1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே என்று தனது வாய்க்கு வந்த ஒரு பாடலை முணுமுணுத்தவாறே அந்த கலைக்கல்லூரியின் பறந்து விரிந்த மைதானத்தில் அந்த இளந்தென்றல் காற்று உடல் தழுவும் வேளையில் தன் கயல் விழிகள் இரண்டும் யாரின் வரவையோ எதிர் நோக்க வெண்டை பிஞ்சு விரல்கள் தனது hair கிளிப்பால் சிறை செய்திருந்த முன்னிருமுடிகள் அவளது பிறை நெற்றியை முத்தமிடும் ஆவலில் சிறையினை மீறி வெளி வந்து அவள் முன்னுச்சியில் அசைந்தாடுவதை ஒதுக்கிவிட அவளது வாழைத்தண்டை போன்ற கைகளில் இருந்த வளையல்கள் செல்லமாய் சிணுங்கியது .

அவளது மான்விழியின் அலைப்புறுதல் அவளது தோழியை கண்டதும் மாதுளை இதழ்கள் பிரிந்து ஒரு சிறு புன்னகையை சிந்த அவள் அருகில் வந்தமர்ந்தாள் அவளது தோழி வேதித்யா "ஹாய் ஆதி"என்ற அழைப்புடன் .

அவளது தோழியின் அழைப்பில் அவளை கண்டு புன்னகைத்த ஆதிரா "வாடி வா இவ்ளோ நேரமா வரதுக்கு கிளாஸ்க்கு போலாமா டி "என்க அவளோ ஆதிராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவள் பார்வையை கண்டு தன் வில் போல் வளைந்த புருவத்தை சுருக்கிய ஆதிரா "என்னடி அப்டி பாக்குற ?"என்க

வேதித்யாவோ ஒரு பெருமூச்சு விட்டவள் "ஹான் பொண்ணா பொறந்து பெரும் பாவம் பண்ணிட்டேன் டி "என்க

ஆதிராவோ மேலும் புருவத்தை சுருக்கியவள் "என்னடி லூசாட்டம் ஒளறிட்டிருக்க nutuh கழண்டுருச்சா?"என்க

அவளோ ஒரு ஏக்கப்பெருமூச்சு விட்டவள் "இப்டி லட்டு மாறி இருக்கியே பையனா பொறந்துருந்தா ரெமோ படத்துல வர சிவகார்த்திகேயன் மாறி துரத்தி துரத்தியாச்சும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருப்பேன் டி இப்டி மிஸ் ஆயிருச்சே"என்று வராத கண்ணீரை துடைத்து கொள்ள

தன் தோழி கூறிய விதத்தில் சில்லறையை சிதற விட்டார் போல் சிரித்தவள் "போடி லூசு ஆனா இப்போவும் ஒன்னும் கெட்டு போகலடி article 377 படி கல்யாணம் பண்ணிக்கலாம் என்ன சொல்ற"என்று கேட்டு கண்ணடிக்க

வேதித்யாவோ சிரித்தவள் "எனக்கு ஒன்னும் ஆப்ஜெக்ஷன் இல்ல பட் என்ன பண்றது அஜயோட எங்கேஜ்மெண்ட் ஆயிருச்சே சோ சாட்"என்று வருத்தப்பட தோழியர் இருவரும் இவ்வாறே சீண்டிக்கொண்டே வகுப்பறைக்கு வந்து சேர்ந்து பாடத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.

இவர்களை பற்றி ஒரு சின்ன அறிமுகம் கதை நாயகி ஆதிரா ஐந்தரை அடி உயரம் மாநிறம் ,கவர்ந்திழுக்கும் பெரிய காந்தக்கண்களோடு அவளது சிவந்த உதட்டைக்கொண்டு அவள் சிரிக்கையில் அவள் கண்களும் சிரிக்கும்.இடை தாண்டி முழந்தாளை தொட்டு அவள் நடைக்கேற்றார் போல் ஆடும் கரும்கூந்தலும் அவளது அழகை மேலும் கூட்டுவதற்கு அவள் உதட்டிற்கு மூக்கிற்கும் நடுவில் அமைந்த மச்சமும் அந்த அமைதியான அழகோடு ஆர்ப்பாட்டமில்லாத நீரோடை போன்ற அவளது குணமும் அந்த கல்லூரியில் பலரை அவளிற்கு அடிமை ஆகவும் ஆக்கி இருக்கின்றது எதிரி ஆகவும் ஆக்கி இருக்கின்றது .இது போதாதென்று அவளது பேச்சு திறனும் நடனத்திறனும் அவளை அக்கல்லூரியில் பிரபலமாக்கி விட்டிருக்க அதற்காகவே அவளுடன் நட்பு பாராட்ட தயாராக இருப்பவர் பலர் எனில் இதில் எந்த பொறாமையும் இன்றி எதிர் பார்ப்பும் இன்றி ஒரு நல்ல தோழியாய் நல்ல ஆசானாய் அவளை வழி நடத்துவது அவளது ஒரே தோழி வேதித்யா தான் .

வேதித்யா நமது பக்கத்துக்கு வீட்டு பெண்ணை போல் சாதாரணமான ஒரு பெண் தான் அவளது உயிர் தோழி என்று கூறினால் அது ஆதிரா மட்டுமே.தாயை சிறுவயதிலேயே இழந்திருந்த வேதித்யாவிற்கு ஆதிரா ஒரு நல்ல தோழி என்பதையும் மீறி அவளிடம் ஒரு தாய்மையை உணர்ந்தாள் வேதித்யா .தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தயங்குபவள் ஆதிராவிற்கு ஒன்றென்றால் வரிந்து கட்டிக்கொண்டு முதல் ஆளாய் சென்று நிற்பாள் .இவர்களது நட்பிற்கு இணை அவர்களே .இவ்வாறு அழகாய் தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை சென்றுகொண்டிருக்க தோழியர் இருவரும் தற்சமயம் journalism &mass communicationil இறுதி ஆண்டில் நுழைந்திருந்தனர் .

வகுப்பு முடிந்துவிட அவர்களின் ஆசிரியர் "so students your studies will be overed in next six months o i need your project thesis to be submitted in the next three months.you will be spiletted into groups with tree members in each.get ready to  travel towards your project destination"என்று விட்டு செல்ல

வேதித்யாவோ "ஆஹா என்னடா பொழுது விடுஞ்சுருச்சே ஒன்னும் நடக்கலையேன்னு பாத்தேன் நடந்துருச்சு .எவன்டி கண்டுபுடுச்சான் இந்த ப்ரொஜெக்டயும் மார்க் ஷீட்டையும் செய். அப்போவே அஜய் சொன்னான் கல்யாணம் பண்ணிக்கலாம்டி னு நா கேட்டேனா journalism படுச்சே தீருவேன்னு இந்த சொட்டைக்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன் "என்க

ஆதிராவோ சிரித்தவள் "விடு மச்சி நாம படுச்சது எவ்ளோ தூரம் அப்ளை பண்ண முடியுதுனு நாமே கண்டுபுடிக்குறதுக்கு தான இந்த ப்ரொஜெக்ட்டெல்லாம் என்ஜோய் பண்ணி பண்ணு மச்சி .சரி வா வெளிய நோட்டீஸ் போர்டுல போய் நாம ரெண்டு பெரும் யாரோட டீம் ஆகி இருக்கோம்னு பாப்போம் "

என்றவர்கள் வெளியே சென்று பார்க்க அங்கே நோட்டீஸ் போர்டில் மூன்று மூன்று மாணவர்களை பிரித்திருக்க இவர்கள் எந்த டீமில் என்று பார்க்க அதில் இவர்கள் இருவருடன் சேர்ந்து ஆதேஷ் என்பவனின் பெயரும் இருந்தது .

அந்த ஆதேஷ் என்ற பெயரை பார்த்ததும் ஆதிராவின் இதழ்களில் ஒரு குறுநகை பூக்க வேதித்யாவோ அவன் பெயரை அவர்கள் டீமில் பார்த்ததும் ஆதிராவை நக்கலாய் நோக்கியவள் "என்னதிது?"என்பதை போல் நோக்க ஆதிராவோ அவளை "சும்மா இருடி" என்று அதட்டியவள் பின்னே திரும்ப அவளின் எண்ணங்களின் நாயகனே தனது சிகையை கையால் சீர் செய்துகொண்டே அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான் அவனுக்கே உரிய அந்த கூர் பார்வையுடனும் கம்பீர நடையுடனும் .

ஆதேஷ் ஐந்தடி பத்து அங்குலம் உயரத்தில் சற்றே கருத்த தோலுடன் பிரெஞ்சு தாடியில் அந்த குழிவிழும் கண்ணச்சிரிப்போடு வளம் வரும் கருப்பழகன்.இந்த collegein ஸ்டுடென்ட் chairmannum அவனே. அவனது கம்பீரக்குரலிற்கு கட்டுப்படாதோர் இந்த கல்லூரியில் எவரும் இல்லை .ஆண்களிற்கு அவன் ஒரு ரோல் மாடல் பெண்களிற்கு அவன் ஒரு கனவு நாயகன்.எனில் இதை எல்லாம் தாண்டி அவன் அனைவர்க்கும் ஒரு புரியா புதிர்.ஆம் அவன் தேவைக்கு மேல் ஒரு வார்த்தையும் பேசியதில்லை அவனிற்கு நண்பர்கள் என்று யாருமில்லை இவ்வளவு ஏன் அவனது பெயரை தவிர்த்து எதுவுமே அந்த கல்லூரியில் எவருக்கும் எதுவும் தெரியாது.

ஆண்களை நிமிர்ந்தும் பார்த்திராத ஆதிரா சற்றே சலனப்பட்டது ஆதேஷிடமே .அவனது உதவும் குணமும் கம்பீரமும் அவளை அவனை நோக்கி ஈர்க்க அதோடு அவனை காண்கையில் எல்லாம் ஏனோ இனம் புரியாத ஒரு உணர்வு அவளை தாக்கும்.எனில் அவனோ அவளை மட்டுமல்ல எந்த பெண்ணையும் நெருங்கியதும் இல்லை நெருங்க விட்டதும் இல்லை .அவன் அருகில் வர வர ஆதிராவின் ஹார்ட் பீட் ஏகத்திற்கும் எகிற அவனோ இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல் நோட்டீஸ் போர்டில் தன் பெயரை பார்த்தவன் தனது டீமை பார்த்துவிட்டு இவர்களிடம் ஒரு கர்ட்டசிக்கு கூட பார்வையை செலுத்தாது சென்றுவிட்டான் .

அவன் சென்ற பின்னும் ஆதிரா அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருக்க அவள் தோளில் இடித்த வேதித்யா "அடியேய் ஆதி அவன் போய் ஆறு மாசம் ஆச்சு என்னத்த அங்கேயே ஆணு பாத்துட்ருக்க?"என்க

அசடு வழிய சிரித்த ஆதிரா "ஈஈஈ போலாம் மச்சி "என்று அவளோடு வெளியே நடக்க துவங்கினால் .

வேதித்யா "ஏன்டி உன் பின்னாடி காலேஜ்ல முக்காவாசி பேரு சுத்துறானுங்க அவனுங்கள எல்லாம் நிமிர்ந்து கூட பாக்க மாட்ட இந்த ஆதேஷ்ட்ட என்னடி அப்டி ஒரு speciality ?infact அவன் அவ்ளோ அழகாவும் இல்ல"என்க

ஆதேஷின் வதனத்தை நினைவில் நிறுத்திய ஆதிரா தன் மாதுளை இதழை பிரித்து மெல்லமாய் சிரித்தவள்"தெரிலடி.அவர் கிட்ட இருக்க ஏதோ ஒன்னோ இல்ல எல்லாமுமோ என்ன ஏதோ magnet வச்சு இழுக்குற மாறி அவர் பக்கம் இழுக்குது .அண்ட் அவரை பார்க்கேளெலாம் ஏதோ ஒன்னு சொல்ல தெரில என்னவோ என்ன தாக்குது."என்க

வேதித்யா "அப்போ லவ் பண்றியா ?"என்க

அவளோ மறுப்பாய் தலை அசைத்தவள் உதட்டை பிதுக்கி "தெரியல பட் புடுச்சுருக்கு "என்க

அவளை ஏதோ விசித்திர பிறவியை போல் பார்த்த வேதித்யா "என்னவோ பண்ணி தொள .சரிடி நமக்கு என்ன ப்ராஜெக்ட் குடுத்துருக்கானுங்க நீதான நோடிஸ்போர்ட உத்து உத்து பார்த்துட்ருந்த எங்க போணுமாம் "என்க

ஆதிராவோ "மங்கலாபுரின்னு ஒரு ஊரிருக்குடி அங்க ஊருல என்னவோ mysterious happenings இருக்காம் அதை தான் என்னனு பார்த்து detailed ரிப்போர்ட் தர சொல்லிருக்காங்க ."என்க

வேதித்யாவோ "ஐயா அப்போ ஊர் சுத்தி பாக்க போறோமா ?"என்க

ஆதிராவோ சிரித்தவள் "அதே அதே "என்று விட்டு தன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அவளை இரு கண்கள் நோட்டமிடுவதை அவள் அறிந்திருக்கவில்லை.அந்த இரு கண்கள் அவளை கண்டதும் ஆனந்தத்தில் விரிய வாயோ ஏதோ புரியா மொழியில் உளறியது.

இங்கே இவள் சந்தோஷமாய் இருக்க அவளது அன்னையும் தந்தையுமோ தங்களின் குடும்ப ஜோஸ்யரின் முன் பதற்றமாய் அமர்ந்திருந்தனர் .

ஜோசியர் "என்னாச்சும்மா என்ன திடீர்னு ரெண்டு பேரும் இவ்ளோ பதற்றம் இருக்கீங்க ?"என்க

ஆதிராவின் அப்பா "சாமி போன தடவ ஜோசியம் பாத்துட்டு போனப்போ என் பொண்ணுக்கு ஏதோ கண்டம் இருக்குன்னும் பரிகாரம் பண்ணுறதுக்கு ஒரு கயிறை குடுத்து அதை ஒரு மரத்துல கட்ட சொன்னீங்களே "என்க

அவரோ "ஆமாம் ஏன் என்னாச்சு "என்க

அவளின் அம்மாவோ "நாங்க அந்த கயிறு கட்டுனதும் பச்சை மரம் பத்தி எரியுது ஜோசியரே. எனக்கு ரொம்ப பயமா இருக்கு என் பொண்ணுக்கு எதுவும் ஆகாதே ?"என்க

அவரோ தன் கண்களை மூடி சிறிது நேரம் த்யானித்தவர் கலவரத்துடன் கண்களை திறந்தார் அவரது கலவரமாக முகத்தை பார்த்த பெற்றோர் உள்ளம் கலங்க ஆதிராவின் அன்னை "என்.. என்னாச்சு ஜோசியரே "என்க

அவரோ "உங்க பொண்ணுக்கு பெரிய கண்டம் ஒன்னு காத்துட்டு இருக்கும்மா "என்க

பதறிய அவளின் தந்தை "அப்போ அதற்கு பரிகாரம் தான் என்ன ?"என்க

அவரோ அவரை நோக்கி திரும்பியவர் "உலகில் சில விஷயங்களை பரிகாரம் மூலம் சரி செய்து விட முடியாது .இதுவும் அப்படியே அந்த ஈசனை நம்பி அவன் மீது உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள் நடப்பவை நல்லதாகவே நடக்கும் "என்க அவரது வார்த்தைகள் தந்த கலக்கம் அவரது மூளையை சுழன்றடிக்க குழம்பிய முகத்தோடு வெளியேறினர் பெற்றோர் இருவரும் .

so hipa first epi epdi irundhuchu again a small try in fantasy updates sathyama slowaah dhaan varum adjust karo .

first epi epdi irundhuchunu sollunga

ennada ipo dhaana onna muduchaa adhukulla innonnaanaadheengappa short story dhaan idhu .apdi dhaan nenachu aarambikuren updates late aagum edho thonuchu eludha aarambichuten paapom ini epdi podhunu ......

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro