உறவு 33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அபியின் காதலை சேர்த்து வைப்பதற்காக இங்கே வந்தது தற்போது பெரிய தவறாக தோன்றியது துளசிக்கு.. தர்ஷு தந்தை அவளை எதும் சொல்லாத போதும் அவரது ஒற்றை சந்தேகப் பார்வையே மிகவும் அச்சுறுத்தியது.. தனது தந்தையை திறமையால் சமாளித்துக் கொள்வேன் என வீர வசனம் பேசி அழைத்து வந்தவள் காற்று போன பலூன் போல மூளையில் அடங்கியிருப்பதைக் கண்டதும் தன் நிலைையை எண்ணி தானே நொந்து கொண்டாள்.
அவள் மனவோட்டத்தை நன்றாக புரிந்த தர்ஷு " லசிம்மா.. எங்கப்பானா தான் எனக்கு ரொம்ப பயம்..மத்தபடி நானும் தைரியமானா பொண்ணுதான்மா " என சிலிப்பிக் கொள்ள, இவள் வெறும் வாய் மட்டும்தான் மத்தபடி வெத்துவேட்டு தான் என்பதை புரிந்தவள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டாள்..

' நமது இராஜதந்திரங்கள் அனைத்தும்
வீணாகிவிட்டனவே ' என புலம்பியவள் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வர அபி வீட்டு ஓனரிடம் பேசிய படியே தனது உடமைகளுடன் வந்து கொண்டிருந்தான்.. ஐயோ இவன ரெண்டு நாள் கழிச்சுதான வரச் சொன்னோம்.. அதுக்குள்ள அப்பாக்கிட்ட உண்மைய சொல்லி பர்மிசன் வாங்கிடலாம்னு நினைச்சா இப்பவே வந்து நிக்கிறானே மூட்டைப்பூச்சி...
இப்பவே துளசியும் இவனும் அண்ணா தங்கைனு தெரிஞ்சா எல்லாமே என்னோட பிளான்னு அப்பா கண்டுபிடிச்சிடுவாரே என
அவனை வேண்டா வெறுப்பாய் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் மாடிக்கு படியேற போக "அபி தம்பி எங்க
வீட்டுக்குள்ள போங்க.. ரொம்ப நாள் கழிச்சு உங்களோட பள்ளித் தோழிய பார்த்துருக்கிங்க..அவங்க கையால ஒரு காப்பி குடிச்சிட்டு போலாம்.. " என இதுவரை தர்ஷுவின் கண்ணில் படாதவாறு நின்றிருந்த விருமாண்டி அபியின் பின்னாலிருந்து குரல் கொடுக்க. 'சுத்தம்.. சொந்த செலவுல சூனியம் வெச்சிட்டோம்' என முட்டைக் கண்கள் வெளியே விழுந்து விடுமளவிற்கு முகத்தில் அதிர்ச்சியைக் காட்டினாள்..

" அப்பா.. அதுவந்து.. மூட்டை..த்தூப்... அபியோட தங்கச்சிக்கு உடம்பு சரியில்ல ..அதான் " எனத் தட்டுத் தடுமாற.. அவளை முரைத்தவர்
" நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. அபித் தம்பியே எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. ஆபத்துக்கு உதவுவதற்குத் தான் மனுசங்க.. நீயே உண்மைய சொல்லியிருந்தா நான் உன்னை எதும் சொல்லி இருக்க மாட்டேன்... எப்போதான் உண்மைய உண்மையா ஒத்துக்கிட்டு பர்மிசன் கேக்கறியோ அப்போதான் பயப்படவும் அவசியம் இருக்காது.. தம்பிக்கிட்ட இருந்து படிப்பதான் ஒழுங்கா கத்துக்கல.. குறைஞ்சது நேர்மைய வாச்சும் கத்துக்கோ.. " என்றபடி சமையலறையில் புகுந்துகொண்டார்.

இவன் எந்த உண்மையை சொன்னானோ என பயந்துவாரே அவனை உள்ளே அழைத்தாள்.. அவனும் மனதிற்குள் அவள் நிலையை எண்ணி சிரித்துக் கொண்டாலும் விருமாண்டிக்கு பயந்து அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு நாற்காலியில் வந்தமர்ந்தான்.

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

அசோக்குடன் கதிர் வெளியேறியதை பார்த்துக் கொண்டிருந்த ஐசு அவர்கள் எங்கே கிளம்பி செல்கிறார்கள் என குழம்பிப் போயிருக்க, கனியோ தாழிட்ட அறையில் யாரும் அறியா வண்ணம் அழுது கொண்டிருந்தாள்..
அவளது நடவடிக்கை கதிருக்கு வருத்தத்தைத் தந்தது என்றால் கதிரின் செயல் கனிக்குள் பூகம்பத்தையே உண்டாக்கிவிட்டது..
நேற்று அசோக்கின் அலுவலகத்தில் கதிர் தன்னை திட்டியதையும் அடிக்க கையோங்கியதையும் தாங்கிக் கொண்டவளால் எந்த தவறும் செய்யாத எழிலை குற்றம் சாட்டி அவனை அத்தனை பேர் மத்தியில் அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கதிர் தீர விசாரிக்காமல் எழிலை அடிப்பான் என நினைக்காத கனி, முரட்டுத்தனமாய் அடித்துக் கொண்டிருக்கும் கதிரை எவ்வாறு தடுப்பது எனத் தெரியாமல் அவனிடம் கெஞ்ச அவனோ உனக்கொன்றும் தெரியாது அமைதியா இரு.. என சொன்னதும் கோபத்தில் வார்த்தைகளை வாரி இறைத்துவிட்டாள்.
" மாமா.. அவர அடிக்கறத நிறுத்தப் போறியா..இல்லையா.. நானும் பார்த்துட்டே இருக்கேன்..என்மேல நம்பிக்கையே இல்லாம பாலோ பண்ணி வந்துட்டு .. இப்போ என்ன நடந்துச்சுனு கூட கேட்காம அடிக்கிற. முதல்ல அவர அடிக்கற உரிமைய யார் உனக்கு கொடுத்தது.. அதும் அவரோட ஆபிஸ்லயே... " என்று கத்தியவள் தன்னையா எதிர்த்து பேசுகிறாள் என அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் " அவர அடிச்சிட்டல நீ.. அவர்கிட்ட சாரி கேட்கிற வரை இனி எங்கூட பேசவே பேசாத.." என முகத்தை வெட்ட,

" கனிம்மா..அவன் ...போ.தை. த.ப்பா.ன சீடி... உ.ன்.னை...ஐ..யோ.. ந.டிக்கி.றான்.மா" எனத் திக்கித் திணற எதையோ கூற வர அவன் எதை சொல்கிறான் என்பதை தெளிவாக புரிந்தவள் " நீ தப்பா புரிஞ்சிட்டு பேசற..அவர் ரொம்ப நல்லவர்..அவர நான் நம்பறேன்..அந்த விசயம் எனக்கு முன்னமே தெரியும்..இதுல அவர்க்கு எந்த சம்பந்தமும் இல்ல..சரியா.. நீ தான் எது உண்மைனு தெரி்ஞ்சுக்காம முட்டாள்த்தனமா நடந்துக்கிற.. இது என்னோட லைப்.. நல்லது எது..கெட்டது எதுன்னு எனக்கும் தெரியும்.. நீ என்னோட வாழ்க்கையையும் சேர்ந்து வாழாத.. " என்று எழிலை அடித்த கோபத்தில் கதிரிடம் பேசியவள் எழிலை அழைத்துச் செல்ல அங்கே மொத்தமும் இடிந்து போனான் கதிர்.

தன் உயிரையே வைத்திருக்கும் கனியிடம் தவறாக நடந்துகொள்ள ஒருத்தன் நினைத்திருக்கிறான் எனத் தெரிந்ததும் என்றும் எதனையும் அலசி ஆராயும் அவனது மூளையும் வேலை செய்யாமல் போக, அதே நேரத்தில் கனியும் எழிலும் கைக் கோர்த்துக் கொண்டு வரவும், எழில் நல்லவன் எனத் தெரிந்திருந்தும் கனியின் மீது கொண்ட பாசத்தினால் உணர்ச்சி வசப்பட்டு தாக்கிவிட்டான்.. அந்த இடம் அசோக்கின் முக்கிய பிரான்ச் என்றோ எழிலின் கம்பெனி என்றோ அவன் மனதில் பதியவில்லை.. அவன் கண்களுக்கு தெரிந்தது தனது கனிம்மாவினை காதல் வலையில் வீழ வைத்து அவள் வாழ்வை அழிக்க நினைக்கின்ற ஒரு கொடியவனைத்தான்.. ஆத்திரத்தில் அறிவு மழுங்கிட அவன் செய்த அந்தக் காரியம் அவனது கனியிடமிருந்து அவனைப் பிரித்துவிட்டது.. தன்னை யாரோ போல அந்நியப்படுத்தி சென்று விட்டவளை எண்ணி எண்ணி மனம் விம்ப இனி எதற்காக வாழ வேண்டும் என்று கூட அவனுக்கு தோன்றிவிட்டது..
ஐசு திருமணத்தன்று ஓடியது கூட அவனுக்கு அவ்வளவு வலியைத் தரவில்லை..மாறாக இவளது இந்தப் பாராமுகமே அவனை உயிரோடு சிதையினை எரிப்பது போல வலித்தது.
மனம் இருண்டு போகும் வேளையில்
அன்று ' எப்பவும் என்னை விட்டு போக மாட்டல்ல மாமா' என அழுதுகொண்டு அவள் பேசியது நினைவு வர தான் இல்லாமல் போனால் அவள் தாங்க மாட்டாள்.. ஏதோ கோபத்தில் பேசி விட்டாள்.. ஆனால் தன்னை எப்போதும் அவள் வெறுக்க மாட்டாள் என தன்னையே சுய ஆறுதல் படுத்திக் கொள்ளத்தான் முடிந்தது அவனால்..

அவளும் கோபத்தில் காதல் கொண்ட போதையில்
தனது மாமனை தானே வார்த்தையில் கொன்று விட்டு திரும்பி அவனிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேச முடியும் என நொந்து கொண்டிருந்தாள்.
எழிலும் அவளது அழைப்பை ஏற்க மறுக்க, இரண்டு பக்கமும் என்ன செய்வது என புாியாமல் வெறும் கண்ணீரை மட்டும் தாரை தாரையாய் வார்த்தாள்.
கல்லூரிக்குச் சென்றாலாவது எழிலையாவது சந்தித்திருப்பாள்..அதற்கும் வழியில்லாமல் ஐசு வீட்டில் பிடித்துக் கொண்டாள்.அவள் நிலை இருவரில் யாராவது ஒருவரிடமாவது பேசியே ஆக வேண்டும் என இருக்க தற்போது இருவருமே இவளை விட்டு விலக நினைத்தனர்.

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

துளசிக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்தவன் தன்னால் முடிந்தளவு
வீட்டில் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு அவள் உறங்கும் வரை அவள் அருகில் அமர்ந்திருந்தான்.பின் தன கட்டிலில் படுத்தவன் வெகு நேரம் போராடியும் உறக்கம் வராமல் போக சற்று நேரம் மாடியில் சென்று பௌர்ணமி நிலவை ரசிக்கலாம் என்று நினைத்து மேலே சென்றான்.அவன் மாடியை அடைந்த நேரம் வானில் நிலவெனும் இளவரசி தன முழு ஒளியை உலகிற்கு வீசியவாறு நடந்து வர அவளது அழகை மெருகூட்டும் வகையில் நட்சத்திரங்களும் அவளின் அருகே மின்னி மின்னி நடந்து வந்தனர் .
வானை ரசித்தவாறு நின்றிருந்தவனுக்கு தான் தனது சோன்பப்டியின் வீட்டில் தங்கியிருக்கிறோம் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.. எந்த தைரியத்தில் அவள் தந்தையுடன் பல வருடங்கள் கழித்துப் பேசினோம்.. எதன் அடிப்படையில் அவரும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தங்களது  ஆரம்ப கால உறவைப் போலே நடந்து கொண்டார் என அவனுக்கேத் தெரியவில்லை.. முடிந்த பிரச்சனை மீண்டும் ஆரம்பிக்காமல் அனைத்தும் நல்லபடியே முடிய வேண்டும் என தனது எண்ண அலைகளில் உலன்றவன் தனது அறையில் நுழைய போக தற்போது தான்
அந்த மாடியின் ஓரத்தில் கைப்பிடியை பற்றியவாறு நீல நிற இரவுடையில் அந்த முழுமதியுடன் போட்டியிடும் மாசு மருவில்லா முகத்துடன் நின்றிருந்த தன் சோன் பப்டியை கவனித்தான்.அவளும் அவனைத்தான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதழ்கள் தானாய் புன்னகையை பூசிக்கொள்ள "நீ இங்க என்ன பண்ற ?"என்ற கேள்வியுடன் அவள் அருகில் சென்று அவளை பார்த்தவாறு அவள் அருகில் நின்றுகொண்டான் அபி .

அவன் கேள்வியில் முதலில் அதிர்ந்தவள் பின் புன்னகையை பூசிக்கொண்டு அவன் புறம் சாய்ந்து நின்றவள் "ஒண்ணுமில்லடா மூட்டை பூச்சி தூக்கம் வரல அதான் "என்க, அவளிடம் சற்று தள்ளி நின்றவன்
அவள் கையில் ஒரு கருப்பட்டி சில்லு இருக்கக்கண்டு அதை அவள் கையிலிருந்து வாங்கி "இன்னுமாடி இந்த பழக்கத்தை விடல நீ ?"என்று சிரித்தபடி தலையில் அடித்துக்கொள்ள
" போடா " என அவனிடமிருந்து அதைத் தட்டிப் பறித்தவள் வாயில் போட்டுக் கொண்டாள்.. " உன்னை திருத்த முடியாது" என தலையில் கொட்டியவன்  அவள் சாப்பிடும் அழகில் முகம் சுழித்தவாறே, அவனருகில் இருந்த பக்கச் சுவற்றில் ஏறி அமர்ந்து தனது அலைபேசியில் கவனம் செலுத்தினான்..

இருவரும் அவர்கள் வேலையை செய்து கொண்டிருப்பதைப் போல இருந்தாலும் இருவரின் நினைவுகளும் ஒன்றாக அவர்களது பள்ளி காலத்தைத் தான் நோக்கி சென்றது .

அப்பொழுது அபி ஆறாவது படித்துக்கொண்டிருந்தான் .பள்ளி திறக்க இன்னும் நேரம் இருப்பதால் அவனது நண்பர்கள் புதிதாக வந்தவர்களை கேலி செய்து கொண்டிருக்க.. அவனோ தலையில் விபூதிப் பட்டையோடு அழகாக எண்ணெய் வைத்து படியெடித்து சீவிய தலையுடன் அமைதியாக நின்றிருந்தான் அபி..

அப்பொழுது அபியின் நண்பன் ஒருவன் "டேய்ய் அங்க பாருங்களேன் ஒரு கருப்பட்டியே இன்னொரு கருப்பட்டியை சாப்பிடுகிறதே "என்று மாநிறமாக தர்ஷினியை பார்த்து ஏதோ பெரிய காமெடி என நினைத்து சொல்ல அப்பொழுதே அந்த பள்ளிக்கு புதியதாய் ஆறாவது சேர வந்திருக்கும் தர்ஷினியோ அவர்கள் எதிர்பாராது அவர்கள் அருகில் வந்தவள் "யார்டா என்னை கருப்பட்டினு சொன்னது.. "
என அதட்ட அவளது அதட்டலில் மற்றவர்கள் ஓடிப்போக அபி மட்டும் திமிராய் நின்றிருந்தான்..வந்தததுமே அவளது அதிகாரம் தூள் பறக்க நின்றிருப்பதைப் பார்த்து அவனுக்கே கொஞ்சம் பயம் தோன்றினாலும் கெத்தாக நின்றிருந்தான்.

தர்ஷு இவன் தான் தன்னை கேலி செய்தது என நினைத்து" யாரப் பார்த்துடா கருப்பட்டி சொன்ன.. நீ தான்டா மூட்டைப்பூச்சி "என்று சொல்ல
அபியோ "எது மூட்டைப்பூச்சியா போடி கருப்பட்டி "என்று கத்த, தன்னை கருப்பு என்கிற காரணத்தால்தான் அவ்வாறு சொல்கிறான் என நினைத்தவள்
கோபத்தில் கீழிருந்த கல்லை எடுத்து அவன் தலையில் அடித்துவிட்டு சிட்டாய் பறந்து சென்றுவிட்டாள் .அவள் அடித்த கல் சிறிதாயினும் கூரான முனையை கொண்டிருந்ததால் அது அவன் நெற்றியை பதம்பார்க்க "ஆஹ் "என்று கத்தியபடி தன் நெற்றியை மறைத்தவன் அவள் சென்ற திசையை வன்மத்துடன் வெறித்தான்.

இவ்வாறு நடைபெற்ற தங்கள் முதல் சந்திப்பை நினைத்து பார்த்தவர்களின் இதழ்கள் சிரிப்பில் விரிய ஒரு நிமிடம் இருவர் கண்களும் ஒருவர் பார்வையோடு மற்றொருவர் பார்வையை கலந்து குத்திட்டு நின்றது .அங்கு வீசிய காற்றில் அபியின் அலை அலையான கேசம் பறக்க அவன் முன்னெற்றியில் இருந்து இன்றும் அவளை பார்த்து சிரித்தது தங்களின் முதல் சந்திப்பின் அடையாளமான நெற்றித் தழும்பு.
அனிச்சையாக அவள் விரல்கள் அவன் தலையை கோத செல்ல சரியாக அந்த நேரத்தில் கீழே " பிரியா " என தனது தந்தை கர்ஜிக்கும் குரல் காதில் கேட்டது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro