2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இவ்வாறு மகிழ்ச்சியாய் கிளம்பி வந்தவள் வீட்டிற்குள் "பாப்ஸ் மீ "என்று நுழைய அவளது குரலை கேட்ட பெற்றோர் தங்களது கலங்கிய முகத்தை சீர் செய்து கொண்டனர் .

உள்ளே வந்ததும் தன் கைப்பையை sofaavil வீசியவள் ஓடி சென்று தன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டாள் ."ஹே பாப்ஸ் குட் ஈவினிங் "என்க

அவரோ அவள் தன் கழுத்தை சுற்றி போட்டிருந்த கரத்தை போற்றியவர் "வாடா குட்டிமா என்ன இன்னைக்கு நீ ரொம்ப குஷியா இருக்குற மாறி இருக்கு"எங்க அவளோ அவர் முன் வந்து அவர் sofaavil அவரிற்கு அடுத்து அமர்ந்திருந்த தன் அன்னையை தன் இடுப்பால் ஒரு இடி இடித்தவள் நா வந்தப்ரோம் என்ன என் பாப்ஸ் பக்கத்துல உக்காருற மீ நீ நகரு" என்று விட்டு நடுவில் அமர

அவரோ தன் மகளின் குரங்கு சேட்டையை பார்த்து சிரித்தபடி தலையில் அடித்தவர் "நா என் புருஷன் பக்கத்துல உக்காந்தா பொறுக்காதே உனக்கு "என்றவாறு தள்ளி அமர

அவளோ அவரிடம் திரும்பி நாக்கை துருத்தி அழகு காட்டியவள் தன் தந்தையிடம் திரும்பி "பாப்ஸ் நாங்க ப்ராஜெக்ட் பண்றதுக்காக ஒரு ஊருக்கு போறோம் பாப்ஸ் .ஒன் month விசிட் detailed ரிப்போர்ட் கலெக்ட் பண்ணிட்டு வந்துருவோம் .இட் will be filled with adventure அண்ட் thrill பாப்ஸ்"என்க

அவரிற்கோ ஜோசியர் கூறிய வார்த்தைகள் நினைவில் வந்து போனது .இதனால் தன் மகளிர்க்கு ஏதும் ஆபத்து நேருமோ என்று அவர் கவலை கொள்ள தந்தையின் முகமாற்றத்தை தன்னை பிரிந்து இருப்பதற்காக வருந்துகிறார் என்று நினைத்தவள் அவர் தாடையை பிடித்து "பாப்ஸ் பாப்ஸ் அப்டி முகத்தை வைக்காத பாப்ஸ் ncc கேம்ப் போற மாதிரி நெனச்சுக்கோ பாப்ஸ் வேதுவும் என் டீம்ல தான் இருக்கா one month தான் ஜிங்குனு போய்ட்டு ஜங்குன்னு வந்துருவேன் "என்க

தன் ஒரே மகள் ஏதும் வேண்டும் என்று கேட்குமுன்னே அவளிற்கு அதை கொடுத்து பழக்கப்பட்ட அவரிற்கு தன் மகள் கெஞ்சினாள் சம்மதிக்காமல் இருப்பாரா .சிரித்தவர்"ஓகேடா குட்டிமா போயிடு வா "என்க

அவளோ குதூகலமாய் எழுந்து நின்றவள் நிஜமாவா பாப்ஸ் என்று தன் இடையில் கை வைத்து குனிந்து நின்றவள் ஒற்றை புருவத்தை தூக்கி "பேச்சு மாறமாட்டீங்களே "என்க

அவரோ விபரீதம் புரியாது தன் மனைவி ஏதோ கூற வந்ததையும் பொருட்படுத்தாது அவள் கையில் தன் கையை வைத்தவர் "promiseda குட்டி போயிட்டு வா "என்க

அவளோ சிரித்தவள் "ஓகே பாப்ஸ் அப்போ நா மங்கலாபுரிக்கு போறதுக்கு பேக் பண்றேன் "என்று விட்டு தன் அறைக்குள் ஓடி விட அவள் கூறிய ஊரின் பெயரை கேட்ட அவளின் தந்தையோ அதிர்ச்சியின் உட்ச்சத்தை அடைந்தார் .அந்த ஊரின் பெயரை கேட்ட அவளின் தாயும் பேயறைந்ததை போல் அமர்ந்துவிட்டனர்.

கண்முன்னே தெளிவில்லாத ஏதேதோ சம்பவங்கள் நிழலாட இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அவளின் தாயின் பார்வை அவளின் தந்தையை "அவசரப்பட்டுவிட்டீர்களே" என்று குற்றம் சாட்ட அவரோ தன் வாயாலே தன் மகள் காலனின் வாயிலை அடைய அனுமதி வழங்கி விட்டோமே என்று துடித்தார்.என்றோ எவர் குரலிலோ கேட்ட "நீ அழைத்து செல்லும் எங்கள் சொத்தே எங்களை தேடி வரும் காலம் தொலைவில் இல்லை "என்று கூறியது எங்கோ ஈனஸ்வரத்தில் கேட்க உலகமே தலைகீழாய் சுழல்வதை போல் இருந்தது.

அவள் உள்ளே சென்று குளித்து விட்டு வந்தபின்னும் இருவரும் அப்படியே அமர்ந்திருக்க அவர்கள் அருகில் வந்தவள் "why மீ என்னாச்சு "என்க

அவரோ எழுந்தவர்"பாப்பா அங்க போணுமாடா "என்க

அவளோ அவர்களை புரியாத பார்வை பார்த்தவள் "இதென்ன கேள்வி மீ அங்க போய் தான் ப்ராஜெக்ட் முடியும் ப்ராஜெக்ட் முடுச்சா தான் டிகிரி கிடைக்கும் போயே ஆகணும் மீ "என்க

அவரோ அவளிடம் எப்படி கூறுவதென்று தவித்துக்கொண்டு கைகளை பிசைய அவரின் முகத்தை நிமிர்த்தியவள் "மீ என்னாச்சு இவ்ளோ நெர்வஸ் ஆகுற நீ? நா பத்திரமா இருந்துப்பேன் மீ .இன்னும் ரெண்டு நாளுல கெளம்பிருவேன் நீ இப்டி உர்ருனு அனுப்சா நல்லாவா இருக்கும் .அது என்னவோ தெரில மீ இந்த ஊரு பேர கேட்டாலே சும்மா ஜிவ்வுனு இருக்கு .சரி சரி நா போய் பேக் பண்றேன் நீ சமைச்சதுக்கு அப்பறோம் என்ன கூப்டு மீ "என்றுவிட்டு நா அடுச்சா தாங்க மாட்ட நாளு மாசம் தூங்க மாட்ட என்று பாடிக்கொண்டே குதித்து குதித்து தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

அவள் செல்வதையே கவலையுடன் நோக்கியவாறு தன் கணவரின் முகத்தை பார்த்து "என்னங்க அவ அந்த ஊருக்கு போறேங்குறா நீங்க வேற சத்தியம் பண்ணி குடுத்துடீங்கலேங்க என்னங்க பண்றது இப்போ?"என்க

அவரோ தெரியல மீனாட்சி என்ன பண்றதுனு தெரில"என்க

அவர் வீட்டு வாசலில் ஒருவர்

"செல்லும் இடம் தூரமில்லை 

செல்லும் செல்வத்திற்கோ பாதகம் இல்லை

முடிந்ததாய் நீ நினைக்க

புது முடிச்சொன்றை அவன் இட

காலத்தின் கோலத்தை

காத்திருந்து பார்த்திடு

கவலைகள் துறந்து

கோமகளை அவள் இடம் சேர்த்திடு"என்று ஒரு குரல் கேட்க வெளியே வந்து பார்த்த அந்த தம்பதியினரின் கண்களிலோ எவரும் சிக்கவில்லை .

இருவரும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கொள்ள அந்த குரல் ஏதோ தமக்கு கட்டளை பிறப்பிப்பதை போல் இருக்க ஆதிராவை மங்களபுரிக்கு அனுப்ப அது மறைமுகமாய் தகவல் கூறியதற்காய் தோன்ற தூரத்தில் இருந்த கோவிலின் ஆலய மணி ஓசை காற்றில் கலந்து அவர்கள் உயிரை தீண்டி சென்றது.ஒன்றும் புரியாது நின்றவர்கள் இப்போதைக்கு பாரத்தை அந்த ஈசனின் மேல் போட்டு விட்டு தங்கள் மகளை துணை நின்று காக்குமாறு வேண்டிக்கொண்டனர் .

பௌர்ணமி நிலவு மேகமெனும் தேரினிலே அசைந்து அசைந்து பவனி வர ஜன்னல் ஓரத்தில் கசியும் வெளிச்சத்தின் உதவியில் ஒரு தாளில் எதையோ எழுதிக்கொண்டிருந்ததொரு உருவம் .வெள்ளை தாளில் குண்டு குண்டான காய் எழுத்தில் ஏதோ புரியா பாஷயில் அது எதையோ எழுதிட அது எழுதும் இடத்திற்கு அருகிலேயே ஒரு வெண்புறா நடை பயின்றுகொண்டிருந்தது .தான் எழுதி முடித்த தாளை கிழித்து சுருட்டி ஒரு குப்பியில் அடைத்த அவ்வுருவம் ஒற்றை கையில் அந்த புறாவை தூக்கி அதன் காலில் அக்குப்பியை கட்டிவிட்டது .பின் அந்த புறாவை தன் இருக்கைகளில் ஏந்திய அவ்வுருவம் தன் முகத்தை மறைத்தவாறே அந்த ஜன்னலின் வழியே பறக்க விட அப்பளிங்கு கண்கள் பளபளப்பதை நிலவின் ஒளி பறைசாற்றியது .

மலைகளும் மரங்களும் இருள் போர்வையில் மூழ்கி இருக்க அந்த அடர் காட்டில் மிருகங்களின் சலசலப்பும் அடங்கி விட ஏதோ ஒரே இடத்தில் மின்மினிப்பூச்சியினை போல் மினுமினுத்த கொள்ளிக்கட்டைகளுடன் தலையில் இட்ட கொண்டையும் கண்ணில் இட்ட மையும் உடலை

சுற்றி இருந்த சேலை வித்தியாசமாய் உடுத்தப்பட்டிருக்க கண்களில் எதையோ எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களும் மேலங்கி அணியாது கருத்த தோலுடன் ஆஜானுபாகுவாய் தலையில் தலைப்பாகையும் இடையில் வேஷ்டியுமாய் கண்களில்ரெத்த சிவப்போடு கொள்ளிக்கட்டையை தாங்கி நின்றிருக்கும் ஆடவர்களும் அங்கே நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் முகத்தின் முக்கால் பாகம் தாடியாலும் மீசையாலும் மூடி இருக்க உடலோ கட்டயை போல் இறுகி இருந்தது .

நெற்றி நிறைந்த சந்தனப்பொட்டும் பின்னங்கழுத்தை தொட்டு நின்ற கேசமும் என்றிருந்தவர் அங்கே அமைந்திருந்த சிவலிங்கத்தின் முன் அமர்ந்து த்யானித்திருக்க அவர் தோளில் ஒரு வெண்புறா அமரும் உணர்ச்சியிலேயே கண்களை பிரித்தார் .

தன் கண்களை பிரிந்தவர் அதன் கால்களில் இருந்த சீட்டை பிரித்து அதிலிருந்த செய்தியை படித்தவர் கண்கள் ஆனந்தத்தில் விரிய சிவன் பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்தவர் தன் கூட்டத்தை நோக்கி "எம் ஈசனின் தாயீ தேடலின் விடை வாராலோய்"என்று ஆர்ப்பரிக்க அந்த கூட்டமே சந்தோஷக்கடலில் மூழ்கியது .பெண்களும் ஆடவர்களுக்கு ஆனந்தத்தில் ஆட பல காலங்களுக்கு பின் அவர்களின் ஆனந்த முகத்தை கண்ட அவ்விடத்துஓநாய்களும் அவர்களின் சந்தோஷத்தில் பங்கிட்டுக்கொள்ள அவற்றின் ஊளை சத்தம் எட்டுத்திக்கும் ஒலித்தது.

 பறவைகள் அந்த ராத்திரி வேளையிலும் அவ்விடத்தை சுற்றி வட்டமிட ஏதோ ஓர் இடத்தில் இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தை ஒரு சிறு வெளிச்சம் மெல்லிய கீற்றாய் மின்னி மறைய சற்று தொலைவில் சலசலவென இருபுறமும் மூலிகை மரங்களின் மனமும் பௌர்ணமி நிலவின் ஒளியும் சேர்ந்து அந்த இதமான தென்றலுடன் ஒட்டி உறவாட அமைதியாய் இருந்த அந்த ஆற்றின் மேற்பரப்பில் ஒரு புள்ளி மான் துள்ளி வந்து தன் தாகம் தீர்க்க திடீரென இரு ரெத்த சிவப்பை பளபளக்கும் கண்கள் எங்கோ தூரத்தில் மின்னி மறைந்து அந்த ஆற்றையே ரத்த சிவப்பாய் மாற்ற இன்ன மிருகத்தின் ஒலி என்று கூற முடியாதவாறு ஏதோ ஓர் நாராசமான சத்தம் அவ்விடத்தை ஆக்கிரமிக்க தாகம் தீர்க்க வந்த புள்ளிமானோ மிரண்டு உள்ளே ஓடி விட சற்று முன் நிலவிய ரம்மியம் மறைந்து அகோரத்தின் அடையாளமாய் மாறி நின்றது அந்த ஆறு .

இங்கே நடக்கும் கலவரங்களும் தன்னை சூழ்ந்திருக்கும் மாயமுடிச்சுகள் பற்றியும் அறியாத ஆதிரா நிர்ச்சலனமாய் உறங்கி இருக்க அவள் அறைக்குள் நுழைந்த ஓர் கரும்நிறை புகை உருவம் அவள் உறங்கும் கோலத்தையே இமைக்காது பார்த்திருந்து பின் அவள் அருகில் வந்து அவள் தலை முடியை கோதிய அவ்வுருவம் அவளை ஓர் முறை தீர்கமாய் பார்த்துவிட்டு ஜன்னல் வழியே புகையாய் கரைந்திட காலம் ஆதிராவுடனான தன் சதுரங்க ஆட்டத்தை துவங்கும் சமயத்திற்காக காத்திருந்தது .

thodarum.........

chei enna pei padatha paathenne therilapa oru 3 naala ipdi dhaan kanavu varudhu adhan naa mattum en bayapadanumnu ungalayum payappaduthalaamnu eludha aarambichuten eeeeeeee.horror contentlaam enaku avlovaa varaadhu try pannirken evlo bsyama irundhuchunu therila so neengale solleerunga sirippaa irundhuchaa seriousaah dhaan irundhuchaanu

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro