19.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

புகளூரிலிருந்து சுமார் ஐம்பது மைல் தொலைவில் உள்ள வெள்ளியணை தான் கருணாமூர்த்தியின் சொந்த ஊர். அவரது மகள் இந்திராணியைத் தான் வாசுவின் ஊரிலுள்ள இரகுபதி தனக்கு  காதல் திருமணம் செய்துவைக்க வாசுவிடம் அழைத்து வந்தது..

ரகுபதியின் பார்வையே அவன் இந்திராணியை விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த, இந்த திருமணத்தைத் தடுக்கும் பொருட்டு அவளுக்கு திருமண வயது இன்னும் வரவில்லை என அவனை திட்டி விட்டு, வாசுவே பொறுப்பாக அவளிடம் இரகுபதியைப் பற்றி எடுத்துக் கூறி கருணாமூர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டு வந்தான்..

கருணாமூர்த்தி பரம்பரைக் கோடீஸ்வரர்.. அவரது மகளைத் திருமணம் செய்து கொண்டால் பணக்காரனாகி விடலாம் என்ற அவனது கனவுக் கோட்டை வாசுவால் தரை மட்டமாக்கப் பட்டது..
அதனால் ஆத்திரமடைந்த ரகுபதி வாசுவிடம் வம்பிழுக்க, வாசுவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.. இதுவரை மட்டுமே வாசுவிற்குத் தெரியும்..

ஆனால் அவன் தனக்கு கிடைக்க வேண்டிய இராஜ வாழ்க்கை பறிபோனதை நினைத்து வருந்தி, வேண்டுமென்றே அடியாட்களை கூட்டி வந்து அவனைத் தாக்க நினைக்க, அதற்கு முட்டுக் கட்டை வைத்தது பாஹீயின் பாதுகாவலர்கள்.. அத்தோடு மாணிக்கமும் இந்த விசயம் அறிந்து அவனை எச்சரித்து விட்டு சென்றார்.. அது அவர்களின் மீது பகை உணர்வை ஏற்படுத்தியது..

கருணாமூர்த்தியோ தன் மகளின் காதல் விசயத்தை அறிந்து அவள்மீது ஆத்திரத்தில் இருந்தார்.. இந்திராணி தனியாக இருக்கும் போது வீட்டில் நுழைந்த ரகுபதி அவளை திருமணம் செய்து கொள்ள மீண்டும் அழைக்க, வாசுவின் அறிவுரையின் படி அவள் மறுத்துவிட்டாள்.. கோபம் கொண்ட ரகுபதி அவளிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்க, அச்சமயம் கருணாமூர்த்தி வந்து தன் மகளைக் காப்பாற்றினார்.. தன் நோக்கம் பாழானதை எண்ணி ஆத்திரத்தின் உச்சியில் இருந்த ரகுபதி எதிர்பாரா சமயத்தில் இருவரையும் தான் கொண்டு வந்த கத்தியில் குத்தி கொன்று விட்டு, கத்தியில் தன் கைரேகையை அழித்துவிட்டு அதனை கருணாமூர்த்தியின் கையில் வைத்துவிட்டு தப்பித்து சென்றுவிட்டான்.

வேலையாளுக்கு பணத்தைக் கொடுத்தவன் மகளின் காதல் விவகாரம் தெரிந்து கருணாமூர்த்தி இந்திராணியைக் கொன்றுவிட்டு தானும் இறந்து விட்டார் என்று கௌரவக் கொலையாய் அதனை மாற்றிவிட்டான்.

தந்தையும் தங்கையும் இறந்த செய்திக் கேட்டு அடித்துப் பிடித்து ஓடிவந்தான் சுகதேவன்.. மருத்துவம் படிப்பதற்காக தாயுடன் நகரத்தில் தங்கியிருந்தவனுக்கு தங்கையின் காதல் விவகாரமும், தன் தந்தை தங்கையின் மீது வைத்திருந்த கோபமும் தெரியும். அவனுக்கு தன் தங்கை விரும்பியவனோடு வாழ்வதில் என்ன தவறு..அவள் ஆசைதானே முக்கியம் என்று தந்தையின் செயலில் கோபமாகத் தான் இருந்தான். அதனால் கடைசி இரண்டு நாட்கள் அவரோடு அலைபேசியில் கூட பேசவில்லை..
ஆனால் கொலை செய்யுமளவிற்கு போவார் என்று அவன் நினைக்கவே இல்லை..

அந்தசமயம் இரகுபதி ஓடி வந்து இந்திராணியின் பூத உடலின்மீது விழுந்து " ஐயோ .இந்து.. அநியாயமா எனைய விட்டு போயிட்டியே.. அந்த படுபாவி மட்டும் நம்ம கல்யாணத்தை தடுக்காம இருந்தா இந்நேரம் நீ உயிரோட இருந்துருப்பியே.. இந்து..நேத்து போன் பண்ணும்போது கூட உங்கப்பா கூட எனைய ஏத்துக்கிட்டார்னு சந்தோசமா சொன்னயே.. அந்த மோசக்காரன் பேச்சைக் கேட்டு மானந்தான் முக்கியம்னு உங்கப்பா மறுபடியும் தவறான முடிவெடுத்துட்டாரே.. ..அந்த வாசுப்பையன காப்பாத்த ஒரு கூட்டமே இருக்கு..ஆனா உனைய காப்பாத்த யாரும் இல்லாம போயிட்டாங்களே..

இனி நீ இல்லாத இந்த உலகத்துல எனக்கு என்னை வேலை..நானும் உங்கோடயே வந்தரேன்" கையில் கொண்டுவந்த விசத்தைக் குடிக்க முயற்சித்தான்..

அவனது இந்த முதலைக் கண்ணீரில் ஏற்கனவே தந்தையையும் தங்கையையும் இழந்த சோகத்தில் இருந்த சுகதேவன் ஏமாந்துவிட்டான்..

இது மட்டுமா.. அவன் வாழ ஆசைப்பட்ட வாழ்விற்காக தன்மேல் அனுதாபப்படும் வகையில் நடந்து கொண்டான்..

" எனக்கென்ன ஆனாலும் நீங்க உங்க ஆயுசுக்கும் ராஜா மாதிரி இருக்கனும்னு சொல்வியே இந்து.. நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன் "

என பல அடுக்குமொழி வசனங்களை பேசிப் பேசியே சுகதேவனின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்தான். அவனும் தன் தங்கையின் காதலன் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல உதவிகளை செய்ய ஆரம்பித்தான்.. எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் பாசம் என்று வரும்போது முட்டாளாகி விடுகின்றனர்..
தான் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று பல பொய்களை எடுத்துவிட்டான்..

கணவரையும் மகளையும் இந்த நிலையில் கண்ட சுகதேவனின் அன்னை சரஸ்வதிக்கு அதிர்ச்சியில் நெஞ்சு வலி வந்து படுத்த படுக்கையாகி விட்டார்.அதனையும் தனக்கு சாதகமாக்கி கொண்டு அவருக்கு சேவகம் செய்வதை போல நடித்து இன்னும் நற்பெயர் வாங்கிக் கொண்டான்.. தனிமரமாய் தனித்து நின்ற சுகதேவனை சூழ்ச்சியால் தன் வட்டத்திற்குள் கொண்டு வந்தான்.

வீட்டிற்குள் நுழைந்தாலே வரும் வெறுமையும், நோயுற்ற தாயையும் காணும்போது சுகதேவனின் நிலையை என்ன சொல்ல..
அமைதியாய் வாழ்வை இரசித்துக் கொண்டிருந்தவனின் வாழ்க்கை இருண்டுபோனதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. கூட, ரகுபதியின் பேச்சு அவன் மனதில் நஞ்சைக் கலந்தது.. தனது குடும்பம் அழிந்ததற்கு முக்கிய காரணம் வாசுவும் பாஹீயும் தான் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டான்.

சுகதேவன் விசாரிப்பவர்களும் சரியாக வாசுவினால் பாதிக்கப்பட்டவராக இருக்கப் போக, ரகுபதியின் கூற்றை மலைபோல நம்ப ஆரம்பித்தான்.

"தனது திருமணத்தை தடுத்துவிட்டு அவன் மட்டும் சந்தோசமாக இருக்கின்றான்.. எனது இந்துவைப் போல அவளது காதலியும் துடிக்க வேண்டும்... இல்லையேல் அவள் ஆத்மா கூட சாந்திக்காது " என்ற ரகுவின் உளறலில் சுகதேவன் செய்த முதல் தவறு..அவனது மருத்துவமனைக்கு வந்த பாஹீக்கு மின் அதிர்வு கொடுத்து கொல்வது.. ஆனால் அவளைக் கொல்ல அவனால் முடியவில்லை..பாதியில் நிறுத்திவிட்டான்..ஆனால் அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்பது மருத்துவனான அவனுக்கு நன்கு தெரியும்..

தன் கண்முன்னே அவள் இறப்பதையோ இல்லை பைத்தியமாக சுற்றுவதையோ பார்த்து  வாசு கதறுவதைக் கண்டு பேரானந்தம் அடைய வேண்டும்
என்ற ரகுவின் குறுக்குப் புத்திக்கு தோல்வியாக பாஹீக்கு ஒன்றும் ஆகவில்லை.. ( அதனால் அவள் வாழ்வு முழுதும் சிரமப்படுகிறாள் என்று அவர்களுக்கு பின்னர்தான் தெரிந்தது )

இரண்டாவது சுகதேவனின் பண செல்வாக்கைப் பயன்படுத்தி பாஹீயை வாசுவைத் தவிர்த்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைப்பது.. ஆனால் அதற்கு மாணிக்கம் ஒத்துக் கொள்ளவில்லை.. வாசுவின் மீது அளப்பறிய நம்பிக்கை வைத்திருந்தார் அவர்.. தொடர்ந்து வாசுவின் நடத்தைக்கு எதிராக ஆதாரம் கிடைக்கப் பெறவும் இது ஏதோ சூழ்ச்சி வலை என்பதை அறிந்து கொண்டு அதனை கண்டுபிடிக்க முயற்சித்தார் . ஆனால் அவராலும் யார் அந்த மொட்டை கடுதாசிகள் அனுப்புவது என்று தெரியாமல் தவித்தார்.
வாசு உண்மையில் பெண்கள் விசயத்தில் தவறானவன் என்பது போல சித்தரித்தே இரகுபதி சுகதேவனுக்கு கூறியிருந்தான்..

சரியாக அந்த நேரம் சுந்தர் ரேவதியை திருமணம் செய்து கொண்டு வர அவரின் மொத்த கோபமும் வாசுவின் மீது இறங்கியது..இனி பாஹீக்கு பிரச்சனை வரக் கூடாது என்பதற்காக வாசுவை அவமானப்படுத்தி வேறொரு மாப்பிள்ளை பார்க்க, அது பாஹீயின் கோபத்தை அனைவருக்கும் வெளிக்காட்டியது.. அவர்கள் வீட்டில் என்ன நடக்கின்றது என்பதை வேலையாள் வேலு மூலம் அவ்வப்போது அறிந்து கொண்ட ரகுபதி மற்றும் சுகதேவனுக்கு வாசு பாஹீயின் திருமணம் அதிருப்தியை ஏற்படுத்தியது..

( வேலு - பாஹீயால் வேலையை விட்டு தூக்கப்பட்டவன்.பின்பு மரகதத்திடம் கெஞ்சி வேலைக்கு சேர்ந்து விட்டான் )

மில்லில் பணத்தை களவாடச் செய்து அதனை பொய் கணக்கு எழுதி வாசு ஏமாற்றி விட்டான் என்ற மாயையை ஏற்படுத்தினான் இரகுபதி.. மாணிக்கமும் அதனை உண்மை என நம்பி வாசுவின் மீது புகார் கொடுத்தார்..ஆனால் அந்த திட்டமும் சுந்தரால் பலிக்காமல் போனது. வாசுவிற்கு
வேலை கிடைப்பதில், கிடைத்த வேலையில் ஏதேனும் இடர்பாடு என்று ஏதேனும் ஒன்றை ஏற்படுத்திய வண்ணமே இருந்தான் அவன்.

சுகதேவன் தனது தந்தைக்குப் பின் அவரது சாம்ராஜ்ஜியத்தை நிலைநிறுத்த சிரமப்பட்டு பல தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டிருக்க, ரகுபதி அவனது பணத்தை தண்ணியாக இறைத்து வாசுவிற்கு சிக்கல்களை கொடுத்துக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல ரகுபதிக்கு சாலை விபத்து ஏற்பட்டு ஒற்றைக் கால் அகற்றப்பட்டது.. எழுந்து நடக்கவே ஒரு வருடத்திற்கு மேல் ஆனது.. ஆனால் அவன் அந்த சூழ்நிலையிலும் இந்துவின் நினைவாக தற்கொலைக்கு முயற்சித்தேன் என்று சுகதேவனிடம் அனுதாபத்தை பெற முயற்சித்தான்..

இரகுபதியும் கொஞ்ச நாட்களுக்கு வாசுவை மறந்திருந்தான்.. விசாகனுக்கு ஐந்து வயதாகும் தருவாயில் தான் சுகதேவன் தொழில் விசயமாக புகளூர் வந்து சேர, அமைதியின் சொரூபமாய் அன்பின் வடிவமாய் இருந்த ராஜீயைக் கண்டதும் காதலில் விழுந்தான்.. அவளுக்காகவே நூலகத்திற்கு அடிக்கடி வருவான்.. அவர்கள் சந்திப்பு தனிமையில் நடப்பதற்கு தனது பாதுகாவலர்களை பயன்படுத்திக் கொண்டான்.
ராஜியும் அவனை காதலிக்க ஆரம்பித்த பிறகே அவள் பாஹீயின் தங்கை என தெரியவர நொறுங்கிப் போனான்.. ஆனாலும் அவளை விட்டுக் கொடுக்க அவன்மனம் ஒவ்வவில்லை..

அவளிடமிருந்து விலகிப் போக அவனுக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை..அதனால் தனது காதலைத் தொடர்ந்தான்.. இருந்தும் அவ்வப்போது வாசுவைப் பற்றி விசாரித்துக் கொள்வான்.. கேட்டால் அவனை பிடிக்கும் என்று சமாளித்து விடுவான்..ராஜியும் அதை உண்மை என நம்பி தனது காதலுக்கு வாசுவின் தயவு வேண்டும் என்று வாசுவுடன் நன்றாக பழக ஆரம்பித்தாள்.

அதுவரை ஓய்வில் இருந்த ரகுபதி நன்றாக சுதாரித்துக் கொண்டான்..அவனுக்கு திருமணமானால் அதுவும் ராஜியுடன் என்றால் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதற்காக சுகதேவனிடம் ராஜியை மறக்க கூற, முதன்முறை அவன்மேல் கோபம் கொண்டு எதிர்த்துப் பேசினான் சுகதேவன்..

வாசுவுடன் ராஜியை தொடர்பு படுத்தி புரளியை ஊருக்குள் வலம்வர வி்ட அப்போதும் அவன் நம்பவில்லை.. மாறாக ராஜியின் மீதுள்ள நம்பிக்கையால் வாசுவும் அதேபோல நல்லவனாக இருப்பானோ என்ற வகையில் அவன் யோசிக்கத் துவங்க, மறுபடியும் அவன் மனதை இந்து கருணாமூர்த்தியின் பெயரைச் சொல்லி ஏமாற்றி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்.

ஆனால் அவன் என்ன சொன்னாலும் ராஜியை விடமாட்டான் என்பதை புரிந்து கொண்டவன் வாசு உங்கள் காதலுக்கு எதிரியாக மாற வாய்ப்புள்ளது.. உங்களை பிரிக்காமல் இருக்க ஒரே வழி திருமணம் தான் என்று கூறி
ராஜியுடன் கோவிலில் திருட்டுத் தனமாக திருமணத்தை நடத்தி வைத்தான்..பின்னாலில் இவர்களை ஏற்றுக் கொண்டபின் விமர்சையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி ராஜியையும் சம்மதிக்க வைத்தான்.
காதல் மயக்கத்திலும் தேவாவின் மீது வைத்துள்ள காதலிலும் அவன் என்ன சொன்னாலும் கேட்கும் கைப்பாவையாகிப் போனாள் ராஜி....

திருமணத்திற்குப் பின்பு கூட அவர்கள் சந்திப்பு அடிக்கடி நடந்து கொண்டுதான் இருந்தது.. சுகதேவனும் தன் மனைவி என்கின்ற முறையில் வரம்பு மீற, காதல் கொண்ட பெண் மனது கணவனான அவனைத் தடுக்க நினைத்ததில்லை..

அவர்கள் வாழ்வும் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.. ஆனால் திடீரென நிகழ்ந்த சுகதேவனின் தாய் சரஸ்வதியின் மரணம் அவர்கள் வாழ்வைத் திருப்பிப் போட்டது..
அன்றிலிருந்து தேவா ராஜியை சந்திப்பதை நிறுத்திக் கொண்டான்.. கண்டிப்பாக இதில் இரகுபதியின் பங்கு இருந்தே ஆக வேண்டும் என்பதில் ஐயம் இல்லை..எமகாதகன் கடைசி வரை தான் இதில் பங்கு கொண்டிருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை..

எட்டு மாதங்கள் கழித்து வெளிநாடு சென்று திரும்பிய சுகதேவனுக்கு
ராஜி கருவுற்று இருப்பது தெரியவர அடித்துப் பிடித்து பாஹீயின் இல்லம் நுழைய, அதனால் ராஜீயுடன் சேர்த்து நான்கு உயிர்கள் போனது தான் மிச்சம்..

அதுவரை ரகுபதியின் பேச்சைக் கேட்டு ஆடிக் கொண்டிருந்தவன் தன் பிறக்காத குழந்தையை இழக்கவும் காரணம் பாஹீ குடும்பத்தினர் தானே என்ற தீராத கொலைவெறியில் வாசுவைக் கொல்ல நினைத்தான்..வாசுவின் நல்ல நேரம் அவன் குழந்தையோடு ஊரை விட்டு சென்றிருந்தான்.. வாசுவிற்கு பாஹீயின் நிலையே தண்டனை என நினைத்துக் கொண்டவன் தமிழகத்தை விட்டே சென்றிருந்தான்.. தனது தனிமையை, சோகத்தை, கோபத்தை என அனைத்தையுமே தனது தொழிலில் காட்ட, கே.எஸ்.ஆர் ( கருணாமூர்த்தி.சுகதேவன்.ராஜேஸ்வரி ) என்ற சாம்ராஜ்ஜியம் உருவானது..

தன் மகள் இறக்கவில்லை என்று தெரிந்தால் என்ன செய்வானோ இவன் ?

தனது பழைய நினைவுகளிலிருந்து மூழ்கியவனை உத்ராவின் குரல் கலைக்க,
அவளை உள்ளே வரச் சொன்னான் தேவா என்கிற கே எஸ்.ஆர்

" சார் நீங்க கூப்டிருந்தீங்க "

" எஸ்..மிஸ்....."

" உத்ரா சார்"

" குட்.. உத்ரா நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா"

" சார்"

அவள் சற்று பயத்துடன் அமர்ந்திருக்க, அவனோ உத்ரா அவனது மேஜையில் பொறுத்தி வைத்த மைக்ரோ ஸ்பீக்கரை எடுத்து வைத்தான்..

இந்த அப்டேட்ல தேவாவ பத்தி நிறைய சொல்லிட்டேன்..சிலர் வில்லன் ரகுபதின்னு சரியா சொன்னீங்க.. பார்க்கலாம் இனி என்ன நடக்கும்னு..
அப்ரோ பிளாஷ்பேக் மொக்கையா இருந்தா கம்பெனி பொறுப்பேற்காது மக்களே..மன்னுச்சு..🙈🙈🙈🙈🙈🙈🙈

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro