4. காத்திருப்பு-2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு நாள் பிரிவின் வலியைவிட அதன் பிறகு நினைவுகளை எதிர்த்து தினசரி போராடுவது வலிமிக்கது. எப்போது எதனால் நம்மைத் தாக்கும் என்று அறிய இயலாது ஆனால் ஒரு நிமிடம் திக்குமுக்காட வைக்கும்.

அவளுக்காக காத்திருந்த அந்த அழகிய தருணங்கள் மனதில் உதித்தன ஆனால் ஒவ்வொரு இனிப்புக்கும் ஈடாய் கசப்பான நினைவும் இருக்கிறது. இன்பத்துக்கு ஈடாய் துன்பமும் ஆனால் அவளுக்கு ஈடாய் இதுவரை ஒன்றும் இல்லை.

அடுத்த வாரம் க்ளாஸில் பேசிவைத்ததுபோல் அன்று மாலை காலேஜ் முடிந்ததும் டீக்கடையில் சந்திக்க எத்தனித்தோம். ஆனால் நண்பர்களிடமிருந்து நழுவ முடியாமல் அவர்களுடன் அரை மணி நேரம் அரட்டையடித்துவிட்டுஹாஸ்டல் வார்டனை பார்க்கவேண்டும் என பொய் சொல்லிவிட்டு டீக்கடைக்கு ஓடினேன்.

உள்ளே நுழைந்தபோது கையோடு பற்றியிருந்த Titan watch மாலை 5.30ஐ எட்டியிருந்தது. கதிரவன் தனது பயணத்தின் இறுதி பகுதியை அடைந்திருந்தான். சற்று மங்கலான அந்த டீக்கடையில் தேடியபோது அவளைக் காணவில்லை. காற்றில்லா பலூன் போல் உள்ளம் சுருங்கியது. வெளியில் வந்து டீக்கடையின் மரத்தடியை நோக்கியபோது அவள் அங்கே தன் bagஐ கட்டியணைத்தபடி நின்றுக்கொண்டிருந்ததைக் கண்டு அவளை நெருங்கினேன்.

"டீக்கடைல உன்னை காணோம்னதும் ஒரு sadness. திரும்புறேன் நீ இங்க நிக்குற!"

"ஆமாம், ஒரு பொண்ண்ணு எவ்ளோ நேரம் தனியா டீக்கடையில் உட்கார்ந்து இருப்பா? ஏன் லேட்?"

"பசங்க நிக்க வச்சுட்டானுங்க. அவனுங்களுக்கு தெரியாம வர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு. சரி வா காபி வாங்கலாம்," என சொல்லிவிட்டு டீக்கடைக்கு நடக்க திரும்பினேன்.

"ஒன்னும் வேணாம். அடுத்த தடவ சொன்ன டைம்க்கு வரும்போது சாப்டலாம்," அவள் பேசிவிட்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.

"ஹே வினோ! சாரி மா!" கத்திக்கொண்டே அவள் பின்னால் ஓடினேன்.

வினோதினி அருகில் நடந்துவரும் என்னை பார்க்காமல் முகத்தை நேராக வைத்தாள்.


"தலைவி தலைவனுக்காக காத்திருப்பது பெரும் இன்பம் தெரியுமா? காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் அல்லவா?" குறும்பாய் கூறினேன்.

"உன்ன அரை மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா நிற்பியா?" அவள் கேள்விகனைகளை தொடுத்தாள்.

போன வாரம் தான் அரை மணி நேரத்துக்கு மேல் காலம் நகர்வதை மறந்து அவளுக்காக காத்திருக்க்கையில் டீக்க்டை போர்ட்டில் வரைந்துக்கொண்டிருந்தேன் ஆனால் இதை இப்போது சொல்வது நல்லதல்ல என என் மரமண்டைக்கே தோன்றியது.

"வினோதினி!" அவள் கரத்தைப் பிடித்து நடப்பவளின் வேகத்தைக் குறைத்து எங்களிருவரின் விரல்களை இணைத்தேன்.
"யுகங்கள் கரைந்திருக்கும்
நிலா தேய்ந்திருக்கும்
தடயமாய் ஒரு முற்றுப்புள்ளி மிஞ்சியிருக்கும்
நட்சத்திரங்கள் நகர்ந்திருக்கும்
எல்லைகளை கடந்திருக்கும்
வானின் மை வெளுத்திருக்கும்
நீ எனை சேர்வதற்குள் இத்தனை
எத்தனை நிகழ்ந்திருக்கும்?" என்றோ எழுதிய கவிதை இன்று உறுதுணையாய் நின்றது.

"சொல்லு, நாம் இருவரும் இப்படி விரல் சேர்த்து நடப்பதற்கு நிலா தேய்ந்து தடயமாய் ஒரு புள்ளி மிஞ்சும்வரை உனக்காக காத்திருப்பேன். காத்திருப்பதில் தான் பாதி காதல் இருக்குடா," காதலின் அழகியலை எடுத்துவைத்தேன்.

அவளின் கண்களிலிருந்து கோபம் குறைந்தது. "இப்டி பேசியே மயக்கிடு," அவள் சிரித்துக்கொண்டே தன் கரத்தை என் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள். "முடிஞ்சா நாளைக்கு coffeeகு மீட் பண்ணலாம்," அவள் சொல்லிவிட்டு மீண்டும் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தாள். பிடிவாதத்தை இவள் விடுவதாய் இல்லை ஆகவே எதுவும் சொல்ல முடியாமல் எரிச்சலுடன் அங்கேயே நின்றேன். பசங்களைக் கலட்டிவிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் எவனாவது ஹாஸ்டலில் பைக்கில் இறக்கிவிட்டுருப்பான். அவள் ஒரு பக்கம் போக நான் மறுபக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

"Wow Raj! Never knew you could draw man!" ஜப்பான்காரன் sakae beer glassஉடன் வந்து நின்றான். மனம் நிகழ்காலத்தில் இருக்கிறோம் என்பதை நினைவூட்டியது.

"Thanks dude! You want me to draw you?" சிரித்துக்கொண்டே கேட்டேன்.

"Can you?" அவன் ஆவலுடன் கேட்டான்.

"Of course," என்று பதிலளித்துவிட்டு வரைய ஆரம்பித்தேன். தத்துரூபமாய் வரைவது கலையுலகில் பாராட்டப்படாவிட்டாலும் எப்போதும் மக்களிடம் சேரும் கலை இது. நமக்கு பிடித்த பாடலோ படமோ இடமோ நமக்கு பிடித்தவர்களுக்கும் பிடிக்கவேண்டும், என் விழிகள் ரசித்ததை அவளின் விழிளும் ரசிக்கவேண்டும் என்று அதிகம் மெனெக்கெடுகிறோம். ஆனால் நான் வரைந்ததை ஜனனி பெரிதாய் பாராட்டாமல் இருந்தது வெளியில் சொல்லாவிட்டாலும் மனதில் வருத்தத்தை அளித்தது. ஆனால் அது அப்போது. இப்போது அவளிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கிறேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro