உறவு 15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தன்னுயிர்த் தோழியின் சிரிப்புக்கு காரணம் எதுவாகினும் அது அவளுக்கும் பிடித்தமானதாகி விடும்.. அவ்வகையில் அவள் தோழிக்கு ஆதரவாக இருக்கும் ஒரே உயிரையும் அவளுக்கு பிடித்ததில் ஆச்சர்யமில்லை..
அவனை நல்ல மனிதனாக, சிறந்த பாதுகாவலனாக, அடுத்தவர் குறை தீர்க்கும் ஆபட்பாண்டவனாக தெரியும்.
ஆனால் அவனை காதலனாக எண்ண எப்போது தோன்றியதென்று பேதை நெஞ்சுக்குத் தெரியவில்லை.. காரணத்துடன்தான் காதல் வரவேண்டுமா என்ன?அவனைப் பார்த்தாலே மனதில் தோன்றும் மகிழ்ச்சிக்கு காரணமும் புரியவில்லை! இதன் விடை காதல் என்பதை ஆண்டுகள் கடக்க அவளே புரிந்து கொண்டாள்.

அவன் ஆணழகன் என்பதைக் காட்டிலும் அவனின் பொறுமையும் பத்து வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில் ஒற்றை வார்த்தையை பதிலாய் உரைத்து அனைவரையும் அதற்கு கட்டுப்பட வைக்கும் அவனது சாதூர்யமும் தான் அவனை இன்னும் நேசிக்க வைத்தது..
பெற்றோரின் பாசத்திற்கு ஏங்கும் கனியின் முகத்தை வைத்தே அவன் சுலபமாக கண்டுபிடிப்பதை முதலில் அதிசயமாக நோக்கினாலும் அவனை உற்று நோக்கிய பி்ன்புதான் அவனும் தாய்ப்பாசத்திற்கு ஏங்குகிறான் என்பதை கண்டுகொண்டாள்..

அவனுக்கு யாவுமாக இருக்க ஆசைப்பட்டது இவள் காதல்மனம். ஆனால் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைந்ததில்லை.
எத்தனை நாள் அவன் ஊரிலிருந்து வருகிறான் என தெரிந்ததும் கனியின் வீட்டு வாசலிலே வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.. ஆனால் அவளுக்கு கிடைப்பது என்னவோ ஏமாற்றம் மட்டும்தான்.. ஏனெனில் அவனுடன் எப்போதும் அட்டைப் பூச்சியாய் ஐசுவும் அவனுடன் தொற்றிக் கொண்டே வருவாள்.. அதனாலே எப்போதும் துளசி ஐசுவைக் கண்டால் சீரியல் வில்லியைப் போல முரைத்துக் கொண்டே செல்வாள்.. அவள் ஐசுவை எதிரியாக நினைத்தைப் போலவே அவர்களின் திருமணமும் நிச்சயிக்கப்பட நொந்து போனாள்..
.அவனிடம் முறையாக தனது காதலை சொல்லி ஒப்புதல் பெறும் வயதும் தனக்கில்லை என்பதையும் அறிந்தவளால் நடக்கும் அவனது திருமணத்தை நிறுத்தக் காரணம் தெரியவில்லை..

திருமணம் நின்றபோது கூட அவன் வருத்ப்படுவானே என்றுதான் அதிகம் கவலைப்பட்டாள்..அவன் காணாது போன பத்து நாட்களும் கனி எவ்வளவு வருத்தப்பட்டாளோ தெரியாது..ஆனால் அதை விட பன்மடங்கு உள்ளுக்குள்ளே செத்து மருகினாள்.. அவனை குடியும் தாடியுமாக பார்த்த பின்பு தான் இனியும் அவனை இழக்க விரும்பாமல் அன்று அவர்கள் வெளியே சென்றிருந்த போது கடற்கரையில் வைத்து நேரடியாக தனது காதலை சொல்லி முடித்தாள்.. ஆனால் அந்தோ பாவம் அவனோ அன்றிலிருந்து பூனையினைக் கண்ட எலியாய் ஓடி ஒளிந்து கண்ணாமூச்சி காட்டிக் கொண்டு இருக்கிறான். எப்படியோ அபி மற்றும் கனியின் உதவியால் இந்த விளையாட்டு முடிவுக்கு வந்தது..

மனதை தைரியப்படுத்திக் கொண்டு பேச துவங்கிய நேரம் அவனே " துளசி நீ ரொம்ப தப்பு பண்றமா.. நீ சின்ன பொண்ணு.. வீணா மனசுல ஆசைய வளர்த்து உன் எதிர்காலத்த வீணாக்கிக்காத.. உங்க அம்மா உன்மேல நிறைய நம்பிக்கை வெச்சிருக்காங்க.. அதை மறந்திடாத " என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல பொறுமையாக எடுத்துரைக்க, அவளோ " அப்போ நான் படிப்ப முடிச்சிட்டு எங்க அம்மா சம்மதத்தோட வரவரைக்கும் எனக்காக கல்யாணம் பண்ணாம காத்திருக்கிங்களா? " என்றாள் கண்களில் காதல் பொங்க..

இதைக் கேட்டதும் அவன் இவ்வளவு நேரம் கட்டிக் காத்த பொறுமை காற்றில் பறக்க அவளை அடிக்க கைய ஓங்கினான்.. அவன் கண்டிப்பாக அடித்து விடுவான் என்கிற பயத்தில் கண்களை இறுக்க மூடியவள் தன்மீது அடி விழுகவில்லை என்பதை உணர்ந்து கண்களைத் திறக்க அவன் கையை யாரோ அடிக்க விடாமல் தடுத்திருப்பது தெரிந்தது.. தன்னவன் தன்னை முதன்முறையாக உரிமையுடன் அடிப்பதை தடுத்தது யாரென்று பார்க்க அவள் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

ஏனெனில் அவனது கைப்பற்றி நிறுத்தியது அவன் யாரை இனிமேல் பார்க்ககூடாது என நினைத்திருந்தாளோ அதே ஐசுதான்..

கோபத்தில் கடையிலிருந்து அவளை வெளியே கூட்டி வந்தாலும் அவள் தன்னிடம் கேட்ட புடவையை வாங்கித் தரவேண்டும் என்ற எண்ணத்தால் காரில் அவளை அமர்ந்திருக்க சொல்லிவிட்டு அவன் மட்டும் கடைக்குள் சென்றிருந்தான்.. ஐசு அந்நிலையில் தான் கதிரையும் துளசியையும் கண்டு கொண்டாள்.. கதிரிடம் மன்னிப்புக் கேட்க இதை விட வேறு சிறந்த சந்தர்ப்பம் அமையாது என எண்ணி அவனிடம் பேச வந்தாள்..

அவளைக் கண்டதும் ஏற்கனவே உலைகலனாய் கொந்தளிக்கும் அவன் மனது எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்தது. அவள் கையைத் தட்டிவிட்டவன் தனது வண்டியை இயக்க ஆரம்பிக்க " மாமா.. ப்ளீஷ்.. நான் சொல்றத கேளுங்க.. உங்கள அவமானப்படுத்தனும்னு நான் பண்ணல மாமா.. என்னை மன்னிச்சிடுங்க... " என கெஞ்ச,

" வழிய விடு " என அவன் கத்தினான்.

அவன் மிரட்டலில் பயந்தவள்
" மாமா.. ப்ளீஷ்.. " என்று கெஞ்சியவாறே வண்டிச் சாவியை கையிலெடுத்துக் கொண்டு அவனைத் தடுக்க அதைத் தாங்க இயலாத துளசி " இப்போ ஏன் தொல்லை பண்றீங்க.. அதான் நாங்க வேணாம்னு உங்களுக்கு பிடிச்ச மாறி வாழ்க்கைய அமைச்சுக்கிட்டிங்கள.. இப்போ எவ்ளோ தைரியம் இருந்தா வந்து பேசுவீங்க " என்று கோபமாக கேட்கவும் கதிர் அவளைக் கண்களாலே அடக்கினான்..

" மாமா அம்மாவும் அப்பாவும் நல்லார்க்காங்க தானே? " என்க " அவுங்க பாம்புக்கு பாலூத்துனா சந்தோசமாவா இருக்க முடியும்.. அய்யோ கொத்திடுச்சேனு அழுகத்தான் முடியும் " என்று துளசி குத்தலாக பேசு ஐசு பாவமாக கதிரைப் பார்த்தாள்.

அவள் முகவாட்டத்தைக் கண்டதும் " துளசி " என்று பல்லைக் கடித்துக் கொண்டுக் கூற " நீங்க சும்மா இருங்க.. " என்று கதிரிடம் கூறிவிட்டு ஐசுவை நோக்கி " உங்க அம்மா அப்பா உனக்கு எதுல குறை வெச்சாங்க. எல்லார் முன்னாடியும் உங்க குடும்பத்த தலை குனிய வெச்சிட்டியே .. நீயெல்லாம் ஒரு பொண்ணா" என்றதும் இதுவரை ஐசு இழுத்துப் பிடித்திருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.

தனது காரில் ஐசுவைக் காணாது போக தேடி அலைந்தவனின் கண்ணில் சிக்கியது என்னவோ ' நீயெல்லாம் ஒரு பெண்ணா ' என தன்னவளை கேவலமாக ஒரு பெண் குற்றம் சாட்டுவதையும் அதற்கு அவளின் கண்களில் வழியும் கண்ணீரையும் தான்.. விரைந்து அவ்விடம் சென்றவன் ஐசுவை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து மறுநொடி துளசியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.. சில நொடியில் நடந்த எதிர்பாரா தாக்குதலால் நிலையிழந்த துளசி தரையில் விழுந்தாள்.. கனி விரைந்து துளசியைத் தூக்கிவிட அபி கோபத்தில் தனது முதலாளி என்றும் பாராமல் அசோக்கின் சட்டைக் காலரைப் பிடித்தான்.. அபியை கதிர் பிடித்து இழுக்க ஐசு அசோக்கை அபியிடம் இருந்து பிரித்தெடுக்க முயற்சித்தாள்.

" விடு கதிர்.. என்ன தைரியம் என் துளசிய அடிச்சிருப்பான்..நீ மட்டும் இல்லைனா அன்னைக்கே அவன என் கையாலயே கொன்றுப்பேன்.. " என அவனது கழுத்தை நெருக்க முயற்சிக்க அசோக்கும் தானும் இந்த மிரட்டலுக்கு சளித்தவன் இல்லை என்பது போல அபியின் கழுத்தைப் பிடித்தான்.

இவர்கள் கூச்சலில் கூட்டம் கூட ஆரம்பித்தது.. " அசோக்.. காம் டவுன் அசோக்.. தப்பு என்மேல தான்.. ப்ளீஸ் " என்று ஐசு கெஞ்சுவது அவன் காதில் விழவில்லை.. கனிக்கு பயத்தில் கை கால் நடுங்கியதுடன் மூச்சும் வேகமாக வாங்கியது. அவளின் நடுக்கத்தை உணர்ந்த துளசி " அபி.. வேண்டா விட்ருடா.. கனிக்கு என்னமோ பண்ணுது.. பயமா இருக்குடா " என்றதும் அனைவரின் கவனமும் கனியின் மீது பதிந்தது..
கதிர் " கனிம்மா " எனக் கத்திக் கொண்டே கீழே மயங்கி சரிந்தவளை தாங்கிப் பிடிக்க அபி தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து முகத்தில் தெளித்தான்..
இருந்தும் அவள் அசைந்த பாடில்லை..

அசோக்கும் சற்று பயந்துதான் போனான்.. அவனும் வேகமாக சென்று தனது காரினை எடுத்துவந்து " கதிர் லேட் பண்ண நேரமில்ல.. கமான்.. பாப்பாவ தூக்கு " என்றதும் கதிரும் வேறு எதையும் சிந்தனை கொள்ளாது காரினுள் அமர்ந்தான்..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியே அனைவரும் பதற்றத்துடன் காத்திருந்தனர். வெளியே வந்த மருத்துவரிடம் கதிர் என்னவென்று விசாரிக்க அவர் கூறிய பதிலில் அப்படியே உறைந்து நின்றான்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro