37

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு மாறனும் ராஜாவும் ஏற்கனவே தாங்கள் நேற்று பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்த வீட்டிற்கு வந்து இறங்கினர் .இலக்கியாவிற்கு அவன் எடுத்த முடிவு சரி எனவே பட்டது.

அவளாலும் இனி மகாவை நேருக்கு நேர் பார்க்கையில் தன்னை தானே கட்டுப் படுத்த முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் கூறுவாள் .அவளின் வயிற்றில் உதித்த முதல் சிசு ஆயிற்றே. எந்த தாயால் தான் மன்னிக்க முடியும் தன் குழந்தையை கொன்றவளை ?இப்படி சிந்தனையிலேயே உழன்றவள் அப்பொழுதே தன் அருகில் இறுகி போய் அமர்ந்திருந்த மாறனை பார்க்க பாவமாய் இருந்தது அவளிற்கு .

அவளிற்கு பிள்ளையின் இழப்பு மட்டும் தான் எனில் அவனிற்கோ இத்தனை வருடமாய் அவன் அளப்பரிய அன்பு வைத்து ஓடி ஓடி உழைத்ததற்கு மகா செய்த துரோகமும் ,குற்றவுணர்வும் பிள்ளையை பிடறிந்த வழியும் என்று மூன்றும் அவன் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்க தன் முன் உடைந்து அழுதாள் தான் மேலும் கவலை கொள்வேனோ என்று தன்னை தானே கட்டுப் படுத்திக்க கொண்டிருப்பவனின் காதலை என்னவென்று சொல்ல ?அப்பொழுதைக்கு தன் அருகில் இருந்த அவனின் கையை எடுத்து தன் கையேடு கோர்த்துக் கொண்டவள் அவன் தொழில் சாய அவனிற்கு அது தேவை பட்டதோ என்னவோ ,தானும் அவள் கரங்களை தன் கரத்தோடு இறுக பிணைத்துக் கொண்டான் .

அன்றைய நாள் வீட்டை ஒதுங்க வைப்பதிலும் தேவையான பொருட்களை வாங்க பட்டியலிடுவதிலும் ஓடியது .இலக்கியாவும் தனக்காக இல்லை என்றாலும் மாறனிற்காகவாவது இந்த இழப்பிலிருந்து மீண்டு வந்து இயல்பாக இருக்கவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தாள்.அப்படி ஒரு நிகழ்வை அடியோடு மறக்க முயற்சி செய்தாள் .அதன் முதல் படியாய் இன்று அனைவரோடும் சேர்ந்து தானும் பேசியபடியே வேலைகள் செய்தாள்.யார் கூறியும் ஓய்வெடுக்கவில்லை அவள் .

அனைத்தும் சரியாய் அடுக்கி முடித்து அயர்வாய் அமரும் பொழுது நேரம் இரவை தொட்டிருந்தது .மேகலா "நைட் ஆயிருச்சு என்ன சமைக்க ?"என்று கேட்க

இளவரசியோ "ஐயோ போங்க அத்தை என்னால இதுக்கு மேல முடியாது.ஹோட்டல்ல வாங்க சொல்லுங்க "என்று கூற

ராஜா "என்னவோ காலைல இருந்து வேல வெட்டி முருச்ச மாறி சீன போடுது பாரேன். என்ன என்ன நடக்குதுன்னு சும்மா நின்னு பாத்துட்டு இதுக்கு மேல முடியாதாம் "என்று அவள் தலையில் கொட்ட

இளவரசியோ தலையை தேய்த்தவாறு "நீ தானடா வேல பாருன்னு சொன்ன .அதான் நீங்க எல்லாம் வேல பாக்குறத பார்த்தேன் .இதுக்கு போய் கொட்டுற"என்று கூற

ராஜா எழுந்தவன் அவள் அருகில் நடந்த வாறே "உன்ன எல்லாம் கொட்ட கூடாது டி கொல்லனும்"என்று அவளை துரத்த

ஷிவாவோ "மாமா ஆயுதம் "என்று கூறியபடி அங்கிருந்த துடப்ப கட்டையை ராஜாவிடம் தூக்கி போட

இளவரசியோ "அட கொலைகாரனுங்களா "என்று கத்தியபடி அந்த வீட்டையே சுற்றி சுற்றி ஓடினாள்.இந்த காட்சியை பார்த்து மற்ற அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க இலக்கியாவும் மாறனும் இரண்டு நாட்களுக்கு பின் முதல் முறையாய் இறுக்கம் தளர்ந்து வாய் விட்டு சிரித்தனர் .பின் இரவு உணவை முடித்துக் கொண்டவர்கள் அவரவர் அறைக்கு சென்றனர் .

அது ஒரு இரண்டு மாடி அடுக்கு வீடு .கீழே ஒரு வரவேற்பறை ,ஒரு அடுப்பறை இரண்டு படுக்கை அறை அட்டசெது பாத்ரூமோடு இருக்க மேல் மாடியில் மூன்று அறைகள் அதன் நடுவில் சிறிய வரவேற்ப்பறை போல் இருந்தது .சற்று பெரிய வீடு தான் .கொஞ்சம் cityai விட்டு தள்ளி இருந்ததால் அந்த வீட்டின் அருகில் ஒரு சில வீடுகளே வந்திருக்க மற்ற காலி நிலங்கள் அனைத்தும் வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்து இருந்தது .இந்த வீட்டின் பின் புறம் இருக்கும் இரண்டு பிளாட்டை தான் மாறனும் ராஜாவும் வாங்கி போட்டிருந்தனர் .இதிலிருந்து நான்காவது வீடு முருகன் முதல் முதலில் கட்டி இருந்த வீடு .

இரவு அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு இலக்கியா மாடியில் இருந்த அவர்களின் அறைக்கு வர மாறனோ அந்த அறையை ஒட்டி இருந்த balconyil நின்று நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் .அவன் அருகில் சென்று நின்றவள் அவன் தோளைத் தொட மாறனோ அவசர அவசரமாய் வேறு புறம் திரும்பி கண்ணீரை துடைத்தவன் இலக்கியாவை பார்த்து புன்னகைத்தான் .

அவளோ அவன் கன்னத்தை பற்றியவள் "என்கிட்ட எதுக்குடா நடிக்கிற ?"என்று கேட்க

அவனோ "சா நடிப்பா அதெல்லாம் ஒண்ணுமில்ல லயா"என்று சொல்ல அவளோ அவனின் கண்ணின் ஓரத்தில் துளிர்த்து இருந்த கண்ணீரை துடைத்தவள் அவனை உறுத்து நோக்க மாறனோ தாயை கண்ட சேயைப் போல் அவளை அணைத்துக் கொண்டவன் தன் மனம் விட்டு கவலைகளை கண்ணீராய் அழுது தீர்த்தான் .

இது எதிர்பார்த்தது தான் என்பதை போல் அவனின் நிலை உணர்ந்து அவன் முதுகை ஆதரவாய் நீவி விட்டவள் தன் முகத்தருகே இருக்கும் அவன் காதில் திரும்பி "ரிலாக்ஸ் டா .நா இவ்ளோ செஞ்சேன் அதுக்கு இது தான் பலனானு யோசிக்காத .நீ நல்லது தான செஞ்ச ?நம்ம குழந்தை நமக்கு இல்லனு எழுதிருக்கு விடு .ரொம்ப அதையே நெனச்சு ஸ்ட்ரெஸ் ஆகிக்காத.

atleast இப்போவாச்சு அவங்களோட சுயரூபம் தெருஞ்சுச்சேனு சந்தோஷப்பட்டு .நீ யாருக்கு டா செஞ்ச ?உன் அக்கக்காகவா ?நம்ம ரெண்டு பேர் lifeum நல்ல இருக்கணும்னு கொஞ்சம் கூட படிப்பை பத்தியோ ,எதிர்காலத்தை பத்தியோ யோசிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னாளே இளவரசி அவளுக்காக தான ?இப்போ கூட நீ தான் வேணும்னு உனக்காக பெத்து அவ்ளோ பாசம் வச்சுருக்குற அம்மாவை நீ தேவையே இல்ல எனக்குன்னு தூக்கி போட்டுட்டு வந்துருக்கானே அந்த ஷிவாவுக்காக தான ?நீ உனக்கு துரோகம் பண்ண ஒரு சொந்தத்தை நெனச்சு கலங்குறியே இளா ?இப்போ உன் மேல இவ்ளோ தூய்மையான அன்ப வச்சுருக்குற சொந்தத்தை நெனச்சு நீ பெருமை படணும் ."என்று கூற அவனோ அவள் கூற்றில் இருந்த நிதர்சனம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் உரைக்க சமாதானம் அடைந்தவன் அவளில் இருந்து பிரிந்தான் .

நிலவொளியில் தூய்மையான அன்பை எந்த எதிர்பார்ப்பும் இன்றி மனம் முழுக்க தனக்கான காதலை ஏந்தி தன் வலியையும் மறைத்து தன் மன நிம்மதிக்காக தன்னை தேற்றுபவளின் அன்பில் சுகமாய் தொலைந்தான் இளமாறன் .இலக்கியா அவன் பார்வையில் குழம்பி "என்னடா அப்டி பாக்குற ?"என்று கேட்க

மாறனோ ஒன்றும் இல்லை என்பதை போல் தலை அசைத்து அவளை பின்னிருந்து அணைத்தவன் "உண்மையா சொல்லனும்னா நான் ரொம்ப குடுத்துவச்சவன் லயா. எப்போவும் என்ன தாங்கி பிடிக்குற தம்பி ,அம்மா மாறி ஒரு அண்ணி ,தன்னோட அப்பா மாறி என்ன பாக்குற இளவரசி ஷிவா ,இது எல்லாத்தையும் விட நான் சோர்ந்து போகேல எல்லாம் தன்னோட வலியையும் மறச்சுட்டு என்ன தாங்குற என் பொண்டாட்டி.இப்டி எல்லா நன்மையையும் என்ன சுத்தி இருக்கேல நான் ஏன் என்ன விட்டு போன ஒரு கெட்டதை நெனச்சு feel பண்ணனும் ? இனி எதுக்கும் கவலைப்பட மாட்டேன் லயா "என்று கூற அவளோ தன்னவன் ஆறுதல் அடைந்து விட்டான் என்ற திருப்தியில் அவன் அணைப்பில் வாகாய் அடங்கினாள்.

ஏழு வருடங்களுக்கு பின் ,

அதிகாலை ஆறு மணி .கொஞ்சம் கொஞ்சமாய் கதிரவன் தன் ஒளியை இப்புவிக்கு வழங்குவதற்காக தன் மேகத்தாயின் அணைப்பிலிருந்து இஷ்டமே இல்லாமல் சிணுங்கியபடி மேலே வர இங்கே அந்த திருமண மண்டபமோ அக்காலை வேளையிலும் மிகுந்த பரபரப்போடு காணப் பட்டது .வேட்டி சட்டையில் ஆடவர்களும் சேலை மற்றும் தாவணியில் பெண்களும் ஒருவருக்கொருவர் சளைக்காத அழகில் அந்த மண்டபம் எங்கும் நிறைந்து இருக்க வாசலில் அமைந்திருந்த  flex போர்டில் மணமக்கள் பெயர் பொன்னிற எழுத்தில் ஜொலித்தது.

ஷிவா weds சுஜாதா .

உள்ளே முருகனும் ,ராஜாவும், மாறனும் ராமன் மற்றும் மோகனுடன் சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு வந்தவர்களை உபசரிக்க அங்கிருந்த அறையில் இலக்கியாவும் இளவரசியுமோ போராடிக் கொண்டிருந்தனர் .

இலக்கியா "இதோ பாரு சஞ்சு,அபி இப்போ நீங்க இதை போட்டு கிட்டா தான் அம்மா உங்களுக்கு சாக்லேட் வாங்கி தருவேன் "என்று கூற அவள் முன்னே மாறன் மற்றும் ராஜாவை உரித்து வைத்தார் போல் உடலில் மேலே சட்டையை போட்டுகொண்டு கீழே வேட்டியை போட விடமாட்டேன் என்பதை போல் கையை கட்டிக்கொண்டு முகத்தை உம்மென்று வைத்தபடி அவளையும் இளவரசியையும் முரைத்துக் கொண்டிருந்தனர் இருவரின் புதல்வர்கள் சஞ்சய் (இலக்கியாவின் மகன் 6 வயது ) மற்றும் அபிமன்யு (இளவரசியின் மகன் 4 வயது)

இளவரசி "எவ்ளோ நேரமா கெஞ்சுறோம் கொஞ்ச நேரம் போடுங்களேன்டா "என்று கூற

அந்த இரண்டு வாண்டுகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு
ஒரே நேரத்தில் "முடியாது எனக்கு pant குடு நா போடுறேன் "என்று கூற

இலக்கியா "இதோ பாருங்கடா நீங்க இப்போ இதை போட்டுக்கிட்டா தான் ஷிவா மாமா உங்களுக்கு துப்பாக்கி பொம்மைலாம் வாங்கி தருவான் "என்று கூற

அவள் கூறுவதை பொறுமையாய் கேட்டவர்கள் பின் தலையை இடவலமாய் ஆட்டி "வேணாம் "என்றனர் .

இலக்கியாவோ அயர்ந்துவிட்டாள் "உன் அப்பா கூட என்ன இப்டி படுத்துனது இல்லடா "என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு இருவனும் திரும்பினர்.

அங்கே முகம் நிறைந்த சிரிப்புடன் அடர் நீல நிறத்தில் பாவாடை அணிந்து தங்க நிறத்தில் தாவணி அணிந்து இடை தாண்டிய கூந்தலை பின்னலிட்டு அளவான தேகத்தில் மான் விழிகளில் மை தீட்டி அழகு சிலையென பதினாறு வயது யுவதியாக நின்றிருந்தாள் முருகன் மற்றும் மேகலாவின் புதல்வி நந்தினி .

இலக்கியா மற்றும் இளவரசி அவளின் வரவை பார்த்து பெருமூச்சு விட சஞ்சையும் அபிமன்யுவும் அதுவரை பிடிவாதமாய் நின்றவர்கள் தன் அக்கா நந்தினியை பார்த்ததும் முகம் மலர அவளிடம் ஓடியவர்கள் அவள் இடையை கட்டிக் கொண்டு புகார் வாசித்தனர்"அக்கா அம்மாகிட்ட சொல்லுங்க அது வேண்டாம்"என்று கூற

அவளோ இருவரையும் பிரித்து நிறுத்தியவள்"ஏன் டா செல்லம் ?"என்று கேட்க

சஞ்சய் "அது போட்டா ஓட முடியாது "என்று கூற

அபிமன்யு அவன் குறுவதை கூர்ந்து கவனித்தவன் அண்ணன் வழியே அ வழி என்பதைப் போல்"ஆமா ஆமா ஓட முடியாது "என்று கூற

நந்தினியோ "ஆமால்ல "என்று மாடியில் விரல் வைத்து யோசிப்பதை போல் பாவனை செய்தவள் இலக்கியாவிடம் "சித்தி அது நார்மல் வேட்டியா இல்ல ரெடிமேட் வேட்டியா ?"என்று கேட்க

அவளோ தன் ஆறுமாத மேடிட்ட வயிற்றை ஒரு கையில் பிடித்துக்கொண்டு எழுந்தவள் அங்கிருந்த இரண்டு வேட்டியையும் நந்தினியிடம் கொடுத்தாள்."ரெடிமேட் இல்லடா கட்டுர மாதிரி வேட்டி தான் "என்று கூற

நந்தினியோ சிரித்தவாறு வாங்கியவள் "சஞ்சு அபி உங்க ரெண்டு பேருக்கும் கார்ட்டூன்ல யாரை ரொம்பப புடிக்கும் ?"என்று கேட்க

இருவரும் ஒரே நேரத்தில் "சோட்டா பீம் "என்றனர் .

அவர்கள் கன்னத்தை கொஞ்சி முத்தமிட்டவள் "அதே மாதிரி நாமளும் கட்டிக்கலாமா ?"என்று கேட்க

இரு வாண்டுகளும் விழி விரித்து கை தட்டியவர்கள் ஒரே குரலில் "கட்டலாம் "என்று கூற நந்தினி இருவருக்கும் அந்த வேட்டியை pant போல் கட்டி விட இரண்டு வாண்டுகளும் மகிழ்ச்சியில் அவள் இருபுற கன்னத்திலும் முத்தமிட்டுவிட்டு ஓடி விட்டனர் .

இளவரசியும் இலக்கியாவும் அவர்களையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .இளவரசி "உனக்கு மட்டும் தான்டி அடங்குறானுங்க ரெண்டு பேரும்.எங்களை மதிக்க கூட மாட்டேங்குறானுங்க "என்று கூற

நந்தினியோ இல்லாத காலரை உயர்த்தி காட்டியவள் "அதெல்லாம் சொல்லுற விதத்துல சொல்லணும் சித்தி "என்று கூறி இலக்கியாவிடம் தான் கொண்டு வந்த பழ ரசத்தை கொடுத்தவள் "சித்தப்பா இதை குடுச்சுட்டு சீக்ரம் கீழ வர சொன்னாங்க சித்தி.இவனுங்க வேற எங்க ஓடுறானுங்கனு தெரில நா போய் பாக்குறேன் "என்று கூறி கொடுக்க இலக்கியாவோ அந்த பழரச கோப்பையையே ஆயாசத்தோடு பார்த்தாள்

இத்தோடு இந்த இரண்டு மணி நேரத்தில் இது நான்காவது கோப்பை அதுவும் அவளிற்கு சுத்தமாய் பிடிக்காத மாதுளம் பழரசம். இலக்கியா அதை முகம் சுழித்தபடி குடிக்க இளவரசியோ அவளை பார்த்து சிரித்தாள் .அவள் சிரிப்பதை பார்த்து முறைத்த இலக்கியா அவள் தலையில் லேசாய் கொட்டிவிட்டு அவளோடு கீழே சென்றாள்.

கண்கள் தன்னவனை தேட அவனோ அவள் கீழே இறங்கும் பொழுதில் இருந்தே அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் .சைகையால் அவன்" பழரசம் குடித்தாயா ?"என்று கேட்க

அவளும் இமை மூடி திறந்து குடித்தேன் என்று கூர

மாறன் "இன்னொன்னு கொடுக்கவா ?"என்று குறும்புடன் சைகை காட்ட அவளோ கை எடுத்து கும்பிட்டவள் இதற்கு மேல் முடியாது என்று சைகை செய்தபடி மணமேடையில் ஷிவா அமர்ந்திருக்க அவனின் பின் இளவரசியுடன் சேர்ந்து நின்று கொண்டாள் .

ஷிவா இப்பொழுது IPS முடித்து மதுரை மாவட்டத்தில் டெபுடி சூப்பேரெண்டெண்டாக இரண்டு வருடமாக பணி புரிகின்றான் .ஏழு வருடம் முன் இருந்த அந்த பள்ளி பருவ மாணவனின் குழந்தை முகம் பொய் இப்பொழுதோ கட்டுமஸ்தான தேகம் ,முறுக்கிய மீசை பொலிஸிற்கே உரிய கூர்மையான பார்வை ,அலை அலையான கேசம் சற்று கடுமை ஏற்றியிருந்த முகம் என்று ஆளே மாறி போய் இருந்தான்.மாறாததோ குடும்பத்தின் மேல் இருந்த பாசமும் ,சுஜாதாவின் மேல் இருந்த காதலும் தான்.

தான்  கூறியது போலவே ஐந்து வருடம் வரை அவள் முன்னால் வராது தன் இலக்கை நோக்கி பயணித்து அதில் வெற்றியும் கண்டான் .பின் முறைப்படி பெண் கேட்டு அவள் கழட்டி கொடுத்த மோதிரத்தை நிரந்தரமாக அவள் விரலில் இடம்பிடிக்க வைத்தவன் இந்த இரண்டு வருடத்தில் அவள் மனதிலும் நீங்கா இடம் பெற்று இருந்தான்.

ஐயர் கூறும் மந்திரங்களை கரும சிரத்தையுடன் கூறிக் கொண்டிருந்தவன் கண்கள் எதேர்ச்சியாய் மணமகள் அறையின் வாசலிற்கு செல்ல அங்கே இளஞ்சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகை நிறைந்திருந்த பட்டுப்புடவை அவளின் வெண்ணிற தேகத்தை பாந்தமாய் பொருந்தி இருக்க கார்குழலை அலங்கரித்த மல்லிப்பூவும் பூவையவளின் முகத்தில் இருந்த வெட்கம் கலந்த புன்னகையும் கண்டு காளையவன் இதழ்கள் புன்னகையில் ரசனையோடு விரிய அவளோ  அவனை ஏறிட்டு பார்த்தவள் யாரும் அறியாமல் கண்சிமிட்டு விட்டு மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

அவள் கண்சிமிட்டியதில் ஆனந்தமாய் அதிர்ந்தவன் தன் அருகில் வந்து அமர்ந்தவளை பார்வையாலே பருகினான் .சுஜாதா அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து உள்ளுக்குள்ளே சிரிக்க அவனோ அவள் காதில் "செம்மயா இருக்க சுஜிமா"என்று கூற

அவளோ சிரித்தவள் "தெரியும் எனக்கு. நீ என்னையே பார்க்காம மந்தரத்த சொல்லு ஐயர் டென்ஷன் ஆகி கல்யாணத்த நிறுத்திர போறாரு "என்று கூற

அவனோ அவளை செல்லமாய் முறைத்தவன் "இந்த இடத்துல நீ வெக்கப்படணும் சுஜி இங்கயும் கலாய்க்குறியே "என்று கூற

அவளோ சிரித்தவள் "அதெல்லாம் எனக்கு வராதுன்னு தெரிஞ்சு தான லவ்? பண்ண இப்போ expect பண்ண கூடாது "என்று கூறி மந்திரங்களை உச்சரித்தாள்.

அவள் பதிலில் சிரித்தவன் பின் கரும சிரத்தையோடு சடங்குகளை செய்ய ஆரம்பித்தான் .ஐயர் "கெட்டிமேளம் கெட்டிமேளம் "என்று கூற மங்கள வாத்தியங்கள் முழங்க,முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசியுடன் தன்னவளின் கழுத்தில் மங்கள நாணின் முதல் முடிச்சை ஷிவா இட இளவரசியும் இலக்கியாவும் மீத இரண்டு முடிச்சுகளை இட திருமணம் இனிதாய் இரு மனங்களை இணைத்தது.நெற்றி வகிட்டில் குங்கும்ம் இட்டவன் அவள் நெற்றியில் முத்தமிட சுஜாதாவிற்கோ இதுவரை அவள் அறிந்திடாத வெட்கம் இன்று அவளை ஆட்கொண்டது .

அவள் வெட்கத்தில் கர்வம் பொங்க சிரித்தவன் எதேர்ச்சயாய் திரும்ப அங்கே மண்டபத்தின் வாயிலில் கண்ணீரோடு இந்த திருமணக் காட்சியை பார்த்துவிட்டு யாரும் அறியும் முன் அங்கிருந்து சென்று விட்ட மகாவை பார்த்து முகம் இறுகினான்.

மகா.... ஏழு வருடங்களாக அவளும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறாள் தனது பிள்ளைகளுடன் பேச .எனில் இளவரசியும் சரி ஷிவாவும் சரி அதற்கு இடம் கொடுத்ததே இல்லை .தனிமை மகாவை அவள் செய்த தவறுகளை கொஞ்சம் கொஞ்சமாய் புரியவைக்க அவள் தன்னை உணர்ந்த நொடி அவளை விட்டு அனைத்து உறவுகளும் விலகி சென்று இருந்தது .

மாறனும் சொல்லி பார்த்தான் "என்ன இருந்தாலும் அவ உங்கள பெத்தவ டா பேசுறதுனா பேசுங்க "என்று கூற இளவரசியோ எந்த பெண்ணும் தன் தாயை அதிகமாக தேடும் பிரசவ நேரத்தில் கூட மகாவை தேட வில்லை .

இருவரும் அவள் செயலால் அவளை அடியோடு வெறுத்திருந்தனர் .மகாவும் இந்த தனிமையை தனக்கு கிடைத்த தண்டனையாய் ஏற்றுக்கொண்டவள் உடல் மெலிந்து ,முகம் அதீத சோகத்தால் இந்த ஏழு வருடத்திகள் இருபது வருடங்கள் வயது கூடியதை போல் விகாரமாக காட்சியளித்தாள்.இந்த எண்ணங்களில் மூழ்கி இருந்த ஷிவாவை சுஜாதா தோள் தொட்டு உலுக்க அதன் பின் விரல்கள் கோர்த்து அக்கினியை சுற்றி வலம் வந்து திருமண பந்தத்தில் இனிதே இணைந்தனர் இளையவர்கள்.

அனைத்து சடங்குகளும் முடிய குடும்ப புகைப்படம் எடுப்பதற்காக போட்டோக்ராபர் இவர்களை நிற்க கூறிக் கொண்டிருந்தார் .

முதலில் நான்கு நாற்காலியில் வரிசையாக

சத்யமூர்த்தி-ஷாந்தி மற்றும் மீனாட்சி -சங்கரன் தம்பதியர் அமர்ந்து கொள்ள

மீனாட்சி சங்கரரின் பின்னே

தாமரை-சந்திரன் தம்பதியர்

ராமன் -கலா அவர்களின் முன்னே அவர்களின் புதல்வன் சதீஷ்

அடுத்து சௌபாக்கியவாதி-மோகன் அவர்களின் முன்னே அவர்களின் புதல்வன் மற்றும் புதல்வி மீனாட்சி ,நிகில் நின்றனர்.

நடுவில் புதுமணத் தம்பதியர் சிவாவும் சுஜாதாவும் மணக்கோலத்தில் நிற்க அவர்கள் அருகில் முருகன்- மேகலா தம்பதியர் அவர்களின் புதல்வி நந்தினி

பின் இளமாறன்-இலக்கியா .
இளமாறன் கைகளில் அவர்களின் புதல்வன் சஞ்சய் .

அதன் பின் ராஜா -இளவரசி தம்பதியர் .
ராஜா கையில் அவனின் புதல்வன் அபிமன்யு .

போட்டோக்ராபர் அந்த பெரிய குடும்பத்தை கண்டு புன்னகைத்தவர் "சார் ஸ்மைல் ப்ளீஸ் "என்று கூற அனைவர் முகத்திலும் இருந்த புன்னகை அங்கு அழகான நிழற்படமாய் உருவெடுத்தது .இனி இவர்கள் அனைவரும் அவரவர் இணையின் அன்பில் சுகமாய் தொலைய நாமும் விடைபெறுவோம் .

                            சுபம்

Next partum check pannunga pls

Other works

1. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

2. தோழியா என் காதலியா

3. ஆதிரா

4. Solace in solitude

5. மறப்பதில்லை நெஞ்சே

6. தாலாட்டும் சங்கீதம்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro