💃 புகைப்படம் 📸

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நினைவுகள் பலவிதம் அதில் புகைப்படமும் ஒன்று, மறந்து போன நினைவுகளையும் நினைவுபடுத்தும் ஒன்று தான் புகைப்படம்...


முன்பெல்லாம் புகைப்படம் என்பது அரிதான ஒன்று, அன்றெல்லாம் கூட நீங்கா நினைவுகளாய் புகைப்படம் எடுக்க சென்றதன் நிகழ்வுகள் ஆனது புகைப்படத்தையும் சேர்த்தி அதை எடுக்க சென்றதன் நினைவுகளையும் தரும்....


இன்றோ புகைப்படம் எடுப்பதற்காகவே மக்கள் எங்கு எங்கோ செல்கின்றனர், புகைப்படங்கள் மட்டுமே நினைவுகளாக இருக்கின்றனவே தவிர மனதில் எந்த நினைவுகளும் நிலை இல்லாமலே இருந்து கொண்டு இருக்கின்றது....


காலம் கடந்தாலும், மனிதர்கள் மாறினாலும், கடுமையான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அதே காலத்தில், அதே மனிதர்களிடத்தில், அதே சூழ்நிலைகளுக்கு நம்மை கூட்டிச்செல்ல புகைப்படத்தால் மட்டுமே முடியும்....


புகைப்படங்களை விட கைகளால் தீட்டப்படும் ஓவியங்களுக்கு அழகு மிக அதிகம், ஏனென்றால் அழகில்லாமல் இருப்பதை கூட அழகாக மற்ற கூடிய தன்மை ஓவியத்திற்கு உண்டு என்பதே உண்மை....


எடுத்துக்காட்டாக ஒருவர் கருமை நிறத்தில் இருக்கின்றார் என்றால் அவருக்கு நாம் வெண்மை நிறத்தில் இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனையில் காணலாம், அதை உண்மையாக காண ஓவியம் என்ற பொக்கிஷம் மிக முக்கியமாகிறது....


ஓவியங்கள் புகைப்படங்கள் இவை இரண்டும் வரலாற்றை படைக்கும் தன்மை கொண்டவையே.... இவற்றிற்கு வேறுபாடு உண்டு, ஓவியங்கள் உண்மைத் தன்மையற்றவையே புகைப்படங்கள் அவ்வாறு அல்ல சில நேரங்களில்....


வாழ்க்கையை ஓவியங்களை போல கொண்டு செல்ல வேண்டுமா அல்லது புகைப்படங்கள் போல கொண்டு செல்ல வேண்டுமா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்....


வரலாறு எனும் புத்தகம் மாறலாம், ஆனால் நாம் அனுபவித்த நினைவுகள் மற்றும் காலம் மாறாது அல்லவா...


உண்மையும் பொய்மையும் நாம் கொண்டுள்ள நிலையிலேயே உள்ளது....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro