13

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இறைவனால் முன்கூட்டியே கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்ட ஒரு சினிமா போன்றதுதான் வாழ்க்கை. நாம் யாரை எதற்காக, எப்போது சந்திக்கின்றோம் என்பது நமக்கு புரியவே புரியாது. சில இடங்களில் அது புரியவும் கூடாது. அது புரிந்தால் மனிதன் தன்னை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றுவிடுவான்.

கண்களில் கண்ணீருடன் இருக்கும் பிருந்தாவை கண்ட விக்ரமுக்கு, அவளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பல இருந்தன. அதில் அவளின் கண்ணீருக்கான கேள்வி முதன்மையானதாக இருக்கவில்லை. பூவரசன்குலம் போகும் வழியில் எங்குமே அவர்கள் உணவுக்காக நிறுத்தவில்லை. பிருந்தாவும் எதுவும் கூறாததால் அவர்கள் வழியில் எங்குமே நிற்காமல் பூவரசன்குலத்திற்கே சென்றனர். ஆனால் ஹோட்டலுக்கு வரும் வழியிலும் அவள் எங்குமே நிறுத்த சொல்லவில்லை. காலையில் தொடங்கிய பயணம் எந்த ஒரு இடைநிறுத்தமும் இல்லாமல் சென்றதால் விக்ரமால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லை.

"பிருந்தா சாப்பிட எங்கேயாவது காரை நிறுத்தலாமா?" என்று கேட்க

அவளோ "இப்போ சாப்பாடுதான் ரொம்ப முக்கியமா? ப்ளீஸ் கோ டு ஹோட்டல்" என்றவளிடம் எதுவும் கூறாமல் காரை ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினான். ஹோட்டல் வந்ததும் அவனிடம் எதுவும் கூறாமல் பிருந்தா தனது அறைக்குள் சென்றால். விக்ரமும் மனதுக்குள்

'ரொம்ப திமிரு புடிச்சவலா இருப்பா போலயே? ஹ்ம்ம் சரிதான். இவளோட கேரக்டர்னாலதான் இவ இப்படி இருக்காளோ?! நமக்கு எதுக்கு வம்பு. இவ போற வரைக்கும் நம்ம கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணியே இருப்போம்' என்று எண்ணினான். பிருந்தா பூவரசன் குலத்தில் இருந்த வீட்டிற்கு சென்ற சமயம் விக்ரம் காரில் உட்கார்ந்து நேரம் கடத்த தனது மொபைலில் படித்த சினி செய்திகளே பிருந்தா யார் என்பதும் அவளால் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி எந்த அளவுக்கு குழம்பியிருக்கின்றது என்று புரிந்தவன் அவள் வந்ததும் சில கேள்விகள் கேட்கலாம் எனநினைத்தான், அவள் வந்த நிலை கண்டு அவனால் எதுவுமே கேட்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்தவன் "ரொம்ப பசிக்குதுமா சாப்பிட என்ன இருக்கு?" என்று கேட்க அவனின் தங்கை கவிந்தி "எண்ணன்னா இன்னைக்கு உன்னோட க்ளையண்ட் எதுவுமே வாங்கி கொடுக்கலையா. நல்ல ஒரு க்ளையண்ட் கிடைச்சா நீ பைவ் ஸ்டார் ஹோட்டல்லதானே சாப்பிடுவ. இன்னைக்கு என்ன புதுசா வீட்டிற்கு வந்திருக்க" என்று கேட்டவளை தலையில் கொட்டியவன்

"ரொம்ப பேசாத. நான் இப்போ கொலைபசியில இருக்கேன். சாப்பிட என்ன இருக்கு?" என்று கேட்க கவிந்தி "நார்மலா நீ க்ளையண்ட் கூட போனா வர எப்படியும் சில நாட்களாகுமா. அதான் அம்மா சிம்பிளா எங்களுக்கு மட்டும் சமைச்சாங்கண்ணா. பழைய சாதமும் மீன்குழம்பும் தான் இருக்கு" என்று கூறினால்.

"அது போதுமே என் செல்லமே. எனக்கு ஒரு வெங்காயம் வெட்டிடு, அப்புறமா ஊறுகாயும் எடுத்து வெச்சிடு. நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்" என்றவனை கவிந்தி பழைய சாதம், மீன்குழம்பு, வெங்காயம், ஊறுகாய் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கைகளால் பிசைந்து வைத்தால். தன் அண்ணனுக்கு மிகவும் பிடித்த உணவு இது என்பதால் அவளும் சந்தோசமாகவே இருந்தால்.

குளித்து முடித்து வந்ததும் தன் தங்கை தயார் செய்து வைத்திருந்த உணவை உண்டவனுக்கு அது அமிர்தம் போல இருந்தது. "கவி என்னதான் இருந்தாலும் அம்மா பிசைஞ்சி தரும் கைப்பக்குவமே தனிதான்" என்று கூற அவன் தலையில் அடித்தாள். வெளியில் மளிகை பொருடகள் வாங்க சென்ற அவனின் தாய் வீட்டிற்கு வந்தார்.

"என்னப்பா இன்னைக்கு ரொம்ப நேரத்தோட வந்துட்ட. க்ளையன்ட் கூட போகலையா?" என்று கேட்க அவன் பிருந்தா உண்மையில் யார் என்பதை மட்டும் கூறாமல் இன்று நடந்த மற்ற அனைத்தையும் கூறினான்.

கவிந்திதான் அவனிடம் "என்ன அண்ணே பொண்ணு தனியா வேற வந்திருக்குன்னு சொல்ற. என்ன பொண்ணு மொக்கையா இருப்பாலோ? நீதான் சப்ப பிகர் என்றாலே உன் வாயால வடை சுட்டு உன்னோட ரசிகை ஆக்கிடுவியே. இவ்வளவு தூரம் போயிட்டு சமத்தா வந்திருக்க?" என்று கூற அவளின் தாயோ "வாயெல்லாம் கொழுப்புடி உனக்கு. இப்படித்தான் அண்ணாவ கலாய்ப்பியா. போ முதல்ல இரவு சமையலுக்கு தேவையான வேலைய பாரு" என்றவர் தனது அறைக்குள் சென்றார்.

"சாப்பிட்டு முடிந்ததும் இன்றைய நாளின் அலைச்சல் காரணமாக ஏற்பட்ட களைப்பால் தூங்கியவன் இரவு சாப்பாட்டுக்கு கூட எழுந்திரிக்கவில்லை. அவன் பகல் ஆகாரமே சாப்பிடும் போதே ஆறு மணியாகிதால் அவனை யாரும் இரவு உணவுக்காக எழுப்பவில்லை. அவனின் வேலையில் தூக்கம் என்பது மிகவும் அரிதாகவே நடக்க கூடிய விடயம். க்ளையண்டுடன் வெளி இடங்களுக்கு செல்லும் போது அவர்களின் நேரத்திற்கு ஏற்ப அவனும் தனது நேர அட்டவனையை மாற்றிக்கொள்வான். அதுவும் வெளியூர் பயணங்கள் போனால் க்ளையண்ட்ஸ் தூங்க சென்ற பின் அடுத்த நாளுக்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்து முடித்து அவன் தூங்குவதோ வெறும் முன்று அல்லது நான்கு மணிநேரங்கள் மட்டுமே. அதனாலேயே அவன் வீட்டில் தூங்கும் போது அவனது தாயும் சகோதரியும் அவனை டிஸ்டர்ப் செய்வது இல்லை.

காலையில் எழுந்தவன் தனது மொபைலை எடுத்து பார்க்க எந்த காலும் பிருந்தாவிடம் இருந்து வரவில்லை. தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றியவன் மாலையாகியும் பிருந்தாவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. நேற்று இருந்த மன உளைச்சலுக்கு அவளுக்கு தனிமை வேண்டும் என நினைத்தவன் அவளை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவெடுத்தான். இரவு ஒன்பது மணியாகும் போது ஹோட்டலில் இருந்து கால் வர அதை எடுத்து பேசியவன் கொஞ்சம் பதட்டமாக தன் தங்கையிடம் வந்து

"கவி, உடனே கொஞ்சம் ஹோட்டலுக்கு போகனும். நீ என்கூட வரமுடியுமா?" என்று கேட்க ஓரிறு தடவைகள் சில பெண் க்ளையண்ட்களுக்கு உதவி என வரும் போது கவிந்தியை அவன் அழைத்து சென்றிருந்ததால் அவளும் உடனே மறு கேள்வி இன்றி அவனுடன் புறப்பட்டாள். போகும் வழி எங்கிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.சரியாக முப்பது நிமிடத்தில் இருவரும் ஹோட்டலை அடைய விக்ரம் ரிசப்சன் பெண்ணிடம் செல்ல

"விக்ரம், நேற்று நீங்க அவங்கள கொண்டு வந்து டிராப் பண்ணதுல இருந்து அவங்க வெளில வரவே இல்லை. சாப்பாட்டுக்கும் கால் பண்ணல. நாங்க கால் பண்ணாலும் எந்த பதிலும் இல்லை. அதுதான் கொஞ்சம் பயமா இருக்குன்னு உங்களுக்கு கால் பண்ணோம்" என்றவளை அவன் "ரொம்ப நன்றி. அந்த ரூமோட ஸ்பெயார் சாவி கிடைக்குமா?" என்று கேட்க அந்த பெண்ணும் அவனிடம் தயக்கம் இன்றி கொடுத்தால். ஏனெனில் இது போல சில சுற்றுலாப் பயணிகளுக்கு இப்படி ஏற்பட்டு அவர்கள் அறை கதவை திறப்பதற்கு அவனுக்கு அனுமதி வழங்கி இருந்தனர் ஹோட்டல் நிறுவனத்தினர்.

பிருந்தாவின் அறைக்கு முன் வந்து சில தடவைகள் கதவை தட்டி அவளை அழைத்தும் எந்த ஒரு பதிலும் இல்லாமல் போக கதவை திறந்து கவிந்தியை உள்ளே சென்று பார்க்கும்படி கூறிய விக்ரம் நாகரீகம் கருதி வெளியில் நின்றான். உள்ளே சென்ற கவிந்தி படுக்கையில் ஒருவர் உறங்குவதை கண்டவள் அவர் அருகில் செல்லும் போதே புரிந்தது அந்த நபர் காய்ச்சலினால் பாதிக்கப்படிருப்பது.

"அண்ணா இவங்களுக்கு ஹை பீவரா இருக்குன்னா. உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகனும்" என்று கூற எதையோ யோசித்தவன் "இல்லை கவி ஹாஸ்பிடல் வேணாம், நான் ஹோட்டல் டாக்டர் இருக்காரான்னு பார்க்குறேன்" என்று கூறி ரிசப்சனிடம் செல்ல இவர்களின் நல்ல நேரம் டாக்டர் அப்போதுதான் வேறொரு நபருக்கு ஊசி போட வந்திருந்தார். அவரை அழைத்துக்கொண்டு பிருந்தா செக் செய்ய அவளுக்கு ஹை பீவருடன் பிட்ஸும் வந்திருப்பது புரிந்து அவர் உடனே அவளை ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும் என்று கூற வேற வழியில்லாமல் விக்ரமும் ஒத்துக்கொண்டு அவளை ஒரு நல்ல பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்றனர். விக்ரம் தன் தங்கையுடன் பைக்கில் வந்திருந்ததால் உடனே ஒரு கால் டாக்சிக்கு அழைத்து பிருந்தாவுடன் கவிந்தியை வரக்கூறி அவன் தனது பைக்கிலேயே ஹாஸ்பிடல் சென்றான்.

ஹாஸ்பிடலில் பிருந்தாவை அவசர சிகிச்சை பிரிவில் பரிசோதித்த டாக்டர் "இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. உடம்புல கொஞ்சம் கூட சக்தியே இல்லை. கடைசியா இவங்க எப்போ சாப்பிட்டாங்க?" என்று கேட்க இருவரும் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்.

டாக்டரோ "சரி, இவங்களுக்கு செலைன் போட்டிருக்கு. இன்னைக்கு நைட் இங்கேயே இருக்கட்டும். நாளை காலைல ஒருவாட்டீ செக் அப் செஞ்சிட்டு என்ன செய்வதென்று பார்க்கலாம்" என்று கூறினார்.

தன் தங்கையிடம் திரும்பிய விக்ரம் "கவி, நைட் நீ இவங்க கூடயே இரு. நான் காலைல் உனக்கு தேவையான் டிறஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்" என்றவன் ஏதோ மனதில் தோன்றியவனாக "உனக்கு இப்போ ஏதும் தேவைன்னா சொல்லு ஏற்பாடு பண்ணிட்டு போறேன்" என்றவனிடம் அவள் "இல்லண்ணா எனக்கு எதுவும் தேவையில்லை. கொஞ்சம் காசு மட்டும் கொடுத்துட்டு போ. நைட்டுக்கு ஏதும் தேவைன்னா நான் ஹாஸ்பிடல் கேண்டீன்ல பார்த்துக்கிறேன்" என்றால்.

------------
sevanthidurai அவர்களின் "எந்தன் நேசம்" கதை மிகவுக் சிறப்பாக இருப்பதாக எனக்கு கதைகளை பரிந்துரை செய்யும் நபர் கூறினார். அவர்தான் மிரு ரைட்ஸ் ( சஞ்சனா), மது ( யாதுமாகி), பிரவீன தங்கராஜ் ( புன்னகை பூக்கடுமே) போன்ற எழுத்தாளினிகளின் கதைகளை அறிமுகம் செய்தவர். ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கதைகளை படித்தவர்களுக்கு புரியும் இந்த கதையும் அதே அளவு சிறப்பானதாக இருக்கும் என்று.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro