12. பிரிவு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)

-பாரதி

-----------------------------------------------------------
"எனக்கு கல்யாணமாகி டைவோர்ஸ் ஆச்சு ராஜ்," ஜனனி சாதாரணமாக பதில் அளித்தாள். அவளின் வயதை வைத்து ஒரு வகையில் நான் எதிர்பார்த்தது தான் என்றாலும் அவளின் குரலில் இருந்து கேட்கும்போது அதிர்ச்சி குறையவில்லை. ஜனனி போன்ற ஒருவளை யாருக்கு விவாகரத்து செய்ய விருப்பம் வரும்?

"Abusive relationship ஆ?" அதுவாக தான் இருக்கும்.

"ச்சே ச்சே.. அவரைப் பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கு பிறகு தான் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்."

"மற ஏன்?"

துக்கம் கலந்த சிரிப்புடன் ஜனனி தொடர்ந்தாள், "அமெரிக்கால வளர்ந்ததால அத்தனை தமிழ் நண்பர்கள் இல்ல. 23 வயசுல physiotherapist ஆனதும் 24 வயசுல arranged marriage. 4 months பழகிட்டு ஒருத்தர் ஒருத்தர பிடிச்சதும் தான் கல்யாணம் நடந்துச்சு."

"அவர் பேரு?"

"கார்திக். 4 வருஷ ஏஜ் கேப். வாழ்க்க நல்லா தான் போனுச்சு. அப்புறம் 26 வயசுல குழந்தைக்கு try பண்ணோம், ஒன்னும் நடக்கல. அப்புறம் 28 வயசுல டாக்டர் கிட்ட போனோம். ஒரு பிரச்சனையும் இல்ல குழந்த பெத்துக்க இன்னும் நேரம் இருக்கு, try பண்ணுங்கன்னு சொன்னாங்க. ஆனா கார்திக்கு டென்ஷன் ஆச்சு. IVF try பண்ண சொன்னான். வருஷத்துக்கு ஒரு IVF நு ஓடுனுச்சு வாழ்க்கை. Hormone injections, scans, medication, consultation நு ஒரு வாழ்க்கை மாற்றம். கரு உண்டாகினாலும் தங்குற stageல difficulties. கடைசியா ஒரு IVF try பண்ணுவோம்னு 8 மாசத்துக்கு முன்னாடி கார்த்திக் சொன்னான்."

ஏதோ விபரீதம் நிகந்தது என எனக்கு புரிந்தது.

"கடைசி தடவன்நு சொன்னப்போ எனக்கு புரியல ராஜ். நான் ஹாஸ்பிடல்ல consultation, injection நு காத்திருந்த நேரத்துல அவனோட அம்மாவும் அக்காவும் இன்னொரு கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க. IVF failed நு வந்தப்போ அடுத்த நாளே டைவோர்ஸ் பண்ணிடலாம்நு சொல்லிட்டார். அந்த வாரமே அவர் அம்மா வீட்டுக்கு போய்ட்டார். எங்க வீட்ல நான் மட்டும் தனியா ஒரு வாரம் அழுதுட்டு இருந்தேன். அழுகையின் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகளில் சுயமரியாதை அடங்கியிருக்கும். Divorce papersஇல் sign பண்ணேன். அடுத்த ரெண்டு மாசத்துல அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டார். நான் இங்க வந்துட்டேன்."

"ஜனனி, 7 வருட மணவாழ்க்கைய பிரிய எப்படி 7 நாட்களில் முடிவு பண்ண முடிஞ்சது? இந்த relationshipகாக போராடலையா?"

ஜனனி இதற்கும் சிரித்தாள், "நம்மள் வேணாம்னு ஒருத்தர் விட்டுப்போனா அவங்கள எப்படி பிடிச்சி வைக்க முடியும்? அது இருவருக்குமே கஷ்டம் அப்படி சேர்ந்து வாழ்ந்தாலும் அது ஒரு பொய். நானே என்னைய ஏமாத்திக்கிறது இல்லயா?" ஜனனி சொல்லிவிட்டு அவள் தட்டையோடு என்னுடையதையும் எடுத்தாள், "கழுவி வச்சிடுறேன்."

"இல்ல, I'll wash my own plate," நான் ஆட்சேபித்தேன்.

"எங்க, போய் எழுந்திரிச்சி தட்டைய கழுவு பார்ப்போம்."

என் முகத்தில் அசடு வழிந்தது. அவள் புன்னகைத்துவிட்டு இரு தட்டைகளையும் எடுத்துக்கொண்டு wash basinநோக்கி சென்றாள். உண்மையை உடைப்பதும் அதுவும் வலிக்காமல் உடைப்பதும் ஜனனிக்கே உரிதான கலை.

ஜனனியிம் வார்த்தைகள் மனதில் மீண்டும் மீண்டும் உடைந்த recorder போல் ஓடின. அவ்வளவு எளிதாக 7 நாட்களில் 7 வருடத்தின் அனைத்தையும் தொலைத்துவிட்டாள். வினோதினி தான் நினைவுக்கு வந்தாள்.

"6 வருஷம் ராஜ்! அடுத்த மாசம் engagement ராஜ! இப்போ வந்து பிரிஞ்சிடலாம்னு சொல்ற. நம்ம காதலை ஏத்துக்காத எங்க அம்மா அப்பா இப்போ சந்தோஷமா எல்லார்கிட்டயும் அடுத்த மாசம் நிட்சயதார்த்தம் நு சொல்லிட்டு இருக்காங்க. நான் என்ன சொல்வேன் அவங்க கிட்ட?" வினோதினியை அறியாமலேயே கண்ணீர் கசிந்துக்கொண்டிருந்தது அவளின் கண்களிலிருந்து.

தன் புறங்கையால் கன்னத்தைத் துடைத்தவள், "சரி, அவங்கள விடு. நீ தான் என் உலகம்னு 6 வருஷமா நினைச்சுட்டு இருந்தேனே அதை என்ன பண்றது? எல்லாத்தையும் உன் கிட்டயே சொல்லி பழகிட்டு. இப்போ பிரிஞ்சிடலாம்னு நீ சொல்றத நான் யார்கிட்ட போய் சொல்லி அழுறது?"

என் காலரைப் கோபத்தில் பிடித்தவளின் விரல்கள் துக்கத்தில் இருந்த சக்தியையும் இழந்து என் நெஞ்சில் வந்து நின்றன. முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள் வினோதினி. என் கைகள் கார் steering wheelஐ இறுக்கமாகப் பிடித்தபடி இருந்தன. அவளைப்போல் வெளியில் அழுக முடியாமல் ஆண்மை தடுத்தது. அவளை இத்தருணத்தில் ஆறுதல் சொல்வது குற்றமாய் தோன்றியது, பிரிவில் இன்னும் விஷம் ஏற்றுவதாய் தெரிந்தது எனக்கு.

"6 வருஷம் தோனாதது ஏன் இப்ப தோனிற்கு ராஜ்? ஏன் ராஜ் இப்டி?" வினோதினி வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை தின்றது.

[Wow.. Early update from me haha! இந்த chapter எழுதும்போது எனக்கே தெரியாம எழுத்துகள் கொட்டின, that's why. Did you notice, last chapter was வரவு this one is பிரிவு? People enter and leave our lives with such ease and yet we have no say over it. Everything I write has a purpose;)

How do you go from baring your soul to being strangers?]

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro