உயிரானவன் 4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அழகான இரட்டை பிள்ளைகளை பெற்ற பெருமிதம் ரம்யாவின் முகத்தில் மேலும் பொலிவு சேர்த்தது..

"செல்லம் எவ்ளோ அழகா இருக்கீங்க.." என்று வருண் சொல்ல ரம்யா வெக்கத்துடன் திரும்பி பார்த்தவள் பத்திரகாளி அவதாரம் எடுத்தாள்.. ஏனெனில் அவன் சொன்னது அவனது ஆசை மகளை..

அவன் அருகில் சென்று கட்டிலில் மகளை கொஞ்சி விளையாடியவனின் முதுகில் இரண்டு அடிகள் போட்டாள் ரம்யா.. ஆஆஆஆ என்ற அலறலுடன் அவன் திரும்பி பார்க்க அவனின் துணைவி அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்..

அவளை பார்த்தவன் வந்த சிரிப்பை இதழில் காட்டாமல் மறைத்தவன் அவளை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தினான்.. அவனின் கேள்விக்கு பதில் கூறாமல் அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்..

தலையை வெட்டி நகர நினைக்கும் மனைவியின் கையை பிடித்து இழுத்து அந்த அறையின் பால்கனிக்கு சென்றான்.. அவள் அவனுடன் அமைதியாக சென்றாள்.. அவன் அவளை பின்னால் நின்று அணைத்தான்.. அவள் அமைதியாகவே இருக்க,  "ஓய் என்ன என்மேல கோவமா" என்று மெதுவாக கேட்ட அவள், "ஆமா கோவம்.. கொஞ்சம் கூட என்ன கண்டுக்க மாட்டேங்குறீங்க.. நானும் ஒரு மாசமா பாக்குறேன்.." என்று அவள் குறைபட மெலிதாக சிரித்தான் வருண்..

"மேடம் மட்டும் என்ன சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கீங்களா.. எப்போ பாரு நீ பிஸியாவே இருக்க.. அதுவும் நான் உன் பக்கத்துல வரப்போலாம் உன் பையன் ஒடனே அழ ஆரம்பிக்குறான்.. அவன் தான் எனக்கு முதல் எதிரியா இருப்பான் போல.. என் பொண்ணு மாதிரி அமைதியா இருக்க மாற்றான்.." என்று அவன் சொல்ல, "சும்மா சும்மா என் பையன குறை சொல்லாதீங்க.. உங்க பொண்ணு தான் வேற யாருகிட்டயும் போக்காம என்கிட்டையே இருக்கா.." என்று சொன்னாள் ரம்யா

"ஹ்ம்ம் சரி அத விடு.. என்ன பேர் வைக்க போற" என்று வருண் வினவ அவள் அவனை பார்த்து திரும்பி நின்றுகொண்டு "உங்களுக்கு என்ன நேம் தோணுது" என்று கேட்டாள்.. "ம்ம்ம்ம்ம்ம் ஐஷு நல்லா இருக்கா.. அப்புறம் பையன்க்கு சின்னா.. எனக்கு சும்மா தோணுனத சொன்னேன்.. உனக்கு தோணுன பேர் சொல்லு.. டிசைட் பண்லாம்.." என்றான் வருண்

சிறிது நேரம் யோசித்தவள், "பிரதாப்.. குட்டிமா.." என்று கூறி அவன் முகம் நோக்க அவன் புன்னகையுடன் நின்றான்..

"சரி செர்டிபிகேட்ல பிரதாப் ஐஷு குடுத்துடலாம்.. வீட்ல சின்னா குட்டினு கூப்பிடலாம்.. உனக்கு ஓகேவா" என்று கேட்டான்.. "அச்சோ என்னங்க நீங்க.. நான் சும்மா தோணுனத சொல்லிட்டு இருக்கேன்.. அத்தை மாமாக்கு புடிக்கணும்ல" என்று அவள் கேட்க அவன் அவளின் தோளில் கை போட்டுகொண்டு "அவங்க உங்க இஷ்டம்னு எப்போவோ சொல்லிட்டாங்க.. அதுனால உனக்கு நான் இப்போ சொன்ன டீல் ஓகேவானு மட்டும் யோசி.. உங்கிட்ட இருக்க குட்டி மூளைய ரொம்ப யூஸ் பண்ணாத டா செல்லம்.." என்று அவன் கூற அவனை பொய்யாக முறைத்தாள் ரம்யா..

"கோவமா பாத்தா கூட அழகு தான்" என்று அவளை நெருங்க அழுகை குரல் கேட்க பின்னே நகர்ந்தான்..  "ஹ்ம்ம் அதான பார்த்தேன்.. இவ்ளோ நேரம் எப்படி இவன் சும்மா இருந்தானு" என்று வருண் சொல்ல "இப்போ அழுதது உங்க பொண்ணு" என்று ரம்யா சிரிக்க, "வர வர அவளும் எனக்கு எதிரியா வரா போல" என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அவனின் மகளை தூக்கினான்..

நாட்கள் செல்ல பெயர் சூட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது.. அவர்களின் விருப்பப்படி பெயர் வைத்து மகிழ்ந்தனர்..

அந்த விழாவிற்கு கௌஷிகா மற்றும் ஷாலினியை அழைத்திருந்தான் பாலா.. அவர்கள் வருகையின் பொழுது அவனுக்கு முன் சென்று வரவேற்றாள் ரம்யா.. அவளை பார்த்து முழித்தான் பாலா.. அவளோ, "இவங்க தான் நம்ம குழந்தைங்க பொறக்குறப்போ என்கூட இருந்து என் கையை பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க.. வலில நான் இருந்தப்போ இவங்க கண்ணுல கண்ணீர் பார்த்தேன்" என்றாள் வருணிடம்.. அதனை பாலாவும் கேட்டுக்கொண்டு இருந்தான்..

"ஓ இவ கிட்ட அன்னைக்கு தான் சொன்னேன்.. பிரசவம் பாக்குறப்போ உனக்கு தைரியம் வேணும்.. அதுனால படிக்குறப்போவே நம்ம ஹாஸ்பிடல்ல நடக்குற பிரசவத்தை பார்த்துக்கோ அப்படினு.. அதுக்கு அவ உன் பிரசவம் மட்டும் தான் பார்த்தா.. என்கிட்ட வந்து ஒரே அழுகை.. நம்ம அம்மாவும் இப்படி தான கஷ்டப்பட்டுருப்பாங்க.. அப்டி இப்படினு ஒரே புலம்பல்.." என்று மெலிதாக சிரித்தாள் கௌஷிகா.. 

"ஹ்ம்ம்.. அவ்ளோ வலிலயும் அழுதுட்டே சிரிச்சாங்க.. அவங்க கண்கள் வலியும் குழந்தை நல்லபடியா உலகத்துக்கு குடுத்துடனும்னு ஒரு போராட்டமும் தன்னால் அத செய்ய இயலுமானு பயமும் பெற்று எடுக்க போற சந்தோஷம்னு எல்லா உணர்வும் தெரிஞ்சுது.. அதுல நான் கொஞ்சம் எமோஷனல் ஆகி அழுதுட்டேன்.." என்றாள் ஷாலினி..

அவளை நின்று ரசித்துக்கொண்டு இருந்தான் பாலா.. அவள் தன்னை யாரோ பார்ப்பது உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே பாலா அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நிற்க அவனின் கண்களை சந்திக்க முடியாமல் குனிந்துகொண்டாள் ஷாலினி..

அனைவரும் சுற்றி இருக்க விழா இனிதாக முடிந்தது..

💕💕

நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் செல்ல ஒரு வருடம் உருண்டு ஓடியது.. வருண் ரம்யா மற்றும் குழந்தைகள் அவர்களின் குடியிருப்பிற்கு வந்து 8 மாதங்கள் ஆகின..

ரம்யா தூங்கிக்கொண்டு இருக்க பிரதாப் விழித்துக்கொண்டான்.. அதனை கவனித்த வருண் அவனை சென்று தூக்கி, "சின்னா.. அம்மா பாவம் டா.. இப்போ நீ அழுத அவ எந்திரிச்சுருவா.. நைட்ம் தூங்க விடாம ரெண்டு பேரும் அலப்பறை பண்றீங்க.. இப்போவது அவ தூங்கட்டும் டா.. அப்படி உன்ன பாத்துக்குறேன்.." என்று சொல்லிக்கொண்டே வெளியில் கொண்டு செல்ல அவனின் அருமை மகள் அழுகையை தொடங்கினாள்..

சட்டென்று உள்ளே சென்றவன் அவளையும் ஒரு கையில் தூக்கி வெளியில் வந்தான்.. இரு பக்கங்களிலும் குழந்தையை வைத்துக்கொண்டு பாவமாக நின்றவனை பார்த்த ஜெகதீஸ் மற்றும் திலிப் சிரிக்க தொடங்கினர்.. "டேய் சிரிக்காம வாங்குங்க டா" என்று வருண் சொல்ல இருவரும் ஒரு ஒரு குழந்தையை வாங்கிக்கொண்டனர்..

ஜெகதீஷிடம் சென்ற ஐஷு, "ம்ம்ம்ம்மா ம்ம்ம்ம்மா" என்று சொல்ல, "ஆஹா என் மருமகளுக்கு பசிக்குதா.. மம்மம்  வேணுமா.." என்று அவன் கேட்க குழந்தை அழகாக சிரித்தது.. திலிப் கையில் இருந்த பிரதாப் அவன் மேலே ஈரம் பண்ண, "டேய் நல்லவனே என்கிட்ட வந்தா மட்டும் தான் உனக்கு எல்லாம் வருமா டா" என்று சொல்ல மற்ற இருவரும் சிரித்தனர்.. அவர்களின் சிரிப்பை கண்ட குழந்தைகள் இருவரும் சிரிக்க அவர்களை ரசித்தான் வருண்..

சமையல் அறையில் இருந்து ஒரு கப்புடன் வெளியில் வந்த மீரா.. அதனை வாங்கி வருண் இருவருக்கும் ஊட்டி விட கையில் பால்பாட்டிலுடன் வெளியில் வந்தாள் பிரியா.. அதனை இரு குழந்தைகளின் கையில் கொடுத்ததும் இருவரும் தரையில் இருங்கி அமர்ந்து சமத்தாய் அருந்தினர்..

அவர்கள் இருவரும் தவழ்ந்துக்கொண்டே பொம்மைகளுடன் விளையாட  தொடங்க வருண் சோபாவில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தான்..

"என்ன டா மச்சி ரொம்ப யோசனையில இருக்க" என்று ஜெகதீஸ் கேட்க, "ஹ்ம்ம் நாம நெனச்ச மாதிரியே நாம மால் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு இடம் கிடைச்சுருக்கு டா.. அமெரிக்கால.. கட்டிடம் கட்டிட்டு இருகாங்க.. நம்மளுக்கு இங்க இருக்க மால்ல எல்லாமே இருக்கவும் நம்ம பிரென்ச் அங்க ஓபன் பண்லாம்னு அவங்களே தேடி வந்து கேக்குறாங்க.. நம்ம வாடகை குடுக்குற மாதிரி இருக்கும்.. அப்றம் கொஞ்சம் ஷேர்.. இப்போ அது காஸ்டலியா இருந்தாலும் அது நல்ல இடம் டா.. அதான் ஓகே பண்லாமானு யோசிச்சுட்டு இருக்கேன்.." என்று வருண் கூற மற்ற நால்வரும் சந்தோசமாக ஹேய்ய் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

"உனக்கு நல்ல இடம்னு தோணுனா செஞ்சுடலாம் டா.. அதுக்கு ஏன் இப்படி சோகமா வச்சுருக்க" என்று ஜெகதீஸ் கேட்க, "ஹ்ம்ம் எல்லாமே ஓகே தான்.. இப்போ கட்டிட்டு இருகாங்க.. நமக்கு அந்த இடம் ஓகேவா இருந்த டீல் ஓகே அபப்டினா அங்க போய் எப்படி எப்படி நமக்கு ஏத்த மாதிரி கட்டலாம்னு ஐடியா குடுத்துட்டு வரணும்.. அப்றம் ஒரு 3 மாசத்துல ரெடி ஆயிடும்.."என்றான் வருண்

"அப்போ யாரு எப்போ அங்க போகணும்.. விசா எடுக்கணும்னா கொஞ்சம் நாள் ஆகும்ல" என்று திலிப் கேட்க, "ஆனா நாம இந்த வாரமே யாராவது போனும் டா.. என்கிட்ட விசா இருக்கு.." என்று அவன் சொல்ல, "அப்போ நீ போய்ட்டு வரியா" என்று வினவினான் ஜெகதீஸ்..

"அது......" என்று வருண் தயங்க, "போய்ட்டு வாங்க.. செம்ம சான்ஸ்.. மிஸ் பண்ணிட கூடாது" என்றாள் ரம்யா.. குரல் வந்த திசையை திரும்பி அனைவரும் பார்க்க அங்கே சிறிய புன்னகையுடன் நின்றாள் ரம்யா.. அவளின் அருகில் காபியுடன் சென்று அவளிடம் நீட்டினாள் மீரா..

"தேங்க்ஸ் டியர்.." என்று சொல்லி மீராவின் முறைப்பை பதிலாக பெற்றுக்கொண்டாள் ரம்யா.. அனைவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.. ஏனோ வருண் மனதில் அவளையும் குழந்தைகளையும் விட்டு செல்ல மனமே வரவில்லை.. ஆனால் வேறு வழி இல்லாததால் அவனும் அவர்களிடம் தான் செல்வதாக சொல்லிவிட்டு அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்..

அவன் சென்றதும், "அவனுக்கு மனசு வரல எல்லாரையும் விட்டுட்டு போக.. எனக்கு விசா இருந்திருந்தா கண்டிப்பா அவனுக்காக நான் போயிருப்பேன்.. ஆனா என்கிட்ட இல்லையே" என்று சற்று வருத்தத்துடன் திலிப் கூற அவன் அருகில் சென்ற ரம்யா, "ப்ரோ உண்மையா சொல்லு அதுக்காக போக நெனைக்குறியா இல்ல வெள்ளக்கார பிகுர் எல்லாம் பாத்து சைட் அடிக்கணும்னு அன்னைக்கு என்கிட்ட சொன்னியே அதுக்காக போறியா" என்று கேட்டாள்..

அவள் அனைவரின் வருத்தமான நிலைமையை மாற்றவே இவ்வாறு பேசுகிறாள் என்பதை புரிந்துகொண்ட திலிப், "ஹும் உன் புருஷனுக்கு தான் அந்த அதிர்ஷ்டம் எல்லாம்" என்றான்.. அவன் கூறி முடிக்க அவனின் காலில் பஸ் பொம்மை வந்து விழுந்தது.. அவன் நிமிர்ந்து பார்க்க ப்ரியாவின் கையில் பிரதாப் இருந்தான்.. "ஹ்ம்ம் அப்படியே அம்மா மாதிரி" என்று சொல்லி அவனின் அருகில் சென்று அவனின் கன்னத்தில் கிள்ளி கொஞ்சினான் ஜெகதீஸ்..

ஜெகதீஸ் பிரதாப்பை கொஞ்ச அவனின் காலை பிடித்து யாரோ இழுப்பது போல தோன்ற குனிந்து பார்த்தான்.. கீழே ஐஷு அவனின் காலை பிடித்திருந்தாள்.. அவளை தூக்கியவன், "உன்னையும் கொஞ்சுவேன் டா பட்டுகுட்டி" என்று சொல்லி அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தான்..

திலிப் ரம்யாவை பார்த்து, "என்ன மூட்ட பூச்சி கண்ணுலாம் கலங்குற மாதிரி இருக்கு.. அங்க ஆல்ரெடி ஒருத்தன் அழுதுட்டு இருப்பான்.. அவன சமாதானம் பண்ணிட்டு வா" என்று சொல்ல ரம்யா அமைதியாக அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.. வருண் அமைதியாக அமர்ந்து இருக்க அவன் அருகில் சென்று அமர்ந்தவள் அவனின் தோளில் சாய்ந்தாள்..

"போட்டுமா" என்று வருண் அவளின் தலையை வருடிக்கொண்டே கேட்க வேண்டாம் என்று சொல்ல துடித்த மனதை அடக்கி, "ம்ம்ம்" என்றாள் ரம்யா.. மீண்டும் சில நேரம் அமைதியாக இருந்தனர் இருவரும்.. இந்த மூன்று வருடத்தில் இருவரும் ஒரு நாள் முழுதாக பார்க்காமல் இருந்தது இல்லை.. இந்த சிறிய பிரிவு அவர்களின் மனதை பாதித்தது..

"எவ்ளோ நாள்" என்று ரம்யா கேட்க, "ஒரு வாரம் அங்க இருக்குற மாதிரி இருக்கும்.. முடிஞ்சா அளவுக்கு 4, 5 நாள்குள்ள முடிச்சுட்டு வந்துறேன்.." என்றான்.. "ம்ம்ம்" என்றாள் ரம்யா.. அவளின் முகத்தை நிமிர்த்தி கண்களை பார்த்தவன், அவள் கண்கள் காளங்கி இருப்பதை பார்த்து, "நான் போணுமா.. வேணாம் டா நான் போகல" என்றான்..

சட்டென்று கண்களை மூடி கண்ணீரை உள்வாங்கிக்கொண்டு, "போய்ட்டு வாங்க.. நல்லா டீல்னு சொன்னிங்களே.. நீங்க போய்ட்டு வந்தா எல்லாருக்கும் நல்லது.. விசா மத்தவங்களுக்கு இல்ல.. இருந்துருந்தா யாரையாவது அனுப்பியிருக்கலாம்.. பரவாயில்ல.. நாமலும் நம்ம குட்டிஸ்காக சம்பாதிக்கணும்.. இப்போவே சம்பாதிச்சுட்டா அப்புறம் ஹாப்பியா இருக்கலாம்" என்று சிரிப்புடன் கூறி கண் சிமிட்டினாள்..

அவளை பார்த்து புன்னகைத்தவன் சரி என்று தலையை ஆட்டிவிட்டு வெளியில் வந்து அனைவரிடமும் பயணத்தை பேசிக்கொண்டு இருந்தான்.. ( இந்த பயணத்தினால் அவன் பெற போகும் துயரத்தை முன்னாடியே அறிய வாய்ப்பில்லை தான்.. )😝

💕💕

பயணம் செல்லும் நாள் வந்தது.. இன்னும் 7 மணி நேரத்தில் விமானம் கிளம்ப உள்ளது.. சென்னை விமான நிலையம் செல்ல வேண்டும்.. வருண் வாடிய முகத்துடன் அவன் அறையில் அமர்ந்து இருந்தான்.. ரம்யா அவனின் உடைமைகள் சரியாக எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.. அவர்களின் மகள் மகன் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்தனர்..

அவனின் முகத்தை பார்த்து அவன் அருகில் சென்றவள் அவனின் அருகில் அமர்ந்து அவனின் முகத்தை தன் பக்கம் திருப்பி, "என்னங்க இப்படி உக்காந்து இருக்கீங்க.. எல்லாரும் வந்துட்டாங்க.. வெளில நமக்காக தான வெயிட் பன்றாங்க.. இப்படி ஸ்கூலுக்கு முதல் நாள் போற பாப்பா மாதிரி மூஞ்சிய வச்சிட்டு இருக்கீங்க.. என்ன ஆச்சு என் செல்ல மாம்ஸ்க்கு" என்று கொஞ்சினாள் ரம்யா..

அவன் அமைதியாகவே இருக்க அவள் எழுந்து குழந்தைகள் இருவரையும் தூக்கிக்கொண்டு ஹாலில் அமர்ந்து இருந்த பிரியா மீராவிடம் குடுத்தாள்.. திலிப், "எங்க வருண்" என்று வினவ, "ரெண்டு குழந்தைய நம்ம கிட்ட விட்டுட்டு அந்த மீசை வளர்ந்த குழந்தைய கெஞ்சி கொஞ்சி சமாதானம் பண்ண போறாங்க மேம்" என்று கிண்டல் செய்தாள் பிரியா..

ரம்யா வெக்கம் வர, "ஹயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இருங்க வர வைக்குறேன்.." என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.. அவன் அதே போல அமர்ந்து இருக்க அவனின் மடியில் சென்று அமர்ந்தவள் அவனை அணைத்துக்கொண்டாள்.. அவளின் அணைப்பை உணர்ந்தவன் மேலும் அவளை இறுகி அணைத்துக்கொண்டான்.. இருவர் கண்களும் கலங்கி இருந்தது..

ரம்யாவின் கண்ணீர் வருணின் சட்டையை நனைத்து அவனின் உடலில் பட சட்டென அவளை விளக்கி அவளின் முகம் பார்த்தான்.. அவளோ தனது பார்வையை தாழ்த்தி அமைதியாக இருந்தாள்.. "ரம்யா ஏன்னு தெரியல.. எனக்கு போகவே கஷ்டமா பயமா இருக்கு" என்றான் வருண் வலியுடன்..

"அப்படிலாம் சொல்லாதீங்க.. நான் தான் சொல்லிருக்கேன்ல.. சமத்தா போய்ட்டு சீக்கிரமா வேலைய முடிச்சுட்டு ஓடி வந்துருங்கனு" என்று சிறிய புன்னகையுடன் சொன்னாள்.. (அவன் அடித்து பிடித்து அவளுக்காக இரண்டே நாட்களில் ஓடி வருவான் என்பதை அவள் இப்போது அரியமாட்டாள்.. அவனிற்கு அது தெரிய வாய்ப்பில்லை)

"ஹ்ம்ம் பத்திரமா இரு.. குழந்தைகள பாத்துக்கோ.. நீயும் ஒடம்ப பாத்துக்கோ.. எப்போவும் மீரா பிரியா இங்க வந்துருவாங்க.. அவங்க கூடவே இரு.. வெளில போணும்னா ஜெகதீஸ் திலிப் யாரையாவது கூட்டிட்டு போ.. தனியா எங்கையும் போக கூடாது.. கவனமா இருக்கனும்" என்று அவன் சொல்ல சொல்ல தலையை ஆட்டிக்கொண்டே அவள் இருக்க அவளை அணைத்து, "உன் குழந்தைகளோட சேந்து என்னோட முதல் குழந்தையையும் பத்திரமா பாத்துக்கோ.. மிஸ் யூ" என்று சொல்லி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்..

அவளும், "நானும் நானும் மிஸ் யூ மிஸ் யூ" என்று சொல்லி அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.. சிறிது நேரத்தில் இருவரும் வெளியில் வர வருண் சின்னா குட்டி இருவரையும் தூக்கி கொஞ்சிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.. கண்ணாடி வழியாக ரம்யாவை பார்த்தவன், "கவனம் ரம்யா.. ஜாக்கிரதை.. அப்பப்போ கால் பண்ணு.. பேசணும்னு தோணுன ஒடனே கால் பண்ணு எதையும் யோசிக்காத.." என்று பல முறை கூறி விட்டு விடைபெற்றான்..

💕💕

வருண் சென்று இரண்டு நாட்கள் சென்றிருக்க ஜெகதீஸ் வீட்டிற்கு வந்ததும், "டேய் அண்ணா என்ன ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறியா" என்று அவள் கேட்க அவன் பதற்றத்துடன், "என்ன மா என்ன ஆச்சு" என்று வினவ, "பிரதாப் ஐஷு ரெண்டு பேருக்குமே ரொம்ப சளி அண்ணா.. அந்த ஹாஸ்பிடல் போய் அவங்களுக்கு என்ன மாத்திரை ஒத்துக்கும் எந்த சிறப் குடுக்கலாம்னு கேட்டுட்டு வந்துடலாம்.. அதுக்கு தான்" என்றதும் தான் அமைதியானான் அவன்..

"ஹ்ம்ம் சரி வா போலாம்" என்று அவளை தனது காரில் அழைத்து சென்றான்.. அங்கே சென்று மருத்துவரை பார்த்து ஆலோசனை கேட்டுவிட்டு வெளியே வந்தவள் சற்று தொலைவில் மருத்துவமனையின் எதிரில் சாலை ஓரமாக இருந்த பூங்காவிற்குள் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்த ஷாலினியை பார்த்தவள் அவளின் அருகில் சென்றாள்..

அவளை கவனிக்காமல் நிற்கவும் ஷாலினியின் தோளை தொட்டு சுயநினைவிற்கு கொண்டு வந்தாள்.. அவள் சட்டென்று திரும்பி பார்க்க அவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் ரம்யா..  அவளும் முயன்று புன்னகைத்து வைத்தாள்..

"ஹாய் என்ன ஒரு மாதிரி இருக்கீங்க" என்று ரம்யா கேட்க, "ஹான் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க எங்க இங்க.." என்று வினவினாள் ஷாலினி.. "சும்மா டாக்டர் பாக்க வந்தேன்.. சரி நான் நேராவே கேக்குறேன்.. உங்களுக்கும் பாலா அண்ணாக்கும் என்ன பிரச்சனை" என்றாள் ரம்யா..

இதனை எதிர்பார்க்காத ஷாலினி அவளை பார்த்து முழிக்க அவள், "எனக்கு தெரியும் நீங்களும் அண்ணாவும் விரும்புறீங்கன்னு.. குழந்தைகளுக்கு பேர் வைக்குற விழாலேயே நான் பார்த்துட்டேன்.. இப்போல்லாம் ஒழுங்கா பேசிக்குறது இல்லையா.. போன தடவை அண்ணா வந்தப்போவே ஏதோ மாதிரி இருந்தாங்க.. என்ன ஆச்சு" என்று ரம்யா வினவ அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள் ஷாலினி..

சிறிது நேரம் பேசிவிட்டு ரம்யா திரும்ப சாலை ஓரம் இவர்கள் பேசியதை கேட்டு தன்னை மறந்து பின்னே நடந்துகொண்டு இருந்த பாலாவை கண்ண்டாள்.. அவனை ஒரு லாரி இடிப்பது போல வர, சட்டென்று ஓடி அவனை இழுத்து வேறு புறம் தள்ளிவிட லாரி அவர்களை தாண்டி சென்றது..

அதனை பார்த்துவிட்டு இருவரும் நலம் என்பதை உணர்ந்து மறுபுறம் திரும்ப அவளை வேகமாக வந்த கார் அவளை இடித்தது ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது.. கண் இமைக்கும் நேரத்தில் இது நடக்க ரம்யாவை எதிர்பார்த்து நின்ற ஜெகதீஸ், பாலா மற்றும் ஷாலினி அதனை கவனித்து சிலையென நின்றனர்.

ரத்தம் வழிய பேச்சு மூச்சின்றி கிடந்தாள் ரம்யா.........

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro