கற்பனை 7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சென்பகம் கூறிவிட்டு செல்ல சந்தியாவை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த நந்தினி

"என்ன மச்சி நல்லா மாட்டினியா எங்கம்மா கிட்ட.ஓவரா சீன் போட்டா இப்படித்தான் மாட்டனும்.இப்போ நல்லா அனுபவி" என்று கூற சந்தியாவோ

"நேத்து ஹாஸ்டல்ல ஒரு பஞ்சாயத்து ஆச்சு.ஹாஸ்டல்ல இருந்த எல்லா பக்கிங்களும் ஒன்னாகிட்டு என்ன தனியா விட்டுடிச்சிங்க.நான் வேற வீராப்பா 'சிங்கம் சிங்கிலாத்தான் இருக்கும் பன்னிக்குட்டிங்கதான் கூட்டமா இருக்கும் ' என்று பேச்சுக்குத்தாண்டி சொன்னேன். எருமைங்க நேத்து எல்லோரும் சேர்ந்து எனக்கு பண்ண கொடுமைங்க இருக்கே" என்று கூற நந்தினியோ

"அப்படி என்னடி பண்ணாங்க" என்று கேட்க சந்தியா சலித்துக்கொண்டு

"அத ஏண்டி கேட்குற.நைட்டு என் ரூம்மோட ப்யூஸ் மட்டும் புடுங்கிட்டாலுங்க.சரி காலைல பாத்ரூம் போனா தண்ணிய கட் பண்ணிட்டாலுங்க.நல்ல வேலை கைல மொபைல் இருந்திச்சா, உடனே வார்டனுக்கு கால் பண்ணி சொல்லவும் தண்ணிய போட்டு விட்டாங்க.காண்டீன் போனா நான் எத கேட்டாலும் அந்த பக்கி கேண்டீன் காரன் இல்லைன்னு சொல்ரான். கொஞ்சம் கோவமா என்னதான் இருக்குன்னு கேட்டா கொஞ்சம் புன்னாக்கும் தவிடும் இருக்கு சாப்பிரடுரியான்னு கேட்குறாண்டி.நான் வார்டன கூப்பிட்டு சொன்னேன்.அதுக்கு அவன் 10 மணியோட காலை சாப்பாடு முடிஞ்சிடும் இப்போ டைம் 10.10 ணு சொல்ரான்.நான் வழமையாவே நேரத்தோட போயிடுவேன். நேத்து பாத்ரூம்ல நடந்த அலப்பறைல எல்லாமெ கொலாப்ஸ் ஆச்சு," என்று கூற நந்தினியோ எல்லாவற்றையும் சுவாரசியமாக கேட்டவள்

"ஆமா மச்சி பாத்ரூம்கு போன எதுக்குடி போன கொண்டு போன" என்று கேட்க சந்தியாவோ சிரித்துக்கொண்டு 

"அது ஒன்னுமில்ல மச்சி ,உனக்கு எப்படி காலைல ஒரு லீட்டர் தண்ணி குடிச்சாத்தான் காலைக்கடன் ஈசியா இருக்குமோ நமக்கு ஸ்டோரி படிச்சாத்தாண்டி ஈசியா இருக்கு.இந்த கருமத்த மட்டும் மாத்த டிறை பண்றேன் முடியவே மாட்டேங்குது" என்று கூற நந்தினி

"கருமம் கருமம், விடியக்காலைல பேசுற பேச்ச பாரு .ஆமா அந்த காண்டீன் காரன் ஏண்டி அப்படி சொன்னான்.ஏன்னா அவன் கேண்டீன்லதான் காலைல செஞ்ச சாப்பாடு சாயந்தரம் வரை இருக்குமே" என்று கேட்க சந்தியா

"இல்லடி இதுங்க எல்லாம் அவன மிரட்டி இருக்காளுங்க.எனக்கு சாப்பாடு கொடுத்தா அவளுங்க எல்லாம் வெளில சாப்பிட்டிருவோம்.அவன் காண்டீன்ல சாப்பிட மாட்டோம்னு.அவன் ஏதோ பெரிய பிஸ்னஸ் டீலிங்க் மிஸ் ஆகுதுன்னு நமக்கு ஆப்படிச்சிட்டான்" என்று கூற நந்தினியோ

"ஹலோ மேடம் நமக்கு இல்ல உனக்கு" என்று கூற சந்தியா

"என்ன மச்சி இப்படி சொல்ர.எனக்குன்னா உனக்கு இல்லையா.உன்ன வேற யூ எஸ் கூட்டி போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.நீ இப்படி சொல்ரியேடி" என்ரு கலாய்த்தவளை முறைத்த நந்தினி

"இரு எங்கம்மாகிட்ட உன்ன போட்டுகுடுக்கிறேன்" என்று கூற சந்தியாவோ

"தங்கமே ஆள விட்று சாமி.சும்மா உங்க பொண்ணில்லையான்னு கேட்டதுக்கே சமைக்க கத்து தரேன்னு சொல்ராங்க.இதை வேற சொன்ன இருக்க போற அத்தனை நாளும் எனக்கு கஷ்டம்தான் " என்றவளை நந்தினி அர்த்தமாக பார்த்து

"சரி சந்தியா உண்மைய சொல்லு, எதுக்கு இப்போ ஹாஸ்டல் விட்டு வந்தே" என்று கேட்க சந்தியா

"இல்லை மச்சி அதான் சொன்னேனே.ஹாஸ்டல்ல..." என்று அதே பழைய கதையை கூற முற்பட்டவளை

"சட் அப் சந்தியா .இப்போ நீ உண்மைய சொல்லல அப்புறம் நான் உன்கிட்ட பேசவே மாட்டேன்" என்று முறைத்தவளை சந்தியா கண் கலங்க

"இல்லடி இன்னும் 3 மாசதுல நான் யூ எஸ் போயிடுவேன்.அங்க போனா உன்ன, அம்மா,அப்பா எல்லோரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.எனக்கு அம்மா அப்பா இருக்காங்கதான் .அவம்ங்களுக்கும் என் மேல ரொம்ப பாசம் இருக்க.அவங்க காட்ற பாசத்த விட நீயோ இல்லை உங்கம்மா அப்பாவோ காட்டுறது ஒன்னும் பெரிசில்லன்னு தெரியும்.இருந்தாலும் உங்க பாசம் எனக்கு ஸ்பெசல்டி.எனக்கு இருக்குற இந்த 3 மாசமும் எவ்வளவு முக்கியம்னு உனக்கு சொன்னா புரியாதுடி. எவ்ரி செகண்ட் இஸ் ப்ரிஸ்யஸ் (ஒவ்வோரு வினாடியும் பெறுமதியானது) "என்று நந்தினி கேள்வியாக

"ஏன் சந்தியா உங்கம்மா அப்பா பாசமா இருக்க மாட்டாங்களா" என்று கேட்டவளை

"அப்படி இல்லடி அவங்க பாசத்த காட்டுற முறை வித்தியாசமா இருக்கும்.ஆனா உன்னோட பேரண்ட்ஸ் காட்டுற பாசம் வித்தியாசம்டி.மனிசனுக்கு எப்பவும் நமக்கு சொந்தமானவங்க காட்டுற அன்பைவிட நம்மல யாருன்னு தெரியாதவங்க காட்டுற அன்புதான் பெருசா தோனும்.அது தப்புதான், ஆனாலும் மனித இயல்பு அதுதானே.என்னதான் அந்த அன்பு தற்காலிகம், கொஞ்சம் நாள்ள நமக்கு அது இல்லாம போயிடும்னு தெரிஞ்சாலும் அவங்க அன்புக்காக மனசு ஏங்கும்டி.ஆனா இதுல நிஜம் என்னன்னா கடைசி வரைக்கும் நம்ம கூட வரப்போறது நம்ம அம்மா,அப்பா,கனவனோட அன்புதான் நந்தினி.உனக்கு இது புரியாது.ஏன்னா நீ இன்னும் வெளி ஆளோட பாசத்த கானல" என்று கூற நந்தினியும்

"நீ சொலதும் கரக்ட்தாண்டி.இந்த மனித மனசுதான் எவ்வளவு விசித்திரமானதுல்ல,உன் மேல உன் அம்மா அப்பா உயிரையே வெச்சிருந்தாலும் யாரு மூனாவது மனுசங்க பாசத்துக்கு ஏங்குற.இது உன் அம்மா அப்பாக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாங்க" என்று நந்தினி கூற சந்தியாவோ

"கரக்ட்தாண்டி, ஆனா அந்த வெளி ஆளோட பாசம் நமக்கு தற்காலிகமா கிடைக்க போற ஒன்னு.அது எப்போ ஸ்டாப் ஆகும்னு சொல்ல முடியாது.அதுவரைக்கும் அத அனுபவிக்க வேண்டியதுதான்.உதரானமா சொல்ரதுன்ன ஸ்கூல் டீச்சர், நமக்கு பிடிச்ச காலேஜ் லெக்சரர், சில ப்ரெண்ட்ஸ் ஏன் சில நேரங்கள்ள நம்ம மனசுக்கு பிடிச்ச நம்ம காதலிக்கிறவங்களா கூட இருக்கலாம்" என்றவளை நந்தினி

"அதெப்படி காதலிக்கிறவஙக இந்த லிஸ்ட்ல வருவாங்க " என்று கேட்க சந்தியா

"காதலிக்கும் போதே சில பேருக்கு தெரியும் இந்த காதல் கல்யானத்துல முடியாது நம்ம பிரிஞ்சிதான் போயிடுவோம்னு.இருந்தாலும் அவங்க அன்பா உன்மையா காதலிப்பாங்க.ஏன்னா அவங்களுக்கு அந்த அன்பு பாசம் அரவணைப்பு எல்லாமே தேவைப்படும்.அத அவங்க ஒருத்தர் மத்தவங்க கிட்ட இருந்து எடுத்துப்பாங்க.உதாரனமா சாதி விட்டு சாதி லவ் பண்றது, மதம் மாறி லவ் பண்றது ,ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு அவ நம்மல விட பெரியவன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு புரியாம தடுமார்ரது இப்படி பல மாதிரி இருக்குடி.இப்போ சாதி ,மதம் பார்க்காம காதலிச்சி கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்றவங்க பத்துல மூனுதான் இருக்கும்.மீதி ஏழு பேரும் வேற கல்யாணம் பண்ணிப்பாங்க.ஆனா அவங்களுக்கு காதலிக்கும் போதே தெரிஞ்சிருக்கும் இதுல இவ்வளவு பெரிய சிக்கல் இருக்குன்னு.இருந்தாலும் ஏன் அப்படி பண்றாங்க.அதுதாண்டி மனித இயல்பு.அதுலயும் அந்த பசங்களோட அம்மா அப்பாலம் அவங்க மேல பாசம் இல்லாம இருப்பாங்கன்னு சொல்லவே முடியாது.சில அம்மா அப்பா அவங்க பசங்க மேல உயிரா இருப்பாங்க.இருந்தாலும் அந்த பசங்களுக்கு இந்த தற்காலிக அன்பு பெருசவே தோனும்" என்று கூற சந்தியாவை பெருமையாகவும் ஆச்சரியமாகவும் பார்த்த நந்தினி

"மச்சி சூப்பர்டி.ச்சே எவ்வலவு ரிசேர்ச் பண்ணிருக்க.உன்ன போய் நான் படிப்புல ஆர்வம் இல்லாதவன்னு நினைச்சிட்டேனேடி.சாரி மச்சி " என்று கூறியவளை சந்தியா

"இட்ஸ் ஓக்கே மச்சி, டோண்ட் ஜட்க் அ புக் பை கவர் (அட்டைப்படத்தை வைத்து ஒரு புத்தகத்தை எடை போட கூடாது)" என்று கூற கூறியவளை நந்தினி

"ஒத்துக்கிறேன் மச்சி.நீ ஜீனியஸ்தான்.ஹேய் அந்த விசிட்டிங்க் லெக்சரர் ரங்க பாஸ்யத்தோட வீடியோ இருக்குன்னு சொன்னியே .கொஞ்சம் கொடு மச்சி.நான் பார்த்துட்டு தரேன்" என்று கூறியவளை சந்தியாவோ

"நான் தரேன்.ஆனா நீ பார்த்துட்டு அடிக்கலாம் கூடாது.எங்க ப்ராமிஸ் பண்ணு" என்று கூற சந்தேகமாக பார்த்த நந்தினி

"சரி சரி கொடு" என்று கூற அவளது லாப்டாப்பை ஆன் செய்து கொடுக்க சென்பகம் உள்ளே இருந்து

"ஏய் சந்தியா இப்போ வரியா இல்லையா"என்று சத்தமிட நந்தினியை பாவமாக பார்த்த சந்தியா

"சரிடி பூலான் தேவி கூப்பிர்ரா, நான் போயிட்டு க்ளாஸோட பெர்ஸ்ட் லெசன் படிச்சிட்டு வர்ரேன்" என்று கூறி மறைந்தாள்.

வீடியோ லெக்சரை பார்த்த நந்தினிக்கு சந்தியா மீது கோவம் வர அவளை தேடி அடுப்படிக்கு சென்றவள் அங்கு சந்தியாவின் நிலையை கண்டு மனதுக்குள் சிரித்தவள் தன் புன்னகையை மறைத்துகொண்டு

"ஏய் ப்ராடு, நீ பெருசா லெக்சர் எடுக்கும் போதே நினைச்சேண்டி.ரங்க பாஸ்யம் சார் சொன்ன எல்லாத்தையும் ஏதோ நீ கண்டுபுடிச்ச மாதிரி சொல்லிட்டேல" என்று கூற அசடு வழிந்த சந்தியா

"காலைல நான் உனக்கு பண்ண முழு அட்வைசும் சாரோடதுன்னு தெரிஞ்சி போச்சா.ஹாஹா..ஆமா நான் எப்போடி அது என்னோட கண்டுபிடிப்புன்னு சொன்னேன்.சும்மா பொதுவா சொன்னேண்டி"என்று கூற நந்தினி

"உன்னை என்ன பண்றேன் பாருடி" என்று கையில் கிடைத்த முருங்கைக்காயால் அவளை அடிக்க ஆரம்பித்தாள். 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro