36

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

       

இருவரும் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் வேலை செய்ததின் காரணமாக அவர்களால் இது வரை நடந்த தவறுகளை இலகுவாக அடையாளம் காண முடிந்தது.அதன் பலனாக அடுத்த வாரமே க்ளையண்ட் மீட்டிங்கின்ற்கு இருவரும் செல்ல ஆயத்தமாகினர்.

ரேனுவுக்கு தெரியும் இன்று எப்படியும் அவளை தீபக் க்ளையண்ட் முன்னாடி கேவலமா திட்ட போகிறான் என்று,ஏனென்றால் பொதுவாக ப்ராஜக்ட் வகையான பிசினசில் ஏதும் தவறுகள் ஏற்பட்டால் தங்களின் சொந்த எம்ப்ளாயிகளை பலிக்கடாவாக ஆக்குவது நிறுவனங்களுக்கு கை வந்த கலை.

அதுவும் முதல் சந்திப்பில் தீபக்கை அவள் அப்படி திட்டிய பின் அவன் அவளுடன் பட்டும் படாமலுமே பேசினான்.வேலை விடயம் தவிர்த்து வேறு எதுவுமே பேசவில்லை.ஆனால் அதுவே ரம்யாவோ இல்லை சங்கீதாவோ வந்தால் எல்லோருமாக சேர்ந்து ஒரு வழி பன்னிவிடுவார்கள்.சில நேரங்களில் இவர்கள் இப்படி சிரித்து அரட்டை அடிப்பது ரேனுவுக்கு ஒரு வகை எரிச்சலை தரும்.

ஆனால் தீபக்கோ முதல் சந்திப்பில் அவள் அப்படி திட்டியதை மனதில் வைத்து அவளை பழிவாங்க சரியான ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.

ரேனு தன் காரில் தீபக்கை ஏற்ற அவன் வீட்டிற்கு சென்றாள்.தீபக் இப்போது அர்விந்த் வீட்டில் இல்லை.அடுத்த மாதம் அவனின் பெற்றோர்கள் இந்தியா வர இருப்பதால் அவன் இப்போதே அவர்களின் பழைய வீட்டை தயார்செய்ய ஆரம்பித்துவிட்டான்.அதனால் அவன் இப்போது தனியாக அவனின் வீட்டிலேயே இருந்தான். ரேனு வந்து காரில் ஹார்னை அடிக்க இவன்

"ஆமா ,இவ பெரிய ஆளு வந்துட்டா.இருடி ஒல்லிப்பிச்சான் .வரேன்"என்று மனதுக்குள் ரேனுவை திட்டியவன்,இவ்வளவு ஹார்ன் அடித்தும் தீபக் வராததால் உள்ளே சென்று பார்க்கலாம் என்று காரை விட்டு இறங்கியவளை வீட்டை பூட்டிக்கொண்டு வெளியில் வந்தவன் அவளை பார்த்து அப்படியே சிலை என அசந்து நின்றான்.வெள்ளை நிற சல்வார் அணிந்து அதற்கு மேட்ச்சாக தோடு மற்றும் வலையல் போட்டிருந்த ரேனுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.அவள் தனது முடியை லூசாக விட்டிருக்க இவனோ இங்கு அவளை பார்த்து லூசாகிக்கொண்டிருந்தான். தீபக் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை சற்று வித்தியாசமாக பார்த்தவள்

"போலாமா" என்றாள்.

அவனும் உடனே சுதாகரித்துக்கொண்டு

"சரி.ஆனா காரை நான் டிரைவ் பன்றேன்" என்று கூறினான்.

அவளோ மறுப்பேதும் கூறாமல் சாவியை அவனிடம் கொடுக்க அவன் டிரைவர் சீட்டில் ஏற முன் அவளுக்கு கதவை திறந்துவிட்டன்.ரேனுவும் தாங்க்ஸ் என்று கூறி விட்டு இருக்கையில் அமர கார் சாலையில் பறந்து சென்றது.தீபக் ரேனுவுடன் அருகில் இருந்து அவள் காரை ஓட்டிச்சென்றால் அவன் வைத்த கண் வங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருப்பான்.அதனால் அவள் அவனை பற்றி தவறாக நினைப்பால் என்ற ஒரே காரணத்தால்தான் அவன் காரை டிரைவ் செய்தான்.அவளை இன்று கண்ட நொடியில் இருந்து அவள் தன்னை தவறாக என்னி விடக்கூடாது என்று அவன் மனம் ஏங்க ஆரம்பித்தது.

க்ளையண்ட் மீட்டிங்கில் இவளை எப்படியும் அவமானப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு இனி தான் அவமானப்பட்டாலும் பரவாயில்லை ரேனுவுக்கு சிறிய அவமானமோ அல்லது மனக்கஷ்டமோ வந்துவிடக்கூடாது என்பதில் மும்முரமாக இருந்தான்.

இருவரும் க்ளையன்ட் மீட்டிங்க்கை நல்லபடியாக முடித்து சிரித்த முகத்துடன் வந்தனர்.ரேனுவோ தீபக் எப்படியும் தன்னை இன்று க்ளையண்ட் முன் கேவலப்படுத்துவான் என்று என்னியிருந்தவளுக்கு அவன் அப்படி ஏதும் செய்யாமல் எல்லா தவறுகளையும் சரியான முறையில் விளக்கி அதற்கான மாற்று தீர்வையும் சிறப்பாக முன்மொழிய க்ளையண்ட்சும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டனர்.இதனால் ரேனுவின் மனதில் தீபக் மீதிருந்த கெட்ட என்னம் எல்லாமே காற்றில் கரைந்தோடும் சருகைப்போல மறைந்தது,

இருவருக்கும் பசியெடுக்க தீபக்

"ரேனு, பசிக்குது.எங்க சரி சாப்டலாமா"என்றவனை அவள்

"............ரெஸ்ட்டாரண்டின் நல்ல டேஸ்ட்டியான ஐடம்லாம் இருக்கும் தீபல்.நாம அங்க போகலாம் "என்றாள்.

இருவரும் மனதில் உள்ள வெறுப்பு ,பகை உணர்வு எதுவுமே இல்லாமல் நல்ல நண்பர்களாகியினர்.சாப்பிட்டு விட்டு ஆபீஸ் வந்தவர்கள் உடனே தங்களின் அறைக்குள் சென்று எல்லோரையும் மீட்டிங் ரூமிற்கு வர செய்தனர்.எல்லோரும் வந்து சேர தீபக்

"கய்ஸ் ,ஒரு வழியா நம்ம க்ளையண்ட் கல்சண்டன்சி முடிச்சாச்சி.நம்ம டெட்லைனுக்கு மேலதிகமா மூனு மாசம் எக்ஸ்ட்றாவா கேட்டு நமக்கு அவங்க அப்ரூவ் பன்னியிருகாங்க.சோ ,இனிமே நாம எல்லோரும் கொஞ்ச நாளைக்கு ஹார்ட் வேர்க் பன்ன வேண்டி வரும்.சிப்ட் முறைல நைட்ல கூட வேலை செய்ய வேண்டியிருக்கும்.சோ எல்லோரும் கொஞ்சம் ப்ரிப்பேரா இருங்க.இப்போ எல்லோரும் போகலாம்ட்டு" என்றான்.எல்லோரும் தீபக்கிற்கு வாழ்த்து கூறிவிட்டி செல்ல அர்விந்த் தீபக்கிடம் வந்து

"சூப்பர்டா.இந்த ப்ராஜக்ட் புல்லா நீயே கண்ட்றோல்ல எடுத்துக்கு தீபக்.அப்போ இங்க இருக்குற எல்லோருக்கும் ஒரு நல்ல எக்ஸ்பீசிரியன்ஸ் கிடைக்கும்.சோ இன்னைல இருந்து நீதான் இந்த ப்ராஜக்டோடா ஹெட்.என்ன சொல்ரீங்க தாய்க்குலங்களா "என்று சங்கீதா,ரம்யா மற்றும் ரேனுவை பார்த்து இவன் கேட்க சங்கீதாவோ

"இதுல சொல்ல என்னடா இருக்கு .நம்ம ஜிம் பாயே புல் கண்ட்றோல்ல எடுக்கட்டும்.நாங்க ரெடிப்பா" என்றாள்.

எல்லோரும் சிரித்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற ரேனுவிடம் தீபக் மெதுவாக

"ரேனு கொஞ்சம் வெய்ட் பன்னு,உங்கிட்ட ஒரு விசயம் பேசனும்" என்றான்.

எல்லோரும் சென்றதும் தீபக் ரேனுவுன் அருகில் வந்து அவள் இரு கைகளையும் பிடித்து

"ரேனு, நீயும் நானும் முதல்ல சந்திச்சப்போ நான் மத்த பொண்ணுங்க கூட எப்படி பேசுவேனோ அப்படியே பேச பார்த்தேன்.ஆனா நீ ஸ்டார்ட்லயே எனக்கு நல்லா நோஸ் கட் பன்னிவிட்ட.என் லைப்லயே எந்த பொண்ணும் என்ன இக்னோர் பன்னது இல்ல.என்ன முதன் முதலா இக்னோர் பன்னது நீதான்.ஆரம்பத்துல உன்னை எதுக்குன்னே தெரியாம பழிவாங்கனும்னு இருந்தேன்.ஆனா இன்னைக்கு உன் முன்னாடி உன் கைய பிடிச்சிகிட்டு உன் வாழ்க்கையோட என் வாழ்க்கைய சேர்த்துக்க சொல்லி பிச்சை கேட்டு நிற்கிறேன்.நீ எது சொன்னாலும் எனக்கு ஒக்கேதான். நான் எந்த விதத்துலயும் உன்னை கம்பல் பன்ன மாட்டேன்.இப்பவே சொல்லிட்டு போ.யோசிச்சி சொல்ரன்னு சொல்லி என் மண்டைய காயவிடாத.எனக்கு சஸ்பன்ஸ்னா தாங்க முடியாது.மோர் ஓவர் நெக்ஸ்ட் மந்த் என்னோட அப்பா அம்மா வாராங்க.அவங்களுக்கு நான் இந்த வருசமே கல்யானம் பன்னிக்கனும். அது ஒன்னுதான அவங்க வாழ்க்கையின் குறிக்கோள் என்கிற மாதிரி இருக்காங்க"என்றான்.

ரேனுவோ தீபக் இப்படி கேட்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.இருந்தாலும் மனதை திடப்படுத்திகொண்டு

"தீபக் ,நானும் உங்க மேல ஆரம்பத்துல தப்பான அபிப்ராயத்துலதான் இருந்தேன்.ஆனா இந்த கொஞ்ச நாள்ளயே எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சது.எப்படி தெரியுமா ஒரு நல்ல நண்பனா.எனக்கு நீங்க, ரம்யாவுக்கு எப்படி அர்விந்த் ஒரு சூப்பர் ப்ர்ண்டா கிடைச்சாரோ அதே போல எனக்கு இருக்கனும்னு நினைச்சேன்.ஆனா இப்படி நீங்க ப்ரொபோஸ் பன்னுவீங்கன்னு நினைக்கல்ல.ப்ளீஸ் எனகு லைப்ல கல்யாணம் பன்னுற ஆசையே இல்லை.நான் அர்விந்த லவ் பன்னேன்.ஆனா அதுக்குள்ள என்னென்னமோ ஆகிடுச்சு.நான் அர்விந்த விரும்பினதாலதான் கல்யாணாம் வேனாம்னு சொல்லல. எனக்கு இனி கல்யாணத்துல இண்ட்றஸ்ட் இல்ல.சோசியல் சேர்வீஸ் பன்ன போரேன்.இந்த ப்ராஜக்ட் முடிஞ்சதும் நான் இந்த கம்பனி விட்டு நின்னுடுவேன்.அப்புறம் ஒரு அனாதை இல்லம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.அதுதான் இப்போ என் லட்சியம் கனவு எல்லாமே.ப்ளீஸ் புரிஞ்சிப்பீங்க எண்டு நினைக்கன்" என்றாள்

"புரியிது ரேனு.நான் உன்ன கம்பல் பன்னல.அப்பறம் உனக்கு எப்பவாச்சும் கல்யாணம் பன்னனும்னு தோனினா சொல்லு நான் அப்போ வேற ஒருத்திய கல்யாணம் பன்னி இருந்தாலும் டைவோர்ஸ் பன்னிட்டு வந்துர்ரேன்.ஹேய் என்னை ரெண்டாம் தாரமா கட்டிப்ப தானே"என்று நக்கலாக கேட்டவனை அவள் பக்கத்தில் இருந்த ஸ்கேலை கொண்டு அடித்தால்.

ரேனு அறையை விட்டு வெளியேறா மெதுவாக உள்ளே வந்த நம்ம லேடி ஜேம்ஸ்பாண்ட் சங்கீதா

"டேய் மாப்பு சூப்பரா ப்ரபோஸ் பன்னடா"என்றவளை

"ஏண்டி நீ வேற.அவ என்ன ரிஜக்ட் பனிட்டு போறா.நீ வேற வெந்த புண்ல வேல பாச்சிகிட்டு" என்றான் கவலையாக.

"ஆமா நீங்க அண்ணன் தம்பி ரெண்டு பேருமே லூசாடா.அவன் லூசுத்தனமா ப்ரியாகிட்ட மாட்டிகிட்டு அவஸ்த்தப்படுறான்.நீ என்னடான்னா இவகிட்ட கெஞ்சி கிட்டு இருக்குற.ஆமா உனக்கு மூளை இருக்கா இல்லையா.அவ வேனாம்னு சொன்னா நீ என்ன சொல்லியிருகனும். இங்க பாரு ரேனு,உன்ன நான் கம்பல் பன்னல ஆனா நானும் லைப் புல்லா கல்யாணம் பன்னிக்காம உன்னை நினைச்சே வாழ போறேன்னு சொல்லிருக்கனும்.அவ உடனே என்ன சொல்லியுருப்பா.அவ அர்விந்த லவ் பன்னத மறக்க முடியல என்று.அப்போ உடனே நீ ,உனக்கு மட்டும் லவ்வ மறக்க முடியல எனும் போது நான் மட்டும் எதுக்கு உன்னை மறந்துட்டு இன்னொரு பொண்ணு கூட வழனும் என்று கேட்டு இருந்தியின்னா இன்னேரம் அவ உன்ன கட்டிபுடிச்சி உம்ம்ம்மா தந்திருப்பா.கெடுதுட்ட்டியேடா"என்றவளை

"இல்லை சங்கீதா.நான் ஏன் தெரியுமா வேற கல்யானம் பன்னுவேன்னு சொன்னேன்.நீ சொன்ன மாதிரி எமோசனலா பேசி அவளை சம்மதிக்க வெச்சிருக்க முடியும்.ஆனா எனக்கு அவளோட மனசுல என்ன இருக்கு என்றது தெரியனும்.இப்போ தெரிஞ்சிடிச்சி.நான் நிஜமாவே இனி கல்யானம் பன்னிக்க மாட்டேன். இன்னைக்கு காலை வரைக்கும் அவள பழிவாங்கனும்னு இருந்தவன் இந்த ஒரு எட்டு மணித்தியாளத்துல என் லைப் பார்ட்னர்னா அது இவ மட்டும்தான் என்ற உணர்வை ஏறப்டுத்திட்டா.இது சினிமாத்தனமா இருக்கலாம்.ஆனா இதுதான் முதல் தடவையா ஒரு பொண்ண பார்த்ததும் எனக்கு இப்படி தோனியிருக்கு. நான் இனி அவளுக்கு ,அவ ஏங்கின மாதிரி ஒரு நல்ல ப்ரெண்டா இருக்க போறேன்.சோ ப்ளீஸ் சங்கீ டார்லிங், இந்த மேட்டர இதோட மறந்துடு.நாளைக்கே அவளுக்கு கல்யான ஆசை வந்துச்சுன்னா கண்டிப்பா என்ன தேடி வருவா.அப்போ முதல் பத்திரிக்கை உனக்குத்தான் ஒக்கே" என்றவனை

"ச்ச்ச்சே அண்ணனும் தம்பியும் சூப்பர்டா.உங்கள பெத்து இந்த மாதிரி வளர்த்திருக்குற உங்க பேரண்ட்ஸுக்கு ஹெட்ஸ் ஆப்ப்..சூப்பர்டா.கண்டிப்பா நான் யார்கிட்டயும் சொல்லல்ல .ஆனா இவ உனக்குத்தாண்டா.கவலைப்படாதா "என்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro