கற்பனை 17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அப்பா என் வயசு உங்க அனுபவமா இருக்கும்.ஆனா வாழ்க்கை விசயத்துல நீங்க ரெண்டு பேரும் நினைச்சிருக்குறது ரொம்ப தப்பு"என்றவளை இருவரும் என்ன என்பது போல ஏறிட்டனர்.மேலும் தொடர்ந்த நந்தினி

"பொதுவா கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போனா இப்படி நடக்குறது வழக்கம்தான்.அதுவும் அமெரிக்கால இது எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்கும்.அவங்க கலாச்சாரத்துக்கு வேணும்னா இப்படி இருக்குறது சாதாரணமா இருக்கலாம்.ஆனா நம்ம தமிழ் கலாச்சாரத்துக்கு இது சரிப்பட்டு வருமான்னு பார்த்தா கண்டிப்பா அது சரி வராது.ஏன்னா சின்ன வயசுல இருந்தே ஒருத்தனுக்கு ஒருத்தி ,கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு சொல்லி சொல்லி வளர்க்கபட்டிருக்கோம்.இது எல்லாத்தையும் ஒரே நாள்ள தூக்கி போட்டுட முடியாது"என்றவளை சந்தியாவின் தாய்

"நீ சொல்ரது கரக்ட்தான் நந்தினி, ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒரு வருசமா பேசித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கோம்" என்றவரை அவள்

"என்ன முடிவுக்கு அம்மா வந்தீங்க?" என்று கேட்க அவரோ

"அதான்மா சுமூகமா பிரிஞ்சிடுவோம்னு"என்று கூற புன்னகைத்தவள்

"உங்க ரெண்டு பேருகிட்டயும் நான் ஒன்னு கேட்கட்டா"என்று கூற இருவரும் "கேளும்மா"என்றனர்.

"என்னடா இவ இப்படிகேட்குறாலேன்னு தப்பா நினைச்சிடாதீங்க.ஒரு சைக்கோலாஜி ஸ்டூடண்டா கேட்குறேன்.நீங்க ரெண்டு பேரும் தான் பிரியனும்னு முடிவு பண்ணிட்டீங்களே.ஜஸ்ட் ஒரு இன்பர்மேசன்காக கேட்குறேன்.உங்கள்ள ரெண்டு பேருக்கும் வேறு யார்கூடவாச்சும் அfப்யார் இருக்கா"என்று கேட்க கோவப்பட்ட சந்தியாவின் தாயை அமைதிப்படுத்திய அவளின் தந்தை

"கொஞ்சம் பொறுமா, அவ என்னதான் கடைசியா சொல்ல வரான்னு பார்ப்போம்"என்று தன் மனைவியை சமாதானம் செய்தவர் நந்தினியை பார்த்து

"அப்படி ஏதும் இதுவரைக்கும் இல்லமா"என்று கூற நந்தினி

"அப்போ உங்க பொண்ணுக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க.பிரிஞ்சி போகலமான்னு முடிவெடுக்க ஒரு வருசம் யோசிச்ச நீங்க சேர்ந்து வாழலாமான்னு யோசிக்க ஒரு மாசம் டைம் எடுத்துக்கோங்கப்பா.ஒரு வாரம் தங்கிட்டு போக வந்த நீங்க ஒரு மாசம் உங்க வேலை டென்சன்லாம் விட்டுட்டு ப்ரீயா இருங்க.உங்களுக்கு பிடிச்சத நீங்களும் அம்மாக்கு பிடிச்சத அவங்களும் பண்ணட்டும்.அதுக்கு அப்புறமும் நீங்க முதல்ல எடுத்த முடிவுதான் சரின்னி தோனிச்சின்னா அதயே பண்ணுங்க"என்று கூற அவள் கூறுவதில் இருக்கும் நியாயம் புரிந்த இருவரும் சரி என்று சம்மதித்தனர்.

சந்தியாவும் நந்தினியும் வெளியில் ஒரு வேலை இருப்பதாக் கூறி சந்தியாவின் பெற்றோருக்கு தனிமையை கொடுக்க விரும்பி அவ்விடத்தை விட்டு நீங்கினர்.நந்தினையை பார்த்த சந்தியா

"எனக்கு செம்ம கடுப்பா இருக்குடி.அமெரிக்காக்கு வாழத்தானே போனோம்.அதுக்குன்னு அமெரிக்கா காரனாவே மாறனுமா என்ன.இவங்கள எல்லாம் என்ன பண்றதுன்னு தெரியலப்பா"என்று கூற நந்தினி

"அப்படி இல்லடி,இவங்களாச்சும் அட்லீஸ்ட் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்திருக்காங்க.ஆனா மோஸ்ட்லி அப்படி ஆகாதுடி.ஏதாச்சும் இல்லீகல் காண்டாக்ட் இல்லன்னா டார்ச்சர் பண்றது அப்படின்னுதான் ஸ்டார்ட் ஆகும்.ஆனா உங்கம்மா அப்பா க்ரேட்டி.என்ன இருந்தாலும் அவங்களே நிலமைய பேசி முடிவெடுத்திருக்கிறது அப்ரிசியேட் பண்ண வேண்டிய விசயம்"என்று கூற சந்தியா கவலையாக

"எனக்கு எங்கம்மா அப்பான்ன உயிர்டி, அவங்க பிரிஞ்சிபோயிட்டா என்னால அத தாங்கவே முடியாதுடி"என்று கூற நந்தினியோ

"எனக்கு அவங்களுக்கு இருக்குர இந்த ஒரு மாசத்துல கண்டிப்பா ஒருத்தர் மற்றவரோட மனச புரிஞ்சி நடப்பாங்கன்னு தெரியுது.முதல்ல இந்த வேலை டென்சன் இல்லாம இருந்தாலே போதும்பா.மனசு ஹாப்பி ஆகிடும்.இந்த கார்ப்பரெட் உலகத்துல, வாழ்றதுக்கு உழைக்கனும்னு இருந்தது இப்போ உழைக்கிறதுக்காக வாழ வேண்டி இருக்கு.என்ன ஒரு கொடுமையான வாழ்க்கைல்ல"என்று கூற நந்தினியும் சந்தியாவின் கூற்றை ஆமோதித்தால்.

-------------------------
"டேய் அண்ணா, என்னடா அது கைல "என்று ராஜீவிடம் இருந்த அசைன்மன்டை பறித்த தன் தங்கை ராகவியை முறைத்தவன்

"ஏண்டி அத பறிக்கிற.முதல்ல அத கொடு"என்று கூற நந்தினி கொடுத்த அசைன்மண்ட் பேப்பரை பார்த்தவள் அதில் நந்தினி என்று குண்டு குண்டு கையெழுத்தில் எழுதி இருக்க அவளின் பெயரிற்கு மேல் 'with Love' என்று இருப்பதை கண்டவள்

"யாருன்னா அது நந்தினி"என்று கேட்க ராஜீவ்

"அது என் காலேஜ்மேட்"என்று கூற அவள்

"அதென்ன வித் லவ் னு போட்டிருக்கு.அதுவும் அவங்க கை எழுத்தில்லயே"என்று அசைன்மன்ட் எழுதி இருந்த கை எழுத்தும் வித்லவ் என்று எழுதியிருந்த கை எழுத்தும் வேறு வேறாக இருக்க அதை உற்றுப்பார்தவள்

"கேடி ,இது உன் கை எழுத்துதானே.என்ன லவ்ஸா.யாரு அந்த நந்தினி?" என்று கேட்க ராஜீவ் தான் மாட்டிக்கொண்டது புரிந்தது.தன் தங்கையிடம் எதையாவது கூறி தப்பிக்கலாம் என்று என்னியவன்

"இங்க பாரும்மா.."என்று பேச ஆரம்பிக்கும் முன்பே ராகவி

"அண்ணா ஏதாச்சும் பொய் சொல்ரேன்னு தெரிஞ்சது நான் நேரடியா அக்கா கிட்ட போய் போட்டு கொடுத்துடுவேன்.சோ உண்மைய மட்டும் சொல்லு"என்று கூற அவனும் உண்மை எல்லாவற்றையும் கூறினான்.அவனின் முழுக்கதையையும் கேட்டவள்

"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காத.எனக்கும் உனக்கும் 3 வருசம் வயசு வித்தியாசம் இருக்கலாம்.ஆனா என் மனசுக்கு தோனினத சொல்ரேன்.அந்த பொண்ணு வீட்டுக்கு ஒரே பொண்ணுன்னு சொல்ர.அக்காக்கு உன்ன விட 4 வயசு அதிகம் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்காங்க.அடுத்தது நான் வேற இருக்கேன்.எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகாம உனக்கு கல்யாணம் பண்ண கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.இன்னொரு முக்கியமான விசயம் அப்பா நம்ம எல்லோரையும் விட்டுட்டு போனப்போ அக்காதான் அவளோட படிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு வேலைக்கு போய் நம்ம எல்லோரையும் காப்பாத்தினா.ஏன் அவளோட சுக துக்கதங்கள கூட மறைச்சிக்கிட்டு நமக்காக வாழ்ந்துகிட்டு இருக்கா.நீ லவ் பண்ணத தப்புன்னு நான் சொல்லல.ஆனா அந்த லவ் நம்ம வாழ்க்கைக்கு ஒத்துவரனும்.அவங்க பேமிலிக்கும் நம்ம பேமிலிக்கும் ஒரு ஒத்துமை வரனும்.நந்தினி அவங்க வீட்டுல ஒரே பொண்ணுன்னதால கண்டிப்பா அவங்களுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க.உனக்கும் கண்டிப்பா படிப்பு முடிஞ்சதும் ஜாப் கிடைக்கும்.ஆனா ஜாப் கிடைச்சதும் நம்ம வீட்டுல இருக்குற கஷ்டம்லாம் உடனே முடிஞ்சிடாதுண்ணா.கொஞ்சம் யோசிச்சி பாரு"என்று கூறினால்.

தன் தங்கைக்கு தோன்றிய விடயம் தனக்கு தோன்றாமல் போனதே என்று மிகவும் வேதனைப்பட்டான்.ஆனால காதல்தான் யாரைக்கேட்டும் வருவதில்லையே.ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் ஆண் அவள் தன்னவள் என்று ஆனபின் அதற்கு ஏங்குவதில்லை.காரணம் ஆற்று நீரைத்தான் பலரும் அனுமதி இன்றி அடைய முனைவார்கள்.ஆனால் கிணற்று நீர் எப்போதும் நமக்கு மட்டுமே சொந்தம் என்ற என்னமா, தனக்கென்று ஆனவளை எப்படி சந்தோசமாக வைத்திருக்க போகின்றோம் என்ற பயத்தினால் எழுகின்ற மன அழுத்தமா என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கின்றது.தன் தங்கையின் கூறியதை சிறிது யோசித்தவன் சந்தியாவுக்கு கால் செய்து தன்வீட்டு நிலமையை கூறி தயவு செய்து நந்தினியிடம் தன்‌ காதல் பற்றி கூற வேண்டாம் என்றும், தான் திருமணம் முடிக்க தயாராகின்ற போது நந்தினிக்கு திருமணமாகாமல் இருந்தால் அவன் தன் காதலை நந்தினியிடம் கூறி அவளை மனப்பதாக கூற சந்தியாவுக்கோ என்ன கூறுவது என்றே புரியவில்லை.ஆனால் எனக்கு என் குடும்பம் எதுவும் முக்கியமில்லை என் காதல்தான் முக்கியம் என்று கூறாமல் ராஜீவ் இப்படி முடிவெடுத்தது அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

---------------
சுமன் தன் காதலி வீணாவுடன் ரெஸ்ட்டாரன் வந்திருக்க கதிரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.கதிரை கலாய்க்க எண்ணிய சுமன்

"வாங்க காதல் மன்னன், எப்படி போகுது உங்க லவ்வு "என்று கூற எந்த பெண்ணிடமும் தேவைக்கு அதிகமாக பேசாத கதிரை சுமன் காதல் மன்னன் என்று கூற கொஞ்சம் குழம்பியவளை சுமன்

"ரொம்ப குழம்பிக்காத செல்லம்.சாருக்கு முகம் தெரியாத ஒரு பொண்ணு மேல ஒரு இது வந்திடுச்சி.அந்த இதுக்கு பெயரு என்னோட அகராதில லவ்ஸு.ஆனா சார் என்ன சொல்வாரோ தெரியல"என்று கூற வீணா

"ஏது முகம் தெரியாத பொண்ணா.அப்படின்ன இந்த காதல் கோட்டை படத்துல அஜித்தும் தேவயானியும் லவ் பண்ணுவாங்களே அப்படியா"என்று கேட்க சுமன்

"என் செல்லக்கடி கற்பூரம் மாதிரி உடனே கப்புனு பிடிச்சிட்டியே.செம்ம சார்ப்புடி நீ"என்றவனை அடக்க கதிர்

"ஆமா மச்சி நீ அந்த வாட்பெட் பொண்ணுங்க எல்லாம் இருக்குற க்ரூப்புக்கு போய் ஆகாஷனா யாருன்னு கண்டுபிடிக்கிறேன்னு சொன்னியே என்னாச்சிடா"என்று கேட்க நேரம் பார்த்து கதிர் தன்னை வீணாவிடம் மாட்டிவிட்டதை என்னி நொந்துகொண்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro