33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவன் கண்ட உருவத்தில் நீலகாந்தனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய அவன் முன் நின்றிருந்த உருவத்தின் முகத்திலோ ஏளனத்தின் சாயல் நீலகாந்தனின் வாய் தானாய் அவனின் பெயரை உச்சரித்து "வி....... விஷாகன் ..."என்று ஆம் அவன் முன் நின்றுகொண்டிருந்தது விஷாகன் தான் .

தலை துண்டிக்கப்பட்டு தன் மனைவியையும் மகள்களையும் காக்க வேண்டி தன் உயிரை துறந்த சம்ஹித்த வம்சத்தவன் விஷாகனின் பிரேத ஆத்மா தான் நீலகாந்தனின் முன் நின்றுகொண்டிருதது .அவனின் மரணத்தை வழங்க நின்றுகொண்டிருந்தான்.

அவனின் அரண்ட தோற்றத்தை பார்த்து இடி இடியென சிரித்தான் விஷாகன் "என்ன தமையனாரே ஆச்சர்யமாக உள்ளதா அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில அந்த அண்டத்தை ஆளும் கடவுளிற்கு மந்திர கட்டிட்டு ஏவல்கள்,பேய்கள்,பிசாசாசுகள் ,ரத்தம் குடிக்கும் கொல்லி வாய் பிடாரிகளின் பிடியில் பெட்டியில் அடைக்கப்பட்டு வைத்திருந்த இந்த விஷாகனின் ப்ரேதாத்மா எப்படி வெளியே வந்ததென்று யோசிக்கின்றாயோ? "என்க ஆராதனாவின் ஆதிராவுமோ ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் நிகழ்ந்த நினைவுகளை புரட்டி பார்த்து .

(பிளாஷ் பாக் )

ஆதிரா அவளின் பாட்டியிடம் "மரணத்தின் ரகசியமா என்ன அது ?"என்று வினவ

அவரின் பதிலோ "அவனின் மரணம் விஷாகனின் கையாலேயே நிகழும் "என்க மூவருமோ குழம்பி போயினர் .

ஆதேஷ் "மாமாவின் கரங்களிலா எனில் அவரோ இருபது வருடங்களுக்கு முன்னே தலை துண்டாக்கப்பட்டு இறந்துவிட்டாரே "என்க

அவனை நோக்கி ஓர் கசந்த புன்னகை செய்த பாட்டியார் கூறத்துவங்கினார் "உடலிற்கு தான் அழிவுண்டு ஆத்மாவிற்க்கல்லவே .சம்ஹித்த வம்சத்தை பொறுத்தவரை அவ்வம்சத்தவருக்கு அவ்வம்சத்தை சேர்ந்தவர்களின் கரத்தை அன்றி மற்றோரின் கரத்தினின்று மரணம் தழுவாது .ஆதலால் தான் அத்தனை சக்திகள் நிறைந்த எனது கணவன் விஷாகனின் தாக்குதலில் பட்டுப்போன மரமென உடனே மண்ணில் சரிந்தான் அவனின் ஆத்மாவும் அழிந்து போனது.என் கணவர் சக்திகளை இழந்து சாதாரண மானுடனாகவே இருந்தார் ஆதலால் ஒற்றை வாள்வீச்சில் அவரை சரித்துவிட்டான் என் மகன் எனில் நீலகாந்தன் அப்படி இல்லை .உலகின் தலை சிறந்த அகோரிகளிடம் சிறு வயத்திலிருந்தே அதர்வண வேதங்களையும் ,சூனியங்களையும் ,மாந்திரீகத்தையும் கற்று தேர்ந்து வந்தவன் அவன் .ஆதலாலேயே அவனது சக்தியில் முக்கால் பாகம் விரயமானாலும் அவனது எஞ்சி இருக்கும் சக்தியை வைத்து தெய்வ அம்சமாகிய ஆருத்ராவையே சரித்துவிட்டான்.

நீலகாந்தனை கொல்வது அத்தன்னை எளிதன்று .சிவனின் அழிக்கும் சக்தியும் விஷ்ணுவின் காக்கும் சக்தியும் ஒரு புள்ளியில் சேரும்பொழுது தான் அவனின் மரணத்திற்கான ஆயுதம் வெளி வரும் .அவ்வாயுதத்தை விஷாகனின் கரம் கொண்டு அவனின் வயிற்றில் பாய்ச்சினால் அன்றி அவனின் உயிரும் ஆன்மாவும் இவ்வுலகை விட்டு அழியாது . விஷாகனை வெளிக்கொணர உங்கள் இருவரால் மட்டுமே முடியும் .

தாங்கள் விஷாகனை வெளியேற்றி நீங்கள் மூவரும் இணைந்தாலுமே அவனை வீழ்த்துவது என்பது சற்று சவாலான விஷயம் தான் "என்க ஆதிராவிற்கோ திக்கு தெரியாது காட்டில் சிறு பொறியென கிடைத்தது அந்த செய்தி .

அவரின் புறம் திரும்பியவள் "அப்ப அப்பாவோட ஆத்மாவை எங்கே வச்சுருக்கானு உங்களுக்கு தெரியுமா ?"என்க

அவரோ அமைதியாய் தலை ஆட்டியவர் "தெரியும் .எந்த இடத்தில ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆதவ வம்சத்தவர் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபாட்டு வந்தனரோ எந்த இடத்தில தெய்வ ஷக்தி நிறைந்திருந்ததோ அதே அருவிக்கரையில் அதே அம்மனை கையாளாக பாவையாய் தன் சக்தியால் கட்டிப்போட்டு பற்பல ஆபத்துகளை உருவாக்கி விஷாகனின் ஆத்மாவை அவனது உடலிலிருந்து எடுத்த எலும்புகளை வைத்து செய்த பெட்டியில் கட்டி வைத்திருக்கிறான் மார்த்தாண்டன்.அதற்கு காவலாய் பற்பல ஏவல்களையும் ,பேய்களையும் வைத்திருக்கிறான். அவ்விடத்திற்கு செல்லும் எவருக்கும் மரணத்தையே பரிசாய் அளித்துக்கொண்டும் இருக்கின்றான்.விஷாகனின் ஆன்மா உள்ள இடம் இது தான் எனில் அவ்வாயுதம் உள்ள இடம் யாதென்று நான் அறியேன் .

விஷாகனை விடுவித்தால் நீலகாந்தனை அழிக்கலாம் .அது உங்களால் மட்டுமே முடியும். உன்னாலும் ஆராதனாவாலும் மட்டுமே முடியும் "என்க

ஆதிராவின் இதழ்களில் ஓர் வெற்றிப்புன்னகை குடிகொண்டது அவரின் கையை ஆதரவாய் பற்றியவள் "நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் பாட்டி தாங்கள் நிம்மதியாய் இருங்கள் வெற்றிவாகை சூடி திரும்பி வருகிறேன் ."

அடுத்து இங்கே சிறைச்சாலையில் அக்கா என்று ஆராதனாவை அணைத்தவள் அடுத்த நொடியே இவை அனைத்தும் நினைவில் வர அவளிடம் இருந்து பிரிந்தவள் "அக்கா இப்போ நாம உடனே இங்க இருந்து தப்பிச்சாகனும் நாம அருவிக்கரைக்கு போகணும் ."என்க

ஆராதனை குழப்பமாய் "இப்பொழுது அங்கே எதற்கு ஆதிரா ?"என்று வினவ

ஆதிராவோ "அக்கா நேரமில்லை என் முகத்திரை வேறு ஒருமுறை அவிழ்ந்துவிட்டது. என் கணிப்பு படி அதை அந்த நீலகாந்தன் பார்த்திருக்கலாம் .நாங்கள் உள்ளே வந்துவிட்டோம் என்று அவன் உணர்ந்திருக்கலாம். அவன் இங்கே வரும்முன் நாம் இங்கிருந்து செல்ல வேண்டும்." என்க

ஆதேஷோ"ஆனா நீங்க ரெண்டு பேரும் இப்போ இங்க இருந்து தப்பிச்சாலும் அவன் கண்டு புடுச்சு இந்த கொட்டைய தாண்டுறதுக்கு முன்னாடியே உங்கள புடுச்சுருவான் "என்க

ஆராதனாவோ குழப்பமாய் "அப்போ என்ன செய்வது ?"என்க

அருள் மொழிக்கு அப்பொழுதே நிழல்களை நிஜ உருவங்களாய் மாற்றிடும் வித்தையை உபயோகிக்கலாம் என்று நினைவில் வந்தது .அவன் இது வரை அந்த திறன் தனக்குள் இருப்பதாய் வெளிக்காட்டியதே இல்லை .இன்று அதை ப்ரோயோகிக்க முடிவு செய்தான் அவர்கள் புறம் திரும்பியவன் "நீங்கள் இருவரும் அங்கும் இருக்கலாம் இங்கும் இருக்கலாம் ."என்று கூற மூவரும் அவனை புரியாமல் நோக்கினர்.

அதெப்படி என்ற மூவரின் கேள்விக்கும் அவன் கொடுத்த பதில் "நிழலுருவக வித்தை "என்க அதை பற்றி அறிந்த ஆதேஷும் ஆராதனாவும் ஆச்சர்யமாய் நோக்கினர் .

ஆதேஷ் "தமயனே நிழல் உருவக வித்தையா ?அதை ஆயிரம் கோடியில் ஒருபவரால் தானே செய்ய முடியும் அதீத ஆத்மபலமும் தவப்பலனும் வேண்டுமே தாங்கள் எப்படி ?"என்க

அருள்மொழியோ "இருபது வருடங்களுக்கு முன் அத்தை இறந்துவிட்டதாய் நினைத்து விஷாகன் மாமா அவரை வண்டியில் கிடத்திவிட்டு சென்றார் அல்லவா அப்பொழுது தந்தையும் மூர்ச்சையாகி விட்டார்
சற்று நேரத்திற்கு பின் அத்தை இடம் சிறு அசைவு தெரிந்தது .நான் பதறி அவரிற்கு சிகிச்சை அளிக்க முற்பட்டேன் எனில் அவர் தடுத்துவிட்டார் என்னை அருகில் அழைத்தவர் சன்னமான குரலில் "ஆராதனாவையும் ஆதிராவையும் நன்றாக பார்த்துக்கொள் அருள் என்று கூறிவிட்டு அவரின் ஆத்மபலம் ,அவர் பிறப்பிலேயே பெற்றிருந்த மாந்த்ரீக ஷக்தி என்று அனைத்தையும் எனக்கு வரமாக என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து அடுத்த நொடி மரணத்தை தழுவிவிட்டார் .நம் குலத்திலேயே அதீத ஆத்மபலம் பொருந்தியது அத்தை தான் ஆதலால் அவர் அளித்த சக்திதானத்தின் மூலம் என்னால் அந்த வித்தையை செய்ய முடியும் "என்று கூறியவன் பின் அந்த சிறையின் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தவன் ஆதிராவையும் ஆராதனாவையும் கிழக்கு நோக்கி நிற்குமாறு பணித்தான் .

அவர்கள் அவ்வழியே நிற்க கண்கள் மூடி மந்திரம் உச்சரித்துக்கொண்டிருந்த அருள்மொழியின் தேகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிகப்பு நிறமாய் மாற நரம்புகள் அனைத்தும் புடைத்து ஒருவித ஆக்ரோஷமான தவநிலையில் இருக்கும் முனிவனை போல் தெரிந்தான் அருள்மொழி .அவனின் உடலிலிருந்து அவன் உச்சரிக்கும் மந்திரத்தின் வீரியமாய் வியர்வை ஆறென வழிந்தோட உடல் இருகிக்கொண்டே செல்ல அவனின் குரல்வளை தீயின் நிறத்தில் சிகப்பாய் மாறியது .

பத்து நிமிடத்திற்கு பின் அவ்விடம் முழுவதும் ஒளியால் நிரம்ப கண்களை திறந்தவன் கண்களிலிருந்து பாய்ந்த நீல நிற ஒளிக்கதிர்கள் ஆராதனா மற்றும் ஆதிராவின் நிழல்களில் விழ கொஞ்சம் கொஞ்சமாய் மேலெழும்பிய நிழல்கள் அவர்களின் உருவமாய் மாறியது .அதை அதிசயமாய் பார்த்த ராஜகுமாரிகள் இருவரும் இதற்கு மேலும் தாமதிப்பது தவறென்று அங்கே ஒளியூட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஜன்னலின் கம்பிகளை அகற்றியவர்கள் ஜன்னலின் வழி தப்பித்து அந்த நீர்வீழ்ச்சியின் வழியாகவே இறங்கி தரையை அடைந்தனர் .அவர்கள் சென்ற அடுத்த இரண்டு நிமிடத்தில் நீலகாந்தன் தன் படையுடன் உள்ளே நுழைய ஆதிரா மற்றும் ஆராதனாவின் நிழல் உருவங்களை நிஜ உருவங்களென நினைத்து சிறையில் அடைத்தான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro