36

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"ஏன் அறிவு திட்ற?" என்றான் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு.

"டேய் டேய் நல்லவன் மாதிரியே நடிக்காத? என்ன என் புருஷன் என்னை காலேஜ்கு கூப்பிட சொன்னாரா?" என்றதும் கருமணிகள் இரண்டும் வெளிவருவது போல் முழித்தான் ஜீவா.

"மூஞ்ச பாரு... ஒரு பொய் கூட ஒழுங்கா சொல்ல தெரியலை. உன்னை போய் ஹெல்ப் கேட்டாரு பாரு என்ற மாமா. அவரை சொல்லனும்." என்று தலையிலடித்து கொண்டவள்.

"நேத்து என்ன நடந்துச்சு? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை... அதனால ஒன்னு விடாம இப்போ சொல்ற? இல்ல பிரெண்டுன்னு பார்க்காம கொலை பண்ணிடுவேன்." என்றாள்.

"அடிப்பாவி... உன் கையாள சாகவா அடம்பிடிச்சு பிரெண்டானேன்?" என்றான் ஜீவா.

"அது என் தப்பில்லை. எல்லாம் உன் விதி. நான் எதுவும் சொல்றதுக்கில்லை." என்று உதட்டை பிதுக்கினாள் அழகாய்.

இவற்றை ஜீவாவின் போனில் கேட்டு கொண்டிருந்த ஷிவாவிற்கு சிரிப்பு தாளவில்லை.

'நான் அவனை ஹெல்ப் கேட்டேன்னு எப்படி கண்டுபிடிச்சா? நான் மாமாவா? அடியேய் உன் சேட்டை ரொம்ப அதிகமா போகுது.' என்று செல்லமாய் திட்டிக் கொண்டவன்.

"எல்லாம் சரியாகட்டும்டி செல்லம். அப்புறம் பார்க்குறேன் உன் திமிரெல்லாம் எப்படி என்கிட்ட பலிக்குதுன்னு?" என்று சிரித்தான்.

"என்ன நடந்துச்சா? உன் புண்ணியத்துல ஏதோ சினிமா படத்தை பார்த்த மாதிரி இருந்தது." என்று நடந்த கதையை கூறவும் இவ்வளவு நடந்துருக்கான்ன்னு அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள் அழகி.

"அய்யோ அதான் செம காண்டாகி பேசாம இருக்காரா?" என்று புலம்பியவள் தலையிலடித்து கொண்டாள்.

"என்னது பேசலையா? யார் பேசளை?" என்றான் ஜீவா வாயை மூடாமல் அதிர்ச்சியாக.

"ஈ போக போகுது? வாயை மூடுடா குரங்கு. விடு என் மாமா தான கோபமா இருக்காரு... அதெல்லாம் நாங்க அவர் கோபத்தை குறைச்சுடுவோம். போடா... வந்துட்டான் பேசலையான்னு.. பசிக்கலையான்னு..." என்று ஜீவாவின் தலையில் நங்கென்று கொட்டினாள்.

"அஹ்ஹ்... எதுக்கு இப்போ கொட்டினே பிசாசே?" என்றான் தலையை தேய்த்தபடி.

அவளின் பேச்சையும் சேட்டையையும் கேட்ட சிவாவின் இதழ்களில் அழகாய் புன்னகை விரிந்தது.

இனி அவள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு சென்று விடுவாள் என்று நினைத்தவன், "வாய் வாய்... என்னா வாய்." என்று வைத்துவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க சென்றான்.

அன்றைய பொழுது முடிந்தவரை அழகியை வம்பிழுத்து கொண்டும் சிரிக்க வைத்து கொண்டும் இருந்தான் ஜீவா.

கணவன் காலையில் கூறிய செய்தியில் ஆட்டம் கண்டிருந்தவளால் இனி எப்படி அவரை எதிர்கொள்வது, என்ன செய்வதென்று புரியாமல் உள்ளுக்குள் கலங்கி நின்றாலும் தனக்காகவே இல்லாத சேட்டையெல்லாம் செய்து வரும் நண்பனிற்காக இதழில் மட்டும் புன்னகையை பொருத்தி கொண்டிருந்தாள் அறிவழகி.

மாலை வீடு வந்தவள் தங்களின் அறைக்கு சென்றதும் நேற்று நடந்ததாய் கணவன் கூறியது ஞாபகத்தில் வரவும் உள்ளே இருக்க முடியாமல் வேகமாய் தோட்டத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

"அண்ணி" என்று அருகில் வந்து அமர்ந்த சுபா, என்னாச்சு ஏன் இங்க உட்கார்ந்துருக்கிங்க? அண்ணன் எதாவது திட்டினாரா? காலைலர்ந்தே உங்க முகம் சரியில்லையே?" என்றாள் கவலையாக.

கடினப்பட்டு முகத்தை இயல்பாக வைத்து கொண்டவள், "அதெல்லாம் ஒன்னுமில்லைடா. ஏதோ யோசனை... நீ எப்போ வந்த?" என்றாள் சாதாரணமாக.

"இப்போ தான் வந்தேன் அண்ணி. நாளைக்கு க்ளாஸ் டெஸ்ட் இருக்கு. எனக்கு கொஞ்சம் டௌப்ட்ஸ் இருக்கு சொல்லி தரிங்களா?" என்றாள் முகத்தை சுருக்கி.

"கண்டிப்பா சொல்லி தரேன். நீ முதலில் போய் சாப்பிட்டு வா. அப்புறம் சொல்லி தரேன்." என்றாள் அழகி.

"அண்ணின்னா அண்ணி தான்." என்று அழகியின் கழுத்தை கட்டி கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு ஓடினாள் சுபா.

"ஏய் வாலு.." என்று கன்னத்தை துடைத்து கொண்டு சிரித்தபடி வாசலை பார்க்க சிவாவின் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது.

இவள் அவனின் பார்வை தன் மேல் படாதா என்று ஏங்கியிருக்க, இவளின் நிலை அறிந்தும் வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றான் ஷிவா.

பத்து நிமிடம் கழித்து வாசலில் ஒரு வண்டி வந்து நிற்க, "யார் வந்துருக்கா? வாசல்லயே வண்டி நிக்குது." என்று எழுந்து வாசல் வரை வந்து அழகி நிற்கவும், வண்டியிலிருந்தவர்.

"ஷிவா சார் வீடு இது தானே மேடம்?" என்றார்.

"ஆமாங்க.. நீங்க யாரு? எதுக்கு அவங்களை கேட்கிறீங்க?" என்றாள் அழகி.

"உள்ள எடுத்துட்டு வாங்க." என்று பின்னால் இருந்து குரல் கேட்கவும், திரும்பி அவனை பார்க்க அதை கண்டுகொள்ளாது வாசலில் இருந்த வண்டியின் மீது பார்வையை பதித்திருந்தான் அவள் கணவன்.

'ரொம்ப தான்டா பண்ற? என்னை பார்க்க மாட்டியோ? இருக்குடி உனக்கு... நான் இங்கே இருக்கும் போது அப்படி என்னத்தை இவ்ளோ ஆசையா பார்க்கிறான்?' என்று திரும்பி பார்க்க, அங்கே அவளுக்கு பிடித்த நிறத்தில் அழகிய புது ஸ்கூட்டியை தள்ளி கொண்டு வந்து நிறுத்தினர்.

'ஐ! பைக்கு...' என்று உள்ளுக்குள் குதித்தவள் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் பார்த்திருந்தாள்.

அவளை ஒர விழியால் பார்த்தவன், "சுபா." என்றான்.

"என்ன அண்ணா?" என்று உள்ளே இருந்து ஓடி வந்தாள் சுபா.

"சுபா... காலேஜ்கு போக இனி ஆட்டோ தேவையில்லை. பைக் வாங்கிருக்கு அதுல போக சொல்லு." என்றான் எங்கோ பார்த்தபடி.

'ம்க்க்கும் ஏன் அதை துரை நேரடியா என்கிட்ட சொல்ல மாட்டாரோ? இருடா... உன்னை... நைட் தூங்கும் போது எறும்பு எடுத்து காதுக்குள்ள விட்டுடறேன்.' என்று அவனை முறைத்தவள்.

"சுபா எனக்கு ஆட்டோவே போதும். நீயும் தானே காலேஜ் போற? நீ எடுத்துட்டு போ." என்றாள் அழகி.

"அய்யோ அண்ணி... நீங்க வேற? எனக்கு சைக்கிளே ஓட்ட தெரியாது. இதுல பைக் எங்க ஓட்ட? இது உங்களுக்கு தான். நீங்க ஓட்டுங்க." என்று சிரித்தாள்.

"எனக்கு வேண்டாம் சுபா. எனக்கு வேணும்னா எங்க அப்பாகிட்ட இல்ல என் அண்ணன் கிட்ட கேட்டு வாங்கிக்குறேன். இதை ரிட்டர்ன் பண்ணிட்டு சொல்லு." என்றாள் அழகியும் விடாமல்.

அதில் கோபமுற்றவன், "சுபா! நாளைக்கு காலைல இந்த பைக்ல காலேஜ்க்கு போகலை அப்புறம் புதுசுன்னு பார்க்க மாட்டேன். கொளுத்திட்டு தான் மறு வேலை பார்ப்பேன். ஜாக்கிரதை." என்று சென்றுவிட்டான் ஷிவா.

"ஏன் அண்ணி? அண்ணன் எவ்ளோ ஆசையா உங்களுக்காக வாங்கிட்டு வந்திருக்கார்? அதை போய் வேணாம்னு சொல்றிங்க? ஒழுங்கா எடுத்துட்டு போங்கண்ணி." என்று உள்ளே சென்றுவிட்டாள் சுபா.

"அய்யோ! ஒரு கோபம் கூட ஒழுங்கா பட முடியலை படுத்துறானே..." என்று கோபத்தில் தரையில் காலை ஓங்கி மிதத்தாள்.

அன்று இரவு சுபாவிற்கு பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டே அங்கயே படுத்துவிட்டாள் அழகி.

இவள் வருவாள் என்று அவள் முகம் காண ஏங்கியிருந்தவனுக்கு அவள் வராமல் போகவும் கீழே இறங்கி வந்து பார்த்தான்.

'இவ்ளோ நேரம் வராம கிழ என்ன பண்றா? பாவி என்னை காக்க வைக்குறதுல அவ்ளோ சந்தோஷம்...' என்று உள்ளுக்குள் புகைந்தான்.

அங்கே அழகி இல்லாமல் போகவே, "யாருமே இல்லை... எல்லோரும் தூங்கிட்டங்க. இவ மட்டும் எங்க போனா?" என்று புலம்பியபடி எதேச்சையாக சுபாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க, 'ஏன் அந்நேரத்துக்கு சுபா ரூம்ல லைட் எரியுது?' என்று திறந்து பார்க்கவும் இங்கே உறங்கி கொண்டிருந்தாள் அவனின் கள்ளி.

"அடிப்பாவி. நீ அங்க வருவேன்னு நான் காத்திட்டு இருக்கேன். நீ இங்கயே தூங்கிட்டு இருக்க?" என்று திட்டியவன் கோபமாய் மேலே சென்று படுத்துகொண்டான்.

மறுநாள் காலை எதுவும் நடக்காதது போல் ரெடியானவள், ஸ்கூட்டியில் வேண்டா வெறுப்பாய் காலேஜ்கு செல்ல தயாராகினாள். சுபாவும் வந்து பார்த்துவிட்டு, "அண்ணி என்ஜாய்." என்றதும் மெலிதாய் புன்னகைத்து ஸ்டார்ட் செய்தாள்.

"சுபா பார்த்து பத்திரமா ஓட்டிட்டு போகணும்." என்றான் மேலே இருந்து பார்த்தபடி.

"எங்களுக்கு தெரியும்." என்று முகத்தை அஷ்டகோணலாக்கியவள் வண்டியை ஆன் செய்து பறந்தாள் சுபாவையை பார்த்தபடி.

'அயையையோ இவ போற மாடுலேஷனே சரி இல்லையே?' என்று யோசித்தவன்.

'இவ போறத பார்த்தா கண்டிப்பா நிறைய சில்ட்ற வாங்கிடுவா போல இருக்கே. சீக்கிரம் பின்னாடி போடா.' என்று தனக்குள் கூறிக்கொண்டவன் வேகமாய் அவள் பின்னே அவன் வண்டியில் சென்றான்.

'ஏய் ஏய்... சொல்ற பேச்சை கேளு... எதுக்காக ஸ்லோவா போற? கொஞ்சம் பாஸ்டா போ.' என்று பைக்கிடம் பேசி கொண்டே ஒட்டி கொண்டிருந்தாள்.

அவளை தாண்டி ஒரு கருப்பு நிற ஸ்விப்ட் கார் போக, "பொம்பளை புள்ள போகுதே கொஞ்சம் பொறுத்து போவோம்னு இருக்கா இவனுக்கு? என்னவோ இவங்க அப்பன் வீட்டு ரோட் மாதிரி என்னை இடிக்கிறாப்புல வந்துட்டு போறான். அவ்ளோ பெரிய அப்பாடக்கறாடா நீ... இருடா வரேன் உன் முகரையே பார்த்தே ஆகணுமே.." என்று லேசாக ஸ்பீட் எடுத்த வண்டி சடன் பிரேக் போடாமல் ஸ்லோவாகியது.

'ஆத்தாடி, அந்த கார்ல போலீஸ்னு போட்ருக்கு. நம்ம பாட்டுக்கு ஒரு ஆர்வத்துல கிளம்பிட்டோமே! நல்ல வேலை தப்பிச்சோம். என்னடி நீ? உன் புருஷனே போலீசு. இதுக்கு போய் பயப்பட்ற? ஆனாலும் அந்த முகரைய பார்க்கணுமே... என்ன பண்ணலாம்?' என்று மோவாயில் கை வைத்து மூளை யோசிக்க, 'ரொம்ப யோசிக்க கூடாது. ரெண்டு முறுக்கு முறுக்கினா இந்தா வந்துட்டா போறான் அந்த கார் காரன்." என்று மூளை ஆர்டர் கொடுக்க யோசிக்கும் முன் வேகமெடுத்தது வண்டி.

"டேய் டேய் டேய் நான் தான்டா முடிவு பண்ணனும். நான் யோடிச்சுட்டு இருக்கும் போதே நீ ஏன் போக சொன்ன?" மூளையிடம் சண்டையிட தொடங்கினாள்.

அப்படியும் அந்த கார்காரனை முந்தும் போது பார்த்தவள் அதிர்ச்சியில் உடனே வண்டியை ஓரம் கட்டிவிட்டாள்.

இவளின் அளப்பறைகளை சிரித்து கொண்டே பார்த்து வந்தவன், அவள் வண்டியை நிறுத்தியதும்.

"எதுக்கு இப்போ வண்டிய நிறுத்தினா?" என்று மெதுவாய் அவளை நெருங்க, அடக்க முடியாமல் சிரித்து கொண்டிருந்தாள்.

அந்த வண்டியில் சென்ற அறுபது வயது பெரியவரை பார்த்ததும் சிரிப்பு வர வண்டியை நிறுத்தி விட்டாள்.

"என்ன ஆச்சு எங்கயும் அடிப்படாமயே மூளை குழம்பிடுச்சா? இவங்க அண்ணன்காரன் என்னை சும்மா விட மாட்டானே..." என்று வண்டியில் இருந்து இறங்க போக, சிரிப்பதை நிறுத்தியவள் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

"டும்ம்..ட்ஷம்...டூடும்...டும்ம்..." என்று தெனாலிராமன் கணக்காக சத்தம் கொடுத்து கொண்டே வண்டியை ஓட்டினாள்.

ஒரு தாத்தா மிதிவண்டியில் இவளை முந்தி கொண்டு போக,

"யோவ் தாத்தா! நான் பைக்ல போறேன். என்னையே முந்திட்டு போற நீ?" என்றவள் வேகமாய் அவரிடம் சென்று, "தாத்தா இந்த வயசான காலத்துல ஏன் சைக்கிள் ஒட்டி கஷ்டபடறிங்க? வாங்க நான் உங்களை என் வண்டில கூட்டிட்டு போறேன்." என்றாள் பெரிய மனது பண்ணி.

அந்த தாத்தா அவளையும் அவள் வண்டியையும் பார்த்தவர், "நான் சைக்கிள் தான் ஒட்றேன். ஆனா உனக்கு முந்தி போறேன். நீயே எனக்கு பின்னாடி தான் வர, நீ வேணா என் கூட வா. டபுல்ஸ் போலாம்." என்று சிரித்தார்.

ஒற்றை புருவம் ஏற்றி அவரை முறைத்தவள், "போனா போகுது வயசான காலத்துல வண்டி மிதிக்கிறியேன்னு கேட்டா உனக்கு ஓவர் கொழுப்புயா பெருசு." என்று அவரை தாண்டி முன்னே சென்றாள்.

"டேய் கண்ணா நீ சொல்லும்போதே நான் உஷாராகிருக்கணும்... இவ இவ்ளோ அலப்பறை பண்ணுவான்னு சொல்லவே இல்லையே நீ?" என்று நண்பனை திட்டினான்.

இவளின் சேட்டைகளை பார்த்து சிரித்தபடி வண்டி ஒட்டி வந்தவன் பின்னால் அதிவேகமாக அவனை நோக்கி வரும் லாரியை கவனிக்காமல் விட்டது தான் அவன் செய்த மிக பெரிய தவறாகி போனது.

இன்னும் என்ன செய்கிறாள் என்று ஆர்வமாய் பார்த்திருக்க, அது இனி நிலைக்காது என்று பின்னால் வந்த லாரி அவன் மேல் அசுரர் வேகத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட, "அகி!" என்று கூக்குரலிட்டு தூர சென்று ரத்த வெள்ளத்தில் விழுந்தான் ஷிவா.

*****

என்னப்பா எந்த யூ டிக்கு சரியா கமெண்ட்சே சொல்ல மாட்டுறீங்க?? போங்கப்பா... நான் கோபமா போறேன்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro