அத்தியாயம் (47)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

விழா முடிந்து அனைவரும் வீடுகளுக்கு செல்ல தயாராக ஆரு மட்டும் எழுந்து கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். வீட்டுக்கு போகலாம் என அனைவரும் வந்து அழைத்த போதிலும் அவள் யார் சொல்லுக்கும் கட்டுப்படவில்லை. ஆருவை பார்த்து அப்போதைக்கு குடும்பம் மொத்தமும் பயப்பட்டது. இதற்கு மேல் அமைதியாக இருந்தால் தப்பாகி விடும் என பயந்து ருத்ரி ஆருவுடன் சென்று பேசினாள்.

"என் மேல கோவமா ஆரு? நான் ஏதாவது தப்பு பண்ணீட்டேனா?" என ருத்ரி பயந்த கண்களில் கேட்க துடித்துப் போனாள் ஆரு.

"ருத்ரி... அப்படிலாம் பேசாத. நீ ஒரு தப்பும் பண்ணலை. ஆதிக்கு உன்னை விட பொருத்தமான ஒரு பொண்ணு எங்க தேடினாலும் கிடைக்காது. ஏன்னா நீ ஆதியை விரும்ப முன்னாடியே ஆதியை சுத்தி உள்ள எங்க மேல எல்லாம் பாசம் வச்சவ. உன் நல்ல மனசுக்கு நீயும் ஆதியும் கல்யாணம் பண்ணீட்டு நல்லா இருக்கணும்" என்று சொல்லி ருத்ரியை அணைத்துக் கொண்டாள் ஆரு.

ருத்ரியை தொடர்ந்து வந்த ப்ரித்வி "எல்லாரும் உனக்காக தான் வெளில காத்துட்டு இருக்காங்க. வா கிளம்பலாம்" என்றான்.

"ப்ளீஸ் ப்ரித்வி எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும். நீங்கல்லாம் கிளம்பி போங்க நான் வாரேன்" என்றாள்.

"கிளம்பி போக சொன்னா மிச்ச பேர் எல்லாம் போய்டுவாங்க. நாங்க எங்க போவோம்?" என கேட்டபடி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு பல்லவி கேட்கவும் தான் ஆருவுக்கு அவள் செய்வது தப்பு என பட்டது. முக்கியமாக அவளை நம்பி பல்லவியும் ப்ரித்வியும் அவ்வளவு தூரம் வந்திருக்கும் போது அவள் அப்படி நடந்து கொள்வது தவறு தான்.

"சாரி பல்லவி. ஏதோ டென்ஷன்ல உங்களை போக சொல்லிட்டேன். என் வீடுன்னு உரிமையா உங்களையும் என்கூட அழைச்சிட்டு வந்துட்டேன். ஆனால் இப்போ எனக்கே அங்க போகப் பிடிக்கலை" என்றாள் ஆரு.

"நம்ம வேணும்னா இன்னைக்கி நைட் அம்மா வீட்டுல போய் ஸ்டே பண்ணலாமா??" என பல்லவி ஐடியா கொடுக்கவும் தான் அதற்கு ஒத்துக் கொண்டு ஆரு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஆரு வாஹிணியோடு அவர்களது வீட்டுக்கு செல்கிறாள் என்றதும் ஆருவின் குடும்பத்துக்கு கொஞ்சம் கஷ்ட்டமாகத் தான் இருந்தது. இத்தனை நாள் வெளி நாட்டில் இருந்து விட்டு வந்த பெண்ணை கொஞ்ச நாள் கூட அருகில் வைத்து பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்று. ஆனால் அவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதைக்கு ஆருவின் நிம்மதி தான் முக்கியம் எனப் படவே அவளை அவள் விருப்பத்துக்கு விட்டு விட்டார்கள். ஆதியின் குடும்பத்துக்கும் வருத்தம் தான் ஆதியின் முடிவு ஆருவை காயப்படுத்தி விட்டதோ என்று. அவளது வருகைக்காக ஆசையாக பார்த்திருந்த குடும்பம் இன்று அவள் வேறு இடம் தேடி செல்வதை தடுக்க முடியாமல் மனதில் பாரத்தோடு பார்த்திருந்தது. வாஹிணியின் வீட்டில் சென்று தங்க மற்றைய நாளில் ஆனால் ப்ரித்வி ஒத்துக் கொண்டு இருப்பானா தெரியாது ஆனால் அன்று ஆருவுக்காக அவனும் அங்கு செல்ல சம்மதித்தான். முதலில் அவர்கள் ஆருவின் வீட்டுக்குத் தான் கிளம்பி சென்றார்கள். பல்லவியும் ப்ரித்வியும் தங்கள் பெட்டிகளை எடுத்துக் கொள்ள ஆரு இரண்டு மாற்றுத் துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டாள். பல்லவியும் ப்ரித்வியும் அப்போதைக்கு அங்கு இருந்தவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு ஆருவுடன் கூட வாஹிணியின் வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர். அங்கு சென்றதற்கு யாரும் பேசி சிரித்து அதை நல்ல முறையில் அனுபவிக்கும் மன நிலையில் தான் இருக்கவில்லை. வாஹிணியின் வீடு ஒரு டூ பெட் ரூம் அப்பார்ட்மண்ட் ஆகையால் ஆரு பல்லவி மற்றும் ப்ரித்வி மூவரும் ஒரு அறையை அப்போதைக்கு பாவித்துக் கொள்வதாக முடிவெடுத்தார்கள். பல்லவி குளித்து முடித்த கையோடு தூங்கி விட்டாள். ஆரு உடையைக் கூட மாற்ற மனமில்லாமல் நெடு நேரம் வரை அந்த அறையை ஒட்டியிருந்த அட்டாச்ட் பால்கனியில் சென்று அமர்ந்திருக்க அவளை அவள் பாட்டில் விட்டு விட்டு ப்ரித்வியும் பல்லவி அருகிலே சென்று உறங்கி விட்டான். ஆரு உள்ளே வந்த போது பாதி விடிந்து இருந்தது. மற்ற இருவரும் தூங்கி விட்டிருக்க அவளும் அவர்கள் அருகில் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டாள். ஏனோ தனியாக உறங்குவதை விடவும் அன்றைய சூழ்நிலைக்கு ப்ரித்வி மற்றும் பல்லவி உடனிருந்தது மனதுக்கு கொஞ்சம் தெம்பாக இருந்தது.

காலையில் ஆரு எழுந்து கொண்டு நேரத்தை பார்த்த போது காலை 10 மணி எனக் காட்டியது. இத்தனை நேரமா தூங்கி விட்டோம் என எண்ணிய படி அவசரமாக குளித்து முடித்துக் கொண்டு வெளியே வந்த போது ப்ரித்வி தனது பெட்டி சகிதம் அமர்ந்திருந்தான்.

"எங்க கிளம்பிட்ட?" என்றாள்.

"தஞ்சாவூருக்கு"

"எதுக்கு?"

"கொஞ்சம் அவசரமா வந்துட்டு போக முடியுமான்னு சித்தப்பா கால் பண்ணாரு. ஏதோ வீட்டு பத்திரம் மேட்டராம். பல்லவி இங்க அம்மா கூட தான் இருக்கப் போறா. நீயும் இங்க இவங்க கூடவே இரு. நான் போய் ஒரு வாட்டி என்னன்னு பார்த்துட்டு வந்திடுறேன்" என்றான் அவள் தோலில் கை வைத்து.

"எப்போ வருவ?" - ஆரு

"சீக்கிரமா" - ப்ரித்வி

"அது தான் ஆரு வந்தாச்சில்லை. எல்லாரும் வந்து சாப்பிடுங்க" என வாஹிணி அழைக்க அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். அனேக வருடங்களின் பின்னர் அம்மா கையால் சாப்பிடுவது மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது. சாப்பிட்டு முடிந்த கையோடு Cab வந்து வாசலில் காத்திருக்க அனைவருக்கும் சொல்லிக் கொண்டு ப்ரித்வி ஊருக்குத் திரும்பினான். ஆரு மிகவும் குழம்பிப் போயிருந்தாள் அவளுக்கு கொஞ்சம் தனிமை தேவை பட்டது. முக்கியமாக அவள் அப்போதைக்கு ஆதி, ப்ரித்வி இருவரிடம் இருந்தும் விலகி இருந்தால் தான் அவளால் சுயமாக எதையும் யோசனை செய்ய முடியும் அது அவளது மன அமைதிக்கும் உதவும் என்று தான் ப்ரித்வி அவனாக கிளம்பி தஞ்சாவூர் சென்றான். ஆரு மிகவும் சோர்வாக காணப்பட்டாள். எப்போதும் படுத்தே இருந்தாள். அவளுக்கு தேவையான தனிமையையும் அவளுக்கு கொடுத்து அதே சமயம் அவளை பல்லவியும் வாஹிணியும் நன்றாகவே பார்த்தும் கொண்டார்கள். ப்ரித்வி ஊருக்கு கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் இதுவரை அவனிடம் இருந்து ஆருவுக்கு ஒரு அழைப்பும் வரவில்லை. அவளும் அதை பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அந்த இரு நாட்களும் வாஹிணியின் வீட்டில் தங்கி இருந்து விட்டு வீட்டுக்கு சென்று வருவதாகக் கூறி அன்று காலை ஆரு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாள்.

ஆரு மீண்டும் வீட்டுக்கு வந்தது வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. வாஹிணியின் வீட்டில் சோர்ந்து போய் இருந்தவள் இங்கே அப்படி இருந்தால் வீட்டில் உள்ளவர்களின் நிம்மதி கெட்டுவிடும் என தன்னால் முடிந்த அளவு சகஜமாக நடந்து கொள்ள முயற்சி செய்தாள். மேலே சென்று விட்டு வரலாம் என்றாள் அது வீடா அல்லது கோயிலா என்பது போல வாசலில் அத்தனை செருப்புகள் கலட்டி வைக்கப் பட்டு இருந்தன. மைத்துவின் கணவன் வழிக் குடும்பத்தார் மற்றும் ருத்ரியின் குடும்பத்தார் வந்திருப்பதாக ரஞ்சினி தெரிவிக்க அப்போதைக்கு மேலே போய் வரும் எண்ணத்தை ஆரு கை விட்டாள். பார்க்கிங்கில் ஆதியின் கார் இல்லை ஆக அவன் வீட்டில் இல்லை என்பதையும் யூகித்து அறிந்து கொண்டாள். தனது வீட்டு சமையல் அறையில் அனேக நாட்களின் பின்னர் நுழைந்து அவள் சமையல் செய்யலாம் என உள்ளே நுழைந்தாள்,

"குழம்புல அவ்ளோ காரம் சேர்க்காத ஆரு. இப்போ குழந்தைங்களும் நம்ம சாப்பிடற சாப்பாட்டை தான் சாப்பிடறாங்க"

"இன்னைக்கி அமாவாசை மறந்துட்டியா? வெங்காயம் எதுக்கு நறுக்கின? சரி பரவால்லை இங்க குடு airtight container ல போட்டு fridge ல போட்டுட்லாம். நாளைக்கு யூஸ் ஆகும்"

"இல்லைடி. வெண்டைக்காய் நேத்திக்கி பண்ணியாச்சு. இன்னைக்கி கத்தரிக்காய் பண்ணலாம்" என்று ரஞ்சினி ஆயிரம் அறிவுரை வழங்கவும் தன் வீட்டு பழக்கவழக்கங்களை திரும்ப முதலில் இருந்து கற்றுக்கொண்டு தான் சமையலறை பக்கம் வர வேண்டும் என எண்ணிக் கொண்டு தனக்கும் அம்மாவுக்கும் ஆளுக்கு ஒரு காபியை போட்டு கையில் எடுத்துக் கொண்டு அம்மாவை தேடிச் சென்றாள்.

"நான் காபி சாப்பிடறதை நிறுத்திட்டேண்டி. வெறும் க்ரீன் டீ தான். ரஞ்சினிக்கு வேணுமான்னு கேளு" என்றாள் அம்மா.

"இல்லைம்மா. அண்ணி குளிக்கறாங்க. நானே ரெண்டையும் குடிச்சிடறேன்" என்று விட்டு அங்கு அமர்ந்து கொள்ளாமல் கிச்சன் நோக்கி சென்றவள் இரண்டு காபிகளையும் சிங்க்கில் கொட்டி விட்டு தனது படுக்கை அறைக்கு போய் படுத்துக் கொண்டாள். கட்டிலில் படுத்தவாறு தனது அறையை சுற்றி பார்வையிட்டாள். அங்கு இருந்த dressing table இப்பொழுது அங்கு இல்லை. அது இருந்த இடத்தில் ஒரு iron table போடப்பட்டு இருந்தது. அறை வித்தியாசமாக அடுக்கப்பட்டு இருந்தது. ஒரு வருடம் கிட்டத்தட்ட 365 +++ நாட்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்து விடுகிறது என ஆரு யோசித்தாள். யோசிக்க யோசிக்க ஏதோ புரிவது போல இருந்தது. அன்றைய நாளை முடிந்த அளவு தன் குடும்பத்தோடு செலவிட்டாள். ஆரு வந்திருப்பதை அறிந்து கிளம்பி வீட்டுக்கு செல்லும் முன் ருத்ரி வந்து ஆருவை பார்த்து விட்டு சென்றாள். அனைவரும் கிளம்பி சென்ற பின்னர் ஆரு மேலே ஏறி சென்றாள். ஆதி இன்னும் ஆபீசில் இருந்து வீடு திரும்பி இருக்கவில்லை. மற்ற படி எப்போதும் போல வீட்டில் அனைவரும் அவளை அன்பாக நடத்தினார்கள். ஆருவை மீண்டும் கண்டதும் ஆதியின் தாய் கண் கலங்கி விட்டாள்.

"நீ தான் இந்த வீட்டு மருமகள்னு தானே நாங்க அத்தனை பேரும் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால் நீயே அமைதியா இருந்தா இல்லை நீயே ஆதியை வேணாம்னுட்டா நாங்களும் என்ன தான்டி பண்ணுவோம்?? உங்க ரெண்டு பேர்த்துக்கு ஒன்னா சேர குடுத்து வைக்கலைனாலும் உங்க ரெண்டு பேத்துக்குமே தனித்தனிய ஒரு வாழ்க்கை உண்டில்லை?? அவனுக்கும் 35 வயசு ஆறதுடி. ஒரு தாயா இதுக்கு மேல நானும் என்ன பண்ணுவேன் சொல்லு? அவனை விடு எங்களுக்கும் வயசாறது. எங்க உசுரு போகும் முன்ன உங்களுக்கு ஒரு நல்லது பண்ணி நாங்க பார்க்க வேண்டாமா??" என ஆருவை கட்டிக் கொண்டு அழுதாள் ருக்மணி.

"நான் உங்க வீட்டு மருமகளா வந்திருந்தா ஆதியையும் உங்களையும் இந்த வீட்டையும் எப்படி பார்த்துட்டு இருந்திருப்பேனோ என்னை விட ஒரு மடங்கு ஜாஸ்தி ஆதிக்கு ஒரு நல்ல மனைவியா உங்களுக்கு ஒரு நல்ல மருமகளா ருத்ரி இருப்பா. ருத்ரி இந்த வீட்டுக்கு கிடைச்ச வரம். கல்யாணம் நிச்சயம் பண்ணி அந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்த பின்னாடி இனிமேல் நம்ம பழசைலாம் பேச வேண்டாம் அத்தை. சந்தோஷமா இருங்க. எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்று ருக்மணிக்கு கன்னத்தில் தட்டி ஆருதல் கூறினாள் ஆரு.

"நீயும் ஆதியும் லவ் பண்றதுலயோ கல்யாணம் பண்ணிக்கிறதுலயோ நம்ம குடும்பத்துல ஒருத்தருக்கு கூட ஆட்சேபனை இருக்கலை ஆரு. ஆனா இப்போ வந்து நீங்க ரெண்டு பேருமே எங்களுக்குள்ள லவ் இல்லைனு சொன்னா இல்லை இத்தனைக்கு மேலயும் அமைதியா இருந்தா நாங்களும் என்ன தான் பண்ணுவோம்? எங்களுக்கும் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கனுங்கறது ஆசை தான். ஆனால் அது இல்லைனு ஆனா அப்பறம் அடுத்தது என்னன்னு நாங்களும் யோசிக்கத் தானே வேணும். இதுல நீ எங்கயாச்சும் hurt ஆகி இருந்தா I'm sorry ஆரு" என்றாள் மைத்ரேயி. மாதங்கியும் அவளோடு சேர்ந்து கொண்டாள்.

"எனக்கு இப்போ பழசெல்லாம் பேச வேண்டாம். எனக்கு இந்த கல்யாணத்துல எந்த regrets ம் கிடையாது in fact I'm very very happy for both Aadhi & Rudhri. ஆனா உங்க ரெண்டு பேத்தையும் நான் ஆதியோட அக்காவா என்னைக்குமே பார்த்ததில்லை. என்னோட ஃப்ரெண்ட்சா தான் பார்த்திருக்கேங்கற முறைல சொல்றேன். ஆதி ருத்ரியை propose பண்ணது போல அதே மாதிரி ஒரு நிறைஞ்ச சபைல வச்சு என்னைக்காச்சு ஒரு நாள் அவன் என்னை propose பண்ணி இருந்தா நானும் yes சொல்லி இருந்திருப்பேனோ என்னவோ!!! ஆனா இதுவரைக்கும் direct ஆ அவன் என்கிட்ட ஒரு வாட்டி கூட என்னை லவ் பண்றேன்னோ கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்னோ சொன்னதே இல்லை. But anyways அது இனிமேல் தேவையும் இல்லை. சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராதுனு சொல்லுவாங்க. So it's over! ஆதி எனக்கு Yes சொன்னாலும் No சொன்னாலும் We are always family அதுல எந்த மாற்றமும் இல்லை" என்று சொல்லி சிரித்த முகத்துடன் அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு கீழே இறங்கிச் சென்றாள் ஆரோஹி.

இரவு உணவை முடித்துக் கொண்டு பத்து மணிக்கெல்லாம் படுக்கைக்கு சென்று விட்டாள். இரவு 12:30 மணிக்கு ஆதியின் கார் கேட்டின் வெளியே வந்து நிற்பது கேட்டது. அனிச்சையாக பழக்க தோஷத்தில் கை தனது மின் விளக்கை ஆன் செய்தது. அவனும் அதை கவனிக்காமல் இல்லை. அந்த அறையில் மின் விளக்கு ஒளிர்ந்த அடுத்த நொடி அவனுக்குள்ளும் பல்ப் எரிந்தது. ஆம் ஆரு வீட்டுக்கு வந்து விட்டாள்! ஆனால் அவள் வெளியே வரவில்லை. ஆக அவனாகவே கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்து காரை பார்க் செய்தான். மிக மிக மெதுவாக செய்தான். அவள் நிச்சயமாக வெளியே வருவாள் என எதிர்பார்த்தான் போல. ஆனால் அவளது அறையின் மின் விளக்கு ஒளிரப்பட்ட சில நொடிகளிலேயே மீண்டும் அணைக்கப்பட்டது. அவள் வெளியே வரவில்லை. ஏனென்றாள் அந்த வீட்டின் சாவி இப்பொழுது அவளிடத்தில் இல்லை. This is my happy place என்று அவள் சொல்லிய வீடு இன்று அவளுக்கே ஏனோ அந்நியமாகிப் போய் இருந்தது. இப்பொழுது வீட்டுக்குள் வர அவனுக்கு அவளது உதவி தேவைப் படவும் இல்லை. ஆதி தானாகவே கேட்டை திறந்து கொண்டு வந்து காரை பார்க் செய்யும் சத்தம் கேட்ட அந்த நொடி ஆருவுக்கு மொத்தமும் புரிந்தது போல அவளது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்தது போல இருக்க, அவள் மனது அவள் அடுத்து செய்ய வேண்டியதை அவளுக்கு அடித்து கூற, விளக்கை அணைத்து விட்டு நிம்மதியாக உறங்கினாள் அவள்.

ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா
என் அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro