கனவே - 23

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நீ நடந்து செல்லும்
பாதையில் என் கண்கள்
என்னை விட்டு உன்னை
சுற்றுதே நீ பேசும் அழகை
கேட்கையில் கொஞ்சி பேசும்
மழலையின் அழகும் தோற்று
போனதே

எங்கேயும் நீயடி
போகுதே உயிரடி
வாழ்கிறேன் சாகிறேன்
இதென்ன மாயமோ

"அத்திம்பேர் நான் பேசிப் பார்க்கிறேன், ம்ம் ஓகே அய்யோ நான் சொன்னேன் அவள் கேட்டால் தானே ! அங்கே கூட்டிட்டு வரணுமா? ஓகே ஈவ்னிங் எப்படியாவது கூட்டிட்டு வந்துடுறேன். அகைன் பேசிப் பார்க்கலாம்னு இங்கே கூப்பிட்டிருக்கேன் அந்த வானரம் எங்கே சுத்திட்டு இருக்கோ !!! ஹாஹா ஓகே அத்திம்பேர் கௌசியை பயப்பட வேணாம் சொல்லுங்கோ " என்றவன் அந்தப்பக்கம் பார்த்த சாரதி கட் செய்த பின் தான் ஆசுவாசமானான்.

"சப்பா முடியலடா மச்சான்! இந்த அஞ்சு அடங்கவே மாட்டாளா?" தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனை இன்னும் சோதிக்கவே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் அஞ்சனா.

"டேய் ருத்து என்ன டா ஒரே குஷியா இருக்க " என்றபடி அவன் கழுத்தைப் பிடித்து வானரம் போல் தொங்கியவளை

"நான் சொல்லல இது வானரம்னு!
அடியேய் உன்னை கொன்னுருவேன் முதல்ல வேதாளம் மாதிரி என் கழுத்துல தொங்காம இங்கே முன்னாடி வா.உன்னை வெட்டி பலி போடலாம்ங்கிற ப்ளான்ல தான் இருக்கேன் " என்ற அனிருத்தின் கோபக்குரலில் சிறிது ஜெர்க்கானவள் விக்ரமைப் பார்த்து என்ன எனக் கண்களாலே கேட்க
அவனோ கழுத்தருகில் கைகளைக் கொண்டு சென்று அவ்ளோ தான் க்ளோஸ் என்பது போல சைகை செய்ய சுத்தம் என தலையில் அடித்தவளோ நான் எதுவும் பண்ணலையே அப்புறம் ஏன் என யோசித்தவாறே அவன் முன் வந்து நின்றாள்.

"நீ எதுக்கு இங்கே வந்த? ஆனால் இப்போ என்ன பண்ணிட்டு இருக்க ? சித்தப்பா என்ன சொல்லி அனுப்புனார்னு நியாபகம் இருக்கா? " என்றவனை

இடுப்பில் கை வைத்து முறைத்தவள் " நீங்க யாரு யாரு? பாம்பே ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க ? " அந்த மாதிரி கேட்குறியே ருத்து! இதெல்லாம் நோக்கே தெரியாதா? நான் எதுக்கு வந்தேன் ஏன் வந்தேன் எல்லாம்! " என்றவள் இன்னும் என்ன கூறியிருப்பாளோ

"அப்புறம் எதுக்கு டி உனக்கு கான்டெஸ்ட் லாம் வாயை மூடிட்டு இங்கேயே படிக்குற வேலையெல்லாம் உன்னால பார்க்க முடியாதோ? அந்த வருண் கூட பேசாதனு சொன்னேன் ஆனால் அதைத்தான் பண்ணுவேனு பேசுன!
இப்போ ஒரு வார்த்தை கூட கேட்காம கான்டெஸ்ட்ல கலந்துட்டு எங்கேயோ பயணம் போறியாமே ! காலைல இருந்து அத்திம்பேர் இருபது தடவைக்கு மேல கால் செய்துட்டார், முடியல டி உன்னால! ஒழுங்கா ஈவ்னிங் கௌசி வீட்டுக்கு கிளம்பு அங்கே போய் அவங்களை நீயே சமாளிச்சுக்கோ! " என்றவன்  அவளின் சோக முகத்தைக் கண்டு அமைதியானான்.

"நான் கும்பகோணத்துல இருந்து இங்கே எதுக்கு வந்தேன் ருத்து?"

" என் உயிரை வாங்க " என்றவன் தண்ணீரை குடிக்க ஆரம்பிக்க

ருத்து கூறிய பதிலில் கடுப்பானவள் "டேய் பட்டர் " என்று கத்தி பற்களைக் கடித்துக் கொண்டே குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலை தட்டி விட

"அட பிசாசே " என்றவன் அவள்  தலையில் கொட்ட , அவனை முறைத்துக் கொண்டே தலையைத் தேய்த்தவள் ருத்துவின் அருகில் அமர்ந்துக் கொண்டு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"எனக்கு பெரிய வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆகணும்! நம்ம ஆத்துல அதற்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க , இங்கே வந்தது கூட இப்படி பாரஸ்ட் போக வாய்ப்பு கிடைக்கும்னு தான். இங்கே வரதுக்காக நான் எத்தனை நாள் சாப்பிடாம இருந்தேன் தெரியுமா? தோப்பனார் சும்மா ஒன்னும் என்னை இங்கே அனுப்பிடல , மூனு வருஷ கோர்ஸ் முடிஞ்சதும் நான் அங்கே போயிடணும் அவர் பார்க்கிற மாப்பிள்ளையாண்டானுக்கு கழுத்தை நீட்டணும் , வேலைக்கு போகக்கூடாது  இப்படி ப்ளா ப்ளா ப்ளா...த்ரீ இயர்ஸ் தான் டைம் ருத்து! அதுக்குள்ள நான் எனக்கு பிடிச்சதை செய்யணும் , ப்ளீஸ் ஹெல்ப் பண்ணேன் " என்றவளுக்கு தன்னை நினைத்தே ஆற்றாமையில் கண்கள் கலங்க
அதை கண்டு ருத்து சிறிதும் மனம் இளகவில்லை.

"ம்ப்ச்ச் போடா " ஆயாசமாக வந்தது அஞ்சுவிற்கு! எத்தனை பெரிய வாய்ப்பு இது! இத்தனை பலத்த பாதுகாப்புடன் அந்த வனத்திற்குள் போவதெல்லாம் சாதாரண விடயமா? மனமெல்லாம் பாரமாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவளின் கைகளைப் பற்றினான் விக்ரம்.

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணீரைத் துடைத்தவன் " நீ அந்த கான்டெஸ்ட்க்கு போற "

"ஆனால்..." என்று இழுத்த அஞ்சுவை " உஸ்ஸ் " என்றவன்

"இதுக்கெல்லாம் அழலாமா பொம்மு ! நீ கண்டிப்பாக போகத்தான் போற ,நான் பார்த்தசாரதி சாருகிட்ட பர்மிஷன் வாங்குறேன் ஓகே வா ?" என்றவன் கூற்றில் மகிழ்ந்தவள் சிரித்தபடி நாலாப்புறமும் தலையசைக்க
"பொம்மு பொம்மு " என்றவனோ அவள் தலையை கலைத்து
"நீ அங்கே போறது முக்கியமில்லை , பத்திரமா இருக்கணும் ,இதுதான் உனக்கு இருக்க கடைசி வாய்ப்புனு நினைச்சு உன்னோட பெஸ்ட்டை கொடுக்கணும் ஓகே வா? "
என்றவனிடம் சரி என்பதாய் தலையசைத்தவள் விஷ்வா இவர்களை நோக்கி வருவதைக் கண்டு புருவத்தை உயர்த்தினாள்.

" நீ நாங்க கேம்ப் போயிட்டு திரும்பி வர வரைக்கும் யுனிவர்சிட்டிக்கு வர வேணாமாம் , டேய் வளர்ந்தவனே நீயும் தான்! விக்ரம் கூடயே அவன் வீட்டுல இருப்பியாம். உனக்கு வருண் கால் பண்ணுறப்போலாம் நீ விக்ரம் கூட இருக்கணும் அப்படி இல்லைனா  அதுதான் உனக்கு லாஸ்ட் டே னு சொல்ல சொன்னான்  அனிருத்தை பார்த்து கூறியவன் ஏதோ தகவல் போல் கூற வந்ததை கூறிவிட்டு கிளம்ப

"ஹலோ விஸ்வா பாய்! நீங்க சொல்லுறதெல்லாம் நாங்க கேட்க முடியாது! டேய் விக்ரம், ருத்து நீங்க இரண்டு பேரும் யுனிவர்சிட்டிக்கு கண்டிப்பா வரீங்க, நான் உங்களுக்கு அங்கிருந்து கால் பண்ணுவேன்  யுனிவர்சிட்டில இருக்கேனு தான் சொல்லணும் " என்றவளை முறைத்த விஷ்வா

"ஏய் ஏட்டிக்கு போட்டியா பண்ணுறது தான் உன் வேலையா? டேய் விக்ரம் வருண் சொல்ல சொன்னான் நான் உன்கிட்ட சொல்லிட்டேன்  இதுக்கப்புறம் உன் இஷ்டம் ! நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம் நாங்க உன் கூட பேசலைனாலும்!!" என்றவன் அஞ்சுவை முறைத்துக் கொண்டே திரும்ப அங்கு வருண் நின்றிருந்தான்.

"வருண் இவ " என்று விஷ்வா ஆரம்பிக்க அவனை நிறுத்துமாறு கூறியவன்  விக்ரமை நோக்கி
" நான் உனக்கு எது செய்தாலும் அது சரியா தான் இருக்கும்னு நம்புறியா டா ?" எனக் கேட்க வேகமாய் ஆமாம் என்று தலையசைக்க வந்த விக்ரமை நறுக்கென்று கிள்ளியவள்

"அப்படியெல்லாம் இல்லை " என்று கூற 

"நீ விக்ரமா? நான் உன்கிட்ட பேசலை " என்றவனின் குரலில் இருந்த கோபத்தைக் கண்டு பயந்தாலும்

"நீயும் விக்ரம்னு சொல்லி பேசல , ஓஓ விக்ரம்னு சொல்லி பேச கூட உங்களுக்கு கஷ்டம் அப்படித்தானே! இவன் என்னமோ ஏதோ தகவல் மாதிரி சொல்லிட்டு போறான், நீ வந்து ஆர்டர் போட்டுகிட்டு இருக்க, உன் இஷ்டப்படி,  சாரி சாரி  உங்க இஷ்டப்படிலாம் நடக்க முடியாது சீனியர்ர்ர், நாங்க அதைக் கேட்கவும் மாட்டோம் அவன் ஒன்னும் உங்க ப்ரெண்ட் இல்லையே!!! ஓஓஓ ப்ரெண்ட்டா?" என்றவள் புருவத்தை உயர்த்தி  சொல்லுங்க சீனியர்ர்ர் என்று இழுக்க

அவளை முறைத்தவன் விக்ரமை நோக்கி அவனருகில் வந்தான்.

" நீ யுனிவர்சிட்டிக்கு வரக்கூடாது, நான் உனக்கு கால் பண்ணுவேன், நீ இங்கே வந்தேனு மட்டும் தெரிஞ்சுது" என்றவன் எதுவும் பேசாமல் அஞ்சனாவை ஒரு பார்வை பார்த்து கிளம்பி விட

" அவன் வருவான் , டேய் விக்ரம் நான் உனக்கு  அங்கிருந்து  கால் பண்ணுவேன் " என்று சத்தமாக கூற

திரும்பி அஞ்சனாவைப் பார்த்த வருணின் முகத்தில் தெரிந்த ஏளனத்தில் அவளுக்கு ஏதோ போல் ஆகிற்று.

"அவளே வரப் போறது இல்லை! டெசிஷன் அதாரிட்டி நாங்க தான்னு மறந்துட்டியோ?" என்றவன் புருவத்தை உயர்த்தி சென்று விட இப்போது ஒருவித பதட்டத்துடன் விக்ரமை நோக்கியவளின் விழிகளில் தெரிந்த கேள்வியை சரிதாக புரிந்துக் கொண்டவன்

"வருண் அப்படியெல்லாம் பண்ண மாட்டான் பொம்மு, டேலண்ட்டட் பீப்பில்ஸ்க்கு அவன் கண்டிப்பா முன்னுரிமை கொடுப்பான் " என விக்ரம் கூறியதெல்லாம் அவள் மனதில் பதியவே இல்லை.

"நான் இப்போ வந்துடுறேன் " என்றவள் வருணைத் தேடிச் செல்ல அவளின் தேடலுக்குச் சொந்தக்காரனே அவளின் கையைப் பிடித்து இழுத்து அவளுடன் மூடிய வகுப்பறைக்குள் நுழைந்தான்.

"திடீருனு ஒருத்தன் உன்னை இழுக்கிறான் ஆஆனு கத்துறது லாம் வரவே வராது அப்படித்தானே!" என்றவனிடம்

எதுவும் கூறாமல் முறைத்தவள் அவன் முகத்தை மட்டும் பாராமல் வேறு எங்கோ பார்க்க

வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி திருப்பியவன் "திமிரு , சில்லிபவுடர் பேக் டூ பார்ம் போல ! விக்ரமுக்கு ஒன்னுனா பொங்கி எழுந்து வரீங்க! என்னை விட அவ்வளவு முக்கியமா போயிட்டானோ அவன்? நான் சொல்லுறதைக் கேட்கக்கூடாதுனே முடிவு பண்ணிட்ட போல ! ம்ம்ம" என்றவனின் புருவம் உயர

"ம்ம்க்கும் " எனக் கூற உதட்டைச் சுழித்தவளோ அவனிடம் இருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தாள்.

" என்னடி ஓவரா துள்ளுற ? விக்ரம் கையைப் பிடிச்சுட்டு இருந்தா மட்டும் நல்லாருக்கோ?" என்றவனின் கேள்வியில் அவனை முறைத்தவள் "ச்ச" என்று கூறி முகத்தைத் திருப்ப

"சனா ஐ ஆல்ரெடி டோல்டு யூ... உனக்கு நான் மட்டும் தான் எப்பவும் முக்கியம்  ,தெரியும்ல ? ஒவ்வொரு முறையும் நான் வார்ன் பண்ணிட்டு இருக்க முடியாது. இனி ஒரு தடவை நான் சொல்லுறதை கேட்காம எதிர்த்து பேசுன அவ்ளோதான் " என்றவன் அவள் கைகளை விடுவிக்க

"என்ன பண்ணுவ " என்றவளின் குரலில் திரும்பியவன்

"என்ன பண்ணுவேனு தான கேட்ட? என்ன பண்ணலாம் !என்ன பண்ணலாம் " தாடையில் கை வைத்து யோசித்தவன்
சுதாரிக்கும் முன் அவளின் உதட்டை தனக்கருகே இழுத்து பிடித்து அதைப் பார்த்துக் கொண்டே தண்டனை ஹெவியா இருக்கும் என்று கூறி அங்கிருந்த மேசையில் ஏறி அமர்ந்துக் கொள்ள  அவன் கூறியது அவளுக்கு மண்டையில் ஏறவே பல நிமிடங்களானது.

"என்ன சொல்ல வந்த ? அதை சொல்லிட்டு கிளம்பு எனக்கு வேலை இருக்கு , கேம்ப்க்கு போக ரெடி பண்ணனும் ! ஓஓ நீ வர மாட்டல சோ சேட்..." என்றவன் கால் மேல் கால் போட்டு அவளைப் பார்க்க

" நீ தான் என்னை பிடிச்சு இழுத்தேனு தெரியும் அதுனால தான் கத்தல " என்றவள் வேறு எதுவும் கூறாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தவளுக்கு நன்றாகவே தெரிந்தது தான் இந்த கான்டெஸ்ட்டில் தேர்வாகவில்லை என்று.

"ச்ச்ச அவளை வேணாம் வேணாம்னு மூளை நினைக்குது, ஆனால் மனசு அவ மட்டும் தான் வேணும்னு சொல்லுது ! கடவுளே, அவளுக்கு யார் முக்கியமா இருந்தா என்ன ? நான் ஏன் அதுக்கு கவலைப் படணும்! அப்போ  அப்போ முதல்ல இருந்தே அவள் மேல எனக்கு காதலா? அதுனால தான் அப்போவும் அவகிட்ட நான் தான் உனக்கு முக்கியம்னு சொல்லிட்டு இருந்தேனா? அய்யோ" தலையில் கை வைத்து அமர்ந்தவன் திடீரென புன்னகைத்து

" என்ன லிப்ஸ் டா இது...ச்ச்ச கொஞ்சம் மிஸ் ஆயிருந்தாலும் சில்லி பவுடர் கிட்ட அறை வாங்கி இருக்கிறது உறுதி ! கொல்லுற டி சில்லி பவுடர்"  சன்னலோரம் நின்று மனதில் உள்ளதையெல்லாம் புலம்பியவனோ வேகமாக தலையைக் கோதிக் கொண்டான்.

"உனக்கு நல்லா தெரியுமா அந்த பொண்ணு ஏன் செலக்ட் ஆகலனு ?" என்றவரிடம்

"அவளை வருண் தான் வேணும்னே ரிஜெக்ட் பண்ணியிருக்கான், அது மட்டும் எனக்கு நல்லா தெரியும். ஒருவேளை அவன் காதலிக்கிற பெண்ணா இருந்தா ஏன் ரிஜெக்ட் பண்ணனும் அதுவும் அந்த பொண்ணோட போட்டோ சூப்பரா இருந்துச்சு, கண்டிப்பா பைனல் செலக்ஷன்லயே செலக்ட் ஆகுற போட்டோ தான் , சோ வருண் அந்த பெண்ணை காதலிக்கல, அவங்க சண்டை போட்ட தான் இப்போ தான் நான் நேர்ல பாத்துட்டு வரேன் எனக்கு நல்லாவே தெரியும் அவங்களுக்குள்ள காதல் இல்லை" என்ற ரக்ஷித்திற்கு யோசனையாய் தலையசைத்தவர்

"அப்போ அந்த பொண்ணும் கேம்ப்பிற்கு வரணும் என்ன செய்வியோ தெரியாது அவளோட போட்டோ பைனல் லிஸ்ட்ல வரணும்" என்றவர்

"என்ன சண்டை " எனக் கேட்க

"தெரியல! விக்ரம் ,விஷ்வா எல்லாரும் இருந்தாங்க" என்று மட்டும் கூறினான்.

"உன்னை நம்பி தான் இவ்வளவு நாள் விட்டு வெச்சுருக்கேன்! நீ சொன்ன தகவல்களெல்லாம் தப்புனு மட்டும் தெரிஞ்சுது , உன்னோட முடிவு என்னனு உனக்கே தெரியும் " என்றவர் அந்த இடத்தை விட்டு கிளம்ப ஒரு நொடி அதிர்ந்தாலும் வருணெல்லாம் அவளை காதலிக்க மாட்டான் என மனதை சமதானம் செய்து கொண்டு யாரேனும் இருக்கிறார்களா என ஆராய்ந்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் ரக்ஷித்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro