண்டாம்… நேரா ஆஸ்பிட்டலுக்கு வண்டியை திருப்புங்க… பிளெட் கிடைச்சிதான்னு கேளுங்க"... கட்டளையாக உரைத்து சீட்டில் சாய்ந்தவனுக்கு  உடல் நெருப்பாய் தகிக்க ஆரம்பித்து இருந்தது.

"சார் உங்களுக்கு என்ன பண்ணுது?" அவன் சிவந்த விழிகளை கண்டு ரகு வினவிட, நத்திங் ரகு அயம் குட் "  சிவந்து களைத்த தன் விழிகளை  மூடிக்கொண்டான் கார்த்திக்.

🌊🌊அலை அடிக்கும் 🌊🌊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro