27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலையில் அர்விந்த்,ப்ரியா,ரம்யா,சங்கீதா, ரேனு என்று யாருக்குமே மன நிம்மதி என்பது இல்லாமல் ஆபிஸ் வந்தனர்.இதில் அர்விந்துடைய மனநிலையோ மிகவும் போராட்டத்துக்கு மத்தியில் இருந்தது.ஏனென்றால் நேற்றுவரை ஒரு எம்ப்ளாயியாக இருந்தவனை இன்று ஒரு பார்ட்னராக ரம்யா அறிவிக்க போவதாக கூறியதில் இருந்து அவன் மனதில் தனக்கு எந்த விதத்திலும் உரிமை இல்லாத ஒன்றை ஏற்பதற்கு அவன் மனது விரும்பவில்லை.இருந்தாலும் ரம்யா விடாப்பிடியாக இருந்தால்.அவன் இதை ஏற்காவிட்டால் அவனுடன் ஆயுசுக்கும் அவன் முகம் பார்க்கமாட்டேன் என்று அவள் கூறியதில் இருந்து அவனால் மறுத்து பேச முடியவில்லை.

இங்கு ப்ரியாவோ,தனக்கு என்றுமே உறுதுனையாக இருந்த ரம்யா,சங்கீதா,ரேனு மூவரும் தனக்கெதிராக திரும்பியதில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தால். இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமென்று அர்விந்தை வேலைக்கு சேர்க்கும் போதே அவளுக்கு தெரியும்.ஆனால் அந்த பிரச்சனை ரம்யாவிடம் இருந்து வரும் ,அந்த நேரத்தில் சங்கீதா மற்றும் ரேனு ஆகியோர் அவளுக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தவளுக்கு நேற்றைய சம்பவம் பேரிடியாகவே இருந்தது.என்ன நடந்தாலும் இந்த சூழ்நிலையை அவள் எதிர்கொள்ள தயாராகிவிட்டால்.

ஆபிஸ் மீட்டிங்க் ரூமில் எல்லோரும் இருக்க ப்ரியா கடைசி ஆளாக உள் நுழைந்தால்.அவள் தன் இருக்கையில் அமரப்போனவள் ஓர விழியால் அர்விந்தை பார்க்க , அவன் கவலையில் வாடியிருப்பான் என்று நினைத்தவளுக்கு அவனின் முகமோ பயத்தை ஏற்படுத்தியது.அவன் ப்ரியா நுழைந்ததை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.அவனின் முகத்தில் வழக்கமாக இருக்கும் ஒரு சாந்தம் இல்லாமல்  உக்கிரமான போருக்கு தயாராகும் வீரனின் முகத்தை போல இறுகிப்போய் இருந்ததை பார்த்தவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.இருந்தாலும் தன் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

"வெல்கம் டு யூ ஆல்.நேரடியா நான் விசயத்துக்கு வரேன்.உங்க எல்லோருக்கும் இந்த கம்பனி என்னோடதுன்னுதான் தெரியும்.ஆனா எங்கப்பா இதை எஸ்டாப்லிஷ் பன்னும் போது எங்க ரெண்டு பேருடைய ,,,ஐ மீன் எனக்கும் என் தங்கச்சிக்கும் சேர்த்து செயார பிரிச்சி எழுதி வெச்சிருக்காரு.அவ என்னைக்குமே கம்பனிக்கு வராததனால உங்கள்ள பல பேருக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்ல.நேத்தைக்கு லண்டன்ல இருந்து வந்தவங்க வந்த கையோட அவங்க செயார் எல்லாத்தையும் அவங்க ஆருயிர் நண்பனுக்கு எழுதி வைக்க முடிவெடுத்திருக்காங்க.சோ ,இந்த மீட்டிங்க் அந்த செயார் டிரான்ஸ்பர அறிவிக்கவும் நமக்கு கிடைச்சிருக்கிற புது ப்ராஜக்ட்ட எப்படி முன்னெடுத்து செல்வது என்பதையும் பற்றியது" என்று ப்ரியா கூறி முடிக்க எழுந்த ரம்யா

"உங்க எல்லோருக்கும் வணக்கம்.எனக்கு இந்த கம்பனி நடத்துற விசயத்துல எல்லாம் பெருசா நாட்டமில்லை.இங்க இருக்குற அர்விந்த் என்னோட க்லோஸ் ப்ரெண்ட்.சோ ,அவரு இந்த கம்பனில எம்ப்ளாயியா வேலை செய்ரதுல எனக்கு விருப்பமில்ல.உங்கள்ள யாராச்சும் ஒருத்தருக்கு நான் அர்விந்த இந்த கம்பனியோட ஜாயிண்ட் பார்ட்னரா அறிவிக்கிறது பிடிக்கலன்னா சொலுங்க.நான் பன்னல" என்று கூறிவிட்டு எல்லோரையும் பார்த்தாள்.யாரும் எதுவும் கூறவில்லை.ப்ரியா ஏதோ கூற வாய் எடுக்கு முன் சங்கீதா

"சோ லெட்ஸ் வெல்கம் அவர் ப்ரெண்ட் ,கொலீக் அண்ட் நியூ பாஸ் ..சாரி சாரி ப்ரியா மேடம்..அவர் நியூ ஜாயிண்ட் பாஸ் மிஸ்டர் அர்விந்த்" என்று கூற எல்லோரும் கைதட்டி ஆரவரித்தனர்.

அதன் பின்னர் கௌசிக்கின் கம்பனிக்கு சப் காட்றாக்ட் கொடுப்பது பற்றி பேச்சு வர யாரும் எதுவும் கூறவில்லை.ஆனால் ப்ரியாவும் ரம்யாவும் மாற்றி மாற்றி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.இதுவரைக்கும் அர்விந்த் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை.கடைசியாக ப்ரியா "ஒக்கே.ரம்யா இப்போ நீ இந்த கம்பனி பார்ட்னர் கிடையாது.சோ உங்க புது பாஸ் சொல்லட்டும் என்ன செய்றதுன்னு"என்றதும் எல்லோரும் அர்விந்தை பார்க்க
அவனோ

"எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.ஆனா எவ்வளவு பேர்சண்டேஜ் காண்ட்றாக்ட் கொடுக்கனும் என்பத இங்க இருக்குற எல்லோருமா சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் " என்றவனை ரம்யாவும் சங்கீதாவும் எரித்து விடுவது போல் பார்க்க ரேனு அவர்கள் இருவரையும் பார்வையால் சாந்தப்படுத்தினால்.

70% வேலையை கொடுக்கலாம் என்பதில் ஆரம்பித்து,கடைசியில் மொத்த ப்ராஜக்டில் 20% யே கொடுக்க எல்லோரும் சம்மதித்தனர்.அதிலும் குறிப்பாக சங்கீதாவுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.இருந்தாலும் எல்லோரின் முடிவுக்கும் தலைசாய்த்தவளாக அவளும் ஏற்றுக்கொண்டாள்.ப்ரியாவின் திருமனத்தின் பின் சப் காண்ட்றாக்ட் சைன் பன்னுவது தொடர்பில் அக்ரீமண்ட் தயாரிப்பது என முடிவெடுத்து மீட்டிங்க்கை முடித்துக் கொண்டு  எல்லோரும் வெளியேறினர்.

அன்றிலிருந்து 5 வது நாள் ப்ரியாவின் திருமணம்.ரம்யாவோ,சங்கீதாவோ ப்ரியாவின் திருமனத்திற்கு என எந்த உதவிகளையும் செய்ய போகவில்லை.அதனால் ப்ரியா ஆபீசில் இருக்கும் எல்லோருக்கும் பொதுவான திருமண அழைப்பிதழே வைக்க ரம்யாவோ அர்விந்திடம்

"டேய் கண்டிப்பா இந்த வெடிங்க்கு நம்ம போறோம்.அவளுக்கு நீ காட்ற.அவ இல்லாமலும் உன்னால சந்தோசமா இருக்கமுடியும்னு "என்றவளை அவனும்

"இல்லை ரம்யா வேனாமே....."என்றவனை

"இப்ப நீ வரல்ல.அப்புறமா நான் உங்கூட பேசவே மாட்டன் பார்த்துக்க"என்றாள்.

கடைசியில் அவளிடம் வாதித்து ஜெயிக்க முடியாது என்று உனர்ந்தவன் வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு வருவதாக கூறினான்.

திடீரென்று அர்விந்தின் அக்கா இந்தியா வர ரம்யா அவர்களையும் சேர்த்து கூட்டி வருமாறு கூறினாள்.ஏனென்றால் இவர்களுக்குள் நடந்த பிரச்சினை எதுவும் அவர்களுக்கு தெரியாது.அது தெரியாமலே போகட்டும் என்பதற்காகவே அம்மாவையும் அக்காவையும் அவள் அழைத்தால்.

அம்மா,அக்கா,அர்விந்த் ,நிஷா நால்வரும் திருமனத்துக்கு செல்ல தயாராகி கால் டாக்சியில் மண்டபத்துக்கு சென்றனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro