கற்பனை 3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஷனா-2( கதிர் எழுதும் கதை)

"ஹேய் ஆகாஷனா இன்னைக்கு நம்ம பொண்ணுங்க யாரையுமே ராகிங்க் பண்ண கூடாது ஒன்லி பசங்கள மட்டும்தான் பண்ணனும் சரியா" என்று கூறிய தன் தோழியை அவள் சரி என்று ஆமோதித்தவள்

"நேத்ரா ஏதும் ப்ராப்ளம் ஆச்சின்னா..." என்று கேட்க நேத்ராவோ

"என்னடி பேக் அடிக்கிற.இப்படி ப்ராப்ளத்த பார்த்து பயப்படுற ஆளு நீயில்லையே.ப்ராப்ளத்த விசிட்டிங்க் கார்ட் கொடுத்து வீட்டுக்கு கூப்பிடுற ஆளாச்சே. என்னடி மேட்டர்" என்று கேட்க

"இல்ல மச்சி ,உனக்கு வாட்பெட் தெரியும்ல அதுல ஒரு ரைட்டர் பக்கி எப்ப பாரு ஹீரோவ விட ஹீரோயினுக்கு வயச அதிகமா காட்டுவாண்டி.பய புள்ள அவன் எல்லா ஸ்டோரிலயும் அப்படித்தான் இருக்கும்,அதான் நம்ம ஏதும் பையன ராகிங்க் பண்ண போயி அவனே நம்ம லைப் பார்ட்னர் ஆயிட்டான்னா ரொம்ப தப்பாயிடும்டி" என்று கூறு

"எனக்கு அந்த லூசுப்பய யாருன்னு தெரியும்.அவன் ஒரு ஆளுன்னு நீ அவன் ஸ்டோரிலாம் படிச்சிக்கிட்டு, ஹேய் நீ சொல்ரத பார்த்தா என்னடி உனக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிட்டு போல இருக்கே" என்று சந்தேகமாக கேட்க ஆகாஷனா எதுவும் கூறாமல் இருந்தவளை மேலும் நேத்ரா

"என்ன மேடம் நீங்க சைலண்ட்டா இருக்குறத பார்த்தா ஏதோ ஒரு மேட்டர் இருக்குன்னு மட்டும் தெரியுது" என்று கூற ஆகாஷனாவோ

"போடி நீ வேற எப்ப பாரு நேரம்காலம் இல்லாம கலாய்ச்சிக்கிட்டு.உன்னையெல்லாம் வெச்சிக்கிட்டு நான் என்னதான் செய்ய போறேனோ"என்று கூறி அவசரமாக எழுந்தவளை பிடிக்க முயன்ற நேத்ரா அவளுக்கு பின்னாள் வந்தவனை கவனிக்காது அவன் மீது மோதுண்டு நின்றாள்.

"ஹேய் சாரி நான் கவனிக்கல" என்று மோதுண்ட அந்த நபர் கூற நேத்ராவோ

"பரவாயில்லை.தெரியாமதானே மோதினீங்க" என்று கூற உடனே ஆகாஷனா

"என்னது தெரியாமலா ,அடிங்க ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே உடனே இப்படி ஏதும் பண்ணி அவள இம்ப்ரஸ் பண்ண டிரை பண்றது.இதுங்கள எல்லாம் ....." என்று கூற அவனோ கோவம் கொண்டு

"அதான் சாரி சொல்லிட்டேனே, இப்போ எதுக்கு தேவை இல்லாம ரொம்ப பேசுறீங்க" என்று கேட்க அவளோ

"எது நான் தேவையில்லாம பேசுரேனா, ஒரு பொண்ணு மேல தேவை இல்லாம இடிச்சது நீ.இப்போ நான் தேவையில்லாம பேசுரேன்னு சொல்ர" என்று சத்தமிட அவனோ

"ஹேய் என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசுர.பார்த்து மரியாதையா பேசு.கிவ் ரெஸ்பக்ட் டேக் ரெஸ்பக்ட்" என்று கூறினான்.

"பாருடா பீட்டரு , ரொம்ப பண்ணாம மன்னிப்பு கேட்டுக்கிட்டு போ தம்பி" என்று கூற இப்போது நேத்ராவும் அவனும் திகைத்து

"அதான் நான் முன்னாடியே மன்னிப்பு கேட்டுட்டேனே"என்று கூற ஆகாஷனாவோ அவளின் வாதம் தவறாக செல்வதை உணர்ந்து சுதாகரித்தவள்

"இன்னொரு வாட்டி மன்னிப்பு கேட்டுட்டு போ" என்று கூற அவனோ கைகூப்பி

"அம்மா தாய்க்குலங்களா என்னை மன்னிச்சிடுங்க" என்று கூறி செல்ல முற்பட்டவனை ஆகாஷனா

"ஆமா உன் பேரு என்ன" என்று கேட்டாள்.அதற்கு அவன்

"ஐ அம் அஜய்" என்று கூறினான். அதற்கு அவளோ

"உன் பேரு அஜய்தானே ஏதோ தளபதி விஜய் மாதிரி ரியாக்ட் கொடுக்குற, அப்புறம் இந்த அஜய் என்ற பேரை கேட்டாலே எனக்கு கடுப்பாகுது"என்று அவள் கூற அதற்கு அவனோ

"உங்களுக்கு ஏன் என் பெயரை கேட்டா கடுப்பாகுது "என்று கேட்டவனை ஆகாஷனா

"இந்த காலேஜோட ஸ்டூடண்ட் சேர்மன் பேரும் அஜய்தான்.பய புள்ள ரொம்ப பண்றான்.அவனுக்கு இருக்கு ஒரு நாளைக்கு" என்று கூற அவனோ

"அவர உங்களுக்கு தெரியுமா" என்று கேட்க அதற்கு அவள்

"சல்லிப்பய என்ன கண்டாலே சும்மா நடுங்குவான். என் பேரை அவன்கிட்ட சொல்லி பாரு அப்போ தெரியும் நான் யாருன்னு" என்று கூறியவளுக்கு பதில் கூற முற்பட அவனது நன்பன் ஒருவன்

"டேய் அஜய், ஸ்டூடண்ட் கவுன்சிலர் உன்ன மீட் பண்ணனும்னு சொன்னாருடா.வா போகலாம் " என்று அவனை அழைத்து சென்றான். இவனை எதற்கு ஸ்டூடண்ட் கவுன்சிலர் மீட் செய்ய வேண்டும் என்று நினைத்து பக்கத்திலிருந்த ஒரு பையனிடம் தூரத்துல் செல்லும் அஜய்யை காட்டி

"யாரு அவரு .இவர எதுக்கு ஸ்டூடண்ட் கவுன்சிலர் பார்க்கனும்"என்று கேட்க அவனோ

"அதுதான் நம்ம காலேஜோட ஸ்டூடாண்ட் சேர்மன்" என்று கூறினான்.

"என்னது ஸ்டூடண்ட் சேர்மனா.அய்யோ மாட்டினேனே இப்போ" என்று ஆகாஷனா‌ தலையில் கைவைத்து கீழே அமர்ந்தாள்.அவள் அப்படி அமர்ந்ததை கண்டதும் நேத்ரா

"யாகாவராயினும் நாகாக்க" என்று கூற அவளை முறைத்த ஆகாஷனா

"வாய மூடு பக்கி எல்லாமே உன்னாலதான்" என்று கூற நேத்ராவோ

"நான் என்னடி பண்ணேன்.நீதான் சும்மா அவன் கிட்ட வாய கொடுத்த.சரி வாய கொடுத்து வம்பிழுத்த அதென்ன அவன் பெயர கேட்ட பிறகு ஸ்டூடண்ட் சேர்மன் உன் பெயரை கேட்டாலே சும்மா நடுங்குவான்னு பீலா வேற விட்ட.ஆமா நீ ஏண்டி அப்படி சொன்ன" என்று கேட்டதற்கு ஆகாஷனாவோ

"இப்ப அதுவாடி முக்கியம் ,அந்த ஓரங்குட்டான்கிட்ட இருந்து எப்படி மாட்டிக்காம தப்பிக்கனும்கிறதுதான் முக்கியம்" என்று கூற நேத்ராவோ

"எனக்கு என்னமோ நம்ம இன்னைக்கே அவர மறுபடி மீட் பண்ணுவோம்னு தோனுது" என்று கூறினால்.

---வருவாள்---

கதையை பப்ளிஷ் செய்து 2 வினாடியில் Aakashana Voted for Aakashana என்று தோன்ற கதிருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.அவளிடம் இருந்து இன்றைக்கு ஏதும் மெசேஜ் வராதா என்று பார்த்துக்கொண்டே இருக்க

"ஆகாஷனா- ஹாய்.செம்ம அப்டேட்பா"
"கரு-உங்களுக்கு பிடிச்சிருந்திச்சா?"
"ஆகாஷனா-எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.எனக்கு நேத்ரா மாதிரி ஒரு ப்ரெண்ட் இருக்கா"
"கரு-அப்போ நீங்க பொண்ணா .நான் பையன்"
"ஆகாஷனா-ஹஹா,நல்லா போட்டு வாங்குறீங்க எழுத்தாளரே.நான் பொண்ணுதான் ,என் ப்ரெண்டும் பொண்ணுதான்.அவங்கப்பாதான் பையன்"
"கரு-ஹ்ம்ம்"
"ஆகாஷனா-என்ன ஹ்ம்ம் ., இது ஜோக்பா.கொஞ்சம் சிரிக்கலாமே"
"கரு-ஹாஹா.ஆமா நீங்க ஏன் என்கிட்ட பேசுரீங்க,இல்ல பொதுவா சோசியல் மீடியால பொண்ணுங்க தெரியாத பசங்க கிட்ட பேசமாட்டாங்களே அதான் கேட்டேன்"
"ஆகாஷனா-யப்ப்பா போதும் உங்க சிரிப்பு..ஆமா நீங்க சொல்ரது கரக்ட்தான். சோஷியல் மீடியால பொண்ணுங்க தெரியாத பசங்க கிட்ட பேசுறது கொஞ்சம் டேஞ்சர்தான்.ஆனா இங்கதான் என்னோட உண்மையான பெயர் ,அட்றஸ் டீடைல்ஸ் ஏதுமே இல்லையே.இன்பாக்ட் நான் பொண்ணுன்னு நீங்க நம்பினாதான் அது உண்மை.இல்லைனா ஒரு பையன் கூட, ஏன் உங்க அப்பா அம்மா கூட உங்க கிட்ட இப்படி விளையாடலாம்.வாட்பெட்ல இருக்குற ஒரே நன்மை நம்ம யாருன்னு வெளிப்படுத்திக்காமலே மத்தவங்ககிட்ட நம்ம பீலிங்க்ஸ செயார் பண்ணிக்கலாம்" என்று கூற கதிருக்கு அவள் கூறுவது சரி என்று தோன்றினாலும் இது தனக்கு தெரிந்த யாரும் தன்னுடன் விளையாடுகிறார்களோ என்று என்னம் ஏற்பட அவனோ

"கரு-ஹேய் இப்போ நிஜாமவே எனக்கு டவுட் வருது.டேய் சுமன் நீயாடா விளையாடுற "
"ஆகாஷனா-ஹஹா, கொஞ்சம் மனுசங்கள நம்புங்க ரைட்டரே..பாய்"
"கரு-பாய்" என்று டைப் செய்து விட்டு தன் நண்பன் சுமனுக்கு உடனே கால் செய்தான்.

"டேய் சுமன் உன்மைய சொல்லு.வாட்பெட்ல எங்கிட்ட விளையாடுறது நீயா.மவனே அப்படி ஏதும் பண்ண வீணா கிட்ட உன்ன போட்டுகுடுத்துடுவேன்" என்று கூற எதிர்முனையில் சுமனோ

"டேய் மகராசா ஏண்டா நல்லா இருக்குற என் வாழ்க்கைல கும்மி அடிக்க பார்க்குற.வாட்பெட்ல என் ஐடிதான் உனக்கு தெரியும்ல.அப்றோம் ஏண்டா இப்படி ஒரு சந்தேகம்" என்று கேட்க கதிரோ

"இல்லடா ,நான் வாட்பெட்ல ஸ்டோரி எழுதுறது உனக்கு மட்டும்தான் தெரியும்.ஆனா...." என்று ஆரம்பித்தவன் தனக்கு ஆகாஷனா என்ற பெயரில் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வருவது பற்றி கூற சுமனோ

"மச்சி நீ ஸ்டோரியோட முதல் எபிசோட் பப்ளிஷ் பண்ணி 5வது நிமிசத்துல உனக்கு வோட் வந்ததுன்னா கண்டிப்பா அந்த ஐடி முன்னாடி இருந்தே இருந்திருக்கனும்டா.ஏன்னா அவ்வளவு சின்ன இடைவெளில உன் ஸ்டோரிய படிச்சி அதே பேருல ஒரு ஐடி க்ரியேட் செஞ்சி உனகு மெசேஜ் பண்றது என்பது முடியாதா காரியம்டா" என்று கூற சுமன் கூறுவது சரி என்றே கதிருக்கு தோன்றியது.ஆனால் அதன் பின் கதிர் சொன்னதை கேட்டு சுமன் வாயடைத்துப்போனான்.
-------
புது‌கதை‌.. salmakatherbatcha வின்‌
" உன்னை‌‌ என்றும்‌ காதல்‌செய்வேன்" நல்ல ஒரு‌ ஆரம்பமாக இருந்தது.எல்லோரும்‌ படிக்கலாம்.ஆதரவு தெரிவிக்கலாம்..
நேற்று முழுமையாக படித்தேன்.மொத்தமாக 21 அப்டேட்ஸ்." கல்யாணம் பண்ணிக்கலாமா" கதைக்கு பின் நான் ஒரே நாளில் அதிகமாக படித்த ஒரே கதை இதுதான்.உண்மையிலேயே சூப்பராக உள்ளது.
தமிழில் கதை எழுத வந்த பலத் வேலை பழு காரணமாக காணாமல் போய்விட்டனர்.நாம் புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கவில்லை என்றால் நாளை தமிழில் கதை எழுத யாருமே இருக்க மாட்டார்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro