கொஞ்சல்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Restaurantகுள் நுழைந்ததும் எல்லோரின் கண்களும் எங்களை அலசி ஆராய்ந்தன. பல முறை பழக்கப்பட்டவனாய் எதையும் கண்டுக்கொள்ளாமல் மிடுக்காக waiterஐ அழைத்தான் நித்தின். Waiter ஒரு டேபிளை கைக்காட்டிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்து ஆர்டர் எடுக்கிறேன் என கூறிவிட்டு மறைந்தான். நித்தின் அந்த wooden நாற்காலியை நகர்த்துவதற்கு சற்று சிரமப்பட்டான். உதவிக்கு எழுந்த என்னை கையசைத்து உட்காருமாறு வற்புறுத்தினான். வைத்த கண் நகராமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் நேற்று காலையில் நித்தின் ஆபீஸினுள் அடியெடுத்து வைத்ததும் இப்படிதான் பார்த்தார்கள்.

நித்தின் வரும் முன் zzzzz என்ற இயந்திர சத்தம் அவன் வருகையை அறிவித்தது. அவன் சக்கர நாற்காலியில் வருவான் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிநவீனமான அந்த சக்கர நாற்காலி அவன் சுயமாக பயணம் செய்ய வழிவகுத்தாலும் அதைப் பார்த்ததும் பரிதாபம் தோன்றுவது மக்களின் மனதில் பதியப்பட்ட விஷயம். அதுவும் அவனுடைய இளமை பரிதாப பார்வைகளை அதிகப்படுத்தியது. நித்தின் தன் மேல் உள்ள கவனத்தை வேறு வழியில் திசைத் திருப்ப எல்லோரிடமும் நகைச்சுவையாகவும் நன்றாகவும் உரையாடினான்.

தன் சக்கர நாற்காலியை நகர்த்தி அமர்ந்ததும் நித்தின் தான் பேசினான், "உண்மைய சொல்லனும்னா நான் வெளிய சாப்பிடுவதை avoid பண்ணுவேன். பட் உங்ககூட பழகுன கொஞ்ச நாட்களில் ரொம்ப comfortable feeling வந்துட்டு ."

"ப்ரெண்ட் நு சொல்லிட்டு வாங்க போங்கன்னு எப்டி கூப்டலாம். Relax நிட்ஸ்," என அவன் பெயரைச் சுறுக்கி கூப்பிட்டேன் நட்பின் வெளிபாடாய். சிறிது நேரத்தில் உணவு வந்ததும் சாப்பிட ஆரம்பித்தோம்.

"என்ன மித்திரன், வாட்ச்சையே பார்த்துட்டு இருக்க?"

"இல்ல, Wife ஏதோ பிரச்சனை, கொஞ்ச நேரம் பார்க்கனும்னு சொன்னாங்க. அதான் வந்துட்டாங்களான்னு" என்று சொல்லி முடிப்பதற்குள் sliding doors திறக்க அவள் நுழைவாயிலில் நின்றதைக் கண்டுக்கொண்டேன். கையைத் தூக்கி சைகைக் காட்டியதும் அவள் எங்களை நோக்கி நடந்தாள். எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாமல் ஏதோ யோசனையில் இருந்தது என் அக்கறையை அதிகப்படுத்தியது.

"நான் சொன்னேன்ல UKவிலிருந்து வந்துருக்கார்னு, நித்தின்," என நித்தினைக் கைக் காட்டினேன். மரியாதைக்கு புன்னகைத்துவிட்டு அமர்ந்தாள். அப்போது waiter பில் உடன் டேபிளுக்கு வந்ததும் புதிதாய் அமர்ந்திருந்த அவளை கண்டு, "உங்களுக்கும் அவங்கள மாதிரி லெமன் ஜூஸ் கொண்டு வரவா மேம்" எனக் கேட்டான்.

யாரும் பதிலளிக்கும் முன் நித்தினே, "இல்ல வேண்டாம். Avocado milkshake கொண்டு வாங்க," என்றதும் நான் அதிர்ச்சியில் மௌனமாய் இருந்தேன். லெமன் ஜூஸ் குடித்தால் அடுத்த நாளே சலி வந்துவிடும் என அவள் அதைத் தவிர்ப்பது பற்றி நித்தினுக்குத் தெரிய வாய்ப்பில்லையே எனக் குழம்பினேன். என் கேள்விக்குப் பதில்சொல்லும் வண்ணம் நித்தின், "எத்தன தடவ தான் எல்லா mrs உம் லெமன் ஜூஸ் ஆர்டர் பண்றது? கொஞ்சம் வித்தியாசமா avocado try பண்ணட்டும்," என சொல்லிவிட்டு "பேசிட்டு இருங்க, பில் கட்டிட்டு வர்ரேன்," என கிளம்பினான்.

இப்போது என் கவனம் அவளின் பக்கம் திரும்பியது. சக்கர நாற்காலி மெதுவாய் ஊர்ந்து செல்வதைப் பார்த்ததும் தான் என் முட்டாள்தனம் புரிந்தது. என்னுடன் காரில் வந்த நித்தின் டேக்ஸியில் தனியாக செல்வது அவனுக்குப் பெரும் நெருக்கடியாய் இருக்கும்.
"சாரி மா. உன்னைய இங்க கூப்டுட்டு நான் கிளம்பனும் என்பத மறந்துட்டேன். நித்தினை எப்டி டேக்ஸியில் அனுப்புறது? நீதான் பார்த்தியல்ல. வேணும்னா கொஞ்ச நேரம் பேசலாம். சாப்பிடுறியா?"

"இல்லங்க, நீங்க சொல்றது புரியுது. பரவால்ல நான் பார்த்துக்குறேன். நீங்க கிளம்புங்க."

"என்னாச்சு?" விசாரித்தேன்.

"வீட்டுக்கு வந்ததும் சொல்றேன். அவர் வெயிட் பண்ணுவார். கிளம்புங்க."

"கோபத்துல கிளம்ப சொல்லலையே?" அவள் முகம் பொழிவின்றி இருந்தது.

எனக்காகப் புன்னகைத்தவள், "நிஜம்மா இல்ல. வீட்டுக்கு சீக்கிரம் வந்துருங்க."
அவள் மறுத்தும் அவளுக்காக லஞ்ச் ஆர்டர் செய்துவிட்டு நித்தினுடன் மீண்டும் ஆபீஸ் சென்றேன்.

அவளுக்காக 5 மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டேன். கதவைத் திறந்ததும் அவள் sofa மேல் கன்னத்தை வைத்து அணைக்கப்பட்டிருந்த டிவியில் தெரிந்த தன் பிம்பத்தை வெறிச்சோடி பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம் அணிந்திருந்த அதே குர்தா ஆனால் கசங்கியிருந்தது.

"ஸ்கூலில் ப்ரெண்ட்ஸ் gang இல் சேர்க்க மாட்டேங்குறாங்க ரேஞ் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ண சொல்ற," கிண்டலாகக் கேட்டுக்கொண்டே ஷூவைக் கழட்டினேன்.

என் வருகையை உணர்ந்தவள் எழுந்து sofaவில் அமர்ந்தாள். அவளருகில் அமர்ந்து அவளைக் கட்டியணைத்து, "என்னாச்சு" என்று வினவினேன். பெருமூச்சுடன் நடந்தவற்றை குழந்தை போல ஒப்பித்தாள். அவளின் மெல்லிய விரல்களை மடக்கியும் விரித்தும் கதைக் கேட்டேன் நான். மனிதனைப் படைத்த இறைவன் விரல்களின் இடையில் இடைவெளியைப் அமைத்தது இன்னொருவரின் விரல்கள் சேர்ந்திட தான்.

"உன் ப்ரெண்ட் கிட்ட கேட்டியா என்ன நடந்துச்சுன்னு?"

"அவளுக்கு மீட்டிங் இருந்ததால அவளுக்கு ஒண்ணும் தெரியலயாம்."

"குரைக்கும் நாய்கள் கடிப்பதில்லை. அவங்க பேசுவதை காதில் போட்டுக்கொள்ளாத."
லேசாக அவள் தலையைத் தட்டி, "கேட்குதா இல்லயா?"

ஆஆ என்று  மட்டும் பதிலளித்துவிட்டு பேச்சைத் திசைதிருப்பும் வண்ணம் திடீரென நிமிர்ந்து என் கன்னத்தைத் தொட்டாள். புருவத்தைச் சுறுக்கினாள்.

"என்ன இது பூனைக்குட்டி மாதிரி கன்னத்தை தடவுற?"

"ஒண்ணு க்ளீன் ஷேவ் பண்ணுங்க இல்ல கொஞ்சமா தாடி வச்சுக்கோங்க. அதென்ன ரெண்டும் கெட்ட இந்த stubble? நல்லா இல்லப்பா."
முகத்தைச் சுளித்துவிட்டு sofaவிலிருந்து எழுந்தாள்.

எழுந்து போனவளின் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து அவளின் கன்னத்தை என் இரு கரங்களால் பற்றி கன்னத்தோடு கன்னம் உரசினேன். Stubble குத்தியதால் நழுவ முயன்றவளை வலுக்கட்டாயமாகப் பிடித்துவைத்தேன். தன் கன்னத்தைத் தேய்த்துக்கொண்டே என்னை பார்த்து முரைத்துவிட்டு உடை மாற்ற நகர்ந்தாள். பின் அவள் டீ போட கிட்சனுக்குள் நுழைந்தபோது தான் நியாபகம் வந்தது.

"நாளைக்கு லஞ்ச் சமைக்கும்போது நிட்ஸ்க்கும் சேர்த்து சமைச்சிடேன்." பாத்திரம் சத்தம் திடீரென நின்றது. "அவன் இந்தியாவுல தனியா இருக்கான் அதுனால ஹோட்டல் சாப்பாடு தான் சாப்டுட்டு இருக்கான்," என விளக்கினேன். என் கோரிக்கையைச் செவி சாய்த்ததை உணர்த்த ம்ம்ம் என மட்டுமே பதிலளித்தாள். இன்னொருவருக்கு சமைப்பதை அவள் எவ்வாறு எடுத்துக்கொண்டாள் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. "Extra ஒரு பிடி அரிசிய கொட்டு. ஏதோ காலேஜ் பெஸ்ட் ப்ரெண்ட் திரும்ப கிடைச்ச மாதிரி ஒரு சந்தோஷம்! எங்க ரெண்டு பேருக்கும் similar personalities." சொல்லும்போதே நித்தினின் முகம் நினைவுக்கு வந்து சிறு புன்னகைப் ஒளிர்த்தது என் முகத்தில். ஆபீஸ் பிரச்சனையால் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லையோ என எண்ணி அவளைச் சம்மதிக்க வைக்க அவள் கன்னத்தை முத்தமிட்டு, "நித்தினுக்கும் சமைச்சுடு மா" என்றுக் கொஞ்சிவிட்ட்டு உடை மாற்ற சென்றேன்.
***
[Next week is chapter 10! Wow! இவ்ளோ எழுதுவன்னு நினைக்கல. Thank you for your support!
Before chapter 10(இன்னும் ப்ளான் பண்ணல பட் ஏதாவது தோனாது;) ) what's your favourite chapter? I loved writing chapters 1&2: வீடு, சுடிதார்! எனக்கு ரெண்டும் ரொம்ப பிடிச்சிருந்தது:) ]

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro