அத்தியாயம் (4)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதி இவ்வளவு கோபம் கொண்டு இத்தனை வருடத்தில் ஆரோஹி பார்த்ததே இல்லை. அவன் இருந்த கோபத்தில் வண்டியையும் மிக வேகமாக அந்த தார் ரோட்டில் செலுத்திக் கொண்டு இருந்தான். ஆதிக்கு கோபம்! வருண் மீது கோபம், அவன் ஆருவிடம் அத்து மீறி நடந்து கொண்டது கோபம், வருண் போல நண்பர்களை வைத்திருந்ததற்காக வசு மீது கோபம், வருணின் தவறை தட்டிக் கேட்காமல் அவள் தன் மீது பாய்ந்ததற்காக கோபம், ஆருவின் மீது கோபம், அவள் இது போன்ற இடத்திற்கெல்லாம் வந்திருக்கவே கூடாதென்ற கோபம், அவளை அங்கு அழைத்துக் கொண்டு சென்றிருந்த அவன் மீதே அவனுக்கு கோபம். அத்தனை கோபத்தையும் யார் மீது காட்டுவது என்று புரியாமல் ஆருவின் மீதே மொத்தமாய் காட்டினான்.

"உன் பிந்தி எங்க? ஜும்க்கா எங்க? இது என்ன ட்ரஸ் இது? ஒழுங்கா அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்காம உனக்கெல்லாம் எதுக்கு இந்த பார்ட்டி எல்லாம்? அவ தான் வருஷா வருஷம் கூப்பிடறான்னா உனக்கெங்க போச்சு புத்தி??? சரி வந்தமா சாப்பிட்டமா கிளம்பி போனமானு இல்லாமல் உன்னை யாரு டான்ஸ்லாம் ஆட சொன்னா???" ஆருவின் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கொண்டே போனான் ஆதி.

ஆனால் எதற்குமே எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் மௌனமாக அமர்ந்து அழுது கொண்டு வந்தவளை பார்க்க அவனுக்கே பாவமாய் தோன்ற,

"சரி இப்ப எதுக்கு அதையே நினைச்சிட்டு இருக்க நீ? அதுதான் நான் வந்துட்டேன்ல? அதை ஒரு கெட்ட சொப்பனாமா நினைச்சு மறந்துரு என்ன? என் தப்பு தான் அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் உன்னை அழைச்சிட்டே போயிருந்திருக்க கூடாது." ஒரு கை ஸ்டீரிங்கை பிடித்திருக்க மறு கையால் அவளது தலையை தடவி விட்டான் அவன்.

அதற்குள் அவர்கள் வீட்டை நெருங்கி இருக்க ஆரோஹி இறங்கி சென்று கேட்டை திறந்து விட ஆதி காரை பார்க் செய்து விட்டு வந்தான். "Bye ஆதி" என்று கூறி விட்டு ஆரு வீட்டுக்குள் செல்ல முயல,

"ஆரு... மொட்டை மாடில போய் வெய்ட் பண்ணு. நான் இதோ வந்திடுறேன் என்றான்.

ஆரோஹி அவனை ஒரு முறை நின்று பார்த்து விட்டு மாடிப்படியேறி மொட்டை மாடிக்கு சென்றாள். ஆதி வரும் வரை கையை கட்டிக் கொண்டு நின்ற வண்ணம் அந்த இருட்டையே வெரித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆரோஹி. அவள் சென்று சில நிமிடங்களின் பின்னர் ஆதி படியேறி மேலே வந்தான். கையில் ஒரு சரக்கு பாட்டில் வைத்திருந்தான். அவனையும் அவன் கையில் இருந்த சரக்கு பாட்டிலையும் மாறி மாறி பார்த்தாள் அவள். பாட்டில் சகிதம் தரையில் அமர்ந்து கொண்டவன் அவளையும் அமர்ந்து கொள்ளுமாறு சைகையால் அழைத்தான். ஆருவும் அவன் சொல்வதற்கெல்லாம் சாவி கொடுத்த பொம்மை போல அடி பணிந்தாள். பாட்டிலை திறந்து அந்த தங்க நிறத் திரவத்தை கொஞ்சம் தொண்டையில் சரித்துக் கொண்டான் அவன்.

"இங்க பாரு ஆரு. இந்த உலகம் ரொம்ப மோசமானது. நீ நினைக்கிறது மாதிரி எல்லாரும் நல்லவங்க கிடையாது. எல்லா நேரமும் உன்னை காப்பாத்தறதுக்கு நானும் வர முடியாதில்லையா? நீ வேற next month Paris போறதுக்கு இருக்க. புது நாடு, புது கலாச்சாரம், புது மனுஷங்க! நீ தான் பார்த்து பத்திரமா இருந்துக்கணும்  என்ன புரியுதா???" சொல்லிவிட்டு இன்னுமொரு முறை பாட்டிலை தொண்டையில் சரித்துக் கொண்டான் அவன்.

"ஹ்ம்ம்ம்...." என்றாள் அவள் அவனது கண்களையே சிமிட்டாமல் பார்த்தவாறு.

"ஆமா... அவன் உன்னை எங்கல்லாம் தொட்டான்?" என்றான் அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில்.

"அவன் என்னை ரொம்ப அசிங்கமா தொட்டுட்டான் ஆதி. என்னை அப்படியே செவரோட வச்சு த்ள்ளி அவன் உடம்பால என் மேல.... ச்சே..... எனக்கு அதை நினைச்சு பார்க்கறப்பவே உடம்பெல்லாம் அப்படியே ஏதோ ஊர்ராப்ல இருக்கு......" சொல்லிவிட்டு ஆரு மறுபடியும் அழ ஆரம்பிக்க,

"Shit....... M****r F****r (சத்தமாக கத்தினான் அவன்) அவனை அப்படியே விட்டுட்டு வந்திருக்கக் கூடாது என் தப்பு தான். நீ வீட்டுக்கு போ... நான் போய் அவனை...." என்று கோபமாக அங்கு மீண்டும் செல்வதற்கென ஆதி எழுந்து நிற்க இம்முறை ஆரோஹி தான் அவனை சமாதானம் செய்து மறுபடியும் உட்கார வைக்க வேண்டியதாயிற்று. கோபமாக காலை நீட்டி கைகளை பின்னுக்கு ஊன்றி அமர்ந்து கொண்டவன் ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

"விடு ஆதி. சாக்கடை நம்ம மேல தெளிச்சதுன்னு நம்ம சாக்கடைல உருண்டு சண்டை போடவா முடியும். நானும் இதோட அதை மறந்துடுறேன், நீயும் மறந்துடு. மறுபடியும் சண்டைனு கிளம்பி போய்டாதே ப்ளீஸ்......" இப்பொழுது ஆதியின் நலன் கருதி ஆரு அவனுக்கு ஆருதல் சொல்ல வேண்டியதாயிற்று.

ஆதித்யா கோபம் தனியாமல் இன்னும் மூஞ்சியை உர்ரென்றே வைத்திருக்க மறுபடியும் ஆரோஹி அவளாகவே ஆரம்பித்தாள்,

"சரி நீ தம்மடிக்கிறதையும் தண்ணி அடிக்கிறதையும் லைவ் டெலிக்காஸ்ட் பண்ணிக் காட்டத் தான் என்னை இங்க அழைச்சிட்டு வந்தியா?"

"ஹ்ம்ம்... நானும் ரொம்ப கெட்டவன் என்கிட்டயும் பார்த்து ஜாக்கிரதையா இருன்னு உனக்கு சொல்லாமல் சொல்றேன்" என்றான் அவள் கண்ணை பார்த்து.

"ஓஹோ... நான் பயந்துட்டேன்...." என்றாள் மார்புக்கு குறுக்கே கை இரண்டை வைத்து மூடிக் கொண்டு.

"ஆனால் ஒரு பொண்ணோட இஷ்டம் இல்லாமல் அவ மேல கை வைக்கிற அளவுக்கு கேவலமானவன் கிடையாது! நான் கெட்டவன் ஆனால் கேவலமானவன் இல்லை"

"ஆஹா... ஆஹா.... தண்ணி அடிச்சா இப்படி தான் தத்துவமா பேசுவியா?"

"சீரியசா தாண்டி சொல்றேன்"

"சரி நானும் சீரியசா தான் கேக்குறேன். என் மேல அவன் கை வச்சுட்டான்னதும் உனக்கு ஏன் அவ்வளவு கோவம் வந்தது? நீ இப்படி கோவப்பட்டு நான் பார்த்ததே இல்லை"

"நீ எங்க வீட்டு பொண்ணுடி. நான் உன்னை திட்டுவேன், கோவிச்சிப்பேன். உனக்கொரு பிரச்சினைனா பார்த்துட்டு இருப்பேன்னு நினைச்சியா?......."

"வசுவும் தான் நீ லவ் பண்ற பொண்ணு. பின்ன தெரிஞ்சு தெரிஞ்சே அவ கூட இந்த மாதிரி பார்ட்டி பப்ன்னு சுத்திட்டு இருக்க???" ஆரோஹி நிஜமான அக்கறையுடன் கேட்க ஆதி தான் அந்த கேள்வியால் ஒரு நிமிடம் ஆடிப் போனான்.

ஆதி வசுவுடன் இதை விட மோசமான இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறான். சில சமயம் தெரியாமலும் சில சமயம் தெரிந்தேயும் கூட சில ஆண்கள் வசுவின் மீதும் இது போன்று உரசியதுண்டு ஆனால் அப்பொழுதெல்லாம் பிரச்சனை வேண்டாம் என்று ஆதியும் வசுவும் விலகிப் போய் விடுவதுண்டு. ஆனால் ஆதித்யாவுக்கு இவ்வளவு கோபம் வரும் என்று அவனே இன்று தான் அறிந்திருந்தான். ஆனால் ஆருவிடம் அதை காட்டிக் கொள்ளாமல்,

"நீயும் வசுவும் ஒன்னா? அவளுக்கு இந்த culture பழக்கம். அவளால adjust பண்ணிக்க முடியும். ஆனால் நீ அப்படியா? இதுவே வசு மேல எவனாவது கை வச்சிருந்தா அவளே அவனை அடி பிண்ணி இருப்பா. நீ அப்படியா பண்ண? ஐயோ ராமானு அழுதுட்டு இருந்த. அது தான் எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை நான் Public ல தட்டி எழுப்ப வேண்டியத்தாயிடிச்சு! இனி மேல் பாரு எங்க அநியாயம் நடந்தாலும் நான் தட்டிக் கேக்கப் போறேன்" ஏதோ பெரிய ஹாஸ்யத்தை கூறிவிட்டதாக எண்ணி ஆதி டாப்பிக்கை மாற்றி அவளது கேள்வியில் இருந்து தப்பித்ததாக நினைத்தான். ஆனால் ஆரு அவனை நம்பாமல் பார்க்க அவளது கவனத்தை திருப்புவதற்காக அவளது weakest nerve இல் கை வைத்தான் அவன்.

"ஆனால் உன்னை காப்பாத்தப் போய். எனக்கு சோத்துல துண்டு விழுந்துரிச்சு. பயங்கரமா பசிக்கிதுடி நான் வீட்டுக்கு போறேன் நீ உங்க வீட்டுக்கு போய் சாப்பிடறதுக்கு ஏதாச்சு இருந்தா எடுத்துட்டு வரியா......" என்று அவன் கேட்டது தான் தாமதம் ஆரோஹிக்கு சகலமும் மறந்து போனது.

"நீ போ. நான் இதோ வந்துடறேன்." என்று சொல்லிவிட்டு மான் குட்டி போல படிகளில் துள்ளிக் குதித்து கீழே சென்றாள் ஆரு. அவள் போவதையே பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி. இதுவரை அவன் அவனிடமே கேட்கத் தவறிய ஒரு கேள்வியை அவள் அவனுக்குள் எழுப்பி விட்டு சென்றிருந்தாள். ஆனால் இதற்கு மேல் அது பற்றி யோசிப்பது எல்லோருக்கும் ஆபத்து என்று தோன்றவும் அவனும் எழுந்து கீழே அவனது வீட்டுக்குள் சென்றான். அவன் சென்று சிறிது நேரத்தில் ஆரோஹி ஒரு டப்பா தோசை மாவுடன் மேலே வந்தாள். உள்ளே வரும் பொழுதே,

"நீ சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா. நான் உனக்கு சூடா தோசை வார்த்து தாரேன்" என்றாள்.

ஆதி குளித்து முடித்து வந்ததும் தோசை தயாராய் இருக்க ஆதி சாப்பிட அமர்ந்தான்.

"நீயும் ஒரு தட்டு எடுத்துட்டு வந்து சாப்பிடு" என்று அழைத்தான் ஆதி.

"இல்ல நான் அங்கயே லைட்டா சாப்பிட்டேன் எனக்கு பசிக்கல...." மறுத்தாள் அவள்.

ஆதி சாப்பிடுவதற்கு அமர்ந்ததும் அவன் அருகில் முழங்காலை தூக்கி வைத்து அமர்ந்து முழங்காலில் தன் தலையை சாய்த்து அவன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.
ஆரு அவனை அப்படிப் பார்த்ததும் அவன் அடி மனதுக்குள் இருந்து ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் அவள் மீது தோன்ற அவன் சாப்பிட்டவாறே அவளுக்கும் இடையிடையே ஊட்டி விட்டான். ஆரோஹிக்கு இன்று யார் முகத்தில் முழித்தோம் என்று இருந்தது. இன்று நாளெல்லாம் நடப்பவை எதுவுமே நிஜத்தில் தான் நடக்கின்றனவா என்று அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கும் முன்பே அவளது மனதை படித்தது போல பேச ஆரம்பித்தான் ஆதி.

"வசு அப்படி தான் ஆரு. ஆனால் நான் அதை தப்பா பார்க்கல. ஒரொரு பொண்ணும் ஒரொரு விதம். வசு சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. ரொம்ப ஸ்மார்ட், ரொம்ப போல்ட். ஆனால் ரொம்ப நல்ல பொண்ணு. என்னை ரொம்ப நம்பறா, என்னை ரொம்ப லவ் பண்றா. நானும் தான். நான் ரெண்டு வருஷமா அவகூட physical relationship ல இருக்கேன் ஆரு. என்னால அவளை ஏமாத்த முடியாது. Love is strange. அது எப்போ யார் மேல யாருக்கு வரும்னே சொல்ல முடியாது. எனக்கு அவ மேல வந்திருக்கு, உனக்கு என் மேல வந்திருக்கு! (ஆரோஹியின் ஒரு கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான் அவன்) நீ Paris போ, உன்னோட dreams ஐ Pursue பண்ணு. உனக்காக பொறந்தவனை நீ Paris ல தான் பார்க்கப் போறன்னு என் மனசு சொல்லுது! அவன் என்னை மாதிரி இல்லாமல் உன்னை பைத்தியக்காரனாட்டம் காதலிப்பான். என்னை விட ரொம்ப ரொம்ப நல்ல பையனா இருப்பான். நீ நல்லா இருக்கணும் ஆரு. ஏன்னா நீ எங்க வீட்டு பொண்ணு." என்று சொல்லி விட்டு ஆதி நிறுத்த ஆருவுக்கு அவள் கண்ணீரை மறைப்பது பெரும் பாடானது.

ஆனால் ஆரோஹி யார் முன்னிலையிலும் சட்டென்று அழுது விட மாட்டாள். தன் உணர்ச்சிகளை எங்கேயும் ஒரடியாய் கொட்டித் தீர்த்து விடவும் மாட்டாள். அவளது அன்றைய தினத்துக்கான அழுவதற்கான கோட்டாவையும் அவள் சற்று முன்னர் தான் அழுது தீர்த்திருந்தாள். துன்பமாகட்டும் துயரமாகட்டும் அதை எதிர்கொள்ள அவள் கற்று வைத்திருந்த மந்திர வித்தை மௌனம்! ஆதி அவளை பிறந்தது முதல் கூட இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறான். ஆரோஹியின் மௌனத்துக்கு பின்னால் அவள் உடைந்து சுக்கு நூறாகிப் போய் இருக்கிறாள் என்பதை அவனை விடவும் இங்கு வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? அவளது மௌனம் அவனுக்கு வலிக்க, எழுந்து கை கழுவ சென்றான் அவன். அவன் கை கழுவி விட்டு வந்த போது அவள் அவன் சாப்பிட்ட தட்டுக்களை கழுவி அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆதி பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான். ஆதியின் முன்னாள் வந்து நின்று கொண்டவள்,

"நான் போறேன். Bye" என்றாள்.

சோபாவில் இருந்து எழுந்து கொண்டவன் "அது என்ன போறேன்? போய்ட்டு வாரேன்னு சொல்லு" என்று சொல்லி அவள் தலையை தடவி அவளை அனுப்பி வைத்தான். ஆதிக்கு என்றுமே அது ஒரு வழக்கம். ஆருவின் தலையை தடவி விடுவது. அவளை ஒரு குழந்தையாகவே பார்த்ததினாலேயோ என்னவோ அவனாள் அவளை காதலோடு பார்க்கவே முடியாமல் போயிற்று.

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ - ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ
அது காலத்தின் முடிவல்லவோ
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro