18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவள் வெண்ணிலவை வெறித்துக்கொண்டிருக்க தன் அருகே கேட்ட காலடி சத்தத்தில் சற்று தலையை திருப்பி பார்த்தாள்.அவள் முகத்தில் படர்ந்த ஏளனச்சிரிப்பு அவள் கண்களில் பிரதிபலித்தது .

அங்கே அவள் முன் வந்து நின்றான் அந்த கூட்டத்தின் தலைவன் .அவன் வந்ததும் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவள் அவனின் பின்னே பார்த்தவள் இதழ்கள் மீண்டும் ஏளனத்தில் வளைந்தது "என்ன மீண்டும் தோல்வியை தழுவினீரோ ?"என்று பரிகாசமாய் சிரித்தவள் "அதர்மம் என்றும் வெல்வதில்லை மூடனே. அவளின் நிழலையும் உன்னால் நெருங்க இயலாது "என்க

அடுத்த நொடி அவள் கன்னத்தை பதம் பார்த்தது அந்த தலைவனின் கை. அவள் தடுமாறி கீழே விழ அவள் முகத்தருகே குனிந்து சற்று நேரம் அவளை உருத்து பார்த்தவன் பின் அவள் முடியை கொத்தாய் பற்றி தூக்க அவள் முகத்தில் நிலவின் ஒளி மொத்தமாய் விழ ஒரு நிமிடம் இங்கிருப்பவள் ஆதிராவோ என்றெண்ணும் அளவிற்கு அவளின் மறுபிம்பமாய் இருந்தாள் அப்பெண்.

கண்ணில் சோர்வையும் மீறிய கம்பீரம் உதட்டில் உறைந்த ரத்தத்தையும் மீறி ஏளனத்தில் விரிந்த இதழ்கள் அடிவாங்கியதில் கொஞ்சமும் தடுமாறாமல் புன்னகையை ஏந்தி உன்னால் முடிந்ததை செய்துகொள் என்ற பாவனையில் விரிந்த கண்களென மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் அவர்கள் செய்யும் கொடுமைகளையும் மீறி எதிர்த்து நிற்கின்றாள் ஆதவகுளத்தின் மூத்த இளவரசி ஆதிராவின் உடன்பிறந்த ரெட்டை சகோதரி ஆராதனா .

அவள் அருகில் குனிந்த அந்த தலைவன் அவளின் சளைக்காத சிரிப்பை கண்டு ஏளனத்தின் இதழ் விரிய அவ்விடமே அதிரும் அளவில் சிரித்தவன் "முட்டாளே இத்தனை வருடங்களாக உன்னை மீட்க இயலாத பேடிகள் அவளை காக்க போகின்றனரோ? சிந்தையில் வை இந்த பௌர்ணமி உம் இருவரின் மரணசாசனம் எமது கையால் எழுதப்படும் ."என்றவன் அவளை தள்ளிவிட்டு வெளியே செல்ல

கீழே விழுந்தவள் தட்டு தடுமாறி எழுந்தமர்ந்தவள் அவனை நோக்கி "பௌர்ணமியை நோக்கி ஆவலாய் காத்திருக்கிறேனடா எனது மரணசாசனத்தை நீ எழுத அல்ல உம் மரணசாணத்தை எம் இளவலுடன் யான் எழுதிட "என்க அத்தலைவனோ ஒருமுறை அவளை நோக்கி ஓர் ஏளனப்புன்னகையை சிந்திவிட்டு சென்றுவிட்டான் .

அவன் செல்லும் வரை இருந்த தைரியம் அதன் பின் ஏனோ மொத்தமாய் வடிந்ததை போல் பொத்தென்று தரையில் அமர்ந்தவள் கண்களில் நிறைந்த கண்ணீர்த்துளிகள் கீழே தரையில் அவள் வரைந்து வைத்திருந்த ஓவியத்தில் சிதற அவ்வோவியத்தில் சிரித்துக்கொண்டிருந்தனர் ஐந்து வயது சிறுமிகளாய் ஆதிராவும் ஆராதனாவும் .ஆதிராவின் பிம்பத்தை வருடியவள் இதழ்கள் "ஆதி ......."என்று மெல்ல முணுமுணுத்து .

இங்கே இவள் இப்படி இருக்க அங்கு ஒருத்தியோ தனது பிறப்பு ,தனது அடையாளம் ,தனது வாழ்வின் கருப்பு பக்கங்கள் எதையும் அறியாது துயில் களைந்து எழுந்தாள் .அருகில் வேதித்யாவை காண அவளோ நேற்று முழுவதும் ஓடி அலைந்த அசதி நேற்று நடந்த நிகழ்வுகள் தந்த அதிர்ச்சியில் தாமதமாக தூங்கியதால் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் .

அவள் தலைமுடியை வருடியவள் மனதிற்குள் தன்னால் அவள் வருந்துவதற்கு மன்னிப்பு கேட்டவாறு எழுந்து அக்குடிலின் அமைப்பை பார்த்தாள்.

அவர்கள் படுத்திருந்தது ஓர் களிமண் மேடையின்மேல் அடுக்கப்பட்டிருந்த வைக்கப்போரில் போர்த்தப்பட்ட்டிருந்த துணியின் மேல் தான்.கீழே இறங்கியவள் அவ்விடத்தை அளவிட சிறிதாய் அவளின் அறை அளவிற்கே இருந்தது அக்குடில் .அதில் ஓரத்தில் சிறிதாய் மேடேறிய இடத்தில மண்ணடுப்பும் அதன் அருகில் ஒரு சில களிமண்ணால் ஆன சாமான்களும் இருக்க சுற்றி சுற்றி வந்தவளிற்கு பல் துலக்க பல்பொடி கூட கிடைக்கவில்லை .

நேற்றிலிருந்து இறுக்கமாய் போட்டிருந்த ஜீன்ஸ் வேறு கால்களில் நரம்பு பிடித்து பிடித்து இழுக்கும் உணர்வை தர ஒட்டுமொத்த எரிச்சலும் ஆதேஷின் மேல் திரும்பியதவளிற்கு. "எரும மாடு அவன் மட்டும் என் கண்ணுல மாட்டட்டும் அம்மிக்கல்லை தூக்கி நடுமண்டைல போடுறேன் "என்று அவனை வறுத்தெடுக்க மனசாட்சியோ"எது நீ" என்று சிரித்துக்கொண்டது .

அதை தலையில் தட்டி அமைதி அடையச்செய்தவள் கைகளை நெட்டிமுறித்தவாறே விரிந்திருந்த கூந்தலை கொண்டையிட்டுக்கொண்டு

வெளியே வர அங்கே அந்த விடிந்தும் விடியாத காலையிலேயே சிறுவர்கள் முதல் அனைவரும் வெளியே வந்து அவரவர் வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தனர் .

இவள் வெளியே வருவதை பார்த்து சிரித்த ஒரு பருவப்பெண் " ஏதேனும் உதவி வேண்டுமா  ?"என்க

அவளோ உதட்டளவில் சிரித்தவள் "அது brushuh ........பாத்ரூம் "என்றிழுக்க அவளோ சிரித்துக்கொண்டு உள்ளே ஓடிச்சென்று ஒரு வேப்பம் குச்சியை எடுத்துவந்தவள் கையில் சிறிது சாம்பலையும் எடுத்து வந்து அவள் கையில் கொடுக்க என்ன இது என்று விளங்காமல் தன் கையையே மாறி மாறி பார்த்தாள் ஆதிரா .

அவள் விழிப்பதை பார்த்து குழம்பிய அந்த பெண் "இளவரசியாரே இங்கே தாங்கள் கேட்கும் வேதியல் பொருட்கள் ஏதும் இருக்காத இளவரசியாரே இதை வைத்து தான் பல்துலக்க வேண்டும்.குளிப்பதற்கு இங்கிருந்து அரை காத தூரத்தில் ஒரு சிறிய குளம் ஒன்று உள்ளது அங்கே தான் குளிக்க வேண்டும்" என்க

ஆதிராவோ ஆயாசமாய் உணர்ந்தவள் அவளிடம் திரும்பி "எனக்கு ரெண்டு உதவி மட்டும் பண்ணு .முதல் உதவி என்ன இளவரசியாரேனு கூப்பிடாத உன்ன விட வயசுல பெரியவளா இருப்பேன்னு நினைக்குறேன் சோ அக்கானே கூப்டு ரெண்டாவது என்ன கொஞ்சம் அங்க கூட்டிட்டு போறியா அப்பறோம் மாற்றுத்துணி "என்று கேட்க வர

அவர்கள் பேச்சை இடைவெட்டும் விதமாய் ஆதேஷின் குரல் கேட்டது "என்ன காலையிலேயே பெண்களின் மாநாடு கூடிவிட்டது "என்க

அவனின் குரலில் திரும்பியவள் வழக்கம் போல் அவனது தோற்றம் கண்டு சிலை ஆகி போனாள்.மேல் அங்கி அணியாமல் கீழே இங்கிருக்கும் ஆண்களை போல் ஒருவிதமான பருத்தியால் ஆன துணியில் pant போல் அணிந்திருந்தவன் தோளில் இருந்த விறகுக்கட்டைகளை அங்கே ஓரமாய் விறகுகள் சேகரிக்கும் இடத்தில போட்டுவிட்டு தலையில் கட்டி இருந்த தலைப்பாகையை அவிழ்த்தவன் வேலை செய்ததன் அடையாளமாய் உடலில் துளிர்ந்திருந்த வியர்வைத் துளிகளை துடைக்க சற்று நேரம் அவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தவள் பின் அவன் தன்னை கண்டு கண்சிமிட்டவும் அதில் கலைந்தவள் முகத்தை ஒரு வெட்டு வெட்டி வெறுப்புறம் திரும்பிக்கொண்டாள்.

அங்கிருந்த பெண்ணோ இவர்களின் மௌனநாடகத்தை கண்டு சிரித்தவள் அவன் புறம் திரும்பி"ஹான் தமயனாரே தங்களை தான் தேடிக்கொண்டிருந்தேன் இளவரசிக்கு ....என்றவள் ஆதிரா முறைப்பதை கண்டு நாக்கை கடித்தவள் அக்காவிற்கு குளிக்க வேண்டுமாம்.உள்ளே பானையில் உணவுப்பதார்தங்களை வைத்துவிட்டு வந்துவிட்டேன் மற்ற பெண்கள் அனைவரும் வயற்காட்டிற்கு நாற்று நடுவதற்காக சென்றுவிட்டனர் ஆதலால் தாங்களே அவர்களை அழைத்து சென்று விடுங்கள் ."என்றுவிட்டு ஆதிரா கத்த கத்த கேட்காமல் உள்ளே சென்றுவிட்டாள் .அவளை மனதிற்குள்ளே அற்சித்தவள் அவனை ஒருமுறை முறைத்துவிட்டு அவனுடன் நடந்தாள்.

அவள் மௌனமாய் நடந்துகொண்டே இருக்க அவனோ அவளின் மௌனத்தை கலைக்க வேண்டி "என்ன ஆரா மேடம் ரொம்ப silentaah வரீங்க எப்படி இருக்கு நம்ம ஊரு "என்க

அவளோ அவனை ஒரு முறை முறைத்தவள் "இது ஒன்னு தான் கொறச்சல் "என்று முணுமுணுத்தவள் பின் மாற்றுத்துணி இல்லாததன் நினைவு வர தயக்கமாய் " எனக்கு மாத்திக்க டிரஸ் இல்ல "என்க

அவன் ஏதோ காதில் ஏதும் விழாததை போல் வர கடுப்பானவள் அவன் தோளில் தட்டி" உங்கள தான் எனக்கு மாத்து துணி வேணும் "என்க

சுற்றி முற்றி பார்த்தவன் பின் "ஓஹ் எந்த தான் பேசுனியா நா கூட எதிர்ல யாரோ வராங்க போல அவுங்கட்ட பேசரியோன்னு நெனச்சேன் "என்று சிரிக்க

அவனை மூக்கு முட்ட முறைத்தவள் "இப்போ ட்ரெஸ்ஸுக்கு ஒரு வழி சொல்லுங்க "என்க

அவனோ சிரித்தபடி ஒரு நிமிடம் என்றவன் தங்கள் குடிலிற்குள் அவளை கைப்பற்றி அழைத்து சென்றவன் அங்கிருந்த பெட்டிகளில் ஒன்றை திறந்து ஒரு சேலையை எடுத்து கொடுக்க .சேலையை பார்த்து அவள் திருதிருவென விழிக்க அவனோ அவளை குழப்பமாய் பார்த்தவன் "என்ன ?"என்க

அவளோ தலையை குனிந்து கொண்டவள் "எ...... எனக்கு சேலை கட்ட தெரியாது "என்க

அவனோ உதட்டை மடித்து சிரிப்பை கட்டுப்படுத்தியவன் பின் ரொம்ப சோதிக்க வேண்டாமென்று இன்னொரு பெட்டியை திறந்து அதிலிருந்து ஒரு சுடிதாரை எடுத்து அவளிடம் கொடுத்தான் .அதை விரித்தவள் தன் அளவிற்கு கனக்கச்சிதமாய் இருப்பதை பார்த்து எப்படி என்று நோக்க

அவனோ "மூணு வருஷமா பாக்குறேன் இது கூடவா தெரியாது ?இன்னும் வெவரம் தெரியாத சின்ன புள்ளையாவே இருக்கியே ஆரா "என்க

அவளிற்கு முகம் சிறுத்துப்போனது "ஆமா ஆதேஷ் மூணு வருஷமா நீங்க என்ன follow பண்றது கூட தெரியாம நா யாருனு இப்போ வரைக்கும் தெரியாம இவ்ளோ நடந்ததுகப்ரோமும் உங்க மேல நம்பிக்கை கொறையாம இருக்கேன் பாத்தீங்களா நா வெவரமில்லாதவ தான் "என்றுவிட்டு விறுவிறுவென வெளியே சென்றுவிட

அவன் மனசாட்சியோ "உள்ளதும் போச்சா" என்று நொந்துகொள்ள பின் அவள் பின்னோடு சென்றவன் அவள் கையை பற்றி தன்னருகில் இழுத்தவன் அவள் தலையை குனிந்தவாறு இருக்க அவள் நாடியை தன் இருவிரல் கொண்டு நிமிர்த்தியவன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே "ஆரா உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் கண்டிப்பா இன்னைக்கு ராத்திரி உனக்கு தெருஞ்சுரும் அது வரை கொஞ்சம் பொறுமையா இரு ப்ளீஸ் "என்றவன் அதற்கு பின் ஏதும் பேசாமல் அவளை வழிநடத்தி சென்றான்.

ஒரு குறுகலான பாதையை தவிர்த்து இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருக்க அங்கே மேல இருவர் நுழையும் அளவிற்கு இருந்த துவாரத்தின் முன்னே கொடிகளை இணைத்து ஒரு திரையை போல் அமைத்திருக்க அதை விளக்கி விட்டு ஆதேஷ் முன்னே நடக்க அவன் பின்னே வந்தவளோ தூரத்தில் வட்டமாய் சுற்றிலும் மரங்கள் பாதுகாப்பு கவசம் போல் முழுதாய் அவ்விடத்தை சூழ்ந்திருக்க அங்கே குளத்தில் ஆங்காங்கே பூத்திருந்த தாமரை மரர்களும் அதன் மேல் வட்டமிட்டு ரீங்காரமிடும் வண்டுகளும் பறவைகளின் கூச்சலும் ஆதிராவின் மனதில் இருந்த கோபத்தை சற்று தணிக்க சிறு குழந்தையாய் மாறியவள் திடுதிடுவென குளத்திற்குள் இறங்கி கும்மாளமிட துவங்கினாள்.

அவளின் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்த ஆதேஷ் இதற்கு பின் இங்கே நிற்பது நாகரிகம் இல்லை என்று அங்கிருந்து நகன்றவன் அந்த குளத்தை விட்டு தள்ளி சென்றவன் அங்கே அவர்கள் கொடிகளை இணைத்து செய்திருந்த திரைபோன்ற அமைப்பை இழுத்துவிட்டு அதன் வெளியே நின்றுகொள்ள அவனை கவனித்துக்கொண்டிருந்த ஆதிராவிற்கு அவனின் கண்ணியமான இந்த செய்கை உதட்டில் ஒரு புன்னகையை படரவிட்டது.

புத்துணர்ச்சியோடு பல் துலக்கி குளித்து முடித்தவள் பின் அங்கேயே காலைக்கடன்களுக்கென்று அவர்கள் ஒதுக்கி வைத்திருந்த பகுதிக்குள் சென்றவள் அவற்றை முடித்துவிட்டு அவன் கொடுத்த உடையை உடுத்திவிட்டு முடியை விரித்து காயவைத்தவாறே வெளியே வர மயில் கழுதுநிறத்தில் அந்த உடையில் பாந்தமாய் பொருந்தி இருந்தவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் பின் ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு அவளை அழைத்து செல்ல அவனின் செய்கையை பார்த்தவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் பின்னே சென்றால்.

இவ்வாறே காலை நேரத்தை வயற்காட்டிலும் அந்த மக்களுடனும் செலவிட்டவள் அஜயையும் வேதித்யாவையும் நோக்க அவர்களோ ஏதோ இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களை போல் அந்த கிராமமக்களோடு ஒட்டிக்கொண்டனர் .

அந்தி சாயும் வேளை அங்கே இருந்த பெண்களுடன் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் உட்கார்ந்து கதை அளந்துகொண்டிருக்க அங்கே வந்த ஒரு சிறுவன் ஒருமுறை சிரம் தாழ்த்தி அவளை வணங்கியவன் "இளவரசியாரே தம்மை குலத்தலைவர் அழைத்துவர கூறினார் "என்க

ஆதேஷ் காலையில் கூறியவை நினைவில் வர அவனிடம் தலை அசைத்தவள் அங்கிருந்து எழுந்து அவனுடன் செல்ல உள்ளே ஓர் குடிலுக்குள் அழைத்துச்செல்லப்பட்டவளின் முன்னே ஒரு புறத்தில் ஆதேஷும் மறுபுறத்தில் அருள்மொழிவேந்தனும் ஆசனத்தில் அமர்ந்திருக்க நடுவில் இடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார் குலத்தலைவர் .

அவர் முன்னே வந்தவள் அனிச்சை செயலாய் அவர் தாழ் பணிந்து வணங்கி எழ அவள் தலையை ஆதுரமாய் வருடியவர் "ஆயுஷ்மான் பவ. சென்று அமரம்மா" என்க ஆதிராவோ ஆதேஷின் அருகே இருந்த இருக்கையில் சென்று அமர அதை கண்டு மௌனச்சிரிப்பு சிரித்த குலத்தலைவர் பின் "ஆதிரா தமக்கு இங்கே நடப்பவை ஒன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை எனில் தாம் இப்பொழுது தமது சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உம்மாலே யாம் தொலைத்த பொக்கிஷத்தை யாம் மீட்டெடுக்க இயலும் "என்றவர்

பின் ஒரு படத்தை எடுத்து விரிக்க அதில் இருந்த ஓவியத்தை கண்டவள் திகைத்தாள் "இது இது இந்த குழந்தை நா நான் என் கனவில் பார்த்துருக்கேன்." என்க

அவரோ யான் அறிவேன் என்பதாய் தலை அசைத்தவர் "இதில் இருப்பது யாரென்று அறிவாயா ?"என்க

அவளோ இடவலமாய் தலை அசைக்க அவரோ தொடர்ந்தார் "எமது ஆதவகுலத்தின் பொக்கிஷம் அறுபது சந்ததிகளுக்கு பின் அறுநூறு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சக்தியின் அருள் நிறைந்த பௌர்ணமியில் அம்மனின் மறுபிரதியாய் துஷ்டர்களின் தாக்குதல்களால் இறந்து போன அவளின் அன்னையின் வயிற்றிலிருந்து ஒரு மணி நேரம் கழித்து உயிரோடு வெளியில் எடுக்கப்பட்ட அதிசய சிசு .எமது குளத்தை தழைக்கவைக்கவும் இறை அருளை மொத்தமாய் தனது உடமையாக்கி வந்து பிறந்த எம் இளவரசி .உன்னையும் உனது சகோதரியையும் ஈன்றெடுத்த உன் அன்னை ஆருத்ரா தேவி "என்று இன்னொரு வரைபடத்தை அவளிடம் கொடுக்க நடுங்கும் கரத்தால் அதை வாங்கி பார்த்தவள் கண்கள் கண்ணீரை சுரக்க அவள் கைகள் அதிலிருந்த பிம்பத்தை வருடியது.

அதில் ஐந்து வயது சிறுமிகளான ஆராதனாவையும் ஆதிராவையும் அணைத்தவாறு முகத்தில் விசாலமான புன்னகையோடு அகண்ட நெற்றியில் நிறைந்த குங்கும பொட்டில் அவளின் தற்போதய தோற்றத்தை அச்சில் வார்த்தவாறு அவ்வோவியத்தில் காட்சி அளித்தார் ஆருத்ரா தேவி ......................

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro