18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரண்டு நாள் கழித்து ப்ரியாவும் அர்விந்தும் ஆபிஸ் செல்ல அங்கு ப்ரியாவை எல்லோரும் நலம் விசாரித்தனர்.பிறகு எல்லோரும் அவர்களின் இருக்கைக்கு போனபின் ரேனு கையில் கிடைத்த லெட்டரை எடுத்துக்கொண்டு உடனே ப்ரியாவின் அறைக்குள் ஓடினாள்.

"ஹேய் ப்ரியா,நீ உன் மெயில செக் பன்னல்லயா" என்றாள்

ப்ரியாவோ என்ன என்பது தெரியாமல் முழிக்க "இல்லை ரேனு ,கடைசியா நான் வெள்ளிக்கிழமை தான் செக் பன்னே.அப்றம் கைல அடிபட்டதும் 2 நாளா ஏதும் செக் பன்னல "என்றாள்.

"ஹோய் ,நம்ம எல்லோருக்கும் ஹாப்பி நியூஸ்.புதுசா கட்டப் போற இண்டோர் ஸ்போர்ட் கொம்ப்ளக்ஸ்கு தேவையான எல்லா இண்டீரியரும் நம்மலே பன்ன போறோம்.Guess what..மொத்த ப்ராஜக்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா" என்று ப்ரியாவையும் அர்விந்தையும் பார்த்து கேட்க இருவரும் கோரசாக "எவ்லோ ரேனு" என்றனர்.

"டோட்டலா 120 க்ரோர்ஸ்.நமக்கு குறைந்தது 20 கோடியாச்சும் ப்ராபிட் வரும்" என்று குழந்தை போல குதூகளித்தால்.

அர்விந்திற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.இவ்வளவு பெரிய ப்ராஜக்ட் கிடைத்தது அவனுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்தது.ஆனால் ப்ரியாவோ கவலையான முகத்துடன் காணப்படாள்.அவளிடம் ரேனுவும் அர்விந்தும்

"என்ன ப்ரியா ஒரு மாதிரி இருக்குற.உனக்கு ஹாப்பி இல்லயா" என்றவர்களை

"இல்ல அர்விந்த்.நமக்கு அந்த ப்ராஜக்ட் கிடைச்சது ஹாப்பிதான்.ஆனா அத செய்து முடிக்கிற அளவுக்கு நம்மகிட்ட ஸ்டாப் இல்லயே.அதான் என்ன பன்றதுன்னு யோசிக்கிறேன்"என்றாள்.அதற்கு அர்விந்தோ

"லீவ் இட் ப்ரியா அதுக்கு நான் வேற ஐடியா வெச்சிருக்கேன்.நம்ம அவுட்சோர்சிங் பன்னலாம்.சப் காண்ட் ராக்டர்ஸ்கு கொடுக்காலாம்.நம்ம மெனேஜிங் பார்ட் மட்டும் பார்த்துக்களாம்.என்ன மொத்த ப்ராபிட்டும் நமக்கு வராது.பட் ஸ்டில் நல்ல ஒரு அமவுண்ட் கிடைக்கும் .சோ ப்ராப்ளம் சால்வ்ட்" என்றவனை ச்சே நமக்கு இந்த ஐடியா தோனலயே என்று யோசித்தவள்

"இட்ஸ் அ க்ரேட் ஐடியா.ப்ராபிட் பத்தி இப்ப நம்ம யோசிக்காம ப்ராஜக்ட்ட எப்படி முடிக்கிறதுன்னு மட்டும் யோசிப்பம்.ரேனு கால் பீட்சா ,பேர்ஜர்,KFC ..என்னென்ன்னல்லாம் தோனுதோ எல்லாத்தையும் ஓடர் பன்னு.இன்னைக்கு நம்ம ஆபிஸ்ல யாருக்குமே வேலை இல்ல.ஆபீசையே ஒரு cafetriaவா மாத்துறோம்,எல்லோருமா சேர்ந்து ப்ராஜக்டர்ல மூவி பார்க்குறம்.அப்புறம் நாளைல இருந்து இந்த ப்ராஜக்ட்காக கடுமையா வேலை செய்யுறோம்" என்று ரேனுவுக்கு ஹாய்பை அடித்தவளை ரேனு

"இல்ல ப்ரியா,நமக்கு ஈமெயில் வெள்ளிக்கிழமையே அனுப்பிருக்காங்க.ஆனா நம்ம அத பார்க்கலை.நாளைக்கு நீடெல்லில இருக்கனும்.அந்த ப்ராஜக்ட்ல சைன் பன்ன உன்ன வர சொல்லிர்காங்க.சோ நீ இப்பவே கிளம்பியாகனும்.சரி எப்படி போக போற.அப்பாவும் ஊர்ல இல்லையே"என்றவளை அர்விந்த் இடை மறித்து

"நான் வேனும்னா உன் கூட வாரேன் ப்ரியா.இந்த சான்ஸ மிஸ் பன்ன வேண்டாம் "என்றவனை அவள்

"அப்போ நிஷா..."என்றவளை

"ஒரு ரெண்டு நாள்தானே அம்மா பார்த்துப்பாங்க.சோ நாம இப்பவே எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பலாம் "என்றவனை ரேனு கவலை தேய்ந்த முகத்துடன் பார்த்தாள்.அவளுக்கு தெரியும் இவர்கள் இருவரும் தனியாக இரண்டு நாள் சென்றாள் கண்டிப்பாக அவர்களுக்குள் புகைந்துகொண்டிருக்கும் காதல் கொழுந்து விட்டு எரியும் என்று.இருந்தாலும் உள்ளங்கள் இரண்டும் விரும்பாமல் காதலை தினிப்பதற்கு ரேனு விரும்பவில்லை.நடப்பது விதிப்படியே நடக்கட்டும் என்று என்னி ப்ரியாவின் அறையை விட்டு வெளியேறினாள்.

ப்ரியாவும் அர்விந்தும் அவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்பதால் வெளியில் வந்தவர்களை அவர்களின் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் ப்ரியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ப்ரியாவும் அவள் அவசரமாக டெல்லி போக வேண்டுமென்பதையும் இன்று எல்லோரும் நன்றாக எஞ்சாய் பன்னும்படியும் கூறிவிட்டு வெளியேறிய வேலை அர்விந்திடம் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக சங்கீதா

"மாப்பு,சூப்பர ஒரு சான்ஸ் அமைஞ்சிருக்கு.சோ மிஸ் பன்னிடாத" என்றாள். அதற்கு அவனோ

"நீ கொஞ்சம் வாய மூடிகிட்டு சும்மா இருக்கியா, ஆபீஸ்ல இருக்குற டென்சன்ல நீ வேற .. நேரம் காலம் தெரியாம கலாய்ச்சுக்கிட்டு"

என்று கூறிவிட்டு ஆபீசை விட்டு வெளியேறினான்.முதலில் ப்ரியாவை அவள் வீட்டில் விட்டு பயணத்திற்கு தேவையான பொருட்களை ஒழுங்கு பன்னும்படி கூறிவிட்டு வீட்டிற்கு வந்தவன் அம்மாவிடம் விடயத்தை கூறி 2 நாளைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு ப்ரியாவின் வீட்டிற்கு சென்றான். அங்கு அவளின் உடமைகளையும் எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் சென்றனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro