🙈🙉🙊 சிந்தனை ஒலி 🔊

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சிந்தனையின் ஒலி (Sound of Thought)


நம்மில் பலர் மற்றவர்களுக்கு ஆலோசனை
வழங்குவது உண்டு ஏனென்றால் நாம்
சரியாக கூறுகின்றோம் என்ற நம்பிக்கை
தனக்குள்ளே ஏற்படுவதனால்....



நாம் கூறிய வார்த்தைகளை மற்றவர்
நம்மிடத்தில் கூறுகையில் மட்டும்
ஏனோ குருதி கொதித்தெழுகின்றது...



ஏன் என்று தாங்கள் என்றாவது உணர்ந்தது
உண்டோ, இல்லையேல் அதற்கான காரணம்
அறிய முற்பட்டது உண்டோ பலர் அதை
பற்றி சிந்தித்ததே இல்லையே...



மனிதனால் முடியாத சில விஷயங்களில் ஒன்று
உச்சரித்த வார்த்தைகளை பெற முடியாது
அவ்வாறு பெறமுடியாத ஒன்றில் நாம் ஏன்
சிந்திக்காமல் போகின்றோம்...



நாம் உச்சரிக்கும் வார்த்தைகளில் மிகவும்
கவனம் என்பது அதிகமாக வேண்டும்
ஏனெனில் தான் கூறிய வார்த்தைகள்
தன்னிடமே சில நேரங்களில் பிரதிபலிக்கலாம்...



சிலர் சிந்தனைகளில் நாம் நல்ல விதைகளை
விதைக்கும் தருணத்தில் தானும் அவ்வாறு
நடந்திட வேண்டும் என்பதை மனதினில்
பதியவைத்து கொள்ள வேண்டும்....



நமது எண்ணங்களின் வெளிப்பாடு ஆனது
நம்மை முன்மாதிரியாக காண்பிக்க வேண்டும்
அது அன்பாகவும் இருக்கலாம் நல்ல வித
கருத்துக்கள் ஆகவும் இருக்கலாம்....



யாரும் யாரையும் பின்பற்ற வேண்டிய
கட்டாயம் என்பது இருக்கக் கூடாது
தனக்கென்று ஒரு தனித்திறனை ஏற்று
தன்னை மேம்பத்திக்கொள்ள வேண்டும்
அனுபவம் என்றுமே நம்மை மேன்மையடைய செய்யும்....



உனக்கென்று எழுதப்பட்ட ஒன்று உன்னை
அடைந்தே தீரும் என்பதை மற்றும் மறவாதீர்
ஆனால் அவைகள் எப்பொழுது என்று காலம் ஒன்றே
தீர்மானிக்கும் அதுவரை பொறுமை காத்திருங்கள்...



வாழ்க்கை பிரகாசமாதே சிந்தித்து செய்யலாற்றுகையில்

சிந்தித்து செயலாற்றுங்கள்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro