பாகம் - 9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கடவுளே முதல் நாளே இப்படியா.... என நொந்துகொண்டனர் தோழியர் இருவரும்...

20 நிமிட பயணத்திலேயே சனாவின் குணமும் அவளின் பயமும் அதை விட அவளின் வாளுதனமும் காயூக்கு மிகவும் பிடித்து போனது... இதுவரை அவள் பார்த்த சனாவிர்க்கும் தற்போது பார்க்கும் சனாவிற்கும் ஆயிரம் வேற்றுமை சொல்லிவிடலாம்....

கீழே இறங்கிய இருவரும் நடத்துனரிடம் சென்று கேட்க இன்னும் 10 நிமிட பயணம் மருத்துவ கல்லூரிக்கு என்றார்....

"காயூ நடந்து போவமா...." என்றாள் சனா...

"என்ன கொழுப்பா ஃபர்ஸ்ட் டே லேட்டா போக கூடாது வா ஆட்டோல போகலாம்.... "

''பிளீஸ்.... '' என அவள் கெஞ்ச "முடியவே முடியாது" என்று ஆட்டோ வருகிறதா என பார்த்தாள் ஒன்றும் வர வில்லை.... கல்லூரிக்கு இன்னும் 20 நிமிடம் இருந்தது....

"சரி வா... என் நேரம் ஒரு ஆட்டோ கூட வர மாட்டேங்குது...." என திட்டி கொண்டே நடக்க அவர்களின் அருகில் ஒரு கார் வந்து நின்றது...

இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்க்க பின் கண்ணாடியை திறந்து ஒரு பெண் "மெடிக்கல் கலெஜ்ஜா" என்றார் கையில் இருந்த ID மற்றும் கோட் டை பார்த்து விட்டு....

இருவரும் ம்ம் என்றனர்.

"வாங்க நானும் அங்க தான் போறேன்" என்றார்.

"இல்ல நாங்களே போய்கிறோம்...." என்றாள் சனா...

"நானும் டாக்டர் தான்மா பயம் வேண்டாம்" என்றதும் காரை பார்த்தனர்...

"சனாவா போகலாம் நம்ம ஆன்டி.... தான்" என்றாள் இப்போ காலேஜுக்கு நடக்க வேண்டாம் என்று...

அவளின் பிடிவாதத்தால் முன் சனாவும் பின்னால் காயூவும் அமர்ந்தனர்.

"உன் ப்ரெண்ட் ஏன் கோவமா இருக்கா... உங்க பேரு என்ன...???" என்றார் அப்பெண்...

"என் பேரு காயத்திரி எல்லாரும் காயூனு கூப்பிடுவாங்க... அவ நடந்து போகலாம் இன்னும் 20 நிமிசம் இருக்குனு சொன்ன பட் அவள நா நடக்க விடலை அதுதான் கோவம்... "

"கோவம் எல்லாம் இல்ல அத்தை... நடந்தா சூப்பரா இருக்கும் ரெண்டு பக்கமும் பூ நிறைந்த மரம் எப்பவோ வரும் வண்டிகள்.... பாருடி நாளைக்கு நடராஜா சர்வீஸ் தான்" என கூற அப்பெண் சனாவையே பார்த்தார்...

"சாரி ஆன்டி எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கலை.... அதுதான் அத்தைனு சொன்னேன்... இனிமே சொல்லல... "

"ஏய் நல்லா இருக்கு அப்படியே கூபிடு...." என்றார்.

"நீ அப்படி கூப்பிட்ட நா அம்மான்னு கூப்பிடுவேன்.... ஓகேவா மா...." என்றாள் காயூ அவரை பார்த்து...

"ரெண்டு பேரும் இவ்வளவு வருசமா ப்ரெண்ட்ஸ்ஸா இருக்கீங்க....??" என்றார்.

"பத்து நாளைக்கு முன்னாடி ஒரு 2 மணிநேரம் அப்பறம் இன்னைக்கு ஒரு அறை மணி நேரம் பேசி பழகின ப்ரெண்ட்ஸ்...." என்றாள் சனா.

"ரியலி....??!!!!??" என்றார் அவர்.

"ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் தான் பட் மெடேம் பேசவே மாட்டாங்கமா... என்கிட்ட மட்டும் இல்ல சம் டைம் டீச்சர் கிட்டயும்.... ஆனா இப்ப பாருங்க காலேஜ்ல ரேகிங் பண்ணுவாங்கனு சொன்னா ஐ சூப்பர் அப்படிங்குறா....!!!" என்றாள் காயூ.

"கண்டிப்பா உள்ள பேனா ராகிங் பண்ணுவாங்கலே... என்ன பன்ன போரிங்க... இது இந்த மேடம் வேற அழகா இருக்காங்க கண்டிப்பா புரோபோசல் வரும்... " என்றார் அப்பெண்.

"என்ன அத்தை இன்னும் மேடம்னு சொல்லுறீங்க.... "

"எங்க நீ உன் பேரு என்னனே சொல்லல.... இதுல நாங்க மேடம் அப்படினு சொல்லுறோமா... " என பொய்யாய் கோவாப்பட...

"சாரி அத்தை என் பேரு ஆதிர்சனா.
அப்பறம் யாராச்சும் புரோப்போஸ் பண்ணுனா நா கமிட்டெட் அப்படினு போய் சொல்லிடலாம்... என்ன நல்ல ஐடியா ல..." என்றாள் குறும்பாக....

"பேரு கேட்டா.... என்ன சொல்லுவ..???" என்றாள் காயூ.

சிறிது நேரம் சிந்தித்தவள் "ஏதாச்சும் பேரு சொல்லு.... கரண் தினேஸ் இல்ல இல்ல நல்ல இல்ல.... சக்தி..... சக்தினு சொல்லிடலாம் என் பேரு ஆதி... கண்டிப்பா என்னோட சக்தி எங்கையாட்சும் இருப்பாங்க அதனால சக்தி.... ஓகே தான அத்தை..." என அவரை பார்க்க அவரது முகமோ புன்னகையுடன் இருந்தது...

"நீ எவ்வளவு பேசுற..." என்றார்.. மலைப்பாக....

"அத விடுங்க அத்தை உங்க பேரு என்ன... நீங்க என்ன பண்ணுறீங்க.... ஓ நீங்க டாக்டர்னு சொன்னிங்கல... நா மறந்துட்டேன்..." என சிரிக்க...

"என் பேரு சீத்தா....
Mrs. சீத்தா கிருஸ்ணன் ஐ திங்க் நா உங்க கலெஜோடா டீன்.... " என்றார் சாதாரமாக...

இருவரும் திருட்டு முழி முழிக்க... காலேஜ் வந்தது... காரை விட்டு இறங்கியவர்கள் "சாரி மேம்... நீங்க யாருனு ஏதோ தெரியாம...." என கூற...

"அதெல்லாம் ஒன்னும் இல்லை காலேஜ் குள்ள மட்டும் தான் இந்த மேம் மத்தபடி நா உனக்கு அத்தை தான் அப்பறம் உனக்கு அம்மா தான் சரியா.... எனக்கும் தனியா நல்லாவே இல்ல.... நீங்க ரெண்டு பேரும் என்னோட ப்ரெண்ட்ஸ் ஓகேவா.... இல்ல ஓகே தான்.... " என்றவாறு இருவரின் கன்னத்தையும் தடவி விட்டு சென்றார்.

"அடி பாவி என்னைய இப்படி மாட்டி விட்டுட்டியே..... நா வேற லவ்வர்... அப்படி இப்படின்னு நெறைய பேசுணனே..... என்னைய பத்தி என்ன நினைப்பாங்க...." என்று திட்டி தீர்த்தாள் சனா...

"ஏய் விடுடி... அவுங்க நம்ம ப்ரெண்ட் சோ ஜில் பேபி....'' என அவளது கையை பிடித்து நடக்க....

"ஏன் காயூ இங்க ரேகிங் பண்ணுவாங்க அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரியுமா.... உனக்கே தெரிஞ்ச அக்கா மூலமாகத்தான் தெரியும்... பட் அத்தை இல்ல இல்ல மேடம் தெரிஞ்ச மாறியே போறாங்கலே.... நம்மளால யாருட்டையும் கம்பிளைன் பண்ண முடியாதா...." என சலித்து கொள்ள...

"அடி எரும... இதுதான் உன் பிளான்னா அடி வாங்குவ... இன்னும் இங்கதான் ஃபைவ் இயர்ஸ் படிக்கணும் ஞாபகம் இருக்கட்டும்.... ஒழுங்கா அமைதியா வா...." என்றவள்... ''நல்ல வேளை இவ யாறுகிட்டையும் போய் காம்பிளைன் பண்ணல...." என நினைக்க "ஏன் பண்ணல டீன் கிட்டயே போட்டு குடுத்துருக்கா...." என மனம் எதிர் வாதம் செய்தது...

இருவரும் உள்ளே செல்ல வழியிலேயே நின்றது ஒரு கூட்டம்....

"ஏய் இங்க வா..." என்றது ஒரு குரல்...

"யாரடி கூப்பிடுறாங்க....???" என்றாள் சனா இருவரும் திரும்பாமல் இருக்க "உன்னதான் காது கேக்கலையா.... ப்ளூ டிரஸ்...." என ஒருவன் கத்த...

"நீ தான் சூப்பர்..." என வேகமாக திரும்பினாள் சனா...

"என்ன அவள கூப்பிட்டா நீ திரும்புற... நீ போ..." என்றான் இன்னொருவன்... அவள் போகாமல் நிற்க "உன் ப்ரெண்ட ஒன்னும் செய்ய மாட்டோம் உள்ள போ..." என்றான் மற்றொருவன்....

பின் திரும்பினாள் காயு...
"ஓ... மேடம் திரும்ப மாட்டுங்களோ பேரு என்ன... "

"கா...காயத்ரி... "
அந்த கூட்டத்தின் நடுவே வந்த புதிய ஒருவன் "டேய் டீன் கிட்ட கம்பலைன் பண்ணவா.... போங்க எல்லாரும்... "

"அண்ணா... இது எங்க ஜூனியர் நாங்க தான பண்ணனும்.... ''

"ஓ... அப்படியா...." என புதியவன் கேட்க ... "அப்படியெல்லாம் இல்லன்னா.... நாங்க போறோம்... டேய் வாங்கடா போலாம்...." என அவர்கள் செல்ல...
காயூ ஒருவித பதட்டத்துடன் நின்றாள்... அதை கண்டவன்

"நீங்க... போங்க...." என்றான்.

மறைவாக நின்ற சனா அவள் வருவதை பார்த்து....
"என்ன... ச்ச.... இவ்வளவு தான் ரேகிங்கா.... யாரு அந்த பையன்... இமிடியட்டா அண்ணாவா தத்து எடுத்துக்கணும் " என்றாள் சனா சலிப்பாக....

"ஏய் வாடி அவனுங்களே போக சொல்லுறானுங்க இதுல நீ வேற" என இழுத்து சென்றாள் காயு.

"டேய் உங்களுக்கு இங்க என்னடா வேலை.... போங்கடா உங்க காலேஜுக்கு...." என்றாள் பிருந்தா.... (அந்த கலெஜ்ஜின் நான்காம் ஆண்டு மாணவி... )

"இருடி அந்த ப்ளூ டிரஸ் பாரே... அழகா குட்டையா... கொஞ்சம் குண்டா... இருக்காள.... அதைவிட அமைதியா இருக்காள..." என்றான் அந்த புதியவன்....

"டேய் பாலா இது எல்லாம் ஓவர்.... பாவம் அந்த பொண்ணு எனக்கு அவள பாக்கும் போது என் தங்கச்சி மாறி பீல் ஆவது...." என்றான் மோகன்... "உனக்கு எப்படி பீல் ஆகுது...." என்றான் பாலாவை பார்த்து....

எனக்கு..... என கைகளை மேலே உயர்த்தி முறித்தவன் பின்

"அட பாவி.... பிருந்தா இருக்கவும் தான அப்படி சொல்லுற..... '' என்றான் பாலா... அவன் முழிக்க....

"நம்பிட்டேன்.... அவ உன் தங்கச்சி தான்.... தேவா எங்கடா... அவன கானம்..." என்றாள் பிருந்தா...

"அவனா உள்ள அத்தை கூப்பிட்டாங்க அதனால போயிருக்கான்" என்றான் பாலா...

உள்ளே இருந்து வந்தவன்...

"டேய் மச்சான் உள்ள ஒரு பொன்ன பாத்தேன் டா.... வாங்க உங்களுக்கும் காட்டுறேன்... அப்படியே என் மனசுல இருந்த பொண்ணு மாறியே இருக்காடா... "

"டேய் இது மெடிக்கல் காலேஜ் டா நீங்க என்னடா பண்ணுறீங்க... என்னைய ட்ராப் பண்ண வர்றேன்னு நீங்க சொல்லும் போதே நா நெனச்சேன்... "

"போடி... வந்துட்டா அங்க பாரு உன் ஆள... வேற பொண்ணுகிட்ட பேசிக்கிட்டு இருக்கான்.... " என்று மோகனை கை காட்ட அவனோ ஒரு பெண்ணிடம் வழி சொல்லி கொண்டிருந்தான்....

"மோகன்.... செத்தாடா இன்னைக்கு...'' என்றபடி இருவரும் உள்ளே நுழைந்தனர்....

"பாலா அந்த பொண்ணு தான்டா ப்ளூ டிரஸ்...." என்றான் தேவா....

"என்ன... அவளா...." என அதிர்ச்சி அடைய.... அவனது முகம் சோகத்தில் ஆழ்ந்தது...

"ஏன்டா என்ன ஆச்சு...." என கேட்க...

"அதுவா அந்த ப்ளூ டிரஸ் பொன்னதான் இப்ப சார் வருனுச்சுகிட்டு இருந்தாரு.... " என்றான் மோகனை....

"ஓ..... எங்க பிருந்தா.... உன்னை எப்படி முழுசா விட்டா...." என அவனை கேட்டவாறு.... "அவ இல்லடா அதுக்கும் பக்கத்துல இருக்காளே... அந்த பொண்ணு... " என காட்ட

பக்கத்தில் வெள்ளை நிற ஆடையில் அழகாக இருந்தாள்.... சனா..... ஆனால் முகத்தில் கொஞ்ச நிறைய கோவம்

"சூப்பர்டா.... ரொம்ப அழகா இருக்கா இரு நா போய் பேர் என்னானு கேட்டுட்டு வர்றேன்... '' என பிருந்தா நகர்ந்தாள்.

"ஹலோ.... நா உங்க சீனியர்.... என் பேரு பிருந்தா.... என்ன ரெண்டு பேரும் தனியா இருக்கீங்க... உங்க நேம் என்னா....???''

"ஹாய்... ஐ அம் காயத்திரி.... இவ என் ப்ரெண்ட் சனா.... சாரி
ஆதிர்சனா... " என காயு கூற இவளையாடா அமைதினு சொன்ன என்ற அளவுக்கு பேசினாள்.... சனா அமைதியாக இருக்க....

"நீ ஏன் அமைதியா இருக்க....??" என்றாள் சனாவை நோக்கி... "அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்சம் நர்வெஸ்.... "

"நம்பாதீங்க நா இவள எங்கையும் போக கூடாது இங்கதான் இருக்கணுமுனு சொண்ணதுனால இப்படி இருக்கா.... கோவம்...''

"ஏன் போக வேண்டியது தானே.... ''

"அப்படி கேளுங்க... இப்படிதான் காலைல வரும் போதே நடக்கலாம் அப்படினு சொன்னேன்... பட் கேக்கல.... "

"அடி பாவி நாலு கிலோ மீட்டர் டீ... எப்படி நடக்கிறது .... அதை விடு... இப்ப நா என்ன சொன்னேன் இப்ப வேணாம் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போகளாமுனு தானே சொன்னேன்..... "

"நீ அப்படியா சொன்ன.... நா வர மாட்டேன்.... நீ போ அப்படி தான சொன்ன.... "

"ஏய்... ஏய்... கூல்... ஏன் இப்படி சண்டை போடுறீங்க...." என சமாதானம் செய்தாள் பிருந்தா....

"சரி ரெண்டு பேரும் யாரையாட்சும் லவ் பண்றீங்களா.... " என தான் வந்த வேலையை ஆரம்பித்தாள்....

உடனே காயூ ''அதெல்லாம் இல்ல அக்கா.... இவள பாத்துக்கிறதே எனக்கு பெரிய வேலை.... இதுல லவ்.... வேறையா.... "

"நா லவ் பண்றேன்...." என்றாள் சனா.... குஷியாக....

"அவள லவ் பண்ணும் போது நீ ஏன் அவள பாத்துக்கணும்...." என்றபடி அருகே வந்தான் மோகன்... உடன் பாலாவும் தேவாவும்... தேவாவின் முகம் சற்று சோகத்தில் இருந்தது....

"அட நீங்க ஏன்.... அவளே பொய் சொல்லுறா..... அப்படினு யாருமே இல்ல நீங்க வெனுமுனுனா பேரு கேளுங்க...." என்றாள் பிருந்தாவின் காதோரத்தில்.... சணாக்கு மட்டும் கேட்காத படி....

"சரி உன் ஆளு பேரு என்னா... "

"சக்தி..." என்றாள் ஒரே வார்த்தையாக... பின் "இருங்க நா எல்லாருக்கும் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்" என்ற படி கெண்டின் நோக்கி சென்றாள்...

பிருந்தா அடுத்த வார்த்தை பேசவே இல்லை... இவள் மட்டும் இல்லை யாருமே....

''ஏன் எல்லாரும் இப்படி ஷாக் ஆகுறிங்க.... யாரு கிட்டையும் சொல்ல கூடாது... இன்னைக்கு காலைல யாராச்சும் உனக்கு
புரோப்போஸ் பண்ணுனா என்ன பண்ணுவனு கேட்டேன்.... அதுக்கு இவுங்களே ஒரு நெம் செலக்ட் பண்ணி.... " என காலையில் நடந்ததை கூற....
தேவா அந்த உலகில் இல்லை.... அவளுக்கு தனது பெயர் பிடித்துள்ளது என்ற எண்ணத்தில்....

"உங்க எல்லாரு பேரு என்ன..." என்றாள் காயு...

"ஐ அம் பாலா...." என்றான் அவசர அவசரமாக...

"ஏன்டா.... ஹாய் சிஸ்டர் ஐ அம் தேவா.... அண்ட் திஸ் இஸ் மோகன்... நாங்க ரெண்டு பேரும் MBA ஸ்டூடண்ட் அண்ட் பாலா M.Sc மைக்ரோ பையாலஜி...." நாங்க எல்லாம் பிருந்தாவின் ப்ரெண்ட்ஸ்...

''சூப்பர் அண்ணா.... இனிமே நம்ம எல்லாரும் ப்ரெண்ட்ஸ்.... ஓகே" என்றாள் சனா பாலாவிடம்....

அனைவரும் வாங்கி வந்த சமோசா மற்றும் பப்ஸ் என சிலவற்றை சாப்பிட்டனர்.... சனாவை தேவா ஆதி என அழைத்தான்....

"அப்படி கூப்பிடலாம் தான...." என்றான் தயக்கமாக....

"இன்ன வரைக்கும் யாரும் அப்படி கூப்பிட்டது இல்லை... நீங்க கூப்பிடும் போது ஒரு மாறி நல்லா இருக்கு அப்படியே கூப்பிடுங்க...." என்றாள்...

இதற்கு மேல் என்ன வேண்டும் என்று இருந்தது தேவாவுக்கு... சிறிது நேரத்தில் அனைவரும் நண்பர்கள் ஆனார்கள்....

மோகனும் தேவாவும் காயுவை தங்கையாக ஏற்க்க பாலாவும் பிருந்தாவும் சனாவை தங்கையாக ஏற்று கொண்டனர்... மறந்தும் தேவா தனது முழு பெயரை கூறவில்லை.... பாலா, மோகன், தேவா அனைவரும் அவர்கள் கல்லூரிக்கு செல்ல மற்ற மூவரும் வகுப்புக்கு சென்றனர்....

அதே போல் வீட்டில் தேவாவும் சீத்தாவும் சனாவை பற்றி கூற இருவரும் எந்நேரமும் சனா... ஆதி.... என்றே வலம் வந்தனர்.... அவர்களின் நண்பர்களும் சனா.... காயு என்றே வலம் வர கிருஸ்ணா கண்டிப்பாக இருவரையும் பார்க்க வேண்டும் என்ற நிலைக்கே வந்துவிட்டார்....

இப்படியே சில தினங்கள் சில மாதங்கள் என செல்ல.... சனா நண்பர்களிடமும் சீத்தாவிடமும் நன்கு பழகி இருந்தாள் அதே போல் வீட்டிற்கு தெரியாமலும் பார்த்து கொண்டாள்.... (தெரிஞ்சா அந்த வைரவி அவ கிட்ட பேசாத இவ கிட்ட பேசாத அதவிட ஆண்களிடம் பழகாத பேசாத .... அப்படி இப்படின்னு சொல்லி.... அப்பா கிட்ட போட்டு குடுத்து.... இன்னும் நெறைய பண்ணுவாளே.... என்ன பண்ணுவானு நா அப்பறமா சொல்லுறேன்....)




சக்தியின் காதலை சனாவிடம் கூற வைப்பதற்காகவே வந்தான் ஒருவன்.... அதன் மூலம்
அனைவருக்கும் தனது இன்முகத்தை மட்டும் காட்டியவள் முதல் முறையாக அவளின் சோக முகத்தை காட்டினாள்....



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro