10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவனின் வார்த்தைகளில் உடனே சிரிப்பை நிறுத்தியவள் அமைதியானாள் அறிவு.

"ஏன்டா நீ வேற? உனக்கு வேலை எதுவும் இல்லையா? போ போய் உன் வேலையை பாரு." என்றார் அவனின் தாய் கமலி.

"என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க? நான் உங்க பிள்ளைம்மா. மருமக வந்தவுடனே மகனை கழட்டி விடவா பார்க்குறிங்களே?" என்றான் ஷிவா பாவமாய்.

"பார்த்து பார்த்து... போடா... உன் பப்பி பேஸ் இன்னைக்கு வேலை செய்யாது. இடத்தை காலி பண்ணு." என்றார் கமலி.

"ஹூக்கும்... ரொம்ப தான் பண்றிங்க. போங்க. நான் கோபமாய் போறேன்." என்று அவனின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்த அறிவிடம், "அவன் கிடக்குறான் லூசு பய. நீ வாம்மா." என்று அழைத்து ஹாலில் அமர வைத்து அவளை பற்றியும் அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் பேச தொடங்கினார்.

"என்னடா ஏதோ ஒரு காட்டில் கண்ணை கட்டி விட்ட மாதிரி இருக்கா?" என்று மென்மையாய் சிரித்தார்.

தன் மனதில் இருப்பதை அப்படியே அச்சு வார்த்தார் போல் கூறவும் அறிவழகி ஆச்சரியமாய் பார்த்தாள்.

"என் பையனை கல்யாணம் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்ட. இனி நீயும் என் பொண்ணு மாதிரி தான்டா. அதே நேரம் நான் உனக்கு அம்மா மாதிரி தான் இருக்க முடியும். என்ன தான் நான் உன்னை எவ்வளவு பாராட்டி சீராட்டினாலும் உன் அம்மா ஆக முடியாது. ஆகவும் கூடாது. கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டா அம்மா இல்லைன்னு ஆகிருவங்களா? இல்லையே. இப்போ என்ன சின்ன மனத்தாங்கல் அவ்ளோ தான.. அந்த ரணம் ஆறுவதற்கு தேவையான இடைவெளியை கொடுத்தா தானா ஆறிட்டு போகுது. என்ன இருந்தாலும் உன்னோட அம்மா தானே... உன் மேல உள்ள அளவு கடந்த அன்பினால் ஏதாவது ஒண்ணு ரெண்டு வார்த்தை அதிகமா வந்திருக்கும். எல்லாம் சரியாகிடும்னு. எதையும் நினைச்சு கவலை படக்கூடாது. உன் படிப்பு இன்னும் 4 மாசம் தான் இருக்குன்னு ஷிவா சொன்னான். நல்லா படிக்கணும். ஷிவா உன்மேல உயிரையே வச்சுருகான்டா. நீ  இன்னும் மேல என்ன வேணாலும் படிக்கலாம். நாங்க கூட இருப்போம். சரியா?" என்று அறிவழகியின் தலையை வாஞ்சையாய் தடவினார்.

அவரின் வார்த்தைகள் அவளுக்கு எவ்வளவு பெரிய பலத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்தது என்று அவர் அறிய வாய்ப்பில்லை.

சிவாவை அழைத்து புது மண தம்பதியரை பூஜையறை அழைத்து சென்று விளக்கேற்ற வைத்து, ஒரு வழியாக அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.

உண்டு முடித்ததும், அறிவழகியிடம் தன் போனை நீட்ட என்ன என்பது போல் பார்த்தாள்.

"ஹ்ம்ம். உங்க பாசமலர் தான் பேசு." என்று சோபாவில் அமர்ந்து டி.வி பார்க்க தொடங்கினான்.

ஷிவாவையும் போனையும் மாறி மாறி பார்த்தவள், "ஹலோ!" என்றாள் மெதுவாய்.

"குட்டிமா." என்றது தான் தாமதம்.

வேகமாய் வாசல் தாண்டி வெளியிருந்த பூந்தோட்டதில் நடந்தவள், அடக்கி வைத்திருந்த பெரு வெள்ளமாய் கண்ணீர் விட தொடங்கினாள்.

"குட்டிமா! அழாதடா." என்றான் அவானும் கண்ணீருடன்.

அழுகையை அடக்கியவள் "நீயும் அழுகாதண்ணா." என்றாள்.

"சாப்பிட்டியா டா." என்றான் கண்ணன்.

"இப்போ தாண்ணா கொஞ்சம் வந்தோம். சாப்பிட்டோம்." என்றாள் மெதுவாய்.

"ஏன் இவ்ளோ நேரம்? அப்போவே கிளம்புனிங்களே?" என்றான் குழப்பமாய்.

"கோவிலுக்கு போகணும்னு கூட்டிட்டு போனார். அதான் லேட்." என்றாள்.

"என்னது கோவிலுக்கா?" என்றான்.

"ஆமா?"

"நீ மட்டும் போனியா?"

"இல்ல. நான் வரலன்னு சொன்னேன். அவர் தான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு போனார்." என்றாள் அறிவு.

"நம்பவே முடியலையே... எனக்கு தெரிஞ்சு அவன் கோவிலுக்கு போறதை விட்டு எட்டு வருஷம் ஆச்சு. இன்னைக்கு உனக்காக தான் கூட்டிட்டு போயிருப்பான்." என்றான் கண்ணன்.

லேசான அதிர்ச்சியோடு முதல் முறையாக அவன் மேல் சிறு அன்பு எட்டி பார்த்தது.

"ஒஹ். சரிண்ணா." என்றாள்.

"அழகிம்மா.. அண்ணா உன்னை தடுக்காம அங்க அனுப்பிருக்கேன்னா ஷிவா உன் மேல ரொம்ப அன்பு வச்சுருக்கான். அவங்க குடும்பமும் அப்படி தான். நல்லா படிடா. இங்க எப்போ வேணாலும் வா. அண்ணன் இருக்கேன்." என்றான்.

"சரிண்ணா. அப்பா சாப்பிட்டாரா அண்ணா.." என்றாள் கரகரக்க.

"இல்லடா. அவருக்கு உன்னை நினைச்சு ரொம்ப கவலை. உள்ள போனவர் இன்னும் வெளிய வரலை." என்றான் கண்ணன் கவலையாய்.

"முதல்ல நீங்க எல்லோரும் சாப்பிடுங்கண்ணா. அப்பாவை பார்த்துக்கோ." என்று வைத்தாள்.

உள்ளே ஏதோ வாக்குவாதம் நடப்பது போல் இருக்க, வேகமாய் உள்ளே போனாள் அறிவு.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro