9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வருடங்கள் சென்றது மாறன் தனது படிப்பை முடித்து விட்டு மதுரையிலேயே ஒரு பால் பண்ணையில் வேலைக்கு அமர்ந்திருந்தான் தற்காலிகமாக .

ராமனும் மிலிட்ரிக்கு சென்று விட வருடம் ஒரு முறை பத்து நாட்களுக்கு தான் ஊரிற்கு வருவான் .பணம் அனுப்புவது மட்டுமே அவனால் செய்ய முடிந்தது . மோகன் வட மாநிலத்தில் ஒரு வேலைக்கு சென்று விட்டான் . நன்றாக படிக்கும் இலக்கியாவிற்கோ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து ரெசல்ட்டும் வந்திருந்தது ஆயிரத்து இருபது மதிப்பெண்கள் பெற்றிருந்தால் .அடுத்து என்ன செய்வதென்று அவளிற்கு துளியும் தெரியவில்லை அப்படியே அவள் நாட்களை கடத்திக்கொண்டிருக்க அவளின் அன்னையோ சௌபாக்கியலக்ஷ்மியை போல் பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு type writing கற்றுக்கொண்டு வேலைக்கு செல்ல கூறிக்கொண்டிருந்தார் வீட்டின் வறுமை நிலை சற்று குறையுமென்று எனில் அவளிற்கு அதில் துளியும் விருப்பமில்லை .

வீட்டில் சும்மாய் இருக்க பிடிக்காமல் மாலை நேரத்தில் அந்த தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு பாடம் சொல்லி கொடுப்பாள் .அப்படி ஒருநாள் அவள் பாடம் சொல்லி கொடுத்து முடித்திருக்க பிள்ளைகள் அனைவரும் விடை பெற்று சென்றிருந்தனர் .

வாசலில் அமர்ந்து பாசியினை வைத்து அவள் கைவினை பொருள் செய்துகொண்டிருக்க அவளின் தந்தை வர பின்னோடே மாறனும் வந்துகொண்டிருந்தான் .

தன் தந்தையை கண்டு புன்னகைத்தவள் மாறனை கண்டு பெரிதாய் புன்னகைத்தாள் .
தந்தையிடமிருந்து பையை வாங்கியவள் "ஹே இப்போ தான் வீட்டுக்கு வழி தெருஞ்சுதா உனக்கு உன் frienduh வந்தா தான் வீட்டுக்கு வருவியா ?"என்க

மாறனோ சிறு சிரிப்போடு "அப்டிலாம் இல்லமா கொஞ்சம் வேலை ஜாஸ்தி அதன் இந்த பக்கம் வர முடியல "என்க

அவளின் தந்தையோ "இலக்கியா வாசலிலேயே வச்சு தான் பேசணுமா உள்ள கூட்டிட்டு போய் எதாச்சு சாப்பிட குடும்மா எனக்கு கொஞ்சம் பக்கத்துல வேலை இருக்கு நா போய் முடுச்சுட்டு வரேன் "என்று சென்று விட

தன் தலையிலேயே கொட்டிக்கொண்ட இலக்கியா "சாரி பா மறந்துட்டேன் வா உள்ள"என்றவள் பின் சமையற்கட்டிற்கு சென்று அவனிற்கு பிடித்த இஞ்சி டீ போட்டு எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

அவன் சுற்றி பார்க்க வீட்டில் யாரும் இருப்பது போல் தோன்றவில்லை "இலக்கியா வீட்ல யாரும் இல்லையா ?"என்க

அவளோ "இல்லப்பா அம்மாவும் அக்காவும் கோவிலுக்கு போயிருக்காங்க "என்க

அவன் "நீ ஏன் போகல ?"என்று பட்டென்று கேட்டுவிட

இலக்கியாவோ "நா போக கூடாது பா அதான் போகல "என்க மாறனிற்கு அவள் கூற்றின் அர்த்தம் விளங்கிவிட அவனிற்கு சற்று சங்கடமாக போய் விட்டது.எனில் அவளோ ஏதோ இயல்பாக பேசியதை போல் தனது கோப்பை தேநீரை ருசித்து அருந்திக்கொண்டிருந்தாள்.அதை கவனித்தவன் மனம் கற்பனை கோட்டைகள் கட்ட அவன் இதழில் புன்முறுவல் அழகாய் ஒட்டிக்கொண்டது .

அவளிற்கு இயல்பாகவே மாறனை வேற்றாளாய் எண்ண தோன்றவில்லை .
அவனிடம் எதையும் கூறவோ அவளிற்கு துளியும் வெட்கம் வருவதில்லை.அந்த நாட்களில் தன் தந்தையிடம் மட்டுமே கூறி தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்பவள் மாறனிடம் எப்படி அத்தனை இயல்பாய் கூறினால் என்று அவளிற்கு தெரியவும் இல்லை அதை அவள் யோசிக்கவும் இல்லை .

பின் ஒரு பெண் தனியாக வீட்டில் இருக்கையில் தான் இருப்பது முறை அல்ல என்று நினைத்தவன் வேக வேகமாய் டீயை குடித்துவிட்டு கீழே டம்ப்ளரை வைத்தவன்"சரி இலக்கியா நா கிளம்புறேன் "என்க

அவளோ "அதுக்குள்ளயா இரு அப்பா வரட்டும் அப்பறோம் போ "என்க

அவனோ தயங்க அவனின் தயக்கத்தை காரணத்தை உணர்ந்தவள் "இங்க பாரு இளா மத்தவங்க பார்வைக்கு பயந்து என்னைக்குமே வாழ முடியாதுப்பா போறவங்க போற போக்குல ஏதாவது சொல்லிக்கிட்டு தான் போவாங்க என் மனசுலயோ உன் மனசுலயோ தப்பு இல்லாதப்போ ஏன் பயப்படணும்? இரு அண்ட் எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் "என்க

அவனோ அவளின் தெளிவான பேச்சில் நிம்மதியுற்றாலும் அவள் கூறிய என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பது சற்று முன் அவன் கண்ட கற்பனைகளை தவிடுபொடியாக்க மனதில் சுருக்கென்று வலிக்க தான் செய்தது .

மூன்று வருடமாய் நெஞ்சில் சுமக்கிறானே அவளை எனில் அதன் பின் அவளின் வயது நினைவில் வர காலம் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான் கூடிய விரைவில் தானே தன் காதலுக்கு சமாதி கட்டி விடுவோம் என்பதை அறியாமல் .

அதன் பின் அவளின் குடும்பத்தில் அனைவரும் வந்துவிட அமர்ந்து சற்று நேரம் அவளின் தந்தையுடன் பேசி கொண்டிருந்தான் மாறன் .இலக்கியாவின் தந்தை "மாறா இலக்கியா இந்த வருஷம் பன்னெண்டு முடுச்சுடாப்பா. எனக்கு அடுத்து என்ன படிக்கச் வைக்குறதுனு தெரில பொம்பள புள்ளைங்க எல்லாம் பன்னெண்டு படுச்சுட்டு வேற ஏதோ எக்சாமொஹ் என்னத்தையோ எழுதி வேலைக்கு போயிருச்சுங்க. ஆனா இவ ரொம்பவே நல்லா படிப்பா படிக்கச் வைக்காம போறதுக்கு மனசு இல்ல .எனக்கு இந்த படிப்பை பத்திலாம் அவ்ளோவா தெரியாதுப்பா நீயே அவளுக்கு ஏதாச்சும் வழி சொல்லேன் "என்க

அவளும் "ஆமா இளா கொஞ்சம் ஏதாச்சும் ஐடியா சொல்லேன் சுத்தமா என்ன பண்றதுனு தெரில மார்க்ஸ்லாம் நல்ல தான் வந்துருக்கு "என்க

இளமாறன் "உனக்கு தகுந்த மாறி படிப்பை எடுத்து படிமா.நீ எந்த விஷயத்தை ரொம்ப புடுச்சு படிப்ப ?எதை ரொம்ப புடுச்சு செய்வ ?"என்க

அவளோ சற்று நேரம் யோசித்தவள் "எனக்கு கணிதம் ரொம்ப புடிக்கும் இளா அது சொல்லி தரதும் ரொம்ப புடிக்கும் .எனக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கு சொல்லி தரேல நா ரொம்ப திருப்தியா உணருவேன் ஒரு நிறைவான உணர்வு "என்க

அவனோ "அப்போ சரி நீ இளங்கலை கணிதம் படுச்சுட்டு அப்பறோம் பி.எட் பண்ணு அதுலயே .இளங்கலை மூணு வருஷம் அதுகப்புறோம் வேலைக்கு போய்கிட்டே கூட நீ படிக்கலாம். "என்க அவளிற்குமே இந்த யோசனை சரியாய் பட்டது .

இலக்கிய "ம்ம் ஓகே இளா" என்க

இளமாறனோ புன்னகையுடன் "இலக்கியா இந்த நேரத்துக்கு காலெஜ்ஸ் எல்லாத்துலயும் அப்ளிகேஷன் தர ஆரம்பிச்சுருப்பாங்க நீ நாளைக்கே போய் வாங்கணும் "என்க

அவளோ "ஓஹ் சேரி இளா நாளைக்கு காலைல போய் வாங்கிக்கிறேன் "என்க

மாறனோ மனதில் கொஞ்சம் கூட வாரீங்களானு கேக்குறாளா பாரு சண்டி ராணி என்று மனதில் பொரும

இலக்கியாவின் தந்தையோ சற்று தயங்கி "அது இல்லம்மா ரெண்டு மூணு காலேஜ்ல அலைஞ்சு திரிஞ்சு வாங்கணும் வந்து மாறா "என்று அவனை நோக்கி தயக்கமாய் நிறுத்த

அவனோ "சொல்லுங்கப்பா "என்க

அவரோ தயங்கி தயங்கி "அது வந்து நாளைக்கு கொஞ்சம் அவ கூட போயிட்டு வாரியாப்பா வேலை இல்லேனா? அது எனக்கு வேலை இருக்குப்பா நீ கொஞ்சம் விவரமா கேட்டு செய்வ அது..... முடுஞ்சதுனா கொஞ்சம் கூட போப்பா "என்க

அவனோ சிரித்தபடி அவர் கையை பற்றியவன் "இதுக்கு ஏன்பா இவ்ளோ தயக்கம் நானே இலக்கியாவை ரெண்டு மூணு காலெஜ்ஸ்க்கு கூட்டிட்டு போய் அப்ப்ளிகேஷன் வாங்கி தந்துருறேன் "என்க அவரும் மகிழ்வுடன் தலை ஆட்டினார்.

பின் அவர்களிடம் இருந்து விடை பெற்றவன் வீட்டிற்கு வர அங்கே அவனிற்கு இன்ப அதிர்ச்சியாய் ராஜா ஊரிலிருந்து வந்திருந்தான் .

ஊரிலிருந்து வந்த தம்பியை அணைத்துக்கொண்டவன்"எப்போடா வந்த இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்ன "என்க

அவனோ "சும்மா ஒரு சர்ப்ரைஸ்க்காக வந்தேன் அண்ணே எப்படி இருக்க "என்றவன் அதன் பின் தன கல்லூரி கதைகள் அனைத்தையும் பேசி வளவளக்க இருவரும் மேல் மாடிக்கு சென்று விட்டனர் கையில் சிறிய மாடல் ரேடியோவுடன் .

அண்ணன் தம்பி இருவருக்கும் பனி விழும் அந்த இரவில் நட்சத்திரங்களை பார்த்தபடி அமர்ந்து இசை ஞானி இளையராஜாவின் பாடல்களை கேட்டபடி கதைகள் பேசுவது என்பது மிகவும் பிடித்த ஒன்றாகும் .அன்றும் அது போல் இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் மேல் மாடிக்கு சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மாறனின் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் ஒலித்தது .

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை

சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை

அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை

நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

அவள் வான்மேகம் காணாத பால்நிலா

இந்த பூலோகம் பாராத தேன்நிலா

என்ற பாடல் இனிமையாய் ஒலிக்க மாறனின் இதழ்களோ மனதில் நிறைந்த இலக்கியாவின் முக பிம்பத்தை கண்ணில் நிறைத்து விண்ணில் தெரியுமாறு கற்பனை செய்து பாடல் வரிகளை அவளிற்கு பொருத்தி ரசித்துக்கொண்டிருந்தான் .

அவனிருந்த நிலையை கண்டு சிரித்த ராஜா "என்னண்ணே அண்ணி ஸ்கூல் முடுச்சுட்டாங்க போல என்ன படிக்கச் போறாங்களாம் "என்க

மாறனோ "bsc மேத்ஸ் டா நாளைக்கு காலேஜ் அப்ளிகேஷன் வாங்க கூட்டிகிட்டு போனும்" என்று உளறியவன் அதன் பின்னே ராஜா கூறிய அண்ணி என்னும் அழைப்பை கவனித்தான் .

அசடு வழிய சிரித்தவன் அவன் புறம் திரும்ப ராஜாவோ "ரொம்ப சிரிக்காதண்ணே எனக்கு நீ நம்ம அண்ணன் கல்யாணத்துல வச்சு அந்த பொண்ண பார்த்த பார்வையிலேயே தெருஞ்சுருச்சு நானும் இப்போ சொல்லுவ அப்போ சொல்லுவனு பாத்தேன் அழுத்தம் புடுச்சவன் சொல்லவே இல்ல நீ "என்று குறைபட்டுக்கொள்ள

அவனோ அவன் தோளில் கையை போட்டவன் "அது தம்பி மறைக்கணும்னுலாம் இல்லடா அவளுக்கு அப்போ தான் பதினாலு வயசாச்சு. நானே என் மூஞ்ச பல நாள் கண்ணாடில பார்த்து துப்பிருக்கேன் சின்ன புள்ள மேல போய் இப்டி ஆச வைக்குறியேனு .ஆனா என்னவோடா அவளை பார்த்தாலே நான் நெனைக்குறது அவ வயசு எல்லாமே எனக்கு மறைஞ்சு போயிரும் .அவளை பார்த்தா போதும் அவ கூட இருந்தா போதும் அவ பேசுறதை கேட்டா போதும்னு .இது நானானே எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்துருக்கு "என்க

ராஜாவோ வாயை பிளந்தவன்"என் அண்ணனா நீ இப்டி மாறிட்டியேயா"என்க

அவனோ சிரித்தவன் "பேச்சுவாக்குல அண்ணின்னு கூப்பிட்டு வைக்காதடா அவளை .அவளுக்கு அப்டி எந்த எண்ணமும் இல்ல இன்னும் குழந்தையாவே தான் சுத்திகிட்டு இருக்கா ."என்க

ராஜா "எது கொழந்தையா அது சரி எப்போ தான் சொல்லுவ உன் காதல ?"என்க

அவனோ "அவ படிப்ப முடிக்கட்டும்டா அப்ரோமா பொறுமையா சொல்லிடுறேன் அது வரைக்கும் தூரத்துல இருந்தே பார்த்து சந்தோஷப்பட்டுக்குறேன் "என்க

ராஜா "அய்யய்ய நமக்குலாம் இவ்ளோ பொறுமை வராதுப்பா எனக்குலாம் அப்டி தோணுச்சுனா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு சொல்லிருவேன்"என்க மாறனோ பார்க்க தான போறேன் என்ற ரீதியில் அவனை பார்த்துவிட்டு பாடல்களில் மூழ்கினான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro