உறவுகள் தொடர்கதை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அழைப்பு மணி ஒலித்துக் கொண்டே இருக்க " கீத்து யாருன்னு பாருடா " என சமையலறையிலிருந்து அவளது தாயார் சுமதி குரல் கொடுக்க, சாளரத்தின் வழியே யாரென்று எட்டிப்  பார்த்தவள் முகத்தை சுழித்து
" மாம்.. நாடே கொரானவால வீட்ல அடங்கியிருக்கு.. உந்தொம்பிக்கு மட்டும் அதெல்லாம் தெரியாதா.. வந்துட்டாரு அந்தப் பட்டிக்காட்டுலருந்து ஓட்டை டிவிஎஸ்லயே.... எப்பவும் போல அஞ்சோ பத்து கொடுத்து வாசல்லயே வெச்சு அனுப்பிருமா.. ஐம்பத்தைந்து கிலோமீட்டர் தாண்டி வந்தவரு அந்த வைரசையும் பாக்கெட்ல போட்டு கொண்டாந்துருக்க போறாரு.. பணம் வேணும்னு கேட்ருந்தா அக்கவுண்ட்ல போட்டுவிட்ருக்கலாம்.. இங்க வந்து நம்ம உசிற வாங்கறாங்க.. அப்டியே பார்த்துட்டா மட்டும் ராசாத்தி, மகாலட்சுமினு காக்கா பிடிக்க வேண்டியது.. இங்க வந்து எத்தனை நாள் டேரா போட போறாங்களோ..
" என்று உரக்கப் புலம்பியவள் கதவைக் கூட திறக்காமல் உள்ளே சென்றுவிட, பெற்ற மகள் தனது தமையனைப் பற்றி பேசியதில் நொந்து போனவர் அவள் பேச்சை மீறி தம்பியை வீட்டுக்குள் எப்படி வரவிடுவது என இருதலைக் கொல்லியாய் தவித்தவாரே வராத புன்னகையுடன் கதவைத் திறந்தார்.

வாசலில், துண்டை முகக் கவசமாய் வெறும் கண்கள் மட்டும் தெரியுமாறு கட்டியிருந்த மருது, நாப்பதுகளின் இறுதியில் இருந்தார்.

அரிசி மூட்டையை இறக்கி வைத்துவிட்டு
" சுமிக்கா நான்னு பல மைல்லு கடந்து வாரேன்.. பக்கத்துல வராதீக....பத்தடி எட்டியே இருங்க..எப்படிக்கா இருக்காக அத்தானும் கீத்துமாவும்? " என்றவர்,
தான் கொண்டு வந்த காய்கறி மூட்டையையும் நன்றாக வெயில் படுமாறு வைத்துவிட்டு

" செய்தியில இன்னும் ஒரு  மாசத்துக்கு ஊட்டுக்குள்ளயே இருக்கோனும்.. நாளையிலிருந்து லாரி பஸ்ஸு எதும்
ஓடாதுன்னு
என்னென்மோ சொல்றாகக்கா..அதும் கொரானா டவுன்லதான் அதிகமா பரவுதாமே..மளிகைக் கடைலாம் இருக்குமோ என்னமோ.. அங்கன உங்களையெலாம் நினைச்சு ஒரே விசனமாயிடுச்சுக்கா.. அதான் ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான்.. மஞ்சள், நம்மக்காட்டுப் புளி, வத்தல், எலுமிச்சம்பழம், காய்கறின்னு என்னால முடிஞ்சத கொண்டாந்துட்டேன்.. இதெல்லாம் சாயங்கால வரைக்கும் வெளியவே இருக்கட்டும்.. அதென்னமோ வைரஸ்ஸு வெயில்ல இருந்தா செத்து போயிரும்னு சொல்றாக, எனக்குத்தேன் ஒன்னுமே புரியல..நம்ம கீத்துமா மாறி பெரிய படிப்பு படிச்சவுகளுக்குத் தான் புரியும் " என்றவன் வாசலிலேயே நிற்க,

" உள்ளாராவாயா "

" வேணாம்க்கா.. பொழுதுக்குள்ள போவலின்னா வரும்போது போலிஸ்காரய்யாட்ட வாங்குன ரெண்டு அடி, நாலு அடியா ஆயிடுனும்னு  அவுக சொல்லித்தான் அனுப்புனாக.. நான் வாரேன் " என்றவர் வாசற்கதவையே பார்த்திருந்தார்.

தனக்கென குடும்பம் வந்த போதிலும் இன்றும் மாறாத
தனது தம்பியின் பாசத்தைக் கண்டு கண்ணீர் வடித்தவர் " மருது பணத்தேவைக்கெலாம் என்ன பண்ற..எதும் வேணுமா? " என்க,

" அடப்போக்கா..அந்தப் பட்டிக்காட்டுல சோத்துக்கு என்ன பஞ்சம்.. நாங்க நீச்சத்தண்ணி குடிச்சுகூட பொழச்சுக்குவோம்..எனக்கொரு உதவி மட்டும் பண்றீகளா? "

" என்னய்யா ? "

" அத்தானையும் பாப்பாவையும் கூப்றியளா.. எட்ட நின்னு பாத்துட்டு போயிறேன்" என்றார் வெள்ளந்தியாக..

படித்த மேதை கீதாவும்  பாசம் கொண்ட பாமரனின் அன்பைக் கண்டு,
வந்தாள் கையில் முகக்கவசங்களும் கிருமிநாசினியையும் அவருக்கு கொடுப்பதற்காக..உறவுகள் என்றும்
தொடர்கதைதான்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro