அத்தியாயம் (24)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அதற்குப் பின் வந்த நாட்கள் எப்பொழுதும் போல ஆரோஹி காலேஜுக்கு செல்வதும் ப்ரித்வி வேலைக்கு செல்வதுமாயும் போய்க் கொண்டிருந்தது. தனது முதல் மாத சம்பளத்தில் ஆரோஹிக்கு மிகவும் பிடித்த Paris இல் மிகவும் பிரபலமான விலையுயர்ந்த Perfume ஒன்றை வாங்கிக் கொடுத்தான் ப்ரித்வி. ப்ரித்வியின் தனித்தன்மையும் அது தான். அவன் ஆரோஹியை முழுமையாக அறிந்து வைத்திருந்தான். அவளுக்கு பிடித்தவற்றை அவள் எதிர்பாராத சமயங்களில் செய்து அசத்த அவனால் மாத்திரமே முடியும். இப்படியிருக்க ராதா மோகன் வேலை சம்பந்தமாக ப்ரித்வியை நான்கு நாட்களுக்கு அவர்களது ஜெர்மனி ஆபீசிற்கு அனுப்ப முடிவு செய்து இருந்தார். வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்னர் முதன் முறையாக தனது தந்தை அவனை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்ட் என்ற உற்சாகத்தில் ப்ரித்வியும் ஆர்வமாக கிளம்பிச் சென்றான். ஆரோஹி எப்பொழுதும் போல காலேஜுக்கு செல்லுதல், சமைத்தல், மிகுதி நேரத்தை பல்லவியோடு கழித்தல் என்று இருந்தாள். உள்ளுக்குள் என்னவோ ப்ரித்வி இல்லாத அந்த வீடு கலை இழந்து தான் காணப்பட்டது. ப்ரித்விக்கென்று ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உண்டு. அது அவன் இருக்கும் இடத்தை எப்பொழுதும் சந்தோஷங்களால் மாத்திரமே நிரப்பி வைத்திருக்கும். அவனால் 5 நிமிடம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாது, பின் விளைவுகளைப் பற்றி யோசித்து பேசுவது என்பது ப்ரித்வியின் அகராதியிலேயே கிடையாது மனதுக்கு தோன்றியதை பளிச்சென்று சொல்லி விடுவான் ஆனால் இதுவரை அவன் பேச்சால் காயப்பட்டவர்கள் என்றும் யாரும் இல்லை. தன்னை சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவனே. இந்நேரம் வீட்டில் இருந்தால் ஆருவை வம்புக்கிழுத்துக் கொண்டு இருந்திருப்பான்.

அவன் ஜெர்மனி சென்று முழுதாக ஒரு நாள் ஆகியிருக்க இன்னும் அவன் ஆருவுக்கு ஒரு ஃபோன் கால் கூட எடுத்திருக்கவில்லை. தானாக கால் செய்து அவனை தொந்தரவு செய்யவும் அவள் விரும்பவில்லை. இரண்டாம் நாள் இரவு ப்ரித்வி பேசினானா என்று ராதா மோகனிடம் விசாரித்துப் பார்த்தாள். அங்கு ஜெர்மனி ஆபீசில் எக்கச்சக்க குழறுபடி என்றும் ப்ரித்வி பயங்கர பிஸியாக இருக்கிறான் என்றும் அவரை தொடர்பு கொண்டு இரண்டு மூன்று முறை ஆபீஸ் விஷயங்களை அப்டேட் செய்திருந்தான் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார் ராதா மோகன். ஆரோஹிக்கு ஒரு புறம் அவன் ஜெர்மனி சென்றிருப்பதன் காரணமும் அவன் எவ்வளவு பிஸியாக இருக்கக் கூடும் என்பதுவும் புரிந்தது ஆனாலும் மனதின் ஒரு மூலையில் 'இவனெல்லாம் என்ன ஃப்ரெண்ட் ராத்திரி தூங்கும் போதாச்சும் ஒரு கால் போட்டு ஒரு இரண்டு வார்த்தை பேச முடியலைனா நம்புறா மாதிரியா இருக்கு' என்று அவனை திட்டிவிட்டு தூங்கச் சென்றாள். நள்ளிரவு 1.15 இருக்கும் தலையணைக்கடியில் இருந்து ஃபோன் வைப்ரேட் ஆனது. யாரிந்த நேரத்தில் என்று கஷ்ட்டப்பட்டு கண்ணை சுருக்கி பார்த்தாள். ப்ரித்வியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

"நீ இங்கு சுகமே ❤️ நான் அங்கு சுகமா?"

என்று தமிழில் டைப் செய்யப்பட்டிருக்கக் கண்டு ஆருவின் இதழ்கள் தன்னால் மலர்ந்தன. இது தான் ப்ரித்வி. எப்பொழுது எதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான். அவனிடம் ஒரு வசியத் தன்மை இருக்கவே செய்தது. மெசெஜை பார்த்து அதுக்கு பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு தூங்கி விட்டாள் ஆரோஹி. இது அவனை காக்க வைப்பதற்கான அவளின் முறை போலும்!

மறுநாள் காலையிலேயே ரஞ்சினி அழைத்திருந்தாள். ஃபோனை எடுத்ததும் அதுவுமாக,

"உனக்கும் ஆதிக்கும் நடுவுல என்ன தான்டி நடந்துட்டு இருக்கு?" என்று ஆரம்பித்தாள் அவள்.

"ஏன் என்ன ஆச்சு இப்போ? நீங்க எதுக்கு காலங்கார்த்தால இவ்ளோ டென்ஷனா இருக்கிங்க?" கேட்டாள் ஆரோஹி.

"ஏன் எதுவும் நடந்தா தான் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுவியா?" என்றாள் ரஞ்சினி.

ஆரு: இப்போ உங்களுக்கு என்ன தெரிஞ்சிக்கணும்?

ரஞ்சி: உனக்கும் ஆதிக்கும் இடையில என்ன நடந்துட்டு இருக்குன்னு கேட்டேன்?

ஆரு: ஒன்னும் இல்ல

ரஞ்சி: ஒன்னும் இல்லான்னா?

ஆரு: ஒன்னும் இல்லைனா ஒன்னும் இல்லை

ரஞ்சி: அதாவது நீ அவனை லவ் பண்ணலை அப்படியா?

ஆரு: என்ன அண்ணி தெரியாத மாதிரி கேட்குறிங்க? அது தான் அவன் வசுவை லவ் பண்றான்ல?

ரஞ்சி: அப்படி நீ தாண்டி நினைச்சிட்டு இருக்க

ஆரு: புரியலை...... (கலவரமானாள் ஆரு)

ரஞ்சி: அவங்க ரெண்டு பேரும் Break up பண்ணிண்டு ரொம்ப நாள் ஆச்சாம்

ஆரு: உங்களுக்கு யார் சொன்னா? (அதிர்ச்சி)

ரஞ்சி: யாரோ...

ஆரு: நிஜமாவா???

ரஞ்சி: இதோட பெரிய ஷாக்கிங் நியூஸ்லாம் இருக்குடி

ஆரு: என்ன?????? (இப்பொழுது அவள் குரலில் பயம் கலந்திருந்தது)

ரஞ்சி: மாமியும் மைத்துவும் சேர்ந்து ஆதிக்கு ஒரு பொண்ணு பார்த்து வெச்சிட்டு இருக்காங்களாம். எங்ககிட்ட யாரும் Official ஆ சொல்லலை. ஆனால் என் காதுக்கு வந்திச்சு. ஆதியும் interested ஆ இருக்கான்னு தான் பேச்சு அடி படுறது....

ஆரு: ஓஹோ......
(இதற்கு வேறு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை)

ரஞ்சி: என்ன ஓஹோ...

ஆரு: அவனுக்கு இஷ்ட்டமிருந்தா பண்ணிக்கட்டும்.

ரஞ்சி: நான் இதைலாம் உன்கிட்ட ஏன் சொல்றேன்னா நீயும் இதையே புடிச்சு தொங்கிட்டு இருக்காமல் life ல move on ஆகற வழியைப் பாருடி.

ஆரு: Move on ஆகி தான் நான் Paris க்கே வந்தேன்.
(வாய்க்கு வந்ததை அப்போதைக்கு சொல்லி வைத்தாள்)

ரஞ்சி: எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒன்னும் இல்லை. ஆனால் ரெண்டு பேருமே எங்க வீட்டு பசங்க. ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். அவ்வளவு தான். என் காதுக்கு இந்த விஷயம் வந்திச்சு. உன்கிட்ட சொல்லி வைக்கலாம்னு தோணிச்சு சொல்லிட்டேன். அவ்வளவு தான்! நீ பார்த்து இருந்துக்கோ. நான் வச்சிடுறேன்.

காலையிலேயே வந்த இந்த ஃபோன் கால் பாரிஸ் வந்ததின் பின்னால் இருந்த ஆருவின் ஒட்டு மொத்த மனநிலையையும் சுக்கு நூறாக்கிப் போட்டது. ஆதி வசுந்தராவை பிரிந்து விட்டான் என்பதையோ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகின்றான் என்பதையோ அவளால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. ஆனால் அவளுக்கு வந்த செய்தியும் ஒன்றும் நம்பகத் தன்மை அற்ற இடத்திலிருந்து வந்த Gossip கிடையாது. சரிவரத் தெரியாமல் ரஞ்சினி இவ்வளவு தூரம் தெளிவாக பேசியிருக்க மாட்டாள். ஆனால் இதை எல்லாம் ஏன் ஆதி அவளிடம் சொல்லவில்லை? வசுவுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி அவளிடம் பேசுவதை நிறுத்தியவன் ஏன் வசுவை பிரிந்த பின்னரேனும் அவளைத் தேடி வரவில்லை? வசுவுக்கு பின்னும் அவன் மனம் அவளைத் தேடியிருக்கவில்லை மாறாக வேறு ஒரு பெண்ணோடு திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு இருக்கிறான்!!!!

இவ்வளவு நாளும் கட்டிக் காப்பாற்றி வந்த ஒட்டு மொத்த தைரியமும், மனதின் இறுக்கமும் சில்லுசில்லாய் நொறுங்குவதை உணர்ந்தாள் ஆரோஹி. ஆனால் இப்படியே தனிமையில் அமர்ந்து இதையே சிந்தித்துக் கொண்டு இருந்தால் தனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருக்க வலுக்கட்டாயமாக கிளம்பி காலேஜுக்கு சென்றாள். அங்கேயும் மனது ஒரு இடத்தில் இருக்கவில்லை. ஆதியின் மனதின் ஒரு மூலையில் கூட அவள் இல்லையா என்பதையே மனது மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டு இருந்தது. இவ்வளவு நாளாக அவளும் ஆதியும் ஒன்று சேர்வதற்கு இடைஞ்சலாக ஆதியின் மனதில் வசுந்தரா இருப்பது தான் தடையாக இருந்தது என்று தான் எண்ணிக் கொண்டு இருந்தாள் அவள். ஆனால் வசு அவன் வாழ்க்கையில் இல்லை என்று ஆனதின் பின்னால் கூட அவனது வாழ்க்கையில் இரண்டாம் இடத்தில் கூட அவளுக்கு இடம் இல்லையா என்று எண்ணியதும் அவளை அறியாமல் அவள் கண்கள் நீரை சிந்தியது. வசு சொன்னால் என்று சொல்லிக் கொண்டு அவளோடு பேச மாட்டேன் என்றது, அவளை ஏர்போர்ட்டில் விட்டு கடைசியாக பிரியாவிடை கொடுக்கவேனும் வராமல் விட்டது என்று ஆரு அவன் மீது கோபமாகத் தான் இருந்தாள் ஆனால் அவன் வாழ்க்கையில் இத்தனை நடந்த பிறகாவது அவன் அவளுக்கு ஒரு கால் எடுத்து இருக்கலாமே... அதற்கு கூட அவள் தகுதி இல்லை என அவன் எண்ணி விட்டனா??? அவனாக வந்து பேசி இருந்தாள் அவள் அவனை என்ன தான் செய்து விடப் போகிறாள்? ஆதி எப்பொழுது எந்த நிலையில் திரும்பி வந்தாலும் அவளால் அவனை தள்ளி விடத் தான் முடியுமா??? இப்படி உள்ளது இல்லாதது என்று எதெதையோ கற்பனை செய்து மருகிக் கொண்டு இருந்தாள் ஆரோஹி.

ரஞ்சினியின் அழைப்பு வந்ததிலிருந்து ஆரு அவளாகவே இல்லை. காலேஜ் முடிந்து மாடியில் இருந்து lift இல் lobby க்கு வருவது தான் ஆருவின் வழக்கம். அன்று ஏதோ யோசனையில் படிக்கட்டில் இறங்கி வந்தவள் படியில் கால் தவறி மேலே இருந்து விழுந்து விட்டாள். அருகில் நின்ற மாணவர்கள் ஓடிச் சென்று அவளை தூக்கி நிறுத்த முயற்சி செய்தார்கள். கால் எழும்பு ஒன்று லேசாக fracture ஆகி இருந்த நிலையில் அவளால் நடக்க முடியாமல் வலி உயிர் போனது. பயப்படும் படியான அடி எதுவும் இல்லை என்பதால் காலேஜ் first aid இலேயே பரிசோதித்து கால் கன்றி இருந்த இடத்தில் ஒரு bandage ஐ மட்டும் சுற்றி ராதா மோகனை அழைத்து அவருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டாள் ஆரோஹி.

ராதா மோகனும் பல்லவியும் காலேஜில் இருந்து அழைப்பு வந்த போது கொஞ்சம் பயந்து விட்ட போதும் ஆருவை நேரில் கண்டு பெரிய அடி எதுவும் இல்லை என்றதும் தான் நிம்மதி ஆனார்கள். பல்லவி ஆருவின் நிழல் போல ஆருவோடு கூடவே இருந்தாள். ஆனால் ஆரு தான் பழைய கலை இழந்து மிகவும் சோர்வாக காணப்பட்டாள். தன் வீட்டுக்கு இது பற்றி எதுவுமே தெரிவிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அனாவசியமாக பதறுவார்கள் என்றும் ஆரு கேட்டுக் கொண்டதற்கினங்க ஆருவின் வீட்டுக்கு அவள் கீழே விழுந்தது பற்றி ராதா மோகன் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. வீட்டுக்கு எடுத்து தெரிவிக்கும் அளவிற்கு பலத்த அடியும் அவளுக்கு ஒன்றும் இல்லை. மறு நாள் காலேஜுக்கு லீவு சொல்லி விட்டு வீட்டிலேயே இருந்தாள் ஆரு. பழைய படி எழுந்து நடக்க 10 நாளேனும் ஆகும் போல இருந்தது. அன்று இரவு ப்ரித்வி ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்தான். அவன் வந்ததுமே பல்லவி ஆரோஹிக்கு காலில் அடி பட்டு இருப்பதைப் பற்றியும் இரண்டு மூன்று நாட்களாகவே ஆரு நார்மலாகவே இல்லை என்றும் அவனுக்கு தெரிவித்தாள். ஆருவால் மாடி ஏற முடியாமல் இருந்ததால் கீழே உள்ள ஒரு அறையை தற்காலிகமாக அவளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தாள் பல்லவி. ப்ரித்வி கிளம்பி வந்த நேரம் ஆரு தூங்கிக் கொண்டு இருந்ததால் சத்தம் காட்டாமல் போய் அவளை ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று தான் ப்ரித்வி மெதுவாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அதற்கே அவள் தூக்கம் கலைந்து எழுந்து விட்டாள்.

அவளை பார்த்த மாத்திரத்திலேயே தூக்கத்தையும் தாண்டி அவள் கண்கள் ஜீவன் இழந்து இருப்பதை உணர்ந்து கொண்டான் ப்ரித்வி. அவள் மெல்ல கண் திறந்து அவனையே வெரித்து பார்த்துக் கொண்டு இருக்க மெதுவாக சென்று அவள் அருகே அமர்ந்து கொண்டான் ப்ரித்வி. அவன் அருகில் வந்து அமர்ந்ததும் அவளும் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொள்ள முயற்சி செய்யவே, அவள் எழுந்து அமர அவளுக்கு உதவி செய்தான் அவன். இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி சில வினாடிகள் பேசாமல் அமர்ந்து இருந்தார்கள். அடி பட்ட மான் போல இருந்தவளை அப்படிப் பார்க்க ப்ரித்விக்கு என்னவோ போல இருக்க அவளை எதுவும் கேட்காமல் அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து பொத்திக் கொண்டான். அவ்வளவு தான்!! அந்த ஸ்பரிசம் அவளை எதுவும் செய்ததா இல்லை அந்த அழுத்தத்தில் கிடைத்த அரவணைப்பு அவளை எதுவும் செய்ததா இல்லை அவனை காணும் வரை தான் தன் ஒட்டு மொத்த சோகத்தையும் அடக்கி வைத்து இருந்தாளா தெரியாது ஆனால் இத்தனை நாளாக அவள் பெரும் பாடு பட்டு அடக்கி வைத்திருந்த மொத்தக் கண்ணீரும் அணை திறந்த வெள்ளம் போல பொங்கிக் கொண்டு வந்தது. அவ்வளவு தான்!! ப்ரித்வியின் கழுத்தை இருகக் கட்டிக் கொண்டு சத்தமாக அழுதாள் ஆரோஹி.

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்தம் உள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro