பகுதி 04

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அவளை அங்கே அவன் எதிர்பார்க்கவே இல்லை. வேகமாக நடந்தவன் அவள் முன் சென்று நின்றான்.

அனு !!??

ஆஹ்! அருண் ...

நீ எப்போ சென்னை வந்த? அதுவும் இந்ந நேரத்துல Beachல தனியா என்ன பண்ற? அம்மா வரல?

எந்த உற்சாகமும் இன்றி எழுந்து நின்றவள், மௌனமாய் அவன் முகம் பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்தது.

அவள் கண்ணீரின் அர்த்தம் புரியாமல் அவளை கேள்வியாய் பார்த்தான் அவன். எப்போதும் குறும்பாய் பேசி சிரிக்கும் அனுவைத்தான் அவனுக்கு தெரியும் .

அனு ... என்னாச்சு ???

"அம்மா இல்ல, அருண் " என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் விம்மினாள். ஆறுதலாய் அவள் தோள் பற்றினான்.

நெஞ்சு வலின்னு Admit பண்ணோம், Admit பண்ணி ரெண்டாவது நாளே ....

கண்ணீர் இமைகளைத் தாண்டி கன்னத்தில் கோடு போட்டது. நீண்ட நேரம் அழுதாள். அருணும் எதுவும் சொல்லத் தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவளே அழுது ஓயும் வரை அவன் எதுவும் பேசவில்லை.

ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

Late ஆகிடுச்சுடா, நான் வரேன்.

Hey இரு நா Drop பண்றேன் ... நீ இப்ப எங்க தங்கியிருக்க?

மாமா வீட்ல. வந்து 10 நாள் ஆகுது.

சரி, வா போலாம்.

அவளை அவள் மாமா வீட்டில் இறக்கி விட்டான்.

Hey, Phone number குடு, நா அப்பறமா Call பண்றேன்.

வேறெதும் பேசாமல் Mobile number ஐ அவனிடம் ஒப்புவித்தாள்.

Number ஐ Save செய்து கொண்டவன் அவளிடம் சொல்லி விட்டு அவன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro