அத்தியாயம் (3)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆரோஹி அழகி என்பது ஆரோஹியையும் ஆதித்யாவையும் தவிர எல்லோருக்கும் தெரிந்திருந்தது. மொத்தத்தில் ஆரோஹியும் ஆதித்யாவும் தாங்கள் அறியாமலேயே இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டு இருந்தனர். சிறு வயது முதலே அவள் அன்பு வைத்த ஆதி எப்பொழுதுமே அவள் அழகாய் இல்லை என்று சொல்லியே அவளை நிராகரித்தது அவள் சின்ன இதயத்தில் ஆணி அடித்தது போல பதிந்து விட்டது. நாம் அப்படி ஒன்றும் அழகாய் இல்லை தான் போலும் என்ற அந்த மகா பொய்யை அவள் மனமும் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. சிறு வயதில் அவளை அழ வைத்துப் பார்க்க அவன் ஒரு முறை அவளை அவள் அழகாக இல்லை என்று வாயில் அப்போதைக்கு வந்ததை சொல்லி வைத்தான். அது அவளை கோபப்படுத்தியதை அறிந்த பின்னர் அதைக் கூறியே அவளை வெறுப்பேற்றவும் ஆரம்பித்தான். ஆனால் அவள் அழகா இல்லையா என்று அவன் எப்பொழும் அவளை அந்த நோக்கத்தில் பார்த்ததே இல்லை என்பது தான் நிஜம், அது பற்றி அவனுக்கு என்றுமே அக்கறையும் இருந்ததில்லை. ஆனால் வசுந்தராவை கண்ட அந்த நிமிடமே அவன் அவள் அழகில் விழுந்து விட காரணம் அவன் அறை நிர்வாணத்தை அழகென்று எண்ணிக் கொண்டு இருந்தது தான்!

ஆரோஹியின் கள்ளம் கபடமில்லாத அகம் அவளது மாசு மருவில்லாத பால் வண்ண முகத்தில் பிரதிபளித்தது. அலை அலையான செந்நிற நீண்ட கூந்தல், காதில் தொங்கும் பெரிய ஜிமிக்கி, புருவங்களுக்கு இடையே ஒரு குட்டி கருப்பு பொட்டு இது தான் ஆரோஹியின் அடையாளம். ஆரோஹி ஒரு அழகி என்பதை இங்கு எல்லோரையும் விட அதிகம் அவதானித்திருந்த ஒரு நபர் வசுந்தரா. ஆரோஹியின் அழகு வசுந்தராவுக்கு எப்பொழுதுமே ஒரு insecurity ஐ கொடுத்தது. வசுந்தராவுக்கு ஆரோஹியை சுத்தமாக பிடிக்காது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவள் ஆரோஹியின் காலை வாரப் பார்ப்பாள். ஆனால் அதை வெளிப்படையாக ஆதியிடமோ ஆருவிடமோ என்றுமே காட்டிக் கொண்டது கிடையாது. ஆதியும் வசுவும் காதலிக்க ஆரம்பித்த இந்த மூன்று ஆண்டுகளில் ஆதியின் பக்கத்தில் இருந்து வசுவுக்கு அறிமுகமான ஒரே நபர் ஆரோஹி மட்டுமே. வசுந்தராவும் ஆரோஹியும் இந்த மூன்று வருடங்களில் நான்கைந்து முறை சந்தித்துக் கொண்டதுண்டு.

வசுந்தரா அவளது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் வழக்கம் கொண்டவள். அவளது தேவை எல்லாம் பார்ட்டி பண்ண ஒரு காரணம் மட்டும்! எல்லா வருடமும் ஏதாவது ஒரு பெரிய ஹோட்டலை book செய்து நண்பர்களுக்கு விடிய விடிய பார்ட்டி கொடுப்பது அவள் வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக வசுந்தராவே கால் செய்து அழைத்ததற்கு இணங்க ஆரோஹி அவளது பார்ட்டிக்கு சென்றிருக்கிறாள். இந்த வருடமும் தன் பிறந்த நாளுக்காக வசு ஆரோஹியை கால் செய்து இன்வைட் செய்திருந்தாள். அவள் மட்டுமே அறிந்த ஒரு அற்ப சந்தோஷத்திற்காக வசு ஆண்டு தோரும் ஆருவை பார்ட்டிக்கு அழைப்பாள். ஆருவுக்கு அங்கு யாரையும் தெரியாது. ஆனால் மரியாதைக்காக சென்று கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்து விட்டு வருவாள். பார்ட்டிக்கு செல்லும் போது ஆதி அவளை காரில் கூட அழைத்து செல்வான். ஆனால் பார்ட்டியில் அவன் குடிக்க ஆரம்பித்தால் நண்பர்களோடு விடிய விடிய குடிப்பான். இரவு எவ்வளவு தாமதமானாலும் ஆரோஹி cab பிடித்து தான் வீடு வந்து சேர வேண்டும்.

பார்ட்டியில் ஆருவுக்கு ஆதியையும் வசுவையும் சேர்த்து நெறுக்கமாய் காண நேரும். வசு அவளை அழைப்பதும் அந்த நெருக்கத்தை அவளுக்கு காண்பிக்கத் தான். ஆனால் அதை எப்பொழுதும் ஆரு பெரிதாக மனதில் போட்டு குழப்பிக் கொள்வது கிடையாது. ஒருதலைக் காதலில் இதைத் தவிர வேறு அவள் எதைத் தான் எதிர்பார்ப்பது? ஆரோஹிக்கு இந்த ஒருதலைக் காதலில் சாதகமாய் அமைந்தது ஒன்றே ஒன்று தான் அது அவளால் ஆதியை அருகிலேயே வைத்து பார்த்துக் கொள்ள முடிந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்திலேயே இருந்தது தான் வசுந்தராவுக்கும் ஆரோஹியின் மீது ஒரு பயத்தையும் பொறாமையையும் உண்டு பண்ணியது. ஆனால் பக்கத்திலேயே இருந்த பஞ்சை நெருப்பு தான் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஆகஸ்ட் மூன்றாம் திகதி வசுந்தராவின் பிறந்த நாள். பெசண்ட் நகரில் ஒரு பீச் வியூ பங்களாவை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தாள் வசு. ஆதியும் ஆருவும் பார்ட்டிக்கு சென்ற பொழுது பார்ட்டி ஆரம்பமாகி இருந்தது. வசுந்தரா படு கவர்ச்சியாக ஒரு ஆடை அணிந்து இருந்தாள். ஆதியும் எப்பொழுதும் போலவே அவளை கண்டதுமே போதை தலைக்கேற தான் அவளுக்காக வாங்கிக் கொண்டு சென்றிருந்த வைர காதனிகள் சகிதம் அவளை ஆராதிக்க சென்று விட்டான். ஆரோஹி ஒரு பூங்கொத்தினை வசுவுக்கு கொடுத்து அவளை வாழ்த்தி விட்டு ஒரு நாற்காளியில் சென்று அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள். கேக் கட்டிங்குக்கு பின்னர் Buffet ஆரம்பமானது. ஆனால் அங்கு வருகை தந்த மொத்த பேரும் கையில் ஆளுக்கொரு கோப்பையை தூக்கிக் கொண்டு உணவை சைட் டிஷ்ஷாகவே தொட்டுக்கொண்டனர். ஆதி வசுந்தராவே கதியென அவளையே ஒட்டிக் கொண்டு திரிந்தான்.

இவை யாவும் அந்த பங்களாவுக்கு வெளியே பூந்தோட்டத்தில் நீச்சல் குளத்துக்கு அருகில் நடந்து கொண்டிருக்க வீட்டுக்குள் DJ என்ற பெயரில் ஒருவன் மட்டையாக குடித்து விட்டு காது கிழியும் சத்தத்தில் பாடல் என்ற பெயரில் ஒரு சில சீடிக்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு சத்தத்திலும் கொஞ்சம் காதைத் தீட்டி கேட்டால் அவ்வளவும் கெட்ட வார்த்தைகள். ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையும் ஒரு நாகரீகம் தானே! அங்கு கொஞ்சம் சென்று பார்த்து விட்டு வரலாம் என எண்ணி ஆரு எழுந்து உள்ளே சென்றாள். அங்கேயும் மதுபானம் பறிமாறப்பட்டுக் கொண்டிருக்க ஒரு சிலர் அங்கு அமர்ந்து பாடல் கேட்டவாறு குடித்துக் கொண்டிருக்க, ஒரு சில ஜோடிகள் டான்ஸ் என்ற பெயரில் ஹியுமன் அனாட்டமி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு கையில் ஒரு பெரிய கண்ணாடிக் குவளை நிறைய ஐஸ் கட்டி அதிகம் போடப்பட்ட பெப்சியை வாங்கிக் கொண்டவள் அங்கு போடப்பட்டு இருந்த ஒரு Bar stool இல் ஏறி அமர்ந்து கொண்டு கொஞ்ச கொஞ்சமாக தன் பெப்சியை சுவைக்க ஆரம்பித்தாள். அப்பொழுது அவள் அருகில் ஒருவன் வந்து அமர்ந்தான்.

"ஹாய்... ஐ ஆம் வருண்" என்று வந்து அமர்ந்த மறு நிமிடம் ஆரோஹியை பார்த்து தன் கையை நீட்டினான் அவன்.

"ஹாய்.. ஐ ஆம் ஆரோஹி" என்றாள் அவள் அதை சற்றும் எதிர்பார்த்திராதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்.

"ஆரோஹி.... வாட் எ பியூட்டிபுல் நேம்" என்றான் அவன். அவனிடம் இருந்து குப்பென்று மது வாடை.

"ஹ்ம்ம்...." என்று இழித்து வைத்தாள் ஆரோஹியும் வேறு வழியின்றி.

அதன் பின்னர் அவன் தான் ஹைதராபாத்தில் இருந்து வந்து இருப்பதாயும் அவன் வசுந்தராவின் காலேஜ் நண்பன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, வசுவுக்கு வேறு வேண்டப்பட்டவனாய் இருந்து தொலைத்ததற்கும் சேர்த்து அவள் அவனிடம் சிரித்து பேச வேண்டியதாயிற்று. அவன் ஆருவிடம் பேசிக் கொண்டு இருப்பதைக் கண்ட அவனது இன்னும் சில ஆண் மற்றும் பெண் நண்பர்களும் வந்து அவர்களுடன் பேச ஆரோஹியும் பேச்சு துணைக்காக அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். இதன் நடுவே DJ சில பாப்புலர் பாடல்களை ஒலிக்க விட வருணும் அவன் நண்பர்களும் நடனம் ஆடத் தொடங்கினர். ஆரோஹி எவ்வவளவோ மறுத்தும் வருண் அவளை தன்னுடன் ஆடும் படியாக மேடை மீது இழுத்து விட்டான். அது போன்றதொரு பார்ட்டிக்கு சென்று விட்டு ஓவராக பிகு செய்யவும் முடியாது ஆகையால் ஆரோஹியும் பாதி சம்மததுடன் வருணோடு கூட ஆட ஆரம்பித்தாள்.

நடனத்துக்கு இடையே வருண் அவளை கண்ட இடங்களில் கை வைக்க முயல்வதையும் மிக நெருக்கமாக வந்து அவளது உடலோடு உரசுவதையும் உணர்ந்த ஆரோஹி மெதுவாக அவனிடமிருந்து விலகிக் கொள்ள முயற்சி செய்ய இப்பொழுது வருண் அவளை பலாத்காரமாக அணைத்து முத்தமிட முயற்சித்தான். ஆரோஹி எவ்வளவோ முயற்சி செய்தும் அவளால் அவனது பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. Dance floor இல் இருந்தவர்கள் அனைவரும் குடிபோதையில் அதிக பட்சம் வருண் செய்ததையே செய்து கொண்டு இருக்க ஆரோஹியின் திமிரலை யாரும் சட்டை செய்யவில்லை. அவள் போட்ட கூச்சலும் DJ யின் சத்தத்தில் எடுபடவில்லை. அப்பொழுது தான் ஆதித்யாவும் வசுந்தராவும் Dance floor க்குள் வந்தனர். உள்ளே நுழைந்த உடனேயே அங்கு நடந்து கொண்டு இருந்ததை இருவருமே கண்டும் விட்டனர்.

ஆதியின் கண்களில் தெரிந்ததெல்லாம் ஆரோஹி ஒரு ஆணின் கைகளில் பலாத்காரமாக சிக்கி தவித்து கொண்டிருக்கிறாள் என்பது மட்டுமே. ஆதியும் குடித்துத் தான் இருந்தான் ஆனால் இம்முறை அவன் கண்கள் கோவத்தில் சிவந்தது, அவன் உடல் முழுதும் கோவத்தால் முறுக்கிக் கொண்டது, அவனது கை முஷ்டி தானாக இருகியது. வருண் யார் என்பதை ஆதி அறிய மாட்டான் ஆனால் அவனுக்கு அதைப் பற்றி அக்கறையும் இல்லை. வசுந்தரா சுதாகரிக்கும் முன்னர் நேராக வருணை நோக்கி சென்றவன் ஆரோஹியை ஒரு கையால் பற்றி இழுத்து மறு கையால் வருணின் மூஞ்சி மீது ஒரு குத்து விட்டான்.

ஆதியை அங்கு கண்ட ஆரோஹி அவனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க அது அவனின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்க வருணை அடித்து தொம்சம் செய்ய ஆரம்பித்தான் ஆதி. வருண் அத்துமீறி குடித்திருந்ததினால் அவனாள் ஆதியை எதிர்த்து நிற்க கூட முடியாமல் தொப்பு தொப்பென்று அடி பொறுக்காமல் கீழே விழுந்தான் அவன். அதற்குள் சண்டையை விலக்கவென வசுந்தராவும் வருணின் ஏனைய நண்பர்களும் வந்து ஆதியை பிடித்து தடுத்து நிறுத்தினர்.

"ஸ்ட்டாப் இட் ஆதி! ஸ்ட்டாப் இட்!!!!என்ன பண்ற நீ? அவனை போட்டு இந்த மிதி மிதிக்கிற? ....."

"யார்டி அவன்? பாத்தல்ல அவன் ஆருகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணதை"

"அதுக்காக இப்படி தான் போட்டு அடிப்பியா? அவன் என் காலேஜ் ஃபிரண்டு என்னோட பார்ட்டிக்காக ஹைதராபாத்லருந்து வந்துருக்கான்"

"அவன் எவனா வேண்ணா இருக்கட்டும் எங்கருந்து வேண்ணா வந்திருக்கட்டும் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமல் அவளை தொட்டா தமிழ் நாட்ல இப்படி தான் வெளுப்பாங்கன்னு போய் அவனுக்கு சொல்லு போ......" அவளை அவனை நோக்கி தள்ளி விட்டான் அவன்.

"ஆதி!!!!!! அவளுக்காக என் ஃபிரண்ட்ஸ் முன்னாடி என்னை என் பிறந்த நாளும் அதுமா இப்படி தான் அசிங்கப்படுத்துவியா? சரி... நம்ம பிரச்சினையை அப்பறமா பேசிக்கலாம். என் ஃபிரண்ட்ஸ்லாம் ரொம்ப கோவமா இருக்காங்க. நீ ஏதோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அடிச்சிட்டேன்னு அவன்கிட்ட ஒரு சாரி சொல்லிடு ஆதி...."

"எது? நான் அவன்கிட்ட மன்னிப்பு கேக்கணுமா? குடி போதைல தெரியாமல் பண்ணிட்டேன்னு அவனை ஆருகிட்ட மரியாதையா மன்னிப்பு கேக்க சொல்லு"

"ஆதி எல்லாரும் நம்மலையே பார்த்துட்டு இருக்காங்க. நீ என்னை யாரோ ஒருத்திக்காக திரும்ப திரும்ப ரொம்ப அசிங்கப் படுத்திட்டு இருக்க....."

"நானும் பார்த்துட்டே இருக்கேன். அவன் பண்ணது உனக்கு தப்பாவே படலைல???நீ என்னன்னா ஆரம்பத்துல இருந்து ஏதோ உன் B'day party நல்லா போகக் கூடாதுன்னு இதைலாம் நான் ப்ளான் பண்ணி பண்ணது மாதிரியே பேசிட்டு இருக்க.... Alright இது உன்னோட party and it's your day today. இங்க எதுவுமே நடக்கல நீயும் உன் Friends ம் தொடர்ந்து பார்ட்டி பண்ணுங்க. இது எல்லாத்துக்கும் நான் தானே காரணம் நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு ஆரோஹியை கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் ஆதித்யா.

"ஆதி... ஆதி... ப்ளீஸ் போகாத நில்லு" என்று கத்திய படி பின்னால் ஓடி வந்த வசுந்த்ராவை கொஞ்சம் கூட பொருட்படுத்தாது!

என்னோடிருந்தால் எவளோ நினைவான்
அவளோடிருந்தால் எனையே நினைவான்    
என்னை துறவான் என் பேர் மறவான்    
என்னை மறந்தால் தன்னுயிர் விடுவான்
கண் கவிழ்ந்தால் வெளிபோல் விரிவான்
கண் திறந்தால் கணத்தில் கரைவான்

வான் வருவான்
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro