15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

விடிந்தால் ராமனின் திருமணமென்று இருக்க அதற்கு அடுத்த நாள் பாக்யாவின் திருமணம் நடக்க இருந்தது .

சௌபாக்கியவதி பதட்டமாகவும் யோசனையுடனும் வளம் வர இலக்கியவோ தன் அண்ணன் மற்றும் தமக்கையின் திருமணம் நடக்க இருக்கும் சந்தோஷத்தில் சிறகின்றி பறந்துகொண்டிருந்தாள் .

இலக்கியாவின் அத்தை மகளான கலாவிற்கும் அவளிற்கும் அத்தனை ஒற்றுமை இருக்கும் .பாக்யாவை விட அவளுடன் தான் அதிக தோழமையும் நெருக்கமும் காட்டுவாள் .தன்னை அதிகம் புரிந்து கொண்டவளாக இருந்ததாலோ அல்லது தன் அண்ணன் உயிரான அண்ணன் அவள் மேல் கொண்ட காதலினாலோ இலக்கியாவிற்கு கலா என்றால் ஸ்பெஷல் தான் .

அதே போல் கலாவின் அண்ணன் விஷ்ணுவிற்கும் இலக்கியா என்றால் தனிப்பிரியம் உண்டு .அவளை குழந்தையாகவே பாவித்து வருவான் .

சௌபாக்கியவதியை காதலித்தான் என்றெல்லாம் கூற முடியாது என்றாலும் திருமணம் நிச்சயிக்க பட்ட பின் இயல்பிலேயே தோன்றும் ஒரு காதல் அவள் மேல் அவனிற்கு பூத்திருக்க அவ்வப்பொழுது அங்கே அவர்களின் வீட்டிற்கு தன் தங்கையுடன் அவன் வருவது வாடிக்கையானது .அன்றும் அதே போல் அவன் வந்திருந்தான் .

இலக்கியாவும் சௌபாக்கியவதியும் மருதாணி இட்டுக்கொண்டிருக்க அவன் வருவதை கண்ட இலக்கியவோ தன் தமக்கையின் புறம் திரும்பியவள் "ஹே பாக்யா அங்க பாருடி என்னடா இன்னிக்கு வரலயேன்னு பாத்தேன் மாம்சுக்கு ரெண்டு நாள் கூட பொறுத்துக்க முடியல போல "என்று கூற

பாக்கியாவோ அவஸ்த்தையாய் நெளிந்தாள் .அவளிற்கு ஒவ்வொரு முறையும் விஷ்ணு தன்னிடம் காதலுடன் பேச வருவதும் தான் அவனை தவிர்ப்பதும் அவன் மனதில் தேவை இல்லாமல் ஆசையை வளர்ப்பதும் குற்ற உணர்வை தூண்டி விட்டிருந்தது .

அவள் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க அவள் வெட்கப்படுகிறாள் என்றெண்ணிய விஷ்ணு அவள் அருகில் சிரிப்புடன் வந்து அமர இலக்கியவோ தொண்டையை செறுமியவள் "மாம்ஸ் சின்ன புள்ளைங்கல்லாம் இருக்கோம் கொஞ்சம் அதை எல்லாம் கருத்தில் பதிய வச்சுக்கிட்டா நல்லாருக்கும் "என்க

அவனோ அருகில் இருந்த தலையணையை எடுத்து அவளை அடித்தவன் "வாலு வாலு "என்க

அவளோ "மாம்ஸ் வேணாம் அடிக்காதீங்க அப்பறோம் எங்க அக்காவ கட்டி தர மாட்டோம் பாத்துக்கோங்க "என்க

அவனோ "நீ என்ன வாலு கட்டி தரது என் பொண்டாட்டிய நா தூக்கிட்டு போயிருவேன் "என்க

அவளோ சிரித்தவள் "உடம்புல இருக்குறது மூணு கிலோ நல்லி எலும்பு நாலு மீட்டர் தோலு நீங்க தூக்கிட்டு போறீங்களாக்கும் காமெடி பண்ணாதீங்க மாம்ஸ் "என்க

அவனோ அவளை என்ன செய்தால் தகும் என்பதை போல் முறைத்தான் .பின் அவளே "கூல் கூல் மாம்ஸ் ரொம்ப மொறச்சு உங்க முட்ட கண்ண வெளிய உருட்டி விட்றாதீங்க "என்க

அவனோ "அடிங்கு "என்று அவளை அடிக்க ஏழுமதிரிக்க அவளோ எழுந்து சமையற்காட்டிற்குள் சென்றுவிட்டாள் .

அவள் இருக்கும் வரை படபடப்புடன் இருந்த பாக்யாவிற்கு இப்பொழுது வரவேற்பு அறையில் அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாரும் இல்லாத தனிமை மேலும் பதட்டத்தை கொடுத்தது .

விஷ்ணுவோ அவள் பதட்டப்படுவதை சரியாக தவறாய் வெட்கம் என்று நினைத்தவன் அவளை நெருங்கி அமர்ந்து அவள் கையை தொட அவளோ மின்சாரத்தை தொட்டது போல் கையை இழுத்துக்கொண்டாள் .

அவனோ சிரித்தவன் "என்ன பாக்யா இப்டி பதறுற ?நா உன்ன கட்டிக்க போறவன் தான் ஆனா அதுக்கு முன்னாடி உன் அத்தான் ஏன் இப்டி பயப்படுற அவ்ளோ மோசமான இருக்கேன் "என்று அவளை சிரிக்க வைக்க நினைக்க

அவளோ பதறியபடி "இல்...இல்ல அது அப்டிலாம் ஏதும் இல்...இல்ல "என்க

அவனோ அவள் கையை அவள் உருவிட முடியாதபடி பற்றியவன் "ரிலாக்ஸ் டா எனக்கு இது எப்படினு தெரில இது வரைக்கும் உன்ன சின்ன வயசுல இருந்து பார்த்து வளர்ந்தப்போலாம் எதுவும் தோணல ஆனா இந்த கல்யாணம் பேசி முடுச்சதுல இருந்து நீ என் கண்ணுக்கு வித்யாசமா தெரியுற பாக்யா .உன் வெட்கம் உன் சிரிப்பு எல்லாம் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு .உனக்கும் என்ன புடுச்சுருக்கு தான ?"என்று அவன் தயக்கமும் பரிதவிப்புமாய் தன் மனதை வெளிப்படுத்திவிட்டு அவளின் விடைக்காக காத்திருக்க அவளிற்கோ தீயிற்குள் நிற்கும் உணர்வு .

கண்ணில் கண்ணீர் சுரந்தது இப்படி பட்ட ஒருவனை ஏமாற்ற போகிறோமே என்று .அவள் தயங்குவதை பார்த்தவன் சிரிப்புடன் அவள் கையில் அழுத்தம் கொடுத்தவன் "சரி சரி உடனே முகத்தை கழுத்துக்குள்ள புதைச்சுக்காத இன்னும் ரெண்டு நாளைக்கு அப்பறோம் நமக்கு கல்யாணம் தான பொறுமையா யோசிச்சு சொல்லு வெயிட் பண்றேன் ."என்று அவளை நோக்கி கண்ணை சிமிட்டிவிட்டு சென்றான் .

அவளிற்கோ கண்ணீர் கன்னத்தில் நிற்காமல் வழிய இது அனைத்தையும் இயலாமையுடன் வாசலில் இருந்து பார்த்து கொண்டிருந்த மோகனிற்கும் கண்ணில் நீர் சுரந்தது .அவனை ஏறிட்டு அவள் பார்க்க மோகனோ "கண்ணை தொடை ப்ளீஸ் "என்று கண்களாலேயே கெஞ்ச அவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் கண்ணீரை துடைத்துவிட்டு சென்றாள்.

அடுத்த நாள் காலை விடிய ராமனின் திருமணத்திற்காக அனைவரும் பரபரப்பில் அங்கும் இங்கும் சுழன்றுகொண்டிருந்தனர் .மாறன் இளவரசியின் கைகளை பற்றியபடி நடந்து வந்துகொண்டிருக்க இளம்சிகப்பு நிறத்தில் பட்டு பாவாடை அணிந்து ரெட்டை ஜாடையில் மல்லிகை பூவை சுற்றி குதித்து குதித்து அவள் கேள்வி கேட்டபடி நடை பயின்று வர மாறனோ பொறுமையாய் பதில் கூறிக்கொண்டு வந்துகொண்டிருந்தான் .

பொறுமையாய் இருந்த ராஜாவோ அவள் கேட்ட "மரம் என் மாமா உயரமா இருக்கு "என்ற கேள்வியில் மொத்தமாய் பொறுமையை மொத்தமாய் இழந்தவன் "அடியேய் முட்ட போண்டா என்னடி உனக்கு பிரெச்சனை?கேள்வி கேட்டே மனுஷனா சாவடிக்குற "என்க

அவளோ அவனை முறைத்தவள் "உனக்கென்னடா பிரெச்சனை நா என் மாமா கிட்ட தான கேட்டேன் "என்க

அவனோ "பக்கத்துல வர எனக்கு தானடி காதுல ரத்தம் வருது "என்க

அவளோ "எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராஞ்சு தெருஞ்சுக்கணும்னு என் மல்லிகா மிஸ் சொல்லி குடுத்தாங்க "என்க

அவனோ "மல்லிகா..... பேரு நல்லாருக்கே என்று கூறியவன் அவள் உயரத்திற்கு மண்டியிட்டு "ஏன்டி முட்ட போண்டா உன் மல்லிகா மிஸ் நல்ல இருப்பாங்களா பாக்க ?"என்க

அவளோ "சூப்பரா இருப்பாங்க"என்க

அவனோ அவள் நாடியை பிடித்தவன் "அடியேய் முட்ட போண்டா வாழ்க்கையிலேயே உருப்படியான விஷயம் இப்போ தான்டி பண்ணி இருக்க ஆமா அவங்களுக்கு வயசென்ன ?"என்க

அவளோ "நாப்பது வயசு "என்க

ராஜாவோ "எது நாப்பதா ?.... போடி இவளே "என்று கூறியவன் முகத்தை திரும்பியபடி செல்ல

இளவரசியோ சிரித்தவள்" டேய்ய் சும்மா சொன்னேன்டா" என்றபடி அவன் பின் ஓடினாள் .

இவர்கள் இருவரின் குட்டிகலாட்டாக்களை பார்த்தபடி நின்றுகொண்டிருந்த மாறனோ சட்டென்று கேட்ட வலையோசையில் திரும்ப அவன் கண்களுக்கு விருந்தென இளம்சிவப்பு வண்ண புடவையில் கண்ணில் கண்ணாடி வளையல்கள் குலுங்க காதில் ஜிமிக்கி அவள் கதை பேசும்பொழுது கன்னத்தோடு உறவாடிட அந்த கார்கூந்தலெனும் மேகத்திற்குள் சிக்கி இருந்த முல்லை சரங்கள் அவளின் தோளினை உரசிட மாறனோ உதட்டில் பூத்த புன்னகையுடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்  .

கதை பேசிக்கொண்டிருந்தவள் வாசலில் சிலை என நின்றவனை நோக்கி புருவத்தை தூக்க அவனோ ஒண்ணுமில்லை என்று தலை அசைத்தவன் அவள் அருகே வர அவளோ அவன் முன் குதித்தபடி நின்றவள் "இளா என் டிரஸ் எப்படி இருக்கு ?"என்க

அவனிற்கோ காலையில் இளவரசி இதை போலவே குதித்தபடி தலையை சாய்த்து" மாமா என் டிரஸ் எப்படி இருக்கு" என்று கேட்டது நினைவில் வர மனதில் "ஆளு தான் வளந்துருக்கு ஆனா இன்னும் மனசளவுல குழந்தையா தானிருக்கா கொஞ்சம் வளரேன்டி" என்று நினைத்துக்கொண்டவன் வெளியே "சூப்பராக இருக்கு" என்று கூற

அவளோ அவனின் சட்டை பாண்ட்டை பார்த்தவள் "உன்னோட ட்ரெஸ்ஸும் சூப்பராக இருக்கு இனிமே இந்த மாறி லைட் கலர் காம்பினேஷனே ட்ரை பண்ணு"என்றுவிட்டு துள்ளி குதித்து ஓடிவிட்டாள் யாரோ அழைத்தார்கள் என்று .

பின் உள்ளே சென்று ராமனை ஓட்டி தள்ளியவன் அதன் பின் கல்யாண வேலைகளையும் சிறிது செய்தான் .சுப நேரத்தில் ராமன் கலாவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி அவளை சரி பாதி ஆக்கிக்கொள்ள மாறனின் மனக்கண்ணில் அவனிற்கு இலக்கியாவிற்குமான திருமண நாளை நோக்கிய கனவு கண்களில் விரிய சிரிப்புடன் அவளை அவள் அறியாது பார்த்துக்கொண்டிருந்தான் மாறன் .

அவன் அவளையே பார்ப்பதை கவனித்த ராஜாவோ அவன் அருகில் வந்தவன் "அண்ணா"என்க

அவனோ திரும்பாமலே "சொல்லுடா தம்பி ":என்க

ராஜாவோ "இப்டி வச்ச கண்ணு வாங்காம பாத்து தொலையாத என் கண்ணுல மாட்டுன மாறி எவன் கண்ணுலயாச்சும் மாட்டுன பிரச்னையாகிடும் .அண்ணி படிப்பு முடியுற வரைக்கும் அடக்கி வாசி "என்க

மாறனோ "ஆமால்ல சரிடா தம்பி" என்று பவ்வியமாக கேட்டுக்கொண்டான் .

ராஜா  திரும்ப பின் சற்று நேரத்திற்கு பின் மாறனை கவனித்தவனோ "அட பாவி "என்று வாயை பிளந்து நின்றான் .கூலிங் கிளாசை போட்டுகொண்டு அதே வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தான் மாறன் .

திருந்தாதவன் என்று தலையில் அடித்துக்கொண்டு ராஜா மனதில் சிரித்துக்கொண்டான் பொறுப்பு பொறுப்பு என்று சுற்றும் தன் அண்ணனிற்கு சற்று ஆறுதலை தருவது இலக்கியாவின் நினைவுகள் தான் என்பதை அந்த பாசக்கார தம்பி அறிந்திராமலா இருப்பான் ?

அனைவரும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வர அடுத்த நாள் சௌபாக்யாவின் திருமணம் இருப்பதால் வெகு நேரம் முழிக்க வேண்டாமென்று அனைவரும் விரைவிலேயே உறங்க சென்றனர் .

இலக்கியாவோ சௌபாகியாவுடன் அறையை பகிர அனைவரும் உறங்கி விட்டனர் .காலையும் அழகாய் பலரின் கனவுகளுடன் விடிய எழுந்த இலக்கியாவோ அருகில் சௌபாக்கியவாதி இல்லாமல் போக தேடினாள் "பாக்யா பாக்யா "என்று

வீடு முழுவதும் தேடியவள் அவள் இல்லாமல் போக பதறியவள் தன் அன்னை தந்தையை எழுப்பி விட அவர்களும் அணைத்து இடத்திலும் தேட அவள் கிடைக்காமல் போனாள் .

இன்னும் இரண்டு மணி நேரத்தில் முகூர்த்தம் என்றிருக்க திடீரென்று மணப்பெண்ணோ மாயமாக சென்றிருக்க கண்ணீருடனும் படபடப்புடனும் அறையினுள் வந்த இலக்கியாவின் கண்ணிலோ தட்டுப்பட்டது காற்றில் படபடத்துக்கொண்டிருந்த காகிதம் .அதை பிரித்து பார்த்தாள்.

அதில் "அன்புள்ள பெற்றோருக்கு ,என்ன மன்னிச்சுடுங்க .நானும் அண்ணனோட ஸ்னேஹிதன் மோகனும் நாலு வருஷமா காதலிச்சோம்.நீங்க கல்யாண பேச்ச எடுக்குறப்போவே அவரை வீட்டுல வந்து பேச சொன்னேன் ஆனா அவங்க வீட்டுல மெரட்டுனதால அவரால எதுவும் கேக்க முடியாம போச்சு.அவரில்லாம என்னாலயோ நா இல்லாம அவராலயோ வாழ முடியாது .நாங்க பண்றது எவ்ளோ பெரிய பாவம்னு எங்களுக்கு தெரியும் ஆனா வேற வழி தெரியல. நா என் வாழ்க்கை தேடி போரேன்பா என்ன தேடாதீங்க இப்படிக்கு உங்கள் மகள் சௌபாக்கியவதி "என்று முடிந்திருக்க

அவளோ பெருங்குரலில் அம்மா..
என்று கத்தியவள் அந்த கடிதத்தை பெற்றோரிடம் கொடுத்தவள் அன்னையை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro