35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வீடு வந்த போது ப்ரியா வீட்டில் இல்லை.இப்போதெல்லாம் அவள் வீட்டில் இருப்பது மிக மிக குறைவு.தன் உடல் அமைப்பை வைத்து கௌசிக் அவளுடடைய திருமண இரவு அவனது நன்பனிடம் பேசியது அவளை மிகவும் பாதிக்க  செய்தது.இப்போதெல்லாம் பகலில் ஜிம்மே கதி என்று இருந்தால்.இரவில் அவளது புது தோழ தோழியருடன் ஊர் சுற்றிவிட்டு மிகவும் தாமதமாகவே வீட்டுக்கு வருவாள்.அவளின் செயற்பாடுகள் அர்விந்தை கவலை கொள்ள செய்தாலும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அவள் இப்படி அவளை வெறுக்க வேண்டுமென்று செய்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. எப்படியும் நிஷா மூலம் அவளை நெருங்கலாம் என்று இருந்தவனுக்கு இன்றுவரை ஒரு சரியான வழி தெரியவில்லை.

என்றும் போல இன்றும் ப்ரியா இரவு வீட்டிற்கு தாமதமாகவே வந்தால்.அவளை காண தீபக் ஆர்வத்தோடு காத்திருக்க எல்லோருக்குமான  இரவு உணவை அர்விந்த் சமைத்துக்கொண்டிருந்தான்.ப்ரியா வந்ததும் எல்லோரும் சாப்பிட ஆயத்தமாகினர்.

"என்ன அண்ணி ,அர்விந்தான் வீட்டுல சமையல் போல. குடுத்து வெசவங்க நீங்க"என்றவனை
ப்ரியா ஏதும் பதில் ஏதும் கூறாமல் அவனை பார்த்து புன்னகைத்தால்.எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் நிஷா அழத்துவங்க அர்விந்த் அவளை தூக்கிக்கொண்டு அவளுக்கு பால் கொடுக்க மொட்டை மாடிக்கு சென்றான்.ப்ரியாவோ ஏதுமே பேசாமல் அவர்களின் அறைக்குள் சென்றாள்.இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த தீபக்கிற்கு ஒரு விடயம் தெளிவாக புரிந்தது.அண்ணனும் அண்ணியும் ஈருடல் ஓருயிராக இல்லாமல் தாமரை மேல் நீர் போல பட்டும் படாமலும் இருக்கின்றார்கள் என்று.

அடுத்த நாள் அர்விந்த் காலையிலேயே ஆபீஸ் செல்ல தயாரக ப்ரியா வழமைபோல ஜிம்மிற்கு சென்றாள்.தீபக் பயணக் களைப்பில் நன்றாக தூங்க அவன் எழும்பியதும் ஆபீஸ் வரும்படி ஒரு நோட் எழுதிவைத்து விட்டு நிஷாவை கூட்டிக்கொண்டு அர்விந்த் ஆபீஸ் சென்றான்.

இந்த ப்ராஜக்ட் ஆரம்பத்தில் இவர்கள் நினைத்ததைப்போல் அவ்வளவு ஒன்றும் இலகுவாக செய்ய முடியவில்லை.க்ளையண்ட் ஒன்றை கேட்க இவர்கள் ஒன்றை வழங்க தங்கையை காட்டி அக்காவுக்கு திருமணம் முடிக்கின்ற கதையாக போய்விட்டது.தீபக் இவர்களின் துறையில் Master Degree முடித்திருப்பதாலும் அமெரிக்காவில் தலை சிறந்த இண்டீர்யர் கம்பனி ஒன்றில் வேலை செய்திருந்ததனால்  அவனின் அனுபவம் இவர்களுக்கு உதவி செய்யும் என்பதினாலேயே இந்தியாவே வரமாட்டேன் என்றிருந்தவனை அர்விந்த் மிகவும் வற்புறுத்தி இந்தியா வரவைத்தான்.

தீபக் ஆபீசிற்கு வர முன் தேவையான அவ்வளவு தரவுகளையும் இதுவரை முடித்திருந்த ப்ராஜக்ட் டீடைல் பற்றியும் ஆபீசில் உள்ள முக்கியமான எம்ப்ளாயி எல்லோரும் சேர்ந்து பேசி முடிக்க தீபக்கும் ஆபீஸ் வர சரியாக இருந்தது.ஆபீஸ் உள்ளே வந்தவனை அர்விந்த் வரவேற்று நேராக மீட்டிங்க் அறைக்கே அழைத்து சென்றான்.

தீபக் மீட்டிங்க் அறைக்குள் நுழைய அதே நேரம் நிஷாவை தூக்கிகொண்டு ரேனு வெளியில் வர இருவரும் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டனர்.தன் மீது ஒரு அழகான பெண் மோதுண்டதை அறிந்த தீபக் தனது வழமையான குறும்பால்

"அம்மாடி.குட்டி ஏஞ்சல் இன்னொரு ஏஞ்சல் கிட்ட என்ன பன்றீங்க" என்று ரேனுவை உரசியவாறு நிஷாவை தூக்க ரேனுவோ கோவத்தில்

"சீ மிஸ்டர் தீபக்,இந்த உரசுர வேலயெல்லாம் என்கிட்ட வெச்சுக வேனாம்.சரியா"என்று கடுகடுத்த முகத்துடன் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினாள்.பொதுவாகவே தீபக்கிற்கு பொண்ணுங்க என்றாலே ரொம்ப பிடிக்கும்.அவன் படித்த காலேஜிலாகட்டும் இல்லை அவன் வேலை செய்த இடத்திலாகட்டும் எல்லா இடங்களிலும் அவனை சுற்றி பெண் தோழிகளே அதிகமாக இருப்பார்கள்.உடனே அவனை ஒரு வுமனைசரா கற்பனை பன்னிக்க வேனாம்.அவன் கலகலப்பாக பேசும் விதமும் அவனின் வசீகரிக்கும் உடல் தோற்றமும் பெண்களை அவன் பக்கம் இலகுவாக கவர்ந்திழுத்துவிடும்.முதன் முதலாக ஒரு பெண் தன்னை இப்படி கேவலமாக பேசியதற்கு தீபக்கிற்கு கோவம் வந்தது.என்றாலும் அதை காட்டிக்கொள்ளாமல் சிரித்தவனாக மனதுக்குள் "இரு உன்ன என்ன பன்றேன்னு பாரு " என்று என்னிக்கொண்டு மீட்டிங்கை ஆரம்பித்தான்.

மீட்டிங்க் ஆரம்பித்ததும் "சீ நோ மோர் பார்மாலிட்டீஸ்.நான் ஸ்ட்றைட்டா விசயத்துக்கு வாரேன்.ப்ராஜக்ட் ஒன்னு கிடைக்குறது பெரிய விசயமில்ல,அத ஒழுங்கா செஞ்சு காட்டனும்.அதுக்கு முடியலயா அந்த ப்ராஜக்ட் பக்கம் போகவே கூடாது. நீங்க எல்லோரும் என்ன பன்னி வெச்சிருக்கீங்க.இந்நேரம் நீங்க ப்ராஜக்டோட இரண்டாவது ஸ்டேஜுக்கு போய் இருக்கனும்.ஆனா நீஙக் எல்லோரும் இன்னும் முதல் ஸ்டேஜ எப்படி எதிர்கொள்ரது என்று யோசிச்சிக்கிட்டிருக்கீஙக். ஒரு வருச ப்ராஜக்ட்ல ஒரு மாசம் வீனாக்கியிருக்கீங்க.ப்ராஜக்ட்ட நீங்க டெட்லைன்ல கம்ப்ளீட் பன்னலன்னா உங்களுக்கு எவ்வளாவு நஷ்டம் வரும் தெரியுமா.இதென்ன சின்ன பசங்க விளையாட்டு மாதிரி என்று நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா எல்லோரும்" என்று கோவமாக பேச ஆரம்பித்தவனை எல்லோரும் கொஞ்சம், என்னடா இவன் இன்னைக்குத்தான் வந்தான்.அதுகுள்ளயே இப்படி பேசுரான்னு என்னத்தொடங்கினர்.

"சீ ,யாரு உங்கள்ள க்ளையண்ட் கன்சல்டண்ட் பன்னது.அவங்க என்கூட ஒன் வீக் புல்லா வேர்க் பன்னனும். ஐ மீன் இரவு பகல் பார்க்காமா.எனிடைம் ஆன் கால்ல இருக்கனும்.டெல் மீ யாரு அது"
என்றதற்கு ரேனு தன் கையை உயர்த்தி அவள்தான் அந்த பொறுப்பை கையில் எடுத்தது என்பதை கூறினால்.இதை கண்ட தீபக்கிற்கோ வாடி மவளே உன்ன வெச்சி என்ன பன்றேன் பாரு என்று மனதுக்குள் நினைத்தவன்...

"யூ ஆல் ஆர் கோ அவுட்.பர்ஸ்ட் ஐ நீட் டு செட்டில் டௌன் சம்திங் வித் க்லையண்ட் கோர்டினேட்டர்" என்றதும் அர்விந்த் உட்பட அனைவரும் வெளி செல்ல ரேனுவும் தீபக்கும் மட்டும் அந்த அறையில் மிஞ்சி இருந்தனர்.

"சீ மிஸ் ரேனு...நீங்க இவ்வளவு நாளா என்ன கிழிச்சு வெச்சிருகீங்க என்று கொஞ்சம் சொல்ரீங்கலா.ஏன்னா உங்க ப்ராஜக்ட் கரண்ட் டாக்குமெண்டேசன்லாம் பார்க்கும் போது நீங்க இன்னும் எதுமே கிழிக்கல என்று நல்லா தெரியுது" என்று வேண்டுமென்றே அவள் மனது நோகும்படி பேசினான்.

ரேனுவும் அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கொடுக்க கடைசியில் இவன் "ஒக்கே மிஸ் ரேனு. யு ஹேவ் டு வேர்க் வித் மீ பார் ஒன் வீக் டே அண்ட் நைட்.அதுக்கு அப்புறமாதான் என்னால எப்படி இந்த ப்ராஜக்ட்ட மூவ் பன்ன முடியும்னு பார்க்கலாம்" என்றவனிடம் இவளும் தன்னுடைய சுய கௌரவதை விட்டிக்கொடுக்க விரும்பாமல் சரி என்றால்.

இருவரும் மீட்டிங்க் ரூம் விட்டு வெளியில் வர சங்கீதா எதுவும் பேசாமல் பம்மினால்.ஏனென்றால் மீட்டிங்கில் அவன் பேசிய விதம் அவளை என்னமோ செய்தது.வெளியில் வந்தவன் எல்லோரும் அவனை ஒரு மாதிரியாக பார்ப்பதை என்னி

"ஹேய் கய்ஸ், பீ கூல்.நான் ஆபீஸ் வேர்க்லதான் ஸ்டிரிக்ட்.மத்தபடி எல்லாம் நான் வடிவேலோட தம்பி you know"என்றவனை சங்கீதா பார்த்து சிர்த்தால்.உடனே அவன் சங்கீதா அருகில் வந்து

"என்ன சங்கீ டார்லிங்க்.நீயும் பயந்துட்டியா"என்றவனை அவள்

"போடா .ஒரு நிமிசம் ஆடியே போய்ட்டேன்.என்னடா பையன் சிடு மூஞ்சியா இருக்கானேன்னு.லூசு இதெல்லாம் ஆரம்பத்துல சொல்ல மாட்டியா"என்றவளை

"சரி அத விடு.நான் சொன்ன மேட்டர் என்னாச்சு"என்றவனை சங்கீதா

"இரு சுரேஷ் கிட்ட கேட்டு சொல்ரேன் "என்று கண்ணடித்தால்

"அவசரமா சொல்லு டார்லிங்க்"என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் ரேனு அவனிடம் வந்தவள்

"ஏய் என்னடி மேட்டர்"என்றதும் சங்கீதா

"அவன் என்ன கல்யாணம் பன்னிக்க போறானாம்.எப்போ சுரேஷ டிவோர்ஸ் பன்றேன்னு கேட்குறான்.அதான் சுரேஷ் கிட்ட கேட்டு சொல்ரேன்னு சொன்னேன்"என்றவளை ரம்யா ஈஈ என்று இளிக்க ரேனுவோ முறைத்தால்.

"நீ என்னடி .ஏதோ உன் புருசன நான் கேட்ட மாதிரி முறைக்கிற..ஹேய் என்ன ஏதும் மேட்டரா, மீட்டிங் ரூம்ல தனியா வேற இருந்தீங்க" என்று ரேனுவை கேட்க

"சட் அப் சங்கீதா..போதும். மூடிகிட்டு கிளம்பு"என்றாள் ரேனு.அதற்கு நம் நக்கல் ராணியோ

"சரிதான் போடி..அவன நான் செட்டப் பன்னல என் பேரு சங்கீ இல்ல"என்று அவள் கூற ரேனு

"ஓஹ் அப்போ வேனும்னா மங்கீனு மாத்திக்க சரியா " என்றாள்.

இவர்கள் இப்படி அடித்துக்கொள்ள ரம்யா ஏதோ ஒன்று சரி இல்லை என்பதை உணர்ந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro