14. மனப்பாடம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng



வினோதினியின் விரல்கள் அவனின் கைரேகையை மீண்டும் வரைந்தன. அவனை முழுமையாக தன் நினைவில் ஏற்றிக்கொள்ள அவள் முயன்றுக்கொண்டிருந்தாள். அவள் மீண்டும் மீண்டும் தன் கைரேகையை தொடுவதைக் கண்டு ராஜ் சிரித்தான்.

"என்ன பண்ற?"

"மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்."

"சரி, கைரேகை எதுக்கு? என் முகத்தை மனப்பாடம் பண்ணலாம்ல," எனக் குறும்பாய் கேட்டான்.

வினோதினி ஏறெடுத்துப் பார்த்துவிட்டு எப்பொழுதும் போல் சிரிக்காமல் சற்று தொய்வான குரலில், "மரணத்திலும் இந்த முகம் மறக்காது டா."

ராஜிடமிருந்து இதற்கு எவ்விதமான சாமர்த்திய பதிலும் வரவில்லை. அவளின் ஏக்கம் இவனின் ஆழ்மனதிலிருந்தும் வெளிவர தூண்டினாலும் அவன் கஷ்டப்பட்டு தனக்காக இல்லாவிட்டாலும் அவளுக்காக தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

இருவரும் காலேஜின் ஒரு ஓரத்தில் இருந்த physics பில்டிங்இன் பின்னால் படிகட்டில் அமர்ந்திருந்தனர். எக்ஸாம் எல்லாம் முடிந்து ஹாஸ்டல் ஆட்கள் மட்டும் ஆங்காங்கே இந்த வெயில் காலத்தில் சொற்பமாய் தென்படும் மேகங்கள் போல் சிதரியிருந்தனர். முதலில் வெறுத்து பின் விரும்பி தங்கிய ஹாஸ்டல் இலிருந்து கிளம்புவதற்கு இன்னொரு வாரம் தேவைப்பட்டது. நான்கு வருடமாய் சேகரித்த வகைவகையான பொருட்களும் சுவற்றில் ஒட்டிவைத்திருந்த படப் போஸ்டர்களும் கண்ணாடி மாட்ட சுவற்றில் அறைந்த ஆணியும் என்றோ காணவில்லை என கைவிடப்பட்ட வேட்டியும் என ராஜின் ஹோஸ்டேல் அறை அவனது நான்காண்டு வாழ்க்கையை பொக்கிஷமாய் உள்ளடக்கி வைத்திருந்தன. வினோதினியும் இவனின் நான்காண்டு காலேஜ் வாழ்க்கையை அவளின் கைகளுக்குள் பொத்திவைத்திருந்தாள்.

"என்னை விட்டு ரொம்ப தூரம் போறியோ நு தோணுது."

"கோவையிலிருந்து தஞ்சாவூர் தூரம் தான் போறேன் வினோ."

"இல்ல ராஜ். அதவிட ரொம்ப தூரம் போறியோ நு பயமா இருக்கு. என்னைய மறந்துட மாட்டியே."

"மறப்பேன் என நினைத்தாயோ."

வினோ சிரித்தாள். அவள் சில மாதமாய் அதிகம் முணுமுணுத்த பாடல் அது. "இந்த வாய் மட்டும் இல்லன்னா என்னைக்கோ நாய் கவ்விட்டு போயிருக்கும்."

"thank you."

வினோதினி அவன் தோள் மேல் சாய்ந்தாள். திறந்து வைத்திருந்த அவன் கரத்தை இப்போது தன் கரத்தோடு சேர்த்து கோர்த்தாள். "வீட்டுல சீக்கிரம் சொல்லிடனும். இல்லன்னா அவங்க மாப்பிள பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க."

"வேணும்னா உன் கூட பஸ் ஏறி உன்னோடே வீட்டுக்கு வந்துடுரேனே. பேசிடலாம்."

"கொழுப்பு. கொஞ்சம் கொஞ்சமா பேசணும். நான் பார்க்குறேன்."

வினோதினியின் இப்பதிலைக் கேட்டு ராஜின் இதய துடிப்பு சற்று குறைந்தது. அவளுக்காக கூல் ஆக பதில் சொன்னாலும் உள்ளுக்குள் பயம் இருக்க தான் செய்தது அவனுக்கு. வேலை வெட்டி எதுவும் இல்லாமல் எப்படி இவள் வீட்டில் போய் நிற்பது. வேலை இருந்தால் மட்டும் நின்ருவிட முடியுமாடா வெண்ண என மூளை கேள்வி கேட்டது. ஆம், நிற்க முடியாது. வினோ சற்று பண பலம் உள்ள குடும்பத்தில் பிறந்த பெண். அதுவும் அண்ணன் தம்பி மூவரில் இவளின் தந்தைக்கு மட்டும் தான் மகாலட்சுமி பிறந்திருந்தாள். ஆனால் வினோதினி புத்திசாலி. கொஞ்சம் கொஞ்சமாக பேசலாம் என்றால் இதை எப்படி பெற்றோரிடம் எடுத்துச் சொல்வது என அறிந்தவள். பிடிவாதம் அதிகம். இவள் சாதித்துவிடுவாள்.

ராஜ் அப்படி அல்ல. கொஞ்சம் தயங்கியவன். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொண்டதில்லை. காட்டவேண்டிய சிக்கலும் ஏற்படவில்லை. உண்மைக் காதல் ஜெயிக்கும் என நண்பர்கள் சொன்ன மந்திரத்தை மனப்பாடமாய் வைத்திருந்தான்.

இரவும் பகலும் சந்திக்கும் அந்திமாலை நேரம். பூக்களும் இலைகளும் இரவில் வெட்க ஆரம்பித்தன. ராஜ் அவனின் bag ஐ தூக்கினான். இருவரின் கனத்த மௌனம் தொண்டையை அடைத்தது. பஸ் ஸ்டான்ட் இலிருந்து சற்று தள்ளி இருந்த மரத்தின் அடியில் இருவரும் நின்றனர். எத்தனை முறை அங்கு நின்று ஒருவரை ஒருவர் கடைக்கண்ணால் பார்த்து சிரித்தனர். சுற்றுமுற்றும் இருந்தவர்களுக்கு தெரியக்கூடாது என மெனக்கெட்டு கடைக்கண்ணால் பார்த்த பார்வைகளை இம்மரமும் பார்த்திருந்தது. தரையை பார்த்துக்கொண்டிருந்த விநோதினியை ராஜ் கூப்பிட்டான், "பஸ் வந்துட்டு வினோ."

நிமிர்ந்த அவளின் கண்கள் ஈரமாய் இருந்தன. போய்ட்டுவர்றேன் என அவள் கூறியது கூட விம்மலில் பாதி தொண்டைக்குள் சிக்கியது. பஸ் இவர்களின் பிரிவை பொருட்படுத்தாமல் கரிசனம் காட்டாமல் வேகமாய் மறைந்தது.

ராஜ் bag ஐ எடுத்துக்கொண்டு ஆட்டோ ஒன்றை பிடித்தான். "ட்ரைன் ஸ்டேஷன், 6.30மணி தஞ்சாவூர் ரயில புடிக்கணும். சீக்கிரம் போங்கண்ணே."

(ரொம்ப நாளாச்சுல எழுதி. Poittu varren, she whispered அப்டின்னு எழுல்தலாம்னு நினைச்சு கூகிள் translate போட்டா இரகசியம் நு வருது ஹாஹா.

ஏன் ராஜ் தஞ்சாவூர்? ஏன்னா நாங்க தஞ்சாவூர்ல ;) எங்க கதைல எங்க ஊரையும் போடுவோம்ல.

Also, there are two Mani Ratnam movie references in this chapter. கண்டுபிடிச்சீங்களா ?

Happy New Year! 2018 உங்களுக்கு எப்டி இருந்துச்சு? நிறைய படிச்சீங்க, எழுதுனீங்க நு நம்புரேன். Best wishes for 2019! )



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro