3. காத்திருப்பு-1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

டிஸம்பர் மாத இறுதி நெருங்க கிறிஸ்துமஸ் பார்ட்டி என என் டீம் அவ்வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று ஒரு barகு கிளம்பியது. கம்பெனி காசில் மெனுவில் இருந்த எல்லாவற்றையும் ஆர்டர் செய்துவிட்டு கலகலப்பாய் பேசிக்கொண்டே டின்னர் முடிந்தது. டின்னருக்குப் பின் ஜப்பான் ஆட்கள் sakae ஆர்டர் பண்ண மது போதையில் ஜப்பானிய மொழியில் உளற ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவு நேரம் பணிவாக என்னைக் கருத்தில் கொண்டு ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தவர்கள் இப்போது ஜப்பானிய மொழியில் ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணத் துவங்கினர். பல கப் sakae மறைந்ததாலும் ஒரே கப்பை மருந்துபோல் கொஞ்சம் கொஞ்சமாய் அருந்திக்கொண்டிருந்தேன். அவர்களின் உரையாடலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டேன் நான். நாங்கள் இருந்த பார் vintage school theme இல் கட்டப்பட்டிருந்தது.

Washroom என்று சொல்லிவிட்டு டேபிளிருந்து விலகியதும் மீண்டும் உயிர் வந்தது போல் ஓர் உணர்வு. அடைத்த கூண்டு திறக்கப்பட்டு இப்போது மனம் போல் barஐ சுற்றி பார்க்க ஆரம்பித்தேன். மது போதையில் தள்ளாடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு இந்தியன் பாரை அலசி ஆராய்வதை பெரிதாய் நினைக்கவில்லை. பாரின் ஓர் ஓரத்தில் சுவர் முழுவதுமாக இடிக்கப்பட்டு wine bottles அதனினுள் அடுக்கப்பட்டிருந்தன. பாட்டில்களின் நடுவே சில புத்தகங்களும் காட்சி பொருளாய் அமர்ந்திருந்தன old school themeக்கு கட்டுப்பட்டு. சிரிப்பு தான் வந்தது. புத்தகங்கள் இன்னொருவரின் தவம் ஆனால் தவத்தின் வரம் கிடைத்ததோ வாசகனுக்கு. இப்படி தூற்றுவதற்கு புத்தகங்களுக்கு பதிலாக அட்டைகளை அடுக்கிவைத்திருக்கலாம்.

அங்கே ஒரு சுவற்றுக்கு கறு பெயிண்ட் பூசி கறும்பலகையாக மாற்றி chalk pieceஉம் வைத்திருந்தார்கள். உலகெங்கும் குடி போதையில் என்ன கிறுக்குவார்களோ அது தான் இங்கும் கிறுக்கப்பட்டிருந்தது, bitch, fuck you என்றும் சில பெயர்களும். உலகெங்கும் மக்களின் ஒரே சிந்தனை என்று சிரித்துக்கொண்டே chalk piece ஒன்றை கையில் எடுத்தேன். Jacket sleeveஐ இழுத்து சுவரின் ஒரு பகுதியை அழித்துவிட்டு விரல்கள் சுயமாய் காவியம் படைக்க ஆரம்பித்தன.

தத்துரூபமாய் வரையும் திறமையை கலையுலகில் மட்டம் தட்டுவர். புதிய ஓவியங்களுக்கே பாராட்டும் புகழும் குவிப்பார்கள் ஆனால் சாமானியர்களிடம் எளிதில் போய் சேர்வது இந்த தத்துரூப ஓவியங்கள் தான். இடது கையின் விரல்கள் வேகமாய் சுவர் முழுக்க ஓட வலது கை போட்டியாய் பழையவற்றை அழித்து இடம் உருவாக்க என்னையே தொலைத்துவிட்டேன் அந்த 20 நிமிடங்களில். தன்னை தொலைப்பதற்கும் நினைவுகளில் தொலைவதற்கும் மீண்டு வர இயலா இருட்டுக்கு அழைத்துச் செல்ச்வதற்கும் தானே கலை. என்னை சுற்றியிருந்த ஜப்பான் இப்போது மதுரையின் டீக்கடையாக மாறியது.

இதைப் போல் தான் அவளுக்காக ஒரு முறை காத்திருந்தபோது டீக்கடையில் விலையை அழித்துவிட்டு கரும்பலகையில் வரைய ஆரம்பித்துவிட்டேன். காலேஜ் அருகில் இருந்த டீக்கடை சூதானமாக இளைஞர்களைக் கவர அருகில் அமர்ந்து சாப்பிட இடம் கட்டியிருந்தது. டேபிள் சேர் போட்டு சுத்தமாகவும் வைத்திருந்தார்கள் அவர்கள். இது 1990களில் என்பதால் இப்பொழுது இருக்கும் starbucks, coffee dayவில் சந்தித்துக்கொள்ளும் இளையர்களின் முன்னோடி இந்த டீக்கடையோடு ஒட்டியிருந்த இடம் தான்.

"ஏலேய்..நீ பாட்டு அழிச்சுட்டு சின்ன புள்ள மாதிரி வரைஞ்சுட்டு போற," டீக்கடையில் பால் ஆத்திக்கொண்டிருந்தவர் கேட்டார்.

"விடு பையன...திரும்ப எழுதுறது பெரிய விஷயம் இல்ல. அவன் வரையட்டும்," கல்லாவில் இருந்த டீக்கடைக்காரர் சிரித்தார். இவை யாவும் என் காதில் விழுந்ததே தவிர மூளைக்கு சேரவில்லை காரணம் நான் மூழ்கியிருந்தேன் என் உலகில். அவள் உள்ளே வந்து என் தோளைத் தொட்டதும் தான் சுய உணர்வு திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தேன். இரண்டு டீ சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்தபின் இத்தனை நிமிடங்கள் நின்று வரைந்ததன் விளைவை உணர்ந்தேன். கால் வலித்தது, விரல்கள் மரத்துவிட்டன ஆனால் சுற்றியிருப்போர் கரும்பலகையை வியப்புடன் உற்று நோக்கினர்.

"டீக்கடைய அச்சுஅசலா வரைஞ்சுட்ட!" ஆச்சரியத்துடன் கடையில் உரிமையாளர் சொன்னார்.

"ஆமாய்யா! என்னையும் வரைஞ்சிருக்காப்புல," பால் ஆத்தியவர் இப்போது சிரித்தார்.

"பொழுது போகலையா?" வினோதினி கிண்டல் செய்தாள்.

"ஆமாம் பொழுது போகல தான்." டீயைக் கையில் எடுத்தேன்.

"இவ்ளோ நேரம் ஆனதும் நீ கிளம்பி போயிருப்பியோன்னு பயந்துட்டேன். நல்ல வேளை, நீ வரைஞ்சுட்டு இருக்க."

அவள் என் ஓவியத்தை பாரட்டவும் இல்லை அதனால் சுற்றியிருப்போர் அடைந்த சின்ன மகிழ்ச்சியையும் அறியவில்லை. மாறாக அதை வெறும் பொழுதுபோக்காக நோக்கினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro