📚 ஞானம் 💻

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வாழ்க்கையில் நாம் பல்வேறு நிகழ்வுகளை நாம் பெற்றுக்கொண்டே இருக்கின்றோம், அவை ஏன் என்று நாம் சிந்த்ததுண்டோ....


நிகழ்வுகள் ஆனது நம் வாழ்வினில் ஒன்றை கற்பிக்கவே நடைபெறுகின்றன என்பதை நாம் அறியாதது ஏனோ....


ஆசை, இச்சை இவைகளில் இருந்தது விடுபட நாம் ஞானம் என்ற ஒன்றை அடைத்தால் மட்டுமே நாம் அவைகளில் இருந்து மீள முடியும்....


ஆசைகொள்ளா மனிதன் உண்டோ என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும், மனிதன் ஆனவன் இதன் மூலமாகவே இறைவனால் சோதிக்கப்படுகிறான்....


சிறு சிறு விருப்பங்கள் மீது இச்சை கொண்டு தடுமாற்றம் கொண்டவன் பேராசை என்னும் ஆழி கடலினுள் மூழ்கிப்போகிறான்....


ஆசைகள் என்பது இயல்பான ஒன்று தான் ஆனால் அவற்றால் ஏற்படும் விளைவுகளில் இருந்தே ஞானம் என்னும் அறிவை பெறுகின்றோம்....


எதிரிகளின் மூலமாக கூட சில நேரங்களில் பாடம் கற்றுக்கொண்டு, அவைகளை ஏற்றுக்கொள்பவன் ஆனவன் ஞானத்தை பெறுகின்றான்....


அன்பும் அறமும் நட்பும் காதலும் நமக்கு நன்மை என்ற ஒன்றையே கற்றுக்கொடுக்குமேயானால், தவறான பாதையும், விரும்பிய விருப்பங்களினால் ஏற்பட்ட விளைவுகளும், வழியில் சந்திக்கும் எதிரிகளும் தான் நமக்கு வாழ்க்கையின் பாடம் அல்லது ஞானத்தை மண்டையில் உரைப்பது போல புகுத்திவிட்டுச் செல்கின்றன....


அனுபவமே சிறந்த பாடம், அந்த அனுபவம் தனக்கு நேரும்போது கிடைப்பது சிறந்த ஞானத்தை கெடுக்கிறது....


ஞானம் ஒன்றே மாற்றம் என்ற ஒன்றை வாழ்வில் ஏற்படுத்திச் செல்லும்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro