25

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலை யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களையும் அழிவுகளையும் பரிசளிக்க வேண்டி விடிந்தது .ஆதவக்குலத்தின் ராஜ்ஜிய மக்களில் பாதி மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து அனைவரின் வீடுகளும் சாம்பிராணியின் மனத்திலும் பெண்கள் தலையில் சூடி இருந்த மலர்களின் மனதிலும் ரம்மியமான பொழுதை புலர வைத்தது .

அனைவரும் கிளம்பி தயாராகிவிட தன் அறையில் இருந்த அருத்ராவோ தயாராகி கட்டிலில் அமர்ந்தவாறு ஏதோ ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தாள்.அவள் இப்படியே இருக்க ஆதிராவையும் ஆராதனாவையும் தானே தயார் படுத்திய விஷாகன் இருவரையும் அதேஷும் அருள்மொழியும் வந்து அழைத்து சென்றுவிட ஆருத்ராவை பூஜைக்கான வேளை நெருங்கிவிட்டதால் "ஆரு என்னம்மா ஆச்சு எந்திரி கிளம்பலாம் "என்க

அவளோ அமர்ந்திருந்த அதே நிலையிலேயே இருந்தாள் ஏதோ விசித்திரமாய் பட அவள் அருகில் சென்றவன் அவள் தோளை தொட்டு "என்னாச்சுடா கூப்டுட்டே இருக்கேன் நீ உக்காந்துட்டே இருக்க ?"என்க அவளோ கண்ணீர் திரை இட நிமிர்ந்தவள் அவனை வயிற்றோடு கட்டிக்கொண்டு அழ துவங்கி விட்டாள்.அவள் இது வரை அழுதே பார்த்திராதவன் திடீரென அவள் அழுகத் துவங்கவும் பதறி அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்போடு சாய்த்துக்கொண்டவன் "அரு அரு என்னாச்சுடா "என்று அவள் முகத்தை கைகளில் ஏந்த

அவளோ தேம்பிக்கொண்டே "நா... நா குங்குமம் வைக்குற சிமிழ்ல குங்குமம் காலைல எடுக்கேல மொத்தமா தவறி விழுந்துருச்சுங்க அது போதாதுன்னு இன்னிக்கு காலைல தா... தாலி blousela மாட்டி சங்கிலிய இருந்து அவுத்து விழுந்துருச்சு.இத்தனை வருஷத்துல இப்டிலாம் நடந்ததே இல்லங்க ப..... பயமா இருக்கு "என்க

அவனோ சிரித்தவன் "அட லூசு பொண்டாட்டி இதுக்கெல்லாமா அழுவ "என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன் "எனக்கொன்னும் ஆவாது தேவை இல்லாம டென்ஷன் ஆவாத"என்றவன் அவள் கை பிடித்து எழுப்பி விட அவளோ இன்னும் தவிப்பதை அவனையே பார்த்தபடி இருக்க

அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன் "அடியேய் காட்டுராணி உன் கெத்த பாத்து தாண்டி நா flat ஆனேன் நீ என்னனா குடம் குடமா அழுது வடிஞ்சுட்டு இருக்க அப்பறோம் வேற பொண்டாட்டி வாங்கிருவேன் பாத்துக்க "என்க

அவளோ சகஜநிலைக்கு திரும்பி அவன் காதை பிடித்து திருகியவள் "ஓஓஒஹ் sirku இப்டி ஒரு நெனப்பு வேற இருக்கா மவனே செத்தாலும் ஆவியா வந்தாவது உன்னோட வாழ்வேன் நானு "என்க

இது வரை அவள் வாயிலிருந்து செத்தாலும் என்று வார்த்தை வந்ததே இல்லை அதை கேட்டவன் மனதில் ஊசியை குத்தியதை போல் வலி ஒன்று சுருக்கென தைக்க அவளை முறைத்தவன் "விளையாட்டுக்கு கூட சாவ பத்தி பேசாத ஆரு என்னால தாங்கமுடியாது "என்று கூற

அப்பொழுதே தான் உதிர்த்த வார்த்தையை உணர்ந்தவள் நாக்கை கடித்து இரு காதிலும் கையை வைத்து "sorrypa ஏதோ வேகத்துல வந்துருச்சு இனி சொல்லமாட்டேன் "என்று அவன் கையை பிடித்து வெளியே அழைத்து சென்றவள் மற்றவர்களுடன் இணைந்துகொண்டாள் .

அவளின் தோழியும் அவளின் கணவனும் அக்கோவிலிற்கு அவர்களுடன் வர அவர்களிடம் திரும்பியவள் "மீனு நல்லா வேண்டிக்கோ இன்னிக்கு பூஜைல சீக்கிரமே உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும் "என்க அவளும் தலையை ஆட்டிக்கொண்டாள் தன் தோழியின் குழந்தைக்கே தான் தாய் ஆகப்போவதை அறியாமல் .

அவர்கள் அனைவரும் கிளம்ப அவர்களுடன் மேகதூதனும் கலந்துகொண்டான் .அனைவரும் பொடி நடையாய் மங்கலாபுரி ஊரிற்குள் வந்து சேர்ந்தவர்கள் ஆஜானுபாகுவான பண்டை கால கட்டமைப்புடன் முழுதும் கருங்கற்களில் குடையப்பட்டு கம்பீரமாய் எழுந்து நுண்ணிய சிற்பங்களையும் எழுத்துக்களையும் ஆதவக்குலத்தின் தோன்றல்களின் வழிவழியான ஓவியங்களையும் தாங்கி நின்ற அந்த சூரியனின் கோயிலிற்கு வந்து சேர்ந்தனர் .

அந்த கோவிலின் முன்னே ஒவ்வொரு குடும்பங்களாய் பிரிந்தவர்கள் முதலில் பானையில் பொங்கல் வைக்க துவங்க அதில் முதன்மையாய் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த பெரிய அடுப்பில் அரசகுலத்திற்கே உரிய வேலைப்பாடுடன் கூடிய பெரிய வெங்களப் பானையில் வானமாதேவியும் ஆருத்ராவும் பொங்கல் வைக்க துவங்கினர்.

பின் உலை பொங்க அனைவரும் அது பொங்கி வழியும் திசையை ஆவலோடு நோக்க அவர்களின் ஆசையை நிராசையாக்கி வடக்கு திசையில் பொங்கியது பொங்கல் .அதை பார்த்ததும் மனதில் மறைந்திருந்த சஞ்சலங்கள் அனைத்தும் மீண்டும் ஆருத்ராவின் மனதை ஆக்கிரமிக்க துவங்க அவள் கண்கள் விஷாகனை தேடி அவனில் பதிந்து மீண்டது.

பின் அனைவரும் கோவிலின் பிரகாரத்திற்கு உள்ளே சென்று அங்கே நடக்க போகும் ஷக்திபூஜைக்காக கதவுகளை தாழிட அந்த இடைவெளியில் நாகநேயனையும் அவனின் புதல்வனையும் அவனின் படைகளையும் மக்களோடு மக்களாக கலந்து உள்ளே அனுமதித்திருந்தான் மேகதூதன் .

பூஜை துவங்க அனைவரும் கண்ணை மூட மேகதூதன் கண்ணை அசைக்க சத்தமே இன்றி பின்னிருந்து அருகே இருந்த மக்களின் வாயை பொற்றி அவர்களின் கழுத்தை அறுத்து கோவிலின் பிரகாரத்திலேயே கடவுளைக் காண வந்த மக்களை பிணமாக்கினார்கள் .

இப்படியே சற்று நேரம் செல்ல நீலகாந்தன் வாளை ஏந்தியபடி ஆருத்ராவின் முன்னே வந்தவன் அவளின் சிரசை வெட்டுவதற்கு குறிபார்க்க அப்பொழுது தன் மேல் ஏதோ விழுந்த உணர்ச்சியில் தன் கண்ணை பிரித்த வானமாதேவி ஆருத்ராவை வெட்டுவதற்கு ஒருவன் வாளேந்தி நிற்பதை பார்த்து துடித்தவர் வேறெதையும் யோசியாது "ஆருத்ரா" என்று கத்தியவாறே அவளின் முன்னே வந்து விழ ஆருத்ராவிற்கு வைத்த குறி அவரின் கழுத்திற்கு மாற அவரின் ரத்தம் ஆருத்ராவின் முகத்தில் தெறிக்க அவள் மடியிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து மடிந்தார் அவர் .

யாரோ கத்தும் சத்தத்தில் அனைவரும் தன் கண்களை திறக்க தன் முகத்தில் தெளித்த ரத்தத்தை கண்டு பதறியவள் தன் மடியில் தன்னை தாயை போல் மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்த தன் அண்ணி செத்து கிடப்பதை பார்த்து ஆருத்ரா "அண்ணி "என்று அலறிய அலறல் எட்டுத்திசையும் எதிரொலித்தது.

முதலில் தன் குறி தப்பியதில் திகைத்த நீலகாந்தன் பின் அடுத்து மீண்டும் ஆருத்ராவை குறிவைத்து வாளை வீச ரத்தமென சிவந்த கண்களோடு அவனை எரித்தவள் "ஏய்ய்" என்ற கத்தலுடன் ஓங்கி அவன் நெஞ்சிலே மிதிக்க பத்தடி தள்ளி போய் விழுந்தான் நீல காந்தன் .

தன் கண்முன்னே தன் மனையாள் இறந்து வீழ்ந்ததை பார்த்து துடித்த வந்தியத்தேவன் அவரின் தலையை மடியில் ஏந்தி கண்ணீர் வழிய " தேவியாரே தேவியாரே "என்று தட்ட அவரோ உயிர் துறந்து அமரநிலையை எய்தி தன் மணாளனின் குரலிற்கு செவிமடுக்காது மண்ணில் வீழ்ந்தார் .அதை பார்த்து அலறியவர் பின்னே சுற்றுப்புறத்தை கவனிக்க ஆதவக்குலத்தவரும் முகத்தை மூடியிருந்த பற்பல படைவீரர்களும் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்க மேகதூதன் ஆதவகுலத்தவரை தாக்கிக்கொண்டிருப்பதை பார்த்தவர் கண்கள் சிவக்க நரம்புகள் புடைக்க "துரோகி "என்று கத்தியவர் பின் தன் இடையிலிருந்த வாளை உருவி தாக்க வருபவர்களை எதிர் தாக்குதல் புரிந்து கொண்டிருந்தார் .

என்ன நடக்கின்றது என்று உணரும்முன்பே அனைத்தும் நடந்திருக்க அதிர்ச்சியில் இருந்த விஷாகன் தன் பார்வையை சுழலவிட அங்கே மண்டபத்தில் இரு தூண்களில் அருள்மொழி வேந்தனும் ஆதேஷும் கட்டிப்போடப்பட்டிருக்க கையில் வாளுடன் கண்ணில் வெறியுடன் ஆராதனாவையும் ஆதிராவையும் நெருங்கிக்கொண்டிருந்தான் நாகநேயன்.

நேற்று தன் புதல்விகளை அத்தனை யாசித்தும் தரமறுத்ததும் இல்லாமல் சதைப்பிண்டங்கள் என்று கூறியதிலேயே கடும் சினத்தில் இருந்தவன் இன்றும் அவர்களை நெருங்கவும் கோபம் உடலெங்கும் தகிக்க கீழே இருந்த ஓர் வாளை எடுத்தபடி ஓடியவன் சற்றும் தாமதியாது மண்டபத்திற்கு சென்றவன் ஆராதனை,ஆதிராவின் புறம் நாகநேயன் வாளை ஓங்கிய நிமிடம் இடதுபுறத்திலிருந்து வாளை வீசியவன் தலை வேறு உடல் வேறாக தன் தந்தையையே துண்டு துண்டாக வெட்டினான் .எனில் அவன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை இன்னும் வெறி தான் ஏறியது .

.அவனை கண்டதும் குழந்தைகள் இருவரும் அவன் காலை கட்டிக்கொண்டவைகள் "அப்பு அப்பு பயமா இருக்கு அப்பு இங்க இருந்து கூட்டிட்டு போங்க அப்பு " என்க

அவனோ இருவரையும் இரு கைகளில் ஏந்தியவன் அருளையும் ஆதேஷையும் அவிழ்த்துவிட்டு அவர்களிடம் ஒப்படைத்தவன் "அருள் ஆதேஷ் வெளியே வாயிற்கதவை சென்று திறந்து விடுங்கள்.இருவரின் கையையும் விட்டு விடாதீர்கள். பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் "என்க

தலை ஆட்டிய சிறுவர்கள் இருவரும் முதலில் வாயிற்கதவை திறந்து விட்டவர்கள் எஞ்சி இருந்த ஆதவக்குலத்தவர்கள் அனைவரையும் வண்டியில் ஏற்றி ராஜ்யத்திற்கு அனுப்பி வைக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் .

அதில் ஆருத்ராவின் தோழியும் அவளின் கணவணுமோ கலவரம் நடக்க ஆரம்பிக்கும் பொழுதே காட்டுப்பாக்கம் ஓட துவங்கிவிட்டிருந்தனர்.

இங்கே அனைவரையும் சரிக்கு சமமாய் வந்தியத்தேவரும் ஆருத்ராவும் விஷாகனும் சில ஆதவக்குல படைவீரர்களுடன் தாக்கிக்கொண்டிருக்க வழிபாடுகளாலும் மந்திர உச்சரிப்பாலும் புண்ணியங்களாலும் நிறைந்திருந்த அந்த கோவில் இன்று ஆதவக்குலத்தவர் மற்றும் எதிரிகுலத்தவரின் ரத்தத்தால் நனைந்து கருங்கல் தரை செங்கல் தாரையாய் மாறியது .

தன்னை எதிர்ப்பவர்களை காற்றும் புகாதவாறு வாளேந்தி சுழன்றடிக்கும் புயலாய் தாக்கிக்கொண்டிருந்த ஆருத்ரா திடீரென ஏதோ ஓர் உந்துதலில் பின்னே திரும்பி விஷாகனை பார்க்க கையில் பெரிய வாளுடன் விஷாகனை முதுகுப்புறமாய் நெருங்கிக்கொண்டிருந்தான் மேகதூதன் .

மற்றவை மறக்க தன் மணாளனை காக்க நினைத்தவள் "என்னங்க ......."என்ற கூவலுடன் அவன் அருகே ஓடியவள் அவனில் பாயப்போகும் வாளை தனது வயிற்றில் வாங்கிக்கொண்டாள்.

"ஆஆ "என்ற சத்தத்துடன் அவள் கீழே மடிந்து சரிய ஆருத்ராவின் குரலை கேட்டு திரும்பிய விஷாகனோ அவளின் நிலையை கண்டு இதயம் வெடித்து சிதறிட தன்னை தாக்குபவர்கள் அனைவரையும் ஒரே வீட்டில் வீழித்தியவன் மேகதூதனை வெறியுடன் நோக்கியவாறு அவன் வாளேந்திய கையை துண்டாக்கி விட ஆருத்ராவோ வலியில் துடித்தபடி கீழே சரிந்திருந்தால் .

ஆரு என்றவாறு அவள் அருகில் அமர்ந்தவன் அவளை தூக்கி தன் மாரின் மேல் சாய வைத்தவன் "ஆரு ஆரு என்னாச்சுடா ஆரு என்ன பாரு டா "என்க அரைமயக்க நிலைக்கு சென்றுகொண்டிருந்தவள்

அவனின் முகம் உடலை தொட்டுப்பார்த்து "உ.... உங்களுக்கு ஒ...... ஒன்னும் இல்லேலங்க"என்க

அவனோ கண்ணீர் சிந்தியவாறு தலையில் அடித்துக்கொண்டவன் "பைத்தியக்காரி பைத்தியக்காரி ஏன்டி உள்ள வந்து விழுந்த நீ வாழணும்னு தானடி நா சாகறதுக்கும் துனிஞ்சேன் ஏன்டி இப்டி பண்ண ?"என்க

அவளோ வேதனையாய் சிரித்தவள் பேச முடியாமல் அவன் மீதே சாய மேகதூதனோ வலி பொறுக்க முடியாமல் அரற்றிக்கொண்டிருந்தான் "அவனை தீப்பார்வை பார்த்தவள் கீழே ஏதோ கால்கள் தெரிய மேலே மெல்ல அவள் நிமிர்ந்து பார்க்க அங்கோ நீலகாந்தன் வெற்றிச்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான் .

விஷாகன் அவனை அனல் கக்கும் விழிகளோடு பார்க்க அவனோ சிரித்தவன் "என்ன இளவா உருகி உருகி காதலித்தாயே உன் ஆருயிர் மனைவி இப்பொழுது இன்னும் சிறிது நேரத்தில் உயிரை விடப்போகிறாளடா . என் தம்பியான உன் நிலையை எண்ணுகையில் என் நெஞ்சே வலிக்கிறது "என்று பரிகாசமாய் சொல்லி சிரிக்க

அவளோ விஷாகன் சம்ஹகத்த வம்சத்தை சேர்ந்தவனா என்ற அதிர்ச்சியில் விழிகள் விரிய அவனை நோக்க அவனோ கோபம் கொப்பளிக்க நீலகாந்தனை முறைத்தவன் "ச்சேய் வாய மூடுடா இன்னொரு தடவ என்ன உன் தம்பின்னு சொன்ன சொல்ற வாய இழுத்தி வச்சு அருஞ்சுருவேன் "என்றவன் பின் ஆருத்ராவின் கன்னத்தை வேதனை பொங்க வருடியவன் " நா என்னடா பாவம் பண்ணேன் உங்களுக்கு உனக்கு தம்பியாவும் அந்தாளுக்கு மகனாவும் பொறந்தது என் தப்பாடா? ஏன்டா ஏன் இப்டி என் பொண்டாட்டிய பண்ணீங்க ஏன்டா ?இதுக்கு என்ன துண்டு துண்டா வெட்டி போட்ருந்தா கூட சந்தோஷமா செத்துருப்பேனேடா "என்க

அவனோ சிரித்தவன் "உன் உயிரை வைத்து நான் என்ன செய்ய? அது சரி உன் மனைவி இங்கே இருக்கிறாள் உன் மகள்கள் எங்கே ?"என்க

கீழே கிடந்த மேகதூதனோ அவ்விடமே அதிருமாறு சிரித்தவன் "அவன் மகள்களா ஹாஹாஹா இந்நேரம் என் படைவீரர்கள் கையில் சிறைப்பட்டிருப்பர் ."என்க

ஆருத்ராவோ மேகதூதனை தீயாய் முறைத்தவள் தட்டு தடுமாறி எழுந்து அருகிருந்த வாளையும் விஷாகனின் தோளலயுமே பிடிமானமாய் கொண்டு எழுந்து நின்றவள் "உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்த துரோகியே .நீ செய்த இப்பாவச்செயலிற்கு உனது கார்மேக வம்சத்தவர் அனைவரும் கரும்புகை உருவங்களாய் மாறி எவனிற்கு சமமாய் சக்திகளை பெற நினைத்தாயோ அவனிடமே அடிமையாய் கிடந்து அழிவீர்களடா இது என் சாபமாகும் "என்று

நீலகாந்தனின் புறம் திரும்பியவள் "என் மகள்களை நீ பலியிடப்போகிறாயா முட்டாளே நான் தீ என்றால் அவள்கள் எரிமலைகளடா பஸ்பமாகப்போவது நீ தான் என் மகள்களின் ஒற்றை முடியை கூட உன்னால் ஒன்றும் செய்ய இயலாது "என்றவள்

ரத்த போக்கு அதிகமாகி அப்படியே தரையில் வீழ மரணபயத்துடன் அவளை கையில் தாங்கிய விஷாகன் "ஆரு ஆரு எந்திரிடி ஏய் கண்ணை மூடாத கண்ணை மூடாதடி ஆரு ஆரு... "என்று கூறிக்கொண்டே அவள் கன்னத்தில் தட்டியவன் அவள் முகம் முழுதும் கண்ணீர் தெரிக்க " நீ இல்லேனா செத்துருவேன்டி.... ஆரு ஆரு வேணாண்டி உனக்கு முதல்ல பண்ண நெனச்ச துரோகத்துக்கு பதிலா என்ன அடி திட்டு என்ன வேணா பண்ணுடி ப்ளஸ் விட்டுட்டு போயிராதடி ஆரு ஆரு ...."என்று கத்த

அவளோ கொஞ்சம் கொஞ்சமாய் மயக்கத்தின் பிடிக்கு சென்றவள் கடைசி ஒருமுறை முழித்து அவனை பார்த்து புன்னகைத்தவள் அவனின் சட்டை காலரை பற்றி அருகில் இழுத்து அவன் முடியை களைத்து நெற்றியில் முத்தமிட்டவள் " ஐ........ ஐ லவ் யூ டா.நீ..... நீ என்ன எப்..... எப்படி ல...... லவ் பண்ணணு எ..... எனக்கு தெரியும்டா உ...... உன்ன வெறுத்துருவேன்னு நெ நினைக்காத"என்றவள் அவன் இதழில் இதழ் ஒற்றி " பா.... பாப்பா பத்திரம் " என்று கூறியவாறே அவன் முகத்தில் அவள் ரத்தக்கறை படிய அவன் முகத்தை வருடியவாறே அவனை தன் கண்ணில் நிறைத்தவள் அப்படியே அவன் மடியில் வீழ்ந்து தன் ஊயிரை துறந்தாள்.

அது வரை அவள் பேசுவதையே கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருந்தவன் அவள் அவன் மடியிலேயே சரிந்து விழ அதிர்ந்தவன் அவள் கன்னத்தை தட்டி தட்டி "ஆரு ஆரு ....."என்று தட்ட அவள் அசையாது போக "ஆரு ......"என்று பெருங்குரலில் கத்தியவன் அவளை தன்னோடு அணைத்துக்கொண்டு அழ துவங்கினான் "ஏன்டி ஏன்டி இப்டி பண்ண ?நீ உயிரோட இருக்கணும்னு தானடி நா நம்ம புள்ளைங்களையே இந்த நாய்ங்க கிட்ட ஒப்படைச்சுட்டு வந்தேன் நீ சாகுறத பாக்கவாடி நா இவ்ளோ கஷ்டத்தையும் பட்டேன் ஆரு ........ "என்று அழ அவன் அழுவதை ஊன்றி பார்த்துக்கொண்டிருந்த நீலகாந்தன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் சிரிக்க ஆரம்பித்தவன் பெருங்குரலில் அவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் .

" காதலாம் மனைவியாம் மண்ணிற்குள் சென்றுவிட்டாளாடா உன் மனைவி ஹாஹாஹாஹாஹா" என்று திரும்பி நின்று பேசியவன் "என்ன செய்வது மிகவும் வருந்துகிறாய் "என்று முகத்தை கடுமை ஆக்கியவன் "எனில் உன்னையும் உன் மனைவியோடு அனுப்பி விட வேண்டியது தான் ."என்று திரும்ப அவ்விடத்திலோ விஷாகனும் இல்லை ஆருத்ராவின் பிணமும் இல்லை .

கடைசி வண்டியில் வந்தியத்தேவன் ,அருள்மொழிவேந்தன், ஆராதனா என்று அனைவரும் ஏறிக்கொண்டிருக்க ஆருத்ராவின் பிணத்துடன் ஓடி வந்த விஷாகன் அவளை அவ்வண்டியில் ஏற்றிவிட வந்தியத்தேவனோ ஆருத்ராவின் பிணத்தை கண்டவர் மயங்கியே விட்டார் .அவளின் பிணத்தை கண்ணீர் பொங்க பார்த்தவன் அவள் நெற்றியில் கடைசி முறையாய் முத்தமிட்டுவிட்டு பின் ஆதிராவை தேட அவள் மட்டும் அங்கே இல்லாமல் இருந்தாள் .

பதறி ஆராதனாவிடம் திரும்பியவன் "ஆதிரா எங்கே குட்டிமா ?"என்க

அப்பொழுதே ஆதேஷும் ஆதிரா இல்லாததை கவனித்தவன் தானும் பதறி "தெரியவில்லை மாமா நான் நான் அவளை இதில் தான் ஏற்றி விட்டேன் முதல் ஆளாக என்ன ஆனாள் என்று தெரியவில்லையே "என்றவன் உடனே வண்டியில் இருந்து கீழே குதித்து அவ்வண்டியை அனுப்பி வைத்தவன் ஆதிராவை விஷாகனுடன் தேடத்துவங்க இங்கோ அந்த முகம் மறைத்த காவலர்களிடம் இருந்து தப்பிக்க அழுதபடியே ஓடிக்கொண்டிருந்தாள் ஆதிரா .

அவள் ஓட ஓட இவர்கள் விடுவதாய் இல்லாது போக ஒருவனோ குழந்தை என்றும் பாராது அவள் தலையை நோக்கி கீழிருந்த கட்டையை வீச அது அவள் தலையை சரியாய் பதம் பார்க்க "அம்மா "என்று ரத்தத்துடன் கீழே விழுந்தாள் ஆதிரா .

அவள் கீழே விழுந்ததை பார்த்து கோரமாய் சிரித்த அந்த கருப்பு நிற ஆடை அணிந்த வீரர்கள் அவளை நெருங்க அங்கே புதர் மறைவிலிருந்து வெளிவந்த ஆதேஷும் விஷாகனும் கையிலிருந்து பிடிமண்ணை அவர்களின் கண்ணில் தூவியவர்கள் அங்கே கீழே விழுந்து கிடந்த ஆதிராவை விஷாகன் தூக்கி கொண்டு ஓட ஆதேஷ் அவர்களை பின் தொடர்ந்து ஓடினான் .

முதலில் திணறிய படைவீரர்கள் உடனே சுதாரித்துக்கொண்டு விஷாகனை துரத்த அவனோ அதீத வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான் .அதில் ஒருவன் கட்டையை கொண்டு விஷாகனின் காலில் தாக்க முதலில் ஆதிராவை தன்னோடு அணைத்தபடி குப்பற விழுந்தவன் பின் சுதாரித்துக்கொண்டு கால் நொண்டியவாறே ஓடத்துவங்கினான் அவன் ஓடியவாறே அருவியின் மேல்பகுதிக்கு வந்துவிட அவனின் கால் திடீரென அங்கே இருந்த மரங்களின் வேர்களான ஒன்றில் மாட்டிக்கொண்டது .அவன் காலை எடுக்க முயற்சிக்க முயற்சிக்க அது வராமல் போக தன் விதியையே எண்ணி நொந்தவன் ஆதேஷிடம் திரும்பி "ஆதேஷ் ஆதிராவை நான் தூக்கி போடுகிறேன் குதித்து அவளை காப்பாற்றிவிடு அவள் இனி உன் பொறுப்பு "என்று கூறியவாறே ஆதிராவை அருவியில் தூக்கிப்போட ஆதேஷோ நொடியும் தாமதிக்காது அருவியில் குதித்தவன் கீழே விழுந்து கொண்டிருந்தவளை பிடித்து தன்னோடு அணைத்தவாறே தொப்பென்று தண்ணீரில் விழ மேலே அவன் கடைசியாய் கண்ட காட்சியோ விஷாகனின் தலையை அவர்கள் உடலில் இருந்து தனியாய் துண்டிக்கும் காட்சியை தான் .அதை கண்டு அதிர்ந்தவன் "மாமா ......"என்று கத்தியவாறு தண்ணீரில் விழ ஆதிராவை சுற்றி முற்றி தேடிய அப்படி வீரர்கள் அவள் கிடைக்காது போக ஏமாற்றத்துடன் வந்த வழியே திரும்பி போயினர் .

இங்கே காட்டு வழியில் ஓடி ஓடி அலைந்து கடைசியாய் ஆற்றங்கரைக்கு ஓடி வந்து நின்றனர் ஆருத்ராவின் தோழியும் அவள் கணவனும்.ஓய்ந்த கால்கள் உட்கார வேண்டி கெஞ்ச அங்கே ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த பாறையில் உட்கார்ந்தவர்கள் அருகில் ஏதோ ஒன்று ஆற்றில் இருந்து எழுந்து வருவதை பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அதன் அருகே செல்ல அங்கேயே ஆதேஷ் இருக்கைகளில் ஆதிராவை அணைத்து பிடித்தவாறு எழுந்து வந்து கொண்டிருந்தான் .

அது ஆதேஷ் ஆதிரா என்று அறிந்துகொண்டவர்கள் நொடியில் அங்கே சென்று அவனிற்கு உதவி புரிய மீனாட்சியோ ஆதிராவை அள்ளி கைகளில் எடுத்தவள் அவள் தலையில் வழியும் ரத்தத்தை கண்டு பதறித்துடித்து தன் முந்தானையை கிழித்தவள் அவள் தலையை சுற்றி கட்டி விட்டாள் .

பின் ஆதேஷ் எழுந்து வந்து இக்காட்சியை பார்த்தவன் மனதில் :ஆராதனாவும் ஆதிராவும் சிறு பிராயத்தில் இணைந்திருந்தால் எளிதில் கவர்ந்து சென்றுவிடுவர் என்றும் அடுத்த இருபது வருடங்களுக்கு பின் வரும் பௌர்ணமியில் இருவரும் இணைவதால் அவர்களிற்குள் ஊற்றெடுக்கும் அசாத்திய சக்தியை பற்றியும் நாகனியன் அருள்மொழியையும் அவனையும் தூணில் கட்டுகையில் உரைத்ததை நினைவுகூர்ந்தவன் பின் அவர்களிடம் திரும்பி "இனி ஆதிராவ உங்க குழந்தையா உங்களால வளர்க்க முடியுமா ?"என்க

மீனாட்சியோ முதலில் திகைத்தவள் பின் ஆதிராவின் மதிவதனத்தையும் இங்கே அவளிற்கு இருக்கும் ஆபத்தையும் எண்ணி அஞ்சி சம்மதிக்க ஆதேஷோ "கவலை கொள்ளாதீர்கள் எம் பொக்கிஷத்தை தற்காலிகமாக தான் உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் எம் பொக்கிஷம் எம்மை வந்து சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை "என்று கூறி ஏதோ மந்திரங்கள் உச்சரித்து ஆதிராவின் தலையில் வைத்தவன் "இங்கிருந்து மேற்கு பக்கமாவே நடந்து போனீங்கன்னா இன்னும் ரெண்டு மணி நேரத்துல கிராமத்திற்கு போயிரலாம் ."என்றவன் ஆதிராவின் நெற்றியில் இதழ் பதித்து அவள் நெற்றியை வருடியவன் "பத்திரமா பாத்துக்கோங்க "என்றுவிட்டு கிழக்கு புறமாய் நடக்க ஆரம்பிக்க ஒன்றும் புரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஜோடியார் குழந்தை வரம் கேட்டு வந்து தோழியின் குழந்தையையே தம் குழந்தையாய் பெற்று சென்றனர் .

(flashback ஓவர் )

நிகழ்காலம் ...........

இவை அனைத்தையும் கேட்டு முடித்த ஆதிராவின் கன்னங்களில் வஞ்சனை இன்றி கண்ணீர் சுரக்க அந்த புகைப்படத்தை எடுத்து வருடியவள் "அம்மா அப்பு .."என்று கூறி முத்தம் கொடுக்க

இக்கதையை கூறிக்கொண்டிருந்த வந்தியத்தேவரோ தன் கண்ணில் சுரந்திருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவர் "அதற்குப்பிறகு நம் ராஜ்யத்து மக்கள் அனைவரும் இந்த எல்லைக்குள்ளேயே வசித்து வர துவங்கிவிட்டோமம்மா.அம்மன் வாசித்த அருவிக்கரை இன்று அந்த சம்ஹித்த வம்சத்தவரால் பேய்களும் பிசாசுகளும் ஏவல்களும் உலவும் இடமாய் மாறிப்போனது .காலம் காலமாய் நாம் வாழ்ந்து வந்த அரண்மனை கரையான்களும் வௌவால்களும் வாழும் இருப்பிடமாய் போனது .ஆதவக்குலமே ஆருத்ராவின் இழப்பிற்கு பின் அனாதையாய் போனதம்மா .நீயும் உன் உடன்பிறந்தவளும் சேர்ந்திருந்தால் உம் இருவருக்கும் பாதுகாப்பில்லை என்பதாலேயே அவளை எம்முடன் அருள்மொழிவேந்தனின் பாதுகாப்பிலும் உன்னை வெளிஉலகத்தில் ஆதேஷின் பாதுகாப்பிலும் விட்டு வைத்தோம்."என்க

அதிலிருந்த ஆராதனாவின் பிம்பத்தை பார்த்து வருடியவள் "அக்கா அக்கா எங்கே மாமா அவளை நான் காணவில்லையே எங்கே அவள் "என்க

அதை கேட்ட அருள்மொழிவேந்தனின் கைகளோ இறுக முகம் சிவந்து கன்றியது அவளின் நினைவில் கலங்கிய வந்தியத்தேவன் "தவறுதலாய் ஒரு மானை பின் தொடர்ந்து ராஜ்யத்தின் எல்லைக்கு வெளியே சென்ற அவளை மூன்று வருடங்களுக்கு முன் கவர்ந்து சென்றுவிட்டனரம்மா "என்க

ஆதிராவோ அதிர்ச்சியில் அவ்விடத்தில் இருந்து எழுந்து நின்றவள் விழிகள் விரிய "என்ன?......."என்றலறினால்

எப்பாஆ ஒரு வழியா முடுச்சுட்டேன்பா இந்த flashbacka பெண்டு நிமித்திருச்சு இது என்ன .இந்த எபிசோட் பாத்துட்டு எல்லாம் என்ன கொலைகாண்டோட தாக்குறதுக்கு ரெடியாக இருப்பீங்கனு தெரியும் பட் sorrypa நா இப்டி தான் கதையை பிளான் பண்ணி வச்சிருந்தேன்.எனக்கே ஆருவ கொல்ற சீன் எழுதல லைட்டாக கண்ணு வேர்த்துருச்சு சாரி .இனிமே நோ சோக சீன்ஸ் ஜாலியா அட்வென்ச்சர்ஸ் அனுபவிக்கலாம் அடுத்த அத்யாயத்துல இருந்து .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro