20

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இளவரசி பூப்பெய்து விட்டதை கேட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்திருந்தான் மாறன் .இளவரசி ஒரு மூலையில் அமர்ந்திருக்க மாறனோ அவள் அருகில் சென்றவன் குட்டிமா என்றழைக்க அவளோ சற்று தயக்கத்தோடு தலையை நிமிர்த்தி பார்த்தாள் .அன்று நேர்த்திக்கடனிற்காக அவளிற்காக வாங்கி வைத்திருந்த பாவாடை தாவணியை பக்கத்துக்கு வீடு அக்காவின் உதவியுடன் கட்டி இருந்தாள் இளவரசி .

அவர் தான் அவளை மூலையில் உட்காருமாறு கூறி விட்டு அவள் கன்னத்தில் சந்தனத்தை தடவி விட்டு சென்றிருந்தார் .ராஜா உறவினர்களுக்கு கூறுவதற்கு சிக்னல் கிடைக்காமல் மாடிக்கு சென்று விட மாறனோ அவளை ஒரு தந்தையின் வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்தான் .

தனக்கு பத்து வயதாகயில் சிறு ரோஜா குவியலென கையில் ஏந்தியவளை இன்று தாவணியில் பார்க்கையில் அவனுள் எழும் உணர்வுகளுக்கு பெயரிட முடியாது அமர்ந்திருந்தான் .தன் மகள் பூப்பெய்து விட்டபின் ஓரு தந்தை அவளை பார்க்கையில் என்னென்ன உணர்வுகள் அவரை தாக்குமோ அவ்வனைத்து உணர்வுகளும் தாக்க அவளையே பார்த்து பூரித்து போய் சிரித்துக்கொண்டிருந்தான்

.பின் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அக்கா மற்றும் அன்னையிடம் கேட்க அவர்களோ இங்கு வந்த இடத்தில மரம் முறிந்து சாலை அடைபட்டு விட்டதால் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறி இருந்தனர் .

என் சி சி கேம்ப் சென்ற அவளின் தம்பி சிவாவும் இரண்டு நாட்கள் கழித்தே வருவார்கள் .ஆதலால் ராஜாவும் மாறனும் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்திருந்தனர் . இளவரசிக்கு பணிவிடைகள் செய்ததனைத்தும் மாறன் தான் .

அவளிற்கு சோறு ஊட்டி விடுவதில் இருந்து அவளிற்கு தலை சீவி விடுவது வரை அனைத்தையும் அவனே பார்த்துக்கொள்ள இளவரடியோ மாறனிடம் வழக்கம் போல் ஒரு மகளாய் இருப்பவள் ராஜாவை கானால் கொஞ்சம் தயக்கம் கொண்டாள்.எனில் அவனிற்கோ எந்த வித்தியாசமும் தெரியவில்லை .டீ வீ ரெமோர்டிற்கு சண்டை ஈடுபவர்களோ இன்று அவன் டீ வீ பார்க்க வந்தால் தானாக ஒதுங்கி சென்றாள்.

அவன் "என்ன அரிசி மூட்ட புத்தி வந்துருச்சா ஒதுங்கி போற ?"என்றால்

அவளோ "ஒன்னும் இல்ல "என்றுவிட்டு சென்று விடுவாள் .அவன் முதலில் சந்தோஷம் என்று நினைத்தாலும் அவளின் விலகல் சற்று மனதை பிசைய வழிய சென்று வம்பிழுக்க துவங்கினான் ராஜா.

இடைப்பட்ட இந்த ரெண்டு நாட்களில் இலக்கியாவோ முற்றிலும் யோசனையோடு திரிந்து கொண்டிருந்தாள் .அது வரை காதல் திருமணம் என்று யோசித்திராத பெண்ணவளிற்கு மாறனின் வார்த்தைகள் மனதில் முதல் முதலாய் சஞ்சலத்தை விதைக்க அவனின் டைரியில் அவனின் உணர்வுகளை பார்த்தவளிற்கு மலைப்பாக இருந்தது .

தனது ஒவ்வொரு செயலையும் கவனித்திருக்கிறானே என்று .அதன் பின்னே சுய பரிசோதனை செய்தவளிற்கு ஒன்று மனதில் பட்டது . அன்று தன்னை பெண் பார்க்க வந்த பொழுது தனது மனது தன்னை அறியாமலே அவனை மாறனோடு ஒப்பிட்டு பார்த்ததே அது ஏன்?அன்று விஷ்ணுவை திருமணம் செய்ய கூறி அவளின் அத்தை கூறிய போது முதலில் அவள் தவிப்புடன் தேடியது மாறனை தானே அது ஏன் ?அவனின் நலனை பார்த்து பார்த்து செய்தாலே அது எதற்காக ?இது வரை அவளிடம் காதலை எத்தனை பேர் கூறி இருப்பார்கள் எனில் அவர்களை தன் தீப்பார்வையால் எட்டியே நிற்க வைப்பவள் அவன் தனது காதலை கூறுகையில் மனதில் ஒரு வித இதம் பரவுவதை உணர்ந்தாளே அது ஏன் ?என்று யோசித்தவளிற்கு கொஞ்சம் கொஞ்சமாய் தனது மனது தெரிய வர முதல் முதலாய் ஒரு ஆடவனின் நினைவில் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது இலக்கியாவிற்கு .

இளவரசி பூப்பெய்திருந்ததை மாறன் அவளின் தந்தையிடமே கூறினான் அவளிடம் நேராக கூறவில்லை .அவள் யோசிப்பதற்கு தான் விலகி இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த முடிவை எடுத்திருந்தான்.

அங்கு சாலை சீராக மாறி இருக்க மாறனின் பெற்றோரும் அவனின் தமக்கையும் கிளம்பி இருந்தனர் .இளவரசி அவளின் அறையில் அசௌகரியமான நெளிந்தபடி படுத்து இருக்க அவளிற்கு பழச்சாறு எடுத்து வந்த மாறன் அவள் நெளிவதை பார்த்து விட்டு அவளின் அருகில் சென்று அமர்ந்தவன் "என்னடா குட்டிமா ?என்னாச்சு ?"என்க

அவளோ அவனின் மடியில் படுத்துக்கொண்டாள் அவளின் தலையை ஆதரவாய் வருடியவன் "என்னாச்சுடா ?"என்க

அவளோ வயிற்றை பிடித்தவள் கண்ணீருடன் "வலிக்குதுப்பா "என்றாள்.

அவள் முகம் லேசாய் சுருங்கினாலே துடிப்பவன் அவள் அழுகவும் பதறிவிட்டான் உடனடியாக இலக்கியாவிற்கு கால் செய்தவன் அவள் எடுக்க காத்திருக்க இலக்கியாவோ போன் எடுத்தவள் அவன் பெயர் தெரிய அதில் லேசாய் புன்னகை ஒட்டிக்கொண்டது .

பின் எடுத்து காதில் வைத்தவளிற்கு கேட்டதென்னவோ அவனின் பதற்றமான குரல் தான் .மாறன் "அது அது லயா லயா பாப்பா பாப்பா"என்க

அவளோ என்னவோ ஏதோவென்று பதறிவிட்டாள் இலக்கியா"என்னாச்சு இளா இவ்ளோ பதட்டம் "என்க

அவன் மீண்டும் மீண்டும் உலர பொறுமை இழந்தவள் "நீ அரசி கிட்ட போன் குடு "என்க அவனும் கொடுத்தான் அவளிடம் கேட்டு விஷயத்தை அறிந்துகொண்டவள் அவனிடம் கொடுக்க சொன்னாள்.

அவன் "என்னாச்சு என்ன பண்றது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகவா "என்க

அவளோ சிரித்தவள் "டேய்ய் உன் பொண்ணுக்கு ஒன்னும் இல்ல பக்கத்துக்கு கடைல பவண்டோ வாங்கி குடு போதும் நாளைக்கு காலைல வந்து பாக்குறேன் "என்க

அவனோ "ஒன்னும் இல்லையா அப்போ சரி "என்க

அவளோ "இதுக்கே இப்டி பதறுற நம்ம குழந்தலாம் பொறந்தா என்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவியோ "என்று சிரிப்புடன் கூற

அவனோ முதலில் "கலாய்க்காத "என்று கூறியவன் அப்பொழுதே அவள் கூறியதை முழுதாய் உணர்ந்தான் முகம் பிரகாசிக்க துள்ளி குதிக்க வேண்டும் என்று தோன்றிய மனதை அடக்கியவன் "என்னது என்ன சொன்ன "என்று கேட்க

அவளோ அப்புறம் தோன்றிய வெட்கத்தை மறைக்க படாத பாடு பட்டவள் "அதெல்லாம் ஒரு தடவ தான் சொல்ல முடியும் "என்று கூற

அவனோ "லயா நிஜமா தான் சொல்றியா ?"என்க

அவளோ மெல்லிய குரலில் "ம்ம் "என்க

அவனோ அப்பொழுதே சென்று அவளை கண்டு அணைக்க தோன்றிய உணர்வை மிகவும் சிரமப்பட்டு அடக்கினான் பின் "ம்ம் னா வார்த்தைல சொல்லு "என்க

அவளோ "போடா ஒரு மாறி இருக்கு நா வைக்குறேன் "என்று போனிற்கு வைத்து விட்டாள்.

அவனின் முக மாற்றங்களை வைத்தே நடந்ததை உணர்ந்துகொண்ட இளவரசி அவனின் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தவள் "ஓகே ஆயிருச்சா ?"என்க

அவனோ அவளை தூக்கி சுற்றியவன் "டபுள் ஓகே ஆய்ருச்சுட குட்டிமா "என்று கத்த அவனின் கத்தலில் உள்ளே வந்த ராஜா என்னவென்று கேட்க மூவரும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர் .

பின் அவனின் குடும்பத்தார் வந்து விட இளவரசிக்கு இன்னும் நான்கு நாட்களில் தண்ணீர் ஊற்றிவிட்டு முடிவு செய்திருந்தனர் .அவள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வரவிருந்ததால் ஒரு வாரத்திற்குள் செய்து முடிக்க நினைத்திருந்தனர் .

அதன் பின் அவளை கல்லூரியில் சேர்க்கும் பணிகள் உள்ளதல்லவா .அன்று மாலை இளவரசியின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்க மாறனும் அவனின் தந்தையும் இலக்கியாவின் வீட்டிற்கு வந்திருந்தனர் .மாறனின் தந்தை சங்கரரிடம் விசேஷத்தை பற்றி கூற மாறன் இலக்கியாவை ஆர்வமாய் தேடிக்கொண்டிருந்தான் . இலக்கியாவோ அவன் தன்னை தேடுவதை சமயலறையில் இருந்து ரகசியமாய் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் .

பின் தனது அன்னை தலையில் காட்டுவதில் நினைவுக்கு வந்தவள் அனைவருக்கும் தேநீர் எடுத்து சென்றாள் .காதலை கூறிய பின் முதல் முறையாய் அவனை சந்திக்க போகும் தருணம் அவளிற்கு படபடப்பை ஏற்படுத்த குனிந்த தலை நிமிராமல் தேநீர் எடுத்து சென்றாள் இலக்கியா .அவளை கொண்டவனின் முகம் பிரகாசிக்க அவளின் வெட்கம் அவனிற்கு புன்னகையை வரவழைத்தது .உரிமையுடன் தன்னவளை பார்த்திருந்தான் மாறன் .அவள் தந்தையர் இருவருக்கும் தேநீர் கொடுத்து விட்டு மாறனிற்கு தருவதற்காக குனிய அவனோ சிரித்தபடி எடுத்துக்கொண்டான் .

பின் மாறனும் அவனின் தந்தையும் கிளம்பி விட மாறனோ இலக்கியாவிடம் ஒரு தலை அசைப்புடன் விடை பெற்றான் .அவளும் புன்னகைத்தவாறு ஒரு தலை அசைப்புடன் விடை கொடுத்தாள்.இதை கவனித்துக்கொண்டிருந்த மாறனின் தந்தையோ குழப்பத்துடன் அவனின் பின் பைக்கில் ஏறி அமர்ந்தார் .

அவனின் தோளில் கை வைத்தவர் "மாறா "என்க

அவனோ"என்னப்பா "என்று வண்டி ஓட்டிக்கொண்டே கேட்டான்

.அவரோ"கொஞ்சம் ஒரு ஓரமா நிறுத்துப்பா வண்டிய "என்க அவனும் நிறுத்தினான் குழப்பமாக .அங்கே அருகில் இருந்த ஒரு பூங்காவிற்குள் நுழைந்தவர் அதில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தார் .

அவனோ தன் தந்தையின் செயல்களை விநோதமாய் பார்த்தவன் அவருடன் அருகில் சென்று அமர சிறிது நேரம் தந்தையும் தனயனும் மௌனமாகவே இருந்தனர் .

பின் அவனின் தந்தையே அந்த மௌனத்தை உடைத்தவர் "எல்லாம் கவனிச்சென்ப உனக்கு அந்த பொண்ண புடுச்சுருக்கா ?"என்க

அவனோ நொடியில் திகைத்தவன் "அது அது பா "என்க

அவரோ அவன் தோளில் கை வைத்து அழுத்தியவர்"உனக்கு நா முதல்ல ஒரு நண்பன் அப்பறோம் தான் உன் அப்பா .சொல்லு அந்த பொண்ண உனக்கு புடுச்சுருக்கா?"என்க

அவனோ வெட்கப்புன்னகை செய்தவன் "ஆமா அப்பா "என்க

அவரோ "எத்தனை வருஷமா ?"என்க

அவனோ தலையை சொரிந்தபடி "எட்டு வருஷமா "என்க

அவரோ வாயை பிளந்துவிட்டார் அத்தனை வருடங்களாக காதலிக்கிறானா என்று பின் அவனிடம் திரும்பியவர் "மாறா .சங்கரன் பொண்ணு என் மருமகளை வரது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் ஆனா...."

என்று நிறுத்த அவனோ "என்னப்பா என்னாச்சு ?"என்க

அவரோ "அது இருக்கட்டும் இளவரசி உனக்கு என்ன ?"என்க

அவனோ குழம்பினான் சம்மந்தமே இல்லாத தனது தந்தையின் கேள்வியில் குழம்பியவன் பின் "இளவரசி என் அக்கா பொண்ணு "என்க

அவரோ "அதை கேக்கல மாற உன் மனசாலவுல அவ உனக்கு என்ன ?"என்க

அவனோ சிரித்தவன் "என் மனசளவுல அவ எனக்கு முதல் குழந்தைப்பா.என்னோட மக அவ "என்க அவரிற்கோ மனம் கனத்துவிட்டது .

இத்தனை நாட்களாய் மனைவி கூற்றை வைத்தும் பேத்தியை அவன் பார்த்துக்கொள்வதை பார்த்தும் அவனிற்கு அவள் மேல் ஆசை இருக்கிறதென்று நினைத்தால் அவனோ அவளை மகளாக கருதுவதற்கு கூறுகிறானே .ஒரு தகப்பனை போல் பாசம் காட்டுபவனின் அன்பை கொச்சை படுத்துவிட்டோமே என்று மனதால் மிகவும் வருதப்பட்டார்

அவனின் புறம் திரும்பியவரோ "நீ அவளை மகளா பாக்குற ஆனா ஆனா இந்த வீட்ல உனக்கு தெரியாம உங்க ரெண்டு பேரையும் பத்தி நடக்குற ஒரு பேச்சு உனக்கு தெரியுமா ?"என்க

அவனோ புரியாமல் நோக்க அவரோ அவன் சற்றும் எதிர்பார்த்திராத உண்மையை போட்டுடைத்தார் "உன் அம்மாவும் அக்காவும் இளவரசிக்கு பதினெட்டு முடுஞ்சதும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிருக்காங்க "என்க அவனிற்கோ முதல் முதலாய் கேட்ட இந்த செய்தி காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல் இருக்க தன் தந்தையை அடிபட்ட பார்வை பார்த்தான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro