33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"என்ன செய்யலைன்னு கேளு... நான் அவ்ளோ தூரம் எச்சரிக்கை செய்தும் கேட்காம ரிஸ்க் ல போய் மாட்டிக்கிறா." என்றான் ஷிவா பயமும் கோபமும் கலந்து.

கண்ணன், "என்னடா சொல்ற? இந்த முறை என்ன பண்ணிங்க ரெண்டு பேரும்?" என்றான் கோபமாய்.

"டேய் நானே செம காண்டுல இருக்கேன். ஏதாவது பேசி நல்லா வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன். உங்க வீட்டலையும் இதே தான் பண்ணுவாளா?" என்றான்.

"டேய்! என் தங்கச்சி அப்படியெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டா. உன் காத்துதான் அடிச்சிருக்கு. என்னைக்கு நீ தாலி கட்டினியோ அப்போதுலர்ந்து இப்படி தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டு இருக்கா." என்றான் கண்ணன் கடுப்பாக.

"என்னாது?" என்று முறைத்தான் ஷிவா.

"இந்த முறை வரட்டும் என் ரூம்லயே கட்டி வச்சிடறேன்." என்றான் ஆத்திரம் அடங்காமல்.

"என்னது அறிவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்றான் ஜீவா அதிர்ச்சியாக.

"ஆமா... இவர் தான் அவ புருஷன்." என்றான் கண்ணன்.

"அதுக்கு தான் நீ சொன்னா காப்பாத்த கண்டிப்பா வருவாருன்னு சொன்னாளா? அடிப்பாவி. இதுல எனக்கு எதுவும் ஆகாது... ஆகவும் விடமாட்டார். ஏன்னா அவரோட உயரே நான் தான்னு டையலாக் வேற." என்றான் ஜீவா.

அதை கேட்டதும் சிவாவின் விழிகள் லேசாக கலங்க.

"டேய்! விடுடா. அழகியை பத்திரமா கூட்டிட்டு வரலாம். என்ன பிளான்?" என்றான் கண்ணன்.

"கண்ணா... எனக்கு பயமா இருக்குடா. அவன் உள்ள ரொம்ப கோபமா இருப்பான். ஏன்னா அவனோட எந்த பிஸினஸையும் விடாம ரெண்டே நாளில் தூக்கிருக்கேன். இப்போ அறிவு தான் என் மனைவின்னு தெரிஞ்சுது... அவ்ளோ தான். ஆபத்து தெரியாம இவளே போய் மாட்டிருக்காடா. கடவுளே அவளுக்கு எதுவும் ஆக கூடாது." என்று கண்கள் கலங்கியபடி நண்பனை கட்டி கொண்டான்.

"ஷிவா. உன்னை விட எனக்கு உயிரே இல்லடா. உனக்கு ஆறுதல் சொல்லனுமேன்னு சும்மா தைரியமா இருக்க மாதிரி காட்டிட்டு இருக்கேன். நமக்கு டைம் இல்லடா. சீக்கிரம். ஏதாவது செய்யணும்." என்றான் கண்ணன்.

"டேய் இங்க அவங்க ஆட்கள் தான் இருக்காங்க. ரொம்ப உஷாரா போகணும். நான் போறேன். பின்னாடி ஒரு வழி இருக்கு. ரொம்ப ரிஸ்க் தான். ஆனா என் அழகி ரொம்ப முக்கியம்டா. அவ இல்லாம நான் இல்லை. நீங்க ரெண்டு பேரும் பின்னாடி காம்பௌண்ட் கிட்ட யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி ஒரு வண்டில இருங்க. நான் அழகியோட வரேன்." என்று பின் வழியாக காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்து அங்கிருந்த பைப்பில் ஏறினான்.

ஒரு ஜன்னலின் வழியாக உள்ளே நுழைந்தவன் பதுங்கி பதுங்கி ஒவ்வொரு அறையாக பார்த்து கொண்டு வந்தான்.

அருகில் பேச்சு குரல் கேட்கவும் மெதுவாய் நகர்ந்து ஒரு அலமாறியின் பின் இருட்டில் மறைந்து கொண்டான்.

உள்ளே நுழைந்த இருவர்கள் ரகசியம் பேசினார்கள்.

"சார்." என்று தயங்கினான்.

"என்ன?" என்றான் இன்னொருவன்.

"அது?"

"எதுக்கு இப்போ இழுக்குற? சீக்கிரம் சொல்லு?" என்றான் எரிச்சலாக.

அவன் காதில் ஏதோ ரகசியம் பேச ஷிவாவிற்கு சரியாக கேட்கவில்லை.

"ஒஹ் அப்படியா செய்தி.. சூப்பர் சூப்பர்... நாம தேடி போகாமலேயே கிளி நம்ம கிட்ட மாட்டிக்கிட்டா. அப்போ அவனுங்க இங்க வருவானுங்க. ஓகே அப்போ விருந்துக்கு வேற பொண்ணுங்களை ஏற்பாடு பண்ணிடு." என்றான்.

"சார் அப்புறம் அந்த ஸ்கூல் பொண்ணை விட்டுடலாமா?" என்றான் தலையை சொறிந்தபடி.

"எதுக்கு?"  என்றான் தெனாவட்டாய்.

"சார் அவங்க தங்கச்சய விடனும்னு தான் அந்த பையன் இந்த பொண்ணை கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனான்" என்றான் மெதுவாக.

"டேய் நாம என்னைக்கு சொன்ன மாதிரி செய்துருக்கோம். அதுவும் இல்லாம தானா வந்து ரெண்டு கிளி மாட்டும்போது விட்டுடுவாங்களா? ஸ்கூல் பொண்ணு ரொம்ப முக்கியம் டா. அவளுக்கு தான் இப்போ மவுசு ஜாஸ்தி. ஹ்ம்ம்.. இப்போ இவ வேற அவனோட பொண்டாட்டின்னு தெரிஞ்சிருச்சு. சோ... அவ இனி யாருக்கும் இல்ல எனக்கு மட்டும் தான். சும்மா சொல்ல கூடாது. உலக அழகி இல்லைன்னாலும் பார்க்கும்போதே ஆளை மயக்குற அழகி தான். சீக்கிரம் அவன் வரதுக்குள்ள அவளை இடம் மாத்துங்க. ஒரு இன்ஜெக்ஷன் போட்டு என் கார்ல போடுங்க. மீட்டிங் வேற இடத்துக்கு மாத்துங்க. இன்னைக்கு எனக்கு ஸ்பெஷல் டே. நான் அவக்கூட இருக்க போறேன். காமான் குய்க்." என்று வேகமாய் வெளியேறினான்.

முகம் மட்டுமல்ல உடலும் வேர்த்து கொட்டி முழுதும் நனைந்து உள்ளுக்குள் ஒரு புறம் பயம் வந்தாலும் ஒரு புறம் ஆக்ரோஷமான கோபம் பொங்கி கொண்டிருந்தது ஷிவாவிற்கு.

'அழகி ஏன்டி இப்படி பண்ண? என்கிட்ட சொல்லிருந்தா நான் அந்த பெண்ணை காப்பாதிருப்பேனே... இப்படி அவசர பட்டுட்டியேடி.' என்று உள்ளுக்குள் குமுறியவன்.

'இதுக்கு இன்னொரு ஆள் கண்டிப்பா வேணும். அவனை தான் வர சொல்லணும்.' என்று தன் போனில் குறுஞ்செய்தி அனுப்பினான்.

"எமர்ஜென்சி. கான்டக்ட் கண்ணன் இம்மிடியட்லி. டோன்ட் டிலே." என்று அனுப்பிவிட்டு கண்ணனுக்கு போன் செய்து விபரங்களை சுருக்கமாய் கூறி,

"டேய் கண்ணா! நம்மாளுங்க ஒவ்வொருத்தரையா உள்ள வர சொல்லு. மாட்ற எவனையும் விட கூடாது. எல்லோரையும் ஒரே ரூம்ல போட்டு வைக்க சொல்லு. என்னால இங்க உள்ள அழகியை தூக்க முடியலைன்னா அவன் கார் டிக்கிலர்ந்து நீ தான் காப்பாத்தனும் கண்ணா. ஜாக்கிரதை. இந்த சான்ஸ் மிஸ் பண்ணோம். அவனை பிடிக்கிறது கஷ்டம். அவனையும் பிடிக்கணும். நமக்கு முக்கியமா இன்னொரு ஆள் தேவை. நான் அவனை வர சொல்றேன். நீ டிடைல் சொல்லிடு." என்று மிக மெதுவாக குரலில் கூறிவிட்டு பதுங்கி பதுங்கி வெளியே சென்றான்.

பக்கத்து அறையில் இருந்த இருவரை அடி வெளுத்து மயங்கவும் ஒருவனின் உடையை மாற்றி கொண்ட பின் அவர்களின் கை கால்களை அவசரமாக கட்டி அங்கே இருந்த கப்போர்டில் மறைத்து விட்டு மெதுவாய் வந்த தடம் தெரியாமல் வெளியேறினான்.

அடுத்தடுத்த இருந்த அறைகள் காலியாக இருக்க மேலும் மற்ற அறைகளை நோக்கி சத்தம் வராமல் சென்று பார்க்க தொடங்கினான்.

திடீரென்று சந்தில் இருந்து நிறைய பேர் வரும் சத்தம் கேட்கவும் காலியாக இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாற்றி சிறிய ஓட்டையில் பார்க்க தொடங்கினான்.

அந்த அறையை நோக்கி மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். வேகமாய் நகர்ந்து மறைவாய் ஒளிந்து கொள்ள, உள்ளே வந்தவர்கள் அந்த பள்ளி மாணவியை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்த பின், "இந்த ரூமை லாக் பண்ணிடு.மீட்டிங் ப்லெஸ் எதுன்னு முடிவானதும் உடனே இவளை இடம் மாத்திடனும்." என்றான் ஒருவன்.

"அண்ணே அப்போ இந்த காலேஜ் பொண்ணு?" என்றான் இன்னொருவன் தன் தோளில் சுமந்திருந்த அழகியை காட்டி.

இன்னொருவன் விஷமமாய் சிரித்து, "டேய்! அவளுக்கு ரெண்டு ஊசி போட்டிருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எந்திரிக்க மாட்டா. அதுக்குள்ள சாரோட ரூமுக்கு கூட்டிட்டு போய்டனும். ஒரு மணி நேரத்துக்குள்ள இன்னொரு ஊசியும் மெதுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடும். அடுத்த அரைநாள் நம்ம போதை ஊசியோட எபெக்ட் இருக்கும். அதுக்குள்ள நம்ம சார் என்ன செய்யனோமோ கரெக்ட்டா முடிச்சு பெர்மனேன்ட்டா கூட வச்சுப்பார். ஆனாலும் செம அழகுடா. ஹ்ம்ம். எங்கிருந்து தான் தானா தேடி வந்து இவருக்கு மட்டும் மாட்டுதுங்களோ தெரியலை. மச்சம் தான் அவருக்கு." என்று சிரித்தான்.

"அப்போ பாஸோட கார் டிக்கில போட்றவா?" என்றான் அவன்.

"டேய் டேய் அவசரமாய்" மறுத்தவன், "முதலில் யாரோ ஒருத்தி அதனால அப்படி, ஆனா இப்போ சாரோட ஆள். சோ அவளை பத்திரமா தனி கார்ல கூட்டிட்டு போய் சேர்க்க சொல்லிருக்கார். என்னோட கார்ல படுக்க வச்சுரு. நான் இப்போ கிளம்ப போறேன். கொண்டு போய் விட்டுட்டு வந்துருவேன். அதுவரைக்கும் இவ பத்திரம் யாரும் இந்த ரூம்குள்ள வர கூடாது. கிழ ஸ்டெப்ஸ்ல  நில்லுங்க யாரையும் மேல விட கூடாது." என்று பேசியபடி மூவரும் வெளியேறினர்.

அவர்கள் பேசியதை கேட்டதும் கொதித்தவன், "அழகி..." என்று பற்களை கடித்தான்.

'இனி அவளுடன் யாரும் இருப்பது அவளுக்கு சேப் இல்ல. நான் தான் இருக்கணும்.' என்று நினைத்தவன்.

உடனே கண்ணனுக்கு அழைத்து தான் வந்த வழியை கூறியவன் உடனே அந்த ரூமிற்கு வர சொன்னான்.

"டேய் நான் அழகியை கண்டிப்பா கூப்பிட்டு வந்துருவேன். நீ அந்த பொண்ணை வெளிய கொண்டு வந்துரு." என்றான் கண்ணன்.

"கண்ணா! நிலமை தெரியாம பேசாத. இப்போ நான் மட்டும் தான் அவ கூட இருக்கணும். என்னால மட்டும் தான் அவளை சமாளிக்க முடியும். புரிஞ்சுக்கோ. அவளுக்கு இன்ஜெக்சன் போட்ருக்காங்க. ப்ளீஸ் நீ சீக்கிரம் வா. நீ வேஸ்ட் ஆகிற ஒவ்வொரு நொடியும் அழகிக்கு ஆபத்து. ஹரனை அந்த லூசு ஹெட்டை பாலோ பண்ண சொல்லிருக்கேன். நீ வா." என்றான் ஷிவா கண்கள் கலங்க.

"இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள அங்க இருப்பேன்." என்றான் கண்ணன்.

"ஜீவா நீ அழகி இருக்க காரை பாலோ பண்ணு. ஷிவா வந்ததும் இங்க திரும்பி வந்து எனக்கு மெசேஜ் பண்ணு என்ன பண்ணனும்னு சொல்றேன்." என்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro