34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹரனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

"அவன் வேற ஒரு ஹோட்டல்ல மீட்டிங் ஏற்பாடு பண்ணிட்டான். இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஆரம்பிக்க போகுது. அர்ரெஸ்ட் பண்ணட்டா?" என்று கேட்டிருந்தான்.

"நீ ஒரு ஆள் மட்டும் எப்படி? ங்க நிறைய பேர் இருப்பாங்க." என்றான் ஷிவா.

"நான் என் பிரெண்ட்ஸ் அஞ்சு பேர் கூட வந்திருக்கேன்." என்றான்.

"ஓகே. இங்க நடக்கிற எதுவும் அவனுக்கு தெரிய கூடாது. முதல்ல அவன் போனை தூக்கு. மீட்டிங் ஆரம்பிகட்டும் ஸ்டார்ட் ஆனவுடன் அவனுங்களையும் சேர்த்து அரேஸ்ட் பண்ணு. நம்ம இடத்துல வை. நான் நாளைக்கு பார்க்கிறேன். எனக்கும் அவனுக்கும் ஒரு கணக்கு இருக்கு. வெளிய யாருக்கும் தெரிய கூடாது." என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.

கண்ணன் ஒருவழியாய் ஷிவா கூறியபடி வந்து கதவை திறக்க,
"டேய்! நீயும் இங்க இருக்க வேணாம். இந்த பொண்ணை தூக்கிட்டு போக இப்போ அவங்க வருவாங்க. உடனே நாம இங்கிருந்து வெளிய போகணும். சீக்கிரம் தூக்கிட்டு வா. நான் முன்ன போறேன்." என்று வேகமாய் சென்று மறைந்தான்.

"சார்! எங்க இருக்கிங்க? அறிவை ஒருத்தன் தூக்கிட்டு வந்து காரில் படுக்க வச்சுட்டு போய்ட்டான்." என்றான் ஜீவா பதட்டமாய்.

"நீ எங்கே இருக்க ஜீவா?" என்றான் ஷிவா.

"நான் அறிவு வச்சுருக்க காரோட பின் சீட்ல தான் ஒளிஞ்சுட்டு இருக்கேன்." என்றதும் ஒரு பக்கம் நிம்மதி பெருமூச்சும் ஒரு பக்கம் அழகியின் நிலையும் அவனை நிலைகுலைய செய்தது.

"ஜீவா! நான் வந்துட்டே இருக்கேன். இப்போ இன்னொருத்தன் வருவான். அவனை எப்படியாவது பிளாட் ஆகிடு. நான் வந்துடறேன். பத்திரம். அப்புறம் அழகி..." என்று எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.

"அறிவுக்கு என்ன சார்?" என்று பதறினான்.

"இல்ல ஒன்னுமில்லை. அவளுக்கு மயக்க ஊசி போட்டுருக்கங்க. அதனால அவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ. நான் வந்துடறேன்." என்று வைத்தவன் எப்படி இப்பொழுது இந்த பெண்ணை கீழே இறக்குவது என்று யோசித்தான்.

உடனே அப்பெண்ணின் துப்பட்டாவை கழட்டி கண்ணனின் முதுகில் சேர்த்து கட்டினான்.

"என்னடா பண்ற?" என்று பதறினான் கண்ணன்.

"அட ச்சி வாய மூடு. இவ உனக்கு இப்போ இன்னொரு அழகி. பத்திரமா சீக்கிரம் கிழ இறங்கு. நான் அழகிய பார்க்கிறேன்." என்று பதிலுக்கு காத்திராமல் இறங்கி காரை நோக்கி ஓடினான்.

காரிடம் பதுங்கி வந்து கதவை திறக்க, அங்கு ஜீவா அவனுடன் போராடி கொண்டிருந்தான்.

ஷிவா கோபத்தில் ஓங்கி ஒரு குத்து விட, மயங்கி சரிந்தான்.

"ஜீவா அப்டியே உட்காரு." என்று காரை ஸ்டார்ட் செய்து பின்னுக்கு பத்தடி தள்ளி நிறுத்தினான்.

"வா இவனை டிக்கில போடலாம்." என்று இருவரும் சேர்ந்து டிக்கியில் வைத்து முடிக்கவும், கண்ணன் அந்த பெண்ணுடன் வரவும் சரியாக இருந்தது.

"சீக்கிரம்." என்று கண்ணன் ஏறியவுடன் கார் வேகமாக பறந்தது.

தன் கை கடிகாரத்தில் மணியை பார்த்தவன் காரை ஓரமாய் நிறுத்தி, "கண்ணா நீ ஒட்டு. என்னை வீட்ல விட்டுட்டு இந்த பொண்ணை ஹாஸ்ப்பிடல்ல சேர்த்துரு. ஜீவா இவங்க வீட்டுக்கும் சொல்லிடு. விஷயம் வெளிய யாருக்கும் தெரிய கூடாது." என்று ஜீவாவை நகர்ந்துகொள்ள சொல்லி அழகியின் அருகில் அமர்ந்து தன்னோடு அணைத்து கொண்டான்.

ஜீவாவும் சிவாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.

ஷிவா வீட்டில் இறங்கியவுடன், "எல்லாம் முடிச்சுட்டு எனக்கு சொல்லு கண்ணை." என்று அழகியை தன் அறைக்கு தூக்கி சென்றான்.

"என்னாச்சுடா?" என்று பதறிய அன்னையிடம் ஏதோ ஒரு காரணத்தை கூறி ரெஸ்ட் எடுக்கணும் என்று கூறி கதவை அடைத்தபின் தான் நிம்மதி பெருமூச்சு வந்தது.

மெதுவாய் அழகியின் அருகில் அமர்ந்து, நெற்றியை தொட்டு பார்த்தான்.

லேசாக சுட ஆரம்பித்தது.

"என்ன வேலை பண்ணி வெச்சுருக்க அகி?" என்று மிகவும் சோர்ந்தவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

நேரம் ஆக ஆக அவனுக்குள் பதட்டம் தொற்றி கொண்டது.

கண் விழிக்காமலே லேசாக அழகி அசைவது தெரிந்ததும் வியர்க்க தொடங்கியது.

"அழகிம்மா இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு உன்னை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை." என்றவன் கண்கள் கலங்க தொடங்கின.

"ஷிவு..." என்றவளின் தளிர் கரம் அவன் முகத்தையும் தாண்டி அவன் தேகத்தில் வருடிட, வலியில்லாமலே துடிக்க ஆரம்பித்தான்.

எத்தனை நாட்கள் அவளின் வருடலுக்காக காத்திருந்தான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு தொடுதல் அவனுக்கு இனிக்கவில்லை... மாறாக நெருப்பில் நிற்பது போல் அவனின் மேனி தகித்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.

"அகி மா. ஏதாவது சாப்பிடறியா?" என்றான் அவளின் தலையை வருடி.

ஒற்றை விழியை திறந்து, "ம்ம்... ஷிவு..." என்றாள்.

"சரி இங்கேயே இரு. நான் உடனே வரேன்." என்று வேகமாய் வெளியேறி சிறிது நேரத்திலேயே, தட்டில் தோசையுடன் வந்தான்.

எழுப்பி அமர வைத்து ஊட்ட தொடங்கினான். சாப்பிட்டு கொண்டே இருந்தவள். வேகமாய் எட்டி,

"ஷிவு... லவ் யூ..." என்று சிவாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவ்வளவு தான் சுழல்கின்ற உலகமும் தன் காலடியில் நின்றுவிட்டது போன்ற உணர்வு தோன்ற கடினப்பட்டு கண்ணீரை அடக்கியவன்.

"அகி மா. நான் சொல்றது உனக்கு புரியுதா தெரியல. நீ இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க. நீயும் நானும் மனசு முழுக்க காதலும் அன்பும் நிறைஞ்சு நம்ம வாழ்க்கையை தொடங்கணும்னு நினைக்கிறேன். ப்ளீஸ் ஹெல்ப் பண்றா. இன்னைக்கு மட்டும் ஏதாவது ஏடாகூடமா நடந்தா நம்ம வாழ்க்கை முழுக்க அது ஒரு ஆறாத வடுவா மாறிடும்." என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

நேரம் ஆகவும் அவளின் மெதுவான சீண்டல்களும் தீண்டல்களும் சிவாவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி திணறடித்தன.

ஒரு நிலைக்கு மேல் முடியாமல் அழகியை தூக்கி சென்று ஷவரின் அடியில் குளிர்ந்த நீரில் நிற்க வைத்து விட்டான்.

"சாரி டா. இன்னும் கொஞ்ச நேரம் தான்." என்று அவளை அணைத்து கொள்ள, சிலிர்த்து அவனின் மார்பில் முத்தமிட்டாள் அழகி.

பட்டென விலகியவன் வேகமாய் வெளியேறி பால்கனியில் நின்று கொண்டான்.

அவனுள் எழும் எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணற தொடங்கினான்.

"அழகி ரொம்ப படுத்துறடி... நீ என்னை விரும்ப ஆரம்பிச்ச பிறகு இருக்குடி உனக்கு." என்று மனதிற்குள் கருவியவன் அவளின் இந்த நிலையை நினைத்து கலங்கியிருக்க, அவளை இந்நிலைக்கு ஆளாக்கியவன் மீது கொலை வெறி உண்டாக, ஹரனிற்கு போன் செய்தான்.

"ஹலோ!"

"ஹெலோ அண்ணா! சாரிடா லேட்டா கால் பண்றேன்." என்றான் ஷிவா.

"பரவால்லடா. நானும் இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். எல்லாரையும் ரெண்டு இடத்திலையும் அரஸ்ட்  செஞ்சாச்சு." என்றான்.

"ஒகேணா. இனி நான் பார்த்துக்குறேன். நீ சேப்பா இரு. பை." என்று வைக்கும் முன்.

"இருடா." என்றவன் தயங்கி, "கண்ணன் அழகிக்கு என்ன ஆச்சுன்னு சொன்னான். இப்போ எப்படி இருக்கா?" என்றான் தயங்கி.

"கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது சமாளிக்க. இப்போ பரவால்ல ண்ணா. நீ தூங்கு." என்று வைத்துவிட்டான்.

"ஷிவு... ஷிவு..." என்று அழகியின் குரல் கேட்கவும்.

அவசரமாய் குளியறைக்குள் நுழைந்தவன் ஒரு நொடி திகைத்து நின்றான்.

"ம்ப்ச்... அழகி என்ன பண்ற?" என்று அவள் மேலாடையை கழற்ற முயற்சித்து கொண்டிருக்க, அவளின் கரங்களை பற்றி தடுத்தவன் கரங்கள் நடுங்க உடையை சரி செய்தான்.

"என்ன ஷிவு? குளிச்சுட்டேன் ட்ரெஸ் மாத்தனும்ல? அதான் ட்ரெஸ் கழட்றேன்." என்றாள் பாவமாய்.

"சரி ஒரு ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ணு. நான் டவல் தரேன் தொடச்சுட்டு ட்ரெஸ் மாத்திக்கோ." வெளியே சென்று டவலுடன் கதவை லேசாக தட்டினான்.

"ஷிவு..." என்று கதவை திறக்க போக,

"நில்லு ஆகி. இந்தா டவல் தொடச்சுட்டு ட்ரெஸ் பெட்டில் இருக்கு. வந்து மாத்திக்கோ." என்று பால்கனியில் நுழைந்து கதவை சாற்றி கொண்டான்.

இதயம் ஏனோ இந்த நொடி பலமடங்கு அதிகமாய் துடிப்பது போல் இருந்தது.

பத்து நிமிடங்கள் கடந்தது. தயங்கியபடியே கதவை மெல்ல திறந்து எட்டி பார்த்தான்.

உடை மாற்றி படுத்திருந்தாள் அழகி.

அவளருகில் சென்றவன், "அகிம்மா... ஒரு நிமிஷம் எழுந்துகோடா.." என்று ட்ரையரில் தலையை ஆறவைத்து அவ்வளவாக இல்லையென்றாலும் அவளின் சேட்டைகள் குறைந்திருக்க அரும்பாடுபட்டு அழகியை உறங்க வைத்தான்.

"எப்பா இதே நார்மலா இருந்தா அவ உடையும் நடையும் திமிரும் கெத்தும்... ஹம்.. இந்த அழகியும் அழகு தான். ஆனா என்னை கொஞ்சம் இல்ல ரொம்ப படுத்திட்டா." என்று சிரித்தான்.

மெல்ல அவளருகில் நெருங்கி படுத்தவன் அணைத்து கொண்டு உறங்கியும் போனான்.

மறுநாள் காலை,

தலையை பிடித்து கொண்டு எழுந்தாள் அழகி.

'என்ன தலை இப்படி வலிக்குது. நாம எங்க இருக்கோம்? நேத்து நாம அவனுங்க இடத்துக்கு தானே போனோம். எதுவும் நியாபாகத்துக்கு வரலையே. என்ன நடந்துச்சு." என்று தலையை பிடித்து கொண்டு யோசித்தவள் குனிந்து பார்க்க அதிர்ந்து போனாள்.

"எப்படி எப்படி என் ட்ரெஸ்... மாத்திருக்கு." என்று யோசித்தபடி திரும்பி பார்க்க அங்கே ஷிவா உடைகள் லேசாய் கலைந்து மிகவும் சோர்வாய் உறங்கி கொண்டிருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro