15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆற்றின் பிரவாகத்தில் வீழ்ந்த நால்வரும் அதன் திசையில் அடித்து செல்லப்பட அதுவரை பேயறைந்ததை போல் தன் எண்ணங்களிலேயே சுழன்றிருந்த ஆதிரா ஆதேஷின் சட்டையை இறுகப்பற்றிக்கொண்டவள் அப்படியே அவனோடு புதைவதைபோல் அவனை இறுக்கிக்கொள்ள சற்று நேரத்திற்கெல்லாம் அவள் கண்கள் இருள மயக்க நிலைக்கு சென்று தன் கண்களை மூடினாள் ஆதிரா .அவள் கண்கள் மூடுமுன்னே கடைசியாய் நினைவில் வந்ததோ தன் முகசாயலை ஒத்த ஒரு சாந்தமான முகத்தை உடைய பெண்ணின் முகம் தான் .

அவள் மயங்குவதை அவள் பிடி தன் சட்டையில் இலகுவதிலேயே உணர்ந்த ஆதேஷ் அவளை சுற்றி தன் கையால் அணை போட்டவன் அவளை தன்னோடு நன்றாக இறுக்கிக்கொண்டு ஆற்றின் ப்ரவாகத்தோடு பயணிக்க சில மணிநேரப்பயணத்திற்கு பின் ஆற்றின் வேகம் மட்டுப்பட சீரான மிதமான வேகத்தில் மிதந்து கொண்டிருந்தனர் நால்வரும் .பின்னே திரும்பி பார்த்தவன் அஜய் உள்ளானா என்று பார்க்க அவனோ அவர்களிடமிருந்து கை தொடும் தூரத்தில் வேதித்யாவை இறுக்கி பிடித்தபடி ஆதேஷை கண்களால் எரித்தபடி மிதந்துகொண்டிருந்தான்.

பின் அவனது முறைப்பை வழக்கம் போல் உதாசீனம் செய்தவன் "அஜய் எதிர்ல ஒரு மரத்தோட கிளை தெரியுது பாரு அத புடுச்சு கரை ஏறிரலாம்டா "என்க அவனோ முறைத்துக்கொண்டு தலை ஆட்டி வைத்தான் .பின் மரக்கிளையை ஒரு  கையாலும் தமது துணைவியரை மற்றொருகையாலும் பற்றியவர்கள் கரையை அடைய அதுவரை பொறுமையை இழுத்து பிடித்திருந்த அஜய் அவன் ஆதிராவை கரையில் படுக்கவைத்துவிட்டு எழுந்த அடுத்த நிமிடம் அவன் கன்னத்தில் தன் கையை இடியென இறக்கினான் .

அஜயோ அடித்தும் ஆத்திரம் தாளாமல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டு நிற்க ஆதேஷோ எதிர்பார்த்தேன் என்பதை போல் ஒரு சிரிப்புடன் கன்னத்தை தடவிக்கொண்டான்.அவன் சிரிப்பதை பார்த்து மேலும் கடுப்பானவன் அவன் சட்டையை பிடித்து "டேய்ய் என்னடா நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? நீ செய்ற எல்லாத்துக்கும் நா ஒத்து ஊதிட்டு இருப்பேன்னு நெனச்சியா?உண்மைய சொல்லு அந்த ஓநாய்கள் தன்னிச்சையா வந்துச்சா இல்ல நீ வர வச்சியா ?"என்க

ஆதேஷோ "அது எதேர்ச்சியா நடந்தது தான் ஆனா ஓடுற திசையை சாதகமா மாத்திக்கிட்டது நா தான் "என்க

அஜய் புரியாத பாவனையுடன் நோக்க அவனோ ஒரு மர்மப்புன்னகையை வீச அதை பார்த்து ஏதோ புரிந்தவனாய் அஜய் "டேய்ய் அப்போ இது.............."என்று கேள்வியாய் நிறுத்த

ஆதேஷோ அங்கே தூரத்தில் தெரிந்த ஒரு மலைமுகட்டை கண்களால் காட்டியவன் "எல்லா கேள்விக்குமான பதிலும் அங்க தான் இருக்கு "என்றவன் பின் ஆதராவை எழுப்ப வேண்டி அவள் அருகில் சென்று அமர்ந்தான் .அவள் தலையை தன் கையில் ஏந்தியவன் அவள் கன்னத்தை தட்டி"ஆரா ஆரா"என்று மென்மையாய் அழைத்தவாறே தட்ட கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்களை திறந்தவள் ஆதேஷின் சட்டையை பற்றியவாறே கொஞ்சம் கொஞ்சமாய் எழுந்தமர அப்புறம் வேதித்யாவும் இப்பொழுது தான் எழுந்தமர்ந்திருந்தாள் .

அவன் சட்டையை பற்றியவாறே எழுந்து அவன் மீதே சாய்ந்தமர்ந்தவள் அவர்கள் இருந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்து மலங்க மலங்க விழித்தவள் ஆதேஷை நிமிர்ந்து பார்த்தவள் ஏனோ அதன் பின் அவனிடம் இருந்து ஏதும் பேசாமலேயே பிரிந்து அமர்ந்தாள் .

அவள் மலங்க மலங்க விழிப்பதை பார்த்த ஆதேஷ் தானே "இது என்ன இடம்னு தெரில ஆரா ஆறு அடுச்சுட்டு வந்ததுல நடுல வந்த மரக்கிளையை பிடிச்சு கரைக்கு வந்தோம் "என்க அவளோ ஏதும்கூறாமல் மௌனமாகவே இருந்தாள்.

அவனை சட்டென்று திரும்பி பார்த்த அஜய் "இது உலக மகா நடிப்புடா சாமி "என்று நினைத்தவன் பின் வேதித்யாவையும் கை தாங்கலாய் அழைத்து வந்து அவர்களின் அருகே அமர

வேதித்யா தன் கேள்வியை தொடுத்தாள் "இப்போ இருக்குற இடமே தெரில எப்படி இங்க இருந்து வெளிய போறது ?"என்க

அஜய் "அப்டியே காட்டுக்குள்ள போவோம்"என்றவன் பின் தன் இரு கைகளையும் ஏதோ கேமரா ஓப்பனிங் ஷாட் போல் செய்தவன் "துப்புசுக்கு துப்புசுக்கு man vs wild "என்க

வேதித்யாவோ தலையில் அடித்துக்கொண்டே "இது ஒன்னு எப்போவாச்சும் என்னதயாச்சும் ஒளறுவான் "என்றவள் கை கால்களில் இருந்த மண்ணை தட்டிவிட்டுவிட்டு எழுந்தவள்" சரி எவ்ளோ நேரம் இப்டியே உக்காந்துருக்குறது வாங்க உள்ள போலாம்" என்க மூவரும் அதை ஆமோதித்து உள்ளே நடக்க துவங்க அஜய் அவளை பின் தொடர ஆதேஷும் ஆதிராவும் அவர்கள் பின்ன சென்றனர்.

ஆதேஷ் முன்னே பார்த்துக்கொண்டே நடக்க ஆதிராவோ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நடந்தாள் ஆனால் இன்று அவள் கண்ணில் என்றும் வழியும் காதலுக்கு பதில் கட்டுக்கடங்காத கோபமே இருந்தது .

இவ்வாறு நடந்துகொண்டே இருந்தவர்கள் இருட்டத்துவங்க ஆதேஷ் "இருட்ட ஆரம்பிச்சுருச்சு guys இதுக்கு மேலயும் காட்டுக்குள்ள நடக்குறது safe இல்ல சோ இங்கயே ஏதாவது நல்ல இடமா பார்த்து நைட் தங்கிக்கலாம் "என்க மற்ற இருவரும் அதை ஆமோதிக்க ஆதிராவோ இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல் நின்றாள் .

சற்று நேரம் நடந்தவர்களின் கண்ணில் ஓர் சிறிய குகை தென்பட அதன் உள்ளே சென்ற ஆதேஷும் அஜயும் இரண்டிற்கு மூன்று முறை பாதுகாப்பை சரிபார்த்துக்கொண்டவர்கள் இங்கேயே தங்கலாம் என்று முடிவெடுக்க வேதித்யாவும் அதை ஆமோதித்தாள் .

அஜய் "டேய்ய் காலைல இருந்து ஒழுங்காவே யாரும் சாப்பிடல சோ நானும் நீயும் போய் பழம் பறிச்சுட்டு வரலாம் சாப்பிடுறதுக்கு "என்க

ஆதேஷ் ஆதிராவிடம் திரும்பி "நீயும் வேதியும் காஞ்ச விறகுலாம் கிட்ட இருக்குறத பொருக்கி வைங்க தீ மூட்டுறதுக்கு சரியாடா"

என்க ஆதிராவோ அவனை நிமிர்ந்தும் பாராது கீழே கிடைக்கும் சுள்ளிகளை பொறுக்க ஆரம்பித்துவிட்டாள் .

அவளின் இப்பாரா முகம் எதற்கென்று புரியாத ஆதேஷ் குழம்பியவாறே அஜயுடன் சென்றவன் கிடைத்த பழங்களை எல்லாம் பறித்துவிட்டு வர இங்கே வேதித்யாவும் ஆதிராவும் குகைக்கு வெளியே பிரம்மபிரயத்தனப்பட்டு தீ மூட்டி அதன் அருகே அமர்ந்திருந்தனர் .

இரவு நேரம் மின்மினியாய் நட்சத்திரங்கள் வானில் சிறு சிறு வெள்ளித்துளிகளாய் ஜொலி ஜொலிக்க பழம் பறித்துக்கொண்டு வந்தவன் தீப்பிழம்பின் அருகே அது தந்த மங்கிய வெளிச்சத்தில் ஈரம் சொட்டும் தலைமுடியை விரியவிட்டவாறு முகத்திலும் கைகளிலும் இருந்த நீர்த்துளிகள் அன்று பூத்த ரோஜாவாய் அவளை அவன் கண்களிற்கு விருந்தளிக்க காதல் கசிந்துருகும் பார்வையால் அவளை வருடிக்கொண்டே அவள் அருகில் தோளோடு தோள் உரசியவாறு வந்தமர்ந்தான் ஆதேஷ் .

அவன் வந்தமர்ந்ததை உணர்ந்தாலும் அவன் புறம் திரும்பாமலே அமர்ந்திருந்ததாள் ஆதிரா .தான் கொண்டு வந்த பழங்களிலிருந்து ஒன்றை உடைத்து அவளிடம் நீட்ட அவளோ அதை வாங்காது அஜய் அவளிடம் நீட்டிய பழத்தை வாங்கி உண்டாள்.அவள் தன்னை விளையாட்டாய் தவிர்க்கிறாள் என்று நினைத்தவன் சிரித்தபடி அவளை பார்த்தவாறு உண்டுவிட்டு வேதித்யாவிடமும் அஜயிடமும் மீதி பழத்தை கொடுத்துவிட்டு அவளை பார்த்தவாறு அமர்ந்திருக்க அஜயும் வேதித்யாவுமோ உண்டுவிட்டு குகைக்குள் சென்றுவிட்டனர் உறங்க வேண்டி .

அவனின் ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்தவள் அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் உள்ளே எழுந்து செல்ல போக அவனோ அவள் கையை பற்றியவன் அவள் கையை இழுக்க அவன் மேலே வந்து விழுந்தாள் ஆதிரா.

தன் மடிமேல் விழுந்தவளை தன்னோடு சேர்த்து பின்புறமாய் அணைத்தவன்"என்ன மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க .என் முகத்தை கூட பாக்க மாட்டேங்குறீங்க ?காலைல இருந்து பேசவே மாட்டேங்குறீங்க என் முகத்தை பார்த்து. பொதுவா பேசுறீங்க .என்ன கோலம் உன் அது மேல ?"என்க

அவளோ ஒரு தீ கக்கும் பார்வை அவனை பார்த்தவள் அவன் கையிலிருந்து விடுபட்டு காட்டின் புறம் நடக்க ஆரம்பிக்க அவளது கோபத்தை ஏதோ செல்ல சீண்டல் என்று நினைத்தவன் சிரித்தபடி அவள் பின்னே ஓடினான் "ஹே ஆரா ஆரா"என்று அவள் பின்னே ஓட அவளோ வேகவேகமாய் அங்கிருந்து நகர்ந்து வந்தவள் ஆற்றங்கரை ஓரத்தில் ஓடும் ஆற்றின் நீரை நிலவின் வெளிச்சத்தில் பார்த்தவாறே கையை கட்டி நின்றுகொண்டாள்.

அவள் கையை கட்டிக்கொண்டு நிற்பதை நிலவின் வெளிச்சத்தில் அவள் ஒளிர்விடும் வதனத்தை ரசித்துக்கொண்டே வந்தவன் அவளை பின்னிருந்து அணைத்து "என்ன கோவமாம் என் ஆராவுக்கு என் மேல.என்னனு சொன்னா தான மேடம் தெரியும் ?"என்க

அவளோ அமைதியாய் அப்படியே நிற்க அந்த ஆற்றின் குளுமையும் அவளின் அருகாமையும் ஆதேஷின் மூளையை மழுங்கடிக்க

அவளை தன் புறம் திருப்பி அவள் இடையை பற்றியவன் நெற்றியில் முத்தமிட்டவன் இமைகளில் முத்தமிட்டு கீழிறங்க அவளின் "இது என்ன பார்ட் of பிளான் வக்கீல் சார்"என்ற கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்து அவளை விட்டு விலகினான் .

தான் ஏதும் தவறாய்கேட்டு விட்டோமா என்று அவளை பார்க்க அவளோ வேல் போன்ற விழியால் அவனை துளைத்துக்கொண்டிருந்தால் அவள் கண்களில் அப்பட்டமாய் ஏமாந்ததன் வலியும் அதை மீறிய கோபமும் தெரிந்தது ."சொல்லுங்க ஆதேஸ்வரன் ba bl பேமஸ் கிரிமினல் lawyer இப்போ என்ன பிளான் படி என்ன இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க ?"என்று கத்த

அவனோ தன் தடுமாற்றத்தை மறைத்து "ஆரா என்ன லூசு மாறி வக்கீல் அது இதுனு பேசுற "என்க அவளோ தன் pant பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த அவன் pursai கையில் எடுத்து காட்டியவள் அதில் இருந்தவை அனைத்தையும் கீழே கொட்ட பணத்துடன் சேர்ந்து அவனது விசிட்டிங் கார்டும் கீழே விழுந்தது.

மாட்டிக்கொண்டதை உணர்ந்தவன் எதையோ கூறி சமாளிக்கலாம் என்று "அது அது அரா எனக்கு உன்ன பார்த்ததும் புடிச்சுருந்தது அதான் உன்னோடயே இருக்கணும்னு நெனச்சு உன் காலேஜ்ல சேர்ந்தேன் "என்க

அவளோ அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தவள்"ஓஓஒ அப்டியா "என்று அவள் லாக்கெட்டை திறந்தவள் அவன் இடக்கையை பற்றி அவன் முழுக்கை சட்டையை மேலே இழுத்தவள் அதிலிருந்த ப்ரேஸ்லெட்டையும் அதில் இருந்த லட்சினைகளை காட்ட பேந்த பேந்த முழித்தான் ஆதேஷ் .

பின் "என்ன மிஸ்டர் உனக்கும் எனக்கும் இருக்குற சம்மந்தம் எனக்கு தெருஞ்சுருச்சே இப்போ எப்படி சமாளிக்குறதுனு யோசிக்குறியா? இரு அப்போ இன்னொண்ணையும் காட்டிருறேன் சேர்த்தே சமாளிக்க ஏதாச்சும் யோசி "என்றவள் அவன் அருகே சென்று அவன் சட்டை பட்டனை வேகவேகமாய் கழட்டியவள் அவன் மார்பில் சூடு பட்டது போன்ற தழும்பிற்கு கீழே இருக்கும் தன் கையில் இருக்கும் அதே அடையாளத்தை காட்டியவள்"என்ன இது ?"என்று கத்த ஆதேஷோ பேச்சற்று நின்றான் .

அவன் அப்படியே நிற்பதை பார்த்தவள் "சொல்லுடா என்ன இது ?எதுக்குடா வக்கீலா இருக்கறவன் என் காலேஜ்ல வந்து சேர்ந்த? எப்படி என் கைல இருக்குற அடையாளமும் உன் நெஞ்சுல இருக்குற அடையாளமும் ஒன்னா இருக்கு ?அன்னைக்கு நானும் நீயும் மட்டும் எப்படி அந்த கோவிலுக்குள்ளே போக முடுஞ்சது ?எதுக்கு என்ன இந்த காட்டுக்குள்ள அழைச்சுட்டு வந்துருக்குற ?சொல்லு "என்று கத்த

அவனோ அவள் கையை இரு கைகளாலும் பிடித்தவன் "ஆமாடி உன்ன பிளான் பண்ணி தான் இங்க கூட்டிட்டு வந்தேன் .உன்னோட இடத்துக்கு கூட்டிட்டு வந்துருக்குறேன் உன்னோட கடமையை முடிக்க கூட்டிட்டு வந்துருக்குறேன். ஆதவக்குலத்துல பிறந்த மங்கலாபுரியோட இளைய இளவரசி உன்ன உன் இடத்துக்கு பிளான் பண்ணி கூட்டிட்டு வந்துருக்கேன் "என்க

அவளோ அவன் கூறிய செய்தியில் கைகளில் நடுக்கம் பரவ உதடு துடிக்க அவனையே வெறித்தபடி நின்றாள் அதிர்ச்சி அவளை சிலை ஆக்கி இருந்தது . 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro