28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இங்கு வீட்டில் கவியோ இவர்கள் இருவரை பற்றியும் யோசித்துக்கொண்டே இருக்க அவளின் தாய்

"கவி என்ன ரொம்ப யோசிக்கிற, எலக்சன்ல ஏதும் கேட்கபோறியா?" என்று நக்கலாக கேட்க தன் தாயை முறைத்தவள்

"இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம நீங்க வேற"என்று தன் வாய்க்குள் முனுமுனுத்தாள்.கவி ஏதோ அவளின் வாய்க்குள் முனுமுனுப்பதை கேட்டவர் அவளின் காதை திருகி

"ஏய் உனக்கு சொல்லியிருக்கேன்ள ஏதும் பேசுரத இருந்தா தெளிவா பேசனும்,இப்படி வாய்க்குள்ள முனுமுனுக்க கூடாதுன்னு. குடும்பங்களுக்கு பெரிய பிரச்சினைகள் வர மூல காரணமே தெளிவா பேசாம இப்படி முனுமுனுக்குறதுதான். நாளைக்கு நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி முனுமுனுத்தா உன் வாழ்க்கை என்னாகிறது" என்று அவள் மீதுள்ள அக்கறையில் கொஞ்சம் காட்டமாக பேசினார்.

"எனக்கு கல்யாணம் ஆகிறது இருக்கட்டும். அண்ணாக்கு எப்போ கல்யாணம் பண்ண போறீங்க" என்க அவரின் தாய் ஏதோ கூற வரும் முன் அவள்

"அவன் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேங்குறான்னு சொன்னீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்"என்றாள்.

"இல்லை கவி எனக்கு அவன்கிட்ட எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல.நான்சி போனதுக்கு அப்புறமா அவன்கிட்ட இது பத்தி பேசவே பயமா இருக்கு. இவனுக்கு தெரியாம நம்ம ஏதும் பொண்ண பார்க்க போயி, அது கடைசில ஏதும் பெரிய பிரச்சினை ஆகிடிச்சின்னா அப்புறம் அந்த பொண்ணோட வாழ்க்கைதான் அநியாயமா போகும்.அதான் யோசிக்கிறேன்" என்று கவலையுடன் கூறினார்.

"மகே அம்மே (என் அம்மாவே),அந்த தலைவலி எல்லாம் உங்களுக்கு எதுக்கு. அந்த பிராப்ளம் எல்லாத்தையும்  நான் பார்த்துக்கிறேன். ஆனா நான் எது சொன்னாலும் நீங்க சரின்னு சொன்னா மட்டும் போதும். என்ன சொல்ரீங்க" என்று கேட்க கவியின் நெற்றியை சுருக்கி கேள்வியாக அவளை பார்த்தார்.

"நீ பிருந்தாவ மனசுல வெச்சா பேசுற?" என்று கேட்க அவளும் ஆம் என தலையசைத்தாள்.

"எனக்கும் அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க வந்த கொஞ்ச நாள்ளயே நம்ம குடும்பத்துல ஒருத்தி ஆகிட்டா.எனக்கு மருமகளா வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்"என்றவரை கட்டியனைத்த கவி

"டோண்ட் வொரி, நான் பார்த்துக்கிறேன்"என்றள்.

"ஆமா பெரிய மனுசி பார்த்துக்கோங்க"

"சரி நான் இதை சரியா பண்ணி முடிச்சேன்னா என்ன பெரிய மனுசின்னி நீங்க ஒத்துக்கனும்"என்று கூற அவளின் தாய் புன்னகையுடன் அவள் தலையில் செல்லமாக கொட்டி சென்றார்.

வீடு வந்து சேர்ந்த விக்ரமும் ,பிருந்தாவும் அதன் பின் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொள்ளவில்லை.முடிந்தவரை இருவரும் சேர்ந்திருப்பதை தவிர்த்தனர். இவர்களின் இந்த விலகலை கவி கண்டுகொண்டாலும் தன் அண்ணன் முகத்தில் தெரியும் சந்தோசம் அவளுக்கு ஏதோ ஒரு நல்ல செய்தி வரப்போகின்றது என்று புரிந்தது.

இரவு நேரம் வந்ததும் கவியின் தாய் நேரத்தோடு தூங்கிவிட கவி ஒரு சிங்கள நூல் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தாள்.அவளை பார்த்து பிருந்தா

"என்ன புத்தகம் கவி இது" என்று கேட்க

" 'ஒரு விலைமகளின் வாழ்க்கை' என்ற புத்தகம் அக்கா.ப்ராஸ்டிட்யூட் ஆ இருந்த ஒரு பொண்ணு சாதாரன வாழ்க்கை வாழனும் என்று ஆசைப்பட்டு தன்னோட உடம்ப விக்கிற தொழிலை விட்டுடுறா.அதற்கு பிறகு அவ அனுபவிக்கிற கஷ்டங்கள் பத்தி எழுதியிருக்காங்க.ரொம்ப நல்லா இருக்கு.அதுலயும் குறிப்பா அவளோட பொண்ணு பெரியவளா ஆனதுக்கு அப்புறம அவ அம்மாகிட்ட வந்து 'அம்மா நீ முன்னாடி விபச்சாரியா இருந்தியா' அப்படின்னு கேட்பா.நிஜமா முன்னாடி விபச்சாரம் பண்ண ஒரு பொண்ணுகிட்ட அவளோட பொண்ணு இப்படி கேட்டா எப்படியிருக்கும்னு யோசிச்சேன். சூப்பரா எழுதியிருக்காங்க.இங்க்லீஷ்ல இந்த புக் வந்தா நல்ல ரீச் கிடைக்கும்" என்றவள் மறுபடி புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால்.

கவி கூறிய வார்த்தைகள் பிருந்தாவை துனுக்குற செய்தது.இதே வார்த்தைகளைத்தான் அன்று லக்‌ஷ்மியும் கூறினால்.தன் மகன் தன்னை வேசி என்று அழைத்துவிட்டால் என்ன செய்வது என்று. திடீரென்று விக்ரமின் மேல் வந்த காதலினால் அவள் இது எதையும் யோசிக்காமல் விட்டதன் தவறு இப்போது உரைத்தது. தானும் குடும்ப உறவுகள் என்று போகும் போது தன்னால் மற்றவர்கள் அவமான பட வேண்டும் என்பதை நினைக்கும் போதுதான் தான் கடந்த காலத்தில் செய்த தவறின் வீரியத்தை பிருந்தா உணர ஆரம்பித்திருந்தால்.ஆனால் இனி அவளால் தன் கடந்த கால தவறை மாற்ற  முடியாது.எதாவது காரணம் கூறி விக்ரமை தன் வாழ்க்கையில் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என நினைத்தவள், வினீத்தை காயப்படுத்தியது போல விக்ரமை காயப்படுத்த அவளால் முடியும் என்று தோன்றவில்லை.

இங்கு விக்ரமோ தூக்கம் வராமல் சுகமான அவஸ்த்தையில் நெளிந்து கொண்டிருந்தான்.பிருந்தா போன்ற அழகி கண்ணசைத்தாலே காலடியில் விழ ஆயிரம் ஆண்கள் காத்திருக்க அவள் தன்னை எதனால் தெரிவு செய்தால் என்று அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அவன் மனதில் இப்போது நான்சியை பற்றிய நினைவுகள் இருந்தாலும் அதை எல்லாவற்றையும் பிருந்தா என்ற ஜீவன் மறைத்துவிட்டது.காதலிக்காதவனால் காலம் பூராக காதல் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் காதலின் ருசிகண்டவனால் காதல் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது. அதனால்தான் என்னமோ பல ஆண்களுக்கு முதல் காதல் வர பல வருடங்கள் ஆகும். ஆனால் அதுவே முதல் காதல் தோல்வியின் பின் இரண்டாவது காதல் வெகுசீக்கிரத்திலேயே வந்துவிடும் .

பிருந்தா தண்ணீர் குடிக்கலாம் என்று வர விக்ரமும் அதே நேரத்தில் அவனது அறையில் இருந்து வெளியில் வந்தான். இருவரின் பார்வையும் ஒரு சில நொடிகள் சந்தித்து கொள்ள பிருந்தா கையில் தண்ணீரை எடுத்தவள் வெளி முற்றத்துக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.அவள் எதுவும் கூறாவிட்டாலும் அவள் பின்னாலேயே அவனும் சென்றான். அவள் அருகில் சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்தான் விக்ரம்.

பிருந்தா அணிந்திருந்த வயலட் நிற இரவு ஆடையை சுற்றி அவள் போர்வையால் போர்த்தியிருந்தாலும் அந்த சிறியா போர்வையால் அவள் உடலை முழுவதும் மறைக்க முடியவில்லை.விக்ரம் மனதுக்குள்

'இந்தா சாட்டின் துணியில நைட் டிறஸ்ஸ கண்டுபிடிச்சவன மட்டும் என் கையில கிடைச்சான் ,மவனே அவன் செத்தாண்டா' என்று பொறுமியவன் அதே நேரம்

'ஆனாலும் நமக்கு சொந்தமான பொண்ணு இத போட்டிருந்து அத பார்க்கும் போது நமக்கு அழகாத்தான்பா இருக்கு' என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டான்.இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க தன் மனம் ஒரு பெண்ணின் அருகாமையை நிழலில் இல்லாமல் நிஜத்தில் வேண்டி நிற்பது அவனுக்கு தெளிவானது.

"காலையில ஏதோ சொல்ல வந்தியே, அத முழுசா சொல்லிமுடிக்கலாமே"என்று கூற விக்ரமும் தன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டான் என்று பிருந்தாவுக்கு புரிந்தது. இப்போது அவளின் நிலமை மிகவும் தர்மசங்கடத்துக்குள் ஆகியது.இனி என்ன வந்தாலும் பேசியே ஆகவேண்டும் என நினைத்தவள்

"காலையில நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு ரொம்ப சாரி விக்ரம். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அப்படி பண்ணிட்டேன்.முதல்ல அதுக்கு என்ன மன்னிச்சிடுங்க"என்று கூற

"ஹேய் இப்போ எதுக்கு மன்னிப்பெல்லாம்"என்று அவன் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

"ப்ளீஸ் விக்ரம் நான் பேசி முடிக்கிற வரைக்கும் குறுக்க குறுக்க எதுவுமே பேசாதீங்க. எனக்கு உங்கள,கவிய,அம்மாவ எல்லாம் ரொம்ப பிடிக்கும் விக்ரம்.உங்க வீட்டோட ஒருத்தியா இருக்கனும்னு ஆசைப்பட்டுதான் உங்க வீட்டுக்கு முன்னாடி இருக்குற வீட்ல தங்கிறதுக்கு நான் உடனே சரின்னு சொன்னேன். உங்கம்மா கூட அன்னைக்கு சொன்னாங்க உங்களுக்கு பொண்ணு பார்க்கனும் அப்படின்னு. அப்போலாம் எனக்கு எதுவுமே தோனல. ஏன் நேத்து வரைக்கும் எனக்கு உங்கமேல பெருசா ஒரு ஈர்ப்பு வரல. ஆனா நேத்தைக்கு நீங்க என் கால பிடிச்சு முட்கள் எல்லாத்தையும் ஒவ்வொன்னா கழட்டினப்போ என் உடம்பு முழுவதும் முடிகளால தைத்திருக்க கூடாதா அப்படின்னு ஏங்கினேன்"என்க அவன் ஏதோ கூற வர

"ப்ளீஸ் நான் முடிச்சிடுறேன்.விக்ரம் நான் வெளிப்படையாவே சொல்ரேன். ஐ லவ் யூ சோ மச். நான் அதை மறைக்க விரும்பல.i love you now ,and till i die.அதுதான் நிஜம்.ஆனா என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது.அது ஏன்னு உங்களுக்கும் தெரியும்" என்று அவள் இடைவெளி விட்டு விக்ரம் ஏதும் கூறுவானா என்று அவன் முகத்தை பார்க்க அவன்

"நீ பேசி முடி பிருந்தா"என்றான்.இன்றைய இரவு அவளுக்கு இலகுவாக இருக்க போவதில்லை என்பது புரிந்தது பிருந்தாவுக்கு.

"விக்ரம் என்கிட்ட இப்போ சுத்தமா இருக்குறது என்னோட மனசு மட்டும்தான். இந்த உடம்பு கெட்டு போயி ரொம்ப நாள் ஆச்சு. என்கிட்ட இருக்குற உடம்ப நான் வித்துட்டேன். அதனாலதான் என்னால இன்னொரு ஆம்பள கூட ஆத்மார்த்மா தாம்பத்ய உறவுல இருக்க முடியும்னு தோனல. நீங்க என்ன பைத்தியம் அப்படி வேணாலும் நினைச்சிக்கோங்க. ஆனா இதுதான் நிஜம்.i can love you, But I can't marry you. நான் இப்படி சொல்ரேன்னு தப்பா நினைச்சிக்க வேணாம்"என்று கூற விக்ரம் அவளை நோக்கினான்.

"நிஜமா இதுமட்டும்தானா காரணம்" என்று கேட்டான். இனி எதையும் மறைப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவள்

"அதுமட்டுமில்ல விக்ரம் , என்ன கல்யாணம் பண்ணிகிட்டா கண்டிப்பா உங்க குடும்பத்துக்கு இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காச்சும் ஒரு நாள் கண்டிப்பா அவப்பெயர் வந்து சேரும். எனக்கு அதுல இஷ்டமில்லை. நீங்க சொல்லலாம் ஊர் ஆயிரம் பேசும் அப்படின்னு. ஆனா நாளைக்கு எனக்கு குழந்தைங்கன்னு ஆகி அவங்களே அப்படி ஏதும் பேசினா நான் செத்துடுவேன். இது ரொம்ப கஷ்டமான ஒரு நிலமை விக்ரம்.என் காதல் வேணும் அப்படின்னு நினைச்சிங்கன்னா அதை நான் சாகுறவரைக்கும் உங்களுக்கு கொடுத்த தயார். இல்லை காதலோட சேர்த்து நானும் வேணும்னு நினைச்சா கூட பரவாயில்லை. நான் முழு சம்மதத்தோட என்னை கொடுப்பேன், ஆனா என் காதல் ஒரு அணுவளவும் அதுல இருக்காது. முடிவு உங்க கையில. ஆனா இப்போதைக்கு ஐ லவ் யூ" என்றவள் ஏதோ தான் கூற வந்ததை தட்டு தடுமாறி கூறிவிட்டோம் என்ற நிம்மதியில் உறங்க சென்றாள்..

-----------
புதுக்கதை அறிமுகம்..
sengodi  யின் "தோழனே துணையானவன்" ஆரம்ப எபிசோட்கள் புது எழுத்தாளக்குரிய தவறுகள் இருந்தாலும் தற்போதைய அப்டேட்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக உள்ளது.எல்லோரும் படிக்கலாம்.

souganyakannanG   அவர்களின் "பிச்சைக்காரனும் கடவுளும்" வித்தியாசமான ஒரு கதை. படித்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள்.

BalaSundarnovels வாட்பெட்டின் ஒரு மிகப் பெரிய எழுத்தாளர். "லட்சம் காதலால் காதல் செய்" படித்தேன். விபரிக்க வார்த்தைகள் இல்லை. இவ்வளவு நேர்த்தியாக ஒரு கதை இருக்குமா என்று ஆச்சரியப்பட்டேன். காதல் தோல்வியில் உழன்றவர்களுக்கு முதல் 70% மான கதை மிகவும் பிடிக்கும்.
மீதி 30% காதல் தோல்வியில் இருந்து மீண்டவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro